அத்தியாயம்: 16
ஹரிணி...
சமையலறை வாசலில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கியவள், அவ்வபோது சமயலறை உள்ளே எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தாள்.
உள்ளே மலர் யாரையோ திட்டிக்கொண்டே சமயல் செய்துகொண்டிருந்தார். யாரையோ என்ன, ஹரிணியை தான்.
"பொட்டபிள்ளைக்கி சமக்க தெரியலன்னா அசிங்கம் இல்லையா. சரி இதுவரைக்கும் சமயகட்டு பக்கமே வரல, ஒரு கொழந்த பெத்தாச்சி. இனியாது கத்துக்க வேணாம். புருஷனுக்குன்னு செய்ய வேண்டாம். உம்புள்ளைக்கின்னு நீ சமக்க கத்துக்கனுமா இல்லையா. இங்கிட்டும் அங்கட்டும் ஆடிக்கிட்டே திரிஞ்சா... குடும்பம் வெளங்குமா என்ன." என வசைபாடிக் கொண்டு இருக்க,
தன்னை காப்பாற்ற யாராவது வருவார்களா என ஆவலுடன் சுற்றி முற்றி பார்த்தாள். ம்ஹிம்... அவளின் கெட்ட நேரமா இல்லை மலர்மீது கொண்ட பயமா என்றெல்லாம் தெரியாது, அறைக்குள் இருக்கும் ஒருவரும் எட்டி பார்க்கவில்லை. ஆனால் ஜன்னல் வழியே என்ன நடக்கிறது என்பதை மட்டும் ஒட்டு கேட்டனர்.
இதோ அவள் பெற்றெடுத்த முத்து ரத்தினம். மற்றொரு ரத்தினத்துடன் அவளின் அருகில் வந்தது. அகிலன்... ஆதிரை...
வந்தவர்கள் ஹரிணியை பார்த்துச் சிரித்து, "ஏ கீழ உக்காந்துக்க." அகில் பொதுவான குரலில் கேட்டான்.
"உங்க பெரிய அப்பத்தா என்ன திட்டிட்டு இருக்காங்க. மம்மிக்கு ஹெல்ப் பண்ண யாரையாது கூட்டீட்டு வாரீயா." தலையசைத்து பேசியவளைப் போலவே ம்... எனத் தலையசைத்து உள்ளே சென்றான் அகிலன்.
'அப்பாடா நம்மல காப்பாத்த ஆள் வரப்போது.' என நிம்மதி பெருமூச்சு விட, உள்ளே இருந்த மலர் வெளியே வரும் ஆரவாரம் கேட்டது. உடனே அமர்ந்திருந்தவள் எழுந்து முட்டிப் போட்டுக் கொண்டாள்.
"ரெண்டு வெங்காயத்த வெட்ட இவ்ளோ நேரமா!. கொண்டா நீ வெங்காயம் நறுக்குனது போதும். இப்ப இத வெட்டு."என ஒரு கிலோ வெண்டைக்காயை தர,
"பூவத்த, இது அதிகமா இருக்கு. நா உதவிக்கி வேணும்னா அபி அக்காவ கூட்டுக்கவா."
"அபி பிள்ள பாத்திரம் துலக்கிட்டு இருக்கு. யாருக்கு என்ன வேல குடுக்கனும்னு எனக்குத் தெரியும். சொன்னத செய்." என மிரட்டவும், கனகவள்ளியை அகிலன் கூட்டி வரவும் சரியாய் இருந்தது.
அவர் சைகையில் 'ஏன் திட்டுகிறார்.' என்று கேட்க, 'என்ன சமைக்க சொல்றாங்கத்த.?' எனச் சைகை செய்தாள் ஹரிணி.
கனகவள்ளி வந்த அடையாளம் தெரியாமல் உள்ளே ஓடி விட்டார். சமையல் விசயத்தில் ஹரிணிக்கு சம்போட் செய்ய யார் தான் வருவார்கள் சொல்லுங்கள்.
"எதோ பஞ்சாயத்து பண்ணி தீர்ப்பு சொல்றவங்க மாறிக் கேள்வியெல்லாம் கேட்டுட்டு, ஒன்னுமே சொல்லாம போய்டாங்க. என்ன நாந்தா காப்பாத்திக்கனுமா." என முட்டிப் போட்டவள் சமையலறை எட்டி பார்த்து மலர் வரவில்லை என்பதை உறுதி செய்து விட்டு அமர்ந்து கொண்டாள். அவருக்குத் தெரிந்தால் இதற்கும் சேர்த்து திட்டு வாங்க வேண்டி வரும்.
வெண்டைக்காயின் தலையை வெட்டியவள், அதை எடுத்து ஆதியின் முகத்தில் ஒட்டி வைத்தாள்.
"நீ பாக்க பேய் மாறி இருக்க ஆதி. ஹாவ்... " எனச் சொல்லிச் சிரிக்க, தன் பெரியன்னையின் செயலைத் தானும் செய்தாள் அந்தச் சின்ன வாண்டு. அதான் வெண்டைக்காயை எடுத்து, தன் முகத்தில் ஒட்டி வைத்துவிட்டு சிரித்தாள் அவள்.
கௌதம், "தாங்கெட்டது மட்டுமில்லாம, அடுத்தாளையும் சேத்து கெடுக்குறது நல்ல பழக்கமா டார்லிங்."
"நா என்ன பண்ணேன். சும்மா இந்த வெண்டக்காய எடுத்து இப்படி ஒட்டி வச்சேன். தப்பா.!" எனக் கேட்டு அவனின் முகத்திலும் ஒட்ட, ஹரிணியை பார்த்து ஆதியும் கௌதமின் முகத்தில் ஒட்டி விட்டுக் கைத்தட்டி சிரித்தாள்.
"நீ தா பைத்தியம்னா, எதுக்கு எம்மகளையும் சேத்து பைத்தியமாக்குற. ஏய் இந்த அரலூசு கிட்டல்லாம் சேராத." என மகளின் முகத்தைச் சுத்தம் செய்ய, ஆதி விட வில்லை. அவனிடமிருந்து திமிறி அகப்படாமல் ஓடி விட்டாள்.
சமயலறை வாசலில் கிடந்த குப்பை பார்த்து, "பெரிம்மா, ஹரிணி வீட்ட குப்பக் காடாக்குறா." எனக் கத்த, அவனைப் பேச விடாது வாயை மூடினாள் ஹரிணி.
"அமைதியா இருடா. பூவத்த வந்தா அதுக்கும் சேத்து திட்டு விழும். இங்க பாரு கையெல்லாம் கருப்பாயிடுச்சு. கிலோ கணக்குல காய் கட் பண்ணீருக்கேன். அதுக்கு என்ன பாராட்ட வேணாம். திட்டாமலாது இருக்கலாம்ல." என சோகமாகச் சொன்னவளின் கையில் இருந்த கட்டர் போர்டை வாங்கி அவன் நறுக்கினான் காயை.
வைசு, "நீ பண்ண வேலைக்கி பாராட்டுவிழா மட்டும் தா கொறச்சல. "
"நா உங்களுக்கு உதவி தான செஞ்சேன்."
கௌதம், "நீ உதவில்லாம் செஞ்சிருக்க மாட்ட, உள்ள இருக்குறவங்கள வச்சி செஞ்சிருப்ப. அதா உனக்குப் பெரிம்மா பனிஷ்மெண்ட் தந்திருக்காங்க. என்ன செஞ்சன்னு சொல்லிடுமா."
"நா சொல்றேன் ண்ணே. சாம்பாருக்கு துவரம் பருப்ப வேக வைக்கச் சொன்னா, இவா கடலப் பருப்ப வேக வச்சிட்டா."
"ரெண்டுமே ஒன்னு போலத் தான இருக்கு. குட்டி குட்டி வட்டமா. எல்லோ கலர்ல. அதா எனக்கு கன்ஃப்யூஸ் ஆகிடுச்சு." ஹரிணி ரோசமாக,
கௌதம், "இல்லன்னா சரியானத வேக வச்சிருப்ப?."
"ஹாங்..."
"அத விடுங்க. அடுப்பு வேல சொன்னாதா தப்பு பண்ணுறான்னு. சுத்து வேல செய்யச் சொன்னாங்க மலரம்மா. உருளக்கிழங்க தோலுருச்சி, மசிக்க சொன்னா! இவா என்ன செஞ்சான்னு கொஞ்சம் கேளுங்க?."
"நா கரெக்ட்டா தா mash பண்ணேன்."
கௌதம், "அப்பவுமா பெரிம்மா திட்டுனாங்க.!"
"ம்... என்ன கொற சொல்லலைன்னா அவங்களுக்கு தூக்கமே வராது போல."
வைசு, "அடிங்க, mash பண்ணீட்டு என்ன பண்ண. அத சொல்லு."
"அது பாக்க களிமண் மாறி இருந்துச்சா. என்னோட கலைத்திறமைய அதுல காட்டலாம்னு, ஒரு பார்பி பொம்ம செஞ்சேன். உருளைக்கிழங்கு பார்பி. அத பிடுங்கி அதோட கைய கால தலையன்னு எல்லாத்தையும் பிச்சி எரிஞ்சிட்டாங்க, பூவத்த. தெரியுமா." சோகமாகக் கூறினாள் அவள்.
"உன்னைய உடைக்காம விட்டேன்னு சந்தோஷப்படு. சாப்பாட்டு பொருள கைப்படாம சுத்தமா வச்சிக்கனும். நீ என்னடான்னா கைய்ய விட்டுப் பிசஞ்சு, அதுல பொம்ம செஞ்சு விளையாண்டுட்டு இருக்க. கெட்டு பொய்டாது. அத்தன பேரும் சாப்பிடனும்ல." மலர் உள்ளே இருந்து கரண்டியுடன் வந்தார்.
வைசு, "ஆமா வீட்டுல எப்பிடி சமப்ப. ஹோட்டல் சாப்பாடா?. இல்ல எங்கண்ண பட்டினி போட்டுடுவியா." சந்தேகமாக.
"ச்சச... ஹோட்டல் சாப்பாடெல்லாம் ஹரிணிக்கு சேராது. அதுனால தட்ட எடுத்துட்டு இந்து கிட்ட வந்துடுவா. 'இந்து... வந்து... சாப்பாடு தந்து... உதவி பண்ணு.' ." எனக் கௌதம் ராகம் பாட,
"நானும் சமப்பேன். நூடுல்ஸ்... கப் நூடுல்ஸ். அது நல்லா சமப்பேன்."
கௌதம், "ஏய் சுடுதண்ணி வக்கிறதுக்கு பேரு சமயல்ன்னு எங்கூர்ல சொல்லமாட்டோம்."
"நீ நம்பலேல... ஹேய், பாவா... பாவா... நா சமயல் செய்வேன்ல. இவங்களுக்கு கொஞ்சம் சொல்லு. எல்லாரும் கிண்டல் பண்றாங்க." என அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்த ரிஷியிடம் ஆதரவு திரட்ட முயல, அவன் உதடுகள் சிறிது விரிந்து புன்னகை அரும்பியது.
மலர், "சிரிக்காம பதில் சொல்லு தம்பி. உனக்கு இவா சமயல் பண்ணி தந்தாளா என்ன.?"
"நா உயிரோட நடமாடும் போதே தெரிய வேண்டாமா ம்மா. இவா சமச்சி நா சாப்டது இல்லன்னு." என்றான் சிரித்துக் கொண்டே.
"ஹாங்... அன்னைக்கி நா வச்ச தக்காளி சாதம் நல்லா இருந்துச்சின்னு சொன்னேல பாவா நீ."
"ஓ... அது தக்காளி சாதமா!. நாங்கூட அகிலோட கிழிஞ்ச புக்க ஒட்ட வாங்கி வைச்ச பச ன்ல நினைச்சேன்." ரிஷி கேலி செய்ய, ஹரிணி அவனுக்கு அழகு காட்டி விட்டு முகம் திருப்பிக் கொண்டாள்.
"ஹேய் பாவா, நாளைக்கி நீ சமக்கிறியா.? உன்னோட சாப்பாட்ட சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி. ம்..." என்க, மலர் அவளின் தலையில் தட்டினார்.
"இத்தன பொம்பளைங்க வீட்டுல இருக்கும்போது, ஆம்பளப் பையன் அவன போய்ச் சமக்க சொல்லுற. கோட்டிகாரி. " என்றார் மலர்.
"ஐய்யோ பூவத்த. உங்க புள்ள நல்லா சமைப்பாரு. சாப்பிட்டு பாருங்க அப்பதா தெரியும்."
"அதெல்லாம் ஒன்னும் வேணாம்." மலர்.
"வேண்டாம்னு சொன்னா அவரு சமயல சாப்பிட உங்களுக்குத் தா குடுத்து வைக்கலன்னு அர்த்தம்."
"என்னடா சொல்றா இவா?. அப்ப நீ தா வீட்டுல சமயல் பண்றியா?." மலர் கேட்க அவன் மென்னகை சொல்லியது உண்மை என்று.
"பாவாவ விட, மூர்த்தி மாமா சூப்பரா பிரியாணி பண்ணுவாரு. சிக்கன், மட்டன், ஏ ஃபிஷ் பிரியாணி கூடச் செய்வாரு. ம்." என இமை மூடிச் சிலகிக்க,
'இவள பேச விட்டா குடும்ப மானம் கப்பலேறிடும்' என்று ஹரிணியை இழுத்து செல்ல முயன்றான் தரன். ஆனால் விடவில்லை மலர். அவளின் கரம்பற்றி,
"அப்றமேட்டிக்கி பிரியாணிய திங்கலாம். இப்ப இத நறுக்கி குடு. டேய் அவா கிட்ட குடுடா அத." என மீண்டும் வெண்டிக்காயை கொடுக்க. ' மறுபடியும் முதல்ல இருந்தா.' என்றிருந்தது ஹரிணிக்கு.
மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்துடன் போட்டி போட்டுக்கொண்டு அந்த மடிக்கணினியும் வெளிச்சத்தை வாரி இறைத்தது. நிலவைப் பார்க்கும்போது வரும் நிம்மதியும் ரசனையும், மடிக்கணினியை பார்க்கும்போது மட்டும் வரவில்லை.
ஒரு நிமிடம் நிலவை ரசிப்பதும் பின் தன் கையில் உள்ள மடிக்கணினியை பார்த்து எதையோ கிறுக்குவதுமாக இருந்தாள் ஜெனிபர்.
என்ன தெரிகிறது என வடிவேல் பாணியில் அவளின் அருகில் சென்று அவனும் வெகுநேரம் பார்க்கிறான். அவனுக்கு எதுவுமே தோன்றவில்லை. எனவே அவளின் கவனத்தை தன்பக்கம் திருப்ப, அவளின் காதிற்கு அருகில் சென்று தன் விரல்களை வாயில் வைத்துச் சத்தம் எழுப்பினான். விசில் சத்தம்.
பதறி எழுந்தவளின் லேப்டாப்பை கீழே விழாமல் காப்பாற்றி விட்டான் பிரகாஷ். 'நல்ல வேள பிடிச்சிட்டேன். இல்லாட்டி இத ரிப்பேர் பண்றதுக்கு இன்னொரு படம் பாக்க வேண்டி இருக்கும்.' அவனின் மைண்ட் வாய்ஸ்.
"நீங்களா!. நா பயத்துட்டேன். ஏ என்ன பயமுறுத்துறீங்க.?"ஜெனி.
"நா உங்க பக்கத்துல வந்து ஐஞ்சு நிமிசத்துக்கு மேல இருக்கும். ஆள் வர்ரது கூடத் தெரியாம, என்ன பண்ணிட்டு இருக்கிங்க."எனக் கேட்ட படி அவளின் எதிரில் அமர்ந்தான்.
"சும்மா தா. சில மாடல்ஸ் கிட்ட சேட் பண்ணீட்டு இருக்கேன். யாருமே ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கிறாங்க. அதா கவலையா இருக்கு."
"இதுல கவலப்பட என்னங்க இருக்கு. காசு குடுத்தா மாடல்ஸ் வரப்போறங்க. உங்க கம்பெனிக்குன்னு நாலஞ்சு பேர வச்சிருப்பிங்களே. என்னாச்சு அவங்களுக்கு?."
"எங்களோட ஆப்போனென்ட் கம்பெனி விலைக்கு வாங்கிடுச்சு. யாருமே ஹரிணியோட மாடல்ஸ்ஸா இருந்து ரெம்ப் வாக் பண்ண சம்மதிக்கல. ஷோ நடக்க பத்துக்கும் குறைவான நாள் தா இருக்கு." ஜெனி அவளின் வேலையில் உள்ள பிரச்சனைகளைச் சொல்லி வருத்தப்பட, புன்னகைத்தான் பிரகாஷ்.
"அதெல்லாம் ஹரிணி பாத்துப்பா. நீங்க வீணா கவலப்படாதீங்க." என ஆறுதலாகப் பேச, பதிலுக்கு அவள் ஒன்று சொல்ல எனப் பொதுவான பேச்சுக்கள் இருவருக்கும் இடையே கால நேரமின்றி சென்றது.
"நேத்து மேச் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்ல." பிரகாஷ் அவளின் பாராட்டை வேண்டிக் கேட்க,
"சூப்பரா இருந்தது. நா இதுவரைக்கும் லைவ்வா எந்தப் போட்டியையும் பாத்ததே இல்ல. டீவில தா பாத்திருக்கேன். அதுலையும் லைவ் மேச் பாக்க மாட்டேன். இங்க தா ஃபஸ்ட் டயம் பாக்குறேன். சேர்ல நுனில உக்காந்து பாத்தேன். அந்த அளவுக்கு இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது. நீங்க, அப்பறம் முதல்ல இறங்குனாறே அவரு, அப்பறம் க்ரீன் டிசர்ட் போட்டிருந்தாறே அவரு, இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எல்லாரும் சூப்பரா விளையாண்டிங்க." எனப் போட்டிபற்றிப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவளின் கண்கள், விரல்கள், காதணிகள் காற்றில் ஆட, பிரகாஷ் மயங்கிப்போய் நின்றான். கூடவே சிறு பொறமை உண்டானது. அவனை மட்டுமல்ல மற்றவரின் ஆட்டமும் அவளைக் கவர்ந்ததால் வந்தது அது.
அப்போது தான் கவனித்தான் அவளின் அருகில் இருந்த சிறிய காகிதத்தை. அதில் கபடி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைக் கையில் வாங்கி நின்ற வீரர்களைத் தத்துரூபமாய் வரைந்திருந்தாள் ஜெனி.
"இது நீங்க வரைஞ்சதா.?"
"ம்... எனக்கு டிராயிங் நல்லா வரும். அது தா ஹரிணிக்கிட்ட வேல வாங்கி தந்தது. ஹரிணியும் நல்லா டிரா பண்ணுவா. "
"பிரிண்ட் அவுட் மாறி இருக்கு. பொய் சொல்லாதிங்கங்க." பிரகாஷ் கேலியாக,
"நம்பலல்ல. அப்படியே ஒரு நிமிசம் இருங்க." என அவனை வரையத் தொடங்கினாள். அதுவும் நிஜம் போல் வரைந்திருந்தாள். வாங்கி பார்த்தவன் அவளின் திறமையைக் கண்டு வியந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் நேரில் பார்ப்பதுபோல் இருந்தது.
"இந்தாங்க... இது உங்களுக்குத் தா. போட்டில வின் பண்ணதுக்கு என்னோட கிஃப்ட்." முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அவன் முகத்தை வரைந்திருந்து நீட்ட,
"தேங்க்ஸ் ங்க." என வாங்கிக் கொண்டான்.
"ஹா... அப்பறம், உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் தப்பா எடுத்துக்காதிங்க. படிப்புங்கிறது புத்தகத்துல இருக்குறத படிச்சி தெரிஞ்சிக்கிறது மட்டும் தா. அத தெரிஞ்சிக்கலைன்னா தப்பு ஒன்னுமில்லை. படிப்பு நம்மகிட்ட இருக்குற திறமைய வெளிக்கொண்டு வருமே தவிர, திறமைய புதுசா உருவாக்காது. திறமைங்கிறது நமக்குள்ள தா இருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ, அத பண்ணி முன்னேறுங்க. நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்." என்றாள் ஜெனிபர்.
விஜய் பிரகாஷை. 'வேலவெட்டி இல்லாதவன். இவெ ஒழிஞ்சிக்க அண்ணனுங்க தேவ. சொந்தமா எதுவும் பண்ண முடியாது.' என்பது போல் போட்டி நடக்கும் முன் பேசி வெறுப்பேற்றியதை கேட்டதால் பிரகாஷிடம் அவ்வாறு கூறினாள். அவர்களின் பேச்சால் அவன் வருத்தப்பட கூடாது என்பதற்காக.
"ஸாரி… நா கொஞ்சம் அதிகமா பேசியிருந்தா." எனச் சொல்லிச் செல்ல முயன்றவளின் முன் தன் ஒருகரம் விரித்துத் தடுத்து நின்றான் பிரகாஷ்.
அவனின் செயலில் சிறு அச்சம் வந்தாலும், நிமிர்ந்து அவனை என்ன என்பது போல் பார்த்தாள் அவள். ஏனெனில் பெண்களிடம் வம்பு பேசி, தொட்டுப் பேசும் ரகம் இல்லை பிரகாஷ். அதனால் தான் அவனின் செயல் அவளுக்கு வியப்பையும், இரவு நேரம் என்பதும் அச்சத்தையும் தந்தது.
"ரொம்ப நன்றி. எம்மேல நீங்க வச்சிருக்குற, அன்புக்கு." என்றவன் தன் பையில இருந்த விசிலை எடுத்து அவளின் உள்ளங்கையில் தினித்துவிட்டு அவளின் தோலுரசி சென்றான். நின்று பார்த்திருந்தால் அவளின் முகத்தில் பூசிய வெட்கம் கண்ணுக்குத் தெரிந்திருக்கும்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..