அத்தியாயம்: 51
"வேண்டாம் ஹரிணி. என்னால ஊட்டிக்கு வர முடியாது. நா இப்படியே இருந்திடுறேனே. வைசுவ பாக்கும் போதெல்லாம் என்னோட மனசு கிடந்து அரிக்கிது. கில்ட்டியா ஃபில் பண்றேன். தூக்கம் வர மாட்டேங்கிது. ஒரு மாறி டிப்ரஷன்னா இருக்கு. நா பேசுனதுக்கு தண்டனையா இதெல்லாத்தையும் அனுபவிச்சிக்கிறேன். என்ன விட்டுடு ஹரிணி." சோர்வாக.
" என்னடா பேச்சு இது. தண்டன அது இதுன்டு. தப்பு பண்ணாத்தா தண்டன அனுபவிக்கனும். அதுவும் யாரும் யாருக்கும் குடுக்க முடியாது. அதுவா நடக்கும். நீ என்ன தப்பு பண்ண. முதல்ல நீ இப்படி பேசுறத நிப்பாட்டு. எம்பது வயசு கிழவி மாறி இருக்கு உம் பேச்சு." என்றாள் ஹரிணி.
"எப்படி வேண்ணாலும் இருந்துட்டு போட்டும். நா எங்கையும் வரமாட்டேன். என்ன கட்டாயப்படுத்தாத." கௌதம் உறுதியாகச் சொன்னான். அவனுக்கு மீண்டும் ஊட்டிச் செல்ல ஹரிணி அழைப்பது பிடிக்கவில்லை. பார்கவியின் நினைவை மட்டுமல்ல ரிஷியுடனான நட்பையும் அவன் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. அதனால் மறுத்தான் கௌதம்.
"உன்னைய யாரும் அங்கவே இருக்கச் சொல்லிச் சொல்லல. ஜஸ்ட் டென் டேஸ்... போறோம். சுத்தி பாக்குறோம். நமக்குத் தெரிஞ்சத விசாரிக்கிறோம். வந்திடுறோம். அவ்ளோ தா. உன்னோட தேவையில்லாத பயத்த போக்கத்தா வான்னு கூப்பிடுறேன்."
"அங்க போனா எனக்குப் பாப்புடு நியாபகம் வரும் ஹரிணி. விட்டுடு டார்லிங். உனக்கு என்ன நா பழைய படி நல்லா பேசிச் சிரிக்கனும். அவ்ளோ தான. வா வைசுட்டையும் பேசுறேன். பிரச்சன சால்வ்." என அறையை விட்டு வெளியே செல்லப் பார்க்க,
" எதுக்கு கௌதம் அவ்ளோ பயம் உனக்கு. உன்னோட மனசு தா சொல்லுதே. பார்கவிய யாரோ கொல பண்ணிருக்காங்கன்னு. அது யாருன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா."
சட்டெனத் திரும்பி, " வேண்டாம். அத தெரிஞ்சிக்க போய்த்தா நா எல்லாரும் வெறுக்குற ஒருத்தனா மாறினேன். இப்ப அதே இத திரும்ப ட்ரெய் பண்ணி என்னோட குடும்பத்த நா இழக்க விரும்பல. வேண்டாம்."
" ம்ச்..." என ஹரிணி சலித்துக் கொள்ள.
"ரொம்ப வர்ஷம் ஆச்சி ஹரிணி இனி அந்த விசயத்த தூசி தட்டுறதுனால என்ன யூஸ். என்ன கிடைச்சிடப் போது. சொல்லு." நம்பிக்கை இல்லை அவனுக்கு. ரிஷி சொல்லியது போல் இது ஒரு விபத்து என்று முடிவெடுத்து விட்டு விட்டான்.
"உன்னோட நிம்மதியான தூக்கம். உன்னோட இந்தக் குற்ற உணர்ச்சில இருந்து விடுதல. எல்லாத்தையும் விட ஒரு சின்னக் குழந்தையோட மரணத்துக்கு நீதி. இதுக்காகவாது நாம முயற்சி செய்யனும் கௌதம்." என்க, கௌதம் பேசாது நின்றான். அவனின் வலது கரத்தைத் தன் இரு கரங்களுக்குள் புதைத்தவள்.
" உனக்கு இது கஷ்டமாத்தா இருக்கும் கௌதம். ஆனா நாம முயற்சி செஞ்சி தா ஆகனும். உன்னோட பாப்புடுக்காக. என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரிஞ்சே ஆகனும். வா கௌதம். இது உன்னோட கடைசி முயற்சி ஏ கடைசி வாய்ப்பா கூட இருக்கலாம்.
இது சினிமா டயலாக் தா. ஆனா உண்மையும் கூட. நாம எத எங்க தொலச்சோமோ, அத அங்க தா தேடனும். வேற இடத்துல அது கிடைக்காது. உன்னோட நிம்மதிய அங்க தா நீ தொலச்ச. சோ... அது அங்கதா இருக்கும். நாம அத தேடி போலாம்.
பத்து நாள். வெறும் பத்தே பத்து நாள் தா. நம்மால முடிஞ்சத டிரெய் பண்ணி பாப்போம். நம்மால எதையும் கண்டு பிடிக்க முடியலன்னு வச்சிக்க. அந்த நொடில இருந்து உன்னோட லைஃப்ல பார்கவிங்கிற ஒரு கேரக்டர் இல்லவே இல்லன்னு நினைச்சி புதுசா வாழ ஆரம்பி... ப்ளிஸ். எனக்காக." எனக் கெஞ்ச,
"நிச்சயம் அவரு வருவாரு ஹரிணி. உங்கூட." என்றபடி இந்து அறைக்குள் வந்தாள்.
"என்ன மதி!. அவா தா புரியாம பேசுறான்னா. நீயும் அவா கூடச் சேந்துட்டு போங்கிற."
"ஹரிணி சொல்றது எனக்குச் சரின்னு படுதுங்க. நானும் உங்கள பாத்துட்டு தான இருக்கேன். நீங்கச் சரி இல்ல. தூங்காம நைட் பால்கனில நின்னு அழறத என்னால தாங்கிக்க முடியல. நீங்க அதவிட்டு வெளில வரனும். இல்லன்னா உங்களையே மறக்குற அளவுக்கு வேற எதாவது பண்ணிக்கிவிங்களோன்னு பயமா இருக்கு." எனச் சில பாக்கெட்டை காட்ட, அதில் சில போதை மாத்திரைகள் இருந்தது. ஹரிணியிடம் அன்று பேசியதிலிருந்து அவனுக்குப் பழைய நினைவுக்கள் வந்து வந்து சென்றன. எனவே அதை மறக்க வாங்கி வைத்தான்.
"என்ன கௌதம் இதெல்லாம்?." ஹரிணி கோபமாகக் கத்தினாள்.
"ஹரிணி. நா... என்ன... எதுக்கு... இத. வாங்கினேன்னா." எனத் தட்டு தடுமாறி பேச,
" போதும். இதுக்கு மேல எதுவும் பேசாத. நாம நாளைக்கி சென்னைக்கி போறோம். எர்லி மார்னிங் ஃப்ளைட். ரெடியா இரு." எனக் கட்டளையாகச் சொல்லிச் செல்ல, செல்லும் அவள் கரத்தினை பற்றி நிறுத்தினான் கௌதம்.
"நா அத வாங்கி மட்டும் தா வச்சேன். இதுவர யூஸ் பண்ணல ஹரிணி. நம்பு." என்றான் கெஞ்சலாக.
"நீ இதுவரைக்கும் அத யூஸ் பண்ணலன்னு எனக்குத் தெரியும். ஆனா யூஸ் பண்ணனும்னு தா வாங்கி வச்சிருக்கன்னும் எனக்குத் தெரியும். உனக்குன்னு இருக்குற இந்த நல்ல குடும்பத்த கண்ட கருமத்தையும் எடுத்துட்டு கெடுத்துக்க மாட்டேன் நம்புறேன்." எனச் சொல்லிச் சென்றாள். கௌதம் இந்துவைப் பார்க்க, கோபமாகத் திரும்பிக் கொண்டாள் அவள்.
ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் போதை பழக்கத்தால் அவன் பட்ட கஷ்டங்களைக் கௌதம் கூற இந்து கேட்டிருக்கிறாள். நேற்று இதை அவன் வாங்கி வந்த போதே மனமானது கணத்தது அவளுக்கு. மீண்டும் அதே பாதைக்குச் சென்று விடுவானோ என்று கவலை வேறு வர, இந்து அழத் தொடங்கினாள். கண்ணீருடன் நின்றவனை வந்தணைத்தான் கௌதம்.
"ஸாரி மதிம்மா. நா... நா... அத... வாங்கிருக்கவே கூடாது. எதுக்கு வாங்குனே...ன்னா." எனத் தடுமாற, சட்டெனத் திரும்பி அவனின் வாயை மூடினாள் இந்து.
"எதுவும் சொல்ல வேண்டாம். இங்க நா குழந்தைகள நல்லா பாத்துக்கிறேன். போய்ட்டு வாங்க. பவி உங்கள திட்டும்போது உங்களுக்குள்ள இருக்குற குற்ற உணர்ச்சினால தா நீங்க அமைதியா இருந்திங்கன்னு எனக்குத் தெரியும். இனி அப்படி நிக்க கூடாது. என்னோட புருஷென் யார் முன்னாடியும் தல குனிஞ்சி நிக்கிறத நா விரும்பல. நீங்க எப்பையுமே எனக்குப் பெஸ்ட்டா இருக்கனும்." எனச் சொல்லி அவனை அணைக்க. கௌதம் அவளின் பிறை நெற்றியில் முத்தமிட்டு, புறப்படத் தயாரானான்.
கௌதமை சத்தம் வராமல் திட்டியபடி அறைக்கு வந்த ஹரிணி. தன் துணிகளை அடுக்கி வைக்கப் பெட்டியை எடுத்தாள். பின் தன் கைப் பையில் இருந்த ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள குளியல் அறைக்குள் சென்றாள்.
அன்று கௌதமிடம் கதை கேட்டபின் ஹரிணி ரிஷியிடம் தான் வந்து நின்றாள்.
" நீங்கப் பண்ணது சரின்னு உங்களுக்குத் தோனுதா?. என்னதா கோபம் வந்தாலும், கௌதம நீங்கத் தனியா விட்டுருக்க கூடாது. அதுனால அவெ சேரக் கூடாதவங்களோட சேந்து கெட்ட பழக்கத்த கத்துக் கிட்டான். உங்களால தா!. " என்றாள் குற்றம் சுமத்தும் குரலில்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், "எனக்கும் சூடு சொரணன்னு ஒன்னு இருக்கு கிட். அவன பேச விட்டு அத நின்னு கேட்டு ரசிக்கிற அளவுக்கு எனக்குப் பொறும இல்ல. அதே நேரம் அவெ பேசுன பேச்ச சகிச்சிக்கிட்டு திரும்பத் திரும்பப் போய் அவெங்கிட்ட பல்ல இளிக்கனும்னு ஒன்னும் எனக்கு அவசியமே இல்ல." என்றான் நக்கலாக, அது ஹரிணிக்கு பிடிக்கவில்லை.
" கௌதம் உங்க தம்பி தான. கூடப் பிறந்தவங்க கிட்ட இறங்கி போய்ப் பேசுறது ஒன்றும் தப்பில்ல. நீங்கச் செஞ்சது தப்பு பாவா. சின்ன வயசுல இருந்து நீங்கப் பண்ண எல்லாமே." என்றாள் காட்டமாக.
அவளுக்குத் தெரியும் அவனின் குணத்திற்கு கௌதமை மும்பையில் பார்க்கச் சென்றதே பெரிய விசயம். அதிலும் ரிஷி சென்று பேசினால் அவன் பேச்சைக் கௌதம் காதில் வாங்கிக் கொள்ள மாட்டான் என்றும் ஹரிணிக்கு தெரியும். ஆனாலும் ரிஷி கொஞ்சம் தன் ஈகோவை விட்டுக் கொடுத்து மீண்டும் கௌதமுடன் பேச முயற்சி செய்திருக்கலாம் என்று தோன்றியது ஹரிணிக்கு.
"இறங்கி போய்ப் பேசச் சொன்னியே. இதே வார்த்தைய நீ உம் ஃப்ரெண்டு கிட்டயும் சொல்லிருக்கியா. இல்ல சொல்ல மறந்துட்டு இனிமே தா போய்ச் சொல்லப் போறியா." கேலியாக.
" உங்கிட்ட போய் நா கௌதம்காகப் பேசுறேன் பாரு. என்ன சொல்லனும். ச்சீ." என முகம் சுளிக்க, அது ரிஷிக்கு எரிச்சலை தந்தது, அந்த ச்சீ என்ற வார்த்தை.
" ஹரிணி. இது நம்மோட பெட் ரூம். இங்க நம்ம ரெண்டு பேர தவிர வேற யாரோட பேச்சையும் நாம பேசக் கூடாது. உனக்கு நா ஹஸ்பெண்டா எதாவது தப்பு செஞ்சா. கேளு. சண்ட போடு. தப்பில்ல. ஆனா வேற யாருக்காகவோ எங்கிட்ட பேசி. வீண் சண்ட போடாத." என்றான் அவனின் காதல் மனைவியிடம் கனிவாகவும் மிரட்டலாகவும்.
"சட்டைய புடிச்சி கேட்டுட்டா மட்டும் பதில் சொல்லிட்டு தா மறு வேல பாப்ப." என மெல்லிய குரலில் முணுமுணுக்க.
" இப்ப என்ன சொன்ன.?" என்றான் ரிஷி.
" நா இதுவரைக்கும் உங்கிட்ட கேட்ட கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்லிப் பாஸ் மார்க் வாங்கிட்டல்ல. அதா அடுத்த கொஸ்டீன் பேப்பர ரெடி பண்ணீட்டு இருக்கேன். ஆனுவல் எக்ஸாம் மாறி. க்கும்." என்றாள் இதழ் கோணி சிறு கோபமாக.
" கிட், அடுத்த எக்ஸாம் கொஸ்டீனாது ஈஸியா இருக்குமா? இல்ல அதுவும் நா சொல்ல முடியாத மாறிக் கஷ்டமா." எனப் புன்னகையுடன் இழுக்க,
" நீங்க இன்னும் பார்கவி டெத்த ஆக்ஸிடென்ட்டுன்னு தா நினைக்கிறிங்களா பாவா.?" எனக் கேட்டபோது ரிஷியின் முகத்தில் வந்த புன்னகை மறைந்து போனது.
" கிட், இப்ப தான சொன்னேன்."
"நா எப்பையுமே சொல்றேன். உன்னோட வைஃப் நா. உம் மனசுக்குள்ள இருக்குற எல்லாமும், ஐ மீன் நீ எங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு மறைக்கிற எல்லா ரகசியமும் எனக்குத் தெரிஞ்சே ஆகனும். நீ சொல்லித்தா ஆகனும். நீ எங்கிட்ட கேட்ட நாலு மாசம் முடியப்போது பாவா. சோ பதில் சொல்லிட்டு போ." என இரு கரங்களையும் கட்டிக் கொண்டு சொல்ல, அவளின் தோரணையை ரசிக்கத் தோன்றியது அவனுக்கு.
"இன்னும் பதினஞ்சி நாளும் எட்டு மணி நேரமும் பாக்கி இருக்கே." என்றான் மெல்லிய சிரிப்புடன்.
"நீ பசிக்கிதுன்னு கேலண்டர முழுசா முழுங்கிட்டியா பாவா?. இல்ல வயித்துக்குள்ள வாட்ச் கடய வச்சிருக்கியா என்ன?. நேரம் காலம் சரியா பாத்து வச்சிட்டு. இடியட்." என்க, அவளின் அருகில் வந்து கன்னம் பற்றியவன் அவளின் விழிகளை உற்று நோக்கி,
" கிட், எம்மேல நீ இதுவரைக்கும் வச்சிருக்கிற நம்பிக்கைக்கு நன்றி. எந்த ஒரு கண்டிஷனும் போடாம நீ எங்கிட்ட காட்டுற இந்த அன்புக்கு நா என்னைக்கும் துரோகம் பண்ண மாட்டேன். இன்னும் கொஞ்ச நாள் தா அதுக்கறம் நீ எங்கிட்ட எதுவுமே கேக்க வேண்டாம். நானே எல்லாத்தையும் உங்கிட்ட தெளிவா சொல்லிடுறேன். ஐ ப்ராமிஸ்ஸிங் யூ. இதுக்கறம் நா உங்கிட்ட ஓப்பன் மைண்ட் டா இருப்பேன். நோ மோர் சீக்ரெஸ்." என்று கூறி நெற்றியில் முத்தமிட்டு விலகிச் செல்லப் பார்க்க,
" ஏ இப்பவே எங்கிட்ட சொல்லுறதுனால உனக்கு என்ன பிரச்சினை வந்திடபோது." என்று கூறி அவனைத் தடுத்தாள் ஹரிணி.
'இப்ப சொன்னாத்தா என்னவாம்.' என்பது போல் அவனைப் பார்க்க, அவன் தன் சாம்பல் நிற விழியால் அவளை முறைத்தான்.
"எங்கண்ணுக்கு நீயும் கௌதமும் ஒன்னு போலத் தெரியுற பாவா. கௌதம் அவனோட மனசுல இருக்குற வலிய சொல்லிட்டான். நீ சொல்லல பாவா. நீயும் நைட் தூங்காம தா இருக்க. அந்த ஜீம் ரூம்க்குள்ள ஆந்த மாறி முழிச்சிட்டு என்ன பண்றன்னு எனக்குத் தெரியாது. ஆனா அது உன்னோட உடம்புக்கும் மனசுக்கும் நல்லது இல்ல."
மனமானது நினைத்தால் இனிக்கும் சில நல்ல நினைவுகளையும் இன்பங்களையும் சேர்த்து வைக்கும் நூலகம் போல் இருக்க வேண்டும். அது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதை விடுத்து வலிகள் தரும் கோபம், வஞ்சம். க்ரோதம், கவலை, வருத்தம், துன்பம் போன்றவற்றை உணர்ச்சிகளைச் சேர்த்து வைத்தால். விரைவில் அது பழுதடைந்து விடும். நம் உயிரையும் குடித்து விடும்.
இருவரும் மற்ற கணவன் மனைவிபோல் அனைத்தையும் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக் கொள்வர். ரிஷி நேரடியாகப் பதில் தரமாட்டான் தான் ஆனால் ஹரிணிக்கி புரியும், அவன் என்னென்ன செய்கிறான். செய்வான் என்று. இந்தக் கௌதம் பார்கவி போன்ற சிலரை பற்றி மட்டும் தான் வாயையே திறக்க யோசிக்கிறான். ஏனென்று தா தெரியவில்லை.
"சில வலிகள் வெளில சொன்னா மறைச்சி போய்டும் கிட். அப்படி போகக்கூடாதுன்னு தா நா ஷேர் பண்றது இல்ல. எனக்குப் பயம் கிட். தோல்வி மேல. ஒரு விசயத்த செய்யும்போது எனக்குத் தோல்வி கிடைச்சா அத ஏத்துக்க முடியாது. வெற்றி கிடைக்கிற வர நா போராடுவேன். அதேநேரம் எனக்கு என்னோட தோல்விகள வெளில சொல்லப் பிடிக்காது." என்றான் ரிஷி தரன்.
' தோல்வியா?. ஏ இவெ சம்மந்தம் இல்லாம பேசுறான். பார்கவி இறந்தது கொலன்னு நினைக்கிறாயா இல்ல விபத்துன்னு நினைக்கிறியான்னு ஒரு கேள்வி தான கேட்டேன். லூசா இவெ. ' என்பது போல் ஹரிணி புருவம் சுருக்க.
" எஸ்... தோல்வி தான். என்னோட ரெண்டு தங்கச்சிங்க விசயத்துலையும் எனக்குக் கிடைச்சது தோல்வி தான். பார்கவிக்கும் சரி வைசுக்கும் சரி. அவங்க விபத்துக்குக் காரணமானவங்கள என்னால கண்டு பிடிக்க முடிஞ்சும். தண்டிக்க முடியல. வைசு, அவள நா தேடாத இடமே இல்ல. உயிரோடதா இருக்காங்கிறதே உன்னால தா தெரிய வந்துச்சி. ஆனா அதுக்கு காரணமானவன் தப்பிச்சதும் உன்னாலத. உன்னோட அண்ணே ஓம்கார். அவன எங்கையால கொல்ல முடியங்கிறத நினைக்கிறப்போ, எம்மேலையே எனக்குக் கோபம் கோபமா வருது." என்றான் கோபமாக.
ஹரிணிக்கு இப்போதும் நியாபகம் உள்ளது. ரிஷியின் கையில் மாட்டிய ஓம்மை அவன் அடித்த விதம். அது கோபமாக மட்டுமல்லாமல் ஒரு வித வெறியாகவும் இருந்ததை ஹரிணி உணர்வாள். இப்போது ஓம் உயிருடன் தான் உள்ளான். மும்பையில் உள்ள சிறையில். அவனுக்குத் தண்டனை விதிக்கப்படிருந்தாலும், மேல் முறையீடு செய்து கால நேரத்தை விரையமாக்கி தண்டனையிலிருந்து தப்பித்து வருகிறான். அதுவே தனக்கு கிடைத்தது தோல்வி தான் என்கிறான் ரிஷி தரன்.
" உன்னாலதா அன்னைக்கி அவன என்னால கொல்ல முடியல. பட் விடமாட்டேன். அவனோட உயிர் போக நாந்தா காரணமா இருப்பேன். அதே மாறி தா பார்கவி டெத்தும்." என்க.
" அப்ப உனக்குத் தெரிஞ்சிருக்கு. அது ஆக்ஸிடென்ட் இல்ல கொலன்னு. யாரு பார்கவிய கொன்னானும் தெரிஞ்சிருக்கு. நீ கௌதம் மேல் இருந்த கோபத்துனால பார்கவி விசயத்த முழுசா கை விட்டுட்டன்னு நினைச்சேன். சும்மா இருக்கல நீ. சரியா. ம். யாரு அது?. எதுக்கு ஒரு சின்னக் குழந்தைய கொல்லனும்." எனக் கேட்க, அவளின் முகம் பாராது சென்று விட்டான்.
'விட்டா இவா பேசிப் பேசியே எல்லாத்துலயும் கரந்துடவா போல.' ன்னு நினைச்சிருப்பானோ அதா ஓடிட்டான்.
இதைச் செய்யாதேயென ஹரிணி உறுதியாகக் கூறினாள் ரிஷி அதை மீறிச் செய்யமாட்டான். அது ஹரிணியின் மேல் வைத்திருக்கும் அன்பின் காரணமாக. அப்படித்தான் தன் தந்தையையும் தங்கையையும் கொல்ல வந்த ஓம்காரை உயிருடன் விட்டு விட்டான். இப்போது பார்கவி விசயத்திலும் ஹரிணியின் தலையீடு இருந்தால் நிச்சயம் பழி வாங்க இயலாது என்று தான். ஹரிணியிடம் எதையும் கூறாது மறைக்கிறான்.
எது எப்படியோ?. பார்கவியோட மரணத்துக்கு யார் காரணம்.? ஏ கொல பண்ணானுங்க?. அது என்ன எதுன்னு ரிஷிக்குத் தெரியும். அதான் வாயையே திறக்கமாட்டேன் என்கிறான். பார்ப்போம். ஹரிணி கேட்ட கேள்விகளுக்கான விடைய.
ஹாங்... சொல்ல மறந்துட்டேன். முதல் முதல்ல ஹரிணி கேட்ட நாலு கேள்வில, மூனாவதுக்கானதுக்கான பதில ஹரிணி கண்டு பிடிச்சிட்டா. அதாங்க கௌதமுக்கும் ரிஷிக்கும் நடுவுல என்ன நடந்ததுங்கிறத. பழைய கேள்வில மீதி மூணுக்கு பதில் வேண்டி இருக்கு. இப்ப புதுசா ஒரு கேள்வி. பார்கவி மரணம் யாரால் நிகழ்ந்தது.
வரிசையா கண்டு பிடிக்க வேண்டியது தான்
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..