முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 9


அத்தியாயம்: 9


மாலை வேளை… 


" டேய், சாயாதடா…."


 " இடுப்ப வளைக்காம ஓட்டு… "


"பெடல்ல கால் வச்சி அழுத்துனாத்தா சைக்கிள் ஓடும். "


 "கை வலிக்குடா. என்ன விட்டுடுடா." எனப் பாவமாகக் கத்திக் கொண்டே வந்தாள் சுதா. 


" என்ன ஆன்ட்டி நீங்க, ஒரு சின்னப் பையனுக்குச் சைக்கிள் சொல்லிக் குடுக்க இவ்வளோ கஷ்டப்படுறீங்க. ச்சச்சச்ச… காலேஜ் படிக்கிற பொண்ணு கடகடன்னு இருக்க வேண்டாமா. இப்படி சோம்பேறியா இருந்தா உருப்படுவிங்களா. இல்ல திண்ண சோறு தா உள்ள இறங்குமா. " நந்து தான் அது. 


கௌதம் வருணுக்கும் நந்துவுக்கும் என இரு சைக்கிள்கள் வாங்கி வந்திருந்தான். அதைத்தான் ஓட்ட முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். 


" இருக்கப்போறது கொஞ்ச நாள் தா. எதுக்கு கௌதம் இதெல்லாம். வேஸ்டாகிடும் இல்லையா. " என்றாள் அபி. 


எப்போதாவது வந்து நான்கு நாட்களுக்கு மேல் தங்காத தங்களுக்கு ஏன் இது என்று கேட்டாள். 


" அண்ணி, நீங்க இருக்குற ஊர்ல வீட்டுக்குள்ளையே வச்சி உங்க கண் பார்வையிலேயே விளையாட விட்டுருப்பிங்க. ரொம்ப தூரம் போய்ட்டா உங்களுக்குப் பயம் வந்திடும், பையனுக்கு என்னாச்சுன்னு. ஆனா இங்க அப்படி இல்ல. ஊர்ல எல்லோருக்குமே நம்ம வீட்டு பிள்ளைங்கள நல்லா தெரியும். பயப்பட தேவையே இல்ல. பயமில்லாத இடத்துல தா சுதந்திரமா விளையாட முடியும். விடுங்கண்ணி இருக்குற நாலு தெருவ நாலு முற சைக்கிள்ள சுத்தி வந்தா கூட எனக்குச் சந்தேகம் தா. " எனக் கௌதம் சொல்ல ஓடி வந்து அணைத்தான் வருண். 


" தேங்க்ஸ் யூ சித்தா. அப்பா என்ன அங்க வெளியவே விடமாட்டாங்க. கேட்டா பெரிய பெரிய வண்டியா வரும்னு சொல்வாங்க. ஸ்கூல்ல விளையாடுறது மட்டும் தான். அதையும் மீறி அடம்பிடிச்சா மால் மாறி ஒரு இடத்துக்குக் கூட்டீட்டு போய் ஒரு மணி நேரத்துல திரும்பக் கூட்டீட்டு வந்திடுவாங்க. இங்க நா போய் எங்க வேண்ணாலும் விளையாடுவேன். எவ்ளோ நேரம்னாலும் சுத்து வேன். ஹேய்… " என மகிழ்வுடன் சொல்லிச் சுதாவையும் லதாவையும் கற்றுத்தரும் படி இழுத்து சென்றனர். 


அந்தப் பயிற்சி வகுப்பு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாவம் பயிற்சியாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறான் நந்து. 


சுதா, "டேய், இதுக்கு சைடுல ரெண்டு வீல் இருக்கும்ல, அது எங்க? அத போட்டுட்டு ஓட்டுனா, நா உம்பின்னாடி வர வேண்டிய தேவையே இருக்காது. எங்கடா அது?"


" அது எதுக்கு வெட்டியா இருக்குன்னு கலட்டி பழைய பேப்பர் வாங்குற ஒரு அண்ணெங்கிட்ட இப்ப தா குடுத்தேன். ஆமா அது எதுக்கு வச்சிருக்காங்க. "


" அடப்பாவி… கீழ விழுந்துடாம இருக்க வச்சது டா அது. புது சைக்கிள். அத எதுக்கு டா வேஸ்ட் பண்ண." 


" நா எங்க வேஸ்ட் பண்ணே. பதிலுக்கு அந்தண்ணே எனக்கு ஒன்னு குடுத்தாங்க. நா குடுத்தத விட அந்தண்ணே குடுத்தது தா எனக்கு எவ்ளோ யூஸ்ஸாகுதுன்னு தெரியுமா? " எனப் பழைய துணிகளைப் போட்டு வைப்பதற்கு என ஓட்டை ஓட்டையா ஒரு நீளக்கூடை‌ இருக்குமே அதை வாங்கியிருந்தான் அவன். 


" இது எதுக்குடா உனக்கு. "


" அதுக்குள்ள ஆதிய உக்கார வச்சி உருட்டி உருட்டி விளையாடுவேன். "

என்றவனை என்ன செய்வது என்று தெரியாமல் சுதா முழிக்க.


" ஆக்ஸலி நீங்க எனக்கு நன்றி சொல்லனும். "


" எதுக்கு ஏ உயிர வாங்குறதுக்காக வா. " 


" நோ… நோ… பைசா பிரயோஜனத்துக்கு படாதத எதையுமே நா என்னைக்குமே கேக்க மாட்டேன். நா சொல்ல வர்றது, உங்களுக்கு நா பண்ணீட்டு இருக்குற உதவிக்கு. " 


" என்ன உதவியா! அந்த மாறிலாம் எனக்கு எதுவும் நீ பண்ணலையே." பற்களுக்கு இடையே வாவார்த்தைகளைத் துப்பினாள். பின்ன அவளைக் கேலி செய்தாள் என்ன செய்ய முடியும். இடுப்பில் கை வைத்து வெடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறாள். 


" படிக்கிறேங்கிற பேர்ல புக் தலைல வச்சி தூங்கி தூங்கி உங்க வேய்ட் அறுபது கிலோ வாகிடுச்சாம். பிரகாஷ் மாமா ரொம்ப ஃபீல் பண்ணாப்ல. அதா கொஞ்ச நேரம் ஓட விட்டா உடம்பு கொழுப்பு குறையும்ல. பல ஆயிரம் காசு குடுத்து உடம்ப குறைக்க க்ளாஸ் நடத்துறவங்க மத்தில, நா உங்களுக்கு இலவசம சொல்லித் தாரேன். அதுக்காக நீங்க எனக்கு நன்றி சொன்னா மட்டும் போதும். கல்வெட்டுல என்னோட பெருமையை எழுதி வக்கனும்னு நா எதிர்பாக்கல. அப்படி பண்ணாலும் அடியேனுக்கு ஓகே தா. " என்க, இதற்கு மேல் பொறுத்தால் ஆகாது என அவனை அடிக்கப் பாய்ந்தனர்.


" ஐய்யையோ… ஆறு வயசு பையன அருவாமனையால அறுக்க வாராங்களே. இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா. என்னைய நானே காப்பாத்திக்கனும் போலையே. " எனச் சைக்கிளை உருட்டிய படி தலை‌ தெறிக்க ஓட, உள்ளே நுழைந்து கொண்டிருந்த ஹரிணியின் பைக்கில் இடித்துக் கீழே விழுந்தான். 


நல்ல வேலையாக ஊருக்குள் என்பதால் மெதுவாக ஓட்டி வந்திருந்தாள் அவள். குடை சாய்ந்து போயிருந்த அவனின் சைக்கிளைச் சுதா தூக்கினாள். ரிஷி தன் தங்கை மகனைத் தூக்கி கைக்கால்களை உதறச் செய்து அடி பட்டிருக்கிறதா என ஆராய்ந்தான். 


" கவனமா சைக்கிள் ஓட்டிருக்கலாம்ல. உள்ளேக்குள்ள எங்கையும் வலிக்கிதா. பாரு தலையெல்லாம் மண்ணு. " என அவனின் தலையில் இருந்த மணலை தட்டி விட… 


"‌கீழ விழுந்ததுனால வந்திருக்காது. அவெ மண்டைல மூள இருக்க வேண்டிய இடத்துல மண்ணு தான இருக்குது. அதா தலைய ‌ரெண்டு ஆட்டு ஆட்டையும் வெளிய வந்துடுச்சி. " ஹரிணி கிண்டலாகக் கூறினாள்.


" அண்ணா… அவெ சைக்கிள உருட்டீட்டு தாண்ணே வந்தான். ஓட்டலாம் இல்ல. ஓட்டவும் தெரியாது அவனுக்கு. " சுதா.


தனக்கு திட்டு விழும் முன் தப்பு எம்மேல இல்ல என முன்கூட்டியே‌ கூறிவிட்டாள். 


" மாமா. ஐ ஆம் பைன். இது இரும்பு உடம்பு மாமா. எதுக்கும் அஞ்சாது. " என ஜாம்பமாகப் பேசப் புன்னகை வந்தது தரனுக்கு. 


ஹரிணி, "அப்பத் துருப்பிடிச்சித்தா போபோற. "


" மாமா… வர்ற கார்த்திக மாசம் நல்ல பெண்ணா‌ நா பாத்து வைக்கிறேன். சைக்கிள் ஓட்டத் தெரியாத, உங்க பைக்குக்கு டிரைவரா கூட இருக்க லாயக்கு இல்லாத, இந்தப் பம்கின்ன கலட்டி விட்டுடுங்க. " எனக் கோபமாக அவளை முறைத்துக் கொண்டே சொல்ல, தரன் அவனின் கன்னத்தில் முத்தமிட்டு, அவனின் கேசத்தை‌ கலைத்து விட்டுப் புன்னகையுடன் உள்ளே சென்றான். அது நந்துவை உற்சாகப் படுத்துவது போல் ஆகிவிட்டது. 


" பாத்தியா… என்னோட மாமா நா சொன்னா என்ன வேணும்னாலும் செய்வாரு. அதுனால எங்கிட்ட மரியாதையா நடந்துக்கங்க. " என்றவனின் சட்டையைப் பிடித்து ஹரிணி உயரே தூக்க. 


" முடியாது டா… என்ன டா பண்ணுவ. " எனக் கேட்டாள்.


" இந்தப் பொஷிஸன்ல என்னால எதுவும் பண்ண முடியாதே. இறக்கி விட்டா பண்ணுவேன். " என்றவனை தரையில் ஹரிணி இறக்க, அவன் பரிதாபமாகச் சைக்கிளை மீண்டும் எடுத்தான்.



" எனக்கு மட்டுமில்ல உனக்கும் சைக்கிள் ஓட்டத் தெரியாதுங்கிறத மறந்துடாத. தத்தி… " என ஹரிணி சொல்ல, சுதா சிரித்தாள். 


" யாரு தத்தி?. நானா? இப்ப பாருங்க என்னோட வீரத்த. " என்றவன்‌ நிஜமாகவே சைக்கிளை லாவகமாக ஓட்டினான். அதுமட்டுமல்ல இரு கைகளையும் விட்டு, முன் பக்க சக்கரத்தைச் சுழல விட்டு என வித்தை காட்ட, இருவரும் ஷாக்காகி நின்றனர். 


'இவ்ளோ நேரம் ஓட்டத் தெரிஞ்சிக்கிட்டேதா எங்கிட்ட விளையாண்டிருக்கான். ' எனச் சுதாவிற்கு கோபம் வர, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள் அவள்.


"ஆறு வயசு பையன் நா ஓட்டுறேன். இருபத்தி ஆறு வயசு ஆண்ட்டி உங்களுக்கு ஓட்டத் தெரியல. வெளில சொன்னா வெக்க கேடு." என ஹரிணியை கேலி செய்ய. 


" சுதா… பின்னாடி உரத் தொட்டில தண்ணீ நிறையா இருக்கு. என்ன பண்ணனும்னு உனக்குத் தெரியும்ல. ".


"‌கூட்டீட்டு போய்க் குளிப்பாட்டிட்டு வாறேன் அண்ணி. டேய் குட்டி சாத்தான். உன்ன சும்மா விடமாட்டேன் டா. " எனச் சுதா துரத்த நந்து ஓடி விட்டான்.


உள்ளே சென்ற தரனை படிக்கட்டில் எதிர் கொண்டான் கௌதம். இருவரும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்க, ஒரு ஒருபடிக்கட்டாகக் கௌதம் தரனை முறைத்துக்‌கொண்டு இறங்கினான் என்றால், ரிஷி இதழ்களில் உறைந்த குறுஞ்சிரிப்புடன் நநக்கலாகப் பார்த்தபடி ஏறிச் சென்றான். 


இருவரும் பேசிச் சிரித்து மகிழவில்லை என்றாலும் முறைக்காமல் இருந்தனர். அது இரு மாதங்கள் கூட நிலைக்க வில்லை. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் முறைக்க ஆரம்பித்து விட்டனர். 


காரணம் என்னவென்றால்… நந்து. 


அதாங்க நந்துவுக்கு ஐஞ்சு வயசாகிடுச்சு மொட்ட போட்டு, காது குத்தனும். இல்லாட்டி தெய்வ குத்தமாகிப்போய்டும்னு அந்த வீட்டு கிழவி நாச்சியம்மாள் புலம்ப, சரி மொட்ட தான போட்டுட்டா போச்சின்னு ஏற்பாடு செஞ்சாங்க. அதுல தாய்மாமனாக இருக்க வேண்டிய தரன் அமர முடியாது என்று விட்டான்.


அப்பக் குடும்பத்துல இருக்குற உறுப்பினர்கள் யார பேசிச் சரிக்கட்டிருக்குனும். தரன் தான. ஆனா அப்படி‌ யாரும் சென்று அவனிடம் பேச வில்லை. மாறாகக் கௌதமிடம் சென்று, பேராண்டி, மகனே, அண்ணே, மருமகனேயென ஒவ்வொருவராக அவனை நந்துவிற்கு தாய் மாமனாக அமரச் சொல்லிக் கன்வின்ஸ் செய்ய முயன்றது கௌதமை தான். அது அவனுக்குப் பிடிக்கவில்லை.


கௌதம், "டேய், அவெ‌ன் தான்டா ஒரிஜினல் மா... அவ விட்டுட்டு ஏன்னடா எங்கிட்ட பேசுறீங்க. "   


கவியரசர், "மகனே அவனுக்கு வேல இருக்கும்னு நினைக்கிறேன். இல்லாட்டி முடியாதுன்னு சொல்லுவானா. உம்பொண்டாட்டி அண்ணே மகனுக்காக இதக் கூடச் செய்ய மாட்டியா என்ன. "  


" வேல இருக்கும்னு நினைக்கிறதுக்கு அவெ என்ன ஜில்லா கலெக்டரா என்ன. வேல இருக்காம் வேல. தங்கச்சி மகெ விசேஷத்த விட வேற என்ன முக்கியமானது இருக்கு. நாங்களும் சாஃப்ட் வேர் கம்பெனிக்கு ஓனர் தா. எங்களுக்கும் வேல இருக்கு தா. அவனோட உடன் பிறப்புக்கு அவெ தா செய்யனும். " என்றான் கௌதம் கராராக… 


அவனுக்கு நந்துவிற்கு முறை செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் தரன் விட்டுக் குடுத்து அதைத் தான் ஏற்பதா, என்ற ஈகோ தான் காரணம். ஆனால் எவ்வளவு வாதம் செய்தாலும், கடைசியில் தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்துக் கீழே இறங்க வேண்டிய நிலை தான் வந்தது அவனுக்கு‌. தரனின் அளவுக்கு உறுதியுடன் இருக்க அவனால் முடியவில்லை. பாவம்… இல்லை குடும்பத்தினரை கெஞ்ச வைப்பதில் விருப்பமில்லையோ என்னவோ. சரியெனத் தாய்மாமன் முறை செய்யச் சம்மதித்தான் கௌதம்.


கலியபெருமாள் தன் மகள் பவித்ரா ராகவ்‌சம்பத்தின் திருமணத்தின்போது, கௌதமை அண்ணனான சபையில் நின்று எதுவும் செய்ய அனுமதிக்கவில்லை. ரிஷி தான் அண்ணனாக இருந்து அத்தனையையும் செய்தான். 


" உங்களுக்கு அவன் பேரனா தெரியலாம். ஆனா எனக்கு அவன் என்னைக்குமே மகன் கிடையாது. எனக்கு இருக்குறது ஒரே ஒரு மகா தா. அவளுக்கு நாந்தா எல்லாமே செய்வேன். இவன் அண்ணேன்னு மொற கொண்டாடீட்டு எம்மக பக்கத்துல வரக் கூடாது. " எனக் காரணம் கேட்ட அனைவருக்கும் பதிலாக இதையே சொல்லியதால் கௌதம் அனைவரின் முன்னும் எதுவும் செய்யவில்லை. 


ஆனால் ரகசியமாகச் செய்தான் பவிக்கு. அது ஹரிணிக்கு பிடிக்கவில்லை. " எங்கண்ணே எனக்குச் செய்றான்னு தைரியாம ஹிட்லர் கிட்ட சொல்ல முடியாத அவால்லாம் உனக்குத் தங்கச்சியா. தேவைக்கி மட்டுமே உங்கிட்ட வர்றவளுக்கு எதுக்கு கல்யாண நாளுக்குப் பிறந்தநாளுக்குன்னு செய்ற. " என்பாள் ஹரிணி. 


" என்ன தா இருந்தாலும் எனக்கு இப்ப அவா மட்டும் தா தங்கச்சின்னு இருக்கா. அவா மறுத்தாலும் நா செய்றத செஞ்சிகிட்டே தா இருப்பேன். " என்பான் அவன்.


" செய்ப்பா செய்ய… உன்ன யாரும் தடுக்கல. அத ஹிட்லர் முன்னாடி செய்‌. எதுக்கு திருட்டுத்தனமா செய்ற. உன்ன திட்டிப் பிரயோஜனம் இல்ல. அவள தா சொல்லனும். " எனச் சலிப்பு தான் வந்தது ஹரிணிக்கு. 


திருமணத்திற்கே செய்ய விடாதவர், மகளுக்குப் பிள்ளை பிறந்தால் மட்டும் தாய்மாமனாக முறை செய்யச் சம்மதிப்பாரா என்ன. இது தெரிந்ததால் தான் நந்துவிற்கு அவனை அமரச் சொல்லிக் கேட்டனர். அதை மனதில் வைத்துத் தான் ரிஷியும் வேண்டாம் என்றானா என்னவோ. அது அவனுக்கு மட்டுமே தெரியும். 


நந்துவிற்கு தாய் மாமனாகக் கௌதம் சீர் செய்தான். சிறப்பாக… தரமாக… ஊரே பேசும் படி வெகுவிமர்சையாகச் செய்தான். 


ரிஷியுடனான முறைப்பிற்கு இது மட்டும் காரணமல்ல. கருணை காட்டுகிறேன் என்ற பெயரில் கண்ணி வெடியின் மீது கௌதமின் காலைத் தூக்கி வைத்துவிட்டு விட்டான் ரிஷி. ஒரு வெடி அல்ல இரு வெடிகள். 


ஒன்று… ஹிட்லரின் கோபத்திற்கு இதுவரை தான் மட்டுமே பலியாகி வந்த நிலையில், அவனுக்குத் துணையாக ஹரிணி எப்போதுமே ‌அந்த லீஸ்டில் இருப்பாள் தான். இப்போது புதிய மெம்பராகச் சம்பத்தையும் சேர்ந்து விட்டார் அவர். காரணம் கௌதம் தான். 


பவிக்கு திருமணம் முடிந்த ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், 'என்ன விசேஷம் இல்லையா. ' எனச் சொந்தங்கள் தெரிந்தவர்கள் எல்லாரும் கேட்க, அப்போதே அவள் மருத்துவரைப் பார்க்க வாருங்கள் எனச் சம்பத்தை அழைத்தாள். 


" என்ன மச்சான். அதுக்குள்ள டாக்டர பாத்து எதுக்கு வெட்டியா காச செலவழிச்சு. மன உளைச்சல வெல பேசி வாங்க போறிங்க. ஏன்னா இப்ப கருத்தரிப்பு‌ மையம் எல்லாமே வியாபார சந்தையா மாறிடுச்சி. டார்கெட் வச்சி ஆள் பிடிக்கிறானுங்க. எந்தக் கொறையும் இல்லன்னாலும் இருக்குன்னு சொல்லி அந்த டெஸ்டு எடு இந்த டெஸ்டு எடுன்னு அழய விட்டு ஒரு வழி ஆக்கிடுவானுங்க. என்ன கேட்டா கொஞ்ச நாள் கழிச்சி இதெல்லாம் பாக்கலாம்னு சொல்லுவேன்." என் தன் கருத்தைச் சம்பத்திடம் முன் வைக்க அவனுக்கும் சரி என்று பட்டது. பவிக்கும் கலியபெருமாளுக்கும் இல்லை. 


குழந்தை இல்லாத தம்பதியனர். ‘குழந்தை இல்லை’ என்பதை வைத்து, சமூகத்தில் பலவித கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகிறார்கள். இதிலிருந்தெல்லாம் தப்பிப் பிழைக்க, எப்படியாவது ஒரு குழந்தை பிறந்துவிடாதா என்று ஏங்கியபடிதான் மருத்துவமனைகளை நோக்கி ஓடுகிறார்கள். அந்த ஓட்டம் தான் பல கருத்தரிப்பு மையங்களின் மூலதனம். அனைத்து மையங்களும் ஏமாற்றுக்காரர்கள் அல்ல. ஆனால் ஏமாற்றுபவர்கள் அதில் இருக்கின்றனர். அதைக் கண்டு களை எடுக்க வேண்டும். நமக்குத் தெரியாது புரியாது என்பதால் தான் நாம் ஏமாற்றப்படுகிறோம். எனவே கவனமுடன் இருப்பது சாலச்சிறந்தது. இதைத்தான் கௌதம் சம்பத்திடன் சொல்ல அதைக் கலியபெருமாள் கேட்க நேர்ந்தது. 


சம்பத்தின் மனதை கலைத்து தன் ஒரே மகளின் வாழ்க்கையையும் கெடுக்க நினைக்கிறானெனக் கலியபெருமாளுக்கு கௌதம் மீது ஆத்திரமே வந்தது. ஹிட்லருக்கு சம்பத் கௌதமுடன் உறவாடுவது பிடிக்காமல் நேரடியாகவே சொல்ல, சம்பத் அவரின்பேச்சைக் கேட்கவில்லை. அதனால் சம்பத்தின் மீதும் அவருக்குக் கோபம் வந்து அவ்வபோது முறைத்துக் கொள்கின்றனர். 


அடுத்த வெடி. 


பவியின் பொறமையை தூண்டி விட்டது. அதாவது பெண்களுக்கு எப்பொழுதுமே ஒரு எண்ணம் இருக்கும் அது தன் உடன் பிறந்தவர்கள் தங்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் வழங்க வேண்டும். தங்கள் வீட்டு சொந்தங்களுக்குத் தான் அள்ளித்தர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தன் கணவன் வீட்டு விசேஷங்களுக்குச் சென்று பல ரூபாய் நோட்டுகளை செலவு செய்தால் கூட ஏன் என்று கேட்கமாட்டார்கள். ஆனால் தன் அண்ணனோ தம்பியோ அவர்களின் மனைவி வீட்டு வழி சொந்தங்களுக்குச் சிறிய உதவி செய்தால் கூடப் பூதாகரமாக நினைத்துச் சண்டை போடுவர். 


இங்குக் கௌதம் அவனின் மனைவி இந்துவின் அண்ணன் மகன் நந்துவிற்கு மாமானாக அமர்ந்து விட்டான். அதை எப்படி ஏற்பது. கூடாது அல்லவா. கௌதமிடன் சென்று '‌நீ யாரு சொன்னாலும் கேக்காதண்ணே. என்னோட பிள்ளைக்கி தா நீ தாய் மாமா. வேற யாருக்கும் கிடையாது. ' என்று வேறு‌ சொல்ல, 


கௌதம் அதைக் கேட்க வில்லை. ஏனெனில் ஹிட்லரின் பேச்சை மீறி அவள் ஒருபோதும் செயல் படமாட்டாள். இவா அவா பிள்ளையைத் தூக்கி தன்னிடம் தரப்போறாளா என நினைத்தவன் அமர்ந்து விட்டான். அது தணல் உண்டாக்கியது என்றால், அவன் செய்த சீர் பொருட்கள் தணலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றியது. அதை ஹிட்லர் பற்ற வைத்துக் குளிர் காய்கிறார். எவ்ளோ நல்ல மனிதர் அவர்.


ஒரு பக்கம் ஹிட்லர். மற்றொரு பக்கம் பவித்ரா என இரு வெடிகளிலும் தன் இரு கால்களை வைத்துள்ள கௌதம். லேசாகக் காலை நகட்டினாலும் வெடித்து விடுவான். பாக்கலாம் கௌதமின் தலை தப்புகிறதா இல்லையா என்று.

 

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி 


அன்பே 8


அன்பே 10

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...