அத்தியாயம்: 37
"தம்பீ... இந்த நேரத்துல இங்க என்ன பண்றிங்க?. இது மோகினிங்க ஜோடி தேடுற டயம். கண்ணுல மாட்டுனா கொத்திட்டு போய்டுங்க." என்ற குரல் அந்த இருட்டிலிருந்து வந்தது. அதைக் கேட்டவன் சற்று மிரண்டும் போனான்.
பிரகாஷ் தன் ஆசை மனைவியைக் காணலாம் என்று வீட்டில் இருக்கும் நண்டு சிண்டெல்லாம் கூட்டிக் கொண்டு, காரில் தோட்டத்து வீட்டுக்கு வந்தான். ஆனா, அவனோட வைஃப் அவனைக் கண்டுக்கவே இல்லை. ஏன் யார் கூடவும் பேசாது அமைதியாகவே இருக்கான்னா பாருங்களே. எப்படியாது அவளைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போய்த் தாலி கட்டுறதுக்குள்ள ஒரு கிஸ்ஸாது அடித்துவிடலாமென, அவளோடைய ஃபோனிற்கு 'கம் டூ பேக்.' என்று ஒரு மெஸ்சேஜ்ஜை தட்டி விட்டுட்டு, ஜெனி வருவாள் என்ற நம்பிக்கையில் தோட்டத்து வீட்டின் பின் பக்கம் காத்துக் கொண்டு இருத்தான்.
அவள் அதைப் பாத்தாளா இல்லையா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆனால் காத்திருக்கிறான். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு மேல்.
மணி ஒன்பதை தாண்டி விட்டது. தோட்டத்தில் வேலையாள் என்று யாரும் இல்ல. ஏன் விளக்கு கூட எரியவில்லை. ஒரே இருள். அவள் வருவாள் என்று தன் மொபைலை பார்த்தபடி இருந்தவனுக்கு பின்னால் இருந்து குரல் வரவும் பையன் அரண்டு விட்டான்.
"யாரது.?" என்றான் பயந்த குரலில்.
"ஹஹ்ஹஹ்ஹா... நா யாருன்னு உனக்குத் தெரியும். ஆனா தெரியாது." என்றது அந்தக் குரல்.
"இந்த இருட்டுல ஆளு தெரியுறது கஷ்டந்தா. நா ஃபோன் லைட்ல பாத்துப்பேன். எம்முன்னாடி வரலாம்." என்க, கௌதம் அந்த இருளிலிருந்து வந்தான்.
"அண்ணே! நீயாண்ணே. தம்பிய ஏண்ணே பயமுறுத்துற?." எனச் சின்னப் பையன்போல் கேட்க,
"உன்னோட டோன் சின்னப் பையன் மாறித் தெரிஞ்சாலும் பண்ற வேலையெல்லாம் பெரியாள் கணக்கால இருக்கு. இங்க எதுக்கு டா வந்த. ஓப்பன் பாத்ரூம்லா போகக் கூடாது. வீட்டுக்குள் கட்டி வச்சிருக்கோம் அங்க போ."
"ச்சீ... நா அதுக்கு வரலண்ணே. அது... அது..." என வெட்கப் படுவது போல் நடிக்க,
"என்னனு சொல்லு சீக்கிரமா. என்னால இந்தக் காண்ராவிய பாக்கமுடியல."
"என்னோட ஆள். ஜெனிக்காகக் காத்துட்டு இருக்கேண்ணே."
"ஜெனி உன்ன பாக்க இங்க வர்றேன்னு சொன்னாளா?."
"இல்ல, ஆனா நா இங்கருக்குற விஷயத்த அவளுக்குச் சொல்லிட்டு தா வந்து காத்துட்டு இருக்கேன்."
"ஓ! எப்படி தகவல் பரிமாற்றம் நடந்துச்சி?."
"கைபேசி மூலம்ண்ணே. மெஸ்செஜ். வாட்ஸ் ஆப்ல பண்ணேண்ணே." என்க,
"அத ஜெனி பாத்தாளா?."
"ம், ஃப்ளூ டிக் வந்ததுண்ணே. அப்படின்னா நா அனுப்புனத ஜெனி பாத்தான்னு தான அர்த்தம்."
"பாத்திருக்கலாம். ஆனா ஜெனி தா பாத்திருப்பான்னு எத வச்சி சொல்லுற." எனக் கௌதம் சவ்வு மிட்டாய் போல் இழுக்க, பிரகாஷிற்கு புரிந்துவிட்டது. ஜெனியின் ஃபோன் அவளிடம் இல்லை என்பது.
"அப்ப ஃபோன் யார்கிட்ட இருந்தது?."
"ஹரிணிட்ட."
"ஐய்யையோ!. என்னோட வைஃப்புக்கு ஆபத்து. நா போறேன்." என உள்ள செல்லப் பார்க்க, கௌதம் தடுத்தான்.
"ஆபத்தா? ஜெனிக்கா!. யாரால?."
"எல்லாம் உங்க தோஸ்தால தான்… என்ன திட்டுனா கூடப் பரவாயில்லைண்ணே. அவா ஜெனிய திட்டிக்கிட்டே இருக்கா!. பாவம் ஜெனி. இதுக்கு முன்னாடி ஹரிணி பாஸ். அதுனால ஜெனிய திட்டுனா... ஓகே... ஆனா, இனிமே அப்படி இல்ல. இனி ஹரிணிட்ட திட்டு வாங்க எம்பொண்டாட்டிய நா விடமாட்டேன்." என வீட்டிற்குள் சொல்ல, அங்கு அவன் எதிர்பார்த்தது தான் நடந்து கொண்டிருந்தது. ஹரிணி ஜெனியை திட்டிக் கொண்டு தான் இருந்தாள்.
"ஏன்டி சிலை மாறி நிக்கிற?. நாம்பேசுறது கேக்குதா இல்லயா?. வாயத்தொறந்து எதையாச்சும் சொல்லித் தொலையேன்டி." ஹரிணியின் சத்தம் கேட்டதும் பிரகாஷ் வீட்டிற்குள் வந்து விட்டான்.
உடனே கோபம் வர இருவருக்கும் இடையில் வந்து நின்று கொண்ட பிரகாஷ், ஹரிணியுடன் சண்டைக்கி நின்றான்.
"இப்ப எதுக்கு நீ அவள திட்டுற?." என்று கேட்க,
"ஹாங் வேண்டுதல்." என்றாள் நக்கலாக.
"ஹரிணி என்னாச்சி?. ஜெனி அழற மாறி இருக்கு. எதுக்கு சத்தம் போடுற?." கௌதம் கனிவாக.
"கௌதம் அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமா இல்லையான்னு கேட்டுச் சொல்லு."
"விருப்பம் இல்லாமையா நம்ம கூட ஊருக்கு வருவா?. உனக்கு எதுக்கு அந்தக் கவல. நீ சும்மா அவள திட்டனுங்கிறதுக்காகத் திட்டுற." பிரகாஷ்.
"அப்பக் காலைல இருந்து சாப்பாடு கூடச் சாப்பிடாம யாருக்காக விரதம் இருக்கான்னு கேளு?. வீட்டுக்கு வந்த பெரியவங்க யார்கிட்டையும் ஒரு வார்த்தை கூடப் பேசல. காலைல பூவத்த பேசுனத நீயும் தான கேட்ட. அவங்க சந்தேகபடுறது சரிங்கிற மாறி இவா நடந்துக்கிறா. இவா ஏ இப்படி இருக்கானு எனக்குக் காரணம் தெரிஞ்சாகனும்?." என்றாள் ஜெனியை முறைத்துக் கொண்டு.
பின்னே கனகவள்ளியும் கிருபாவதியும் வந்து ஜெனியுடன் பேச, அவள் தலை தூக்கிக் கூடப் பார்க்கவில்லை. லதா, சுதா, அகிலன், ஆதியென யாரையும் கவனிக்காது இருந்தால் ஜெனிக்கு இங்கு வந்திருப்பது பிடிக்கவில்லை என்று தானே நினைப்பார்கள்.
"இப்ப நீ பேசப்போறியா இல்லயா?."எனக் கோபமாகக் கேட்க,
"ஹரிணி அவள நீ மிரட்டாத." பிரகாஷ்.
"அப்பப் பேசச் சொல்லு. என்ன நினைக்கிறாங்கறத சொன்னாத்தான தெரியும்." என ஹரிணியும் விடாது கேட்க,
"நா உங்கிட்ட காலைல இருந்து பேச ட்ரைப் பண்ணும்போது நீ என்ன பண்ண." ஜெனி, ஒரு வழியாகப் பேசி விட்டாள்.
"என்ன பண்ணேன்?. நீ கேட்டதுக்கு நாந்தா பதில் சொன்னேன்ல."
"எனக்கு அதுல திருப்தி இல்ல."
"அதுக்கு நா ஒன்னும் பண்ண முடியாது." ஹரிணி அலட்சியமாக.
"என்ன கேட்ட ஜெனி." பிரகாஷ்.
"யஷ்வந்த்கிட்ட போட்ட காண்ட்ராக்ட் எப்படி முடிஞ்சிச்சி?." காலையிலிருந்து இதே கேள்வியை வித விதமாகக் கேட்கிறாள்.
"உப்!. எப்படின்னா.? எல்லாம் செட்டில்மென்ட் பண்ணித்தா!. இனி அவனால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. இத நா உங்கிட்ட காலைல இருந்து சொல்றேன். திரும்பத் திரும்ப ஏ ஒரே கேள்விய கேக்குறங்கிறது தா எனக்குத் தெரில?."
"செட்டில்மெண்ட்னா?."
"உலகத்துக்கே தெரியும் செட்டில்மெண்ட் பண்றதுன்னா பணம் குடுக்குறதுன்னு. புதுசா கேக்குற. இப்ப உனக்கு என்ன வேணும்?."
"எவ்வளே வில குடுத்து என்ன வாங்கிருக்கிங்கன்னு எனக்குத் தெரியனும். காசு குடுத்து தா வாங்கிருக்கிங்கன்னா அந்த யஷ்வந்துக்கும் உங்களுக்கும் பெரிய அளவுல வித்தியாசமே இல்ல. நா ஒன்னும் சந்தைல விக்கிற பொருள் இல்ல. ஆனா எல்லாரும் என்ன விக்கிறாங்க. முதல்ல அக்கா. இப்ப... நாங்கடமைக்காக இவரு கூட வாழனுமா?. இல்ல காதலுக்காக வாழனுமா?. எனக்குத் தெரியல." என அழத் தொடங்கி விட்டாள். பிரகாஷ் அவளைச் சமாதானம் செய்ய முயன்றான். வேறு யாரும் அவளை நெருங்க வில்லை. அழுது முடிக்கட்டும் என நின்று வேடிக்கை பார்த்தனர்.
இந்து உள்ளே சென்று எதையோ எடுத்து வர, ஹரிணி தட்டில் சாப்பாட்டுடன் வந்து ஜெனியின் முன் அமர்ந்தாள்.
"அழுது முடிச்சிட்டேன்னா இத சாப்பிடு." எனத் தட்டில் உள்ளதை அவளுக்கு ஊட்ட, வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் ஜெனிபர்.
"நீ ஒன்னும் விற்பனை பொருள் கிடையாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். அப்படி வில குடுத்து வாங்குறதுன்னா உன்னவிட வேற நல்ல பொண்ண பாத்திருக்கலாம். ச்ச... காச போட்டு உன்ன ஏ வாங்கினோம்னு கவலையா இருக்கு. ஒரு கோடி குடுத்து ஒரு அழுமூஞ்சியல்ல நா வாங்கிருக்கேன். ஒரு கோடிப்பு. ஒரு கோடி." என்றாள் கேலியாக.
ஜெனி அவளை முறைக்க, இந்து அவளிடம் ஒரு பாஸ் புக்கை நீட்டினாள்.
"இது உன்னோடது தா. உனக்காக ஹரிணி ஓப்பன் பண்ணி வச்சது. மூணு வர்ஷத்துக்கு முன்னாடியே. இதுல இருந்து தா அந்த யஷ்வந்த்துக்கு பணம் போயிருக்கு. பணம் எப்படி வந்ததுன்னா, உன்னோட சில ஆர்ட்ட சேல் பண்ணது மூலமா வந்தது. அதுவும் ஒரு நாள்ல இது நடக்கல. ரெண்டு வர்ஷமா உன்னோட பெஸ்ட்டான டிராயிங்க கேலரில வித்ததோம். அதுனால கிடைச்சது. இப்ப சொல்லு. நாங்க உன்ன வில குடுத்தா வாங்கினோமா."
"எனக்குப் புரியல. என்னோட ஆர்ட்." என ஹரிணியை பார்க்க. அவள் புன்னகைத்தாள்.
"உன்னோட பிரச்சன எனக்குத் தெரிஞ்சதுமே நா யஷ்வந்த் கிட்ட பேசுனேன். ரெண்டு வர்ஷத்துக்குள்ள அமௌண்ட்ட செட்டில் பண்ணிட்டா உன்ன அவெ தொந்தரவு செய்யக் கூடாதுன்னு நானும் அவனும் ஒரு அக்ரிமெண்ட் போட்டோம். நா நினைச்சிருந்தா அந்தக் காச அப்பவே குடுத்திருக்க முடியும். அப்படி பண்ணா நீ எங்கிட்ட கடன் பட்ட மாறி ஆகிடும். அதுனால தா உன்னோட ஆர்ட்ட எனக்குத் தெரிஞ்ச சில எக்ஷிபிஷன், சில வெப்டைட்ல வித்தேன். நீ அவெங்கூட போட்ட காண்ட்ராக்ட் உன்னோட காச குடுத்தே முடிஞ்சிட்டோம்.
செட்டில்மென்ட் பண்ணியாச்சின்னு உனக்குத் தெரியாதுங்கிறதுனால மேரேஜ்க்கு ஏற்பாடு பண்ணான் யஷ்வந்த். நாங்க கரெக்ட் டயத்துக்கு போலிஸ்ஸோட வந்ததுனால ஒன்னும் பண்ண முடியாம கோபமா போய்டான். என்ன உங்க அக்காவும் மாமாவும் தா இதுனால அதிகம் பாதிக்கப்பட்டவங்க. அவங்க போட்ட திட்டம் எல்லாம் கோவா கடற்கரைல கரைஞ்சி போச்சி. நீ பிரகாஷ லவ் பண்ணலன்னாலும் நீ அந்த யஷ்வந்த்த கல்யாணம் பண்ணிக்க நா விட்டிருக்க மாட்டேன். ஆனா நீ எங்க பிரகாஷ லவ் பண்ணிட்ட. சோ..." என ஹரிணி இழுக்க,
"சோ... இந்த வீட்டு மருமகள்க லிஸ்ட்டுல நீயும் ஒருத்தியாகிட்ட. வெல்கம் டூ அவர் ஸ்வீட் ஹோம்." என இந்து இரு கரம் விரித்து அழைக்க, ஜெனி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் இந்துவை.
ஜெனியின் குழப்பம் தீர்ந்தது. மனமகிழ்வுடன் பிரகாஷின் மனைவியாகவும் நாச்சியம்மாள் குடும்பத்தின் மருமகளாகவும் தயாரானாள். அது அவளின் புன்னகையில் தெரிந்தது.
அங்காளி பங்காளிகள் உட்பட சொந்த பந்தங்கள் அனைத்தும் கூடியிருந்தது. பரிசம் போட, வாழையடி வாழையாய் தழைத்தோங்க வேண்டி வாழை மரத்தை வாசலில் கட்டி, சுபநிகழ்வுக்கு அடையாளமாக மாவிலை தோரணங்களைத் தொங்க விட்டு, வண்ண வண்ண பூக்களால் மட்டுமல்லாது விளக்குகளாலும் அவர்களின் வீட்டையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தையும் அலங்காரம் செய்திருந்தனர். மேளதாளங்கள் முழங்க ஊரே வந்திருந்தது அந்த நிகழ்ச்சிக்கு.
வீட்டார் அனைவரும் கல்யாணம் வேலைகள் செய்ய லதாவும் சுதாவும் வரவேற்பில் நின்றிருந்தனர் சந்தனம் கற்கண்டு தட்டை ஏந்திய படி.
"வாங்கண்ணே. மதினி நல்லா இருக்கீகளா.!" லதா, விக்ரமையும் அவனின் மனைவியையும் வரவேற்றாள். விக்ரம் சிரிப்புடன் சந்தனத்தை எடுக்க,
"என்ன விஜய் அண்ணா சோகமா இருக்குற மாறித் தெரியுது. யாரும் உங்களுக்கு எப்ப கல்யாணம்னு கேட்டாங்களா என்ன?." சுதா, விஜய்யை வம்பிளுக்க, விஜய் விக்ரமை பார்த்தான். 'இதுக்குதா நா எங்கையும் வர மாட்டேன்னு சொன்னேன். கேட்டியா?.' என்பது போல் முறைக்க, விக்ரம் அவனை உள்ளே இழுத்துச் சென்று அமர வைத்தான்.
"அந்தப் பச்ச சேல நல்லா இருக்கா. இல்ல ஆரஞ்ச் தாவணி நல்லா இருக்கா.?" கடுப்புடன் அமர்ந்திருந்த விஜயின் காதில் கேட்டது அந்தக் குரல்.
"பச்ச நல்லா தா இருக்கு. ஆனா ஆரஞ்ச் அத விட நல்லா இருக்கே." என யார் கேள்வி கேட்டார் என்று கூடத் தெரியாமல் அந்தப் பெண்களைப் பார்த்துக் கொண்டே பதில் கூறினான் விஜய்.
"என்ன பிரயோஜனம். ஒன்னு கூட உங்கள பாக்கலையே. எனக்குத் தெரிஞ்சி நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல தா மேரேஜ் ஆகும் போல. அதுவரைக்கும் நீங்க மொரட்டு சிங்கிள் தா. எதுக்கும் நீங்கக் காத்துட்டு இருக்குறது நல்லது. எனக்குக் கல்யாண வயசாகுற வரைக்கும்." என்றது அந்தக் குரல். யார்ரா அது?. என்பது போல் விஜய் திருப்பிப் பார்க்க. நந்து நின்றுகொண்டிருந்தான்.
'இவனுக்குக் கல்யாண வயசு வர்ற வர நா காத்துட்டு இருக்கனுமா. அப்ப எனக்கு அறுபது வயசுலையா கல்யாணம் நடக்கும்.' என நினைத்தவன்.
"டேய் சுண்டான். இங்க என்ன பண்ற?."
"நா உங்களுக்குப் பொண்ணு பாத்துட்டு இருக்கேன். நா பாத்துவச்ச பொண்ணத்தா பிரகாஷ் மாமா கல்யாணம் பண்ணிக்க போறாங்க. அதா அந்தச் சேவைய உங்களுக்கும் செய்யலாம்னு இருக்கேன். ஆனா நீங்க கோஆப்ரேட் பண்ண மாட்டேங்கிறிங்களே. ஏ.?" விஜயின் அருகில் இருந்த சேரில் ஏறி நின்று கொண்டு அவனின் மேல் சாய்ந்துபடி பேசினான் நந்து.
"நீயெல்லாம் பேசி நா கேக்க வேண்டிய நிலமைல இருக்கேன் பாரேன். ச்ச..." என விஜய் நெந்து கொள்ள,
"உங்களுக்குக் கல்யாணம் ஆகலங்கிற கவல அதிகமா இருக்கு. எனக்கு அது நல்லாவே புரியுது. நா செய்றத அப்படியே செஞ்சிங்கன்னா உங்களுக்குக் கல்யாணம் கண்ஃபாம்." என நந்து அங்கிருந்த ஒரு இளம் பெண்ணிடம் எதுவோ பேச, அவள் புன்னகையுடன் நந்துவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துச் சென்றாள்.
"நல்லா பாத்திங்களா!. இப்ப நா பண்ணத அடி பிசகாம நீங்கப் பண்ணி அந்த அக்காகிட்ட முத்....." என்றபோது விஜய் நந்துவின் தலையில் தட்ட,
"அது முடியாது. அட்லீஸ்ட் பேராது கேட்டுட்டு வாங்க பாப்போம். சீக்கிரம் போங்க. இன்னும் நீங்கப் பாஸ் பண்ண வேண்டி எக்ஸாம் நிறைய இருக்கு. தொடர்ந்து நா உங்களுக்கு வகுப்பெடுத்தாத்தா நீங்கப் பாஸ் ஆவிங்க. அப்பதா ஆறு மாசத்துக்குள்ள உங்களுக்கும் கல்யாணம் காட்சின்னு எதாவது ஒன்ன நடத்த முடியும். போங்க சீக்கிரம்." எனத் துரத்த, விஜய் நகரவே இல்லையே.
"என்னடா! நீ உம்மாமெங்கிட்ட என்ன அடிவாங்கிக் குடுக்க பாக்குறியா?."
"இல்லையே!. அதுமட்டுமில்லாம மாமா இப்ப இங்க இல்ல. ஆமா நீங்க எந்த மாமாவ பாத்து பயப்படுறீங்க. நாலு பேர் இருக்காங்க. அதுல எத்தனாவது நம்பர் உங்கள பயங்காட்டுது."
"ரெண்டாவது."
"ஓ!. தரன் மாமாவா. அவரு ரொம்ப நல்லவரா ச்சே!. அவரு யாரையும் திட்டி ஏ! அதட்டி கூட நா பாத்தது இல்ல. அதுனால." என இழுக்க,
"ம்... அதுனால நா அந்தப் பொண்ணு கிட்ட பேசணும். அது குய்யோ மிய்யோன்னு கத்தனும். உம்மாமெ வந்து என்ன பொறட்டி போட்டு அடிக்கனும். அதான! ஏன்டா? அவன ஹீரோன்னு காட்ட என்ன வில்லனா மாத்துற."
"அப்ப இந்தக் கதைக்கி யாரு வில்லன். அப்படின்னு ஒருத்தர் இருக்காரா என்ன?."
"வரும்போது வருவான். ஆமா உன்ன ரிஷி திட்டுனதே இல்லையா.?"
"என்ன ஏ திட்டப்போறாரு?. அவரோட வருங்கால மருகனாக்கும் நா. வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைட்ட இப்பருந்தே மரியாதையா நடந்துகிறாரு."
"ஆனா, அவனுக்குப் பொம்பளப்பிள்ள இல்லையேடா!. ஒரு வேல நீ ஆதிரை பாப்பாவ சொல்றியா என்ன.?"என்றான் சத்தமாக. அங்குக் கௌதம் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் காதுகளில் விழும் அளவுக்கு.
"ச்சச்ச.!! ஆதிய எனக்குப் பிடிக்கும் தா. ஆனா, கௌதம் மாமாவோட உபசரிப்பு சரியில்ல. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு எங்க பாட்டி சொல்லிருக்கு. அதுனால மருமகன மதிக்காத மாமா பொண்ணு ரிஜெட்டர்டு. அவரு ரொம்ப வருந்திக் கேட்டா வேணுமானா! கட்டிப்பேன். ஒரு பக்கம் ஆதி. இன்னொரு பக்கம் பம்கின்னோட பொண்ணு. காத்து வாக்குல ரெண்டு." என்றவனை கௌதம் அலேக்காகத் தூக்கி உளுக்க, விஜய் சிரிக்க என அவ்விடம் மட்டுமல்ல, அந்தத் திருமணமும் நந்துவின் சின்ன சின்ன லீலைகளால் கலகலத்தது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..