முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 3

 

அத்தியாயம்: 3


ஊட்டி...


மலைகளின் இளவரசி. இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து. உடலை உறைய வைக்கும் இமயமலையின் பனி போல் இல்லாமல், இதமாய் வருடிச் சொல்லும் மெல்லிய குளிர், நம் அடிமனதை மெதுவாகத் தொட்டுச் செல்லும். 


சுகமாக அதே சமயம் இதமாகவும் ரசித்து அனுபவிக்கும் படி இருக்கும் உதகமண்டலத்தின் சீதோஷ சூழ்நிலை. நீலகிரி நம் தமிழ்நாட்டின் வைரக்கல் அல்லவா. சுமார் ஏழாயிரம் அடி உயரத்தில் உள்ளது. 


எண்ணிலடங்காத உயிர்களின் உறைவிடம். கண்டு பிடிக்கப் படாத மூலிகைச் செடிகளின் பாதுகாவலன். யாரின் உதவியுமின்றி இயற்கை எழுப்பிய மதில்‌ அது.‌


அங்குத் தான் இருக்கிறோம் நாம். 


தொட்டபெட்டா... 


இயற்கை அழகை முழுமையாக ரசிக்கச் சரியான இடம். தமிழகத்தின் உயர்ந்த சிகரம் அது. நீலகிரியின் மூடுபனி நிறைந்த அந்தப் பச்சை மலை காடுகளின் நிகரற்ற அழகை ஒரு பறவைபோல் மேலிருந்து ரசிக்கத் தொட்டபொட்டா சிறந்த இடம்.‌ 


அதில் ஓரிடத்தில் கர்நாடக எல்லை ஆரம்பம் என எழுதி இருந்தது. "ஹேய் பவதா உன்ன ஒரே நொடில நம்ம பக்கத்து ஸ்டேட்டுக்கு கூட்டிட்டு போகவா. ம்... வா." எனத் தன் மனைவியின் கரம்பற்றி இழுக்க, பொம்மைபோல் அவன் உடன் சென்றாள் பவதாரிணி. விக்னேஸ்வரனின் காதல் மனைவி. அவளின் முகம் கண்டவன்.


"ஓகே. நீ பார்டர் தாண்டாத பதுமை. உனக்குத் தமிழ்நாட்ட விட்டுத் தாண்ட மனசில்லன்னா விடு. இங்க ஆப்பிள்ஸ் நல்லா இருக்கும். க்ரீன் கலர்ல. ஊட்டி ஆப்பிள். உனக்கு வேணுமா பவதா?. "


'நீ கண்ணு முன்னாடி கடையையே திறந்து வச்சாலும். எனக்கு வேண்டாம்' என்பது போல் பேசாது நின்றாள் பவதா. 


பவதா ஒரு உணவுப் பிரியை. அவளா வேண்டாம் என்பது!. ச்ச.‌ என்ன செய்து அவளின் நினைவுகளை அழிப்பது. எப்பொழுதான் தான் விரும்பிய பழைய பவதாரிணி கிடைப்பாள் என்று தெரியாமல் முழித்தவனிடம், "போலாம். எனக்குக் குளிருது." என்றாள் அவள்.


"அதா ஸ்வெட்டர் போட்டிருக்கியே. ஒன்னுக்கு மூனா. இன்னுமா குளிருது உனக்கு?." என்றவன் ஊட்டியின் குளிரை அனுபவிக்க எண்ணி கனமான உடையை அணிவில்லை. 


'நீ பனிக்கரடி மாறி இருந்தா நானும் அப்படியே எப்படி இருப்பேன்.' என்ற கவுண்டரை எதிர்பார்த்து நின்றவனுக்கு ஏமாற்றமே. 


அவள் எதுவும் சொல்லாது காரில் அமர்ந்து கொண்டாள். 


"இதுக்கு நான் சென்னைலையே இருந்திருப்பேன்‌. ஜீவா சொன்ன மாறி." என அலுத்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்து ஓட்டினான். 


வந்து ஒரு வாரம் ஆகப்போகிறது. அவர்கள் தங்கியிருக்கும் வீட்டை விட்டு இன்று தான் அவளை வெளியே அழைத்து வந்திருக்கிறான். ஏற்கனவே மனதளவில் சோர்வாக இருக்கும் அவளுக்கு உடலளவிலும் சோர்வை உண்டாக்கி விட்டான் விக்னேஷ். 


கணவன் மனைவியாய் கூடி கட்டிலில் என்று நீங்கள் நினைப்பது போல் இல்லை.  


நம்ம பவதாவிற்கு மலை ஏறுவதென்றால் பயம். அதுவும் வளைந்து வளைந்து அந்தக் கொண்டை ஊசியில் போகும் போதும் சுத்துமே ஒரு சுத்து. அப்பாஆ..... அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும், தலைசுற்றலும் வாந்தியும். இரண்டும் சேர்ந்து நம்ம குடலை வெளியே கொண்டு வந்து போட்டு விடும். 


நீங்க நினைக்கலாம். காரில் தான வந்திருப்பார்கள். ஆங்கங்கே நிறுத்தி ஓய்வெடுத்து வந்திருப்பார்களே என்று. அது தான் கிடையாது. கார் அவனுடயை நண்பனுடையது. இப்பொழுது அவெ தங்கி இருக்குற வீடும் அவனோடது இல்லை. அனைத்தும் வாடகைக்கு.  


அப்படியெனில் எப்படி வந்தாங்கன்னு நீங்கக் கேக்கலாம். அவர்கள் வந்திறங்கியது பஸ்ஸில். அதுவும் கவர்மெண்ட் பஸ். அவரிடம் சென்று 'டிரைவர்... டிரைவர்... எனக்கு வாந்தி வருது, கொஞ்சம் ஓரமா நிப்பாட்டுங்க' என்று சொல்ல முடியுமா?. முடியாது. அதே நேரம் 'கொஞ்சம் மெதுவா ஓட்டங்க' என்றும் சொல்ல முடியாது. 


'

இது பத்தாதுன்னு பஸ்ல படம் வேற ஓடீட்டு இருந்தது. அதுவும் மைனா படம். அந்தப் படத்துல பஸ் மல உச்சில இருந்து பள்ளத்தாக்குள்ள கவுருமே அந்த ஸீன பாத்துக்கு அப்றமும் பவதா பயப்படாம இருந்தான்னா அது அதிசயத்துக்குரிய நிகழ்வு. 


'ஏம்பா ஒரு போலிஸ் காரனா இருந்துட்டு பொண்டாட்டிய சொகுசா கூட்டீட்டு வரத் தெரியல. நீ எல்லாம்... ச்ச.' 


"ஆக்சலி நா போட்ட ப்ளான் வேற. பட் நடந்தது வேற. என்ன பண்ண நாம ஒன்னு நினைக்கக் கடவுள் நமக்குன்னு இன்னொன்ன பண்ணி விட்டாரு. அதா ஊட்டிக்கி வந்தோம். இவள மாத்திடலாம்னு நம்பி வந்தது தப்பு தா. ஆனா புதுசு புதுசா ஆளுகள பாத்தா பவதா மனசு மாறும்ன்னு சுமதி சொல்லுச்சி. தாய் சொல்லத் தட்டக்கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத் தா வந்தேன். மத்தவங்கள பாத்தாதான மாறும், நா பாக்கவே மாட்டேன்னு ரூம்க்குள்ளையே அடஞ்சி கிடக்கா. என்ன பண்ண?." என்ற விக்னேஷின் மனக்குமுறல் யாருக்கும் கேட்கவில்லை. புலம்பிய படியே காரை ஓட்டினான். 


இரு புறமும் பைன் மரங்கள் சூழ்ந்திருக்க, அதன் நடுவே கார் சென்று கொண்டிருந்தது. காரின் உள்ளே நிசப்தம் நிலவியது. மிதமான வேகத்தில், இதமாய் இயற்கையை அனுபவித்தபடி ஓட்டி வந்தான் விக்னேஷ்வரன்.‌ 


காரின் ஜன்னல் கண்ணாடியைத் திறந்து கொண்டு ஓட்ட, குளிர்ந்த காற்று காரை நிரப்பியது. பவதா வேகமாக அவள் புறம் இருந்த கண்ணாடியை மூடிவிட்டு முறைத்தாள் அவனை. 


‘காத்து காதுக்குள்ள போச்சின்னா காது வலிக்கும். எனக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சி தான நீ கண்ணாடிய இறக்கி விட்ட. ஒழுங்கா மூடீடு. இல்ல உடச்சிடுவேன்.‘ என மனைவியின் மிரட்டலை எதிர் பார்த்தவனுக்கு முறைப்பு மட்டுமே கிடைத்தது. 


"ம்... நல்ல இயற்கை காத்து. சென்னைல தூசி பறக்க வீசுற காத்துக்கும் இதுக்கும் எவ்ளோ வித்தியாசம் பாத்தியா. அப்பப்ப இந்த மாறி இயற்கைய ரசிக்கனும் பவதா. என்ன கேட்டா எல்லாரும் அவங்கவங்க குழந்த குட்டியோட வர்ஷத்துக்கு ஒரு வாரம் மாச்சும் எங்கையாகப் போகனும். அப்பதா நம்ம மிஷின் லைஃப்ல இருந்து நமக்கு ரிலாக்ஸ் கிடைக்கும்.‌ நா சொன்னது சரிதான பவதா."‌ எனத் திரும்பித் தன் மனைவியைப் பார்க்க, அவள் எவ்வித உற்சாகமும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.  


'யாரு இவன் கூட்டீட்டு போகப் போறானா. இப்ப ஸ்டேஷன்ல இருந்து ஃபோன் வந்தாக் கூடப் பொண்டாட்டிய நடு ரோட்டுல இறக்கி‌ விட்டுடு போக யோசிக்காத‌ இவன் லாம் கருத்து சொல்றான் பாரேன்.'‌ என்பதை போல் அவனை ஒரு பார்வை திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள். 


"எவன் எங்கிட்டு போனா எனக்கென்ன, ஏன்டா வெட்டியா பேசி எங்கழுத்த அறுக்குறன்னு உன்னோட மைண்ட் வாய்ஸ் எனக்கு நல்லா கேக்குது. அதுக்காக நா பேசாமல்லாம் வர முடியாது." என ஓரக் கண்ணால் அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்க்க,


அவளோ தன் இடது கையைத் தலைக்கு முட்டுக் குடுத்து. 'போதும்ப்பா என்ன விட்டுப்பா.' என்பது போல் அமர்ந்திருந்தாள். அதைக் கண்டவனுக்கு புன்னகை வந்தது. 


"பவதா, நம்ம லைஃப்ல இந்த நொடி கூட நம்மளோடது இல்ல. ஏன்னா எப்ப எது நடக்கும்னு நம்மலால கணிக்கவே முடியாது. பட் அத கடந்து போகலாம். மறக்க முடியாது தா. ஆனா முயற்சி பண்ணனும்ல." என்றான் அவன் இறைஞ்சலாக. 


நாட்கள் பல ஓடி விட்டன. ஆனாலும் தன்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொள்ள முயன்றான் என்பதை மறக்கத்தா முடியவில்லை அவளால்.


சில கொள்ளைக்கார, கொலைகார கும்பலால் அவள் கடத்தப்பட்டு. அவர்களில் ஒருவன் தன்னிடம் அத்துமீற முயன்றது என எதையும் மறைக்க முடியாது, மற்றவர்களுக்காகத் தன் கஷ்டங்களை மறைந்து முகத்தில் சிரிப்பைப் பூசிக் கொண்டு சாதரணமாகத் தன்னை காட்டிக் கொண்டாலும், அவளின் பேச்சு முற்றிலும் குறைந்து போய் இருந்தது. அனைவரிடமும் ஒற்றை வரியில் பதில் சொல்லத் தொடங்கினாள். 


புன்னகை, அது தொலைந்து போய் இருந்தது. வெளி ஆட்களை முற்றிலும் தவிர்த்தாள். முக்கியமாகப் பிற ஆண்களைப் பார்க்கவே விருப்பம் இல்லாது போக, வீட்டாரையும் நண்பர்களையும் தவிர மற்ற யாரையும் பாக்கவோ பழகவோ அவள் தயாராக இல்லை. அது விக்னேஷிற்கு ஏற்புடையதாக இல்லை. 


அவளின் மனம் முழுதாக அதை மறக்க வேண்டும். அதற்கான காலம் தந்து காத்திருக்கிறான். இதுவரை உடலால் நெருங்காது விலகியும், மனதால் அவள் உடனேயே இருக்கிறான். ஆனால் எத்தனை நாட்களுக்குக் கூடவே இருப்பது. அவனுக்குப் பழைய பவதா வேண்டும். குறும்பும் சுட்டித்தனமும் நிறைந்த சேட்டைக்காரியாய், தன்னிடம் மட்டும் அவள் காட்டும் குழந்தைத்தனமான முகம், தன் மார்பை முத்தமிட்டு அணைத்து அவள் உறங்கும் இதம், முக்கியமாக அவள் கன்னக்குழி விழச் சிரிக்கும் அவளின் சிரிப்பு வேண்டும். 


தங்களின் முதல் ஹனிமூனுக்காகச் சென்ற ஏற்காட்டில் குளிர் என்று சொல்லித் தன்னை ஒட்டி உரசி நடந்த தன் மனைவி, இங்கு ஓரடி தூரம் தள்ளிச் சால்வை போர்த்தியபடி தனியே நடப்பது காதல் கணவனான அவனுக்கு வலியாகத்தான் இருந்தது. 


"பவதா, நா என்ன சொல்றேன்னா."


"நாம நாளைக்கே ஊருக்குக் கிளம்பிடுவோம். அதுக்கு அடுத்த நாளே நா காலேக்கி போறேன். ஓகே வா." என்றாள். 


"ம்ச்... நா என்ன சொன்றேன் நீ என்ன பேசுற."


"உனக்கு அதான வேணும். அப்படியே செய்றேன். "


"பவதா, நீ தான் சொல்லிருக்க. நாம எது பண்ணாலும் நமக்காகத் தா இருக்கனும். அடுத்தவங்களுக்காக இருக்க கூடாது ன்னு. இப்ப நீயே எனக்காகக் காலேஜ் போறேன்னு சொல்ற‌."


"நீ என்னோட புருஷெந்தான. அடுத்தவெ இல்லைல."


"நீ காலேஜ் போறதுனால உன்னால அத மறந்திட முடியுமா?. அங்கையும் நீ ஒதுங்கி ஒதுங்கியே தா இருப்ப. எதுவும் மாறப் போறது கிடையாது. நடந்ததுல இருந்து நீயா வெளில வரனும்னு நா விரும்புறேன் பவதா. புரிஞ்சிக்க பவதா. நீ சந்தேஷமா பழயபடி இருக்குனும்.‌" 


"இப்பயும் நா சந்தோஷமாத்தா இருக்கேன்." என்றாள் எங்கோ பார்த்தபடி. 


"நீ ஹப்பியா இருக்குற மாறிக் காட்டிக்கிற. ஆனா நீ படுற கஷ்டம் எனக்குத் தெளிவா புரியுது. அதுனால தா நீ அத கடந்து மறந்து போகனும்னு ஆசப்படுறேன்.‌ ப்ளீஸ் எனக்காக." என அவளின் தோளில் கை வைக்க, அவ்வளவு தான் படபடவெனப் பொரிய ஆரம்பித்து விட்டாள். 


"எப்படி விக்னேஷ் அத மறக்கச் சொல்ற?. என்னால முடியல. விட்டுங்க என்ன. இப்ப நினைச்சா கூட எனக்குப் பயமா இருக்கு." எனத் தேவையற்ற நினைவுகளை மறக்க முடியாமல் கண்டபடி பேசித் தன் விரல்களால் முகத்தை மூடிப் பெருங்குரலில் அழ, விக்னேஷ் சமாதானம் செய்தான். 


அப்போது அவனின் அலைபேசி இசைத்தது. அதை எடுப்பதா இல்லை மனைவியைச் சமாதானம் செய்வதா எனக் குழம்பியவன் ஃபோனை எடுத்துப் பேசினான். 


அந்த ஃபோனில் மனோகர் அந்தச் சுருதி என்று பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தான். ஒரு கை ஸ்டேரிங்கிலும், மறு கை மனைவியின் தோளில் கிடந்து ஆறுதல் சொல்ல, கவனம் ஃபோனிலும் இருந்தால் என்ன ஆகும். சொல்லுங்கள்?. 


கடைசியில் அவன் கார் ஓட்டிக் கொண்டிருப்பதை மறந்து விட்டான். 


_______________


"கௌதம், அந்தக் கடைல போய் ஒரு சோடா வாங்கிட்டு வர்றியா. ப்ளீஸ்." எனப் பாவமாகக் கேட்டவளின் கையில் சில பல எலுமிச்சம் பழங்கள்.‌ சம்மணமிட்டு முதுகு தண்டு விறைக்க அமர்ந்திருந்தாள் ஹரிணி ஒரு பாறையின் மீது. உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன. 


'மந்திராவாதியா மாறிட்டாளா!. இல்ல சீனியே போடாம ஜூஸ் செய்வது எப்படின்னு டெமோ காட்ட போறாளா. தெரியலயே.' 


கௌதம் சென்று அவள் கேட்டதை வாங்கி வர, அதைக் குடித்தவள் அனைத்தையும் துப்பி விட்டாள். ஸாரி... வாந்தி எடுத்து விட்டாள். எலுமிச்சையை எடுத்துத் தன் மூக்கில் வைத்து நுகர்ந்தவள்,


"இத மோந்து பாத்தா வாந்தி வாராதுன்னு பூவத்த சொன்னாங்களே. ஆனாலும் வருது.‌ பொய் சொல்லிட்டாங்க போல.‌" 


"உனக்குதா உடம்புக்கு முடியலைல. ரூம்ல இருந்து ரெஸ்ட் எடுத்தாத்தா என்னவாம். உடனே போகனும் அடம்பிடிச்சி ஊர் சுத்த கிளம்பிட்ட. லூசு."


"நா ஊர் சுத்த ஒன்னும் வரல, இன்வெஸ்ட்டிகேட் பண்ண வந்திருக்கோம். லைட்டா தலை சுத்திடுச்சி. அந்த ஜீப் காரனுக்கு ஓட்டவே தெரியல. உளுக்கி எடுத்துட்டான். அதான். "


"இதுக்கு தா நா கார்ல வரலாம்னு சொன்னேன். எங்க போனாலும் நம்ம கிட்ட கார் இருந்திருக்கும். இப்படி ஆட்டோக்கும் ஜீப்புக்கும் அழைய வேண்டி இருந்திருக்காது. அட்லீஸ்ட் நாம தங்கிருக்குற ஹோட்டல் காரென் சொன்ன காரையாது ரெண்ட்டுக்கு எடுத்துருக்கலாம். எல்லாத்துலையும் பிடிவாதம்."


"ம்ச்... கார்ல உக்காந்து ஒய்யாரமா சுத்த இது ஒன்னும் சென்னை கிடையாது. காலார நடந்து ஒரு ஒரு இடத்தையும் ரசிச்சி பாக்கனும். அப்பதா இயற்கைய பாத்த ஃபீல் கிடைக்கும்." என ஆழ மூச்சை இழுத்து விட, மீண்டும் குமட்டியது. 


"இதுக்கு முன்னாடி நீ மல ஏற்னதே இல்லையா. என்ன புதுசா வாந்தில்லாம் எடுக்குற?. உன்ன சொகுசா ட்ரெயின்ல கூட்டீட்டு வந்திருக்க கூடாது. இருக்குற ஹர்பின் பெண்டுல எல்லாம் உன்ன சுத்த விட்டுக் கூட்டீட்டு வந்திருக்கனும்." எனத் திட்ட,


"ம்ச்... நா நல்லாதா இருக்கேன் கௌதம். மதியானம் நாம சாப்பிட்ட சாப்பாடு தா சேரல. அதா வாந்தி. இந்தச் சின்ன விசயத்துக்கால்லாம் விசாரணைய ஒத்தி வைக்க முடியுமா. சொல்லு. வந்தோமா. வேலய பாத்தோம்மான்னு இருக்கனும். அத விட்டுட்டு வெட்டியா இருக்குறது எனக்கு என்னைக்கும் பிடிக்காது."


"யாரு நீ விசாரண பண்ணீட்டு இருக்க? இத நா நம்பனும். ம்... வந்ததுல இருந்து திங்க வேண்டியது அப்றம் அது செமிக்க எங்கையாது காலார நடந்து போக வேண்டியது. இத தவிர வேற எதையாது நாம செஞ்சிருக்கோமா. சொல்லு."


" டேய், நாம நேத்து மதியம் தான்டா வந்தோம். ஒருநாள் கூட முழுசா முடியல. அதுக்குள்ள பத்து பதினைஞ்சி நாள் உன்ன கூட்டீட்டு வெட்டியா சுத்தி உன்னோட நேரத்த வேஸ்ட் ஆக்குன மாறிப் பேசுற. நாளைக்கி காலைல போய்ப் போலிஸ் ஸ்டேஷன்ல கேப்போம். "


"நீ என்ன அவன் கைல வச்சிருக்குற பிஸ்கெட்ல பங்கா கேக்கப் போற. நீ கேட்டதும் போனா போதும்னு பிச்சி குடுக்க. நாந்தா அப்பவே சொன்னேனே. அது நடந்து இருபது வர்ஷத்துக்கு மேல ஆகிருச்சி. இப்ப அத விசாரிக்கிறது வேஸ்ட். உன்ன ஸ்டேஷன் வாசல் கூட நிக்க விடாம தொரத்தி விடப் போறானுங்க. அதுக்குள்ள நாமலே போய்டலாம் ஊருக்கு. வா ரெண்டு நாள் இருந்துட்டு வீடு போய்ச் சேருவோம்."


"நா முன் வச்ச கால பின் வைக்கமாட்டேன்." என வீரவசனம் பேச, கௌதம் சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்தான். 


"சரி... சைடுலையும் வைக்கமாட்டேன். போதுமா!." ஹரிணி 


"உனக்குக் காலே தேவையில்லங்கிறேன். நீ அதை எடுத்து வேற வைக்கப் போறியாக்கும். "


"ம்ச்... இந்த மாறிக் கஷ்டமான விசயத்த கண்டுபிடிக்க நமக்கு முக்கியமா ரெண்டு விசயம் தேவ. "


"என்னதது?."


"ஒன்னு பொறும. நம்மலோட கோபத்த தூண்டி விடுற மாறி உசுப்பேத்தி பேசி நம்மல விரட்டி விடப் பாப்பாங்க. நமக்குக் காரியம் தா முக்கியம். அது நடக்குற வரைக்கும் நமக்குப் பொறும முக்கியம்."


"அப்றம்..." என்றவனுக்கு பொறுமைனா என்னவென்று தெரியாது போலும். 


"அடுத்து ஃப்ரண்டு பிடிக்கனும். கிடைக்கிற சந்தர்ப்பத்தம் எதுவா இருந்தாலும் அத யூஸ் பண்ணிக்கனும். அதுக்கு நாம எல்லார்கிட்டையும் ஃப்ரெண்ட்ஸ்ஸா பழகி அவங்களோட உதவிய வாங்கி நம்ம இலக்க அடையனும். "


" ம்... சரி... நீ இங்கையே உக்காந்து உனக்கு உதவி செய்யுற இளிச்சவாயனா பாத்து கண்டு பிடி. நா போறேன்." எனச் சற்று கோபமாகவும், அழுத்தமாகவும் சொல்லிச் சென்றான் கௌதம். 


கௌதமிற்கு இங்கு வந்ததில் இருந்தே மனமானது படபடத்தது. அறையில் முடங்கிக் கிடக்க நினைத்த அவனைப் பார்கவியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றாள் ஹரிணி. கணத்த மனதுடன் கண்ணீர் வடிய நின்றவனை அப்படியே விடாது அவர்களின் வீடு, பள்ளியென அவனின் சிறு பிராயத்து நிகழ்வுகளை நினைவு படுத்தும்படி ஹரிணி நடந்து கொள்ள, அவனுக்கு அது மன அழுத்தத்தைத் தந்தது. அதனால் தான் அவளுடன் சண்டையிட்டுக் கொண்டு சென்றான். 


ஆனால் அவனைத் தனித்து விடாது பின்னாலேயே கத்திக் கொண்டு சென்றாள். எப்படியாவது பார்கவியின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் அவனைப் பின் தொடர்ந்தாள் ஹரிணி.


அவளுக்கு ஏற்ற இளிச்சவாயனையும் கண்டு பிடித்து உதவியும் கேட்டுள்ளாள். ஸாரி லஞ்சம் கொடுத்துத் தகவல்களைக் கேட்டுள்ளாள். அவன் ஒரு நாள்குறித்து கொடுத்து அந்த நாளில் தன்னை பாக்க வரச் சொன்னார். அந்தாளை நம்பித்தான் கௌதமை இங்கு அழைத்து வந்துள்ளாள். பார்கவி மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டு பிடிக்கிறேன் என்று. 


சுருதி, பார்கவியென இரு மரணங்கள். அதை விசாரிக்கவென இரு ஹீரோக்கள். அந்த இரு மரணமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையா!. இல்லை தொடர்புடையவையா!. பார்க்கலாம். 


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 2

விழி 4

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...