அத்தியாயம்: 28
கையில் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு தன் எதிரில் இருப்பவர்களை மிரட்டவது போல் ஸ்டைல்லாக வந்து சோஃபாவில் கால்மேல் கால் போட்டு ஹரிணி அமர, மற்ற மூவரும் இவளுக்கு என்ன ஆச்சு! என்பது போல் பார்த்தனர்.
"டார்லிங், ஏ வில்லி மாறிப் பேசுற. குழந்த முகம் உன்னது. அத போய் வில்லி கில்லின்னு சொன்னா யாரு நம்புவா. நீ சமத்தா குடுத்துடு அத."
"மாட்டேன். நா இப்ப வில்லிதா. நா சொன்னத நீங்கச் செய்யலன்னா இத விட மோசமா மாறுவேன்."
"இதையே எங்களால பாக்க முடியல. இதுல இன்னும் மோசமாவா." எனக் கௌதம் முணுமுணுக்க ஹரிணி முறைத்தாள்.
"ஹரிணி, நீ கூடவா என்னோட லைஃப்ல விளையாடப் பாக்குறியா." பிரகாஷ்.
"எனக்கு உன்னோட லைஃப்ல விளையாடுறதுல இன்ட்ரெஸ்ட் இல்ல. எனக்குத் தேவையானத உங்கண்ணனுங்கள செய்யச் சொல்லு. நா தந்திடுறேன். சிம்பிள். இல்லன்னா நீ ஜெனிய பார்க்கவோ, பேசவோ முடியாதுங்கிறப்ப, எப்படி கல்யாணம் பண்ணிப்ப?. சொல்லு." என்றாள் மிரட்டல் தோணியில்.
"ச்ச... நமக்கு இந்த வில்லி கெட்டப் கூட நல்லாத்தா இருக்கு. என்ன சொல்ற பிரகாஷ். ஜெனி வேணுமா. இல்ல." ஹரிணி கூலாகச் சொல்ல, ரிஷி அவளை அழுத்தமாகப் பார்த்தான்.
"கிட், என்னால முடியாதுன்னு நா அப்பவே சொல்டேன். நீ வீணா பிடிவாதம் பிடிக்கிற." தரன்.
"ம்ச்... நமக்கு ஒன்னு வேணும்னா பிடிவாதம் பிடிக்கிறதுல தப்பில்ல. என்னோட ஃப்யூச்சரே இதுல தா இருக்குங்கிறப்ப. தப்பு சரின்னு நா எதையும் ஆராய விரும்பல. உங்களுக்கு இந்த இன்விடேஷன் வேணும்னா நா சொன்னது நடக்கனும். உங்க தம்பி மேரேஜ்ஜ பத்தி உங்களுக்கு அக்கற இருக்கா இல்லையான்னு நா பாக்குறேன்."
"டார்லிங், இது வெட்டிச் சீனு. நீ குடுக்கலன்னா என்ன இப்ப. நாங்க ஜெனிக்கி ஃபோன் போட்டுக் கேட்டுக்கிறோம். தம்பி போடுறா ஃபோன."
பிரகாஷ் தன் மொபைலை எடுத்து ஜெனிக்கு கால் பண்ண. அது செல்லவே இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, அப்போதும் அதே நிலை தான். சரி கௌதம் ஃபோனையாவது எடுப்பாள் என்று அவனின் ஃபோனிலிருந்து முயற்சிக்க, ம்ஹிம்... ரிங் போகவே இல்லை. ஸ்சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாக ஒரு பெண்ணின் பதிவுக் குரல் கேட்டது.
அவர்களின் முயற்சியை நக்கலான ஒரு சிரிப்புடன் பார்த்த ஹரிணி. தன் மொபைலை எடுத்து முயற்சிக்க, அந்தப் பக்கம் இருந்து ஜெனியின் குரல் கேட்டது. சில நொடிகள் வேலை நிமித்தமாக லவுடு ஸ்பீக்கரில் பேசி விட்டு வைத்து விட்டாள் ஹரிணி. எப்படியெனப் பிரகாஷ் முழிக்க.
"நாந்தா சொன்னேனே. என்னோட தயவு இல்லாம. ஜெனி எங்க இருக்கானே உங்களால கண்டு பிடிக்க முடியாது."
"ஏ! கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்ற." கௌதம்.
"அவள இன்னைக்கி நைட்ல இருந்து அவளோட மாமா ஹவுஸ் அரஸ்ட் பண்ணி வச்சிருப்பான். நோ மொபைல். நோ டீவி. நோ கம்யூனிக்கேஷன். பொறில மாட்டுன எலி மாறி ஒரு ரூம் குள்ள போட்டு அவா அடஞ்சி கிடப்பா. யாரையுமே பாக்க முடியாது. நீ அவள பாக்கனும்னா மணமேடைல மட்டும் தா முடியும். அந்த மேட எங்கருக்குன்னு உனக்கு என்ன தவிர வேற யார் சொல்லுவா. ம்..."
"ஜெனிக்கி எதுவும் ஆகிடாதுல்ல. அவா நல்லா தான இருப்பா. எனக்கு இப்பவே அவள பாக்கனும்ண்ணே. வாண்ணே." என இரு அண்ணன்களையும் பதறிப்போய் துரிதப்படுத்தினான். ஏனென்றால் அவளை விடுதியில் இறக்கி விடும்போது டாட்டா நிறுவனத்தின் பெரிய அளவிலான கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. உள்ளே ஒரு பெண்ணும் சில ஆண்களும் இருந்தனர். ஒவ்வொருவரும் தடிமாடு சைஸில் இருப்பர்.
ஜெனி இறங்கி விடுதிக்குள் சொல்லாமல் பிரகாஷை திரும்பித் திரும்பிப் பார்த்த படி காரில் ஏறிச் சென்றாள். அவளின் முகம் பயத்தில் வெளிறிப்போய் இருந்தது. அவளின் மாமா தான் அழைத்துச் சென்றதோ? ஜெனியை அவன் அடித்துத் துன்புறுத்துவானோ? என்ற கவலையில் படபடத்தான் பிரகாஷ்.
"நீ கவலப்படாத பிரகாஷ். அவனுங்களுக்கு அவளோட உடம்பு தேவ. சோ அத எந்தக் காரணத்துனாலையும் காயப்படுத்த மாட்டானுங்க. பீ கூல்."
"கல்யாணம் தான நடக்கப்போது. நீ என்னன்னா என்னென்னமோ சொல்ற." கௌதம்.
"கல்யாணம் எல்லாம் கண் துடைப்பு. அவா தா கல்யாணம் பண்ணாத்தா கூட இருப்பேன்னு சொல்லிட்டா. அதுக்காக ஏற்பாடு பண்ண போலி மேரேஜ்.
சொல்றத எல்லாம் எதித்து பேசாம. ரோபோ மாறி எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி, ஐஞ்சிக்கும் பத்துக்கும் ரேம்ப் வாக் பண்ற அழகான ஜீரோ சைஸ் கேர்ள்ஸ் கிடைக்கிறது இப்ப ரேர் ஆகிடுச்சி. இப்பல்லாம் ஜீரோ சைஸ் பொண்ணுங்களுக்கு எவ்ளோ காசு குடுத்தாலும் பத்துறது இல்ல. கம்மியா வாங்குற பொண்ணுங்களோட சைஸ் சரியா இருக்காது. ஜெனிக்கு மாடலிங்க ஃபீல்ல பெரியாளாகுறதுக்குக்கான உடலமைப்பு இருக்கு. அதுமட்டுமல்லாம அவளுக்கு என்ன ஆனாலும் கேக்க யாராமே கிடையாது.
யஷ்வந்த் கிட்ட இந்த மாறி யாரும் கேள்வி கேக்க முடியாத நிறைய பொண்ணுங்க இருக்காங்க. ஆனா பழைய ஆள வச்சி மட்டுமே கடைய விரிச்சி காலத்த ஓட்டிட முடியாதுல்ல. அவனோட கஸ்டமருக்கு புதுசு புதுசா ஆள் வேணும். அதுவும் பிரஷ்ஷா.
ஜெனியோட கெட்ட நேரம். அவங்கண்ணுல மாட்டிக்கிட்டா. அவள ஃபஸ்ட் மாடலிங் பண்ண சொல்லி தா கேட்டான். அவா முடியாதுன்னு சொல்லிட்டா. அவனோட கண்டிஷன் எதுவுமே அவளுக்குப் பிடிக்கல. அதா அவளுக்குப் பணத்த அள்ளி அள்ளிக் குடுத்து கார்னர் பண்ணி, கல்யாணங்கிற பேர்ல அவனோட கண்ட்ரோல்ல ஜெனிய வச்சி சம்பாதிக்க நினைக்கிறான். இடியட்... அவனோட பார்வைல virgin girls க்கு மதிப்பு ஜாஸ்தி." என்றவளின் முகத்தில் மட்டுமல்ல மற்றவர்களின் முகத்திலும் அருவருப்பும் கோபமும் இருந்தது. பலத்த மௌனம் நிலவியது அங்கு.
"நீ ஹெலிகாப்டர் நிப்பாட்டுறதுக்கோ, இல்ல கார பார்க் பன்றதுக்கோ அங்க இடமே இருக்காது. ஏன்னா இவா ஒருத்திக்காக மட்டும் தா இன்விடேஷனே பிரிண்ட் பண்ணான். சொல்லப்போனா கல்யாணத்துல இவளோட அக்கா மாமான்னு ரெண்டு பேரு. யஷ்வந்த் அவனோட பீஏ ன்னு ரெண்டு பேரு மட்டும் தா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்." என்றவளுக்கும் ஜெனி இந்தப் போலித் திருமணத்திற்கு சம்மதம் சொன்னது பிடிக்கவில்லை.
'ஒரு கல்யாணம் பண்றதுக்குள்ள ஓராயிரம் பிரச்சனைகள சந்திக்க வேண்டிதா இருக்கே. ச்ச... அவனின் மைண்ட் வாய்ஸ். பாவம் பிரகாஷ். சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வருவது போல் தானும் ஜெனி ஜெனியெனப் புலம்பிக் கொண்டே இருக்கும் நிலை வந்துவிடுமோ எனப் பயந்து விட்டான்.
"நீ கவலப்படாத பிரகாஷு. உனக்குத் தா ரெண்டு அண்ணனுங்க இருக்காங்களே. பொண்ண தூக்கிட்டு வர ஒருத்தர். காசு செலவழிச்சி கல்யாணம் பண்ணி வைக்க இன்னொருத்தர். பொண்ணு எங்கருக்குன்னு சொல்ல நா. இப்படி உனக்கு உதவி பண்ண ஒரு கூட்டமே இருக்கும்போது. நீ ஏ வருத்தபடனும்?. நா சொன்னத மட்டும் உன்னோட அண்ணுங்க செஞ்சாங்கன்னா! அடுத்த வாரம் நீ ஃபேமிலி மேன் தா. வாழ்த்துக்கள்." எனப் பிரகாஷின் கரம்பற்றிக் குளுக்கியவளை நக்கலாகப் பார்த்துச் சிரித்தான் தரன்.
'நீ கலர் கலரா ரீல் ஓட்டுனாலும். அதை எல்லாம் எங்க தியேட்டர்ல படமா ஓட்ட முடியாது. நாங்க கிழிச்சி எரிஞ்சிடுவோம். அட்டு பிளாப்பு உன்னோட படம்.' என்பது போல் இருந்தது அந்தச் சிரிப்பு.
"எங்கூட காலைல கோவாக்கு வரச்சொல்லு. ஒரு நாள் தா. அதுவும் ஒரு மணி நேரம் போதும். ஸ்டைலா ஒரு ரேம்ப் வாக். அப்றம் நிறையா ஃபோட்டோஸ்க்கு போஸ். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல பிரம்மாண்டமான நைட் பார்டி. அது மட்டும் தா. அப்றம் ஆற அமர ஊர் சுத்தி பாத்துட்டு. ஜெனிய தூக்க ப்ளான் போடு. அவள கூட்டீட்டே நம்ம ஊருக்குத் திரும்பிடலாம். ஓகே வா." எனக் கௌதம் மற்றும் தரனை பார்த்துக் கேக்க,
"ஓகே இல்ல. உனக்குத் தா என்னோட கம்பேனில இருந்து ரெண்டு பசங்கள குடுத்தேனே. போதாதா. வேணும்னா இன்னும் நாலு பேர கூட எடுத்துக்க. என்ன விட்டுடு மா." கௌதம் சொல்ல அவனை முறைத்தாள் ஹரிணி.
"நா சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அப்றம் உங்க இஷ்டம். உங்க தம்பி வாழ்க்கை உங்க கைல தா இருக்கு." ஹரிணி சென்டிமென்ட்டாகப் பேச,
"கிட், இப்பையும் என்னால நீ சொல்றத செய்ய முடியாது. உன்னோட உதவியே இல்லாம அவனுக்கு எப்படி மேரேஜ் பண்ணி வைக்கனும்னு எனக்குத் தெரியும். டேய், நீ காலைல பஸ்ஸ ஏறி ஊருக்குப் போய் வீட்டுல ஜெனிய பத்தி சொல்லிட்டு ரெண்டு நாள்ல வா." எனத் தன் மனைவியிடம் ஆரம்பித்துத் தம்பியிடம் முடித்தவன் எழுந்து சென்றான்.
படுக்கையறையின் உள்ளே செல்லும் முன் தன் மனைவியைப் பார்த்து."கிட, நீ எடுத்த இந்த வில்லி அவதாரத்துக்குப் பயந்தா வரல. இன்னும் நல்லா டிரைனிங் எடுத்துட்டு வந்து அடுத்த மொற பயப்படுற மாறி மிரட்டு. பெட்டர் லக் நெக்ஸ்ட் டயம்." என நக்கலாகக் கூறி ஹரிணியை பார்த்துக் கண் சிமிட்டிச் சென்றான் ரிஷி தரன்.
"இவனுக்கு மேனஸ் னா என்னனு யாருமே சொல்லித் தரலயா.
இங்க எல்லாரும் மீட்டிங்க போட்டு ஒரு விசயத்த பத்தி டிப்பா பேசிட்டு இருக்கும்போது. மரியாதையே இல்லாம எழுந்து போறான். இடியட்." எனக் கடுப்புடன் கத்த,
"கரெக்ட்டு... நீ அவனுக்கு மேனஸ்னா என்னனு க்ளாஸ் எடுத்துட்டு கோவாக்கு கூட்டீட்டு போ. நீ வாடாத் தம்பி நாம ஊருக்குப் போவோம். மை வைஃபா பாத்து ஐஞ்சும நேரம் ஆகப்போது. எனக்காகக் காத்துட்டு இப்பா. பை டார்லிங்." கௌதம் சொல்லி நகரப் பார்க்க,
"போறதுதா போற உந்தம்பிய எதாவது பாலத்து மேல இருந்து தண்ணியே இல்லாத ஆறா பாத்து தள்ளி விட்டுடு போ. அப்படி இல்லனா. உங்கண்ணே வயலுக்கு வச்சிருக்குற எலி மருந்தையோ பூச்சி மருந்தையோ எடுத்து அவனோட வாயில் ஊத்திட்டு போ. அவனா தற்கொல பண்ணி சாகுறதுக்கு பதிலா நீயே அவன கொன்னுடு."
"நா எதுக்கு தற்கொலை பண்ணிக்கனும்." பிரகாஷ்.
"நீ தா ஜெனிய அவ்ளோ சின்ஸியரா லவ் பண்றியேப்பா. அவா இல்லாம உன்னலா இருக்க முடியாதுல்ல. அவள அடுத்தவெ பொண்டாட்டியா உன்னால எப்படி பாக்க முடியும். சொல்லு. இதெல்லாத்தையும் பாக்குறத விட. நீ ப்ரேக் படிக்காத குப்ப லாரியாகப் பாத்து குறுக்க புகுந்துடு. காதலிய கல்யாணம் பண்ணிக்க முடியாதவெ தற்கொலை பண்ணிக்கிறது தான உலக வழக்கம்."
"எங்களுக்கு அந்த வழக்கம் கிடையாது. நாங்க வேற உலகத்து சேந்தவங்க. நாங்கல்லாம் அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு போய் கிஃப்ட் குடுத்து, பந்தில மொத ஆளா உக்காந்து சாப்டுட்டு, எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடி வாழ்த்திட்டு வருவோம். நாங்க நல்ல பசங்க. என்னடா தம்பி. உனக்குப் பேச்சி ஓக்கே தான…"
"தெரிஞ்சி போச்சிண்ணே. நல்லா தெரிஞ்சி போச்சு. நீங்க எல்லாரும் சேந்து எனக்காக ஒரு குழி தோண்டி வச்சிருக்கிங்க. அதுல என்ன புதைக்குறதா இல்ல நாலு கட்டைய போட்டு எரிக்கிறதான்னு கலந்து பேசிட்டு இருக்கிங்க. எது எப்படியோ. சாகனும்னு முடிவு பண்ணதுக்கு அப்றம் பாய்ஸன் குடிச்சா என்ன.ஹரிணி வைக்கிற பாயசத்த குடிச்சா என்ன." பிரகாஷ் புலம்ப,
"ரெண்டுமே ஒன்னுதா. என்ன கேட்டா எலி மருந்து கூட லேட்டாத்தா உயிர எடுக்கும். ஹரிணி செய்ற பாயாசத்த குடிச்சா ரெண்டே செக்கேண்ட்ல மார் ஹையா தா." கௌதம் கேலியாகச் சொல்ல, அவர்களை முறைத்தபடி சோஃபிலிருந்து எழுந்து சென்றாள். 'இதுக்கு மேல இவனுங்க கிட்ட பேச முடியாது.' எனத் திட்டிக் கொண்டே,
"சரி... சரி... கோய்ச்சிக்காத டார்லிங். உனக்காக நா கோவா வரச் சம்மதிக்கிறேன்." என்ற உடன் பூவாய் மலர்ந்தது அவளின் முகம்.
"ஆனா நா ஃபிளைட்ல தா வருவேன். அதுக்காக என்னோட வைஃப் கிட்ட நீ தா பெர்மிஷன் வாங்கி தரனும். ஓகே வா." எனக் கேட்ட, ஹரிணி புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
"தேங்க்ஸ் கௌதம். இந்து கிட்ட நா பேசுறேன்."
"அப்பச் சரி. நானும் பிளைட்ல இருக்குற ஏர் ஹவுஸர்ஸ்ட்ட பேசி, நாலு கடலைய வருத்துட்டே வருவேன். ரொம்ப நாள் ஆச்சி. விமானத்துல பறந்து." என்றான் கௌதம் ஏக்கமாக.
"ஆமா, இவரு ஓகே சொல்லியாச்சு. ஆனா தரன் அண்ணே ஒத்துக்கலையே. இன்னொருத்தருக்கு என்ன பண்ண போற." பிரகாஷ், பின்
"நீ சரின்னு சொன்னா. நானே மேடைல ஏறிப் பூன நட நடக்குறேனே. எனக்கு நீ பேமெண்ட் எல்லாம் தர வேணாம். அதுக்கு பதில் கோவாவ சுத்தி பாக்கலாம்னு இருக்கேன். உன்னோட செலவுல."
"டேய், அந்த ஷோ மனுஷங்களுக்கு. கரடிகளுக்கு இல்ல. நீ வரனும்னா போய்த் தாடிய சேவ் பண்ணீட்டு ஹெர் கட் பண்ணீட்டு வரனும்." கௌதம்
"நோ... நோ... என்னோட தாடி மேல மட்டும் நா கத்தி படவே விடமாட்டேன். நா தமிழ்நாட்டுக்கு ஒரு ராக்கி பாயா மாறி நல்லது செய்யலாம்னு முடிவெடுத்து முடி வளக்குறேன். அதுனால ஹர் கட்டுக்கோ சேவிங்கோ வாய்ப்பில்ல."
"நீ எப்படி வந்தாலும் உன்ன நா ஸ்டேஜ் ஏத்த மாட்டேன்." ஹரிணி.
"ஏ." கோரஸ்ஸாக.
"ஏன்னா என்னோட மாடலா என்னோட பாவாவத்தா நா செலெக்ட் பண்ணிருக்கேன். அதுனால உன்னோட சேவ தற்போதைக்கி தேவயில்ல." என ஹரிணி சொல்ல இருவரும் சிரித்தனர்.
'அவன் எப்படி வருவான். ஹாஹ்ஹாஹ்ஹா.' என்று தான்.
"அளவா சிரிச்சுக்கோங்க. ஏன்னா சிரிச்சி சிரிச்சி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணக் கூடாது. என்னோட பாவா எங்கூட கைய கோர்த்துட்டு ரேம்ப் வாக் பண்ணும்போது கைத்தட்டி விசிலடிச்சி ரசிக்க எனர்ஜி வேணும்ல. அதுக்கு தா சொல்றேன்."
"டார்லிங், கண்டிப்பா உன்னோட புருஷனும் வருவானா என்ன." எனக் கௌதம் ஆர்வமுடன் கேட்க. ஹரிணி ஆம் எனத் தலையசைத்தாள்.
"ஐ ஆம் வெய்ட்டிங்." என்றான் கௌதம்.
"எதுக்குண்ணே."
"நாங்க எல்கேஜி யூகேஜி படிக்கிறப்ப ஸ்கூல்ல வைக்கிற ஃபேன்ஷி டிரெஸ் காம்படீஷன்ல அவெ கலந்துக்கவே மாட்டான். கேட்டா முஞ்சில கெவியா பவுடரு க்ரீமுன்னு அப்புறது பிடிக்காதும்பான். இப்ப... ஹாஹ்ஹா... பிளிசிங் பொடி மாறிக் கண்ட கண்ட பவுடரு க்ரீமுன்னு தடவீட்டு அவெ நடந்து வர்ற அழக நா பாக்கத்தா ஐ ஆம் வெய்டிங்." என மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளும் சிறுவனாகத் தரனை கற்பனை செய்து மகிழ்ந்தான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..