முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 6


அத்தியாயம்: 6



"ஏட்டி இந்தா, இத கொண்டு போய் வாசல்ல கிடக்குற உங்காத்தாலுக்கும் சின்னாத்தாலுக்கும் குடு. காலைல இருந்து காபித்தண்ணி கூடக் குடிக்காம காத்துக்கு கிடக்குறாளுக. அவெந்த வரப் பத்து மணிக்கி மேல ஆகும்னு சொல்லிட்டானே. இவளுக ஏந்தா மொற வாசல் செய்றதுக்கு முன்னாடியே எழந்து உக்காந்திருக்காளுகளோ. கூறு கெட்டவளுக. இத வாயிக்குள்ள ஊத்துனா தெம்பு வரும். அவள்கள்ட்ட ஒன்னொன்னு குடுத்துட்டு நீயும் ஒன்ன எடுத்துக்க. " மலர். அந்த வீட்டின் முதல் மருமகள். பொறுப்பானவர்…


கௌதம் தன்னுடன் பேச ஆரம்பித்த இந்த இரண்டு ஆண்டுகளில் ஜோதி பூரித்து போனார் என்று தான் சொல்ல வேண்டும். தன் மகனின் மழலை பருவத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் தனக்கு இல்லாமல் போனதால், கௌதமின் மகளின் மூலம் தன் மகனைக் கண்டு மகிழ்கிறார் அவர். 


கனகவள்ளியும் அதே போல் தான். அவருக்கு இயல்பாகவே சிறு குழந்தைகளை வளர்க்க பிடிக்கும். ரிஷி, கௌதம், பார்கவி, வைசுவென நால்வரின் குழந்தை பருவமும் அவருடன் தான். விவரமாகப் பேசும் பத்து வயது குழந்தையைவிட மழலை மொழியில் தட்டு தடுமாறி பேசும் குழந்தையின் அழகு தனி தான். அப்…ப…ம்… மா… என இருவரின் மொழி கேக்க காத்திருக்கிறார் அவர். 


வைசு இருவருக்கும் காஃபியை குடுத்து விட்டு, கனகவள்ளயின் மடியில் தலை சாய்க்க, அவர் சைகையில் 'தலை வலிக்கிறதா?.' என்று கேட்டுத் தலையை இதமாய் பிடித்து விட்டார். 


அவரின் அன்பில் நெகிழ்ந்து போனாள் வைசு. பழைய நினைவுகள் திரும்பிடாத போதும், கனகவள்ளியை தன் அம்மாவாக மூளையில் பதிவு செய்து கொண்டாள் அவள். இந்தக் குடும்பத்தில் தனக்கென ஒரு இடம் கிடைத்ததை எண்ணிப்பார்த்தாள். 


வைசாலி… 


பள்ளி இறுதி படிக்கும்போது தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த விபத்தில் அவளின் பழைய நினைவானது முற்றிலும் மறந்து போயிருந்தது. 


  நினைவுகள் தானாக வந்தால் எந்த விதத்திலும் பிரச்சனை இல்லை. ஆனால் நினைவு படுத்த முயன்றால் அது அவளுக்கு ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். காரணம், சிறுவயதில் அவளுக்கு வந்த வைரல் காய்ச்சலின் காரணமாக நரம்புகள் சற்று பலவீனமடைந்திருந்தது.


சத்தான உணவு ஆரோக்கியமான சூழ்நிலை எதுவும் அவளுக்குப் பயன் தரவில்லை. அதனால் பழைய நினைவுகள் மீண்டும் திரும்புவது என்பது வைசுவின் உடலை அதிகமாகப் பாதிக்கும் என்றனர் மருத்துவர்கள். 


அதன் காரணமாகவே அவளை இந்தியா அழைத்துவர அசோக் முயலவில்லை. அசோக்கை திருமணம் செய்து கொண்ட இத்தனை ஆண்டுகளில் வைசு தனக்கு தாய் தந்தை யாராவது உள்ளனரா என்று யோசித்தே இல்லை. அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத படி அசோக்கின் காதல் இருந்தது தான் உண்மை. அவனின் செயல்கள், எண்ணங்கள் யாவும் வைசுவை முன் நிறுத்தியே இருக்கும். அத்தனை பிரியம் அவளின் மேல்.


அசோக் அவளை விரும்பியதாகவும், உடல் நலம் இல்லாமல் இருக்கும் அவளைத் திருமணம் செய்ய வீட்டார் சம்மதிக்கவில்லை என்றும், அதனால் யாருக்கும் தெரியாமல் அவளைத் திருமணம் செய்து கொண்டு வெளிநாடு அழைத்துச் சென்று விட்டான். 


இது நாச்சியம்மாள் குடும்பத்தில் ஓர் அங்கமான பின் அவளுக்குச் சொல்லப்பட்ட கதை‌. அப்போது தான் அவளை அடிக்கடி வீட்டிற்கு வர வைக்க முடியும். இல்லையேல் உறவு என்று கூறி அவள் இருக்கும் இடம் சென்று பார்க்க முடியும். அதனால் தான் பாதி உண்மையை மட்டும் கூறியிருந்தனர். 


முதலில் அவளுக்கு எதுவுமே தோன்ற வில்லை. பெரியப்பா, பெரிம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணன் என மகிழ்வுடன் வளம் வந்தவளுக்கு,  அவளின் மனம் உன் தாய் தந்தை அருகில் உள்ளனர் என்று கூறிக்கொண்டே இருந்ததால், சிந்தனை வயப்பட்டாள். யோசிக்கிறேன் என்ற பெயரில் மூளைக்கு அதிக அழுத்தம் தரவே, அது தன் வேலையைக் காட்டியது. அதுதான் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு தலை வலி உண்டானது. அத்துடன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தும் விட்டாள் அவள்.


அசோக் இனி யாரும் தனக்கு வேண்டாமென வெளி நாட்டிலேயே இருந்து விடப் போவதாகவும், இங்கு வரவே மாட்டோம் என்றும் கூறி அடம்பிடித்தான்.


" இப்ப எப்படிம்மா இருக்கு. " மூர்த்தி தன் மகளின் நலம் அறியும் பொருட்டு கேட்டார். அவருக்குத் தன் மகள் உயிருடன் இருப்பதே சந்தோஷம். அதிலும் தன் அருகிலேயே இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. இப்போது சென்னையில் உள்ள மருத்துவமனையின் படுக்கையில் படுத்திருக்கும் மகளின் நெற்றியை ஆதரவாய் வருடினார் அவர்.


" பரவா இல்ல… " என்றாள் சோர்வாக, மூர்த்திக்கு ஏக்கமாக இருந்தது. தன் மகள் தன்னை அப்பா என்று அழைக்கமாட்டாளா என்று.


" பாத்துக்கம்மா… " என அவர் எழுந்து செல்ல, வைசுவிக்கு ஒரு மாதிரி ஆனது, அவரின் நடை கண்டு.


"நாளைக்கி டிஸ்ஜார். இனி இல்லாத மூளைய கசக்கிப்பிழியிறேன்னு கந்தல் கேலமாக்காத. " என அவளைக் கேலி செய்தபடி வந்து அமர்ந்தான் ரிஷி தரன். அவனைக் காணாது அவள் கண்களில் நீருடன் முகம் திருப்ப,


"என்னாச்சு.…மறுபடியும் தலைவலிக்குதா… "என அவளின் நெற்றி தொட்டு கேட்க,


" இல்ல. " 


" அப்றம் ஏ அழுகுற மா. நீ என்ன நினைக்கிறியோ அத அடுத்தவங்க கிட்ட சொல்லும் போதுதா, உன்னோட மனசு லேசாகும். விருப்பம் இருந்தா சொல்லேன். " எனக் கேட்க, அவள் சரியெனத் தலையசைத்து பேசத் தொடங்கினாள். 


" நா யாருன்னே எனக்குத் தெரியல ண்ணா… எனக்குன்னு அம்மா அப்பா இருந்திருப்பாங்களா… அவங்க இப்ப எங்கன்னு நினைக்கத் தோனுது. உங்கள… கௌதம் அண்ணா… அப்பறம் மூர்த்தி அப்பாவ… கனகாம்மாவல்லாம் பாக்கும்போது, எதுவோ தோனுது. பாத்து பல நாள் நாம பழகிருக்குன மாறி ஃபில் ஆகுது. ஆனா ஞாபகமே வர மாட்டேங்கிது. உங்கள பாக்கும் போதெல்லாம் சில நேரம் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன்னு தா தெரியல. யோசிச்சா மண்ட வெடிக்கிற மாறி வலிக்கிது. நா என்ன பண்ண ண்ணா… " என அழும் தன் தங்கையின் அருகில் அமர்ந்தவன்,


" வைசு… முடிஞ்சி போன ஒன்ன நினைச்சி, இன்னைக்கி அழுது பொலம்பிட்டு இருந்தா, நாளைக்கின்னு ஒன்னு வரமாலே போய்டும்மா. உன்னோட லைஃப்ல எது நடந்திருந்தாலும் அது உன்னோட பாஸ்ட். அது இப்ப தேவையில்லாததும் கூட...


உன்னோட கண்ணு முன்னாடி என்ன நடக்குதோ அத மட்டும் உன்னோட மூளைல பதிவு பண்ணு.‌ ஒரு வகைல யூ ஆர் லக்கி. உன்னோட மைண்ல என்ன இருக்கனும் இருக்ககூடாதுன்னு நீயே முடிவு பண்ற வாய்ப்பு உனக்குக் கிடைச்சிருக்கு. அது நல்லதாவே இருக்கட்டுமே… உன்ன காயப்படுத்துற மாதிரியான விசயங்கள யோசிக்காத டா. 


ப்ரஷன்ட்ல நீ அசோக்கோட வைஃப் மட்டுமில்ல லைஃப்பும் நீ தா. உனக்காகத் தா அவெ வாழுறான். சோ யோசிக்கிறேன்னு, உன்னோட உடம்ப‌ நீயே ரிப்பேர் ஆக்கி அசோக்கோட மனச கஷ்டப்படுத்தா. அத சரி செய்றது ரொம்ப கஷ்டம். "என்றவன் எழுந்து சென்றான். 


அவன் கூறுவதும் சரியே. நமக்கு எது நல்லதோ அதைமட்டும் எடுத்துக் கொண்டு, முடிந்த வரை இருக்கும் ஒரு லைஃப்பை அனுபவித்து வாழ்வோமே. அதனால் தன் பெற்றோர் யார் என்பதை யோசிப்பதில்லை. மாறாக மூர்த்தியை அப்பா என்றும் கனகவள்ளியை அம்மா என்றும் அழைத்துத் தன் பெற்றோராக ஏற்றுக் கொண்டாள். அதைவிட முக்கியம் தான் யாரென்று யோசித்தால் வரும் தலைவலிக்கு பயந்தும், தனக்காக எதுவேண்டுமாலும் செய்யும் தன் கணவருக்காக வேண்டியும் எதையும் யோசிக்காமல் வாழ்ந்து வருகிறாள்.


சிவப்பு கலர் ஆடிக் கார் ஒன்று உள்ளே வருவது தெரிந்தது. 


" கௌதம் அண்ணே வந்துடுச்சு… " என உள்ளே இருந்தவர்களுக்கு குரல்‌ குடுத்தாள் வைசு.


'இதோ வந்துட்டேன்… ' என்பது போல் தலை தெறிக்க ஓடி வந்தான் பிரகாஷ். காலையில் போட்டிருந்த வேஷ்டி பனியனை மாற்றி விட்டான் போலும். ப்ளாக் ஜின்ஸ் மற்றும் அதற்குப் பொருத்தமான டீசர்ட் அணிந்து கொண்டு வேகவேகமாகக் காரின் கதவைத் திறந்தான் அவன். டிரைவர் ஷீட்டில் இருக்கும் கௌதமை கவனியாது பின் ஷீட்டின் கதவைத் திறந்தான்.


ஆனால் அவன் திறந்த பக்கம் இறங்காமல் மற்றொரு கதவு வழியாக உள்ளிருந்த ஆள் இறங்கியது, கையில் அகிலனுடன்… 


" ஹாய்… பிரகாஷு… எங்கள பாக்கவா நீ வாசல்லையே நிக்கிற." என ஆவலாக இந்துமதி கேட்க, அவளை எங்கே பார்த்தான் அவன். தன் எதிரில் இருந்த மற்றொரு பெண்ணை அல்லவா பார்த்துக்கொண்டிருந்தான். 


புதியவள் ஹரிணியின் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு டிசைனர். ஹரிணியுடன் வந்துள்ளாள். அவளை இதற்கு முன் ஹரிணியுடன் ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறான்.  


ஹரிணியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது ஹரிணி யாரையோ திட்டும் சத்தம் கேட்டது வாசலைத் தாண்டிக் கேட்டது. யார் அந்தப் பரிதாபத்திற்கு உரிய ஜீவன் எனக் காணும் ஆவலில் ஹாலிற்கு வர, ஹரிணி கையில் இருந்த கோப்புகளை வீச, அந்தப் பெண் காகித மழையில் நனைந்து கொண்டிருந்தாள். சிறு கண்ணீருடன் தன்னை பார்க்காது சென்ற அவளின் மீது ஓர் ஈர்ப்பு. ஈர்ப்பு என்பதை விடக் காதல் என்றே சொல்லலாம். சில நேரம் அலுவலகம். சில நேரம் வீடு என மாற்றி மாற்றிப் பார்த்திருக்கிறான். ஆனால் பேசவோ பழகவோ வாய்ப்பு கிடைக்க வில்லை. இப்போது கிடைத்துள்ளது. 


வேகவேகமாக அவளின் முன் சென்று நின்றவன், "அகிலன குடுங்க.…" என அவனை‌ வாங்கி கனகவள்ளியிடம் கொடுத்தான். 


அவள் லக்கேஜ் தூக்க முயன்ற போதும் தடுத்து தான் தூங்கி வருவதாகச் சொல்ல, அவள் இவனைத் திருடன் என்று நினைத்தாளோ இல்லை பைத்தியம் என்று நினைத்தாளோ யாருக்கு தெரியும். அவனின் செயல்கள் சற்று கிறுக்குத்தனமாகத் தான் இருந்தது. அதனால் வித்தியாசமான ஒரு பார்வையை அவன்மீது செலுத்தி விட்டு, திருதிருவென முழித்தபடி நின்றாள், புதியவள். 


" அவெந்தா தூக்கிட்டு வர்றேன்னு சொல்றான்ல. பத்திரமா உன்னோட லக்கேஜ் வந்திடும் வா. அப்படியே டிக்கில இருக்குறதையும் எடுத்துட்டு வந்திடு பிரகாஷு." என அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் இந்துமதி. 


கௌதம், புன்னகையுடன் ஆதியை கையில் வைத்துக்கொண்டு இறங்கியவன் தன் அன்னையின் அருகில் செல்ல, ஜோதி ஆதியை ‌கையில் வாங்கிக்‌கொண்டு, "வா… கௌதம். " என வார்த்தைகளால் வரவேற்றார். கனகவள்ளி அவனின் தலை கோதி வரவேற்றார்.  


இரு அன்னைமார்களும் கௌதமுடன் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு உள்ளே செல்ல, தன்னை இதுவரை திரும்பிக் கூடப் பார்க்காது புதியவள்‌ சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு நின்ற பிரகாஷின் அருகில் சென்று அவனின் தோலை சுரண்டினான் கௌதம். 


" டிரைவர்… டிக்கில இருக்குற லக்கேஜ்ஜ உள்ள கொண்டு வாப்பா. " எனத் திரும்பாமலேயே சொல்ல, கௌதம் டிக்கியை திறந்து உள்ளே இருந்த பெரிய பெட்டியை எடுத்து அவனின் காலில் படுமாறு பொத்தென வைக்க… ஆ… பிரகாஷ் வலியுடன் கத்தினான். 


" யோவ்… அறிவில்லையா ய்யா." எனத் திரும்பிப் பார்த்தான்.


" இருக்கு… ஆனா அதெல்லாம் உங்கிட்ட குடுக்க முடியாது. " கௌதம்.


"அண்ணே… நீ யாண்ணே… டிரைவர் ஷீட்ல வேற யாரையோ பாத்ததும், எங்க நீ வராம போய்ட்டியோன்னு தம்பி ஒரு நிமிசம் பயந்து போய்டேன்ணே. உன்னோட வருகைக்கி தாண்ணே தம்பி காத்துட்டு இருந்தேன். " என்க, அவனின் தலையில் தட்டியவன்.


" பாத்தேன்டா… நீ காத்துட்டு இருந்தத. " எனப் புதியவள் சென்ற பாதையைப் பார்த்தபடி கௌதமும் பேச, பிரகாஷ் அசடு வழிந்தான்.


"அண்ணே ஒரு கத சொல்லிருந்தேனே. மறந்துட்டியா என்ன… "  


" என்ன கதண்ணே… " பிரகாஷ் ஆர்வமாக.


" அதான் டா… பாஸ்தா பழைய சோறு கத. அத மட்டும் மறந்துடாத தம்பி. மறந்துடாத… " என முதுகில் வலிக்காமல் அடிக்க,


" ம்ச்… அத சொல்லித்தா ஹரிணி‌ பக்கம் போக விடாம பண்ணிங்க. இப்ப இந்தப் பொண்ணுக்குமா. அதெல்லாம் முடியாது என்ன நடந்தாலும் பரவாயில்ல. எனக்குப் பாஸ்தா தா வேணும். " 


" டேய்… அது மும்பைல வளந்தது டா. நீ பண்ற எல்லாமே அவங்களுக்கு பிடிக்கும். ஆனா உன்னைய மட்டும் பிடிக்காது. அவங்களுக்கு நீ‌ பொழுதுப் போக்கு மாறி டா. அலுப்பு தட்டுற வரப் பழகுவாங்க. அப்றம் சேனல மாத்துற மாறி மாத்திட்டு போய்ட்டே இருப்பாங்க. அண்ணே உனக்குப் பக்கத்தூர்ல பேச்சியம்மான்னு ஒரு மாடன் வில்லேஜ் கேர்ள பாத்து வச்சிருக்கேன். நீ ம்ன்னு சொல்லு, நாச்சிய விட்டுப் பேச்சிய பேசி முடிச்சிட்டுவோம். " 


" பேச்சியா… அண்ணே… " என அலறியவன். 


"நீ என்ன சொன்னாலும் சரிண்ணே. எனக்கு அந்தப் பொண்ண பிடிச்சிருக்கு. ஐ ரியலி லைக் ஹர். அண்டு லவ்வுன்னு கூடச் சொல்லலாம். " என்றபோது பிரகாஷின் முகத்தில் வெட்கம் கூட வந்தது. லவ் பண்றானாமா… 


" உந்தலையெழுத்த யாரால மாத்த‌‌ முடியும். என்னமும் போ. " என உள்ளே செல்ல முயன்றவனை தடுத்தான் பிரகாஷ். 


" என்னடா வேணும் உனக்கு. " 


" உதவிண்ணே. " 


" என்ன உதவி… " 


"அது… அது… " எனத் தயங்கியவன். 


"அந்தப் பொண்ணு பேரு என்னண்ணே. " என்க, 


" டேய் அது தெரியாம தா லவ்வு அது இதுன்னு பேசுனியா. அட கருமமே… " 


" பேரு தெரியாலன்னா லவ் பண்ண கூடாதாண்ணே." பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பிரகாஷ். 


" ஹரிணிட்ட‌ கேட்டிருக்கலாம்ல. " 


" ஹரிணி கிட்ட கேட்டா சொல்லுவா தா. ஆனா ஏ எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது. அதுமட்டுமில்லாம அந்தப் புது பொண்ண உங்க ஃப்ரண்டு ரொம்பத்தா திட்டுறா. பாஸ் மாறி நடந்துக்கிறா ஹரிணி. நா பேரு கேக்க போய், ஹரிணி அந்தப் பொண்ண வேலய விட்டு அனுப்பிட்டா… அதாண்ணே கேக்கல. " 


" வெவரம்… ம்… ஆனா காதல் கல்யாணம்லா பண்ணனும்னா எதாவது வேல வெட்டிப் பாத்து சம்பாதிக்கனுமே டா. நீ என்ன பண்ணறன்னா மூலைல சுருட்டி வச்ச கருப்பு கலர் கவுன எடுத்துப் போட்டுட்டு கோர்ட் வாசப்படி மிதிச்சி, ஒரு கேஸ்ஸாது ஜெயி. அதுக்கப்றம் அண்ணனே பேசி முடிக்கிறேன். பேச்சிய… " 


" எது… " 


" இப்ப வீட்டுக்கு வந்திருக்கிற பொண்ண சொன்னேன் டா. "


" நீ எந்த நேரத்துல வழக்கில்லாத வக்கிலுன்னு கூப்டியோ, அப்பத்துல இருந்து எனக்கு எதுவுமே செட்டாகல. டிகிரி கூட எப்படி வாங்குனேன்னு உனக்குத் தெரியாதாண்ணே. இதுல வக்கிலாகனும்னா எப்டீண்ணே… " 


" அப்ப வேலைக்கி போ. " 


" நம்ம கிட்டையே பல ஏக்கர் இருக்கும்போது, எதுக்குண்ணே அடுத்தவெங்கிட்ட ஏச்சு பேச்சு கேட்டுட்டு வேல பாக்கனும். அது மட்டுமில்லாம நாம நினச்ச நேரத்துக்கு வெளில வர முடியாது. அவெ சொல்ற நேரத்துக்கு என்னால போகவும் முடியாது. "‌


" அப்ப நிலத்துல இறங்கப்போற. " 


" ச்சச… நிலத்துல இறங்குற நம்ம அப்பாமார்கள வேடிக்கை பாக்க போறேன். " என்க தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றான் கௌதம்.


" இப்ப என்ன சொல்லிப்புட்டோம்னு இவரு இவ்ளோ டென்ஷனா போறாரு. இப்பையே நா சந்தோஷமா தான இருக்கேன். எதுக்கு தேவையே இல்லாம வேலைக்கி போய்ச் சம்பாதிக்கனும். காசில்லன்னா காஸ்ட்லி ஃபிகர் திரும்பிப் பாக்காதா என்ன… " என யோசித்த படி உள்ளே சென்றான் பிரகாஷ். 


வீட்டாரின் நல விசாரிப்புகளுக்கு மத்தியில் சிறப்பாய் இருந்தான் கௌதம். 

 

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி 


அன்பே 5


அன்பே 7

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...