முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 27

அத்தியாயம்: 27


"மொத்தம் பதினைஞ்சு பேரு. நமக்குக் குடுக்குற டயம் ரொம்ப கம்மி. அதுக்குள்ள அத்தன பேருக்கும் காஸ்ட்யூம், காஸ்மெட்டிக்ஸ், கேட் வாக் டிரெயினிங்ன்னு எக்கச்சக்க வேல இருக்கு. நாளாண்னைக்கி ஷோ. ஆனா‌ நா இங்க உக்காந்து வெட்டியா உங்கூட பேசிட்டு இருக்கேன். ஏ... ஏன்னு உனக்குத் தெரியும். என்னப்பாத்தா உனக்குப் பாவமா தெரியலையா. ப்ளீஸ் கௌதம். எனக்காக." கௌதமிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் ஹரிணி. 


"டார்லிங், நானும் பாவம் தா டார்லிங். கலர் கலர் லைட்டு போட்ட ஸ்டேஜ்ல, அதுவும் நீ குடுக்குற விசித்திரமான டிரெஸ்ஸ போட்டுட்டு நடக்கனும். சுத்தி இருக்குறவங்க என்ன மட்டுமே கவனிக்கிறானுங்கங்கிறபோது எப்படி மா ஒழுங்கா நடக்க முடியும். கீழ விழுந்துட்டா அசிங்கம் இல்லையா. இப்ப நா ஒரு பிஸ்னஸ் மேன். ஃபேமிலி மேனும் கூட. அதுனால நீ வேற யாரையாது செலக்ட் பண்ணிக்க." 


"அப்படில்லாம் எதுவும் நடக்காது கௌதம். உன்ன நா ஃபஸ்ட் ஆளா இறக்காம லாஸ்டுக்கு முன்னாடி தா வாக் பண்ண சொல்றேன். ஆல்ரெடி டயம் வேஸ்ட் ஆகிடுச்சி. இதுக்கு மேல ஒருத்தன நா செலக்ட் பண்றது கஷ்டம். புரிஞ்சிக்க கௌதம்." என அவனின் மனம் இறங்க பேசிக் கொண்டு இருந்தாள் ஹரிணி. 


அவன் யோசிப்பது போல் பாவனை செய்ய, ஹரிணியின் முகம் பளிச்சிட்டது. அவளின் உடைக்கு மாடல்லா ஷோவில் நடக்க சம்மதம் எனச் சொல்லப் போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் அவன் முகம் பார்க்க,


"ம்...முடியாது." என்றான் அவன்.


"ஹிம்... அன்னைக்கி மட்டும் சரின்னு சொன்ன. எந்த டிரெஸ்ஸா இருந்தாலும் பரவாயில்ல, நா ரேம்ப் வாக் பண்றேன்னு. இப்ப என்ன ஆகிடுச்சாம்.?"


"அது அன்னைக்கி மா. நீ எங்கிட்ட கோபமா இருந்த அதா அப்படி சொன்னேன். இப்ப அது முடியாது." என்றவுடன் ஹரிணிக்கு கோபம் வந்து அவனை அடிக்க,


டைங்… டைங்... எனச் சத்தம் கேட்டது. 


"இண்டர்வெல் ப்ரேக் விட்டுட்டாளா என்ன?." 


"காது கேக்கலயா?. யாரோ காலிங் பெல் அடிக்கிறாங்க. போய்க் கதவ திற டா." 


"நா எதுக்கு மா போய்க் கதவ திறக்கனும். இது உன்னோட வீடு. என்ன தேடி இங்க யாரும் வரப் போறது இல்லை."


"ம்ச்... கழுத்தறுக்காம‌ போய் யாருன்னு பாரு கௌதம்."


"க்கும்... வெளில என்ன நடக்குதுன்னே தெரியாம, ரூமுக்குள்ள படுத்திருக்கானே உம்புருஷென், அவன வந்து திறக்கச் சொல்லு. எங்க வெளில தலைய நீட்டுனா நீ அவனுக்கு ஒரு காஸ்ட்யூம போட்டு விட்டு, ஷோக் கேஸ் பொம்மையாக்கிடுவன்னு பயந்து, பதுங்கி இருக்கான். போய் அவன மாடலா நடக்கச் சொல்லி அப்றமா கன்வின்ஸ் பண்ணு. இப்ப நீயே போய்க் கதவ திறந்துடு. " 


"இந்த வீட்டுல ரெண்டு அம்பளைங்க இருக்கானுங்க. ஆனாலும் நாந்தா எல்லா வேல செய்ய வேண்டி இருக்கு. ச்ச..." சலித்துக் கொண்டே கதவைத் திறக்கச் சென்றாள். 


"இது பொதுவா ஆம்பளைங்க சொல்ற டயலாக் ஆச்சே.‌ எப்பருந்து இந்த டயலாக்க இவா சொல்ல ஆரம்பிச்சா." என முணுமுணுத்தான் கௌதம். 


விடாது அடித்துக் கொண்டிருந்த அழைப்பு மணியைக் கேட்டுக் கடுப்பான ஹரிணி கோபமாகக் கதவைத் திறக்க, பிரகாஷ் நின்றுகொண்டிருந்தான். அவனை ஏற இறங்க பார்த்தவள். 


"பாவா... சாப்பாடு ஆர்டர் பண்ணியா?. டெலிவரி பாய் வந்திருக்கான்." என நக்கலாகக் கூறிக் கொண்டே உள்ளே செல்ல, ஹரிணியை முறைத்துக் கொண்டே பிரகாஷும் உள்ளே வந்தான்.


"எது ஃபீஸாவா.? ஹய்... டேய் கைப்புள்ள நீயா?. உன்னையத் தான்டா அண்ணே ரொம்ப நேரமா எதிர்பாத்துட்டு இருந்தேன். கல்யாணம் நல்ல படியா நடந்துச்சா. சாப்பாடு நல்ல இருந்துச்சா?." 


"நீ தா உன்னோட பொண்டாட்டிய தனியா விட்டுடு வர மனசில்லாதவரா." எனப் பிரகாஷ் நக்கலாகக் கேட்க,


"நா எங்கடா தனியா விட்டுட்டு வந்தேன். எங்கம்மா தா 'நா என்னோட மருமகள பாத்துப்பேன். நீ போய் உன்னோட வேலைய பாருடா மகனே.'ன்னு அனுப்பி வச்சாங்க. தாய் சொல்லைக் கட்டக் கூடாது. சரி நம்ம தம்பி தனியா இருப்பாப்லையே, கம்பெனி குடுப்போம்னு வந்தேன்." எனக் கௌதம் பேசிக் கொண்டு இருக்கும் போதே தரன் அறையை விட்டு ஹாலுக்கு வந்தான். 


பிரகாஷ் ஓடிச் சென்று தன் அண்ணனை அணைத்துக் கொண்டு, "தேங்க்ஸ் ண்ணா. ரொம்ப தேங்க்ஸ்." 


தந்தையின் விபத்துக்குப் பிறகு தரன் தன் அன்னையுடன் கிராமத்திற்கு வந்தான். அப்போது பிரகாஷ் பள்ளி படிக்கும் மாணவன். தரன் அவனுக்கு அண்ணனாக மட்டுமல்லாது அனைத்துமாக இருந்தான். பிரகாஷிற்கு படிப்பு என்பது சுமாராக அல்ல, சுத்தமாகவே வராது. நங்கை வேறு அவனைப் படி படியெனத் தொந்தரவு செய்ய, தரன் தான் காப்பாற்றுவான். அண்ணனாகப் பாடம் வேறு நடத்துவான். 


ஊருக்குள் வெட்டியாய் சுற்றித்திரியும்போது மற்ற இளைஞர்களுடன் சண்டை வருவது சகஜம் தானே. அப்படி வம்பு சண்டை போட்டுப் பலரிடம் அடிவாங்கி இருக்கிறான் பிரகாஷ். சிலரை ரத்தம் வர அடித்தும் இருக்கிறான். அப்பொழுது எல்லாம் பிரகாஷின் உடனே இருப்பான், நண்பனாக. 


பிரகாஷிற்கு சிறு காயம் வந்தாலும் அதற்குக் காரணமானவன் காலி என்று சொல்லும் அளவுக்கு வெளுத்து விடுவான் தரன். 


சில நேரம் நல்ல அண்ணனாகத் தம்பிக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தான் தரன். சில நேரம் பொறுப்பில்லாம் எதையாவது செய்து தரன் கையால் அடி வாங்கியும் இருக்கிறான் பிரகாஷ். ஆனால் ஒரு போதும் தரன் மீது பிரகாஷ் வைத்த மதிப்பும் அன்பும் மாறியதே இல்லை. பிரகாஷின் ஆசான் அவன். 


இன்று தன் மனநிலை உணர்ந்து விஜயை உடன் அனுப்பி தன்னை தெளிய வைத்தது ரிஷி என்பதற்காக அவனுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க, மற்ற இருவரும் காண்டுடன் பார்த்தனர். 


"கௌதம்."


"டார்லிங்."


"இவன சென்னைக்கி வர வச்சது நீ."


"ஜெனிய வெளில அனுப்பி, இவெனப் பாக்க வச்சு ஜோடி சேத்து விட்டது நீ."


"தீம் பார்க்குக்கு டிக்கெட் எடுத்துக் குடுத்தது நீ."


"இவெ ஜோடியா ஊர் சுத்த, பெட்ரோல் போட்டு டேங்க் ஃபுல் பண்ண ஸ்கூட்டிய குடுத்து விட்டது நீ."


"ஆனா நம்மலயெல்லாம் கண்டுக்காம. "


"அண்ணேன்னு பாஞ்சி போய்க் கட்டி பிடிக்கிறான். இத இப்படியே விட்டா, நமக்குப் பேரு இல்லாம போய்டும்." கௌதம்.


"அதுனால நடுவுல புகுந்து ஆட்டத்த கலச்சி விட்டுட வேண்டியது தா." என‌ நண்பர்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுக்க, பிரகாஷ் இன்னும் தரனை விட்டு விலகுவதாகவே இல்லை. 


ஹரிணி மெதுவாக அவனின் கையில் இருந்த ஜெனிபரின் திருமண அழைப்பிதழை அபகரித்தாள். 


"கௌதம், இங்க பாரேன். ஜெனிபர்க்கு கல்யாணமாம். அதுவும் ஐஞ்சே நாள்ல.‌"


"நிஜமாவா!. நம்மளும் போலாம் டார்லிங். சேட்டு வீட்டு கல்யாணத்துல சாப்பாடு தடபடலா இருக்கும். அதுலையும் ஃபயர் பீடா. அருமையோ அரும. எங்க வச்சி கல்யாணம். யாரு அந்த லக்கி பாய்." 


"பேரு, யஷ்வந்த். மும்பைல மாடலிங் ஏஜென்சி ஓனர் அவெ. கல்யாணம் கோவால அவனோட பிரைவேட் ரிசார்ட் ல வச்சி தா நடக்கப்போது. நிச்சயம் ஃபாரின் சரக்கு இருக்கும். நல்லா என்ஜாய் பண்ணலாம். ஆமா நம்ம கைபிள்ளைக்கி எத்தன வயசாகுது."


"துரைக்கி இருபத்தியேழு வயசு. ஆனா இப்ப வரைக்கும் பையன் வெட்டியாத்தா இருக்கான். வேலை வெட்டிப் பார்க்காத முதியோர் சங்கத்து தலைவன்."


"அந்த யஷ்வந்துக்கு இருபத்தி நாலு தா. சின்னப் பையனா இருந்தாலும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க போறான். அதுமட்டுமில்ல அவனோட மாசம் சம்பளமே பல கோடி இருக்கும். உத்தியோகம் புருஷ லட்சணங்கிறது சரியாத்தா இருக்கு. சம்பாதிக்கிறவேந்தா கல்யாணம் பண்ணிக்கனும். அது இல்லன்னா."


"ஏய் நிறுத்து. நீ என்ன எந்தம்பிய கொறையா பேசுற மாறித் தெரியுது. அவனுக்கும் கல்யாணம் தா. பேச்சியம்மாள் வெட்ஸ் பிரகாஷ். நல்லா இருக்குள்ள பேர் காமினேஷன். அடுத்த வாரம் மேரேஜ்ஜு. தமிழ்நாட்டுல எத்தன வகையான சாப்பாடு இருக்கோ. அத்தன வகைக்கும் சொல்லியாச்சு. வந்து சாப்பாட்ட முழுங்கிட்டு, எந்தம்பிய வாழ்த்திட்டு போ." கௌதம் சொல்லப் பிரகாஷ் வெகுண்டு விட்டான்.


"ஏண்ணே உனக்கு இப்படியொரு நல்ல எண்ணம். நாந்தா ஜெனிய விரும்புறேன்னு தெரியும்ல. அப்றம் ஏ என்ன பேச்சி கீச்சின்னு வெறுப்பேத்திக்கிட்டே இருக்க." என்க தரன் இவர்களின் விளையாட்டில் பங்கேற்காமல் புன்னகைத்தான். 


"எந்தம்பி வாழ்க்கைய நாந்தான காப்பாத்துனும். அவெ கல்ல கட்டீட்டு கிணத்துல விழப் போறேன்னு சொன்னா. அத பாத்துட்டு எப்படி இருக்குறது. வீடியோ எடுத்து லைக்ஸ் வாங்குற கூட்டத்துக்கு மத்தில. உன்னோட நல்லத மட்டுமே யோசிப்பான்டா இந்த அண்ணே."


"வேடிக்கலாம் பாக்க மாட்டேன் நானே தள்ளி விட்டுடுறேன்னு சொல்றியாண்ணே."


"ச்சச்ச. நீ நல்லா இருக்கனும்னு தா பேச்சிட்ட பேசிருக்கேன். நமக்கு இந்தச் சிட்டி கேர்ள்ஸ்‌ வேணாம்டா. செட்டாகாது." என விளையாட்டாகச் சொல்லப் பிரகாஷ் முகம் சுருங்கியது. 


அவனின் தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்ட‌ கௌதம், "சும்மா டா. விளையாட்டுக்கு. உன்னோட லவ் ஸ்ராங்கா இருந்தா. அதுவே உங்கள சேத்து வைக்கும். ஆமா ஏ ஒருத்தன சமாளிக்கவே உன்னால முடியல. நம்ம வீட்டு லிஸ்டு நீளமாச்சே. எப்படி மத்த ஆளுங்கள சரிக்கட்டுவ."


"அதுக்குதா எனக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்காங்கள்ள." என்று தரனையும் கௌதமையும் காட்ட,


"அதுவும் சரிதா. எல்லார் கிட்டையும் சம்மதம் வாங்கி தம்பி கல்யாணத்த அண்ணே சேர்ல கால்மேல் கால் போட்டு உக்காந்து பாப்பேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. நாம நாளைக்கி காலைலையே பஸ் ஏறிடுவோம்." என்றான் கௌதம். அவனின் கார் கிராமத்திலேயே விட்டுவிட்டு வந்துள்ளான். அதான் பஸ்.


"ஓகேண்ணே. நீ என்னண்ணே சொல்ற. விடியயும் பஸ் ஏறிடுவோம்." என ரிஷியைப் பார்க்க. ரிஷி குறுநகையுடன் மறுத்தான். 


"ண்ணே."


"இது உன்னோட லைஃப். நீ தா தைரியமா நா அந்தப் பொண்ண விரும்புறேன்னு வீட்டுல சொல்லனும். நாங்க இதுல உனக்கு ஆதரவா இருப்போம். ஆனா உதவி பண்ண மாட்டோம். உனக்காக நீ தா பேசனும்." எனக் கௌதமை பார்த்துக் கொண்டே சொன்னேன்.‌


  'அவெ வேலய அவெ பாத்துப்பான். நீ பாசத்த காட்டுறேன்னு சொல்லிப் பஞ்சாயத்த இழுத்து வச்சிடாத.' என்பது போல் இருந்தது அந்தப் பார்வை. 


'இல்லன்னாலும். இவெ பஞ்சாயத்த கூட்டமாட்டானாக்கும்.' என்பது போல் கௌதமும் தரனின் லுக்குக்கு பதில் லுக்கு விட,



"ஒருவேள வீட்டுல ஒத்துக்கலன்னா!. பெருமாள் சித்தப்பா மாறி என்ன வெளில போன்னு தொரத்தி விட்டுப் பிரச்சன பண்ணா நா என்னண்ணே பண்ணுவேன்." பிரகாஷ், தனியாகப் போ என்றதால் வந்த படபடப்பு அவனுக்கு. 


"நீ தா பேசிப் புரிய வக்கனும். கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தனும்னு நினைக்கிறவன் எந்த முடிவையும் அவனா தா எடுக்கனும். அடுத்தவங்கள நம்பி இருக்க கூடாது. மத்தவங்க சொல்றது எல்லாமே Suggestion தா. decision ன நீ தா எடுக்கனும். அதுவும் தனியாத்தா செய்யனும்." எனத் தரன் சொல்ல, 


"எதுக்குண்ணே இந்த வீண் வேல. கட்டாயம் இத வீட்டுல சொல்லித்தா ஆகனுமா?. ஒரேடியா கல்யாணம் பண்ணிட்டு போனா. " 


"திடீர்னு ஒரு பொண்ணு கூட்டீட்டு வந்து இவள தா நா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னா வீட்டுல இருக்குறவங்க மனநில என்னவாகும்னு யோசி." தரன்.


"ம்... அதுவும் கரெக்ட். அதுனால நீ போய்ப் பேசிச் சம்மதம் வாங்கிட்டு வா. உங்கொண்ணே போய்ப் பொண்ண கூட்டீட்டு வருவான்." கௌதம்.


"அந்தக் கல்யாணத்தயாச்சும் நிப்பாடி பொண்ண கூட்டீட்டு வர்றோமா. இல்ல அங்கையும் மாப்பிள்ள மனசு என்னாகும்னு அவன்ட்ட நா தனியா பேசி‌, எங்க லவ்வ புரிய வைக்கனுமா. அப்படி வச்சா அவெ 'ஓகே நீயே வச்சிக்கப்பா'ன்னு விட்டுக் குடுத்துட்டு போய்டுவானா என்ன?." எனச் சந்தேகமாகக் கேட்க இருவரும் சிரித்தனர். 


"அப்ப ஜெனிக்கு நடக்க போற கல்யாணத்த நிப்பாடுறோம் தான?." 


எங்கே இதற்கும் தத்துவம் பேசி வர மறுத்து விடுவார்களோ! என்ற பயம் அவனிடத்தில் இருந்தது. 


"கண்டிப்பா ஜெனிக்கு கல்யாணம் நடக்கும். உங்கூட. அவள கடத்திட்டு வந்தாது உங்கூட சேத்து வப்போம். ஓகே வா." எனச் சொல்லித் தரனை பார்த்தான் கௌதம். அவன் கௌதமிற்கு மொச்சுதலான பார்வை ஒன்றை தந்தான். 


"அண்ணே. பொண்ண தூக்க எங்கிட்ட நல்ல ஐடியா இருக்குண்ணே. ஒரு ஹெலிகாப்டர வாடகைக்கி வாங்கி. ரிசார்ட் நடுவுல நிப்பாட்டுறோம். என்ன நடக்குதுன்னு எல்லாரும் கன்ப்ஃயூஷனா பதறித் தெறிச்சி ஓடுற கேப்ல ஜெனிய தூக்கிட்டு எக்கேப் ஆகிடுறோம். நல்லாருக்காண்ணே ப்ளானு." எனப் பிரகாஷ் ஆர்வமாகக் கேட்க.


"ஒரு ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேர வாடக எவ்ளவுன்னு தெரியுமா உனக்கு?." கௌதம்.


"வாடக கூடத் தர மாட்டியாண்ணே. தம்பி கல்யாணத்துக்கு மொய் எழுதுனதா நினச்சிக்கண்ணே."


"சரிடா... கல்யாணம் சர்ச்ல. எப்படி ஹெலிகாப்டர பார்க் பண்ணுவ."


"ஓ... பார்க்கிங் ப்ராப்ளம். அது சரி இல்லன்னா வேற ஒன்னு இருக்கு. பத்து பதினைந்து புது மாடல் கார்கள எடுத்துட்டு வந்து மாஸ்ஸா மண்டபத்துக்குள்ளையே கார ஓட்டீட்டு போய், துப்பாக்கிய காட்டி பொண்ண கடத்தீட்டு வந்திடுவோம்."


"இருக்குதே நாலு பேரு. எதுக்குடா பத்து பதினைந்து காரு."


"அப்பத் தாண்ணே கெத்தா இருக்கும். கார்ல இருந்து கருப்பு டீசர் போட்ட பவுன்சர்ஸ் இறங்கி வந்தா பாக்குற எல்லாருக்குமே பயம் வரும்ண்ணோ. அந்தப் பயத்த யூஸ் பண்ணி நாம பொண்ண கடத்தீட்டலாம். இது ஓகே தான."


"சரி நா கிளம்புறேன். போய்ப் பேச்சிய பாத்து பேசனும். மண்டபம் புக் பண்ணனும். மால தோரணம்னு நிறைய வேல இருக்கு. இவனுக்குக் கல்யாணம் அந்தப் புள்ள கூடத் தா."


"என்னண்ணே திடீர்ன்னு நீ ஆள மாத்துற?."


"பேச்சியும் வேண்டாமா. அப்ப ஒரு பத்து வர்ஷம் கழிச்சி கல்யாணம் பண்ணா சரியா இருக்கும். அதுவரைக்கும் ஜெனி அடுத்தவனுக்கு பொண்டாட்டியாகாம இருந்தா! உனக்கே கட்டி வக்கிறேன்."


"இப்ப பண்ணா என்னவாம்."


"டேய்! Child marriage பண்றது சட்டப்படி தப்புடா."


"ஜெனிக்கு இருபத்தி ரெண்டு வயசாகுது. அவா மேஜர்." பிரகாஷ் ரோசமாக,


"ஜெனி மேஜர்னு எனக்குத் தெரியும். ஆனா நீ இன்னும் வளராம மைனராவே இருக்கியே டா. ஹெலிகாப்டரு, காருன்னு சின்னப் பையங்கணக்கா யோசிக்கிற உனக்கு ஜெனிய கட்டிவச்சா. கண்டிப்பா அது Child marriage தா. பத்து வர்ஷத்துக்குள்ள மூளைய வளத்துக்க. இல்லன்னா. உனக்குக் கல்யாணங்கிற எண்ணத்த மறந்துடு." எனக் கௌதம் சொல்ல,


"அப்ப என்ன தா பண்ணி ஜெனி கல்யாணத்த நிப்பாட்டுறது." பிரகாஷ்‌. 


"கல்யாணம் நடக்கப்போற இடத்த பாத்துட்டு என்ன பண்ணலாம்னு ப்ளான் போடுவோம்." தரன். 


"குட் ஐடியா. இவ்ளோ நேரம் பேசுனியேண்ணே. உனக்கு இது தோனுச்சா!. அதுக்கு தா எங்க தரன் அண்ணே வேணுங்கிறது." பிரகாஷ் தரன் புகழ,


"அப்ப நீ அவன வச்சே பொண்ணு கடத்திக்க. எனக்கு நிறைய வேல இருக்கு. நா போறேன்." எனக் கடுப்புடன் எழ, பிரகாஷ் இழுத்து அமர வைத்தான். 


"பிரகாஷ்... இன்விடேஷன்?." எனத் தரன் கேட்க,


பிரகாஷ் கையில் இது தான் இல்லையே!. எங்கே? எனத் தேட. 


"எனக்குத் தேவையானத நீங்கச் செஞ்சா!. உங்க கைக்கு இந்த இன்விடேஷன் கிடைக்கும். இல்லன்னா?. ம்... ஹீம்..." என வில்லி ரேஜ்ஜுக்கு போஸ் குடுத்துக் கொண்டு நின்றாள் ஹரிணி. 


உனக்கு என்னம்மா ஆச்சு?.

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


அன்பே 26


அன்பே 28


 

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...