அத்தியாயம்: 38
காரிருள் காட்சிகளைத் தராது. அதே போல் மற்ற நிறங்கள் அற்ற முழு வெண்மையிலும் காண்பது கடினம் தான். இவன் கண்களுக்கு வெள்ளை நிறம் மட்டுமே தெரிகிறது. நிலம், வானமென அனைத்தும் வெள்ளை நிறமாக உள்ளது. ஒரு வேளை வேற்று கிரகத்திற்கு வந்து விட்டோமோ!. இல்லை ஆராய்ச்சி கூடத்திற்கு. எத்தனை யோசித்தும் நினைவில் வரவில்லை. நாம் இருக்கும் இடம் எங்கு உள்ளது என்ற கேள்வி எழ, விடை தெரியவில்லை. நாம் எப்படி உள்ளோம் எனக் குனிந்து தன்னை ஆராய, அவனும் வெள்ளைநிற உடையில் இருப்பதை தெரிந்து கொள்கிறான். தலையில் கவசம் போட்டிருக்கிறான். அது கூட வெள்ளை நிறம் தான். அவன் நின்றதை பிறரால் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லாம் வெள்ளை நிறமே.
தனக்கு எதிரில் ஆட்கள் உள்ளனரா என்பதை கூடக் கைகளால் துலாவி தெரிந்து கொள்ளும் நிலை. திடீரெனக் காலில் எதுவோ தட்டுப்பட, என்னவென நிலம் பார்த்தவனின் விழிகளுக்கு எதுவும் தெரியவில்லை. குனிந்து கையால் எடுக்க முயன்ற போதுதான் தெரிந்து கொண்டான் அது ஒரு பொம்மை. அதுவும் வெள்ளை நிறமாக இருப்பதால் காட்சியில் பிழை ஏற்பட்டு கண்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. அதன் வடிவத்தைக் கைகளால் தடவியதால் அது பொம்மையென மூளை சொல்லியது.
க்... ரீ... ச்...
என்ற சத்தத்துடன் கதவு திறக்கும் ஒலி கேட்க, அந்தத் திசை நோக்கித் திரும்பினான் அவன். எதுவோ அசைந்தது அவ்வளவே. வேகவேகமாக அதன் அருகில் செல்ல, ஒரு உருவம் தெரிந்தது. அதன் ஹெல்மெட்டில் இருக்கும் சிறிய கண்ணாடி போன்ற அமைப்பு திறந்திருந்ததால் அந்த உருவத்தின் கண்களையும் முகத்தின் சில பாகங்களையும் பார்க்க முடிந்தது அவனால்.
"Excuse me!. இது என்ன இடம்னு சொல்ல முடியுமா.? Hello... உங்களத்தா!. யாருங்க நீங்க?. நா எப்படி இங்க வந்தேன். என்ன எதுக்குங்க அடச்சி வச்சிருக்காங்க.?" என அவன் கேட்க, வந்த உருவம் பதில் சொல்லாது அவனை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றது. வர முடியாது என மறுத்துத் தான் பார்த்தான் அவன். ஆனாலும் வேறு வழி இல்லை. உடன் சென்றான்.
ஓரிடத்திலிருந்து அவனை வேறொரு இடத்திற்கு கூட்டி வந்த அந்த உருவம் திடீரெனக் காணமல் போனது. காட்டிற்குள் தொலைந்து விட்டால் கூட மரங்கள் நம்முடன் இருக்கிறது என்ற நிம்மதி இருக்கும். அல்லது பாலைவனத்தில் இருந்தால் கூட மணலாவது கண்ணிற்கு தெரியும். எதையும் பார்க்க முடியாதவாறு இருக்கும் இந்த இடத்திலிருந்து எப்படி தப்பிப்பது? என யோசனை செய்த படி இருந்தனின் செவிகளில் மீண்டும் ஒரு சத்தம். இம்முறை கேட்டது ஒரு குழந்தையின் சிரிப்பொலி.
அந்தச் சிரிப்புச் சத்தத்தை வைத்துக் குழந்தை பச்சிளங்குழந்தையும் இல்ல. பதின்மவயது குழந்தையும் இல்லை. அது ஐந்திற்கும் பத்திற்கும் இடையில் உள்ள குழந்தையின் சிரிப்பு என்பதை அறிந்தவன் பேசத் தொடங்கினான்.
"ஹாய் குட்டி. யாரு நீங்க.? ஃபஸ்ட் எங்க இருக்கிங்க?. எனக்கு எதுவும் தெரியல." என்க.
" பக்...கத்துல தா. அங்...கிள்." என்றது அந்தக் குழந்தை. அவனும் சுற்றி முற்றி பார்த்து விட்டு,
"எனக்குத் தெரிய மாட்டேங்கிறியே குட்டி நீ. ப்ளீஸ் நீங்களே அங்கிள் கிட்ட வாங்களா?." என்க அவனின் அருகில் வந்தது அந்தக் குழந்தை. தன் தலைகவசத்தை கலட்டியதால் அவனுக்கு அந்தச் சிறுவனின் முகம் தெரிந்தது.
ஐந்து வயது இருக்கும். பால் மனம் மாறாக் குழந்தை. Physically challenged boy. மன வளர்ச்சி குன்றியன் போல் தெரிந்தான் அவன். வாயில் இருந்து எச்சில் அருவிபோல் ஒழுக, வாய் ஒரு பக்கம் கோணி இருந்தது. உதடுகளில் ஒருவித அசட்டு சிரிப்புடன் இருந்தான் அந்தச் சிறுவன்.
"தம்பி நீ எப்படி இங்க வந்த?. உன்னோட அம்மா அப்பா எங்க?. எதுக்கு இங்க இருக்க?." எனக் கேட்க,
"அ...ம்மா. அம்மா.... இ.ல்.ல... அப்பா... தெ...ரி.யாது." என்றான் இழுவையாக.
"ஓகே... ஓகே... ரிலாகஸ். இது என்ன இடம்?."
"ஆசு... ஆசு.பத்திரி." எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே சிலர் உள்ளே வந்தனர். அவர்கள் வேறு நிற உடை அணிந்தால் கண்களுக்கு நன்கு அவர்களின் உருவம் மட்டுமே தெரிந்தது. முகம் தெரியவில்லை. தல கவசத்தால் முகத்தை மறைத்திருந்தனர்.
அவர்கள் அந்தச் சிறுவனை இழுத்துக் கொண்டு சென்றனர். ஆம், வர மறுத்த அந்தச் சிறுவனை அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர். அதைப் பார்த்தவனால் பொறுக்க முடியாது அவர்களைத் தடுக்க, அது முடியவில்ல. அதனால் அவர்கள் பின்னாலேயே சென்றான். கண்ணாடி கூண்டு போல் இருந்து ஒரிடத்திற்கு இழுத்து வந்தவர்கள் இரும்பு கம்பி கொண்டு அந்தச் சிறுவனின் தலையிலேயே அடிக்கின்றனர். உடலில் இருந்த வெள்ளை நிற உடை முழுவதும் இரத்தம். சிறுவன் துடிக்கிறான். கதறி அழுகிறான். ஆனால் உயிர் போக வில்லை. அவர்கள் விடாது தலையிலேயே அடிக்க ஒரு கட்டத்தில் சிறுவன் மயங்குகிறான். எங்கோ தூக்கி செல்லப் பார்க்க அதைப் பார்த்து நின்ற அவன் அவர்களுடன் சண்டை போடுகிறான்.
நான்கு பேர்தான். அடித்து உதைத்து இடித்துத் தள்ளி விட்டு அந்தச் சிறுவனைத் தூக்கி மடியில் கிடத்தி உளுக்க, அரண்டு போனான் கௌதம். ஏனெனில் அது பவித்ராவின் முகம்போல் தெரிந்து. பின் அது சில நொடியில் பார்கவியின் முகமாய் மாறியது. முகமெங்கும் ரத்தமாய் இருக்க, ஆக்ரோஷமாகக் கண்விழித்த அது.
"என்ன விட்ட மாறிப் பவித்ராவ விட்றாத ஹரிண்ணே. விட்டுடாத." எனச் சொல்லி மயங்க, மற்றவர்கள் அவனைப் பிடித்திழுத்து சண்டை போட்டு வெளியே துரத்தி விட்டனர்.
பவி...
என்ற அலறலுடன் எழுந்தான் கௌதம்.
கனவு தான் ஆனால் நிஜம் போல் இருந்தது. மணி ஆறு எனக் காட்ட, எழுந்து அமர்ந்தான் அவன். அருகில் துயில் கொள்ளும் தன் மனைவியைத் தொந்தரவு செய்யாது, பின் பக்கம் சென்றான் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள. கனகாவும் கிருபாவதியும் மாட்டைக் குளிப்பாட்டி தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருக்க, இவனைப் பார்த்து 'என்ன வேண்டும்?' என்றனர். ஒன்றுமில்லையெனத் தலையசைத்து உள்ள செல்லப் பார்த்தவனின் கண்களுக்குப் பவித்ரா தெரிந்தாள்.
சமயலறையிலிருந்து பார்த்தால் வீட்டின் கொள்ளைப்புறம் நன்கு தெரியும் வகையில் மூன்று ஜன்னல்கள் இருக்கும். அந்த ஜன்னலின் வழியே சமையல் செய்து கொண்டிருந்த மலரும் நங்கையும் தெரிய, பவித்ரா டம்ளரில் பால் ஊற்றி எடுத்துச் செல்வதும் தெரிந்தது. அந்தப் பால் சம்பத்திற்கு கொடுக்க எடுத்துச் செல்கிறாள். பின்னாலேயே சென்றவனுக்கு பவி பாலை தன் கணவனிடம் நீட்டியதையும், சம்பத் அவளுடன் பேசிச் சிரித்து அவளைச் சீண்டி கேலி செய்து அதைத் தொண்டைக்குள் இறங்கியதையும் காண முடிந்தது. இதற்கு மேல் நின்று பார்ப்பது நாகரீகமற்ற செயல் என்பதால் தன் அறைக்குச் சென்றான். ஆனால் பவித்ராவை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியது அவனுக்கு.
கட்டிலில் தன் தலையை விரல்களால் அழுத்திப் பிடித்தவன் மீண்டும் கனவில் வந்ததை நினைவுக் கூர்ந்தான். அதில் வேறு நிற ஆடை உடுத்தியவர்களுடன் சண்டை போட்டபோது அவர்களின் சட்டை காலரில் எதுவோ எழுதியிருந்தது. என்ன அது?. என்று தீவிரமாக யோசித்துக் கொண்டே இருக்கிறான். சில எழுத்துக்கள் மங்களாய் தெரிய, அதை ஒரு நோட்டில் எழுதுகிறான். தன் லேப்டாப்பில் உள்ள கூகுள்ளில் அதைத் தேட, அது சிலவற்றை பரிந்துரைத்தது. ஒவ்வொன்றாக அதைப் படிக்கத் தொடங்கினான் கௌதம்.
"ஏங்க!. ஏங்க.! ரொம்ப வேலயா இருக்கா.? ஏ ஒரு மாறி இருக்கிங்க?. டென்ஷனா!." எனத் தன் கணவனின் அருகில் வந்து அமர்ந்தாள் இந்துமதி. அவளின் குரலில் சிறு சோர்வும் கவலையும் இருந்தது. கவலை அது தன் கணவனைப் பற்றியது. ஏனெனில் காலையிலிருந்து உணவு கூட உண்ணாது அந்த மடிக்கணினியின் முன் அமர்ந்தவன். இரவு வந்து விட்டது இன்னும் எழ வில்லை. அதான் கவலை.
"இல்ல மதி. டென்ஷன்லாம் இல்ல. சும்மா சில வெப்சைட்டல இருக்குறத படிச்சிட்டு இருக்கேன். நீ சாப்டியா?. எதுவும் வேணுமா டா உனக்கு?." என்றான் தலை தூக்காமல்.
"எனக்கு எதுவும் வேண்டாம். நா உங்க மடில கொஞ்ச நேரம் படுக்கலாம்னு வந்தேன்." என்றளின் குரல் சோர்வை உணர்ந்தவன், உடனே எழுந்து விட்டான். தன் மனையாளை மடியில் கிடத்தி இதமாய் அவளின் தலையை வருடினான். இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்க, இந்துவின் முகம் வலியில் சுருங்கியது.
"என்னம்மா பண்ணு?. வலிக்கிதா!. டாக்டர்ட்ட போலாமா?." எனப் படபடத்தான் கௌதம். ஏனெனில் அவர்களின் முதல் குழந்தையின் அனுபவத்தைத் திரும்பப் பெற விரும்பாமல்.
"இல்ல, இது சூட்டு வலியாக் கூட இருக்கலாம்."
"எப்பருந்து வலிக்கிது?."
"காலைல இருந்து. விட்டு விட்டு வலி வர்றமாறி இருக்கு." என்றவுடன் வேகவேகமாக அவளை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆயத்தமானான்.
"இல்லங்க. ரெண்டு வாரத்துக்கு மேல நாள் இருக்கு. உடனே உடனே ஹாஸ்பிடலுக்குலாம் போகக் கூடாது." என மறுத்தவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறையை விட்டு வெளியே வர. அங்கு ரிஷி ஜீப்பில் தயாராக இருப்பதாக மலர் கூறினான். ஜோதி நாச்சியம்மாளும் ஜீப்பில் இருந்தனர். வீட்டில் பெரியவர்கள் தவிர இளையவர்களாக ரிஷி கௌதம் சம்பத் என மூன்று ஆண்களும் இருந்தனர். திருமணம் முடிந்து இரு வாரங்கள் ஆனதால் பிரகாஷை தேன் நிலவுக்கென அனுப்பி வைத்துவிட்டனர்.
எத்தனை வேகமாகச் சென்று மருத்துவரைப் பார்த்தாலும் கௌதமின் மகன் நிதானமாக மறுநாள் காலையில் தான் பிறந்தான். பூக்குவியலாய் தொட்டிலில் கிடந்தவனை பார்க்கையில் அச்சு அசல் கௌதமே என்று சொல்லும் அளவுக்கு இருந்தான் அவனின் மகன். மனைவியின் நலம் அறிந்த பின்னரே கௌதம் தன் மகனைக் கையில் வாங்கினான். மகனைக் கண்டதும் நேற்றைய கனவின் தாக்கம் அவன் கண்முன்னே தோன்ற, மனமானது கனத்தது. முகத்திலும் மனதிலும் மகனின் வருகைக்கான சந்தோஷம் தெரிந்தாலும். மூளை உன் தங்கையின் நடவடிக்கைகளைக் கவனியென உத்தரவிட்டது.
ஆனால், மகன் பிறந்து, அவனையும் தன் மனைவியையும் வீட்டிற்கு அழைத்து வரும் வரை, ஹாஸ்பிடல் வீடு என மாற்றி மாற்றி அழைந்து கொண்டு இருந்தான் கௌதம். இப்படியாக மேலும் சில நாட்கள் செல்ல. ஒரு நாள் பவித்ரா இரவு உணவுக்குப் பின் யாருக்கும் தெரியாமல் எதோ ஒன்றை தன் வாயினுள் போட்டதையும். மற்றொன்றை பாலில் கலந்து சம்பத்திற்கு எடுத்துச் சென்றதையும் கவனித்தான்.
எதைக் கலந்தாள்?. மாத்திரை என்றால் ஏன் யாருக்கும் தெரியாமல் உண்ண வேண்டும். சம்பத்திற்கும் தெரியாமல் அல்லவா இதைச் செய்கிறாள். ஏன்?. என்ற கேள்விக்கு விடை காண முடிவு செய்தான்.
அவனுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. ஆனால் அவளின் செயல்களுக்கான காரணம் தெரிந்தே ஆக வேண்டும். நேரில் சென்று கேட்பது சரியாகப் படவில்லை. எனவே, அவளின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அவள் யார் யாருடன் உடையாடுகிறாள் என்பதை அறிய தீர்மானித்தான்.
அதில் டாக்டர் என்ற பெயரில் ஒரு நம்பர் சேமிக்கப்பட்டிருந்தது. அவரின் பெயர் தருணீகா. அவள் பவித்ராவின் தோழியின் அக்கா. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவப்படிப்பை முடித்து விட்டுச் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கருத்தரிப்பு மையத்தில் பணி புரிகிறாள். அவளிடம் தான் பவித்ரா அதிக நேரம் உரையாடுகிறாள். அவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்க நினைத்தவன் ஒரு ஆஃப்பை பவியின் மொபைலில் பதிவிறக்கம் செய்தான். அவளுக்குத் தெரியாமல் அவர்களின் உரையாடலைக் கேட்டான்.
பல நேரம் பவி குழந்தையைப் பெற்றெடுப்பது எப்படி என்றும், அதற்காக மருத்துவ வழிமுறைகளைப் பற்றியுமே தருணீகாவிடம் பேசியிருந்தாள். அவளின் குரலில் குழந்தைக்காகத் தவிப்பை கௌதமால் நன்கு உணர முடிந்தது. அப்போது ஒரு நாள், மாத்திரைகள் தீர்ந்து விட்டது எனவும் பெயரைச் சொன்னால் தானே வாங்கிக் கொள்வதாகப் பவி கேட்க,
அதற்கு அவர் இது கடைகளில் கிடைக்காது எனவும், தான் கொரியரில் அனுப்புவதாகவும் கூறினார். கௌதம் அந்தப் பெயர் தெரியாத மாத்திரைகள் கொரியர் மூலம் வீடு வந்து சேரும் முன்னரே பெற்றுக் கொண்டான். முப்பது மாத்திரைகளைச் சிறிய பாட்டிலில் அடைத்து வைத்திருக்க, அதன் பெயர் கூட அந்தப் பாட்டிலில் எழுதப்படவில்லை. அதிலிருந்து இரு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு மீதியை பவியின் கையில் சேர்த்தான்.
அந்தக் கருத்தரிப்பு மையம் பற்றியும் அதற்கு மருந்துகள் எங்கிருந்து வருகின்றன என்பதை பற்றியும் நெட்டில் ஆராய்ந்தான். எந்த ஒரு மெடிக்கல் ஷாப்பிலும் இதை வாங்க இயலாது. ஏனெனில் அது அவர்களின் சொந்த தயாரிப்பு. அந்தக் கருத்தரிப்பு மையம், தலைமை நிறுவனமான ICDS laboratory Ltd. என்ற Pharma medical company யின் கீழ் இயங்குகிறது.
அது ஒரு தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம். வெளி நாட்டைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு மருந்து மாத்திரைகளைத் தயாரித்து அனுப்புகிறது. தென்னிந்தியாவில் சொந்தமாக ஒன்றிரண்டு மருத்துவ கல்லூரிகள் உட்பட கருத்தரிப்பு மையங்கள், கண் மருந்துவமனை போன்ற பல சேவைகளைச் செய்து வரும் ஒரு நிறுவனம்.
அந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வருபவர்கள் வெளியிலிருந்து மருந்து மாத்திரைகள் வாங்க தேவையில்லை. அவர்களின் சொந்த தயாரிப்பையே பயன்படுத்தலாம். காசு குடுத்து வாங்கி.
கௌதம் அந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் தயாரிப்புகளின் தரத்தைப் பற்றியும் தேட, அப்படி ஒன்றும் அந்த நிறுவனத்தால் பெரிய பாதிப்பு வந்தது போன்ற பதிவு எங்கும் இல்லை. மக்களிடையே நல்ல பெயரையே வாங்கி இருந்தது. அந்த நிறுவனத்தின் தலைவர் யார் என்று தேட DR.Chorlas Fernando மற்றும் Daniel Fernando என்ற வெளிநாட்டு தந்தையும் மகனுமாய் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்துகின்றனர் என்பது தெரிய வந்தது.
அறுபது வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் அதன் உரிமையாளர்கள் இருவரின் பெயரிலும் எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. மருத்துவ தவறுகள் அவர்களின் மருத்துவமனைகளில் நடந்தது போன்ற வழக்குகளும் இல்லை.
ஆனால், இதில் எதோ தவறு உள்ளது எனக் கௌதமின் மனமானது சொல்லிக் கொண்டே இருந்தது. மனம் மட்டுமல்ல பார்கவியும் தான் சொன்னாளே.
எனவே, அதன் மாத்திரைகளை Lab ல் பரிசோதனைக்குக் குடுத்தான். ஒரு வாரத்திற்கு பின் அதன் ரிசல்ட் வர, அதை எடுத்துக் கொண்டு ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றான்.
"இத, யாருக்கு கௌதம் குடுக்குறிங்க. எத்தன நாளா சாப்பிடுறீங்க?. யார் priscription தந்தா இதுக்கு.?" என்றார் டாக்டர் சற்று காட்டமாக.
"டாக்டர் இது என்னோட சிஸ்டரும் அவளோட ஹஸ்பென்டும் கடந்த கொஞ்ச நாளா எடுத்துக்கிறாங்க. மே பீ அவளுக்கு fertility clinic ல தந்திருக்கனும்." என்றான் கௌதம்.
"நிஜமாவே இத டாக்டர் தா தந்தாங்களா என்ன." சந்தேகமாக அவர் கேட்க,
"எஸ்... டாக்டர். எதாச்சும் சீரியஸ்ஸான ப்ராப்ளமா?."
"எஸ்... ரொம்ப சீரியஸ்ஸானதும் கூட. இது பாக்க விட்டமின் மாத்திர மாறி இருந்தாலும். இதுக்குள்ள அவங்க மிக்ஸ் பண்ணிருக்கிற சில கெமிக்கல்ஸ் நம்ம உடம்புல விட்டமின்ஸ்ஸ கூட்டுறதுக்கு பதிலா குறைக்கத் தான் செய்யும். இதுனால டிப்ரஷன். அதாவது மன சோர்வு ஏற்பட்டு யாரையும் நம்பாம ஒரு பாதுகாப்பின்மைய ஃபீல் பண்ணுவாங்க. பசிக்காது. பயம், நம்பிக்க இல்லாம போறதுன்னு. மனசுல மட்டுமில்ல உடம்புலையும் சில பல சேஜ்ஜஸ் தெரியும்.
இந்த மாத்திர தொடந்து போட்டா அது அவங்கள மட்டுமில்ல அவங்களோட ஜென்ரேஷனையும் பாதிக்கலாம். ஐ மீன். பிறக்கப் போற குழந்த ஊனமா கூடப் பிறக்கலாம். எல்லா கெமிக்கல்ஸும் இந்த மாத்திரையை அதிகமா இருக்குதுங்கிறது நீங்க எடுத்துட்டு வந்த லேப் டெஸ்ட் காட்டுது. இது உண்மன்னா நீங்கக் கண்டிப்பா அத எடுத்துக்க கூடாதுன்னு உங்க சிஸ்டர் கிட்ட சொல்லுங்க. இல்லன்னா பாதிப்பு அதிகமாக இருக்கும்." என்று எச்சரித்தார் மருத்துவர்.
என்ன சொல்கிறார் அவர் என்பதை புரிந்து கொள்ளவே கௌதமிற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அவன் கனவில் வந்தவர்களின் காலரில் இருந்த எழுத்தும். அந்த நிறுவனத்தின் பெயரில் உள்ள எழுத்தும் ஒன்று போல் உள்ளதாகத் தோன்ற ஆரம்பித்தது கௌதமிற்கு.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் தோன்றுகிறதோ கௌதமிற்கு.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..