முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 2


 

அத்தியாயம்: 2


"ஸார் என்னோட பேரு மணிராம். கோயம்புத்தூர்ல படிச்சிட்டு, அங்கேயே ஒரு துணிக் கடைல வேல பாக்குறேன்." 


"உன்னோட நேட்டிவ் எது.? கோயம்புத்தூர் தானா!." ஜீவா.


"இல்ல ஸார். சென்னை தா." 


"அப்பாம்மா என்ன பண்றாங்க.?" மனோ.


"அப்பா வாட்ச்மேன் ஸார். அம்மா வீட்டு வேல செய்றாங்க. அவங்களுக்கு நா மட்டும் தா பிள்ள. வேற யாரும் கிடையாது." மணி சொல்ல, அவனின் தலையில் தட்டினான் மனோ. 


"வேற யாரும் இல்லங்கிற. நீ செத்துட்டா அவங்க என்ன ஆவாங்கன்னு யோசிச்சியா டா." ஜீவா. 


"சாகனும்னு நினைச்சி பண்ணல ஸார். உங்கள மாறிப் பெரிய போலிஸ் பார்வைக்கி என்னோட கம்ப்ளைண்ட்ட கொண்டு போகனும்னு தான் ஸார் பண்ணேன். எனக்கு வேற வழி தெரியல ஸார். உங்கள மாறிப் போலிஸ் தான் ஸார் என்ன ஒரு கம்ப்ளைண்ட்டுக்காக ஸ்டேஷன் ஸ்டேஷனா அழைய விட்டாங்க. அதா ஸார்." எனப் படபடத்துப் பேச,


"என்னன்னு கம்ப்ளைண்ட் குடுக்க போன." என ஜீவா கேட்க, மணி தன் ஃபோனில் உள்ள ஒரு புகைப்படத்தைக் காட்டினான். 


"பேரு சுருதி. என்னோட‌ கூட வேல பாக்குற பொண்ணு. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம் ஸார்." 


"ஏன்டா! எங்கள பாத்த பார்ட் டயம் புரோகிதர் மாறித் தெரியுதா!. கல்யாணம் பண்ணனும்னா போய் ரிஜிஸ்டர் ஆஃபிஸர பாக்க வேண்டியது தான. ரெண்டு பேரும் மேஜர். கல்யாணத்த பண்ணிட்டு கண்காணாத இடத்துக்குப் போறத விட்டுட்டு ஏன்டா பெட்ரோல வாங்கி ஊத்திக்கிட்ட.?" மனோ. 


"அது முடியாதே ஸார்." 


"ஏ ரெண்டு பேர் வீட்டுலையும் சம்மதக்கலையா?." ஜீவா. 


"எங்க வீட்டுல சம்மதம் தா ஸார்." 


"அப்பப் பொண்ணு வீட்டுல." மனோ.


"அவளுக்கு அப்பாம்மா கிடையாது ஸார். ஆஸ்ரமத்துல வளந்தவ. அதுனால எந்தப் பிரச்சனையும் இல்ல." 


"அப்றம் என்ன இதுக்கு டா கமிஷ்னர பாக்கனும் பாக்கனும்னு கத்துன. அவர பாக்க மட்டும் தா செய்யனும்னா ரோட்டுல ஒரு ஓரமா நின்னிருக்க வேண்டியது தான. காலைல சாயங்காலம்னு எதாவது ஒரு நேரம் அவரு கார்ல போறப்ப பாத்திருப்ப. ஏன்டா எங்க நேரத்த வீணாக்குற?." மனோ.


"ஸார் நீங்க இன்னும் என்னோட பிரச்சினைய என்னன்னு கேக்கலேயே ஸார்." மணி.


"சரி சொல்லு." ஜீவா


"வேலய பாத்தோம்மா. அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணி செட்டிலானோமான்னு இல்லாம. உனக்குக் கமிஷ்னர் ஆஃபிஸ்ல பெட்ரோல் பாட்டிலோட என்ன வேல. சொல்லு." மனோ. 


‍"கல்யாணம் பண்ணனும்னா அதுக்கு அந்தப் பொண்ணு உயிரோட இருக்கனுமே ஸார்." என்றபோது இருவரும் அதிர்ந்தனர். 


'என்ன பெரிசா சொல்லிடப் போறான். காதல்ல பிரச்சன. பொண்ணு வேற ஒருத்தன கட்டிக்கிட்டு ஏமாத்திட்டு போய்ட்டா. கடன் பிரச்சனை. இடப் பிரச்சனையா இருக்கும்' என அசால்டாக நினைத்த இருவரும் சற்று அதிர்ந்து தான் போயினர் அவன் காட்டிய விசயத்தைப் பார்த்து. 


அது செய்தித்தாள். தமிழ்நாடு மாவட்ட செய்திகள் அதில் இருந்தது. கூடவே அவன் ஃபோனில் காட்டிய பெண்ணின் புகைப்படமும் இருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு மேல், காதல் விவகாரத்தால் துணிக்கடை ஊழியர் தற்கொலையெனக் கொட்டை எழுத்தில் பெரிதாகப் போட்டிருந்தது. 


"ஏன்டா! உனக்கு உன்னோட லவ்வருக்கும் வேற வேலையே இல்லையாடா. யாரு முதல்ல சாகுறான்னு போட்டியா வச்சிங்க." 


"இல்ல ஸார். அவா தற்கொலை பண்ணிக்க வாய்ப்பில்ல ஸார். எங்க ரெண்டு பேர் காதலுக்கும் எந்த எதிர்ப்பும் இல்லாதபோது எதுக்கு ஸார் நாங்க சாகனும்?. அவளுக்கு அப்பாம்மா கிடையாது ஸார். ஹாஸ்டல்ல தங்கிருக்குறா. என்னோட அப்பாம்மாவ பாக்க அடிக்கடி சென்னைக்கி வருவா ஸார். எனக்கு நல்ல வேல கிடைக்கையும் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு வீட்டுல சொன்னாங்க ஸார். எல்லாம் நல்லா தா ஸார் போய்கிட்டு இருந்தது. அப்றம் ஏ ஸார் அவா தற்கொலை பண்ணனும்?. எனக்குச் சந்தேகமா இருக்கு ஸார். 


சுருதிய நாந்தா ஸார் பஸ் ஏத்தி விட்டேன். மாசத்துக்கு ஒருக்க அவா வளந்த ஆஸ்ரமத்துக்கு போவா ஸார். ‌ மேட்டுப்பாளையம் வரைக்கும் கூடவே தா ஸார் இருந்தேன். அப்பறம் எப்படி ஸார் தற்கொலை பண்ணிக்க முடியும். அதுவும் ஏரில குதிச்சி தற்கொல பண்ணிக்கிட்டான்னு சொல்றாங்க ஸார். அது ராத்தி நேரம் ஸார். அத்துவான காட்டுக்குள்ள போற அளவுக்குச் சுருதிக்கி தைரியம் கிடையாது ஸார்." 


"நீ எங்க போன?. சுருதிய பஸ் ஏத்தி விட்டுட்டு." ஜீவா.


"ஸார் நா இன்டர்வியூ போயிருந்தேன் ஸார். வேலைக்காக. இன்டர்வியூ கார்டு ஸார். சென்னைல தா ஸார் நடந்தது இன்டர்வியூ." எனக் காட்ட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 


"சந்தேகம்னா அங்க இருக்குற லோக்கல் போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ணிருக்கலாம்ல." மனோ. 


"அதுக்கு தா ஸார் நா ட்ரெய் பண்ணேன். ஆனா சுருதி தற்கொல பண்ணிக்கிட்டது அவளோட ஆஸ்ரமத்துல‌ இல்ல. ஆஸ்ரமம் கோத்தகிரில இருக்கு. சுருதி தற்கொல பண்ணது எதோ ஒரு ஏரி ஸார். ஆஸ்ரமத்து ஆளுங்க தான் பாடி அவளோடதுன்னு அடையாளம் கண்டு பிடிச்சி சொல்லிருக்காங்க. அவங்க என்ன சுருதி முகத்த கூடப் பாக்க அனுமதிக்கல ஸார். அவங்களே கல்லறைல பொதச்சிட்டு கடைக்குத் தகவல் மட்டும் சொல்லிருக்காங்க. 


அந்த ஊரு ஸ்டேஷன்க்கு போனா என்னோட கம்ப்ளைண்ட்ட வாங்கிக்க மாட்டேங்கிறாங்க. கோயம்புத்தூர்ல தான வேல பாத்தா அங்க மிஸ்ஸிங்க கம்ளைண்ட குடுன்னு சொல்லி அங்க தொரத்தி விட்டாங்க. அங்க போனா. இது எங்க வேல இல்லன்னு சொல்லி விரட்டுராங்க ஸார். ஒரு வாரம் ஆச்சி ஸார் என்னோட சுருதி இறந்து. அவளுக்கு எல்லாமே நாந்தா ஸார். என்ன நம்புன பொண்ணு ஸார் அது. இப்ப எங்கூட இல்ல." என அழுதான் அந்தக் காதலன்.


"ஏ மச்சான் இவெ இவ்ளோ டீரெய்லா சொல்ற பாத்தா உனக்குச் சந்தேகம் வரல." ஜீவா மனோவின் காதில் முணுமுணுக்க,


"ம் வருது மச்சான். இந்தக் குருவி கூட்டுக்குள்ள இவ்ளோ நல்லா வேல பாக்குற மூளையான்னு இருக்கு. ஒரு போலிஸ் விசாரிக்க வேண்டிய எல்லாத்தையும் இவன் விசாரிச்சி வச்சிருக்கான்." 


"எனக்கு என்னமோ இவெ இவனா யோசிக்கலன்னு தோனுது." 


"உள்ள சந்திரமுகன் புகுந்துடுச்சோ." 


"டேய் யாரோ இவனுக்கு இப்படி பேசுன்னு சொல்லிக் குடுத்த மாறித் தெரியல." 


"இருக்கலாம். நீ முதல்ல அந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கு ஃபோன போட்டு விசாரி." மனோ சொல்ல,


ஜீவா உடனே அவன் சொன்ன போலிஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து சுருதி இறந்ததுக்கான விளக்கம் கேட்டான். அவர்கள் மிகவும் தெளிவாகப் பேசினார். அதுமட்டுமல்ல. சுருதி இறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என அனைத்தையும் ஜீவாவிற்கு அனுப்பி வைக்க, அது தற்கொலை தான் என்று சொல்லியது. 


"அந்தப் பொண்ணு நிஜமாவே தற்கொல தான் தம்பி செஞ்சிருக்கனும். இதுல சந்தேக‌ப் பட எதுவுமே இல்லையே." ஜீவா. 


"எதுக்கு ஸார் பண்ணனும்?. வேல பாக்குற இடத்துல அவளுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆஸ்ரமம். அது அவளோட அம்மா வீடுன்னு சொல்லுவா. அங்கிருக்குறவங்க அவள மாறி இல்லாத குழந்தைங்கள நல்லா பாத்துப்பாங்கன்னும் சொல்லிருக்கா. நல்ல வேலைக்கி போய், கை நிறைய சம்பாதிச்சி, வர்ற அவளோட சம்பளம் மொத்தத்தையும் ஆஸ்ரமத்துக்கு குடுக்கனும்னு ஆசப்பட்டா ஸார்." 


"அப்ப ஆஸ்ரமத்துல இருக்குறவங்க மேல உனக்குச் சந்தேகம் இல்ல." மனோ.


"ஆமா‌ ஸார் அவங்க மேல இல்ல. ஆனா என்னோட சுருதி தற்கொலை பண்ணிக்கல ஸார்." 


"அப்ப யார் மேல தா உனக்குச் சந்தேகம்." என மனோ கேட்க, 


"எனக்குத் தெரியல ஸார். ஆனா அவள யாரோ கொல தா ஸார் பண்ணிருக்கனும். எனக்கு நல்லா தெரியும் ஸார். அது கொல." 


"எத வச்சி சொல்ற கொலன்னு. ஆதாரம் இருக்கா?. ஸ்ட்ராங்கான எவிடெஸ் எதுவும் இருக்கா?." ஜீவா.


"இருக்கு ஸார். இங்க பாருங்க. இது சுருதியோட மொபைல் போன். பஸ் ஏத்தி விடும்போது எங்கைலயே மறந்து போய்க் குடுத்துட்டு போய்ட்டா. இதுக்கு ஒரு மெஸ் ஏஜ் வந்திருக்கு பாருங்க. அதுவும் சுருதி இறந்ததா சொல்ற அந்த ராத்திரி நேரத்துல வந்திருக்கு ஸார். நா பஸ் ஏத்திவிட்ட கொஞ்ச நேரத்துல வந்திருக்கு ஸார்." என இறந்த அந்தப் பெண்ணின் ஃபோனை காட்ட. அதில் 'You could be next' என்று இருந்தது. அதாவது அடுத்து நீயாகக் கூட இருக்கலாம் என்று எழுதியிருந்தது. 


"இது யாரோட நம்பர்னு தெரியுமா?." ஜீவா.


"தெரியல்ல ஸார். நானும் கால் பண்ணி பண்ணி பாக்குறேன். ஸ்விச் ஆஃப்னு வருது ஸார். முதல்ல நா இத கண்டுக்கல.

ஆனா‌ என்னோட சுருதி தற்கொல பண்ணிக்கிட்டான்னு சொல்லும்போது சந்தேகம் வருது ஸார். அனுப்புனது யாரா வேண்ணாலும் இருக்கலாம். ஆனா அவள யாரோ கொல பண்ண போறாங்கன்னு அனுப்புனவனுக்கு தெரிஞ்சிருக்கு. யாருன்னு கண்டு பிடிங்க ஸார்.‌" எனப் பேசிக் கொண்டு போக, 


'இவெ என்ன நம்மல விட ஃபாஸ்ட்டா இன்வெஸ்டிக்கேட் பண்ணி வச்சிருக்கான்.' என எண்ணிய ஜீவாவும் மனோவும் அவன் சொல்வது உண்மையா எனத் தெரியாது கமிஷ்னர் காணச் சென்றனர். மணிராம் கூறிய அத்தனையையும் அவரிடம் ஒப்பித்தனர். 


சுருதி இருபத்தி நான்கு வயது இளம் பெண். கோத்தகிரியை அடுத்துல்ல ஒரு காப்பகத்தில் வளர்ந்தவள். அவர்களின் தயவால் பள்ளி முடித்துக் கல்லூரி முடித்து ஒரு வேலையில் சேர்ந்துள்ளாள். அவளைப் போலத் தாய் தந்தையில்லாத குழந்தைகள் தவிர‌ மனநலம் பாதிக்கப்பட்ட மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எனப் பலர் அங்கு உள்ளனர். 


மாத கடைசி தேதிகளிலும் விடுமுறையை நாட்களிலும் தங்கள் காப்பகத்திற்கு சுருதி செல்வது வழக்கம். அவளை மேட்டுப்பாளையம் வரை உடன் வந்து கோத்தகிரிக்கு பஸ் ஏத்தி சென்றுள்ளான் மணி ராம். அப்போது அவளின் ஃபோன் மணியின் கையில் மறந்து விட்டு விட்டுச் சென்றுள்ளாள். அந்தி சாயும் நேரம் பேருந்து எறிய பெண்,  இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் வேறொரு நிறுத்தத்தில் இறங்கி, சிறிது தூரம் மரங்கள் நிறைந்த காட்டிற்குள் சென்று அங்குள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளாள். 


உடல் ஏரியில் மிதக்க, காலையில் அந்தப் பக்கம் வந்த ஊர் மக்களால் போலிஸுக்கு தகவல் தெரிந்து சொல்லப்பட்டது. உடலைக் கைப்பற்றி யாரென விசாரிக்கும்பொழுது துணிக்கடையில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை கிடைத்தது‌. அதன் மூலம் இறந்தது சுருதி என்று முடிவுச் செய்தவர்கள், அவள் வளர்ந்த ஆஸ்ரமத்திற்கு தகவல் சொல்லி விட்டு, உடலை அவர்களிடம் ஒப்படைத்தனர். 


பெண்ணின் நுரையீரல் முழுவதும் நீர் புகுந்து மூச்சி விட முடியாமல் இறந்துள்ளாள். மற்ற காயங்கள் ஏதும் இல்லை. எனவே இது தற்கொலை. 


இளம் பெண் இறந்தால் என்னவாக இருக்கும் ஒன்று கற்பழிப்பாக இருக்கும். இல்லை காதல் விவகாரமாக இருக்கும். முதலாவது நடக்கவில்லை. அப்பொழுது இரண்டாவது தான் சரியென முடிவு செய்து வழக்கை முடித்து விட்டனர் காவல் துறையினர். 


"ஓகே. பிரச்சன சிறுசானாலும் அந்தப் பையன் பெருசாக்கிட்டான், மீடியா அது இதுன்னுடு. நீங்க என்ன பண்ணுங்க அவெ சொன்னது எல்லாம் உண்மையான்னு விசாரிங்க. முக்கியமாக அந்தப் பையனோட அப்பாம்மாவ. எனக்கு அவங்க மேல தா சந்தேகம். எங்க ஒரு அனாதைய நம்ம பையன் கல்யாணம் பண்ணிப்பானோன்னு அவங்களே இத பண்ணிருக்கலாம். இல்ல தற்கொல பண்ணிக்க சொல்லி அந்தப் பொண்ண தூண்டி விட்டிருக்கலாம்." 


" பட் ஸார். ஆஸ்ரமத்துல வளந்த பொண்ணு. அதுக்கு எதாவது உடல் ரீதியான தொந்தரவு யாராவது குடுத்திருந்தா. அத வெளில சொல்ல முடியாம தற்கொலை செஞ்சிருக்கலாம்ல. " என ஜீவா ஒரு கோணத்தை முன் வைத்தான்


"அதுமட்டுமில்ல ஸார். அந்தப் பொண்ணு வேல பாக்குற கடைலையும் விசாரிக்கனும் ஸார். ஏன்னா அது அப்பாம்மா இல்லாத பொண்ணு. யாரு கேக்க போறான்னு அங்க கூட வேல பாக்குற யாராது தொந்தரவு செஞ்சிருந்தா. எது வேண்ணாலும் நடந்திருக்கலாம் ஸார். நாம அங்கையும் விசாரிக்கனும்." மனோ.


"ம்... அதுவும் கரெக்டதா. அந்தப் பொண்ணு வேல பாக்குற கட, தங்கிருக்குற ஹாஸ்டல்ல, ரூம் மெட்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாத்தையும் விசாரிச்சி ஒரு ரெண்டு நாள்ல பைல் பண்ணி கேஸ்ஸ முடிங்க." என்றபோது இருவரும் ஒரே சேர 'ஸார் 'எனக் கத்தினர்.


"என்ன?." என்றார் அவர்.


"ரெண்டு நாள்ல எப்படி?. கூட ஒரு வாரம் தந்தா." என மனோ இழுக்க. 


"ம்...‌ ‌பட் இத சீக்கிரம் முடிக்கனும். ஏன்னா மீடியாவோட கவனத்துக்கு இது போயிடுச்சி.‌ பை த வே உங்க ஃப்ரண்ட் மிஸ்டர் விக்னேஷ்வரன் எங்க.?" எனக் கேட்டார் அவர். 


'வாயத் திறந்து சொல்லிடாதடா.' என ஜீவா காட்டிய சைகையைக் கவனியாது மனோ உளறி விட்டான்.‌ 


"ஊட்டில இருக்கான் ஸார், வைஃப் கூட.‌" 


"ம்... நல்லது. ஊட்டிக்கும் கோத்தகிரிக்கும் தூரம் ரொம்ப கிடையாது. இத பர்ஸ்னல்லா விசாரிக்கச் சொல்லுங்க. எது வேண்ணாலும் பண்ணுங்க. ஆனா எனக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள்ள இத முடிச்சாகனும்.‌" என அவர் விக்னேஷையும் இதைப் பற்றி விசாரிக்கச் சொல்லிச் சென்றார். 


"ஏய்.! லூசாடா நீ?. அவெனே அவெ பொண்டாட்டி கூட இருக்கனும்னு லீவ் போட்டுப் போயிருக்கான். அவன ஏன்டா இதுல கோர்த்து விட்ட. உனக்கு அறிவே இல்லையா டா?." ஜீவா.


"எதோ ஒரு ஃப்லோல வந்துடுச்சி. விடு மச்சா. அதுக்கென்ன இப்ப. அவெ என்ன ஜாலியா ஹனி‌ மூன் கொண்டாடவா போயிருக்கான்.‌ பவதா மனசுக்கு ஒரு மாற்றம் வேணும்னு தான கூட்டீட்டு போயிருக்கான். ஒத்த ரூம்குள்ளையே அடஞ்சி கிடந்தா எப்படி மனசு மாறும். இத விசாரிக்கவாச்சும் வெளில போய் நாலு இடத்த பாக்கச் சொல்லு. சீக்கிரம் மாறிடும்." மனோ. 


"ஓ அப்படியா சொல்ற!. இரு நா பவதாக்கு கால பண்ணி நீ பண்ண உதவிய சொல்றேன். அதவிட முக்கியமா விக்னேஷ் கிட்ட போட்டுக் குடுக்குறேன். நீ தா அவன கமிஷ்னர்ட்ட மாட்டி விட்டன்னு. இப்பவே சொல்றேன்." என ஃபோனை எடுக்க. 


"மச்சான்... மச்சான்... எதுக்கு வைலெஸ்‌. நாமெல்லாம் காந்திஜியோட பேரக் குழந்தைகள் இல்லயா!. அகிம்சை வழிலதா நடந்துக்கனும். வன்முறை கூடாதுபா. புரியுதா." 


"எனக்குப் புரியுது மச்சி. ஆனா நம்ம நண்பனுக்குக் காந்தியோட கொள்கைகள் தெரியுமான்னு தெரியலையே." 


"அதெல்லாம் தெரியும். ஆனா அத ஃபாலோ தா பண்ண மாட்டான். நீ அவன்ட்ட என்ன போட்டுக்குடுத்து, அவெங்கையால நா சாகுறத விட. உங்கால விழுறேன்டா. இங்க எதுவுமே நடக்கல நீ எதையும் கேக்கவே இல்ல. அதுமாறி நடந்துக்க மச்சான்." எனக் கெஞ்ச. 


"ம்... உன்னைய பாத்தாலும் பாவமாத்தா இருக்கு. ஆனா ஓசில எந்த உதவியும் செஞ்சி எனக்குப் பழக்கம் இல்லையே." 


"நீ என்ன எதிர் பாக்குறன்னு எனக்குத் தெரியும். ஆனா இது எந்த வகையில நியாயம் சொல்லு. நா மட்டும் ஒத்தையா எத செய்வேன்." 


"நீ செஞ்சி தா ஆகனும். இல்லனா நா விக்னேஷ்கு ஃபோன் போடுறேன்." என மிரட்ட. 


"பண்ணித் தொலைக்கிறேன்." என வேண்டா வெறுப்பாக மனோகர் சொல்ல, 


"குட் பாய். ஷீ யூ இன் நெஸ்ட் வீக்." என அவன் கன்னம் தட்டிவிட்டி சென்றான் ஜீவானந்தம். 


"ச்ச... ஒரு போலிஸ்காரனே இன்னொரு போலிஸ்காரன மிரட்டுறான். முதல்ல இவன் மேல ஒரு கம்ப்ளைண்ட பதிவு பண்ணனும். நாமலும் நாலு லிட்டர் பெட்டோல வாங்கி ‌வச்சிக்கலாமா. ஆத்திர அவசரத்துக்கு யூஸ் ஆகும்." எனப் புலம்பிய படியே சென்றான் மனோகர். 


அதாவது ஜீவா அவன் மனைவி குடும்பத்துடன் சுற்றுல்லா செல்லத் திட்டமிட்டுள்ளான். நான்கு நாட்கள். தங்கும் இடம் எல்லாம் முன்னேற்பாடாகப் புக் செய்து விட்டான். இப்போது வந்து கமிஷ்னர் அதை விசாரி இதை விசாரின்னு சொல்ல, போட்டு வச்ச ப்ளான் கெட்டுப் போயிடுமோ என இந்த வழக்கு தொடர்பாக அழைந்து திரிந்து விசாரிக்க வேண்டும் என்ற பொறுப்பை மனோகரிடம் ஒப்படைத்திருக்கிறான். இல்லை வலுக்கட்டாயமாகத் திணித்துள்ளான். 


'என் மற்றொரு கதையில் வந்த கதாப்பாத்திரங்கள். அதில் வந்த நாயகர்களில் ஜீவாவும் மனோவும் இருவர். இருவரும் IPS officers. ஹீரோவும் ஹீரோயினும் அடுத்த அத்தியாயத்துல வருவாங்க.' 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


விழி 1


விழி 3


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...