முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 24


அத்தியாயம்: 24


இரைச்சல்...  


பேரிரைச்சல்...


ரைஸ் மில் அது. சுற்றி இருக்கும் இயந்திரங்கள் எழுப்பும் ஓசையைவிட அதிகமாக ஒலித்தது, அவனின் மனக்குமுறல். ஆனால் அது யாருக்கும் கேட்காது அவனுள் மட்டுமே இருந்தது. 


மூன்று நாட்கள் சென்று விட்டன, ஜெனி ஊருக்குச் சென்று. செல்லும் முன்பும் சரி சென்ற பின்னும் சரி அவள் தொடர்ந்து அவனுடன் பேச முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் பிரகாஷ் முகம் கொடுக்கவில்லை. காதல் பார்வை பார்த்துத் தன்னை அவள் ஏமாற்றி விட்டாளோ என்ற எண்ணம் தான் வந்தது. 


வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆன பின் ஏன் தன்னை காதலாகப் பார்க்க வேண்டும். தன்னை பார்க்கும் போதெல்லாம் அவளின் முகம் மலர்வதையும் விழிகள் படபடத்தை நிலம் நோக்குவதையும் கண்டிருக்கிறானே. ஆண்களுடன் பேசிப் பழகாத பெண் என்றால் அதைக் கூச்சம், இனக்கவர்ச்சி என்று சொல்லலாம். ஆனால் மும்பையில் அதுவும் மாடலிங்க ஃபில்டில் பல ஆண்களுக்கு மத்தியில் வேலையில் இருக்கும் பெண்ணுக்கு வரும் இந்த உணர்வைக் காதல் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது. 


அப்படி எனில் அவள் தன்னுடன் பொழுது போக்குக்காகப் பழகியிருக்கிறாளா!. இல்லை அவள் ஆண்களிடம் பழகும் முறையே அதுவா. சச்ச... ஜெனி அப்படி‌ பட்ட பெண் கிடையாது என நினைக்கத் தோன்றியதே தவிர அவளின் கேரக்டரை பற்றித் தவறாக நினைக்க அவனின் மனம் இடம் தரவில்லை. 


அங்கிருந்த அலுவல் அறையில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பிரகாஷின் முன் வந்தமர்ந்தான் கௌதம்,


"கைப்புள்ள, என்னாச்சு தல வலியா என்ன?. அண்ணே சுக்கு காபி வாங்கியாரவா?." எனக் கேட்டபடி.


"ம்ச்... தல வலிலாம் இல்லண்ணா."


"அப்ப அண்ணே உனக்காக ஒன்னு கொண்டு வந்திருக்கேன் அத என்னனு பாரு." என ஒரு கவரை நீட்ட,


"எதுவா இருந்தாலும் வச்சிட்டு போண்ணே. எனக்கு இப்ப எதையும் பாக்குற மூடில்ல." என்றான் தலை நிமிராமல்.


"அப்ப‌ அண்ணனுக்கு ஒரு உதவி செஞ்சிடு போயிடுறேன். நீ பண்ணுவங்கிற நம்பிக்கை தா காஸ்லியா பெட்ரோல்லாம் போட்டு வண்டிய ஓட்டீட்டு வந்திருக்கேன். பெட்ரோல் திரவத்தங்கமாம். பிபிசில சொன்னானுங்க."


"என்னால எதுவும் பண்ண முடியாதுண்ணே. என்ன தனியா விடுண்ணே." என எழ,


"நா அப்பவே சொன்னேன். இந்த மும்பை பொண்ண நம்பாதடா... நமக்குன்னு இந்த ஊர்லயோ இல்ல வெளி ஊர்லயோ எங்கையாது ஒரு பொண்ணு பிறந்திருக்கும் அத கட்டிக்கிவோம்னு. நீ தாங்கேக்காம என்னென்னமோ பேசுன. இப்ப பாரு. கடைசில கவலப்படுறது என்னமோ நீயா தா இருக்க.‌"


"..." எதுவும் பேசாது எழுந்து ஜன்னல் இருக்கே சென்றான் பிரகாஷ்.


"நீ எதுக்குடா ஃபீல் பண்ணனும். அண்ணே நா இருக்கேன் டா உனக்கு. அடுத்த வாரமே பக்கத்தூர் பேச்சியம்மாவ பாத்து பேசி உனக்குக் கல்யாணத்த முடிவு பண்ணிடுறேன். அடுத்த மாசம் இன்னேரம் நீ ஃபேமிலி மேன் தா." என விளையாட்டாகப் பேசிப் பிரகாஷின் வாய் திறக்க வைக்க முடிவு செய்தான். 


வெளியே காட்டிவிடும் கோபம், கவலை போன்ற உணர்ச்சிகளால் மனதின் பாரம் சற்று குறையலாம். அதற்காகத் தான் அவனை வெறுப்பேற்றுகிறான் கௌதம். 


அவனும் என்னென்னமோ பேச, பிரகாஷ் 'நான் வாய்க்குப் பூட்டு போட்டிருக்கிறேன்' என்பது போல் பேசாது நிற்க, அவனின் அருகில் சென்று தோளில் கை வைத்தான்.  அவ்வளவுதான் பிரகாஷ் உடைந்து விட்டான். 


"நா இதுவரைக்கும் இப்படி இருந்ததில்லண்ணே. பாத்திருக்கேன் பேசிருக்கேன். ஆனா லவ் லைஃப்ன்னு நினைச்சுப் பாக்க வச்சது ஜெனி தா. நா அவள லவ்வோட தா பாக்குறேன்னு அவளுக்குத் தெரியும்லண்ணே. கல்யாணம் ஆகப்போதுன்னா வெளிப்படையா சொல்லிருக்கலாம்ல. நானும் என்னோட ஆசைய மறைச்சிட்டு, கொஞ்ச நாள்லேயே மறந்துட்டும் போயிருப்பேன். ம்ச்...  


கடைசியா‌ பேசும்போது கூட எம்மேல அக்கறையா பேசுனாண்ணே. என்னோட ஃப்யூச்சரப் பத்தி பேசி உரிமையோட பழகுன மாறி இருந்தது. நாந்தா மடையே எனக்கு இன்னும் மெச்சூரிட்டி வரலண்ணே. அதா என்ன ஏமாத்திட்டு போய்ட்டா. மறக்க முடியுமான்னு தெரியல.‌ வலிக்கிதுண்ணே." என அழுதவனை அணைத்து ஆறுதல் படுத்தினான் கௌதம். சிறிது நேரம் அழவிட்டவன் பின்,


"நாம ஒருத்தர் மேல வைக்கிற அன்பு எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காததா இருக்கனும் பிரகாஷ். நீ ஜெனி மேல வச்ச அன்பு உண்மன்னா அது அப்படியே இருக்கட்டுமே. ஏ அவள மறக்கனும்னு நினைக்கிற? அவ இந்த உலகத்துல உங்கூட இருந்தாலும் இல்லனாலும், ஏ அடுத்தவனுக்கு பெண்டாட்டியானாலும் குழந்தைக்கி தாயானாலும் நீ அவா மேல அன்பாவும் அக்கறையாவும் இருக்க முடியும். ஆனா நீ காட்டுற அந்த அன்புக்கும் அக்கறைக்கும் பிரதிபலனா அவா உன்ன லவ் பண்ணனும்னு நீ நினைச்சா! அது தா தப்பு. 


நாம ஒன்னு செய்றோம் பதிலுக்கு அவங்களும் கட்டாயம் ஒன்னு திருப்பிச் செய்யனும்னு நினைக்கிறது வியாபாரம். அதுல அன்பு இருக்காது டா." என்க, பிரகாஷ் அமைதியானானே தவிர எதுவும் பேசவில்லை. 


"பிரகாஷ் இந்த உலகத்துல யாரு உங்கூட இருந்தாலும் இல்லன்னாலும் நாங்க எல்லாம் உங்கூட தா இருப்போம். உன்னோட குடும்பம் இருக்கும். எங்களுக்குப் பழய பிரகாஷ் வேணும்." என்க பதில் வரவில்லை. எங்கே தற்கொலை முடிவை எடுத்து விடுவானோ பயந்து போனவன்.,


"நீ எடுக்குற ஒவ்வொரு முடிவையும் நம்ம குடும்பத்தையும் உனக்காக இருக்குற எங்களையும் பத்தி யோசிச்சு எடு." எனப் படபடத்துப் பயந்து பேசினான். 


"ஹிம்... தற்கொல பண்ணிக்கிற அளவுக்கு இது வெர்த் இல்லண்ணே. என்னோட வாழ்க்கையில வர விரும்பாத ஒருத்திக்காக, என்னோட வாழ்க்கையையோ வீணாக்குற அளவுக்கு உந்தம்பி கோழ கிடையாது." என்றான் பிரகாஷ். 


அவனும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான் இந்த மூன்று நாட்களும் தன்னுடன் நிழல்போல் சுற்றும் கௌதமை.‌ அதான் அப்படி கூறினான். 


"என்ன ஹெல்ப் ண்ணே வேணும்." என அந்தக் கவரை பிரித்துப் பார்க்க, அதில் ஒரு திருமண அழைப்பிதழும் புகழ் பெற்ற தீம் பார்க்கின் சில டிக்கெட்களும் இருந்தது. 


"கல்யாணம் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்டுக்கு. கண்டிப்பா வரனும்னு சொன்னான். மதி-ய விட்டுட்டு என்னால போக முடியாது. சோ உன்னோட மனசு மாற, உன்னோட ஃப்ரெண்ட்ஸ்ஸ கூட்டிட்டு நீயே போகக் கூடாதுன்னு தோனுச்சி. அதா எடுத்துட்டு வந்தேன். போறியா?." என்க. பிரகாஷ் தலையசைத்தான். 


ஒரு அண்ணனாய் தம்பிக்கு ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருந்தான் கௌதம்.


_______ 


ஹரிணி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். தன்னை சுற்றி இருக்கும் இந்த இன்டீரியர் டிசைன்ஸ் யாவும் அவளைக் கவர்ந்து இழுத்தன. அது அவளின் புதிய அலுவலகம்.


மும்பையில் இருக்கும் தன்னுடைய ஃபேஷன் ஹவுஸ் போலவே இதையும் வடிவமைத்து இருந்தாள் சுதா. வண்ணமயமான சுவர், அனைவரும் அமர்ந்து ஒன்று போல் வேலை செய்ய ஏதுவாய் டேபில்ஸ், ஆண் பெண் என மனித பொம்மைகள் என ஹரிணியின் எதிர்பார்ப்புகள் எல்லாம் இருந்தது.


"தேங்க்யூ சோ மச் சுதா. ஐ ரியலி இம்பிரஸ் தெட். சூப்பரா இருக்கு." என மனதார தன் நாத்தனார் சுதாவை பாராட்டினாள் அவள். 


ரிஷி சுதாவிடம் தான் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். Bsc interior designing படிக்கும் பெண் அல்லவா. அவளின் திறமையை மெருகேற்ற இது உதவும் என்று நினைத்துத் தன் தங்கையிடம் ஒப்படைத்தான் தரன்.


ஃபேஷன் இன்டீரீஸ். 


இந்த ஃபேஷன் ஃபீல்டில் பல எதிர்மறைகள் இருக்கும் நிலையில் சில நேர்மறையான நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.


இந்தத் துறையில் வெற்றிகரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் பணமழையிலும் புகழ் மழையில் குளிக்கலாம். பல ஹீரோ ஹீரோயின்களுக்கும், பணவசதி படைத்த ஜாம்பவான்களுக்கும் டிசைனராக மாறலாம். பிரான்டர்டு நிறுவனங்களுக்குத் தனிபட்ட டிசைனர் ஆகலாம். தனியாகப் பொட்டிக் வைத்துப் பிரபலமாகலாம். 


ஆனால் போட்டிகளும் பொறாமைகளும் அதிகம். நாம் முன்னேற எதையும் செய்யலாம் தவறில்லை என்ற கூட்டம் தான் அதிகம்.


அவர்களுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைக்காத பல மாடல்ஸ்களுக்கு ஹரிணி வாய்ப்பு அளித்தாள். பணம் புகழ் எதையும் விரும்பாது தன் திறமையை அரங்கேற்றும் அரங்கமாகவே இந்தத் துறையைப் பார்த்தாள். தன் பதினைந்து வயதில் இருந்தே இந்தத் துறையில் சாதிக்க தன் திறமையை வளர்த்துக் கொண்டாள். 



ROS குழுமம் கலைக்கப்பட்ட பிறகு தன்னை நம்பும் தன் வாடிக்கைகளுக்கு தன் திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளாள். இடம் ரெடி, டிசைனர்ஸ் ரெடி, காஸ்ட்யூமும் ரெடி, காஸ்மெட்டிக் ரெடி. இனி மூன்று நாட்கள் கழித்து நடக்கவிருக்கும் ஃபேஷன் சோ தான் பேச வேண்டும் அவனின் திறமையை.


மொத்தம் பதினைந்து உடைகள். அவை இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். தனித்துவமானதாகவும் பிற டிசைனர்களிடமிருந்து வேறுபட்டும் இருக்க வேண்டும். 


அங்கிருந்த பொம்மைகளுக்குத் தன் டீமுடன் சேந்து வடிவமைத்த உடைகளை அணிவித்து பார்த்தாள் ஹரிணி. முழு திருப்தி ஏற்பட்ட போதும் சிறு பயம் வந்தது. அது அந்தச் சுனில் செய்யும் வேலைகளால். இதுவரை அவள் வடிவமைத்த ஆறு டிசைன்கள் திருடப்பட்டு இருந்தன. அதை அவளின் பார்ட்னர்ஸ்களே செய்தது தான் அதிர்ச்சி. அதனால் இதை யாரிடமும் காட்டாது‌ ரகசியமாய் தயார் செய்துள்ளாள். 


"குட் மார்னிங் ஹரிணி." கோரஸ்ஸாக வந்தது அவளின் டிசைனிங் டீமிடமிருந்து. ஐந்து பேர் இருப்பர். மும்பையில் இருப்பவர்கள் தான். ஆனால் சில காலம் சென்னையில் தங்கி பணிய புரியுமாறு ஹரிணி கேட்டதால் இங்கு ஹாஸ்டலில் தங்கி உள்ளனர். 


"ஹே ஹைஸ்.‌ இது தா இனி நம்மோட நியூ ஹவுஸ்.‌ இனி இங்க வச்சி தா அடுத்தடுத்த ப்ராஜெக்ட் பண்ண போறோம்." உற்சாகமான குரலில். 


"வாவ் நைஸ் இன்டீரியர்." எனப் பாராட்ட, அதைச் சுதா செய்ததாகக் கூறினாள். 


"நம்மோட அடுத்த நியூ பிராஜெக்ட் எப்ப ஹரிணி ஸ்டார்ட் பண்ண போறோம்." அவளின் டிசைனர்களில் ஒருவர்.


"மே பீ இன்னும் சிக்ஸ் மன்த் ஆகலாம். இந்த மாசம் சிலர் கூடப் போட்டுக் கிட்ட காண்ட்ராட்ஸ் முடியுது. சோ ஒரு ப்ரேக் விட்டுடு‌. அப்றம் புதுசா ஸ்டார்ட் பண்ணுவோம்."


பள்ளி முடித்தவுடனே ஒரு டிசைனரிடம் அசிஸ்டன்ட்டாகச் சேர்ந்து கொண்டாள் ஹரிணி.‌ கௌதமுடன் சேர்ந்து கல்லூரி படிப்பு,  இவளின் ஃபேஷன் டிசைனிங்கான படிப்பு எனப் பிஸியாகச் சுற்றியவள், ஆறு ஆண்டுகளுக்கு முன் தன் தோழிகள் சிலரின் உதவியுடன் ஹச்ஆர் ஃபேஷன் ஹவுஸ்ஸை தொடங்கினாள். இப்போது வரை லாபம் ஈட்டி வருகிறாள். 


ஹரிணி உட்பட மூன்று பேர் இதன் உரிமையாளர். அவர்களைத் தவிர்த்துப் பணி புரியும் அத்தனை பேருமே ஒப்பந்த ஊழியர்கள். ஐந்து ஆண்டுகள் இரண்டு ஆண்டுகள். ஒரு ஆண்டு என ஒப்பந்தத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் விரும்பும் பட்சத்தில் தொடரலாம் இல்லையேல் வேறு‌ டிசைனரிடம் சேந்து கொள்ளலாம். 


"மாடல் ஏஜென்ட்ஜி கிட்ட பேசுனியா மீரா. நமக்கு இன்னும் நாலு பாய் மாடல்ஸ் வேணும்." 


"இப்போதைக்கி கிடைக்காதுன்னு சொல்றாங்க ஹரிணி." ஜெனி, 


"ஏ!.‌ பணம் அதிகமா தர்றோம்னு சொல்லியுமா மாட்டேங்கிறாங்க."


"ஆமா ஹரிணி. ஃபோன்ல நல்லா பேசுனாலும், உறுதியா வர்றோம்னு சொல்லல. எதுக்கும் நாம வேற ஆளுகல ரெடியா வச்சிக்கிறது நல்லது. கடைசி நேரத்துல கால வாரலாம்." மீரா. 


"வாட் அபோட் கேர்ள்ஸ். அவங்களும் சந்தேகமா என்ன?."


"அவங்களுக்கு நா பொறுப்பு." என வேறொருவர் சொல்ல,


"ஓகே... நாளைக்கு மார்னிங் உங்க எல்லாருக்கும் ஃப்ளைட். டிக்கெட்ஸ் இதுல இருக்கு. எல்லாரும் கவனமா இருங்க. வீ ஆர் த பெஸ்ட்." என்க, அனைவரும் கலைந்து சென்றனர். 


"மேடம் எங்க போறிங்கன்னு நா தெரிஞ்சிக்கலாமா." நக்கலாக ஹரிணி கேட்டாள், மற்றவர்களுடன் சேர்ந்து எஸ்கேப் ஆக நினைத்த ஜெனியை பார்த்து. 


"அது... அது.‌.. நா... இன்னைக்கி நைட் மாமா வந்து." எனத் தயங்கி தயங்கி பேச,


"நீ எப்பனாலும் இங்கிருந்து போ எனக்குக் கவல இல்ல. ஆனா இந்தக் கார்மெண்ஸ்ல இருக்குற மெட்டிரியல வாங்கி குடுத்துட்டு போ." என்று சிடுசிடுப்பாகப் பேசினாள் ஹரிணி. 


"எனக்கு அட்ரெஸ் தெரியாது." ஜெனி அவளுக்குச் சென்னை புதிது. அதான் தயங்குகிறாள்.


"கூகுள் மேப் இருக்குள்ள. அத யூஸ்‌ பண்ணி போ." இரக்கமின்றி. 


"கூகுள்ள ரூட் தா காட்டும். பட். எப்படி போறதுன்னு." என இழுக்க, 


"ஓ... தெரியாதா.? அப்ப நானே போய் வாங்கிட்டு வர்றேன். எதுக்கு நீங்க வீணா தெரியாத ஊர்ல அழையனும். எதுக்கு உனக்கு நா தேவையே இல்லாம சம்பளம் தரனும்." என நக்கலாகப் பேசியவள் பின்,


"உன்னோட காண்ட்ராக்ட் முடிய இன்னைக்கி சாயங்காலம் ஆறு மணி வர டயம் இருக்கு. அதுவர நாந்தா உனக்கு முதலாளி. நியாபகம் இருக்கடும்." எனக் கோபமாக முடித்தாள். 


"இல்ல போக மாட்டேன்னு சொல்லல. எனக்கு எந்தப் பஸ்ல எறனும்னு தெரியாதுன்னு சொல்ல வந்தேன்." என்றவளை ஹரிணி முறைக்க,


"ஸாரி... நா விசாரிச்சி போக்கிறேன்." என நடக்கத் தொடங்கினாள். 


"உங்க கால் நோக நடந்தெல்லாம் போக வேண்டாம். இந்தாங்க கீ. என்னோட ஸ்கூட்டிய எடுத்துட்டு போங்க. இந்தா கார்டு. எமர்ஜென்சிக்கு யூஸ் பண்ணிக்க." எனக் கொடுக்க, ஜெனிபர் திருதிருவென முழித்துக் கொண்டே‌ சென்றாள். 


சில நாட்களாகவே பாசத்தையும் கோபமாகவே காட்டும் ஹரிணியை எப்படி எடுத்துக் கொள்வது என்று தான் தெரியவில்லை அவளுக்கு. அதைவிட முக்கியம் இன்றைய நாளுக்குப் பிறகு தன் வாழ்க்கை என்னவாகப் போகிறதோ என்ற கவலை தான் அதிகம் இருந்தது அவளுக்கு. 


 

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


அன்பே 23


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...