முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 22

அத்தியாயம்: 22


கையில் நான்கு சாத்துக்குடியை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தான் கௌதம். மிகவும் கஷ்டப்பட்டு அதன் சாறை பிழிந்து எடுத்தவன், பழச்சாறை டம்ளரில் ஊற்றி நாட்டுச் சர்க்கரையை ஸ்பூனில் எடுத்துக் கலந்து தன் மனைவிக்கு எடுத்துச் சென்றான். 


"மதிம்மா. ஜூஸ் டயம்." என இந்துவிடம் கொடுக்க,


"இப்பவா!. வேணாம்ங்க." 


"ஏய்! ஜூஸ்‌ குடிச்சா தெம்பு வரும்னு டாக்டர் சொல்லிருக்காங்க. உனக்காக வேணாம். நம்ம பையனுக்காகக் குடிம்மா." என மிரட்டுவது போல் கெஞ்சி வாயில் ஊட்ட, அவள் இப்போதும் வேண்டாம் எனச் சொன்னாள்.‌


"ஏன்டா.?"


"அது... அது... அத்தான், இப்ப தா குடுத்தாங்க." எனத் தயங்கியபடி சொல்லிக் காலி டம்ளரை காட்ட,


"நா லேட்டு. அவெ முந்திக்கிட்டான்.‌ அப்படி தான. ஏன்டி உ பொத்தான் குடுத்தான்னா வேண்டாம்னு சொல்ல மாட்டியா. எம்புருஷன் கொண்டுவந்து தருவாருன்னு உ வாயத் தொரந்து சொன்னா என்னவாம். பொத்தான் குடுத்தானா பொத்தான். " எனக் கோபம் கொள்ள,


"சரி...‌ குடுங்க நா இதையும் குடிக்கிறேன்." 


"நீ போனா போதுன்னு ஒன்னும் குடிக்க‌ வேண்டாம். நா எம்பிள்ளைக்கி குடுத்துக்கிறேன். ஆதி குட்டி எங்க டா இருக்க." எனத் தேடினான் அவன். 


அவன் மகளோ‌ ஹாலில் விளையாண்டு கொண்டிருந்தாள் அகிலனுடன். அருகில் ஹரிணி லேப்டாப்புடன் அமர்ந்திருந்தாள். மலரும் கிருபாவதியும் சமயல் செய்ய, அடுப்படியில் நுழைந்தான். இரு டம்ளரில் அதை ஊற்றி எடுத்துச் சென்றான். அவர்கள் விளையாட்டைப் பார்த்துக் கடுப்பானான். 


இரு கால்களுக்கும் இடையே‌ வீட்டைப் பெருக்கும் துடப்பத்தை வைத்துக் கொண்டு, தன்னை தானே சுற்றி கொண்டே வலம் வந்தாள் ஆதிரை. அகிலன் கையில் ஒரு மரக் குச்சியை வைத்துக்கொண்டு எதுவோ சொல்ல ஆதி கீழே விழுவது போல் நடித்தாள். புரிந்து விட்டது கௌதமிற்கு. 


"டேய். இங்க வாங்கடா. இத‌ குடிங்க." என ஊட்டி விட்டவன்.  


"ஆதி, உம்பெரியப்பெ அப்றம் பெரியம்மா இவங்க கூடல்லாம் சேரக் கூடாது. அதுக கொடூர கப்பிள்ஸ் மட்டுமில்ல கொல பண்ற கப்பிள்ஸ்.‌ டேய் உன்னையும் தான்டா சொல்றேன். உங்கம்மா அப்பாட்ட பாத்து நடந்துக்க." எனச் சொல்லி இருவரின் இதழையும் துடைத்து விட்டான். அவன் கூறிய எதுவும் புரியாமல் குழந்தைகள் இருவரும் சிரித்துக் கொண்டே மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்தது. 


"ஏ எங்கூட சேரக் கூடாது?. எங்களுக்கு என்ன கொற. எங்ககூட சேந்தா உம்மகளுக்கு என்னாகிடுமாம்." 


"டார்லிங், அந்தப் பிரம்மன் படைப்புலையே நீயும் உம்புருஷனும் ஒரு விசித்திர பிறவிகள். ரீ-கிரியேட் பண்ண முடியாத அளவுக்கு ஒரிஜினல் ஃபீஸ்ஸஸ் நீங்க. எம்மகளையும் உங்க விசித்தர குடும்பத்துல ஒருத்தியா மாறிட்டா என்ன பண்ணறது. அதா மாறக்கூடாதுன்னு பிரிச்சி வைக்கிறேன்."


"அப்படி என்னத்த நாங்க விசித்திரமா பண்ணிட்டோம்."


"நீ சின்னப் பிள்ளைங்களுக்கு இங்லீஸ் மூவிய போட்டுக் காட்டிருக்க. இதுக ரெண்டும் இப்ப ஹரிப்பார்ட்டர் படத்துல வர்ற மாறிப் பண்ணி விளக்கமாகத்த எடுத்து வச்சி விளையாண்டுட்டு இருக்குங்க. அந்தக் குச்சியால அடி பட்டுச்சின்னா என்ன பண்ணாவ.?"


"ஹிஸ்பிட்டல் கூட்டீட்டு போவேன்." எனக் கூலாகச் சொன்னவளை முறைத்தான் கௌதம்.


"அடி பட்டா ஹாஸ்பிட்டலுக்கு தான கூட்டீட்டு போ வாங்க.‌ வேற எங்கையும் போவாங்களா‌ என்ன.‌" எனச் சந்தேகமாகக் கேட்க, அவன் திட்டினான் அவளை. 


"உனக்கு அறிவில்லையா ஹரிணி. ஒரு குழந்தைக்கி அம்மா மாறியா நீ நடந்துக்கிற. உன்ன மட்டும் தப்பு சொல்ல முடியாது அவனச் சொல்லனும்.‌ அவனும் உன்ன மாறித்தா இருக்கான், விளையாட்டு தனமா. குழந்தைய வளக்குறதுல பொறுப்பு வேணும், அது உங்க கிட்ட சுத்தமா இல்ல.‌ இர்ரெஸ்பாஸ்ஸபுல் கப்பிள்." என்றான் சீரியஸ்ஸாக.‌


"நா ஒரு நல்ல அம்மா மாறித் தா நடந்துக்கிறேன். நீ தா அப்பாவா பாசத்தக் காட்டுறேங்கிற பேருல ஓவரா பிழியுற. பாத்து பக்குவமா காட்டு பா. பாசத்த. பிள்ள பயந்துடப் போது.‌" எனக் கேலி செய்தாள்.


"ஆமா நாங்க எப்ப விளையாட்டுத்தனமா நடந்துகிட்டோம். பொறுப்பில்லன்னு சொல்ற அளவுக்கெல்லாம் இருக்காதே." என‌ ஹரிணி யோசிக்க,


"நாந்தா பாத்தேனே. மிட் நைட்ல பேய்க்குக் கம்பெனி குடுக்குற மாறி உலாத்திட்டு இருந்திங்களே. எதோ புதுசா கல்யாணம் பண்ண ஜோடி மாறி மிட்நைட் மசாலா படம் காட்டீட்டு."


"நைட் டயம்ல வெளில போனா தப்பா கௌதம்." என்றாள் ஏதும் அறியா பெண்போல்.


"தப்பில்லமா. தப்பில்ல. ஆனா அடுத்தவங்கள கடுப்போத்துற மாறிச் சத்தம் போட்டுக்கிட்டே வந்தது.‌ அப்றம் நடு ரோட்டுல கைய பிடிச்சிக்கிட்டு போனா கூடப் பரவாயில்லை, கட்டி பிடிச்சி கிட்டே சென்ஸார் சீன்னு கட் பண்ணி தூக்கி போடுற அளவுக்குச் சில்மிஷம் செஞ்சுட்டு திரியுறீங்களே இது நியாயமா. இது சென்னை இல்லம்மா.‌ இங்க நீங்க இது மாறி நடந்துக்கிட்டா இத பாக்குற பேச்சுலர் மனசு கஷ்டப்படாது."


"நீ பேச்சுலரா. இல்லல்ல. அப்பறம் ஏ உனக்கு ஃபிலிங்."  


"எனக்கு எந்த ஃபீலிங்கும் கிடையாதும்மா‌. ஆனா புருஷனும் பொண்டாட்டியும் எதுக்கு எங்கதவ தட்டி, எங்க தூக்கத்த கெடுத்துட்டு போனிங்க. மீ பாவம் இல்லையா."


"குட்டிங்க ரெண்டும் எங்கூட தான தூங்குச்சி. நாங்க வெளில போய்ட்டா. தனியா தூங்குங்க. அப்றம் திடீர்னு முழிச்சா பயந்து அழுகும்ல. அதா பொறுப்பா உங்கிட்ட ஒப்படச்சிட்டு போனோம். இப்ப சொல்லு நாங்க நல்ல அப்பாம்மா தான." என அவள் சொல்ல அவளின் தலையில் தட்டினான் கௌதம்.   


"ரொம்ப பொறுப்பா இருங்கிங்கம்மா. இருக்கிங்க. ஆமா. அந்த நடுராத்திரில எங்க போனிங்க." என அவன் ஆர்வமாகக் கேட்க, கன்னம் சிவந்தது நேற்றைய இரவின் நினைவில். 


அதை அதிகாலை என்பதா இல்லை மிட் நைட் என்பதா தெரியவில்லை. ஆனால் சூரியன் உதிக்க இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. அதுமட்டும் தெரிந்தது. 


கதை சொல்லி அகிலனையும் ஆதியையும், தூங்க வைத்துவிட்டு அவர்களை அணைத்துக் கொண்டு ஹரிணி உறங்க‌, அப்போது தான் கண்ணயர்ந்து இருந்தாள். 


அறையில் வெளிச்சத்தை‌ படரவிட்ட ரிஷி, படுக்கையைப் பார்க்க, மூவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.‌ சத்தமிடாமல் அருகில் வந்தவன் 

‌குழந்தைகளை மெல்ல அவளிடமிருந்து பிரித்தான். பிரித்ததோடு மட்டுமல்லாத அந்தக் காலி இடத்தைத் தானே நிரப்பினான். 


"கிட்... கிட்..." எனக் காதில் கிசுகிசுக்கு அவள் கண் விழிக்கவில்லை. தன் மூச்சுக்காற்றை அவளின் வெண்கழுத்தில் ஊத, அவளின் தேகம் சிலிர்த்தது.


"ம்ச்... எப்ப வந்த பாவா." எனக் கண்மூடியே கேட்டவள் அவனின் பக்கம் திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள். 


"கிட்... எழுந்திரி... எங்கூட வா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்."


"எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம். இப்ப தூங்க விடு பாவா."  


"கிட்... வா கிட்... டயம் வேஸ்ட் பண்ணாம." என எழுப்ப முயல, முடியவில்லை. எனவே கீழே சென்று எதையோ எடுத்து வந்தான். 


"கிட்... நீ உடனே எழுந்து எங்கூட வரனும் இல்லன்னா பின் விளைவுகள நீ சந்திக்க வேண்டி வரும், எந்திரி." என்க. ம்ஹிம்.‌.. பூகம்பமே வந்தாலும் கட்டில விட்டு நகர மாட்டேன் என்பது போல் படுத்திருக்க,


"நடக்கப் போற இந்தச் சம்பவத்துக்கும் எனக்கு எந்தச் சம்மந்தமும் இல்ல. நா எதுவும் பண்ணல. எதையும் பாக்கல." என அவளின் டீசர்டின் உள்ளே ஜஸ் கட்டிகளைப் போட, அவள் பதறிப் போய் எழுந்தாள். பிள்ளைகள் முழித்து விடக் கூடாது என்பதற்காகச் சத்தம் போடாமல் எடுக்க முயல, ரிஷி சிரிப்புடன் அவளின் துடிப்பை ரசித்தான். 


"எரும... ‌எரும... ஹா... ஏய்... ஏன்டா இப்படி பண்ண."


"நாந்தா உன்ன எழுப்புனேனே. நீ எந்திரிக்கல. அதா இப்படி பண்ணேன. நீ ஏ நா சொன்ன உடனேயே செய்ய மாட்டேங்கிற." தரன் குற்றம் சுமத்த,


"நடு ராத்தி ஜஸ் தண்ணிய ஊத்துனது மட்டுமில்லாம. என்னயவே கொற சொல்றியா. உன்ன." என ஜஸ் கட்டியுடன் துரத்த அவன் ஓட வில்லை.


"கிட் ‌போடப்போறியா. டக்குன்னு போட்டுட்டு எங்கூட உடனே வா.‌ நேரமாச்சி." என அவசரப்படுத்தினான்.‌


"எங்க."


"போற வழில சொல்றேன்."


"குழந்தைங்க."


"கௌதம் பாத்துப்பான்." என நடு இரவென்றும் பாராது கௌதமின் அறையைத் தட்டி, அவனை எழுப்பி ஒப்படைத்து‌ விட்டுச் சென்றனர். 


"வா." எனக் கரம்பற்றி இழுக்க,


"பாவா... பைக் எங்க."


"இந்த ராத்திரி நேரம் பைக்க ஸ்டாட் பண்ணா சத்தம் கேக்கும், எல்லாரும் எழுந்துடுவாங்க. அமைதியா கொஞ்ச தூரம் வா. அப்றம் பைக்ல போகலாம்."


"ம்ஹிம்... என்னாலாம் நடந்து வர முடியாது. வேணும்னா என்ன தூக்கிட்டு போ." எனப் படிக்கட்டில் அமர்ந்து கொள்ள,


"கிட் விளையாடாம வா."


"முடியாது பாவா. ஒன்னு பைக் எடுத்துட்டு இங்க வா. இல்ல என்ன உப்பு மூட்ட தூக்கிட்டு‌‌ போ.‌ நா உன்னோட முதுகுல சாஞ்சி தூங்கிகிட்டே வர்றேன் பாவா." என்க, வேறு வழி இல்லாமல் தூக்கினான். ஆனால் பாவம் நடப்பது தான் சிரமமாக இருந்தது. கேட்டைக் கூடத் தொட்டிருக்க மாட்டான்‌ அதற்குள்ளாகவே முடியாமல் கீழே இறக்கிவிட்டு விட்டான், முடியவில்லை என்று.



"பாவா, ‌நீ மாறிட்ட. நா உன்ன லவ் பண்ணாம இருக்குறப்ப இம்ப்ரஸ் பண்ண என்ன தூக்குன. இப்ப லவ் பண்றேன்னு தெரியவும் செய்ய மாட்டேங்கிறேல்ல. இது சரி கிடையாது பாவா. உனக்கு எம்மேல இருக்குற லவ் கொறஞ்சி போயிடுச்சி." எனக் கொஞ்சும் குரலில் குற்றம் கூறினாள் அவள். 


"ஐய்யோ!. கிட்!. அப்படி இல்ல. நீ குண்டான இருந்தாலும் தூக்குற மாறித் தா இருக்க." என்க அவள் முறைத்தாள் அவனை. 


"இப்ப கூட நா உன்ன தூக்கிட்டு தான வந்தேன். ஆனா தூக்கிட்டு நடக்குற அளவுக்குத் தா எ உடம்புல தெம்பில்ல. ம்‌‌... வாம்மா. போலாம்."  


அவனும் எப்படியாவது அசைத்து விடலாம் என்று பார்க்க, அவளும் மலைபோல் அசையாது நின்றாள். வேறு வழி இல்லை, தூக்கித்தான் ஆக வேண்டும். 


வீட்டிலிருந்து வெகுதூரம் சென்ற நிலையில் பைக் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.‌ அவளைத் தன் முதுகில் துயில் கொள்ள வைத்து விட்டு அவர்களின் ரைஸ் மில்லுக்கு ஓட்டிச் சென்றான் பைக்கை. அத்தனை நேரம் முகத்தில் வீசிய குளிர்ந்த காற்று திடீரென நின்று போக, 


"எதுக்கு பாவா நிப்பாட்டுன? இன்னும் கொஞ்ச தூரம் போ." 


"வண்டிக்கி பெட்ரோல் போடனும் மா. இறங்குறியா கீழ." என்க அவளும் சிணுங்கிக் கொண்டே இறங்க அங்கு நின்று கொண்டிருந்த பைக்கை பார்த்தாள். 


"டிம்முக்கும் டெய்ஸிக்கு என்னாச்சு?. ஏ சண்முகம் ஸார் வந்திருக்காரு." என்றவளின் முகத்தில் படபடப்பு இருந்தது. 


அவனின் பதிலை எதிர் பாராது உள்ளே சென்று தங்களின் நாய்களைப் பார்க்க ஓடினாள். அவளை வரவேற்றது டிம்.


 அது குரைத்துக் கொண்டே எதுவோ சொல்லி அவளை டெய்ஸியிடம் அழைத்துச் சென்றது. டெய்ஸி சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. துணி போர்வை விரித்து அதன் மேல் படுக்க வைக்கப்பட்டிருந்தது. நல்ல வேளை போர்வையின் நிறம் கருப்பாக இருந்தது. இல்லை எனில் டெய்ஸியின் ரத்தம் கண்டு பயந்திருப்பாள் ஹரிணி. 

அருகில் கால்நடை மருத்துவர் சண்முகம் நின்றிருந்தார். அவர் தான் டிம்முக்கும் டெய்ஸிக்கும் தடுப்பூசி போடுபவர். 


"டாக்டர் என்னச்சு. ஏ டெய்ஸி உடம்புல ரத்தம்." 


"குட்டி போடப் போதும்மா." என்றவுடன் அவளுக்கு அதிர்ச்சி.  


ஏனெனில் அவள் அதை அவ்வளவு தூரம் ஊன்றிப் பார்த்தில்லை. டிம் தான் எப்போதும் வீட்டில் இருப்பான். டெய்ஸி அரிசி ஆலையில் தான் வாசம் செய்வாள். டிம் டெய்ஸியை சுற்றி சுற்றி வர டெய்ஸி தன் குட்டியை‌ ஈன்று கொண்டிருந்தது. 


தன் தேகத்தில் திடீரென மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தாள் ஹரிணி.‌ மனிதனை போல் தானே அனைத்து உயிரும். கால்கள் நடுங்க நின்றவளை தரன் அதன் அருகில் கூட்டிச் சென்றான். 


பொதுவாகக் குட்டி போடும் உயிரினம் தன் குட்டியைப் பாதுகாக்கும் பொருட்டு வெறியுடன் இருக்கும். நாய்களும் அதே போல் தான். நாம் அதன் மேல் வைத்திருக்கும் பாசத்தை பொறுத்து நம்மைப் பக்கத்தில் அண்ட விடும். இல்லையேல் கடித்து குதறி விடும். 


ரிஷி இருவரையும் நன்கு பார்த்துக் கொண்டதன் காரணமாய் டெய்ஸி அவனைத் தொட அனுமதித்தது. முதல் குட்டி அது.‌ தன் நாவால் சுத்தம் செய்து கொண்டிருந்த டெய்ஸியிடமிருந்து குட்டியைத் தூக்கி மீண்டும் சுத்தம் செய்தார் டாக்டர். அதை வாங்கியவன் ஹரிணியின் அருகில் வந்து, 


"கொஞ்சம் இல்ல ரொம்பவே லேட்டாகிடுச்சு. ஆனாலும் நம்மோட கல்யாணம் நாளுக்கான பரிசு இது. Belated anniversary gift." எனப் பிறந்த நாய் குட்டியைத் தர, அதை ஆவலுடனும் ஆசையுடனும் பூவைப் போலக் கையில் ஏந்தினாள் ஹரிணி. 


தாமதம் தான். ஆனாலும் தான் சொன்னதை அடி பிசகாமல் நிறைவேற்றி விட்டான். 'சொல்வதை செய்து காட்டும் வல்லமை படைத்தவன். ' என ஹரிணி மனதில் நினைத்துக் கொண்டே அந்த நாய் குட்டியைக் கொஞ்சினாள். 


கண்கள் கூடத் திறக்காத அந்தப் பிங்க் நிற நாய்க்குட்டி இப்போது நான்காகிப் போனது. மேலும் மூன்று குட்டிகளை ஈன்றிருந்தது டெய்ஸி. அவைகளை துணி மெத்தையில் கிடத்தி‌ அருகில் நின்று ரசித்துக் கொணடிருந்தவளின் பின்னால் வந்து நின்றான் ரிஷிதரன்.


"கிட் டூ யூ லைக் இட்." எனக் கேட்டது தான் தாமதம் திரும்பி அவனை வேகமாக அணைத்தாள் அவனின் மனையாள். 


"எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு பாவா. யாருமே இது மாறி ஒரு கிஃப்ட்ட குடுத்ததில்ல. தங்க்யூ. தங்க்யூ சோ மச்." என இறுக அணைத்தவளை தொந்தரவு செய்யாது சில நொடிகள் அதை ரசித்தான். பின், 


"கிட்... கிளம்புவோம்." என்க அவளுக்கு மனமே இல்லை.


"இத நாம எடுத்துட்டு போலாமா. பிளீஸ்." 


"கிட், இப்ப அதுக்கு அதோட அம்மா தா தேவ. நாம இல்ல.‌ நமக்கும் குழந்தைங்க இருக்கு. இத நம்ம கூடவே வச்சி இப்போதைக்கி வளக்க முடியாது. எதெது எங்க இருக்கனுமோ, அதது அங்கதா இருக்கனும். நமக்குப் பாக்கனும் தேனுனா வந்து பாத்துக்கலாம். " எனச் சமாதானம் செய்தான். 


பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன் ஓடி வந்து மீண்டும் அணைத்தாள் ஹரிணி ரிஷயை. 


"மறுபடியும் தேங்க்ஸ். எனக்கு இந்த மாறி ஒரு பெஸ்ட் கிஃப்ட் குடுத்ததுக்கு. யூ வார் மை ஸ்பெஷல். ஐ லவ் யூ வெரி மச்." என அணைக்க அவர்களின் அன்றைய இரவு மரவீட்டில் கழிந்தது காதலுடனும் காமத்துடனும்.



தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  



 

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...