அத்தியாயம்: 1
சென்னை...
தலைமை காவல் நிலையம்.
காக்கி உடையும் காவி பேண்ட்டும்மாகச் சிலர் சின்ஸியராக வேலை செய்தார்கள் என்றால் சிலர் வேறு வண்ண நிறத்தில் சட்டை போட்டு மஃப்ட்டியில் இருந்தனர். அது பெரிய வளாகம் ஆதலால் உள்ளே செல்லப் பல காவலர்களின் சந்தேக பார்வையை சந்திக்க வேண்டி இருந்தன. வளாகத்திற்கு வெளியே பல இருசக்கர வாகனங்கள், சில போலிஸ் பைக்குகள் என அந்த இடமே கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. யாரோ ஒரு நடிகை ஒரு தொழிலதிபர்மீது கம்ளைண்ட் செய்ய வந்துள்ளார். அதனால் மீடியாக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
ஒரு சிறிய தோள் பையைத் தன் தோளில் மாட்டிக் கொண்டு, வியர்க்க விறுவிறுக்க ஒரு ஆண் மலங்க முழித்துக் கொண்டே கலங்கிய முகத்துடன் வந்தான். இளம் வயதினர் தான் அவன். வயது இருபதை தாண்டி இருக்கும். கல்லூரி செல்லும் மாணவன்போல் இருந்த அவன் அந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு காவலர்களின் பரிசோதனையின்றி உள்ளே வந்து விட்டான். யாரின் கவனத்தையும் அப்போது ஈர்க்க விரும்பாமல் பூனை நடை நடந்தான் அவன். வெள்ளை நிற சட்டை அது பயத்தில் வடிந்த வியர்வையால் முழுதாக நனைந்திருந்தது. உடலெங்கும் பயத்தில் நடுங்க, அவன் காவல் அலுவலகத்தின் முன் வந்து நின்றான்.
"என்ன நண்பா! உம்பொண்டாட்டிய மலையேத்தி மனச மாத்திட்டியா என்ன!. ஃபோனே பண்ண மாட்டேங்கிற. அவ்வளவு பிஸியா.?" காக்கி உடையில் தன் நண்பனுடன் ஃபோனில் பேசியபடியே நடந்து வந்தான் அந்தக் காவலன். அவன் ஜீவானந்தம்.
அந்தப் பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ, இவன் விழிந்து விழுந்து சிரித்தான்.
"அப்ப உன்னோட செக்கேன்ட் ஹனிமூனும், தனி மூன் தானா.! ஹாஹ்ஹா. அதுக்கு நீ வீட்டுலையே இருந்திருக்கலாம். தேவையில்லமா காச குடுத்து ஊர் சுத்திப் பாக்குறேங்கிற பேர்ல நாலு சுவத்த கொட்ட கொட்ட முழிச்சி பாதுக்காத்துட்டு இருக்கிங்க போலையே." எனக் கேலி செய்ய,
"..."
"ஐய்யையோ!. அந்த ராட்சஸிட்ட என்னால பேச முடியுமா!. நீ தா அவளுக்கு ஏத்த ஆளு. உனக்கும் அவா தா சரி. ரெண்டு பேரும் உங்க ரெண்டாவது தேன் நிலவ, மொட்டமாட்டிக்கே போகாம எஞ்ஜாய் பண்ணீட்டு ஊர் வந்து சேருங்க." என யாருடனோ பேசியபடி வந்தவனின் கவனம் அந்த வெள்ளை சட்டையின் மேல் விழுந்தது.
"நண்பா ஒரு ஐஞ்சி நிமிசம் கழிச்சி கூப்பிடுறேன்." என ஃபோனை கட் செய்தவன், வெள்ளை சட்டையின் விசித்திர நடவடிக்கைகளைக் கவனிக்கலானான்.
கண்ணில் கண்ணீர் வடிய உயிரை வெறுக்கும் விரக்தியில் தன் தோள் பையைத் திறந்தான். அதில் ஒரு வாட்டர் பாட்டில் இருந்தது. அதைத் திறந்து அதில் உள்ள திரவத்தைத் தன் மேல் ஊற்றினான்.
'என்னப்பா தண்ணி மஞ்சக் கலர்ல இருக்கு!. ஐய்யையோ!. அது பெட்ரோல். தற்கொல பண்ணிக்க போறான் போல.'
அவன் பாட்டிலை எடுத்த போதே ஜீவா கணித்து விட்டான், அடுத்த என்ன நடக்கும் என்பதை. எனவே துரிதமாகச் செயல் பட்டு அந்த இளைஞனை காப்பாற்ற முயன்றான். ஆனால் அவன் முரண்டு பிடித்தான்.
"வராதிங்க. எம்பக்கத்துல வராதிங்க. வந்தா கொளுத்திக்கிவேன். நா சாகனும்." எனக் கத்த ஒட்டு மொத்த மீடியாவின் கவனமும் இவன் புறம் திரும்பியது.
"தம்பி! எதுவா இருந்தாலும், நாம பேசிக்கலாம். முதல்ல தீப்பெட்டிய கீழ போடுபா." எனக் காவலர்கள் சமாதானமாகப் பேச,
"நா இங்க கமிஷ்னர பாக்க வந்தேன். அவரு வரமா நா தீப்பெட்டிய கீழ போடமாட்டேன். வரச் சொல்லுங்க. கமிஷ்னர வரச் சொல்லுங்க. நா பாக்கனும். அவர்ட்ட பேசனும்." எனப் பைத்தியக்காரன் போல் கத்த,
மற்ற காவலர்கள் அவனிடம் பேச்சுக் குடுத்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீரை அவனின் மேல் ஊற்றி, ஜீவா வெள்ளை சட்டையை மடக்கி பிடித்தான். அவர்கள் அவனை உள்ளே இழுத்துச் செல்ல,
"எனக்கு நியாயம் கிடைக்கனும். உங்க கமிஷனர்ட்ட நா பேசனும். அவரால என்னோட பிரச்சனைய தீக்க முடியலைன்னா உங்க போலிஸ் ஸ்டேஷன் வாசல்லையே நா தீக் குளிப்பேன். உங்களால என்ன தடுக்க முடியாது."என வர மறுத்துக் கத்த,
காவலர்கள், "நீ என்ன சொல்றியோ அத செஞ்சிடலாம். வாப்பா. கமிஷ்னர் வர்ற நேரம் தா." எனச் சமாதானமாகப் பேசி உள்ளே அழைத்துச் சென்றனர்.
"பத்திரிக்கை காரங்களே. நல்லா படம் பிடிச்சிக்குங்க. நீங்கள் தான் எனக்கு நியாயம் கிடைக்க உதவி பண்ணனும். போலிஸ் உதவலன்னா நீங்கத் தான் எனக்கு வழி காட்டனும்." எனக் கத்த,
"காட்டு வாங்க காட்டுவாங்க. முதல்ல நீ இந்த வழில நட." என அவனின் தலையில் தட்டி உள்ளே அழைத்துச் சென்றான் ஜீவா. கண்ணீருடன் காவலன் சொன்ன பாதையில் செல்ல, விசாரனைக்கு என வைத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
"என்ன மச்சான்! வெளில ஒரே பரபரப்பா இருந்துச்சாமே. என்ன நடந்தது.? யாரு அது?." மனோ.
"தெரியல. வா விசாரிப்போம்." என ஜீவா அழைக்க இருவரும் உள்ளே சென்று அந்த வெள்ளை சட்டைக்காரனின் முன் அமர்ந்தனர்.
"தம்பி யாரு நீங்க?. எதுக்காகத் தீக்குளிச்சி சாகப் பாக்குறிங்க?." என ஜீவா விசாரிக்க, அந்த வெள்ளை சட்டைக்காரன்,
"நீங்க யாரு?. கமிஷ்னர.?"
"இல்ல. அவருக்கும் கீழ. ACP. ஏன் அவருக்கிட்ட தா உம்பேரு என்னனு சொல்லுவியோ!." மனோ.
"ஆமா. உங்ககிட்டலாம் சொல்ல முடியாது. கமிஷ்னர்கிட்ட தா பேசனும். இல்லன்னா நா மீடியா பத்திரிக்க காரங்க கிட்ட பேசிக்கிறேன்." எனச் சொல்ல மனோகருக்கு கோபம் வர,
"அடிங்க... தமிழ்நாட்டுல மொத்த பத்து கோடி பேருக்கு மேல இருப்பாங்க. அவங்க அத்தன பேரும், கமிஷனர பாத்து தா கம்ளைண்ட குடுப்பேன்னு சொன்னா என்ன ஆகுறது. நாங்களும் போலிஸ் தா எங்கிட்ட நீ தாராளமா சொல்லலாம்."
"மாட்டேன். உங்ககிட்டல்லாம் சொல்லமாட்டேன்." என்க, அப்போது கதவு திறக்கப்பட்டது. காவலர்கள் இருவரும் விறைத்து எழுந்து உள்ளே வந்த கமிஷனருக்கு சல்யூட் அடித்தனர்.
"யாரு இவெ?. இவ்வளோ கேர்லஸ்ஸாவா இருப்பிங்க. கமிஷ்னர் ஆஃபிஸ் வாசல்லுக்கே வந்து ஒருத்தேன் தீக் குளிக்க ட்ரைப் பண்ணா நம்மல பத்தி மக்கள் என்ன பேசுவாங்க. இந்த மீடியா வேற சும்மா இல்லாம இந்த நீயூஸ தலைப்பு செய்தியா மாத்திட்டு இருக்கு. விசாரிச்சிங்களா.?" எனக் காட்டமாகக் கேட்டார்.
"இல்ல ஸார். உங்ககிட்ட தா பேசுவேன்னு சொல்லி அடம்பிடிக்கிறான்." என இருவரும் சேர்ந்து சொல்ல, அவர் அந்த வெள்ளை சட்டையைப் பார்த்து விசாரித்தார்.
"யாரு நீ?. எதுக்கு இங்க வந்த.?" எனக் கேட்டார்.
"எம்பேரு." என அவன் ஆரம்பிக்கும் முன்னரே,
"இதோ பாரு. இப்படி படிக்கிற வயசுல பப்ளிக் ப்ளேஸ்ல தற்கொல பண்ணிக்க நினைக்கிறது தப்பு. உன்னோட பிரச்சனைய இந்த மாறிச் செஞ்சி தா எங்க கவனத்துக்கு கொண்டு வரனும்னு அவசியமில்ல."என அவன் செய்த தற்கொலை முயற்சிக்காக அட்வெஸ் வழங்குகிறேன் என்று பேச,
"எதுக்கு டா இன்னும் நாம உயிரோட இருக்கோம்னு அவெ ஃபில் பண்ணுற அளவுக்கா மனுஷெ பேசுவாரு. ஆனாலும் பையன் பெரிய இடம்னு தோனுது." மனோ.
"எப்படி.?" ஜீவா
"பெட்ரோல் விக்கிற வெலைக்கி நாம பைக்குக்கே ஊத்தவே யோசிக்கிறோம். இவெ என்னடான்னா அசால்டா ரெண்டு லிட்டர வாங்கி கீழ ஊத்திடானே." என வருத்தப்பட,
"வாய மூடீட்டு இரு." என அவன் எச்சரிக்கவும் கமிஷ்னர் இவர்களின் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கவும் சரியாக இருந்து.
"ஜீவானந்தம், மனோகர். ரெண்டு பேரும் ஐபிஎஸ் அதிகாரிங்க தா. சோ உன்னோட கம்பளைண்ட இங்க கிட்ட குடு. நீங்க ரெண்டு பேரும் இத என்ன ஏதுன்னு நல்லா விசாரிச்சு வந்து சொல்லுங்க." என்று கூறிச் சென்றார்.
"இவருக்கு என்னவாம்!. ஆனா ஊனா நம்மையே தோண்டுறதையே வேலையா வச்சிருக்காரு. ச்ச... கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருக்குலாம்னு நினைச்சேன். நடக்குற காரியமா அது." மனோகர்.
"அதான் சொல்டார்ல. செஞ்சி தா ஆகனும். வா." என இளைஞனை விசாரிக்க ஆரம்பித்தான் ஜீவா.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..