அத்தியாயம்: 7
"கதவ தட்டலாமா… வேணாமா… தட்டுனா வெளில வந்து திட்டுனா என்ன பண்ண. " என யோசித்தபடி வெகுநேரமாகப் புதிதாக வந்திருந்த அந்தப் பெண்ணின் அறை வாயிலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் பிரகாஷ். தைரியத்தை திரட்டிக் கதவின் முன் நின்றவன். தட்டுவதற்கு கையை உயர்த்தும் முன் கதவு தட்டப்பட்டது.
'யார்றா அது… ' எனத் திரும்பிப் பார்க்கும் முன்னே கதவு திறந்து விட்டது. 'ஐய்யய்யோ நா இல்லைங்க. ' எனத் தப்பித்து ஓடுவதற்குள், அந்தப் பெண் இவனைப் பார்த்து என்ன என்பது போல் புருவம் உயர்த்த, அவன் 'நா கதவ தட்டலங்க.' என்பது போல் இடம் வலமாகத் தலையசைத்தான்.
" ஹலோ… ஃபஸ்ட் ஃளோர்ர பாக்காதிங்க. அடியேன் கிரவுண்ட் ஃளோர்ல இருக்கேன்." என்ற குரல் பிரகாஷின் காலுக்கு அடியில் கேட்டது. அது நந்துவுடையது.
' இவனா… ' என்பது போல் பிரகாஷ் பார்க்க, புதியவள் முகத்தில் சிறு புன்னகை வந்தது.
" ஹாய்.…நீ தா கதவ தட்டுனியா. "
" ம்… நாந்தா… ஆமா நீங்க தா புதுசா வந்த அக்காவா. உங்க பேர் என்ன. உங்க பேர சொல்லும் போதே உங்க ஃபோன் நம்பர். இமெயில் ஐடி. வீட்டு அட்ரஸ்ல இருந்து ஆதார் கார்ட் நம்பர் வரைக்கும் சொன்னா நமக்கு வசதியா இருக்கும். "
' யார்டா இவெ… நம்மல விடக் கெவியா ஃபெர்பாம் பண்ணி கரெக்ட் பண்ணீடுவான் போலயே. ' பிரகாஷின் மைண்ட் வாய்ஸ்.
தன் இடைவரை கூட வளர்ந்திடாத அந்த ஆறு வயது சிறுவனின் முன் மண்டியிட்டு அமர்ந்து, " என்னோட பேரு ஜெனிபர். இப்பதைக்கி இது போதும் உனக்கு. ஃபோன் நம்பர் எல்லாம் தர முடியாது. "
'ஜெனி… ஜெனிபர்… ஊர்ல அத்தன பொண்ணுங்க இருந்தும் எனக்கு ஏ இந்த ஜெனிய பிடிச்சிருக்கு. ' என விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் சிம்புவை போல் பிரகாஷின் மனம் மிமிக்கிரி செய்தது.
" ஓஹ்ஹோ… அப்படியா… தர முடியாதுன்னா பரவாயில்ல. நானே கண்டு பிடிச்சிப்பேன். வாங்களே நாம உள்ள போய் எதையாது சாப்டிட்டே பேசலாம். இங்க சிலரோட வயிறு கருகுற வாட அதிகமா இருக்கு. உள்ள போய்க் கதவ சாத்திட்டா எதுவும் வராது. " என ஜெனியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
' நம்ம மைண்ட் வாய்ஸ் எல்லாத்தையும் கேச் பண்ணி, அவனோட ஓன் வாய்ஸா மாத்திட்டானே. பலே கில்லாடி தா இவெ. என்ன பேரு சொன்னா… ஜெனிபர். ஹா… ஜெனிபர் … ஓ… ஜெனி… ம்… ஜெனிபர்… ' என அவளின் பெயரை நெஞ்சில் கை வைத்துப் பாட்டாகப் பாடியபடி, கீழிறங்கி வந்தான். வந்தவனிடம் இந்து,
" என்ன! பிரகாஷு. நெஞ்சு வலியா?. இரு ஃபஸ்ட் ஏடு பாக்ஸ்ஸ எடுத்துட்டு வாறேன். அதல மாமாவுக்குன்னு வாங்கி வச்ச நெஞ்சுவலி மாத்தர இருக்கும் நாக்குக்கு அடில வச்சிக்க. இங்க உக்காரு. " என அவனின் விசித்திர நடவடிக்கைகளால் பதட்டம் அடைந்தாள் இந்து.
அவளின் கரம்பற்றி நாற்காலியில் அமரச்செய்தவன், " இதயத்துல வலி இந்து. இதயத்துல ஒளி. பல லட்சம் மின்னல் வந்து ஒரு சேர அட்டாக் பண்ண மாறி ஃபில்ங்கு. கருகிய கரிக்கட்டையை கூட வைரமாய் மாற்றிவிடும். தன்னவளின் ஓர விழி பார்வை. ச்ச நாங்கூட கவிதை எல்லாம் சொல்றேனே. கவிஞர் பிரகாஷ்… நல்லா இருக்கா. "
"இப்ப சொன்னியே அந்தக் கண்றாவிக்கு பேரு கவிதையா. ச்ச… என்னோட வாழ்க்கைல ரெண்டு செக்கேண்ட் வேஸ்ட். " எனச் சொல்லி எழப் பார்க்க அவன் விடவில்லை.
" இதோ பாரு… நீயும் நானும் கிட்டத்தட்ட ஒன்னு தா. உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சில. டூ சைடா இல்லனாலும், ஒன் சைடா நீ கௌதம் அண்ணன கொஞ்ச நாள் லவ் பண்ணிருக்கேல்ல. அந்த ஃபில் எப்படி இருந்துச்சி?. என்னென்ன பண்ணும் உள்ளுக்குள்ள?. ப்ளீஸ் எனக்காக உன்னோட காதல் அனுபவத்த சொல்லேன். " எனப் படபடத்துக் கேட்க, பாவம் இந்து பரிதாபமாக முழித்தாள்.
"என்னடா பண்ணீட்டு இருக்க. ஏன்டா பயமுறுத்துற எம்பொண்டாட்டிய. " கௌதம், உடன் சம்பத் இருந்தான்.
" என்னோட காதல் அனுபவத்த பேட்டி எடுத்துட்டு இருக்கான். இவனுக்கு என்னமோ ஆச்சின்னு நினைக்கிறேன். "
" பையனுக்குக் கல்யாணம் வயசு வந்துடுச்சு. அதா பினாத்துறான். " சம்பத் சொல்லிப் புன்னகைக்க…
" எனக்காக என்றும் ஆதரவு தரும் மச்சான் ஸார் வாழ்க…" எனப் பிரகாஷ் கோஷமிட்டான்.
" இப்ப எதுக்குடா உனக்குக் கல்யாணம். இன்னும் உனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்குங்க. அதுகளும் கல்யாண வயசுல இருக்குங்க. ரெண்டு வர்ஷம் கழிச்சி முதல்ல சுதாக்கு… "
" அப்றம் அஞ்சி வர்ஷம் கழிச்சி லதாக்கும் கல்யாணம் ஆகும். கொறஞ்சது பத்து வர்ஷம் கழிச்சி நீ பண்ணிக்கிட்டா சரியா இருக்கும். இத நா சொல்ல உங்கண்ணே தா சொல்றான். " சம்பத். அவனை முறைத்துக் கொண்டிருந்த பிரகாஷை பார்த்துக் கேலியாக…
" அப்ப எனக்கு ஸ்டெயிட்டா ஐம்பதாவது வயசுல தா கல்யாணம் பண்ணி வப்பிங்க. "
" டேய் கல்யாணம் பண்றதுங்கிறதே பெரிய விசயம் தான்டா. உன்னோட கல்யாணத்த அண்ணே பொன்விழாவா கொண்டாடுவேன்டா. " என்றான் கௌதம்.
" ம்… கொண்டாடுங்க… கொண்டாடுங்க… ஆமா இப்ப சொன்னிங்களே, ஒரு அட்வெய்ஸ்ஸு. தங்கச்சி இருக்கும்போது அண்ணே கல்யாணம் பண்ண கூடாதுன்னு. அது எனக்கு மட்டும் தா சொன்னதா. உங்கிட்டல்லாம் யாருமே சொல்லலையா, இல்ல சொல்லும்போது காதுல பஞ்சி வச்சி மூடிருந்திங்களா. " கடுப்புடன் கத்த,
" ஏன்டா பொங்குற… அமைதியா இருடா… " எனச் சம்பத் அடக்கினான்.
" சும்மா இருங்க மச்சான் ஸார். அத நீங்கச் சொன்னிங்கன்னா கூட மனசு ஏத்துக்கும். ஏன்னா ஹரிணி கல்யாணம் முடியவும் தா நீங்கப் பவிய மேரேஜ் பண்ணிங்க. இதோ இவரு இருக்காரே. எப்படா திண்ண காலியாகும்னு காத்துட்டு இருந்தவர் கணக்கா உடனே இந்து கழுத்துல தாலி கட்டுனவரு. ஒரு ஆறு மாசம் தான. நம்ம தங்கச்சி பவித்ரா கல்யாணம் முடியவும் நாம பண்ணிப்போம்னு ஒரு வார்த்த, ஒத்த வார்த்த சொன்னாறா… "
" சரி… விடுடா… அந்த ரூல நாம உங்கிட்ட இருந்து கடைபிடிப்போம். " எனக் கௌதம் சொல்ல,
" எப்படி.…காலேஜ் செக்கேண்ட் இயர் படிக்கிற பொண்ணுக்கும், ஸ்கூல் கடைசி படிக்கிற பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிற வர நா காத்திருக்கனுமா என்ன?. எனக்கு இப்பவே இருபத்தி ஏழு வயசு ஆகப்போது. "
கௌதம், "டேய்… பொண்ணெல்லாம் பாக்கனும்னா, அதுக்கு நீ சம்பாதிக்கனும்டா. இப்ப நீ என்ன வேல பாக்குறன்னு பொண்ணு வீட்டுல கேட்டா அண்ணே என்ன பதில் சொல்லனும்னு சொல்லு. ".
" ரைஸ் மில் ஓனர்னு சொல்லு. சரியா இருக்கும். " எனக் குரல் பின்னால் இருந்து வந்தது. சத்தியமூர்த்தி, கவியரசன் மற்றும் கலியபெருமாள் மூவரும் ஒரு சேர உள்ளே பிரவேசித்தனர்.
" என்னோட அண்ணே மகனுக்கு இல்லாத உரிமையா. நாளைக்கே போய் மில்ல இவெ பேருல மாத்தி எழுதீட்டு நாளாண்ணைக்கே பொண்ணு பாத்துடுவோம். என்ன பிரகாஷ். ஓகேவா… " என்றார் மூர்த்தி.
" என்ன இந்த வீட்டுல சரியா புரிஞ்சிக்கிட்ட ஒரே மூத்த குடிமகன் நீங்க தா சித்தப்பா. " எனச் சென்று அணைத்தான் அவரை.
" ண்ணே இவனுக்கு வாய்பாடு கூட ஒழுங்கா வராது. இவன நம்பி மில்ல குடுத்தா… கடைசில உமிய கூட விக்க முடியாது. " எனக் கவியரசன் கேலியாகக் கூறினாலும் மூர்த்தி சொன்னதில் அவருக்கும் உடன்பாடே.
கௌதம், "வா சித்தப்பு… பெரியப்பா எங்க… அவரையும் வருணையும் காணும். வேலண்ணே இன்னும் வரலையா என்ன. "
கவியரசன், "வேலு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாம்பா கோயிலுக்கு அவெ பொண்டாட்டி பிள்ளையோட போனான். அப்றம் அண்ணே… "
" உனக்குத் தெரியாதாண்ணே, வர்ற எலக்சன்ல உங்களோட ஏஞ்சல் நிக்கப்போறாங்க. அதுக்கான வேலைல தா அப்பாவும் நம்ம நங்கை அத்தையும் இறங்கிருக்காங்க. தெரு தெருவாகப் போய் என்னென்ன பிரச்சன இருக்குன்னு வீட்டு கதவ தட்டி தட்டி கேக்க போறாங்களாம். இதோ அவங்க தம்பிங்களுக்கும் ஏரியா பிரிச்சி குடுத்திருக்காங்க. அடுத்த வாரத்துல இருந்து நோட்டையும் போனாவையும் தூக்கிட்டு ஓட்டு கேக்க போப்போறாங்களாம். " பிரகாஷ் கேலி செய்ய, அதற்குக் கவியரன் ஒன்று சொல்ல எனப் பேசிச் சிரிக்க,
கௌதமும் சம்பத்தும் லாவகமாக நழுவிச் சென்றனர். எனெனில் கலியபெருமாள் நின்று இருவரையும் முறைத்துக் கொண்டிருப்பதால். கௌதமிக்கும் ஹிட்லருக்கும் தான் ஆகாது, ஆதலால் பாசமா பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தச் சம்பத்துக்கு என்னானது. ஏன் மாமனாரை பாத்துட்டு நழுவுறான். அதைப் பின்னால் தெரிந்து கொள்ளலாம்.
எத்தனை வருடன் ஆனாலும் இந்த ஹிட்லர் மட்டும் மாறவே இல்லை. இப்பொழுது வரை கௌதம் என்ன செய்தாலும் அவருக்கு மட்டும் தவறாகவே படுகிறது. வெளியே சத்தமே வராமல் வாய்க்குள்ளேயே அவனை வசைபாடி முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார். சத்தமாகத் திட்டினால் இப்போது கௌதமிற்கு சப்போட்டாகப் பேசக் குடும்பமே கிளம்பி வருகிறதே. அதனால் வாயிக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்.
பாவம் மனிதருக்கு பீபீ, சுகர், கொலஸ்டிராலென எல்லா வியாதியும் வந்து ஒட்டிக் கொண்டன.
'பின்ன எப்ப பாத்தாலும் டென்ஷனா கோபமாவே திரிஞ்சா எல்லா வியாதியும் வந்து ஓசில ரூம் போட்டு நம்ம உடம்புல தங்கிக்கும். அப்படி இருந்தும் மனுஷே மாறவே இல்லப்பா… '
________________
மாந்தோப்பு…
கௌதமிடம் காரை நிறுத்தச் சொல்லிப் பாதி வழியிலேயே இறங்கிக் கொண்டாள் ஹரிணி.
தன் கணவனை முதல் முதலில் சந்திக்க காரணமாக இருந்த இடம் அது. வகைவகையாய் மா மரங்கள் இருந்த போதும் ஒரு மரத்தில் கூடப் பழங்கள் இல்லை. பூக்களும் பிஞ்சி காய்களும் மட்டுமே இருந்தன. பின்னாட்களில் அது கனியாகும். ஒவ்வொரு மரத்தையும் ஆசையுடன் வருடியபடி நடந்தவள், தன் கணவனை நினைத்துக் கொண்டே சேனையம்மன் கோயிலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்து கோயிலை அடைந்தாள்.
கோயிலுக்குள் செல்லாது அங்கிருப்பதிலேயே உயரமான ஒரு மொட்டைப் பாறையின் மீதேறி அமர்ந்து கொண்டாள். அப்பொழுது அவளுக்குக் கோயில் கோபுரமும், தூரத்தே பிரிக்கப்பட்டிருந்த சில குடில்களும் தெரிந்தது. தன் கணவனுடன் இந்தக் கோயிலில் வைத்து, தனக்கு நடந்த திருமணம், நள்ளிரவில் நடுக்காட்டில் கட்டாந்தரையில் துயில், அருவி குளியலென அவனுடன் இருந்த இந்த மூன்றரை ஆண்டு கால வாழ்க்கையும் நினைவு படுத்தின. அதைக் கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டிருங்கிறாள் ஹரிணி.
பாறைக்குக் கீழே நீர் சலசலத்துக் கொண்டிருந்து. அப்போது ஒரு நாரை வந்து ஒற்றைக்காலில் தன் உணவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தது. நாரையின் நிழல் நீரில் படுவதால் அந்த இடம் கருப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதை கண்ட மீன், நாரையின் நிழலுக்கு வந்து நாரைக்கு உணவாகிப் போனது.
அவளின் மனம் நாரையைத் தன் கணவன் ரிஷிதரனாகவும், தன்னை மீன் போன்றும் உருவகப்படுத்திப் பார்க்க, சட்டென எழுந்தாள் அவள்.
" What a irrelevant comparison?. " என்றிருந்தது ஹரிணிக்கு. அதாவது தான் ரிஷியிடம் இதுவரை அனுபவித்து மகிழ்ந்து வந்த அனைத்தும் அவனின் நிழல். அவனின் நிஜம் முற்றிலும் வேறாக உள்ளது போன்றும், அவனின் நிழலை நம்பி நிஜத்தை அறியாத மீன்போல், தான் இறையாவதாக ஒப்பிட்டுப் பார்த்தது அவளின் மனம்.
இருவரும் காதலை வெளிப்படுத்திய இந்த ஒன்றரை ஆண்டுகளில் அவன் காதலில் இவள் மயங்கிப் தான் போயிருந்தாள். ஊடல், கூடல், காதல் என நொடியும் வீணாக்காது ரசித்து அனுபவித்து வாழ்கின்றனர்.
Adventure இருவருக்கும் பிடிக்கும். நடு இரவில் ஊர் சுற்றுவது, பைக்கில் வேகமாக அவனுடன் இரு கைகளை நீட்டி யாருமற்ற சாலையில் வேகமாகப் பயணம் செல்வது. அதுமட்டுமல்லாது சைட் விசிட் செய்ய என எங்கெல்லாம் தரன் செல்கிறானோ அங்கெல்லாம் அவளையும்அழைத்துச் சென்று வித்தியாசமான ஆபத்து நிறைந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வான் ரிஷி.
இப்போது தான் அவளைத் தனியே விட்டு விட்டுச் சென்று விட்டான். மூன்று நாட்கள் அவன் இல்லாத இரவு வேதனையை வாரி இறைத்தது. மனமொத்து வாழத் தொடங்கியப்பின் வரும் முதல் பிரிவு, சற்றுகடினமாகத் தான் இருக்கிறது ஹரிணிக்கு.
ரசனைகள், குணங்கள், பழக்கங்கள், உணர்வுகளென அவர்களுக்குள் பல ஒற்றுமை இருந்தாலும், சில வேறுபாடுகளும் உண்டு.
தன் கண்களால் பார்க்கும் ஒவ்வொன்றையும், வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் தனக்கு நம்பகமான நபரிடம் வெளிப்படையாகப் பகிர்வது ஹரிணியின் வழக்கம். எதையும் மறைக்காது வெளிப்படையான அந்த வெகுளி தன்மையே, சம்பதிற்கும் கௌதமிற்கும் நெருக்கமான உறவாக ஹரிணியை மாற்றியது. பள்ளி செல்லும் குழந்தை வீட்டிற்கு வந்ததும் பள்ளியில் நடப்பதை தன் அன்னையிடம் ஒப்பிப்பது போல், எதையும் மனதில் வைத்துக் கொள்வதில்லை. தரனிடமும் அவளின் செயல்கள் அப்படி தான் இருக்கும்.
ஆனால் ரிஷி அப்படி அல்ல. அழுத்தமானவன். எதையும் வெளிப்படையாகச் சொல்லமாட்டான். பொய் சொல்லமாட்டான் தான், அதே நேரம் உண்மையையும் அவன் கூறியது இல்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் அலட்சியமான பார்வை மட்டுமே கிடைக்கும். தன் பிடியை யாருக்காகவும் எதற்காகவும் அவன் விட்டுக்குடுத்தது இல்லை.
யாரிடம் வேண்டுமாலும் அப்படி பிடிவாதமாக இருக்கட்டும். தன் மனைவியிடம் அப்படி இருக்க கூடாது அல்லவா. அதுவும் காதல் செய்து கல்யாணம் செய்தவனின் வேலையா இது.
நம் இணை பற்றிப் பலருக்கும் பல கனவுகள் உண்டு. அதில் பெரும்பாலும் பெண்ணாக இருந்தால் தன் அப்பாவைப் போல் அக்கறை காட்டும் பொறுப்பான, அவரின் குணநலன்களை பிரதிபலிக்கும் ஆணையும், ஆணாக இருந்தால் அவனின் அன்னையை போல் அன்பான பெண்ணும் எதிர்பார்ப்பது சகஜம்.
ஹரிணி அவளின் தாத்தா ரெட்டியை பார்த்து வளர்ந்தவள். ஆந்திராவில் பெரிய நிலச்சுவான்தாரர். அந்த ஊரில் ராஜாபோல் வாழ்ந்தவர் அவர். அவரின் ஆளுமையும் கம்பீரமும் ஹரிணிக்கு பிடித்த ஒன்று. எதிரில் இருப்பவர்களைப் பேசவே விடாது அவரின் திமிரான பார்வை படிக்கும். அதிகாரமாய் தலை நிமிர்ந்து வாழ்ந்தவர். இறக்கும் தருவாயில் கூடத் தன் பேத்தியை வைராக்கியமாகவும் கர்வமாகவும் வளர்த்தவர்.
ரிஷியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவளுக்கு ரெட்டியின் நியாபகம் தான் வரும். ஆளுமையான தன் குரலால் திமிராய் பேசிக் கம்பீரமாக வளம் வரும் ரிஷி தரனின் மீது காதல் வந்தது ஆச்சரியபடுவதற்கு இல்லை. ஆனால் அவனின் சில குணங்கள் தான் இடிக்கிறது அவளுக்கு.
இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது அவனின் செயல்மீது சந்தேகம் கொள்ள காரணம் என்ன?. அவன் அருகில் இருக்கும்போது எதைப் பற்றியும் சிந்திக்காத மூளையும் இதயமும், இன்று அவன் அருகில் இல்லாததால் குழம்பி போய் விட்டதோ.!
குழம்பி போய்த் தான் இருக்கிறாள் ஹரிணி. காரணம் நேற்று அவள் கண்ட பொருள்.
லக்கேஜ் எடுத்து வைக்கவென உயரத்தில் இருக்கும் அலமாரியை நாற்காலியில் ஏறித் திறந்தவள் கைகளுக்கு ஒரு பெட்டி கிடைத்தது. அது கருப்பு நிறத்தில் சிறியதாகவும் இல்லாமல் பெரியதாகவும் இல்லாமல் கனமாக, சிறிய பூட்டு ஒன்றும் போடப்பட்டும் இருந்தது.
" இவனுக்கு இதே வேலயாப் போச்சு. ச்ச… எதையாது பூட்டி பூட்டி வச்சி பாதுகாக்குறது. ஊர்ல அவனோட ஜிம் ரூமத்தா அப்படி வச்சிருக்கான்னு பாத்தா, இங்கையும் ஒரு பெட்டிய பூட்டு போட்டுப் பூட்டி வச்சிருக்கான். உள்ளுக்குள்ள என்ன தங்கமும் வைரமுமா இருக்கபோது. " எனக் குளுக்கி பார்க்க, எந்த ஒரு அசைவும் தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும் திறந்து பார்த்துவிட வேண்டியது தானென முடிவு செய்தவள், பூட்டை திறக்கக் கனமான பொருளை எடுத்து வந்து உடைக்க, உள்ளே இருந்ததை கண்டு அதிர்ந்து தான் போனாள் அவள்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..