முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 29


 

அத்தியாயம்: 29

 

கோவா.‌..


அங்கிருக்கும் ஒரு பிரபல நட்சத்திர விடுதியின் பார்ட்டி ஹால் அது.‌


சிவப்பு கம்பளம் விரித்து, பலூன்களை ஊதி அரை வட்ட வடிவில் தோரணம்போல் கட்டி, இரவைப் பகலாக்க நினைத்து வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த இடத்தில் நம்மை வரவேற்க மூன்றாவது கண்ணாகக் கேமராக்களும் கேமரா மேன்கள் பலரும் இருந்தனர். அவர்களின் கேமராவிலிருந்து வரும் flash ஒளி. அந்த இடத்தையை வைரம்போல் மின்னச் செய்தது. 


வெளிநாட்டிலிருந்து பல முன்னணி டிசைனர்கள், சமூகத்தில் பணமும் மதிப்பும் மிக்க மனிதர்கள் பலர், பல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஃபேஷன் இன்டெஸ்ட்ரீசிலிருந்து எனப் பலரின் வருகையால் அந்த இடம் துப்பாக்கி ஏந்திய போலிஸின் பாதுக்காப்பில் இருந்தது. முக்கியமாக மாநில ஜவுளித்துறை அமைச்சர் வர உள்ளதால் வரவேற்பும் பலமாக இருந்தது. பாதுகாப்பும் பலமாக இருக்கும் படி ஏற்பாட்டாளர்கள் பார்த்துக் கொண்டனர். 


அதிகாலையிலேயே வந்திறங்கி விட்டாள் ஹரிணி. நிகழ்ச்சிக்கு அவளுக்கும் அவளின் குழுவிற்கும் என ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்துத் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு நிகழ்ச்சிக்காக நண்பகலிலேயே வந்து விட்டாள். மேடை ஏறப்போகும் மாடல்ஸ்களுக்கு உடை, மேக்கப் போட்டு எல்லாம் தயாராக உள்ளதா எனப் பார்த்தபடியும். அவர்களை உற்சாகப்படுத்தியபடியும் இருந்தாள் ஹரிணி. எல்லாம் ரெடி அவளின் குழுவிற்கு தரப்பட்ட நேரம் வரும் வரை அவள் காத்திருக்க வேண்டும். 


"ஹரிணி, மிஸ்ஸஸ் குப்தா உன்ன பாக்கனும்னு சொன்னாங்க. கூட்டீட்டு வரவா." மீரா. அவளின் பார்ட்னர்களில் ஒருவர்.‌


"நோ... இப்ப முடியாது. இந்த ஷோ முடியுற வரைக்கும் நா யாரையும் பாக்க விரும்பல. என்னோட ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா?. எனக்கு இது செட் ஆகுற ‌மாறித் தெரியல."


விளக்குகளின் ஒளியில் பளபளத்த அந்த அலங்கார நிலைக்கண்ணாடியின் முன் நின்று தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள் அவள். பார்க்கப் பரபரப்பாக இருப்பது போல் தெரிகிறது.‌ ஏனென்றால் அவளும் மேடை ஏறிப் பூனை நடை நடக்க உள்ளாள். 


கடைசி நொடி கூட உறுதி இல்லை என்பது போல் அவள் ஏற்பாடு செய்த இரு மாடல்கள் வரவில்லை. எனவே மீராவும் அவளும் களம் இறங்க உள்ளனர். மீராவுக்கு இது ஒன்றும் புதிதில்லை. பல முறை ஏறிய அனுபவம் உண்டு. ஆனால் ஹரிணிக்கு புதிது. அவளும் கௌதமை போல் தான். அலங்கார பொம்மைகளால நடந்து வருவதும், அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும் விதமாக விசித்திரமான சிகை அலங்காரத்தில். வித்தியாசமான உடைகளை அணிவதும் அவளுக்குப் பிடிக்காது. டிசைன் செய்வது மட்டுமே அவளின் வேலை. மற்றபடி அணிந்து அழகு பார்க்கமாட்டாள். ஆனால் இப்போது வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. 


நாவல் பழத்தை ஒத்த நிறத்தில் தரையை தட்டும் அளவுக்கு நீளக் கவுன். சில இடங்களின் உடலை இறுக்கியும், சில இடத்தில் அதிகமாகவும் துணி குடுத்து தைக்கப்பட்டிருந்தது. ஒற்றை கையை மட்டும் முழுதாக மூடியிருந்தாள். விளக்கொளியில் மின்னும் வகையில் ஆங்காங்கே சிறு சிறு கற்கள் பதிக்கப்பட்டிருந்த‌ அந்த உடையில் பல வேலைப்பாடுகள் கொடுத்து அழகாக்கி‌ இருந்தனர். காதில் நீளமாக அவளின் உடையின் நிறத்தில் இறகுபோல் தொங்கிய காதணி. கழுத்திலும் கையிலும் எதுவும் அணியவில்லை.‌ முகத்தில் அதீத மேக்கப். தூரத்தில் வருபவர்களுக்குத் தெரியும் வண்ணம் இருந்தது அவளின் உதட்டின் சாயம், கண்களில் மை இரண்டும் அடர்த்தியாக இருந்தன.


அவளின் சிகையை தூக்கி கொண்டையிடுவதா, இல்லை கட்டாது தோளில் படர விடுவதா எனக் குழப்பமாக உள்ளாள். மொத்தத்தில் அவளின் அழகை இந்த ஆடை அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது. அலங்காரம் முடித்து விட்டுப் பார்த்தவளுக்கு திருப்தி மட்டும் முகத்தில் ஏற்படவில்லை. எதுவோ ஒன்று குறைவது போல் இருந்தது. 


"டார்லிங்! பிளிச்சிங் பொடிய மண்டைல கொட்டிடியா என்ன!. தலையெல்லாம் வேற கலர்ல முடி மொளச்சிருக்கு." கௌதம். அவனுக்குச் சர்வானி போல் ஒரு உடை குடுத்திருந்தாள் ஹரிணி. 


அவனைத் தன் மையிட்ட விழிகளை உருட்டி முறைத்தாள் ஹரிணி. ஏனெனில் அவள் முடிக்கு வைல்ட் நிற ஹேர் கலர் கொடுத்திருந்தாள்.‌ பார்க்க வேற்று கிரக வாசிகள்போல் இருந்தது கௌதமிற்கு. அதான் கேலி செய்கிறான். 


"இல்ல. எம்பொண்டாட்டி துணி துவைக்கும்போது நா போட்டிருந்த சட்ட கலர் மாறிடுச்சு. அப்பச் சொன்னா பிளிச்சிங் பொடி பட்டா கலர் மாறும்னு. உனக்கும் தல வெளுப்பா இருக்கா அதா சந்தேகம் வந்துடுச்சு." என்றவனுக்கு பதில் தான் கிடைக்கவில்லை. 


"ஆமா! இவா தா மண்டைல காரக் கொலம்ப ஊத்திக்கிட்டா.‌ உனக்கு என்னம்மா வந்துச்சி மீரா. வீடு தொடைக்கிற மாஃப்ப மொட்ட மாடில காய வைக்காம தலைல கவுட்டீட்டு வந்திருக்க." என மீராவை கேலி செய்தான். அவள் தன் குழலில் நூறு ஜடைகளுக்கு மேல் பின்னியிருந்ததால், அது சிறிய பாம்புகள் தொங்குவது போல் இருந்தன. 


"ஹேய்! தி இஸ் ஃபேஷன்."


"ஆமா இதெல்லாத்தையும் பிரிச்சி சிக்கு எடுக்கும்போது முடின்னு ஒன்னு உன்னோட தலைல இருக்குமா என்ன!. நா போய் உனக்கு விக் வாங்கிட்டு வர்றேன். அப்பதா அழகா இருப்ப."


"கௌதம், இந்த மாறி எதாவது வித்தியாசமா பண்ணாத்தா மத்தவங்களோட கவனம் எங்க பக்கம் திரும்பும். அடுத்தடுத்த வாய்ப்பும் கிடைக்கும். உனக்குக் கூட ஸ்பைக் வைக்கலாமே. எங்க அந்த ஃப்யூடீஷன்." என அவனின் தலையை அலங்கோலமாக்க வர,


"எனக்கு இது போதும். உங்கள மாறி நாஞ்செவ்வா கிரகத்துல இருந்து இறங்கி வரல. நா பூமில பிறந்து வளந்தவே. யாரும் என்ன திரும்பிப் பாக்கவே வேண்டாம். நா இருக்குற இடம் தெரியாம இருந்துக்கிறேன்." எனக் கலைந்திருந்த தன் முடியை விரல்களால் கோதினான்.


"ரொம்ப பண்ணாத. அப்றம் நடக்கும்போது கால தட்டி விட்டுடுவேன். நீ கீழ விழுந்துடுவ. பாத்துக்க."


"நா எதுக்கு உங்கூட நடக்கும். தனியாத்தா வாக் பண்ண போறேன்."


"உனக்குத் தெரியாதா?. நீயும் நானும் ஜோடியா, கைய பிடிச்சிட்டுல்ல நடக்க போறோம். நீ சொல்லலையா ஹரிணி." என ஹரிணியை தங்கள் பேச்சில் இழுக்க, அவள் அங்கிருந்த பொம்மை அணிந்திருந்த கோர்ட்டை உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள். 


"என்னாலலாம் உங்கூட வர முடியாது. நீயே பீரிகேஜி பாப்பா மாறிப் பாவாடையை தூக்கி கிட்டு நடப்ப. உங்கூட வந்தா எனக்குப் பாதுக்காப்பு யாரு தருவா?."


"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு மணி நேரத்துக்கு உனக்கு நாந்தா ஜோடி. வா செல்ஃபி எடுத்து உம்பொண்டாட்டிக்கி அனுப்பலாம்." என அவனுடன் புகைப்படம் எடுக்க. 'விட்டுடும்மா என்ன'ன்னு தப்பித்து விட்டான் கௌதம். சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தவன். ஹரிணி இன்னும் அதே இடத்தில் நிற்பது தெரிந்தது. 


அசையாது நின்றிருந்த ஹரிணியின் அருகில் சென்றவன், அவள் தரனை எதிர்பாத்து காத்திருக்கிறாளென நினைத்து, "நீ அவன நம்பி ஏமாறுறத நா விரும்பல டார்லிங். ஏன்னா அவெ இதுவரைக்கும் தனக்கு பிடிக்காதத யார் சொன்னாலும் செஞ்சது இல்ல. பிடிவாதம் காரன். இன்னும் பத்து நிமிஷம் தா இருக்கு அதுக்குள்ள எப்படி வருவான். சொல்லு. வேற யாரையாது கூப்பிடலாமா.?" எனக் கேக்க.


"அவசியம் இல்ல கௌதம். என்னோட பாவா வருவான். எங்கூட ரேம்ப்ல வாக் பண்ணுவான். அதுவும் இந்தக் கோர்ட்ட போட்டுட்டு." என்றாள் ரசனையான. 


"எத வச்சி நீ அவன இந்தளவுக்கு கண்முடித்தனமா நம்புறன்னு எனக்குத் தெரியவே இல்ல டார்லிங்." என்க, அவள் புன்னகைத்தாள். 


"ரிஷி அடிக்கடி ஒன்னு சொல்லுவான். நீ ஒருத்தன நம்பனுமான்னு முடிவு பண்ண யோசி. ஆனா நம்பிக்க வந்ததுக்கு அப்றம் யோசிக்கவே கூடாதுன்னு. நா பாத்த வரைக்கும் பாவா அவன நம்புன யாரையுமே ஏமாத்துனது இல்ல. லேட்டானாலும் அவெ செய்ய வேண்டியத கரெக்ட்டா செஞ்சிடுவான். எனக்கு நம்பிக்க இருக்கு. அதுவும் இந்த மாறி விசயத்துல அவன நா சந்தேகபடவே மாட்டேன்." என்றபோது கௌதமின் முகம் வாடியது.


'ரிஷி தன்னை மட்டும் ஏமாற்றி விட்டான்.' என்று ஒரு மனம் நினைத்தாலும், மற்றொரு மனம் 'அவனின் வார்த்தைகளை நம்பி, அதற்கு நீ செவி சாய்த்து பொறுமையாக இருந்திருக்கலாம்.' என்றது. ஏனோ அவனுக்கு ரிஷியை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 


அங்குத் தொங்கிக் கொண்டிருக்கும் ஆடை அவனுக்காக ஹரிணி வடிவமைத்தது. கௌதமிற்கும் ரிஷிக்கும் ஒரே நிறம் வேறு. ரிஷியின் கம்பீரமான நடையை காண மனம் நினைத்தது. ஆனாலும்,


"இவ்வளோ நேரம் ஆச்சி இனிமே அவெ வருவான்னு உக்காந்திருந்தா! நீ இலவு காத்த கிளி தா போ." 


"எனக்குத் தெரியும். போடா... நானே அப்ஷெட்டா இருக்கேன்."


"ஏ‌ என்னாச்சி டார்லிங்.‌" என்றவனுக்கு பதில் தரச் சில நிமிடங்கள் யோசித்தாள் பின். 


"ம்ஹிம்.‌.. ஒரு பொண்ணு தனக்குன்னு ஒரு ஃபில்ட்ட உருவாக்கி அதுல முன்னேறி வெற்றி அடையுறதுக்கு எத்தன தடைய தாண்டி வரவேண்டி இருக்கு. 


முன்னோறிட்டோம்னு சொல்ற இந்த நவீன நாகரீக உலகத்துல ஆணுக்குக் கிடைக்கிற அதே சுதந்திரம் பெண்ணுக்கும் கிடைக்கிதா என்ன? படிப்பு, வேல, சம்பாத்தியம், குடும்பம், குழந்தன்னு ஒரு பொண்ணுக்கு இருக்குற எல்லா கடமையும் ஆணுக்கும் இருக்கு. ஏ பொண்ணுங்க மட்டும் அவங்களோட கடமைய பொறுப்பா செஞ்சே ஆகனும்.‌ 


அவங்க வீட்ட விட்டு வெளில வரனும்னா முதல்ல குடும்பத்துக்கிட்ட பார்மிஷன் வாங்கனும். அவங்களோட பயத்த போக்கி வீட்ட விட்டு வெளியவே வரமுடியாத நிறைய பொண்ணுங்க இன்னும் இந்த உலகத்துல இருக்கத்தா செய்றாங்க. அப்படியே வெளிய வந்தாலும் சில ஆண் ஆதிக்கவாதிகளால மறுபடியும் உள்ளயே போய்ப் பூட்டிக்கிறாங்க. 


படிக்காத பொண்ணுங்க தா அவங்களோட கனவ மறைச்சிட்டு கஷ்டத்த ஃபேஸ் பண்றாங்கன்னு பாத்தா. படிச்ச சிலரோட நிலம அதவிட மோசமா இருக்கு. ஒரு பொண்ணுன்னா குழந்த பொத்துக்கிட்டு. வீட்டு வேல செஞ்சி, ஒழுங்கா அவங்க குடும்பத்த மட்டும் கவனிச்சிக்கிட்டு, சமயக்கட்ட விட்டு வரவே கூடாதுன்னு யாரு எழுதி வச்சா." என உணர்ச்சி பொங்க பேச,


"உனக்கும் சமயக்கட்டுக்கும் தா தூரம் ஆச்சே. உம்புருஷன் உன்ன சமைக்க சொன்னானா என்ன?. ஏ‌ விஷம் வாங்க காசில்லை யா அவன்ட்ட." எனக் கேலி செய்ய அவனை முறைத்தாள் ஹரிணி.‌


"கூல் டார்லிங். உன்ன யாரோ எதுவோ சொல்லிருக்காய்ங்கன்னு நல்லா தெரியுது.‌ அதுனால தா நீ திடீர்னு பெண் சுதந்திரத்தப் பத்தி பேசிட்டு இருக்க. நீ ஸ்டேஜ் ஏறக் கூடாதுன்னு ரிஷி எதுவும் சொன்னானா என்ன." என்றவன் பின்,


"இருக்காதே.‌ சுதாக்கு இப்பவே அவனோட கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனில வேல போட்டுக் களத்துல இறக்கி விட்டுச் சம்பாதிக்க வைக்கிறவன். ஏ சும்மா இருக்க நினைக்கிற இந்துவுக்கே பூந்தோட்டம் வச்சிக்குடுத்து வருமானம் வர்றதுக்கு வழி செஞ்சவே. உன்ன எப்படி வேண்டாம்னு சொல்வான்." என்றான் கௌதம். அவனுக்குப் புன்னகையை தந்தவளின் நினைவுகள் மாலை வேளையை நோக்கிச் சென்றது.


தன் மகனுடன் ஃபோனில் உரையாடிக் கொண்டிருந்தாள் ஹரிணி. இருவருக்கும் தான் இருக்கும் இடத்தைக் காட்ட நினைத்து வீடியோ காலில் பேச, ஆதி அழத் தொடங்கிவிட்டாள், அவளை விட்டுச் சென்றதால். எனவே அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு கெஞ்சி கொஞ்சி பேச, அதைச் சுனில் கவனித்துக் கொண்டே இருந்தான்.


சுனில், இந்தியாவின் நம்பர் டாப் டென் ஃபேஷன் நிறுவனங்களுள் அவனுடையதும் ஒன்று. நம்பர் ஒன் தான் அவனின் இலக்கு.‌ அதை அடைய முன்னேறி வரும் பல டிசைனர்களை விலை கொடுத்து வாங்குகிறான். அவனின் அகராதியில் பெண் என்பவள் ஆணிற்கு சேவை செய்யப் பிறந்தவள். ஆணுக்கு நிகராக இருக்க கூடாது என்று நினைப்பவன். 


"குழந்த மேல அவ்ளோ அக்கற இருக்குறவ எதுக்கு பிஸ்னஸ் பண்றேன்னு தேவையில்லாத வேலை எல்லாம் பாக்கனும். வீட்டுலையே இருந்து பிள்ளைகள படிக்க வச்சி. பக்கத்துலேயே இருந்து பாத்துக்க வேண்டியது தான." என ஏளனமாகப் பேச, ஹரிணி அவனுடன் பேசித் தன் மனநிலையை கெடுத்துக் கொள்ள விருப்பம் இல்லாமல் நகர்ந்து செல்ல நினைத்தாள். ஆனால் சுனில் விடவில்லை. வழி மறித்து நின்றான். 


"இதோ பாரு. என்னோட ரேஞ்சுக்கு உன்ன மாறிச் சின்ன சின்ன டிசைனர் கிட்ட பேசுறதே பெரிய விசயம். பட். உன்னோட ஃபேஷன் ஹவுஸ் எனக்கு வேண்டியதிருக்கு. நீ சரின்னு சொன்னா எனக்குக் கீழ இருந்து உன்னோட டெலண்ட்ட காட்டி இதோ ஃபீல்டுல இருக்கலாம். இல்லன்னா. உன்னோட ஹவுஸ் இல்லாமலேயே போய்டும். நா ஒன்னும் எங்கிட்ட அத விக்கச் சொல்லிக் கேக்கல. நாம சேந்து பண்ணலாம்னு தா சொல்றேன். என்ன சொல்ற. இது உனக்கு நாந்தர்ற அரிய வாய்ப்பு." என்றவனின் பேச்சில் பணம் இருக்கிறது என்ற திமிரும். பெண்களை மதிக்காக அலட்சிய தன்மையும் ஆண் என்ற கர்வமும் இருப்பதை உணர்ந்தாள் ஹரிணி. 


ஆண் என்ற கர்வம் என்றுமே அழகுதான். அது தன் இணைக்கு மதிப்பளித்து. அவர்களைப் பாதுக்காப்பதால் மட்டுமே அழகாகிறது. 


"நீங்கத் தர்றேன்னு சொன்ன வாய்ப்புக்கு ரொம்ப நன்றி. ஆனா பாருங்க எனக்கு அது தேவையில்ல. உங்க கருணை உள்ளத்த வேற யார்க்கிட்டனாலும் காட்டுங்க. இதுக்கு முன்னாடி உங்க கம்பேனி கூட மெர்ஜ் பண்ண ஃபேஷன் ஹவுஸ்ஸோட நிலம என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு இன்னொருத்தனுக்கு கீழ வேல பாத்து பழக்கம் இல்ல. அதுவும் உங்கள மாறி அடுத்தவெ உழைப்ப சுரண்டி திங்கிற ஆம்பளைங்களுக்கு கீழ. நோச்சான்ஸ். சோ எனக்கு நானே தா பாஸ்ஸா இருந்துக்கிறேன்." என்றாள் மிடுக்காக. 


"வெல்... அப்ப என்ன எதிர்க்குறவங்க என்ன ஆனாங்கன்னும் உனக்குத் தெரிஞ்சிருக்கும். ஷீ. உன்ன சுத்தி எல்லாத்தையும் பாரு. எல்லாரும் என்ன பன்றாங்கன்னு." என அந்த இடத்தைச் சுற்றி தன் விரல்களால் காட்ட, அங்குப் பல பெண்கள் ஆண்களின் தோள்களில் தொத்திக் கொண்டு ஆண்களின் கண்ணசைவிற்கு ஏற்றார் போல் ஆடும் பாவையாய் இருந்தனர். இன்னும் சில பெண்கள் டிசைனர்கள் என்ற பெயரில் இருந்தாலும், ஆணிற்கு கீழே வேலை செய்கிறார்கள் என்பதை தான் சுனில் சுட்டி காட்டினான். பெண் அடிபணிந்து தான் ஆக வேண்டும் என்பதை சொல்வது போல் இருந்தது. 


"என்னதா தங்கத்துல செருப்பு செஞ்சாலும். அத தலைல போட்டுக்க முடியாது. அது காலுக்குக் கீழ தாக்கிடக்கனும். நீயும் அப்படி தா. உன்னோட ஃபேஷன் ஹவுஸ்ஸ எப்படி வாங்குறதுன்னு எனக்குத் தெரியும்." என்றான் மிரட்டல் தோணியில்,


"நேத்து என்னோட குழந்தைங்களுக்கு ஒரு கத படிச்சி சொன்னேன். ஒரு எறும்புக்குத் தன்ன விட யாரும் உயரமா இருந்திடக் கூடாதுன்னு ‌நினப்பாம். அதுனால ஏற்கனவே உயரமா இருக்குற மரத்துல ஏறி நின்னா, தானும் உயரமா மாறிடலாம்னு ‌நினச்சு மரத்தோட உச்சிக்கி போய்த் தாந்தா உயரமான ஆளுன்னு கத்தி சொல்லுச்சாம். இப்ப எறும்பு உயரமாச்சா. இல்ல மரம் ஏறுனதுனால எறும்பு உயரமாச்சா. ம்... சொல்லு...‌ 


உன்னோட நிலமையும் அது தா. காத்தடிச்சா மரம் தாங்கும். மரத்து மேல நிக்கிற எறும்பு தாங்காது." எனச் சொல்லியவளை ஏளனமாகப் பார்த்துச் சிரித்து சென்றான் அவன்.


அழகு முகத்தில் இல்லை. அகத்தில் உள்ளது.‌ வீரம் கையில் இருக்கும் ஆயுதத்தில் இல்லை. இல்லை. செயலில் உள்ளது. அதைச் செய்து காட்ட எண்ணியது அவளின் மனம்.


ஹரிணி செய்து காட்டினாள். வியாபாரம் வணிகம் விளம்பரம் என அனைத்து துறைகளிலும் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் சில ஆண்களின் முகத்தில் கரியை பூசும் விதமாகத் தன் வெற்றி இருக்க வேண்டும் என்று நினைத்து மேடை ஏறத் தயாரானாள். 


என்றும் அவளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பது போல் அவளின் கரம்பற்றி நின்றான் ரிஷி. 


திரும்பி அவனைப் பார்த்தவள் மெய்மறந்து தான் போனாள் அவனின் சாம்பல் நிற விழிகளின் சிரிப்பில், எப்பொழுது வந்தாயென இதழசைத்து கேட்ட அவளின் கேள்விக்கு, "மை கிட்... அவளோட பிஸ்னல்ல அடுத்த ஸ்டேஜ்க்கு போகப்போறா. இத எப்படி மிஸ் பண்றது. இது உன்னோட ஃபஸ்ட் ரேம்ப் வாக் இல்லயா." எனச் சொல்லிக் கண்சிமிட்ட, அது ஹரிணிக்கு மிகப்பெரிய பலத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தன. 


எவ்வித சப்போட்டும் இல்லாமலேயோ பெண்கள் முன்னேறி வரும் இந்தக் காலகட்டத்தில் குடும்பம் மற்றும் கணவனின் ஆதரவு கிடைக்கும்போது சாதிக்கமல் இருப்பாளா என்ன. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அன்பே 28



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...