முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 4


 

அத்தியாயம்: 4


சுற்றி பெயர் தெரியாத மரங்கள், அதில் எழுந்த பறவைகளின் கீச்சொலி, அங்கென்றும் இங்கென்றுமாய் கூட்டம் போட்டு நம்மை மிரட்டும் குரங்குகளென அனைத்தையும் ரசித்தவள், எங்கிருந்தோ ஒரு பூவைப் பறித்துத் தன் கையில் வைத்துக் கொண்டு அதை ஆராய்ந்த படியே நடந்து வந்தாள் ஹரிணி. கௌதம் அவள் செய்யும் சேட்டைகளைப் பார்க்காமல் அவளுக்குச் சில அடி தூரம் இடைவெளியை விட்டு முன்னே நடந்தான்.‌


"கௌதம் இந்தப் பூக்கு பேர் என்னன்னு தெரியுமா உனக்கு?. பாக்க தாமரப்பூ மாறியே இருக்கு. ஆனா தாமரையோட பூவிதழ் கொஞ்சம் பெருசா அகலமா விரிஞ்சி இருக்கும். இதோடது கொஞ்சம் ஒல்லியா நீளமா இருக்கு. இது லைட் ரெட் கலர்ல இருக்கு. ஒருவேள தாமரைக்கி ஒன்னுவிட்ட தங்கச்சி பூவா இருக்குமோ?. ஒரே குடும்பம். இது என்னன்னு உனக்குத் தெரியுமா?. ஏய் உன்னதா!. தெரியுமா.?  தெரியாதா?. பதில் சொல்லுடா." எனத் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தவனை அழைக்க, அவன் கடுப்புடன் திரும்பினான்.‌


"இதுக்கு பேரு லில்லி. தாமர கிடையாது. லில்லி நைட் தா பூக்கும் பகல்ல இந்த மாறிக் கூப்பி இருக்கும். தாமர அப்படியே ஆப்போசிட்.‌ லில்லியோட இலை தண்ணில மிதக்கும், பூவும் அப்படித்தா. ஆனா தாமரயோட இலை தண்ணிய விட்டுக் கொஞ்ச தூரம் மேல தூக்கி இருக்கும். பாக்க ரெண்டும் ஒன்னா தெரிஞ்சாலும் சைன்ட்டிஃபிக்கா சொல்லனும்னா ரெண்டும் வேற வேற பேமிலிய சேந்தது. தாமரைக்கி தங்கச்சி பூ கிடையாது." என மூச்சி விடாமல் தாமரை பூவைப் பற்றிப் பாடம் நடத்தினான் கௌதம்.


"போதும்... போதும். நல்லா புரிஞ்சிடுச்சி. இது லில்லி. தாமர இல்ல. அல்லி மலர்னும் சொல்லலாம் இத. சரியா. வா." என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.


"உனக்கு என்ன தா வேணும் ஹரிணி?. இத நீ மதி தோட்டத்துல பாக்காத மாறிக் கேக்குற. என்ன வேணும்னே வெறுப்பேத்துற மாறிப் பண்றியா. ச்ச... 'நீங்கக் கண்டிப்பா போனுங்க.'ன்னு சொல்லி வழி அனுப்பி வச்சா பாரு அவளச் சொல்லனும். உங்கூட சேந்து மதியும் கெட்டு போய்டா. நீ தா அவள்ட்ட ஏதேதோ சொல்லி வச்சிருக்க." எனத் திட்டிக் கொண்டே நடக்க, எங்கே அதை அவள் காதில் கேட்டால் தானே. அவன் நடக்க தொடங்கியதுமே நின்று விட்டாள். 


"ச்ச... பழைய டேபில் ஃபேன்ல வர்ற சத்தம் மாறிக் காதுக்குள்ள கீச் கீச்னு கத்துறான். ஒரு பூ பேர் என்னன்னு சந்தேகம் கேட்டது தப்பா!." என அவன் வெகுதூரம் சென்றதை உறுதி செய்தபின் நடக்கத் தொடங்கினாள். 


நல்ல வெளிச்சமாக இருந்த அந்த இடம் திடீரெனப் பனியால் சூழப்பட்டது. தன் முன் சென்ற கௌதம் அந்தப் பனியில் மறைந்து காணாமல் போனதை கண்டாள். தன் கண்முன்னே நடக்கும் அந்த விந்தையை கண்டு குதுகலித்தாள்.


 சாலை இரண்டாகப் பிரியும் அந்த இடத்தில் அவளின் கவனம் சாலையில் கிடந்த ஒன்றின் மீது பட்டது. நட்ட நடு சாலையில் எழ முடியாமல் கிடந்தது ஒரு குட்டி பறவை. 


மரத்தில் இருந்த அதன் கூட்டிலிருந்து விழுந்திருக்க வேண்டும். கால் ஊன முடியாமல் இருந்ததால் அதால் பறக்கவும் முடியவில்லை. சிறகை விரிப்பதும் பின் பெத்தெனக் கீழே விழுவதுமாகக் கிடந்த அதைக் கண்டவள் அதற்கு உதவ நினைத்தாள். 


மூடு பனி நிலவியதால் பயணம் செய்யும் வாகனங்கள் அனைத்தும் தங்கள் முகப்பு விளக்கை. அதாவது ஹெட் லைட்டை ஆன் செய்தபடி ஓட்டிச் சென்றனர். ஏனெனில் அந்தப் பனி எதிரில் இருப்பவர்கள் யாரென அடையாளம் காண விடாத அளவுக்கு அடர்த்தியாக இருந்தது. அதனால் வாகனத்தின் வருகையை விளக்குக்கின் மூலம் பிறர் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிக்க வேண்டியதாயிருத்து. 


சுற்றி முற்றி பார்த்தவள் வாகனம் எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு சாலையின் நடுவே செல்ல, தொலைவில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதில் ஹெட்லைட் இல்லை. காரின் நிறமோ வெள்ளையாக இருந்ததால் அருகில் வந்தபின் தான் உணர்ந்தாள் ஹரிணி அந்தக் காரை. 


சட்டென அந்தப் பறவையைத் தன் கையில் தூக்கிக் கொண்டு கீழே குனிந்து அமர, கார் அவளை இடித்துத் தள்ளாமல் நிறுத்தப்பட்டிருந்தது. நல்ல வேளை தப்பி விட்டாள். 


"ஏய். ஃபூல். நீ விழுந்துசாக எவ்வண்டி தான் கிடச்சதா. எதாவது மல உச்சில இருந்து விழ வேண்டியது தான. இடியட்." எனக் கோபமாகக் கத்தியபடியே இறங்கினான் விக்னேஷ். ‌


திடீரென ப்ரேக் பிடித்ததால் உண்டான அதிர்வால் இருக்கையை விட்டு முன் சென்ற தன் மனைவியின் நலத்தை விசாரித்தபின் கீழே இறங்கி திட்டத் தொடங்கினான். அவள் ஷீட் பெல்ட் போட்டதால் அடிபட வில்லை.


முதலில் விழுந்தது ஆண் என்று தான் நினைத்தான். ஆனால் எழுந்தபின் தான் அதை உணர்ந்தான் விழுந்தது பெண் என்று. சில நொடிகள் தான் அமைதியாக இருந்தான். பின் மீண்டும் திட்ட, அவள் எதையும் காதில் வாங்காது அந்தப் பறவையைத் தான் அணிந்திருந்த கோர்ட்டின் உள்ளே அணைத்து பிடித்துக் கொண்டாள். 


"இவ்வளோ கேர்லஸ்ஸாவா இருக்குறது. இது ரோடுமா. உன்னோட வீடு கிடையாது. நீ விளையாடுற ப்ளே க்ரவுண்ட் இல்ல. கண்ணு தெரியாம நடு ரோட்டுல நடந்துட்டு மத்தவங்க உயிர எடுக்குறது. ச்சீ. என்ன பொண்ணோ." என அவன் திட்டியதை காதில் வாங்கினாலும் பதிலை அப்போது சொல்லவில்லை. மரத்தில் இருந்த ஒரு கிளையில் பறவையைப் பத்திரமாகக் கிடந்த, அவளின் செயலில் எரிச்சல் அடைந்தவன். 


"மனசுல உயிர் காக்கும் பரம தேவதன்னு நினப்பு. நா மட்டும் ப்ரேக் பிடிக்கலன்னா இன்னேரம் நீ செத்திருப்ப. முட்டாள்." என ஒருமையில் பேசித் திட்டினான். ஏனெனில் அவன் கீழே இறங்கியபோது ஹரிணி அவனைப் பார்த்த பார்வையில் அப்பட்டாமான அருவருப்பு தெரிந்தது, 'நீயெல்லாம் மனுஷனா' என்பது போல். 


அவள் தன்னை மதித்துப் பேசவில்லை என்பதால் விக்னேஷும் அவளைத் திட்டிக் கொண்டே காரில் ஏறப் பார்க்க, அவனைச் சொடக்கிட்டு அழைத்தாள் ஹரிணி. 


சத்தம் கேட்டவனுக்கு கோபம் வந்தது, அவள் அழைத்த விதத்தில். 'என்ன ஒரு திமிரு' என மெல்லிய கோபத்துடன் திரும்பி ஹரிணியை பார்க்க, அவள் தன் ஆட்காட்டி விரலை அசைத்து அருகில் வரும் மாறு அழைத்தாள். கையில் வேறொரு பெரிய கல். 


'உன்னோட மண்டையா இல்ல காரோட கண்ணாடியா?. நீயே முடிவெடு. இன்னைக்கி எதாவது ஒன்னு உடஞ்சே ஆகனும்.' என்பது போல் ஓங்கி கொண்டு நிற்க,


"ஏய்!. யார சொடக்கு போட்டுக் கூப்பிடுற. நா யாருன்னு தெரியுமா?. எதோ தெரு நாய கூப்பிடுற மாறிக் கூப்பிடுற. ஒழுங்கா வழிய விட்டு விலகிப் போய்டு. இல்லன்னா நடக்குறதே வேற." விக்னேஷ். 


"எது நடந்தாலும் நா அத பாக்க ஆர்வமாத்தா இருக்கேன். நீ ஓட்டீட்டு வந்த லட்சணத்துக்கு நா உனக்குக் குடுத்த மரியாதையே ஜாஸ்தி. நீ கார் தான ஓட்டீட்டு வர்ற. இல்ல ப்ளைட்டா. கண்ணு தெரியாதுன்னா கார ஓட்டக் கூடாது. காருக்குள்ள உக்காந்துட்டு தா வரனும். 


எந்த ஊர்ல ப்பா டிரைவிங் கத்துக்கிட்ட. வண்டிய ரொம்ப அழகா ஓட்டுற. வாவ். சூப்பர்." என நக்கலாகக் கைத்தட்டி சிரித்துக் கொண்டே சொல்ல, 


"ஏ நீயும் போய்க் கத்துட்டு வந்து ஓட்டப் போறியா என்." என நக்கலாக வந்த குரல1, விக்னேஷுடையது அல்ல, பவதாவுடையது. ஹரிணி அழைத்த விதம் பவதாவை உசுப்பேற்ற, எழுந்து வந்து விட்டாள் தன் கணவனுக்குச் சப்போட் செய்ய.


"ஊடால வந்து விழுந்தது நீ. தப்ப உம்பேல வச்சிட்டு விரல் சுண்டி கூப்பிடுற. அவரு யாருன்னு தெரியுமா உனக்கு.? இத்தன வாய் பேசுற உம்மேல கார ஏத்தமா விட்டது அவரு தப்பு தா." எனப் பொரிய, விக்னேஷ் ஆச்சர்யமாகப் பார்த்தான். ஏனெனில் இங்கு வந்த அந்த ஒரு வாரத்தில் அவனிடம் பேசிய வார்த்தைகளைவிட இந்த ஒரு நிமிடத்தில் பேசிய வார்த்தைகளே அதிகம். 


பேக் டூ பழைய பவதா. அதைத்தான் ஆச்சர்யமாகப் பார்த்தான். 


"ஓ!. மிஸ்டர் அமெரிக்கன் ப்ரஷிடெண்ட். நீங்களா!. நீங்கக் குடும்பத்தோட இந்தியாக்கு வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அமெரிக்கால பிறந்த உங்களுக்கு இந்தியன் ரோடு ரூல்ஸ் தெரியாதுல்ல. அதா தப்பு பண்ணிட்டு எம்மேல பழி போடுறிங்க." 


"ஏய்.! யாரு ரோடு ரூல்ஸ் ஃபாலோ பண்ணல. நாங்க சரியாத்தா வந்தோம். நீ தா ஊடால வந்த. அந்தப் பறவைய காப்பாத்தி நல்ல பேர் வாங்கனுங்கிற பேராசைல உன்னோட உயிர அநியாயமா விட்டுடுப்ப. செய்றதெல்லாம் அறிவு கெட்ட தனமா செஞ்சிட்டு எம்புருஷன்ட்ட நக்கலாவா பேசு.‌" எனப் பவதா திட்ட. 


" ஓ!. உங்க புருஷெ தப்பே பண்ணலைல. ம்... உங்க கண்ணுக்கு அங்க இருக்குற ஃபோர்டு தெரியுதா.? அதுல என்ன எழுதிருக்குன்னு கண்ணுக்குத் தெரியுதா?. ஸ்பீடு லிமிட் எழுதிருக்கு. நீ வந்தது ஓவர் ஸ்பீடு. அதுமட்டுமில்ல ஹெட்லைட் போடல. ஹாரன் அடிக்கல. மலைபாதைல கார் ஓட்டனுமனா கவனாமா ஓட்டனும். ஃபோன் பேசிட்டு ஓட்டக் கூடாது. இப்படி தப்ப உங்க மேல வச்சிட்டு இப்புட்டு வாய் ஆகாது உனக்கு." ஹரிணியும் விடுவதாக இல்லை. பவதாவும் விடவில்லை.


தன் பின்னால் வந்து கொண்டிருந்தவளை காணாது தேடி வந்த கௌதம். ஓண்டி புலியாய் ஹரிணி சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான். அவன் மட்டுமல்ல அவர்களின் சண்டையை அங்கிருந்த மக்கள் சிலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, கௌதம் உள்ளே புகுந்தான். 


"ஹரிணி ஸ்டாப்... ஸ்டாப் இட். என்ன ஆச்சி?. ஏ கைல கல்லோட நிக்கிற?. கீழ போட்டுடு வா... " என வந்து சமாதானம் செய்தான்.


"மேடம் வீடு கட்டப் போறாங்க. அதா கல்ல கைல எடுத்து வச்சிருக்காங்க. மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருந்து தப்பிச்சி வந்தவளா இருக்கும்னு நினைக்கிறேன்.‌ இந்த வாயாடிக் கூட வந்தது நீங்கத் தானா ஸார். கூட்டீட்டு போங்க பத்திரமா." எனக் கொஞ்சம் சத்தமாகச் சொன்னவள் பவதா.


"முத்திப் போச்சி. இன்னைக்கி அமாவாசை இல்ல. அதா... லூசு இப்படி நடந்துக்கிது. இந்த மாறிக் கேஸ்ஸெல்லாம் வெளில விட்டா பலருக்கு ஆபத்து." என முணுமுணுக்க,



"ஏய்!. யார லூசுங்கிற. நீ தான்டி லூசு. அந்த மரத்துல உக்காந்திருக்குற உன்னோட கூட்டத்த விட்டு வந்த கொரங்கு நீ, என்ன லூசுன்னு சொல்றியா!. போ. போய்க் கூட்டத்தோட சேந்துக்க. இல்லன்னா விட்டுடு போய்டப் போறாங்க. அப்றம் அழுவ. உ...உ...உஉ..." எனப் பவதாவை குரங்குகள் ஒப்பிட்டுப் பேச, அவர்கள் இருவருக்கும் அந்த இடத்திலேயே குழாயடி சண்டை நடந்தது. என்ன! முடியைப் பிடித்துக் கொண்டு சண்டை போடவில்லை. அதைத் தவிர மற்ற அனைத்தும் நடந்து. 


"ஹரிணி, என்ன நடந்தது?. எதுக்கு அசிங்கமா ரோட்டுல சண்ட போடுற?. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். அமைதியா இரு." என ஹரிணியை அடக்க முயல, அது முடியவில்லை. 


"நா சண்ட போடல கௌதம். இந்த லண்டி தா சண்டைக்கி வர்றா. கண்ட படி கார் ஓட்டீட்டு வந்தது இதுகதா. இதுல என்ன திட்டுறானுங்க. நீ போலிஸ்க்கு கால் பண்ணு. கொஞ்ச நாளாது ஜெயில் இருந்தாத்தா இதுகளுக்கு புத்தி வரும்." ஹரிணி 


"ஏ போலிஸ் என்ன உங்க வீட்டு செல்லப் பிராணியா. நீ சொன்னதும் உடனே பூம்பூம் மாடு மாறித் தலைய ஆட்டீட்டு வந்து எல்லா வேலையையும் செய்ய. இரிட்டேட்டிங் இடியட்." எனப் பவதாவும் நக்கலாகப் பேச, விக்னேஷ் கையைக் கட்டிக் கொண்டு டீவியில் ரெஸ்லிங்‌ மேட்ச் பார்ப்பது போல் தன் மனைவியின் ஆட்டத்தை ரசிக்கலானான். 


பவதா, ரோட்டில் இறங்கி சண்டை போடும் ரகம் அல்ல. பயந்த சுபாவம் கெண்டவள். இன்று தன் இயல்பை மீறி நடக்கிறாள் என்றால் அது விக்னேஷிற்காக மட்டும் தான். அதுவும் தன் கணவனை ஒரு பெண் விரல் சுண்டி  அழைத்து அவமதிப்பதா என்ன கோபம் தான் காரணம். 


விக்னேஷிற்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால் அவளைத் தைரியமான பெண்ணாக மாற்ற வேண்டும் என்பது தான் அவனின் விருப்பம். 


"ஹரிணி வா போலாம். வீணா எதுக்கு சண்ட போடுற. வா." எனத் தோளில் கைப்போட்டு அணைத்தபடி இழுத்துச் செல்ல, பவதா ஹரிணியை ‌பார்த்து நக்கலாகச் சிரித்தாள். ஹரிணி முறைத்தாள். 


சரி கைல கல்ல எடுத்தாச்சி. எதிர காரும் இருக்கு. ரொம்ப நேரமா வாயாடுற அவளோ‌ட புருஷனும் இருக்கான். எடுத்தத கீழ போட அவளுக்கு விருப்பம் இல்லை. இதுனால உடச்சிட்டு போவோம்னேன்னு. உடச்சிட்டா. விக்னேஷ் மண்டையை இல்லை. காரின் கண்ணாடியை. விக்னேஷூம் பவதாவும் அதிர்ந்து போய்ப் பார்க்க, காரை ஒரு வழியாக்கி விட்டுதான் சென்றாள் ஹரிணி. 


விக்னேஷ் மட்டும் சரியான நேரத்தில் காரை நிறுத்தவில்லை என்றால், ஒன்று ஹரிணி உயிருடன் இருந்திருக்கு மாட்டாள். இல்லையேல் கார் எதிலாவது மோதி விக்னேஷ் பவதா என இருவருக்கும் அடிபட்டிருக்கும். இதில் இருவர் மீதும் தவறு உள்ளது. ஆனால் ஒத்துக் கொள்ள தான் தயாராக இல்லை, இருவருமே. 


"அவளுக்கு எவ்ளோ திமிரு பாத்திங்களா. சரியான பஜாரியா இருப்பா போல். எவ்ளோ தைரியம் இருந்தா நம்ம கார ஒடப்பா. அவள சும்மா விடக் கூடாது விக்னேஷ். அவா யாரு என்னனு முதல்ல கண்டு பிடிக்கனும். உனக்கு யாருன்னு தெரியுமா?. என்னோட முதல் வழக்கு இ‌தாத்தா இருக்கனும்." எனத் திரும்பித் தன் கணவனைக் கேட்டாள் பவதா. கண்ணாடி மட்டும் தான் இல்லை. மற்றபடி கார் நன்றாக ஓடியது. எனவே விக்னேஷ் காரை ஸ்டார்ட் செய்து எறி அமர்ந்தான். 


" தெரியாது பாப்பா. நா வேண்ணா குடுகுடுன்னு ஓடிப் போய்ப் பேரு வீட்டு அட்ரஸ்ஸு ஆதார் கார்டு டீரெய்ல்ஸ்னு எல்லாத்தையும் கேட்டு வாங்கிட்டு வரவா. ம்..." கேலியாகவும் குதுகலாமகவும் கேட்டான். 


"உனக்குக் கிண்டலா இருக்கா!. எல்லாம் உன்னால தா. எதுக்குடா ப்ரேக் போட்ட. அவா மேல ஏத்திருக்கலாம்ல. ச்ச. ஒரு பொண்ணு உன்ன விரல் சுண்டி கூப்பிட்டுருக்கா. அவள நீ சும்மா விட்டுட்டு வந்திருக்க. நீ எல்லாம் போலிஸ்காரென் தானா. இல்ல சும்மா காக்கி டிரெஸ்ஸ போட்டுட்டு ஊர ஏமாத்துறியா. எங்கப்பா ஏமாந்துட்டாரு போல. போலிஸ்காரெந்தா மருமகனா வரும்னு ஆசப்பட்ட அவருக்கு ஒரு பயந்தாங்கொள்ளி வந்து மருமகனா வாச்சிட்டான். ச்ச... நல்லா ஏமாந்துட்டாரு." என நிறுத்தவே இல்லை பேச்சை, அவர்கள் தங்கி இருந்த வீடு வந்து சேரும் வரை பவதா ஹரிணியை வசைபாடிக் கொண்டே தான் வந்தாள். 


விக்னேஷ் தங்களிடம் சண்டை போட்டுச் சென்ற ஹரிணியையும் அவளை இழுத்துச் சென்ற கௌதமையும் கண்டு பிடிக்க முடிவு செய்தான். வழக்கு போடுவதற்காக இல்லை. தன் பவதாவிற்காக. அவளின் இயல்பான குணத்தை வெளிக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி ‌சொல்லத் தேடி கண்டுபிடிக்க நினைத்தான். 


'பத்து நிமிசம் ஒன்னா இருந்ததுக்கு இதுக இப்படி சண்ட போடுதுகன்னா. ஒன்னா ஒரே வீட்டுல இருந்தா என்ன ஆகும்' என நினைத்தபடி காரை எடுத்துச் சென்றான் விக்னேஷ் மெக்கானிக்கிடம். 


"என்ன சொல்லுவ, நீ அவசரக் குடுக்க, ஆர்வக் கோளாறு பொறுமையே கிடையாதுன்னு. இப்ப நீ என்ன பண்ணிட்டு வந்திருக்கியாம். யோசிக்காம கார் முன்னாடியா போய் விழுவ. அவெ மட்டும் ப்ரேக் போடலன்னா என்ன ஆகிருக்கும். ச்ச... டார்லிங், இதுக்கு முன்னாடி ஓகே. பட், இனியும் இப்படி இருக்காத. உன்ன நம்பி ஒரு கொழந்தைய பெத்து வச்சிருக்க. அதுக்கு நீ தேவ. ஏய் காது கேக்குதா. உன்னத்தா.‌‌" எனக் கத்திக் கொண்டே வந்தான் கௌதம். 


"ம். புரியுது. இனி நா நடு ரோட்டுக்கு போகமாட்டேன். போதுமா." என அவனின் பேச்சை நிறுத்தினாள். அவன் முறைக்கவும்.


"சரி விடு. பசிக்கிது. சாப்பிடலாமா." எனக் கேட்க,


"எதுக்கு தின்னுட்டு வாந்தி எடுக்கவா?." 


"அது அப்படா. இப்ப மாட்டேன் வா." என அழைத்துச் சென்றாள். 


அவளின் நலன் கருதி இரு இட்லியை மட்டும் ஆர்டர் செய்து உண்டனர். 'இட்டிலியா.' என முகம் சுளித்தவள் புலம்பியபடியே உண்டாள். 


"இதுல எவ்ளோ சத்து இருக்குன்னு தெரியுமா?. உலக சுகாதார நிலையமே நம்ம இட்லிய புகழ்ந்து பேசுது. வெள்ளாவில வேக வச்ச வெள்ள கலர் இட்லிய சாப்பிடும்போது. நாம சொர்க்கத்துக்கு போகற மாறி உணர்வு வருவாம். இதுல." 


"டேய், அந்த இஞ்சி தின்னக் கொரங்கு மாறிச் சண்ட போட்டுச்சே ஒரு வாரணம். அதோட ஆட்டத்த பார்த்து ரசிச்ச அவளோட புருஷன நா எங்கையோ பாத்திருக்கேன். எங்கன்னு தா தெரியல." என யோசித்த படியே இட்டிலியை பிட்டு உண்ட அவளை முடிந்த மட்டும் முறைத்தான் கௌதம். 


'பின் கஷ்டப்பட்டு கூகுள் கிட்ட கேட்டு இட்டியோட நன்மைய தெரிஞ்சிக்கிட்டான். ஆனா அதைச் சொல்ல விடாம பண்ணிட்டாளேன்னு தா. கடுப்பு அவனுக்கு.' 



தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அன்பே 3


விழி 5



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...