முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 18

அத்தியாயம்: 18


இருள் படவி வெளிச்சத்தை விழுங்கும் மாலைப் பொழுது. சந்திரன் மெல்ல மெல்ல தலை தூக்கி நடு வானை ஆள இன்னும் சில மணி நேரங்களே இருக்கும். ஆனால் ஹரிணி இன்னும் அந்தக் களத்து மேட்டை விட்டு நகரவே இல்லை. சிந்தனைகள் ரிஷியிடமும் கௌதமிடமுமே இருந்தன.


அண்ணன் தம்பியென இருவருக்கும் இடையில் உள்ள குணங்களை வேறுபடுத்திப் பார்த்தது. ஒருவன் பாதி முரடன் என்றால் இன்னொருவன் முழு முரடன்.‌ ஒருவன் பிறர் சொல்வதை காது குடுத்தாதவது கேட்பான். மற்றவனுக்கு காது என்பதே கிடையாது.‌ ஒருவனுக்கு யோசிக்காமல் ஆர்வக்கோளராகச் செயல்படும் பழக்கம் உண்டு. மற்றவன் நிதானமாக யோசித்து ஆர அமர நிதானமாகத் தன் காரியத்தைச் சாதித்து கொள்வான். 


ஒருவன் அனைவரிடத்தும் இனிமையாகப் பேசிப் பழகும் சூது அறியா வெகுளி. மற்றவன் நாக்கில் விஷம் இருக்கும்.‌ நல்ல பாம்புபோல் கொட்ட நேரம் பார்த்துக் கொண்டே இருப்பான்.


மொத்தத்தில் ஒருவன் Hard work செய்து முன்னேறினால் மற்றவன் Smart work செய்து நல்ல பெயரைத் தட்டி பறித்து விடுகிறான். ஆனால் இருவருமே தன் மேல் வைத்திருக்கும் அன்பானது நிஜம். அது காட்டும் விதம் வேறுபட்டாலும் இருவரின் அன்பு என்றும்‌ மாறாது இருக்கும் ஆயுள் முழுவதும்.


இப்படி பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு பின்னால் யாரோ வரும் ஆரவாரம் கேட்டது. பயம் என்பது அந்தக் கிராமத்தில் தேவை இல்லை என்றாலும் எச்சரிக்கையோடு இருந்தவளை உரசியபடி வந்தமர்ந்தான் ஒருவன். அவனின் தீண்டலும், உடலிலிருந்து வந்த இதமான வாசனையும் சொல்லியது வந்தது கௌதம் என்று. ஹரிணி திருப்பிக் கூடப் பார்க்காது இருக்க,


"டார்லிங்... தனியா ஏ உக்காந்திருக்க. என்ன‌ கூப்டீருந்தா நா வந்து கம்பெனி குடுத்திருப்பேனே. இந்த இரவு காட்சிய கைல பியரோட கொண்டாடுனா நல்லா இருக்கும்ல. ம்..."


"நா ஒன்னும் குழந்த இல்ல. என்ன பாத்துக்க எனக்குத் தெரியும்." ஹரிணி பட்டுக் கத்தரித்து போல் பேச்சைக் கத்தரிக்க,


"ஐ நோ. நீ ஒன்னும் குழந்த கிடையாதுன்னு. ஆனா உம்புருஷன் உன்ன கிட் னு கூப்பிடுறதுனால நீ கிட்டாவே மாறிட்டியோன்னு நினச்சேன்." என்றவனை திரும்பிப் பார்க்காமலேயே முறைத்தாள் ஹரிணி. 


"ஓகே... நீ எம்மேல கோபமா இருக்கன்னு தெரியும். ஸாரி... இதத்தவிர சொல்றதுக்கு ஒன்னுமில்ல. ஸாரி டார்லிங்... ஸாரி..." 


"இட்ஸ் ஓகே. பரவாயில்ல." என்றவள் இன்னும் அவன் முகம் பார்க்கவில்லை. அதை அறிந்தவன் அவளைச் சமாதானம் செய்ய, 


"நாளைல இருந்து நம்ம கம்பேனி பசங்களுக்கு ரேம்ப் வாக் பண்ண டிரைனிங் குடுக்க போறோம். நானும் அதுல கலந்துக்கலாம்னு இருக்கேன். நீ குடுக்குற டிரெஸ் ஏலியன் போடுற மாறி இருந்தாலும் பரவாயில்ல.‌ அத போட்டு‌ட்டு காலுல கட்டி வந்தவெ மாறி நடக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்." என அவள் தைத்து வைத்திருக்கும் உடைகளை அணிந்து ஒயிலாய் நடக்க சம்மதித்தான் கௌதம். 


"எனக்காக யாரும் அவங்களுக்கு பிடிக்காதத செய்ய வேண்டிய அவசியமில்ல. நா சமாளிச்சுக்குவேன். உன்னோட அக்கறைக்கி ரொம்ப நன்றி. எனக்கு உன்னோட அப்பாய்ண்ட்மெண்ட் தேவ இல்ல. உதவியும் தேவ இல்ல." என்றவள் எழுந்து செல்ல, அவளின் கரம்பற்றி நிறுத்தினான். அப்போது அவளின் முகம் வலியில் சுருங்கியது.  


"என்னாச்சு ஹரிணி வலிக்குதா?. கைல என்ன?. காட்டு கைய." எனத் தன் செல்ஃபோனின் லைட்டை ஆன் செய்ய, ஹரிணி உறுவிக் கொண்டாள் அவளின் கரத்தை. 


"காட்டும்மா. அடி பட்டிருக்கான்னு பாக்க." என மீண்டும் பற்றிப் பார்க்க, கரம் கருத்திருந்தது. யாரோ அழுத்திப் பிடித்திருப்பார்கள் போலும் விரல் தடங்கள் இருந்தது. கரத்தில் மட்டுமல்ல அவளின் முழங்கைக்கு மேலும் தடங்கள் இருந்தன. அது சிவந்து போய் இருந்தது. 


"ஹரிணி... என்னாச்சு?. யாரு இப்படி பண்ணா?. ரிஷிக்குத் தெரியுமா இல்ல அவெந்தா இதுக்கு காரணமா?." எனக் கன்றி சிவந்திருந்த இடத்தைப் பார்த்தவனுக்கு சற்று கோபம் வந்தது ரிஷியின் மேல். அவன் ஒருவனால் மட்டுமே ஹரிணி காயப்படுத்த முடியும் என்பதால்.


"அவெங்கூட சண்ட போட்டியா.? திட்டுனானா.? எதாச்சும் சொல்லு ஹரிணி. அவெ கோபப்படுற மாறி என்ன பண்ண நீ. என்ன பிரச்சன உங்களுக்குள்ள?." எனக் கேட்க ஹரிணி கோபமாகத் திரும்பினாள். 


"எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு. அதா உங்கண்ணன உசுப்பேத்தி கோபப்படுத்தி பொம்ம மாறி உருட்டி விட்டு விளையாண்டுட்டு இருக்கேன். போதுமா. முதல்ல நா எதுக்கு அதப்பத்தி உங்கிட்ட சொல்லனும். ம்... நேத்து நீயும் தா கோபப்பட்டு திட்டுன. ஏன்னு கேட்கக்கூடாதுன்னும் சொன்ன. அப்றம் என்ன கால் டாக்ஸி டிரைவர் மாறி ரூம் வாசல்ல டிராப் பண்ணிட்டு போய்ட்டல்ல.‌ நீங்க மட்டும் எதையும் எங்ககிட்ட பகிந்துக்க மாட்டிங்களாம். நாங்க மட்டும் இவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு அரலூசு மாறித் திரியனுமாம். என்ன கொடுமடா இது." எனப் படபடவெனப் பொரிய கௌதம்‌ முழித்தான். 


அதாவது. 'நேத்து நீ‌ ஏ, திட்டுனன்னு சொல்லு.‌ அப்றம் ரிஷிக்கும் எனக்கும் என்ன சண்டன்னு சொல்றேன்…' என்பது தான் அவளின் முடிவு. முதலாவது தெரியாமால் ‌இரண்டாவது கிடைக்காது என்பது போல் உறுதியுடன் நின்றாள் அவள்.‌


"நீ எதுக்கு அடிப்போடுறன்னு தெரியுது. அதுனால நீ தனியாவே‌ உங்காந்து ஃபீல் பண்ணு. நா வாரேன். புருஷென் பொண்டாட்டி பிரச்சனக்குள்ள தலய விட்டா தல துண்டாப்போய்டும்னு ப்யூட்டி சொல்லும். நைட் நேரமா இருக்கு மோகினி பிசாசுகள பயமுறுத்தாம வீடு வந்துட்டுமா." எனச் சொல்லிச் செல்ல, அவனிடம் இருந்த பைக் சாவியை பிடுங்கினாள் ஹரிணி. 


"டார்லிங், டவுனுக்குள்ள சில ஜாமான் வாங்கனும்னு மை‌ வைஃப் சொல்லி விட்டுருக்கா. நா போய் வாங்கனும். சாவிய குடு." எனக் கேட்வனை கண்டு கொள்ளாது பைக்கை ஸ்டார்ட் செய்ய, கௌதம் 'ஆன்லயன்ல ஹோம் டெலிவரி போட்டுக்கலாம். எதுக்கு இவா கிட்ட சண்ட போட்டுப் பைக்க வாங்க.' என நினைத்துத் தன் மொபைலில் ஆர்டர் செய்யப் போக, 


"இப்ப நீ பைக்ல உன்னோட சீட்ட பார்க் பண்றியா, இல்ல பைக் உம்மேல பார்க் பண்ணவா." என மிரட்ட, அவன் ஏறிக் கொண்டான். பைக் பறந்தது.


தன் மனைவி சௌகர்யமாக அமர்ந்து வர ஏதுவாய் ஜாவா STANDARD பைக் வாங்கி வைத்திருந்தான் கௌதம். அதன் உச்சபட்ச வேகம் 122 Kmph. இப்பொழுது அதைத் தொட்டுடுவேன் என்பது போல் தான் ஓட்டிக் கொண்டு சென்றாள் ஹரிணி. 


'குறுக்க மணல் லாரி எதுவும் வந்திடக் கூடாது ஆண்டவா.' என வேண்டிக் கொண்டே வந்தான் கௌதம்.‌ அவளின் கோபத்தின் அளவு வேகத்தில் தெரிந்தது.


'நமக்கு உயிர் பயத்த காட்டனும்ன்னே ஓட்டுறா போல. எதுக்கும் நாம லைஃப் இன்சூரன்ஸ்க்கு ஃபோன்லையே அப்ளை பண்ணிடுவோம் மா. நம்மளால நம்ம குடும்பத்துக்குத் துட்டு வரும்.' கௌதமின் மைண்ட் வாய்ஸ். 


அதுவரை வேகமாக வந்தவள் மக்கள்‌ நடமாட்டம் தெரியவும் தன் வேகத்தைக் குறைத்து கடையின் முன் பைக்கை நிறுத்தினாள். உள்ளே சென்று பொருள் வாங்கி வரும் முன் காணமல் போயிருந்தாள் ஹரிணி. 


"நேத்து நீ எனக்கு டிரைவர் வேல பாத்த, இன்னைக்கி நா உனக்குப் பாத்துட்டேன். கணக்கு சரியாகிடுச்சி." என மெசேஜ் அனுப்பி விட்டுச் சென்றிருந்தாள் அவள். அதைப் படித்தவன்,


"டார்லிங் உன்னோட‌ புருஷ, உனக்குச் சரியான பேரு தா வச்சிருக்கான், கிட்னு. எத எப்படி திருப்பிக் குடுக்கனும்னு உன்னோட புருஷங்கிட்ட இருந்து நீ இன்னும் டிரைனிங் எடுக்க வேண்டியிருக்கு." என்றவனின் உதடுகள் புன்னகையால் விரிந்தன. 


பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளின் எண்ணம் கௌதம் அறை வாசலில் விட்டுச் சென்றதன் பின் நடந்ததை நினைவு கூர்ந்து. 


கௌதமை‌ திட்டிக்கொண்டே உள்ளே வந்தவள் கண்டது யாருமற்று, வெறுமையாய் இருந்த அறையை. குழந்தைகள் அவர்களின் பாட்டியிடம் சென்று படுத்துக் கொண்டதால் அறை அமைதியாக இருந்தது. பால்கனியில் காற்று வாங்கலாமெனச் சென்றவளுக்கு பயத்தை உண்டாக்கியது அங்கு அசைந்து கொண்டிருந்த மூங்கில் ஊஞ்சல்.


வேகவேகமாக லைட்டை போட, "உப்ஃ... பாவா... நீயா! நா பயந்தே போய்டேன். இருட்டுக்குள்ள பூதம் மாறி உக்காந்துகிட்டு என்ன பண்ற பாவா?." என்றவளின் கண்களுக்கு அவனின் அருகில் புகைக்கப்பட்டிருந்த சிகிரெட்டின் துண்டுகள் சொல்லியது அவன் டென்ஷனாக இருப்பதை. 


எப்பொழுதுமே புகைக்கமாட்டான். எதாவது தீவிர சிந்தனை என்றால் மட்டுமே பாக்கெட் பாக்கெட்டாகப் புகைப்பான். இன்றும் அதுபோல் இருக்க, அவனை உசுப்பேற்றி திட்டு வாங்க அவள் என்ன முட்டாளா.! அதே நேரம் மனைவியாய் இருந்து கொண்டு கேள்வி கேட்காமல் இருந்தால் எப்படி?. பதில் வராது என்று தெரிந்தாலும்‌ கேள்வி, கேட்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. அதனால் அவனின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள். 


"என்னாச்சு பாவா.?"எனத் தன்மையாய் கேட்க, 


"..."


"சொல்லு பாவா."


"நத்திங்." என ஒற்றை வரியில் பேச, அவனைத் தீர்க்கமாய் பார்த்தாள் ஹரிணி.


"இட்ஸ் ஓகே.‌ சொல்லப் பிடிக்கலன்னா என்ன பண்ண முடியும். இனி இப்படி பாக்கெட் பாக்கெட்டா ஸ்மோக் பண்றதா இருந்தா ரூம் குள்ள பண்ணாத. வெளில எங்கையாது முடிச்சிட்டு அப்றமா ரூம்குள்ள வா. எனக்கு இந்த ஸ்மெல் பிடிக்கல." எனச் சிகிரெட் துண்டுகளைக் கையில் அள்ள, அதைத் தட்டி விட்டான் தரன். 


"போய்த் தூங்கு. குட் நைட்..." எனப் படுக்கை அறைக்கு இழுத்து வந்தான். பால்கனியை சுத்தம் செய்து விட்டு ஜிம் என்று சொல்லப்பட்ட அந்த‌ அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான். 


ஹரிணிக்கு அவன் எப்போது வெளியே வந்தான் என்றால் தெரியாது, இரவில் தூங்கினானா என்றால் தெரியாது‌. காலையில் கண் விழித்துப் படுக்கையைக் கையால் துழவும்போது அவன் தட்டுப்படவில்லை. எப்பொழுதும் காலை வேளையில் சீக்கிரம் எழுந்து வயலுக்குச் சென்று விடுவான். இன்றும் அதே போல் சென்று விட்டானென எண்ணி காலைக் கடமைகளை முடித்துவிட்டு வெளியே வர, 


ஜிம் என்று சொல்லப்பட்ட அறை மிக மிக லேசாகத் திறந்திருந்தது. ஒரு முறை கௌதமை அழைத்து அறைக் கதவைத் திறக்கச் சொன்னாள். 


"டார்லிங் இத திறக்க முடியாது." 


"ஏ?. நம்பர் லாக் தான போட்டிருக்கு. உன்னால ஹேக் பண்ண முடியாதா.?"


"இது கம்யூட்டர் டெக்னாலஜி இல்ல டார்லிங். மெனுவெல்‌, அதாவது இயந்திர நுட்பத்தைப் பயன்படுத்திருக்கான்."


"எப்பவுமே நீ ஏ எனக்குப் புரியுற மாறிப் பேச மாட்டேங்கிற?."


"காசே தா கடவுளடா ன்னு முத்துராமன் லிங்கம் ஸார் நடிச்ச ஒரு படம் இருக்கு. அதுல."


"அவ்ளோ பழைய படத்துக்கெல்லாம் போகாத கௌதம்‌. எனக்குத் தெரிஞ்ச மாறி ஒரு படத்துல இருந்து சீன் சொல்லு."


"ஓ... நீ இங்லீஸ் மூவி பாக்குற வெள்ளக்கார துறையம்மா வாச்சோ!. உனக்குப் புரியுற ‌மாறிச் சொல்லனும்னா, மம்மி படம் பாத்திருக்கியா. அதுல வில்லனோட சவப்பெட்டிய யாரும் திறக்கவே கூடாதுன்னு ஒரு சாவிய வச்சி, சில டிரிக்ஸ் செஞ்சிருப்பாங்க, வட்ட வடிவமா இருக்குற அந்தச் சாவிய கீழ் பக்கம் திருகுனா, மேல பூவிதழ் மாறி விரியும். அத அந்தச் சவப்பெட்டியோட சாவி ஓட்டைல வச்சி உள்ள அமுக்கி வலது பக்கம், இடது பக்கம். வலது கை, இடது பக்கம். இப்படி சுத்தி சுத்தி திருகுனா! பெட்டி திறந்திடும். 


அதே மாறி ஒன்னத்தா இதுலையும் போட்டிருக்கான் உம்புருஷன். உள்ள அப்படி என்ன இருக்குன்னு தா தெரியல. அவனா வந்து திறக்காம ரூம ஓப்பென் பண்ண முடியாது." எனச் சொல்லிச் சென்றது நினைவு வந்தது. 


"உள்ள அப்படி என்ன இருக்குன்னு, புதையல பூதம் காக்குற மாறிப் பாதுக்காத்துட்டு வர்றானு தெரியலையே.‌ போய்ப் பாத்தா தெரிஞ்சிடும்.‌ எனக்கு இன்னைக்கி லக்கி டே." என நினைத்துக் கொண்டு படுக்கையறையின் கதவைப் பூட்டியவள், ஜிம் என்று சொல்லப்பட்ட அறைக்குள் தலையை விட்டாள்‌. 


உள்ளே இருப்பது புதையல் என்றால், அதைப் பாதுகாக்கும் பூதம் அவள் கணவன் என்பதை மறந்து போனாள். அவனுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும், என்பதை‌ பற்றியெல்லாம் கவலை படாது மெல்ல நடந்து சென்றாள். 


இருட்டு... சுற்றி எங்கும் ஒளி வருவதற்கான பாதை இல்லாததால் இருள்‌ சூழ்ந்திருந்தது.


"இது டார்க் ரூமா?. ஒரே இருட்டா இருக்கு. வேர் இஸ் தா ஸ்விட்ச் ஃபோர்டு.‌" எனச் சுவற்றை கைகளால் தடவிய படி நடக்க, அவள் காலில் சில பொருட்கள் தட்டுப்பட்டது. என்னவென்று தெரியாத போதும் பயப்படாமல் துணிந்து மின் விளக்கிற்கு உயிர் குடுத்தாள் ஹரிணி. 


'இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லையே இருந்திருங்கலாமே.' என்ற காமெடி வரிகள் பொருத்தமாய் இருக்கும். ஏனெனில் எரிந்த மின் விளக்கு மிகவும் குறைவான வெளிச்சத்தையே தந்தது. எனவே கதவை நன்கு திறந்து வைத்தாள். 


திரெட்மில் என்ற நடைபயிற்சி இயந்திரமும், புஸ்ஸப்ஸ் எடுக்க என ஒரு எக்யூப்மெண்டும், பாக்ஸிங் பஞ்சிங் பேக் ஒன்றும் நட்ட நடுவே தொங்கிக் கொண்டு இருந்தன.‌ 


"இந்த நாலு எக்யூப்மெண்ட்ட திருடீட்டு போய்டுவாங்கன்னு இவெ பாதுகாக்குறானா என்ன?. ஒரு வேள எல்லாமே தங்கத்துல இல்லன்னா வைரத்துல செஞ்சதா இருக்குமோ." எனத் தன் மொபைலை எடுத்து வந்து அதை ஃபோட்டோ எடுத்து ஆராய்ந்து பார்த்தாள். அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை. நல்ல தரமானதும் கூட. விலை அதிகம் தான். ஆனால் பூட்டி வைத்துப் பாதுகாக்கும் அளவுக்கு வொர்த் இல்லாதவை. 


"அப்ப அவெ வேற எதையோ இதுக்குள்ள வச்சிருக்கான். என்னவா இருக்கும்." எனத் தேடிப் பார்த்தாள். இம்முறை சுவற்றிலும் எதாவது உள்ளதா எனத் தேட சில‌ புகைப்படங்கள் சிக்கின. 


அதில் இருந்தது ரிஷி தரன்.


எப்போதும் தனக்கிருக்கும் அடர்ந்த மீசையை முறுக்கி விட்ட படி திரியும் தன் பாவாவை, மீசையின்றி பதின்ம வயது விடலைப் பருவத்தில் பார்க்கையில் மனம் அதை ரசி என்று கூறியது. சில வினாடிகள் அதைத் தன் விரலால் தீட்டியவளுக்கு அருகருகே உள்ள புகைப்படங்கள் ஆச்சர்யத்தை‌ தந்தன. 


உண்மையான புகைப்படமா இது எனத் தன் விரலால் வருடித் தன் கண்களால் ரசித்தவள் அதைத் தன் ஃபோனில் ஒரு நகல் எடுத்துக் கொண்டாள். 


பின் சுவற்றில் இருந்ததை எடுத்துத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு வேறு என்ன உள்ளது எனத் தேட. ஒரு ப்ரொஜெக்டர் தெரிந்தது. அதில் floppy இருந்தது. வேகமாகச் சென்று அதில் இருந்தது ப்ளே செய்ய, ஒரு வீடியோ ப்ளே ஆனது. அதைப் பார்த்தவள் புரியாமல் குழம்பி தான் போனாள். 


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


 

அன்பே 19

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...