முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 19


 

அத்தியாயம்: 19



பனி மூட்டங்கள் எங்கும் பரவிக் கிடக்க, ஒரு லாரி மெதுவாக வந்து நின்றது. அதன் வருகையை அறியக் கூடாது என முகப்பு விளக்கு அனைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அதன் நிறமும் பிரதிபலிப்பான்களும் காட்டிக் கொடுத்தது அந்த இடத்தில் லாரி வந்ததை. 


அதிலிருந்து இளவயது இளைஞர்கள் இருவர் இறங்கினர். ஒருவன் வண்டியை ஓட்டி ‌வந்தவன். மற்றவன் உதவிக்கு என வந்தவன் போல் இருந்தான். இறங்கியவர்கள் அந்தப் புலராத விடியக்காலை‌ வேளையில்‌ ஒரு 'தம்'மை எடுத்துப் பற்ற வைத்து நிதானமாக ஊதி முடித்தனர். பின் டிரைவர்போல் இருந்த இளைஞன் கண் காட்ட மற்றவன் லாரியிலிருந்து ஒரு மூட்டையை எடுத்து‌ வந்தான். 


 துணி கொண்டு மூடப்பட்டிருந்த அந்த மூட்டையை தோளில் தூக்கி‌ வந்த மற்றவனுக்கு டிரைவர்‌ கையை ஆட்டி ஆட்டி வழி சொல்ல, அவன்‌ சரியெனத் தூக்கி சென்றான். 


திடீரென அந்த மூட்டைத் துள்ளியது. சிறிய அசைவு தெரிந்தது. துணி மூட்டையிலிருந்து ஒரு கை வெளியே வந்தது. ரத்தம் சொட்டச்‌ சொட்ட தெரிந்த அந்தக் கரத்தை டிரைவர் உள்ளே தள்ளி முடிச்சிட்டான். 


ஓர் உயிருள்ள மனிதனை மூட்டைக் கட்டி எடுத்துச் செல்கின்றனர். இல்லை அரை உயிர் தான் இருக்கும், கையில் ரத்தம் வந்ததல்லவா. மூட்டையின் அளவை வைத்து அதில் இருக்கும் ஆள் நிச்சயம் நன்கு வளர்ந்த ஆளாக இருக்க முடியாது என்பது தெரிகிறது.‌


இருவரும் அந்த வீடியோ ப்ரேமிலிருந்து விலகி வெகுதூரம் செல்கின்றனர். வெகுநேரத்திற்கு பின் அதாவது பொழுது புலர்ந்த பின் நிதானமாக வந்து லாரியை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். 


லாரியின் நம்பர் தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் இருவரின் முகமும் தெரிய வில்லை. ஏனென்றால் அது ஸ்கார்ப் கொண்டு மூடப்பட்டிருந்தது. தூக்கி வந்து யாரை போட்டனர் என்று தெரியாது. வந்தவர்கள் அவசர அவசரமாகத் தூக்கிச் செல்லாமல் நிதானமாகச் சென்றதே சொல்லியது, இது போன்ற செயல் அவர்களுக்குப் புதிதல்ல என்று. வேறு எதாவது தெரிகிறதா என்று உற்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, வீடியோ ஆஃப் ஆனது. 


'யாருடா அது இன்ட்ரெஸ்டிங்கா பாக்கும்போது, ஆஃப் பண்ணது. ' எனத் தன் கணவனைப் பற்றிய நினைவு இல்லாமல் நிதானமாகத் திரும்ப,


ரிஷி உள்ளே வந்தான். கோபமாக... கண்களில் அத்தனை சிவப்பு. நரம்புகள் கூடப் புடைத்து எழுந்து நிற்கும் அளவுக்குக் கோபம்.


"ஹவ் டேர் யூ." எனக் கத்திய படி வந்தவன், அவளின் கரத்தை அழுந்தப் பற்றி வெளியே இழுத்து வந்தான். அத்தோடு அறையைப் பூட்டிக் கொண்டான். 


" உன்ன நா அந்தப் பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல. எதுக்கு டீ போன." என ஹரிணியை கிட்டத்தட்ட கட்டிலில் வீசினான் ரிஷி. பின்னும் விடாமல் அவளின் கரம்பற்றி இழுத்து, முழங்கைக்கு மேல்‌‌ அழுத்திப் பிடித்தான். கோபம், கண்மண் தெரியாத அளவு வந்தது அவனுக்கு.


"I told you know. Then what to do here. ஐ வார்னிங் யூ. எதுக்கு போன?. ப்ளடி இடியட். " எனச் சத்தமிடாமல் உதடுகள் கர்ஜிக்க. அவனின் கண்கள் பார்க்கவே பயங்கரமாக இருந்தன. அவனின் பிடியில் இருந்தவளுக்கு வலி உண்டாக,


"ரிஷி வலிக்குது. விடு என்ன.‌ கைய எடு." எனப் பேசியவளின் குரல் எதிரே இருந்தவனின் காதுகளைச் சென்றடையவில்லை. அவள் பேசப் பேச அழுத்தம் கூடிக் கொண்டே போனது.


"என்னோட பர்மிஷன் இல்லாம அந்த ரூம்குள்ள போனது தப்பு." எனப் பற்களைக் கடித்துக் கொண்டு உறும, அவள் எதுவும் பேசவில்லை.


'என்னைக் காயப்படுத்தினாலும் பரவாயில்லை. எனக்குத் தெரியாமல் இந்த அறையில் எதுவும் இருக்க கூடாது. உன்‌ இணை நான். எனக்குச் சரிபாதி உரிமை உள்ளது.' என்பதில் உறுதியுடன் ஹரிணி நிற்க. 


அவனும் 'நான் சொன்னதை தான் நீ செய்தாக வேண்டும்.' என்பதில் உறுதியாக நிற்க, காயம் பட்டது ஹரிணிக்கு தான். வலியில் கண்ணிலிருந்து அவளையும்‌ அறியாது நீர் வர, ரிஷி அவளை விட்டு விட்டுச் சென்றான். கோபமாகத்தான். 


அவன் சென்றதும் தோய்ந்து போய் அமர்ந்திருந்தவளுக்கு அழத் தோன்றவில்லை. மாறாக அதில் என்ன உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் வேகம் தான் வந்தது. 


தன் மூடிய விரல்களில், உள்ளிருந்து எடுத்து வந்த ஒரு புகைப்படம் இருந்தது. அதில் இருந்தது கௌதமும் ரிஷியும். இருவரும் புன்னகையுடன் பேசிச் சிரிப்பது போல் இருந்தது. அது அவர்களின் பள்ளி பருவத்தில் எடுக்கப் பட்டிருக்க வேண்டும். இருவரும் ஒரே போல் உடையணிந்திருந்தனர். கௌதம் ரிஷிக்கு எதையோ ஊட்டி விடுவது போல் இருந்தது. 


ரிஷி சென்னையில் பள்ளி படிப்பைப் படித்தான். கௌதம் ஊட்டியில் உள்ள கான்வெண்டில். எப்பொழுது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். அதைவிட முக்கியம் இருவரும் நெருங்கித் தோள் மேல் கை வைத்து அணைத்தபடி நண்பர்கள்போல் இருந்த அவர்களின் பழக்கமும் நெருக்கமும். 


எப்படி இது சாத்தியம். பிறகு ஏன் பிரிந்தனர். இப்போதும் சண்டையிட்டுக் கொள்ள காரணம் என்ன. இப்படி பல கேள்விகள் கேட்டாலும் பதிலை எளிதில் இருவருமே சொல்லத் தயாராக இல்லை. 


அதனால் இருவர் மீதும் கோபம் ஹரிணிக்கு. அதிலும் கௌதமை காட்டிலும் ரிஷியிடம் தான் அதிகம். அவன் பிடி இப்போது தொட்டாலும் வலி எடுத்தது அவளுக்கு. அவனின் கோப விழிகள் அவளைப் பயங்கொள்ளச் செய்தன. 


ரிஷிக்கு இதே வேலையாய் போயிற்று. ஹரிணியை காயப்படுத்தி பார்ப்பது. 


பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு ஜன்னல் வழியை நிலவும் ஓடி வர, அமைதியாக அதைப் பார்த்த படி வந்தாள் ஹரிணி.‌ பஸ் சின்னக் குலுங்கலுடன் நின்றது. இறங்க வேண்டிய இடமும் இல்லை. இது பேருந்து நிறுத்தமும் இல்லை. ஏன் நின்றது என்று ஜன்னலில் தலையை விட்டு எட்டி பார்க்க, ரிஷி வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு பேருந்தில் பிரவேசித்தான். அவனுக்காக நிறுத்தப்பட்டிருந்தது அந்தப் பேருந்து.


ஹரிணியை பார்த்தபடியே வந்து அவளின் தோளை இடித்துக் கொண்டு அமர்ந்தான் அந்த மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில். 


கோபமாகத் திரும்பி முறைத்தவள், "தள்ளி உக்காரு. இல்லன்னா வேற சீட்ல போய் உக்காரு. பஸ்ல நிறைய சீட் காலியா தா இருக்கு." என்றாள் பற்களைக் கடித்துக் கொண்டு. 


"நா முடியாதுன்னு சொன்னா. உன்னால என்ன பண்ண முடியும் கிட்." 


"நா கத்தி கூச்சல் போட்டுத் தர்மடி வாங்கி‌ குடுப்பேன் உனக்கு. ஊருக்குள்ள வெள்ள வேட்டி கட்டிட்டு கௌரவமா சுத்துன ஆளோட கால உடச்சி அனுப்ப வேண்டி இருக்கும்.”




"ஓ... கிட் கூச்சல் போடுறதுன்னு முடிவு பண்ணிட்ட, கைய பிடிச்சேன். கால் சொரண்டுனேன்னு கத்தாம. கட்டி பிடிச்சேன். கிஸ் அடிச்சேன். இப்படியும் இல்லன்னா. அதுக்கு மேல." என்றவனை‌ முறைக்க, 


"இல்ல சின்ன சின்ன விசயத்துக்கு அடி வாங்குனா நல்லாவா இருக்கும் சொல்லு. உன்னோட பாவா ஊருக்குள்ள பெரியாளு இல்லையா." என்க, அவள் அவன் புறம் திரும்பாது முகம் திருப்பிக் கொண்டாள். 


உடலை இறுக்காது தொளதொளவெனக் கை வைத்த குர்த்தி அணிந்திருந்ததால் கன்றியிருந்த இடம் காற்றில் பறக்கும்போது வெளியே தெரிந்தது. பூவினை வருடுவது போல் அவன் தன் சுட்டு விரலால் மெல்ல வருட, அவள் வெடுக்கென எழுந்து கொண்டாள். 


"வழி விடு. நா வேற சீட் போய்கிறேன். காட்டாங்கிட்ட உக்காந்து நிம்மதியா வர முடியுமா என்ன?." என விலகிச் சொல்ல, அவன் செய்வானா என்ன.? தளிர் விரலைத் தன் வலிய விரல்களால் கைது செய்து அமர வைத்தான். 


"ம்ச்... நீ மட்டும் அங்க போகாம இருந்தா, இதெல்லாம் நடந்திருக்காமா, சொல்லு?. நீ எப்ப பார்த்தாலும் ஆர்வ கோளாராவும், அவசரக் குடுக்கையாவும் இருக்க. பண்ணாதன்னு ஒன்னு சொன்னா அதத்தா செய்வேன் வீம்பு பண்ணதோட பலன் தா இது." என்றான் வழக்கம்போல்.


'தப்பு உம்மேல தாம்மா. நா பேசாட்டிக்கி சிவனேன்னு தா இருந்தேன். நீ தா வந்து, என்ன உசுப்பி‌ விட்டு உடம்ப ரணகலமாக்கி கிட்ட.' என்க,


"நா எது பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது. உன்னோட எந்த ஒரு சுதந்திரத்திலயும் நா தலையிட்டு இல்ல. அதுமட்டுமில்லாம நா எதையும் உங்கிட்ட இருந்து மறைக்கனும்னு நினைச்சது இல்ல. நீ தா என்ன உன்னோட வைஃப்பா நினைக்காம வேற மாறி ட்ரீட் பண்றியோன்னு தோனுது எனக்கு.‌" காட்டமாக,


"கொஞ்சம் புரியுற மாறித் தெளிவா பேச முடியுமா." என வார்த்தைகள் புருவம் சுருக்கி அழுத்தமாக வந்தன. 


"நீ என்ன உன்னோட பொண்டாட்டியாவே நினைக்கலன்னு சொல்றேன்.‌ தம்பத்தியம்னா என்னனு தெரியுமா உனக்கு. கட்டில்ல கட்டிப்பிடிச்சி உருளுறது இல்ல அது. அது எந்த ஒரு இடமா இருந்தாலும் தன்னோட இணைய அதிகாரம் பண்ணாம, புரிஞ்சிக்கிட்டு விட்டுக்குடுத்து. நீயும் நானும் உடம்பால மட்டுமில்ல மனசாலையும் ஒன்னு தான்னு வாழ்ந்து காட்டுறது. அதுல முக்கியமானது ஒளிவு மறைவு இல்லாம ஓப்பனா மனசு விட்டுப் பேசுறது. நீ எங்கிட்ட ஓப்பனா இல்ல. உனக்குள்ள சம்திங் எதோ இருக்கு.‌ அத எங்கிட்ட ஷேர் செய்ய முடியலன்னா, நீ தப்பு பண்றன்னு அர்த்தம். இல்ல உங்கிட்டலாம் நா சொல்லனும்னு அவசியம் இல்லன்னு நினச்சா.‌ உனக்கு நா பொண்டாட்டி இல்ல. வேசி தா." என்றாள் ஹரிணி.


இத்தனை நாட்களாக உள்ளுக்குள் வைத்திருந்த தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள் ஹரிணி. இருவருக்குமே நல்ல புரிதல் உண்டு. மற்றவர் மனதில் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் உட்பட அனைத்தையும் இருவரும் அறிந்து வைத்துள்ளனர். இங்குப் பிரச்சினை என்னவென்றால் ரிஷியின் சில வினோதமான செயல்களுக்கு விளக்கம் வேண்டி இருக்கிறது. அதைத்தான் கேட்கிறாள் ஹரிணி. 


அவள் கடைசியாகச் சொன்னதை கேட்டுச் சுர் எனக் கோபம் வர எழுந்து நின்று கொண்டான் தரன். சமாதானமாகப் பேசுவானென எதிர்பார்த்து இருந்தவளுக்கு அவனின் செயல் ஏமாற்றத்தைத் தந்தது. எதுவும் செய்யாமல் விலகி நின்றவனை கண்டு மனம் வாடியது ஹரிணிக்கு. ஸ்டாப் வரவும் இருவரும் இறங்கினர். 


வா என அவன் அழைக்கவில்லை எனவே வீட்டை‌ நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஹரிணி. அவனிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறாளோ என்னவோ. அவன் தரும் ஏமாற்றம் மிகுந்த வலியைத் தந்தது. பாதி தூரம் சென்றிருப்பாள். அவளைப் பைக் ஒன்று உரசுவது போல் வந்து குறுக்கே நின்றது. வழி மறித்து நின்றான் தரன். விலகி நடக்கத்தான் நினைத்தாள் ஆனால் உடலுடன் ஒட்டியிருக்கும் கை அவனின் கரத்தில் இருந்தது. 


"என்னோட கபோர்ட்ல இருந்த கன் ன பாத்ததுல இருந்து தா இப்படி குழப்பமா இருக்கியா. இல்ல கல்யாணம் ஆனதுல இருந்தே எம்மேல நம்பிக்க இல்லாம‌ தா எங்கூட வாழ்ந்துட்டு இருக்கியா.‌?" எனக் கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஹரிணி.


"உன்ன நம்பாம இருந்தா இத்தன நாள் உங்கூட வாழ்ந்திருக்க மாட்டேன். எப்பவோ உன்ன தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருந்திருப்பேன்." எனக் கோபமாகப் பேச அவனின் உதடுகளில் சிறு புன்னகை வந்தது. 


"என்னம்மா உனக்குப் பிரச்சன?. என்ன நம்புறேன்னு சொல்லிட்ட, அப்பறம் ஏ சந்தோகப்படுற?. ஒருத்தர நம்பனுமா வேணாமான்னு ரொம்ப நாள் யோசிக்கலாம். ஆனா நம்பிக்கைன்னு ஒன்னு வந்ததுக்கு அப்றம் அத ஒரு நொடி கூடச் சந்தேகப்படக் கூடாதுல்ல." எனத் தத்துவம் பேச, அவளுக்குக் கடுப்பாக இருந்தது.


"நா என்ன கேக்குறேன்னு உனக்குத் தெரியுது. பதில் சொல்லாம மலுப்புறதுக்காகத்தா இப்படி வெட்டியா பேசிட்டு இருக்க நீ." என்றபோது விரல் நீட்டி விரைப்பாய் நின்ற அவளின் தோரணை அவனை வெகுவாய் கவர்ந்தது. இதழ் மெலிதாய் விரிய, மென்னகையுடன் தன் மனைவியை ரசித்தான் அவன். 


"என்ன ப்ளான் பண்ணி தாலி கட்டுனப்பைல இருந்து, இப்ப வரைக்கும் உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் பின்னாடி எதோ ஒரு காரணம் இருக்குன்னு உறுதியா நம்புறேன். இப்ப கூட எனக்குத் தெரியாம எதுவோ செய்ற. அது என்னனு கேட்டுத்தா உங்கூட சண்ட போட்டுட்டு இருக்கேன். சந்தேகபடல. உன்னோட மனைவியா உன்ன கேள்வி கேட்க எனக்கு உரிம இருக்கு. உன்னால பதில் சொல்ல முடியுமான்னு நா கேக்கல. சொல்லித்தா‌ ஆகனும்னு சொல்றேன்." என்றாள் கோபமாக. 


'நீ எச்சி கைட்டையே காக்கா ஓட்டாத ஆளுச்சே. திடீர்னு பிரியாணி, அல்லவா, பாயாசம்னு, தடபுடலா விருந்து வச்சி‌ படையல் போட்டா எப்படி?. பயம் வருதுல்ல. சந்தேகம் வராத மாறி, நம்புற மாறி எதையாச்சும் செய்பா.' என்பது போல் இருந்தது ஹரிணியின் செயல். 


"நா எது செஞ்சாலும் காரணம் இருக்கும்னு நம்புறேல்ல. அது போதும் எனக்கு. அந்தக் காரணம் நல்லதுக்கத்தா இருக்கும்கிறதையும் சேத்து நம்பு." என்றபோது எதையாவது எடுத்து இவன் மண்டையில் ஒரே போடாய் போட்டுடலாமா என்றிருந்தது.


"அந்தக் காரணம் என்னனு தான்டா கேக்குறேன்." எனக் கோபமாகக் கத்த, அவளின் அருகில் சென்று அணைத்தான் தரன். 


"கிட்... எல்லா விசயத்தையும் எல்லார் கிட்டையும் சொல்லிட முடியாது. எது எப்போ‌ தெரியனுமோ, அது அப்பத் தெரிஞ்சா போதும். ஐ ப்ராமிஸ்ஸிங் யூ. கண்டிப்பா உங்கிட்ட நா சொல்லுவேன். உங்கிட்ட நா பொய் சொல்லவே மாட்டேன்." என்க.


"அதே நேரம் உண்மையையும் சொல்லவே மாட்ட. ஹிம்... இப்ப சொல்ல முடியாதுங்கிறததா சுத்தி வளைச்சி பேசுறியாக்கும்." என அவனிடமிருந்து விலகிக் கேட்க, 


"ஒரு நாலு மாசம் கழிச்சு, இதப்பத்தி நாம பேசலாமே." எனக் கண்சிமிட்டி கேட்க அவள் கோபமாகத் திரும்பி நடக்கலானாள்.


"கிட்... கிட்..." எனக் கத்திக்கொண்டே பின்னால் வந்தான் தரன். ஆனால் அவள் அவனைத் திட்டிக் கொண்டே நடந்தாள். 


"எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல கிட்." என்றான் தரன்.


"எது?. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றதா. "


"சின்ன வயசுல இருந்தே என்ன யாரும் கேள்வி கேட்டதில்ல கிட். என்ன நம்பாம கேள்வி கேக்குறவங்க கூட நா தொடர்ந்து பழகவே மாட்டேன். சொல்லபோனா‌ என்ன நம்பாதவங்க எனக்குத் தேவையே இல்ல."


"ரொம்ப சந்தோஷம். நானும் உனக்குத் தேவையில்லன்னு சொல்ல வர்ற சரியா." எனச் சொல்லிக்கொண்டே செல்ல,


"கிட்... அப்றம் ஒரு பொண்ணு பின்னாடி ஃபாலோ பண்ணிட்டு தொந்தரவு கெஞ்சிங்கிட்டே போறதும் எனக்குப் பழக்கம் இல்ல. " என்க,


"பத்து வர்ஷத்துக்கு மேல லவ் பண்றேன்னு படம் காட்டுன. பத்து நிமிசம் பின்னாடி வர முடியலையாக்கும்."


"எனக்குப் பின்னாடி போய்ப் பழக்கம் இல்ல. பின்னாடி வரவச்சுத்தா பழக்கம். ஆனா இப்ப உம்பின்னாடி வர்றேனே, நீ மட்டும் எனக்கு ஸ்பெஷல். லவ்வபுல் கிட்." எனக் காற்றில் பறக்கும் முத்தமிட,


"உன்னோட வினோதமான பழக்க வழக்கத்த நீயே வச்சுக்க. ஆள விடுடா சாமி. ஒரு நாலு கேள்வி கேட்டேன்.‌ அதுக்கு பதில் சொல்லப் புடிக்காம என்னென்ன பேசுறான் பாரேன்." எனப் புலம்பிவள் திரும்பி அவனைப் பார்த்து,


"நாலு மாசம் கழிச்சி பதில் சொல்றேன்னு சொன்னேல, அப்ப நாலு மாசம் கழிச்சி நாம குடும்பம் நடத்திக்கிவோம்.‌ அதுவரைக்கும் பக்கத்துல வராத." எனக் கத்திவிட்டு செல்ல, ரிஷி‌ பாவமாய் அவளின் பின்னே சென்றான். 


இவர்கள் இருவரையும் பார்த்துத் தூரத்தில் நின்று கொண்டிருந்த கௌதம் முகத்தில் புன்னகை அரும்பியது. அவள் பஸ்ஸில் ஏறியதுமே பின் தொடர ஆரம்பித்து விட்டான் அவன். ரிஷியின் வருகை, இருவரின் சண்டையென அனைத்தையும் பார்த்தவனுக்கு ஹரிணியைப் பற்றிய பயம் விலகியது. இப்படியொரு நண்பன் கிடைக்க ஹரிணி கொடுத்து வைத்தவள் தான். 


ஹரிணி கேட்ட நாலு கேள்வி என்னென்னு தெரியனுமா.? 


முதலாவது, உங்களுக்கே தெரியும். அந்த ஜிம் ரூம்க்குள்ள என்ன இருக்குங்கிறதுக்கான விளக்கம். 


ரெண்டாவது, துப்பாக்கி எதற்கு என்பது தான். ஒன்றை அவன் வைத்துக் கொண்டால் மற்றொன்று யாருக்கு. 


மூன்றாவது, கௌதமிற்கும் ரிஷிக்கும் இடையில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன என்பது. 


நான்காவது, முக்கியமானதும் கூட. அவனின் வங்கி கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட தொகை மாதா மாதாம் வெவ்வேறு பெயர்களுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. யாருக்கு தருகிறான் என்று தெரியாது. எதற்குத் தருகிறான் என்று தெரியாது. ஆனால் எட்டு ஆண்டுகளால பண பரிவர்த்தனை நடைபெறுகிறது. 


எதெல்லாம் தெரிய வேண்டுமோ அதைத் தான் கேட்டாள் அவள். ஆனால் பதில் சொல்லக் கால அவகாசம் கேட்கிறான் அவன். என்ன செய்வது. 


புரியாத புதிராக அல்லவா‌ இருக்கிறான் அவன் 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

அன்பே 18


அன்பே 20


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...