அத்தியாயம்: 8
துப்பாக்கி…
கருப்பு நிறத்தில் கனமாக, இலக்கைத் துள்ளியமாகத் தாக்கும் திறன் கொண்ட அது சமீபத்திய தயாரிப்பு. புது மாடல். அதுவும் ஒன்றல்ல இரண்டு. ஒன்று அந்தக் கேஸிலேயே இருக்க, மற்றொன்று ரிஷியின் கையில் இருக்க வேண்டும். ஏனென்றால் மற்றொரு துப்பாக்கி இருக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. அதில் போட வேண்டிய குண்டுகள் தனியாக ஒரு மோல்டில் இருக்க, அதைத் தொடவே ஹரிணிக்கு பயமாக இருந்தது.
இதுவரை உண்மையான துப்பாக்கியை அவள் கையால் தொட்டது இல்லை. இது தான் முதல் முறை. அதன் கூடவே ஒரு லைசன்ஸ் கார்டும் இருந்தது. துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதைப் பெற்றதற்காக ஆவணம் தான் அந்த லைசன்ஸ்.
அந்த லைசன்ஸ்ஸில் உள்ள பதிவு நம்பரை பார்த்து வேக வேகமாகத் தன் அலைபேசியில் தேடியவளுக்கு, அது வாங்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று காட்டியது. தவறாமல் அதைப் புதுப்பித்து வந்துள்ளான்.
'சரி… இவனுக்கு எதுக்கு துப்பாக்கி. துப்பாக்கி வச்சிக்கிற அளவுக்கு அப்படி என்ன ஆபத்து வந்துடுச்சி. ஒன்னு இவனுக்குன்னா, இன்னொன்னு யாருக்கு?.' என யோசித்து பார்த்தவளுக்கு பதில் தெரியவில்லை.
அன்றொரு நாள் ஓம்காரனுடன் சண்டை வந்தபோது, ஓம் கையில் இருந்த கன்னை லாவகமாக ரிஷி வாங்கிய விதமும், அதைப் பயன்படுத்திய விதமும் சந்தேகத்தைத் தர, பின்நாட்களில் ரிஷியிடம், "உனக்கு எப்படி கன் யூஸ் பண்ண தெரியும் பாவா?. " என்று கேட்டாள்…
" ஆக்ஸலி. எனக்கு ஆர்மி ஜாயின் பண்ணனும்னு ஆச. சோ, அதுக்காகக் காலேஜ் டயம்ல NCC ல ஜாயின் பண்ணி, பலதுக்கு டிரைனிங் எடுத்துருக்கேன். அதுல ஒன்னு தான், கன் ஷூட். " என்றான் ரிஷி.
நல்ல மூடில் இருந்திருப்பான் போலும் கேட்ட உடனேயே பதில் வந்துவிட்டது.
ஆம்... ஹரிணியிடம் மட்டும் சில நேரங்களில் மனம் திறந்து வெளிப்படையாகத் தன் கல்லூரி காலத்தைப் பற்றி மட்டும் பேசுவான். எல்லா சமயங்களிலும் அல்ல. அதே நேரம் என் கேள்விக்குப் பதில் வந்தே ஆக வேண்டும் என்று ஹரிணி பிடிவாதம் செய்யும் சமயங்களில் விட்டுக்குடுத்து கீழிறங்கி வருவான்.
ஹரிணி பிடிவாதம் பிடிக்கும் சமயம் ரிஷி விட்டுக்குடுப்பதும். ரிஷி பிடிவாதம் செய்யும் நேரம், அவனை விட்டுப் பிடித்து ஹரிணி வளைந்து கொடுப்பதும் தான் இருவரையும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் இணைத்து வைத்திருக்கிறது.
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்குடுப்பதும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பதும் தான் காதலுடன் கூடிய தாம்பத்தியம். அதற்கு ஏற்றார் போல் வாழ்கின்றனர்.
"ஒரிஜினல் கன்னையா கைல குடுப்பாங்க?. வேற யார் மேலையும் சுட்டா செத்துடுவாங்களா என்ன?. " சந்தேகமாக,
" ம் மே பீ… நடக்க வாய்ப்புண்டு. ஆனா அதுக்குள்ள போடுற புல்லட் ஒரிஜினல் கிடையாது. எல்லாரும் நினச்ச உடனே கன்ன எடுத்துட முடியாது. அதுக்குன்னு டிரைனர்ஸ் இருப்பாங்க, அவங்களோட கண்பார்வைல தான் ஷூட் பண்ணனும். எங்கிட்ட ஏர் கன் இருந்தது. அது ஸ்போர்ட்ஸ்க்கு யூஸ் பண்ணுவாங்க. அதுல தா நா குறி பாத்து ஷூட் பண்ண டிரைனிங் எடுத்துட்டுட்டேன். வேற எதுவும் கேக்கனுமா?. "
" ம்... இவ்வளோ தூரம் டிரைப் பண்ணி ஏ ஆர்மில ஜாயின் பண்ணல பாவா நீ.? "
"ரிட்டன் எக்ஸாம் எல்லாம் பாஸ் பண்ணிட்டேன். இன்டர்வியூ கூப்ட அந்த மன்த் தா அப்பாக்கு ஆக்ஸிடென்ட். சோ, நமக்கு யாரு தேவையோ அங்க கூடவே நாம கண்டிப்பா இருந்தே ஆகனும். அந்தச் சமயம் அம்மாக்கும் அப்பாக்கும் மகன நா தேவ. அதுனால அட்டன் பண்ண முடியல. அடுத்து ஆர்மிய பத்தி நினைக்கவே இல்ல. " என்றவன் அவன்.
தந்தையுடன் இருந்த தன் தங்கைக்கு அந்த விபத்தில் என்ன ஆனது என்று தெரியாததால் அவளைத் தேடும் பணி இருந்து அவனுக்கு.
" இப்ப ட்ரைய் பண்ணலாம்ல?. "
" எதுக்கு?. "
" ஆர்மிக்கு. "
" ஓ… பண்ணலாமே. ஆனா எனக்கு இப்ப இன்ட்ரெஸ்ட் இல்ல. "
" ஏ… "
"எடுத்துக்கிட்ட வேலய பாதில விட்டுட்டு போய் எனக்குப் பழக்கமில்ல. எனக்குச் செய்ய வேண்டிய கடம இன்னும் பாக்கி இருக்கு. " என்றவன் என்ன கடமை என்பதை சொல்லாமல் விட்டு விட்டான்.
சரி தன் கையில் இருக்கும் இந்தக் கன் எதற்கு? பாக்க ஏர் கன் போல் இல்லை. ஏர் கன் போலிஸ் ஸ்டேஷனில் ஏட்டு கையில் வைத்திருப்பார்களே அதேபோல் நீளமாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கி அதைத்தான் பயன்படுத்துவர். இது கைக்கு அடக்கமான pistols.
எதையோ தன் கணவன் தன்னிடமிருந்து மறைக்கிறான் என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு. கணவன் மனைவிக்குள் ரகசியங்கள் இருக்க கூடாது அல்லவா. அதனால் அவனிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவளுக்கு எப்போது எப்படி கேட்பது என்று தான் தயக்கமாக இருக்கிறது.
ஏனெனில் சந்தோஷமாகச் சென்று கொண்டிருக்கும் தங்கள் வாழ்க்கையில் பிரச்சினை என்ற பூதத்தை முதல் தட்டி எழுப்ப அவள் தயாராக இல்லை. சரியான சமயம் வரட்டும் எனக் காத்திருக்க முடிவு செய்து எழுந்தாள், வீட்டிற்கு செல்லலாம் என்று.
கவனமாகத் தான் நடந்தாள் ஆனால் கால் இடறியதோ இல்லை யாரோ அவளைத் தள்ளி விட்டனரோ, தெரியாது. அடுத்த சில நொடிகளில் நீரில் விழுந்து கிடந்தாள் ஹரிணி. நீச்சல் தெரியும் அவளுக்கு. மேலே ஏறி விட நினைத்துக் கைகளை அசைத்து நீரின் மேலே எழும்ப, ஒரு கை அவளை நீருக்குள் இழுத்தது. முதலில் பயம் வரப் பின் 'யார்ரா நீ.?' என்பது போல் நீரின் உள்ளே இழுத்த கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது கூடவே சென்று, இழுப்பவரின் முகம் பார்க்க நினைத்தாள். முகம் பார்க்கும் முன்னரே அவளை உள்ளே அமிழ்த்தி விட்டு அது நீரை விட்டு வெளியேறியது.
' என்ன விளையாட்டு இது. இத செஞ்சவெ கையில மாட்டுனா அவெ செத்தான். ' என முடிவுடன் கோபமாக நீரின் மேலே வந்தவளை சிரிப்புச் சத்தம் வரவேற்றது.
ரிஷி தரன்…
பாறையின் மேல் ஸ்டைல்லாகச் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். ஈரம் சொட்ட சொட்ட… முகம் கொள்ளா தன் வசீகர சிரிப்பில்… அவனின் சாம்பல் நிற விழிகளும் சேர்ந்து கொண்டது. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான உடல் வாகுடன் தன் கரிய கேசத்தை கரத்தால் கோதி விட்டபடி நின்றிருந்தான் ரிஷி தரன்.
" கிட்... நா உன்ன தைரியமான ஆளுன்னு நினைச்சே... ஆனா நீ என்னடான்னா… பயந்து போதைல தள்ளாடிட்டு வர்ற. " என அவள் தட்டு தடுமாறி எழுந்து நடந்து வந்த அழகை கேலி செய்த படி சிரிக்க,
' இன்னைக்கி அவெ மண்ட காலி… ' அப்படி என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு. வேகவேகமாக வந்து அவனை இறுக அணைத்துக்கொண்டாள் அவனின் மனைவி. மூன்று இரவு… இன்றைய பொழுதையும் சேர்த்து நான்கு பகல்… அவனிற்காக அவள் எத்தனை ஏங்கியிருக்கிறாள் என்பதை அந்த அணைப்பு சொல்லியது. அவனின் தேவையும் அதுவாக இருந்ததோ என்னவோ. விலக மனம் இல்லாமல் இருக்கும் சிறு இடைவேளியையும் இல்லாமல் ஆக்கிஅவளைத் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்து நின்றான் வெகுநேரம்.
ஒருவருள் ஒருவர் கிறங்கிக்கிடக்க, முதலில் மயக்கம் தெளிந்தது ஹரிணிக்கு தான்.
" எங்கடா போயிந்த? ஃபோன் கூடப் பண்ணாம. " என அவனின் சட்டையைப் பிடித்து உலுக்க.
" கிட்… சைட் விசிட்டுக்கு கிட்… உங்கிட்ட சொல்லிருந்தேன்ல நவி மும்பை பக்கத்துல ஒரு ரிசாட்டுக்கு போறேன்னு. மறந்துட்டியா என்ன. " நக்கலாக அவளைக் கேலி செய்தான் அவன்.
" நீ சைட் விசிட்டுக்கு போயிக்க மாட்ட. அங்கருக்குற பொண்ணுங்கள சைட் அடிக்கப் போயிருக்க. நா உனக்கு டிஸ்டர்ப் பண்ணுவேன்னு, தொள்ள குடுக்குற என்ன விட்டுட்டு, தனியா போயிருக்க அப்படி தா. " எனச் சட்டையை விடாமல் கேட்க, தரனுக்கு சிரிப்பு தான் வந்தது, அவளின் பொறைமை உணர்வு கண்டு.
ரிஷியின் மீது அவளுக்கு எப்போதும் பொசசிவ்னஸ் அதிகமாகவே உண்டு. எங்குச் சென்றாலும் அவன் யாரை பார்க்கிறான், யார் யாருடன் பேசுகிறான் என்பதை கவனமாகப் பார்ப்பாள். முக்கியமாகப் பெண்களுடன் பேசவே விடமாட்டாள். அப்படி யாரிடமாவது பேசினால் ரிஷியின் தோலில் சாய்ந்து கொண்டு அவனின் இடையில் கை வைத்து அணைத்தபடி சட்டை காலரை அட்ஜஸ்ட் செய்வது போன்று இவன் என்னவன் என்பதை எதிரில் இருப்பவர்களுக்குத் தன் செயல்களால் தெரியப்படுத்துவாள்.
"கிட்… நானே பாவம் கிட். அங்க டூ ஃபீல் போட்ட எந்தப் பொண்ணையும் பாக்கவே இல்லன்னு கவலையா இருக்கேன்." அவளை உசுப்பேற்றவெனச் சொல்ல,
" ஓ… கவலயா இருக்கா… ஊருல பொண்டாட்டின்னு ஒருத்திய தனியா விட்டுட்டு வந்தோமே, அவா நாம இல்லாம கஷ்டப்படுவாளேங்கிற கவலய விட, டூ ஃபீல் கேர்ள்ஸ்ஸ பாக்கலையேங்கிற ஃபீலிங்க தா அதிகமா இருக்கா? உன்ன… " என அருகில் கடந்த மரக்குச்சியை எடுத்துக் கொண்டு அடிக்கப் போக, தரன் ஓடினான்.
" கிட்… உன்ன விட்டுட்டு போகக் காரணமே நீ தா. காது பஞ்சர் ஆகுற அளவுக்கு இருந்த உன்னோட புலம்பல் தா. " எனக் கத்திக் கொண்டே ஓட…
" ம்… எல்லாத்துக்கும் காரணம் நாந்தா ப்பா. உங்க ஊருல மழ பெஞ்சாலும் புயலடிச்சாலும் ஏ வெயில் கொளுத்துனாலும், அதுக்கும் காரணம் நாந்தா. நீ தா உலக மகா நல்லவெனாச்சே. நீ தப்பு பண்ணுவியா என்.. " என அவளும் விடாது கத்திக் கொண்டே துரத்த,
" அடிப்பாவி! எனக்கு ஷோ இருக்கு. டிசைனிங் வொர்க், ஸ்டிச்சிங் வொர்க்குன்னு நிறை வேல இருக்கு. நீ கூட இருந்தா அதயெல்லாம் பாக்கவே தோன மாட்டேங்கிது. பா… வா…ன்னு புலம்புனது யாராம். "
" நா சொல்லுற எல்லாத்தையும் கேக்குறவெ மாறி ஸீன் போடாத. அப்ப நா சொன்னா என்ன விட்டுட்டு போய்டுவியா. " என்க, தரன் ஓடுவதை நிறுத்திவிட்டு தன்னை துரத்தி வந்தவளின் இதழணைத்தான் வேகமாக.
" கிட்… நீயே என்ன விட்டுட்டு போனாலும், இனி நா உன்ன விட்டுப் போகமாட்டேன். ஐ லவ் மை கிட். உங்கூடவே தா டி இருப்பேன். என்னோட கடைசி நொடிவரைக்கும். " என உருக, ஹரிணிக்கு சந்தோஷமாக இருந்தது, தன்னவனின் தனக்கான தவிப்பை பார்க்கையில்.
"மீ டூ லவ் யூ பாவா. நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் பாவா. " என இருவரும் அணைத்துக் கொண்டு நின்றனர். தரனின் கையில் அவள் பொம்மையாக மாற, அவன் தன் வேலையைத் தொடங்கினான். ஊடல் இப்போது அடுத்த நிலையை எட்ட இருக்கிறது.
" கிட்… நம்மலால ஒருத்தர் இறந்து போய்ட்டா தண்டன என்னனு உனக்குத் தெரியுமா.?"
" எனக்குத் தெரியாது பாவா. சட்டம் படிச்ச உந்தம்பிட்ட கேளு. ஆமா யார கொல்லப்போற. "
" கொல்லப்போற இல்ல. கொல்லப்போறோம். உன்னையும் சேத்து சொல்லனும். " இருவரும் விலகாமல் அணைத்தபடியே பேசிக் கொண்டு இருந்தனர்.
" ம்ச்… யார பாவா… "
" ஒரு வயசான ஆளு. சுமார் எழுபது இருக்கும்னு நினைக்கிறேன். பாவம் மனுஷெ அல்பாய்ஸ்ல போப்போறான். " என்றான் வருத்தமாக,
" ஏ அவரு சாகனும் பாவா."
" நாம பண்ற இந்த ரொமான்ஸ் ஷீன தாங்கிக்கிற தெம்பு அவருக்கு இல்லல்ல. அதுனால போய்ச் சேந்துடுவாருன்னு நினைக்கிறேன்.."
" ஹாங்… யாரது. " என அவனின் மார்பில் இருந்த தன் தலையை உயர்த்தி கேட்க, ரிஷி தூரத்தே தெரிந்த ஆடு மேய்த்து வந்த ஒரு கிழவனைக் காட்டினான்.
"அந்தாளுக்கு கண்ணே தெரியாது போல. இதுல அந்தக் காட்சிய வேற பாக்கப்போறாறாக்கும். ம்ச்… நீ வா பாவா. " என மீண்டும் மார்பில் சாய்ந்து கொண்டு முத்தமிட.
" சரி தா. கண்ணு என்னமோ தெரியாத மாறித்தா இருக்கு. ஆனா கைல மொபைல் போன் மாறி ஒன்னு வச்சிக்கிட்டு படம் பிடிக்கிறாப்ல தெரியிது. நாளைக்கி கெட் லயன் நியூஸ்ல தாம தா வருவோம். கோயிலென்றும் பாராது காட்டுக்குள் காதல் ஜோடிகள் கிற தலைப்புல, ரைமிங்கோட ஒருத்தெ உக்காந்து நம்ம வீடியோவ ரிப்பீட் மோடுல போட்டுப் போட்டுக் காட்டுவான். பரவாயில்லயா. " என்ற உடன் ஹரிணி அவனை விட்டு விலகி நடக்க தொடங்கினாள்.
" எல்லாம் உன்னால தா. நா சும்மா தா இருந்தேன். நீ தா உசுப்பேத்தி விட்ட. நா சாமி குப்பாட்டு வாறேன். " எனக் கோவிலுக்குள் சென்றாள்.
உடன் வா என ரிஷியை அழைக்க வில்லை. அழைத்தாலும் சென்றிருக்க மாட்டான் அது வேறு விசயம். உள்ளே சென்றவள் ரிஷியைப் பழிவாங்கும் பொருட்டு வேண்டும் என்றே நேரத்தைப் போக்கினாள். அந்தக் கோயிலுக்கு எனத் தனி பூசாரி இருக்க, அவர் வந்து தீபாராதனை காட்டிச் சென்றார். அங்கிருக்கும் ஒவ்வொரு சாமி சிலையையும் பய பக்தியுடன் வேண்டிக் கொண்டிருக்கிறாள் அவள்.
சிறு கல்லைக் கூட விட்டு வைக்க வில்லை. கால்கள் நோகும் வரை பிரகாரத்தை சுற்றி வந்தவள். இளைப்பாற அங்கேயே நல்ல இடம் பார்த்து அமர்ந்து கொண்டாள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சாமி கும்பிடுகிறேன் என நேரத்து போக்க, ரிஷி தூங்கியே விட்டான்.
" ஹேய்… பா…வா… எந்திரி. எந்திரி பாவா. " என அவள் தட்டி தான் எழுப்ப வேண்டி இருந்தது.
" வீட்டுக்குப் போலாம் பாவா. நேரமாச்சு. " என அவனை அழைத்துவிட்டு திரும்ப, அவளின் கரம்பற்றி இழுத்தான் ரிஷி. இது வழக்கம் தான். கடவுள்மீது நம்பிக்கை என்பது அவனுக்கு இல்லை தான் ஆனால் கோயில் பிரசாதமான குங்குமத்தை தன் மனைவியின் நெற்றியில் தன் கரங்களால் வைப்பது அவனுக்கு மிகவும் பிடித்த பழக்கம். அவளின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்தவன் தன் இதழையும் சேர்த்தே காதலுடன் ஒற்றி எடுத்தான் .
அவளின் நெற்றி முட்டி, அவளின் நெற்றியில் இருந்த திருநீற்றை தன் நெற்றிக்கும் பூசி கொள்ள பெண்ணவள் பூரித்து போனாள், தன் கணவனின் காதலில். அவனின் காதல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது அப்படியே இருக்கும்.
இருவரும் கரம் கோர்த்துக் கொண்டே பைக்கின் அருகில் வர ரிஷி அதன் சாவியை ஹரிணியிடம் தூக்கி எரிந்தான். ' கேட்ச்…' என்றபடி.
அதைத் தன் கரத்தில் பிடித்தவள். " நீ... எம்பின்னாடி உக்காந்து வரப்போறாயா பாவா. " என்க,
" எத்தனா நாளைக்கி தா உன்ன பின்னாடி உக்கார வச்சிட்டு நா ஓட்டுறது. ஒரு சேஜ்ஜிக்கு நா பின்னாடி உக்காந்து உன்ன கட்டிப்படிச்சிட்டு வாறேனே." எனக் குறும்பாய் கண்சிமிட்டி தன் புருவத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றி இறக்க, அதை ரசித்தவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
ஹரிணி பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்ட, ரிஷி அவளிடம் கூறியது போல் அவளின் இடையணைத்து முதுகில் சாய்ந்து கொண்டே தன் சீண்டல்களை தொடங்கினான். இருவரின் மோகத்தில் பைக் பறந்தது. வீட்டிற்கு அல்ல, முடிவில்லாத நீண்டதொரு பயணமாய்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..