முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 21


 

அத்தியாயம்: 21


"ஒரு காடு‌, அதுல எல்லா விலங்குகளும் பறவைகளும் சந்தோஷமா அவங்கவங்க வேலைய செஞ்சிட்டு இருந்துச்சாம். அப்ப ஒரு முயல் நிறைய கேரட்ஸ்ஸ சாப்பிட்டுடு, ஒரு மரத்துக்கு அடில படுத்திருந்துச்சாம். தூங்க ட்ரெய் பண்ணுச்சு. ஆனா தூக்கம் வரல துக்கம் தா வந்துச்சி. ஏன்னா அதோட ஃப்ரண்ட்ஸ் ரிலேஷன் முயல்கள் எல்லாமே செத்து போய்டுச்சாம். 


அந்தக் காட்டுல ராஜாவா இருக்குற புலி அதுகள வேட்டையாடிச் சாப்பிட்டதுனால தனியா இருக்குற அந்த முயலுக்கு ரொம்ப கவலையா இருந்துச்சாம். அப்ப அதுக்கு ஒரு ஆச வந்தது. அது என்னன்னா? எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல அந்தப் புலி தன்னையும் சாப்பிட்டுட்டும். எப்ப வேண்ணாலும் சாகப் போறோம். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் ஒரு பொழுதாவது புலிய தனக்கு மரியாத குடுக்க வைக்கனும்னு நினைச்சதாம். 


சோ புலி முன்னாடி போய் 'ஹாய் ப்ரோ. எப்படி இருக்க'ன்னு தைரியமா மிதப்பா கேட்டுச்சாம்.


 'என்னடா குளிர் விட்டுப்போச்சா உனக்கு. நா இந்தக் காட்டுக்கு ராஜா மறந்துடாத' ன்னு புலி சொல்ல,  


முயல் 'உனக்குத் தெரியாதா!. நேந்து நடந்த மீட்டிங்கல உன்ன பதவிய விட்டு இறக்கி புது ராஜா பதவியேத்துக்கிட்டதுன்னு. '


 புலி 'யாரு அந்தப் புது ராஜா?' ன்னு கேக்க,


'வேற யாரு நாந்தா. அதா உம்முன்னாடி தைரியமா வந்து நிக்கிறேன்.'ன்னு முயல் சொல்லுச்சாம்.‌ 


அத நம்பாம பாத்த புலிக்கிட்ட, 'நீ என்ன உந்தல மேல தூக்கி வச்சிட்டு காட்டுக்குள்ள நட. அப்பதா தெரியும் மத்த விலங்குங்க எனக்குக் குடுக்குற மரியாத என்னன்னு. அப்ப நம்புவல்ல நீ.'ன்னு சொல்லிப் புலியோட தல மேல ஏற்றி உக்காந்துகிச்சி. புலியும் காட்டுக்குள்ள முயலோட ஊர்வலம் போக, மத்த அனிமல்ஸ் புலிய பாத்து பயந்து போய்ப் பதுங்க, அது முயலுக்குக் கிடைக்கிற மரியாதன்னு தப்பா நினைச்ச புலி, அந்தக் காட்டட விட்ட போய்டுச்சாம்." ஹரிணி. 


"காட்டுக்கு ராஜா சிங்கம் தான. நீ புலின்னு சொல்லுற." நந்து.


"ம்ச்... சிங்கத்த மட்டும் ராஜான்னு யாரு டா சொன்னா. எல்லா காட்டுலையும் சிங்கம் இருக்காது. ஒவ்வொரு காட்டுலையும் யாரு பவர்பூல்லா இருக்காங்களோ அவங்க தா ராஜா. இங்க புலி தா ராஜா." 


"ஓஹோ! அப்படி யா. மேடம் இந்தக் கதையோட மாரல் என்னனு சொல்லவே இல்ல." ‌


வைசு, "அதான கத‌ சொன்னா நீதியும் சொல்லனும்ல." 


"இதுல பல நீதி இருக்கு. முதல் நீதி‌, நாம தனியா இருந்தும் துணையா யாருமே இல்லன்னாலும் தன்நம்பிக்கையோட வாழனும். முயல் வாழ்ந்த மாறி. 


ரெண்டாவது புலி, பலசாலின்னு தெரிஞ்சும் அதுக்கு முன்னாடி போய் நின்னு முயல் பேசுச்சி பாரு. அதோட தைரியம் எல்லாரோட லைஃப்க்கும் தேவையானது. அடுத்து, தன்னோட கண்ணால பாத்தத உண்மன்னு நினைச்சி விசாரிக்காம காட்ட விட்டுப் போன புலியோட முட்டாள் தனம் தப்பு. அடுத்து."


"ரொம்ப பெரிசா போகுது. சல்லட போட்டுச் சலிச்சு சொல்லக் கூடாதா. காது பஞ்சர் ஆகுதுல்ல." 


"அதத்தா வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு அப்படின்னு சாட் ஆண்டு ஸ்வீட்டா சொல்லிருக்காரு."


"இத ஓப்பனிங்ல ஒரே வார்த்தைல சொல்லிருக்கலாம்ல. அதவிட்டு ஒரு பக்கத்துக்கு இழுத்துட்டு. சொன்னது மொக்க கத. அதுல கருத்துங்கிற பேர்ல ஏ கழுத்தறுக்குற பம்கின்." நந்து ஹரிணியை‌ கேலி செய்ய, அதைக் கண்டு வாய் மூடிச் சிரித்த கனகாவையும் ஜோதியையும் பார்த்தவள் வைசுவின் தலையில் தட்டி,


"குட்டி சாத்தான பெத்து வச்சிட்டு. சிரிப்பு கேக்குதாக்கும் உனக்கு."


"சரி விடு பம்கின். வேற நல்ல கதையா சொல்லு‌. அந்தக் கதையாது காது குடுத்து கேக்குற மாறி இருக்கனும்." 


"அடுத்த கதைய உங்கம்மா சொல்லுவா. நல்லா விளக்கமா கேளு‌ கேள்விய." எனக் கடுப்புடன் எழுந்து சென்றாள் ஹரிணி. 


"ஐய்யோ இவங்க கடைக்கி போன கதையையே கடல் மாறிப் பெரிசாசாசாசாசாசா சொல்லுவாங்க. மாரல் ஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சா நா மர்டர் ஆனாலும் முடிக்கமாட்டாங்க. நீயே கத சொல்லு பம்கின்." எனக் கத்திக் கொண்டே பின்னால் சென்றான். 


ஆதி வைசுவிடம் கதை சொல்லச் சொல்லிக் கேட்க, வைசு அவளை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டே கதை கூறினாள். 


"நாளைக்கி எப்பம்மா ஊருக்குப் போறிங்க. இன்னும் ஒரு வாரம் இருக்கலாம்ல. வேலு காலைலையே கிளம்பிட்டான். ரிஷியும் நாளைக்கி கிளம்புறதா சொன்னான். எல்லாரும் ஒரே நேரத்துல கிளம்புனா வீடு வெறிச்சோடி போய்டும்மா." ஜோதி கவலையாகச் சொல்ல, கனகவள்ளிக்கும் அப்படி தோன்றியதோ என்னவோ, அவரும் மகளின் முகத்தை ஆவலுடன் பார்த்தபடி இருத்தார். 


"நாளைக்கி நைட் தாம்மா போறோம். ரிஷி அண்ணா தா எங்கள ட்ராப் பண்றதா சொன்னாரு. நந்துவுக்கு ஸ்கூல் இருக்குமா. ரொம்ப நாள் லீவ் எடுத்துட்டோம். இனியும் எடுக்க முடியாது." 


கனகா அவளின் தலையை ஆறுதலாக வருட, "கவனமா இரும்மா. நல்லா சாப்பிடனும். உடம்பு முக்கியம்மா. தலைவலி இப்பையும் வருதாம்மா." எனக் கனகவள்ளி பேச நினைத்ததை ஜோதி பேச,


"வலிலாம் இப்ப வர்றது இல்லம்மா. கௌதம் அண்ணா எனக்கு ஒரு டாக்டர்ட்ட அப்பாய்ண்மெண்ட் வாங்கி தந்தாங்க. சூப்பர்‌ டாக்டர். மனோதத்துவ நிபுணராம். அவங்க தந்த அட்வைஸ்ல வலி குறைஞ்சி போச்சு." 


"அப்ப மருந்து மாத்திரல்லாம் தரல." ஜோதி.


"ம்மா… மருந்து மாத்திர சாப்பிடுறதுனால நமக்குக் கால்வாசி நோய் தா சரியாகும். ஆனா நம்ம மனச ஆரோக்கியமா வச்சிக்கிட்டு, நமக்கு ஒன்னும் ஆகாதுன்னு நம்பிக்கையோட, நேர்மறையான எண்ணம் இருந்தா பாதி நோய் காணாம போய்டுமாம். கௌதம் அண்ணா சொன்னாங்க."


"அப்றம் எதுக்கு ஹாஸ்பிடலும் டாக்டர்ஸ்ஸும் இருக்காங்க. மனசு மண்ணாங்கட்டின்னு கதவிட்டுறுக்கான் அவெ. வேற நல்ல டாக்டரா பாத்து உங்க மூளைய சரி பண்ணுங்க. ரொம்ப குழம்பி போய் இருக்கு." பவித்ரா நக்கலாகச் சொல்லிக் கொண்டே வந்து தன் அன்னையின் அருகில் அமர்ந்தாள். 


"நா சொன்னத நம்பு பவி. நூறு சதவீதம் உண்ம.‌ நமக்கு இப்படி ஆகிடுமோங்கிற எதிர்மறையான எண்ணம் வந்தாலே எல்லாமே தப்பு தப்பா நடக்குற மாறி தா தெரியும். நடக்குறது எதுவா இருந்தாலும் என்ன அது பாதிக்காது. நா ரொம்ப ஸ்ராங்னு நினைச்சிட்டு மனசுல ஒன்னுமே இல்லாம எம்ட்டியா வச்சிக்கனும். நீயும் ட்ரெய் பண்ணிப்பாரு."


"நா எதுக்கு பண்ணனும். எனக்கு என்ன கொற‌ இருக்கு. நீங்களே பண்ணுங்க. உங்களுக்குத் தா அது தேவப்படும். தன்னோட சின்ன வயசு நியாபகத்த மறந்துட்டு வாழ்ந்துட்டு இருக்க உங்களுக்கு இப்ப உடம்புல தா பிரச்சன.‌ ஆனா சொன்ன பேச்சே கேக்காம நீங்க வளத்துட்டு வர்ற பிள்ளையால நாளைக்கு உங்களுக்கு மனசுலையும் பிரச்சன வர ஆரம்பிச்சிடும்." என நக்கலாகச் சொல்ல வைசுவின் முகம் ஒரு நொடி வாடிப் பின் சரியானது.


"என்ன பேச்சு பவி. சும்மா இரு. நந்து நல்ல பையன்." ஜோதி அதட்ட,


"அவெ நல்லவெந்தா. ஆனா உங்க புள்ள அவ்வளவு நல்லவெ கிடையாதே. நாந்தா பாத்திருக்கேனே, தண்ணியடிச்சுட்டு வந்து வீட்டு வாசல்ல கலாட்டா பண்றதுல இருந்து வாரத்துல மூனு நாள் ஃபோலிஸ் ஸ்டேஷன்ல படுத்துத் தூங்குற வரைக்கும். இப்ப கொஞ்ச வர்ஷமா எதுவும் பண்ணாம இருந்தா உங்க மகெ நல்லவனா என்ன. அப்படி நல்லவனா மாறிட்டா அவெ பண்ண எல்லாத்தையும் நாங்க மறந்துடனுமா என்ன." என்றாள் ஏளனமாக. 


அன்று வளைகாப்பு நிகழ்ச்சியில் தனக்கு ஆதரவாகப் பேசாது விட்ட கௌதமை கிடைக்கும் நேரமெல்லாம் குத்தி கிழிக்கும் ஆயுதமாகத் தன் நாக்கை கூர் தீட்டிக்கொண்டாள் பவித்ரா. அவன் முன்னேயும் சில நேரம் பேசுவாள். ஆனால்,


"ஹிட்லர் பேசாத பேச்சையா இவா பேசிடப்போறா. எப்பையுமே ஹிட்லர் தா வெய்ட்டு, மாஸ் தெரிஞ்சுக்கோங்க. ஹிட்லர் அளவுக்கு இல்லன்னாலும் முசோலினியும் ஹிட்லருனுக்கு ஈக்குவெல்லா தா இருப்பாப்ல. அதா பவித்ராவுக்கு முசோலினின்னு பேரு வச்சேன்." கௌதம் மைய்ண்ட் வாய்ஸ். 


"ஒரு நாளுல பாதி நேரம் வைசுவோட மகெ அவங்கூட தா திரியுறான். பொறுப்பில்லாம ஊர் சுத்துறது,‌ பெரியவங்கள மரியாதையாத இல்லாம பேசுறதுன்னு சொல்லிக்கிற மாறி எந்த ஒரு நல்ல பழக்கமும் கௌதம் கிட்ட கிடையாது. டிகிரி கூடப் பிட் அடிச்சு பாஸ் பண்ண உலக மகா‌ ப்ராடு அவெ.  


அவெ புத்தி தான் சின்னப்பையனுக்கும் வரும். கண்டிச்சி கௌதம் கிட்ட இருந்து விலக்கி வச்சே வளங்க‌ இல்லன்னா உங்க மகனையும் ஜெயில்ல தா பாக்க வேண்டி வரும்.‌ ஏன்னா அவனே ஒரு கொல காரென்." என்ற பவியின் கன்னத்தில் அறைந்தார் கனகா. 


கண்கள் கோபமாகப் பார்க்க ஒரு விரல் நீட்டி. 'இன்னொரு முறை கௌதமை பற்றித் தவறாகப் பேசாதே. பேசினால் கொன்று விடுவேன்.' எனக் கண்களால் எச்சரித்துவிட்டு சென்றார் அவர் வைசுவையும் கூட்டிக் கொண்டு. 


"உம்மகள அந்தப் பொம்பள அடிச்சிட்டு போறா பாத்துட்டு இருக்கிங்க. நீங்கத் தா எனக்கு அம்மாவா என்ன." ஜோதியை கத்த, 


"இந்த அடிய நீ சின்ன வயசா இருக்கும் போதே குடுத்து வளத்திருந்தா.‌ அடுத்தவங்க கிட்ட நீ அடிவாங்குற நிலம வந்திருக்காது. என்ன பண்ண உன்ன செல்லம் குடுத்து வளத்துட்டோம். இன்னொரு கன்னமும் வீங்காம இருக்கனும்னு ஆசப்பட்டா கௌதம பத்தி தப்பா பேசாத. உங்கப்பா சொல்லறத கேக்க மட்டுமே உனக்குக் காத கடவுள் படைக்கல. சுத்தி யார் என்ன செய்றாங்கன்னு நல்லா கவனி. அப்பதா உன்னால எம்மகன புரிஞ்சிக்க முடியும்." என அவர் சொல்லிச் செல்லக் கோபமாக நின்றாள் பவித்ரா.


அது கௌதம் மீது தான்.‌ அவள் பிறந்ததில் இருந்தே யாரும் அவளை அடித்தது இல்லை. கலியபெருமாளின் செல்ல மகள். அவளைத் திட்டுவது கூடக் கிடையாது. ஜோதி, பார்கவி இறந்த பின் பொக்கிஷமாய் பவித்ராவை நினைத்தார். எனவே அவளை இழந்து விடக் கூடாது என்பதற்காக அவளைச் சூடாக எந்தச் சொல்லும் சொல்லாது வளர்த்தார். 


அவளைச் சொல்லியும் குற்றமில்லை. கலியபெருமாள் ஜோதியின் மகள் பார்கவி, அவள் ஐந்து வயதில் இறக்கும்போது பவி ஒரு வயது கூட நிரம்பாத கைக்குழந்தை. பார்கவி இறப்பிற்கு காரணமான எட்டு வயது கௌதமிற்கு தண்டனை குடுப்பதாக நினைத்து அவனைப் போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார் கலியபெருமாள். அவனை மட்டும் தவிர்த்துக் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி விட்டார். 


சத்திய மூர்த்தியின் உதவியால் ஹாஸ்டலில் தங்கி படித்தான் கௌதம். பவித்ராவிற்கு கௌதம் என்ற அண்ணன் இருக்கிறான் என்பதையே கலியபெருமாள் தெரிவிக்க வில்லை. கௌதமிற்கும் பவித்ராவிற்கும் ஏழு ஆண்டுகள் இடைவெளி இருக்கும். 


பவி மூன்றாவது படிக்கும்போது, நடு இரவில் ஒரு ஃபோன் வர. அதை எடுத்துப் பேசிய தந்தை நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார். அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஹாட் அட்டாக் என்றனர் மருத்துவர்கள். அந்த அட்டாக்கிற்கு காரணம் கௌதம். 


 கௌதம் விலைமாதர் ஒருவரின் வீட்டிற்கு சென்றதாகவும், பத்தாம் வகுப்பு படிக்கும் போதே இது போன்ற ஒழுங்கீன செயல்களைச் செய்வதால் இனி உங்கள் மகனுக்குப் பள்ளியில் இடம் இல்ல என்றும், உடனே கூட்டிச் செல்லும் மாறும் பள்ளி நிர்வாகம் கலியபெருமாளுக்கு தகவல் சொல்லியதால் வந்த அட்டாக் அது. 


மனிதன் சென்று எது உண்மையென விசாரிக்கவே இல்லை. அவரே முடிவு செய்து விட்டார். மகன் பொம்பளப் பொறுக்கியாக வளர்கிறான் என்று. அவன் அந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க மூர்த்தி சென்று பேசி மன்னிப்பு கேட்டார். அவரிடம் கௌதம் கடுமையாகப் பேசி, இனி தன்னை பார்க்க வரக் கூடாது எனச் சொல்லிவிட்டான். 


கூடா நட்பு, கூடா பழக்கங்கள் எனக் கௌதம் வேறாளாய் மாற. +2 முடித்தவுடன் நேராகக் கலியபெருமாளை பார்க்கச் சென்றான். 


அவனைப் பார்த்தால் பள்ளி மாணவன்போல் தெரியாது. இரண்டு இன்ச் தாடி, மீசையென முகத்தின் பாதியை முடி கொண்டு மறைத்திருந்தான் அவன். அடிக்கடி கலியபெருமாளுடனும் ஜோதியுடனும் சண்டை போடுவான். 


அவனுடன் பேச வரும் ஜோதியிடம் 

"இத்தனை நாள் நா உங்க கண்ணுக்குத் தெரியலைல. இப்ப மட்டும் என்ன மகென்னு வர்றிங்க‌. மகென்னு ஒருத்தே உங்களுக்குக் கிடையாது. கண்ணீர் வடிய சென்டிமென்ட் படம் ஓட்டாம அங்கிட்டு போங்க." என எடுத்தெறிந்து பேசும்போது.‌ ஜோதி படும்‌ கஷ்டத்தைப் பார்த்தவளுக்கு கௌதமை பிடிக்காமல் போனது. 


அவளின் பருவ வயதில் பார்க்க ரவுடிபோல் எப்போதும் போதையுடன் திரியும் கௌதமிடம் அண்ணன் என்ற உணர்வு அவளுக்கு எழவே வில்லை. தங்கள் வீட்டில் இருப்பவனை அண்ணனாகவே ஏற்க விரும்பாதபோது பாசம் எப்படி வரும். 


உன் அண்ணன், ‌நம்ம அண்ணன் எனச் சமாதானம் செய்ய ஆள் இல்லாததால் அவனை மனிதானாகக் கூடப் பொருட்படுத்துவதில்லை அவள்.


பின் ஒரு நாள் வந்தது. பாசம் அல்ல பொறாமை.‌ அது ஹரிணியின் வடிவில். 


பவித்ரா கல்லூரி செல்லும்போது கௌதமும் ஹரிணியும் நண்பர்களாகி இருந்தனர். கௌதமின் தோற்றம் மாற்றப்பட்டிருந்தது ஹரிணியால். அதுமட்டுமல்ல போதை பழக்கம் அதை அறவே விட்டு விட்டுக் கல்லூரிக்கு நீட்டாக டிரெஸ் போட்டுச் செல்லும்போது, கௌதம் பார்க்கவே‌ சூப்பராக இருந்தான். பவியின் வகுப்பில் கௌதமிற்கு எனப் பல விசிறிகள் இருந்தனர். அவனை வைத்து அவளுக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். கௌதமால் தான் ஹரிணியின் அண்ணன் சம்பத்துடன் காதலும் வந்தது. 


பிடிவாதமாய் சம்பத்துடன் நிச்சயம் செய்து கொண்டாள் பவித்ரா. கௌதம் ஏதேதோ வேலை செய்து ஹரிணிக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு ஆடை எடுக்க‍, அதைப் பார்த்த பவித்ராவிற்கு கௌதம் மீது உரிமையுணர்வு வந்தது.‌ அதாவது தனக்கு அண்ணனாக அவன் சில கடமைகளைச் செய்தே ஆக வேண்டும் என்ற உரிமையா இல்லை பொறாமையா தெரியவில்லை. 


பிடிவாதமாய் அவனுடன் வழிய சென்று பேசி, தனக்கும் ஒன்றை வாங்கிக் கொண்டாள் பவி. அவன் ஆசையாய் வாங்கி தந்த உடையை அணிந்து கொண்டு வர‌, கலியபெருமாள் திட்டினார். 


ஆனாலும் 'இரத்த சம்மந்தமே இல்லாத வேறொரு பெண்ணிற்கு வாங்கி தரும்போது சொந்த தங்கை எனக்கு வாங்கி தரக் கூடாதா என்ன. நானே உதாசிப்படுத்துனாலும் ஒரு நல்ல அண்ணனா எனக்குக் கண்டிப்பா அவன் செய்ய வேண்டும். நான் அதை அனுபவிக்கனும்.‌' என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாள். 


தந்தை இல்லாதபோது கௌதமுடன் அண்ணா அண்ணா எனக் கொஞ்சி பேசுபவள் அவர் வந்தபின் கண்டு கொள்ள மாட்டார். கௌதமிற்கு தங்கை பேசுவதே போதுமானதாக இருந்தது. ஆனாலும் தன்னை பற்றிய நல்ல எண்ணம் அவளுக்கு இல்லை என்பதை கடந்த சில நாட்களாகத் தான் தெரிந்து கொண்டான். கவலையும் கொண்டான். 


இன்னும் நாக்கு என்று ஆயுதத்தால் எப்படி எப்படி எல்லாம் கௌதமை குத்தம் போகிறாளோ.  


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அன்பே 20


அன்பே 22



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...