முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 52

அத்தியாயம்: 52



கையில் செவ்வக வடிவ ஒரு சிறிய கார்டை வெகுநேரமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஹரிணியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. இதை முதலில் தன் பாவாவிடம் சொல்லத் துடித்தது மனம். ஆனாலும் ரிஷியிடம் சொல்வதா வேண்டாமா எனச் சிறிது நேரம் யோசித்தவள், பின் வேண்டாம் என்று முடிவு செய்து தன் துணிகளை அள்ளிப் பெட்டியில் அடுக்கி, அந்தக் கார்டையும் தூக்கி தன் கைப் பைக்குள் ஒழித்து வைத்துக் கொண்டாள். 


" எத்தன விசயத்த எங்கிட்ட இருந்து மறைக்கிறான். அதுனால நா அவனுக்கு இத சொல்லப் போறது இல்ல. நல்லா கதறட்டும். இந்தப் பத்து நாள் நா எங்க போறேன். என்ன பண்றேன்னு சொல்லமாட்டேன். இனி நா மீச வைக்காத ரிஷிதரன் மாறித்தா நடந்துக்க போறேன். யார் என்ன கேட்டாலும், வாய திறக்கவே மாட்டேன். ம்... சிப் போட்டு மூட்டிக்கிவேன். அப்பத் தா அவனுக்கு என்னோட அரும தெரியும். நல்ல பொண்டாட்டிய அவாய்ட் பண்றோமேன்னு புத்தி வரும். எரும." என ரிஷி திட்டிக் கொண்டே துணிகளை அடுக்க. 


"கிட், என்ன பண்ற.?" ரிஷி‌. அறையின் கதவில் சாய்ந்து நின்ற படி கேட்க, ஹரிணி திருதிருவென முழித்தாள். எங்கே நாம் ஒழித்து வைத்ததை கண்டு பிடித்து விட்டானோ என்ற படபடப்பு ஒரு நொடி வந்து சென்றது. ஆனாலும் பார்த்திருக்க மாட்டான் என்றெண்ணி அவனைத் திரும்பிப் பார்த்து விட்டுத் துணிகளை அடுக்க,


" கிட், நாங்கேக்குறேன் பதில் சொல்லாம என்னமோ செஞ்சிட்டு இருக்க. எங்க போகப் பேக் பண்ணிட்டு இருக்க?." என அவனும் திரும்பத் திரும்பக் கேட்கிறான். அவளோ! பதிலாக,


" நா போறேன் பாவா." என்பதைத்தான் சொன்னாள்.


" அதா எங்க போறன்னு கேக்குறேன்?."


" அது உனக்குத் தேவையில்லாதது பாவா‌." என்றாள் அவள் வெடுக்கென, கௌதமுடன் அவள் ஊட்டிக்கி செல்ல விருப்பதை அவளுக்கு ரிஷியிடம் சொல்லப் பிடிக்கவில்லை. அவர்கள் செல்லும் விசயம் தெரிந்தது மூன்று பேர் மட்டுமே. கௌதமோ ஹரிணியோ இதை ‌ரிஷியிடம் சொல்லப் போவதில்லை. கடைசியாக இருக்கும் இந்துவை மிரட்டி வைத்திருக்கிறாள். உன் பொத்தானிடம் சொல்லக் கூடாது என்று. 


"‌ அப்ப எங்க போறன்னு சொல்ல மாட்ட. ம்." எனத் தன் மீசையை முறுக்கிய படி அவளின் அருகில் வர,


" எஸ், சொல்லமாட்டேன். ஆனா வரப் பத்து நாளுக்கு மேல ஆகலாம். நம்ம பிள்ளைங்கள பாத்துக்க. அப்றம் டார்வின்னையும் டாமியையும் (அவளின் செல்ல நாய்க்குட்டிகள்.) அப்பப்ப போய்ப் பாரு. எப்ப பாத்தாலும் தம் மடிச்சிக்கிட்டே திரியாம ஒழுங்கா இரு. சரியா?. அப்றம்..." என ரிஷிக்குச் சில கட்டளைகளை இட்டபடி தன் பெட்டியை முடி சிப் போட, அது மூடாமல் சண்டித்தனம் செய்தது. 


" இதுவும் உன்ன மாறியே எம்பேச்ச கேக்க மாட்டேங்கிது. ச்ச." எனச் சலித்துக் கொண்டாள்.


" கிட், கொஞ்சம் நகரேன்." என அவளை விலக்கிப் பெட்டியில் உள்ள துணிகளை எடுத்து வெளியே கட்டிலில் வைத்தான்.


'வாவ்!. நம்ம பாவா போகாதன்னு சிம்பாலிக்கா சொல்லுறான் போல. ஆனாலும் நீ விட்டுடாத ஹரிணி. அவெங்கிட்ட மயங்கிடாத. உனக்குக் கிடைச்ச நல்ல சான்ஸ் இது. நல்லா அவன கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டு. அப்றம் டாட்டாட காட்டிட்டு போய்டனும்‌. அவெ உன்ன பாத்து 'போகாதே. போகாதே'ன்னு பாட்டு பாடிட்டே பின்னாடியே வரனும். வாவ் கற்பன பண்ணி பாக்கும் போதே சூப்பரா இருக்கே. நிஜமா நடந்தா எப்படி இருக்கும். ' என எண்ணி மகிழ,


" என்ன பண்ற பாவா. நீ துணிய எடுத்து வெளில வச்சா மட்டும் நா போகாம உங்கூடவே இருப்பேனாக்கும். தள்ளு. தா திருப்பி எல்லாத்தையும் உள்ள வச்சிக்கிவேன்."


" வேண்டாம். இதுக்குள்ள வைக்காத." 


" நா அப்படி தா வப்பேன். வழி விடு." என உடைகளை அள்ளி மீண்டும் பெட்டியில் போட,


" கிட் ஒரு நிமிடம் நா சொல்றத கேளேன்." 


" முடியாது. நீ எவ்ளோ கெஞ்சினாலும், நாங்கிளம்பி போறத உன்னால தடுக்க முடியாது." எனச் சொல்ல, அவன் கபோர்டை திறந்தான்.


"கிட், அந்தப் பெட்டி சிறுசா இருக்கு.‌ இதுல அடுக்கு. பத்து நாள் என்ன ஒரு மாசத்துக்கு தேவையான டிரெஸ்ஸ இதுல எடுத்து வச்சி கொண்டு போகலாம். அப்றம் துணி பத்தலன்னு நீ திரும்பி வந்திடக் கூடாதுல. அதுக்கு தா. இதுல என்னோட கார்டு இருக்கு. உனக்கு எவ்ளோ வேண்ணாலும் எடுத்துக்கலாம். பின் தெரியும் தான." எனக் கேட்டதோடு மட்டுமல்லாமல், அவளின் உடைகளைப் பெரிய பெட்டியில் அடுக்க, கடுப்பான ஹரிணி. அவனை அடித்தாள். 


" யூ... இடியட்... பொண்டாடட்டி எங்கையோ கோபமா போறேங்கிறாளே. ஏன்டின்னு கேக்காம. பெட்டிய அடுக்கி டாட்டா காட்டுறியா நீ. உன்ன." எனத் தன் கைப் பையால் அடிக்க,


" ஓ!. நீ கோயிச்சிட்டா போறியா??. நாங்கூட நீயும் உன்னோட ஃப்ரெண்டும் இன்பச் சுற்றுல்லாக்கு போறீங்களோன்னு நினைச்சேன். ஆமா. நீ கோபமா போனா யாரு வீட்டுக்குப் போவ, பொதுவா கல்யாணம் ஆன பொண்ணுங்க கோயிச்சிட்டு போனா அவங்க அம்மா வீட்டுக்குப் போவாங்க. ஆனா உனக்கு அப்படியொரு வீடே கிடையாதே. எங்க போவ நீ.?" எனக் கேலியாகக் கேட்க,


" தெரியுதுல்ல. நான் தாயில்லாத பொண்ணுன்னு. கட்டுன புருஷெ நீ தான எனக்கு எல்லாம்னு தெரிஞ்சும் இருக்கனும். நீ என்னடான்னா என்னோட துணிய பேக் பண்ணீட்டு இருக்க. உன்ன." எனக் கை ஓயும் வரை அடிக்க, அவனுக்கு வலித்ததாகவே தெரியவில்ல. 


சோர்வாகக் கட்டிலில் அமர்ந்த அவளின் பிடறியில் தன் இரு கரங்களையும் கோர்த்து. அவளின் முகம் உயர்த்தி." அப்பச் சொல்லு கிட், எங்க போறீங்க நீயும் உன்னோட ஃப்ரெண்டும்?." என மூக்குடன் மூக்குரசி வசீகர குரலில் அவளை மயக்கும் வண்ணம் கேட்க,


"சொல்ல முடியாது. நீ மட்டும் எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிப் பர்மிஷன் வாங்கிட்டா பண்ற.‌ இல்லல்ல. அப்ப நா மட்டும் ஏ உன்னோட அனுமதிக்காகக் காத்திருக்கனும். முடியாது. சொல்ல முடியாது." என அவனின் சாம்பல் நிற விழிகளை உற்று நோக்கிச் சொல்ல, தரனின் பார்வை அவளின் விழிகளைத் தாண்டிப் பயணம் செய்தது. 


இத்தனை நேரம் மூடாது தன்னுடன் வாயாடிய அந்த இதழ்களுக்குத் தண்டனை தர எண்ணி அதைச் சிறை செய்தான். ஒரு கரம் அவளின் கூந்தலை இறுகப் பற்றியது என்றால் மற்றொன்று அவன் இஷ்டப்பட்ட இடங்களுக்கு ஊர்வலம் செல்லத் தொடங்கியது. அடுத்து என்ன நடக்கும் என்பதை உணர்ந்த ஹரிணி சட்டென அவனை விலக்கி எழுந்தாள். 


" நீ என்ன உங்கைல தவழுற ஒரு பொம்ம மாறி ஆக்கிட்ட. நீ எங்கிட்ட என்னென்ன வித்த செஞ்சி கேட்டாலும் நா எங்க போறேன்னு உங்கிட்ட சொல்ல முடியாது. எப்ப வருவேன்னும் சொல்ல முடியாது. கெடந்து தவி நா இல்லாம. ஹிம்." எனச் சொல்லி வெளியே செல்லப் பார்க்க, விடுவானா அவன். அதுவும் ஆரம்பித்த ஒன்றை முடிக்காமல் அவளை விட்டு விட்டால் அது தவறு அல்லவா. 


அவளின் பின்னே சென்று அணைத்தவன், "எங்க போனாலும் சரி. என்ன பண்ணாலும் சரி. எவ்ளோ ஜாக்கிரதையா இருக்க முடியுமோ அவ்ளோ ஜாக்கிரதையா இரு... உன்ன மட்டுமில்ல உங் கூடவே இருக்குற உம் ஃப்ரெண்ட்டையும் பாத்துக்க... அவெ சட்டுன்னு உணர்ச்சி வரப் பட்டுப் பிரச்சனைல மாட்டிக்கிற ஆளு, கவனமா இருங்க ரெண்டு பேரும்....‌‌ ம்... நீங்க ஒன்னு சேந்தா என்னென்ன சேட்ட செய்விங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்... சோ வால சுருட்டி வச்சிட்டு ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க..." என அவள் பதிலுக்காக இடைவெளி விட்டு நிறுத்தினாலும். வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. 


எப்படி வரும். அவன் தான் அவளின் கழுத்தை காகிதமாக்கி இதழால் எழுதிக் கொண்டிருக்கிறானே. வார்த்தைகள் மட்டுமே ஜாக்கிரதை கவனம் எனத் தெளிவாக வந்தது. ஆனால் அவனின் செயல்கள் மோகத்தை தூண்டும் வகையில் இருந்தது. 


தாபம் கொண்டவனின் தேவை பூர்த்தியாகாமல் பெண்ணவளை அவன் விட வில்லை. எப்பொழுதும் மென்மையாக அமையும் அவர்களின் கூடலில் இன்று ரிஷியின் செயலால் சிறு வன்மையாக நடந்தேறியது போல் தோன்றியது ஹரிணிக்கு. தன் எண்ணிலடாங்காத காதலையும் மகிழ்ச்சியையும் அந்த ஒன்றை கூடல் தீர்க்காது என்பதால் மீண்டும் மீண்டும் அவன் மனைவியை நாட. அந்த இரவு உறங்காத இரவாகிப் போனது இருவருக்கும். 


பூனை கண்ணை மூடிக் கொண்டால் அது சூரியன் மறைந்து விட்டது என்று நினைக்குமாம். அதே போல் தான் ஹரிணியும், ரிஷியிடம் சொல்லவில்லை என்றால் அவனுக்கு அவள் என்ன செய்கிறாள் என்று தெரியாது போய்விடும் எனத் தவறாக நினைத்துக் கொண்டு அவனிடமிருந்து மறைக்கிறேன் என்று சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாள். என்ன செய்ய. அவனின் பார்வை வளையத்தை விட்டுச் செல்ல யாரையும் அவன் அனுமதிப்பதில்லை. முக்கியமாகத் தன் மனைவியை எப்படி விடுவான் என்பதை மறந்து போனாள் அந்தப் பேதை. 



இத்தோடு கதையின் இரண்டாவது பாகம் முடிந்தது.


இனி பார்கவி எப்படி இறந்தாள் யாரால் கொல்லப்பட்டாள் என்பது பற்றி அடுத்த part-ல் காணலாம். 


நன்றி… 


அன்பே 51

 

விழி 1


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...