முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 41

அத்தியாயம்: 41


மழை விட்டாலும் தூரல் விடாது என்பது போல், கோபமாகக் கௌதம் வெளியேறிய பின்னும் பவித்ரா நிறுத்தவில்லை. கௌதமை திட்டிக் கொண்டே தா இருந்தாள். அவள் பேசும் பத்து வார்த்தைகளில் எட்டு வார்த்தை கௌதமை கொலைகாரன் என்றே காட்டின. 


கேட்பவருக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றாலும் அவளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால் நிறுத்தப்பட்டது, அவளின் கன்னத்தில் விழுந்த அடியால். கிட்டத்தட்ட சில அடி தூரங்கள் தள்ளிச் சென்று கீழே விழும் அளவுக்குப் பலத்த அடி. குடுத்தவன் ரிஷி தரன் ஆயிற்றே… ஆணின் கரம். அதிலும், விவசாயம் செய்து கர்ணம் பாய்ந்திருந்த கரம் வேறு. நிச்சயம் காது சவ்வு கிழிந்திருக்கும். 


"ரிஷி என்ன பழக்கம் இது?. பொம்பளப்பிள்ளைய கை நீட்டுறது." என்றார் மூர்த்தி கோபமாக. 


"அப்ப அவள நீங்க நிறுத்துங்க. நீங்க எல்லாரும் காது குடுத்து கேக்குறதுனால தா பேசிக்கிட்டே போறா. ஹரிய பத்தி உனக்கு என்ன தெரியும். ம்... அவன கொலகாரன்னு சொல்ற." எனப் பல்லைக் கடித்தபடி பவியை முறைத்துக் கொண்டே ஒரு விரல் நீட்டி மிரட்ட, பவி மிரண்டு விட்டாள். இதுவரை யாரும் அவளை அடித்தது இல்லையா! முதலில் கனகா. அடுத்து ரிஷி. அதான் உடல் நடுக்கவே ஆரம்பித்து விட்டது. 


தன் செல்ல மகள் அடிவாங்கியதை பொறுக்காத கலியபெருமாள், "கொலகாரன கொலகாரன்னு தான சொல்ல முடியும்.‌ கொல மட்டுமில்ல. பொம்பள பொறுக்கி... கஞ்சாகுடுக்கி... என்னோட மூத்த மகள கொன்னது மட்டுமில்லாம, என்னோட இன்னொரு பொண்ணோட வாழ்க்கையையும் கெடுக்க வந்த கொலகார பாவி அவெ." என்க. 


தன் தந்தையின் வயதில் இருக்கும் மூத்தவரை அடிக்க முடியாது இல்லையா.! அதனால் அங்குக் கிடந்த டீப்பாயை ஓங்கி மிதித்தான். அது தூரம் சென்று சுவற்றில் மோதி உடைந்து போனது. அது கலியபெருமாளுக்கு சிறு பயத்தை தந்தது. எத்தனை பேசினாலும் கௌதம்‌ போல் கேட்டுக் கொண்டு நிற்பான் என்று எதிர்பார்த்து விட்டாரோ என்னமோ!. 


அவரைவிடப் பலசாலியாகக் கௌதம் இருந்தும், தந்தை என்ற மரியாதை இருப்பதால் தான் அவரிடம் சில வார்த்தைகளால் தன் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுவான். ஆனால் இங்கு நிற்பது கௌதம் அல்ல. ரிஷி தரன்... தன் செயலால் நீங்கள் பேசியது தனக்கு பிடிக்கவில்லை என்று காட்டினான். இன்னும் பேசினால் அடுத்த அடி உங்கள்மீதும் விழும் என்பது போல் அவரை முறைத்துக் கொண்டு நிற்க,


"அப்பா சொல்றது சரிதான!. அவந்தா என்னோட அக்கா இறந்ததுக்கு காரணம்." என்றாள் பவி சிறிய குரலில்.


"ஓ!. இத்தன வர்ஷம் இல்லாம, இப்ப மட்டும் உனக்கு உங்கக்கா மேல எப்படி பாசம் பொத்துக்கிட்டு வந்திச்சோ!. ம்..." என நக்கலாகப் பேசியவன், அவளின் அருகில் சென்று முட்டிப் போட்டு அமர்ந்தான். 


"சொல்லு, இந்தத் திடீர் பாசத்துக்கு காரணம் என்ன?" என்றவன், அவள் மிரண்டு பார்க்கவும்,


"உங்கக்கா எப்படி இறந்தாங்கன்னு உனக்குத் தெரியுமா?. இல்ல ஏ இறந்தாங்கன்னு உனக்குத் தெரியுமா?. ம்... ஹரி தான் கொல பண்ணான்னு நீ பாத்தியா?." என்றவன் திரும்பிக் கலியபெருமாளை பார்த்து,


"பார்கவி இறந்ததுக்கு‌ யார் காரணம்னு உனக்குத் தெரியாதுல்ல?. இதோ நிக்கிறாரே உங்கப்பா திருவாளர் கலியபெருமாள்... பெருமா...ள் அவர்கள். அவரு தாங்காரணம். முழுக்க முழுக்க அவர் மட்டுமே காரணம்." என்றவன் எழுந்து கலியபெருமாளின் முன் வந்து நின்றான்.


"நீங்க நிம்மதியா தா வாழ்ந்துட்டு இருக்கிங்க. ஏன்னா நீங்கத் தா உங்க பொண்ணு இறந்ததுக்கு காரணமானவனுக்கு தண்ட‌ வாங்கி குடுத்துட்டிங்கள்ள. அப்ப நல்லாத்தான் இருப்பிங்க. ஆமா, ஒரு எட்டு வயசப் பையன் மேல முழு பழியையும் தூக்கி போட்டுடு நீங்க நிம்மதியா தூங்குறிங்களே எப்படி?. ம்... இனி தூங்காதிங்க. ஏன்னா! உங்களால தா உங்க பொண்ணு இறந்தா!. யூ... உங்களால மட்டும் தான் பார்கவி இறந்தா!." என்றான் கோபமாக,


"காசு பணம் இல்லாத ஏழை கூடத் தன்னோட பிள்ளைங்க இறந்தா! யாரோட ஆதரவையும் எதிர்பாக்காம நடு தெருவுல இறங்கி போராடி குற்றவாளிய கைது செய்ய வைக்கிறாங்க. ஐஞ்சி வயசு பிஞ்ச யாரோ கசக்கி எரிஞ்சிருக்காய்ங்க. ஆனா! ஒரு கப்ம்ளைண்ட் கூட நீங்கக் குடுக்கலைல. ஏன்னா நீங்கத் தான் சரியான குற்றவாளிய கண்டு பிடிச்சி தண்ட குடுத்துக்கிட்டே இருக்கிங்களே. கௌதம்க்கு...  ஆனா நீங்கப் பண்ண தப்புக்கு தா இதுவரைக்கும் ஹரி தண்டன அனுபவிச்சிட்டு இருக்கான்." என்றவனின் முகத்தில் அத்தனை கோபம்.‌ 


"இனி நீங்களோ இல்ல ஏய் நீயும் தா. ஹரிய பத்தி ஏதாவது தப்பா பேசுங்க. அப்ப இருக்கு." என விரல் நீட்டி மிரட்டி விட்டு மாடிக்குச் சென்றான் அவனின் அறைக்கு. 


அவன் கூறியது உண்மையே. தன் மகள் மரணம் தொடர்பாக எந்த ஒரு கம்ப்ளைண்ட்டும் கொடுக்கவில்லை கலியபெருமாள். போலிஸ் பதிவு செய்த கேஸையும் வாப்பஸ் வாங்கி விட்டார் அவர். அதனால் சந்தேகம் என்று பிடித்து வைத்திருந்த இருவரை போலிஸ் ஸார் விடுவித்து விட்டனர். 


தன் மகள் எப்படி இறந்தால் என்று வெளியே தெரிந்தால் அசிங்கம். அதுமட்டுமல்ல அந்தக் குழந்தையைப் பலர் தவறாகக் கண்ணோட்டத்தில் சித்தரித்து பேசக்கூடும். தனக்கு இன்னொரு பெண் இருக்கிறாள். இந்தக் கேஸ்ஸால் அவளுக்கும் எதாவது நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் தான் அவர் வாப்பஸ் வாங்கி விட்டு ஊட்டிக்கு முழுக்கு போட்டு விட்டு மும்பையில் செட்டில் ஆனார். அவரின் பயம், அந்தச் சமூக விரோதிகளுக்குச் சாதகமாய் அமைந்து விட்டது என்றான் ரிஷி.  


"நீங்க வாப்பஸ வாங்குன கேஸ்னால, பார்கவி மாறி இன்னும் எத்தன பேர் பாதிக்கப் பட்டிருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?. உங்கள மாறி நிறைய பேர் தன்னோட பிள்ளைங்கள பரிகுடுத்திருப்பாங்க." என்ற வார்த்தை தான் அவரை அதிகம் பாதித்து நெஞ்சில் கை வைத்து அமர‌ ‌வைத்தது. முகம் வியர்க்க அவர் மயங்கி விழுந்தார். தாமதிக்காது ரிஷி தான் அவரை மருத்துவமனையில் சேர்த்தான். கௌதமை அழைத்து வர ஆள் அனுப்ப வேண்டும் என்ற மூர்த்தியிடம், அவன் எப்போது வருகிறானோ அப்போது தகவல் சொன்னால் போதும். அவசரமாக அழைத்து வர வேண்டாம் என்றான். 


ரிசப்ஷனில் தன்னை கடந்து சென்றவனின் வேகம் ரிஷியை உறுத்த, பின்னாலேயே சென்றான். கௌதம் அழுக தொடங்கியதும் அவனின் அருகில் வந்து நின்றான். 


"சித்தப்பாக்கு ஒன்னுமில்ல. நாளக்கழிச்சி வீட்டுக்குக் கூட்டீட்டு போலாம். ரத்த அழுத்தம் அதிகமானதுனால தா அட்டாக் வந்ததுன்னு சொன்னாரு டாக்டர். இப்ப பரவாயில்ல. ஆனா, இன்னொரு அதிர்ச்சியான செய்திய தாங்குற அளவுக்கு அவரோட ஹார்ட்ல பலம் இல்ல. சோ." என ரிஷி தன்மையாகப் பேசத் தொடங்க, கௌதம் விறைத்து எழுந்தான். 


"பவிய எதுக்கு டா அடிச்ச?." என்றான் பவியின் அண்ணனாக. 


"உன்ன தவிர வேற யாராலயும் அவ மேல கை வச்சிருக்க முடியாது. கன்னம் வீங்குற அளவுக்கு அடிச்சிருக்க. உனக்கெல்லாம் ஈவு இரக்கமே கிடையாதாடா!. எந்தங்கச்சி மேல கை வைக்க உனக்கு என்ன டா உரிம இருக்கு?." என்றான் கௌதம். சேரில் சோகமாய் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த பவியின் முகமே சொல்லியது, அவள் பலத்த அடி வாங்கியுள்ளாள் என்று. 


"பவி எனக்கும் சிஸ்டர் தா ஹரி. தெரியாம தப்பு பண்ணா எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கலாம். உன்ன மாறியே எல்லாம் தெரிஞ்சும் நா யார் பேச்சையும் கேக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா! என்ன பண்ண முடியும். வாங்கித்தா தீரனும்." என்றான். அவனின் குரலில் சற்றும் திமிரோ அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோ இல்லை. 



"என்னோட அப்பாட்ட என்ன சொன்ன?. என்னோட அப்பாவ படுக்கைல தள்ளுற அளவுக்கு அவர நீ காயப்படுத்திருக்க. என்னோட லைஃப்ல நா பாத்த ரொம்பவும் வொர்ஸ்ட் கேரக்டர் நீ தான் டா. உன்ன பாக்கவே பிடிக்கல. எங்கண்ணு முன்னாடி நிக்காத போய்டு. போடா... உன்னால நா தா என்னோட Childhood life அ இழந்தேன். டீன் ஏஜ்... அத மொத்தமா கெடுத்துட்ட. இப்ப கொஞ்ச வர்ஷமாத்தா நிம்மதியா இருக்கேன். அது பொறுக்கலையா உனக்கு. நா என்னோட அப்பாவ இழந்தா உன்னால திருப்பித் தர முடியுமா." என ரிஷியிடம் சண்டைக்கு நிற்க, அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் என்னோட. என்னோட எனத் தந்தையின் மீதும் தங்கையின் மீதும் அவன் வைத்திருக்கும் உரிமையுண்ரவானது நன்கு தெரிந்தது ரிஷிக்கு. இருந்தும், 


"ஹரி உன்னோட அப்பா செஞ்ச தப்ப வேற எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியல. நா இதப்பத்தி சித்தப்பாட்ட இதுக்கு முன்னாடி பேசிருக்கேன். ஆனா அவரு கேக்கல. இப்பையும் சொல்றேன். போலிஸ்ல மாட்டுன ரெண்டு பேரும் உண்மையான குற்றவாளி கிடையாது. அவங்க வெறும் அம்பு தா. யாரு எய்தான்னு கண்டுபிடிக்காதவரைக்கும் நம்ம பார்கவி மாறி நிறைய பேர் இறந்து போவாங்க."


"அதுக்கு தா நம்ம கைல மாட்டுன அன்னைக்கே அவன கொன்னுடலாம்னு சொன்னேனே. என்ன விட்டியா நீ?. பேசிப் பேசி அன்னைக்கி அவன காப்பாத்துனது நீ தா! இருபது வர்ஷத்துக்கும் மேல ஆகிடுச்சி பாப்புடு இறந்து. ஆனாலும், அதோட வலி குறையவே இல்ல. அத அவெ மேல காட்ட விட்டாம பண்ணது நீ தா!. இப்ப வந்து எதுக்கு வீணா Bow arrow னு ஸீன் போடுற. உன்ன நா என்னைக்குமே நம்ப மாட்டேன் டா. அந்தத் தப்ப திரும்பவும் செய்யமாட்டேன். என்னோட குடும்பத்த பாத்துக்க எனக்குத் தெரியும் நீ தேவையில்ல.‌" என்றவனுக்கு நினைவுகள் அவர்களின் சிறு வயதை நோக்கிச் சொல்ல, திரும்பி நடந்தான். 


ஆனால், ரிஷி அவனின் தோளில் கை வைத்துத் தன்னோடு சேர்த்தணைத்தான். 'நீ எனக்குத் தேவையில்லை போடா.' எனச் சொல்லி விலகத்தான் நினைத்தான் அவன். ஆனால், விடவில்லை தரன். இப்போது கௌதமிற்கு தேவை ஒரு ஆறுதல். அவன் புலம்பலைக் கேட்க ஒரு காது, இரண்டுமாக ரிஷி இருந்தான். 


பவியின் பேச்சு. பின் தந்தையின் நிலை இரண்டுமே வேதனையடையச் செய்தது கௌதமை. ரிஷி கௌதமை அணைத்து முதுகில் தட்டிக் கொடுக்க, "அவருக்கு அட்டாக் வரும்னு நா எதிர்பார்க்கவே இல்ல ரிஷி. அவர படுக்கைல பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குடா." எனக் கலியபெருமாளை பற்றித் தன் மனத்தில் உள்ளதை சொல்லி அழுதவனின் புலம்பலைத் தடை செய்யாது முழுவதுமாகக் கேட்டான். சிறிது நேரத்தில் அழுகை மட்டுப்பட்டதும் தன் நிலை உணர்ந்தவன் வேகமாக ரிஷியைத் தள்ளி விட்டு விட்டுச் சென்றான் மருத்துவமனைக்குள். செல்லும் அவனைக் கண்டு இதழ்களில் ஒரு கசந்த புன்னகை தோன்றியது ரிஷிக்கு.


"இன்னும் கொஞ்ச நாள் ஹரி. எல்லாம் சரியாகிடும். உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும். பார்கவிக்கும் நியாயம் கிடைக்கும். கிடைக்க வப்பேன்." என்றது அவனின் மனம். 


தூரத்தில் இவர்களைப் பார்த்த ஹரிணிக்கு, வெளியே பகிர்ந்து கொள்ள விரும்பாத சில நினைவுகள் இருவருக்குள்ளும் இருப்பது புரிந்தது. நிச்சயம் அதை ரிஷி சொல்லமாட்டான். கௌதமிடம் தான் கரக்க வேண்டும் என நினைத்தவள் தன் முன் வந்து கொண்டிருந்த கௌதமிடம், "மாமா கண் முழிச்சிட்டாரு. உன்ன பாக்கனும்னு சொன்..." முதல் பாதியை கேட்டதுமே ஓடி விட்டான் தந்தையை காண. 


'என்னதா அவரு இவெ மேல பாசமா இல்லன்னாலும். இவெ அவரு மேல அன்பாத்தா இருக்கான்.' என நினைத்தவள் திரும்பித் தன் கணவனைக் காண, அவன் சோர்வுடன் பெஞ்சில் அமர்வது தெரிந்தது. மெதுவாக அவனின் முன் வந்து நின்றவளின் முகம் பார்த்தவன் என்ன நினைத்தானோ. அவளின் வயிற்றில் முகம் புதைத்து இறுக அணைத்தான். சில நிமிடங்கள் செல்ல, ரிஷியின் கேசம் வருடி ஹரிணி பேசத் தொடங்கும் முன்.


"நீ ஹரி கூடவே இரு. போ... அவன தனியா விட்டுடாத. போ... போ கிட்…" எனத் துரத்தி விட்டான். 


அவள் வந்து பார்த்தபோது கலியபெருமாள் கௌதமின் கரம்பற்றி மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார். உள்ளே கண்ணீர் வர வைக்கும் அளவுக்குச் செண்டிமெண்ட் ஸீன் நடக்க, இவள் மட்டுமல்ல மற்றவர்களும் வடியும் கண்ணீரை துடைக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கலியபெருமாள் கௌதமிற்கு தான் கொடுத்த தண்டனைகளுக்கும் காயங்களுக்கும் முடிந்தவரை மருந்தாய் இருக்க விரும்பினார். 


இரு தினங்களில் கலியபெருமாள் வீடு வந்து விட்டார். கௌதமை தன்னுடனேயே வைத்துக் கொண்டு பல கதைகள் பேசினார். இடையிடையே மன்னிப்பும் கேட்டவர். மகனிடம் முதல் முறை தந்தையாக நடந்து கொள்ள முயன்றார். கௌதமிற்கு தான் அவரின் செயல்கள் விசித்திரமாகத் தெரிந்தது. நடந்து முடிந்ததை மறக்க இயலாது போதும் இனி நடப்பவைகள் நல்லதாய் இருக்க, அவரை முழுமனதுடன் ஏற்றான் கௌதம். 


_______


"மா...மா. மாமா... உங்களுக்கு நா பால் கொழுக்கட்டை எடுத்துட்டு வந்திருக்கேன். சாப்பிடுங்க." என மூர்த்தியின் அறைக்குள் வந்தாள் ஹரிணி. 


"சோழியங் குடுமி சும்மா ஆடாதே. என்னமா இந்தத் திடீர் கரிசனம்." என்றார் அவள் கொண்டு வந்த கின்னத்தில் இருந்ததை உண்டு கொண்டே, 


"உங்க மேல எனக்கு என்னைக்குமே பாசம் ஜாஸ்தி தா மாமா." என ஐஸ் வைக்க, கனகா இவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார். அவரின் சிரிப்பு அப்படியே ரிஷியைப் பிரதிபலித்தது. 


"அத்த என்ன பாத்து சிரிக்கிறாங்க." எனக் குற்றம் சாட்ட,


"அவளுக்கு நீ காரணமாகத்தா வந்திருக்கன்னு தெரிஞ்சி போச்சி. அதா சிரிக்கிறா. விடு. என்ன காரணம் சொல்லு."


"அது... பார்கவி கேஸ்ஸ ஏ பெருமாள் மாமா வாப்பஸ் வாங்குனாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?." எனக் கேட்க, தம்பதியர்கள் இருவர் முகத்திலும் கசந்த புன்னகை ஒன்று வந்தது. 


"நீங்கக் கூட இருந்தும் எப்படி கேஸ்ஸ வாப்பஸ் வாங்கி, மூடி மறைக்க விட்டிங்க." எனக் கேட்க, அவர் பெருமூச்சை ஒன்றை விட்டார்.


"உங்கிட்ட சொல்ற அளவுக்கு எங்கிட்ட தகவல் தெளிவா இல்லம்மா. எனக்குத் தந்தி தா வந்தது. பார்கவி இறந்துட்டான்னு. அது எங்கைல கிடைச்சி நா வர்ரதுக்குள்ள, பெருமாள் ஊட்டிய விட்டுட்டு மும்பை போப்போறேன்னு பிடிவாதமா நின்னான். பிறந்ததுல இருந்து பாத்து பாத்து வளந்த பொண்ணோட முகத்த கூடக் கடைசியா பாக்கல. பாக்குற குடுப்பன கூட எனக்குக் கடவுள் குடுக்கல்ல. யார் பேச்சையும் கேக்காம, கேஸ்ஸ வாப்பஸ் வாங்கிருக்கான். ஏன்னு எனக்குத் தெரியாது. ஆனா ரிஷிக்குத் தெரிஞ்சிருக்கலாம். அவந்தா பெருமாள் கூடவே இருந்தது. அவனுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும். அவன்ட்ட கேளேன். " என்றார் அவர். 


"க்கும்... உங்க மகன் எங்கிட்ட வந்து என்ன நடந்ததுன்னு சொல்லமாட்டார்னு உங்களுக்குத் தெரியும் தான. அப்றம் கேளேங்கிறிங்க. ஒரு அப்பாவா அன்னைக்கி நடந்தது என்னனு கேக்க கூடாதா நீங்க." என்க, மூர்த்தி சிரித்தார். 


"அவனுக்கு எப்ப நா தேவையோ அப்பத் தா எங்கிட்ட வந்து பேசுவான். இப்பன்னு மட்டுமில்ல. அவனோட மூணு வயசுல இருந்தே அப்படி தா. சுருக்கமா சொல்லனும்னா குழப்பமான மனநிலைல இருந்தா மட்டும் தா வந்து எங்கிட்ட அட்வைஸ் கேக்க வருவான். மத்தபடி பக்கத்துல வரக் கூட மாட்டான். இப்ப கரெக்ட்டா எதையோ செய்ய ப்ளான் போட்டு வச்சிருக்கான்‌. நல்லதே நடக்கட்டுமே." என்க, ஹரிணி முறைத்தார் அவரை. 


"மொத்ததுல உங்க ரெண்டு பேர் கிட்டையும் எனக்குப் பதில் வராது அப்படி தான. இருக்கட்டும். நானே எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறேன். சரி என்னோட இந்தக் கேள்விக்கு மட்டும் உங்களால பதில் சொல்ல முடியுமா." என்றவளை பார்த்து இருவரும் புன்னகை பூக்க. 


"எந்தக் கேள்வி மா."


"ரிஷியும் கௌதமும் நீங்க ஊட்டிய விட்டு வந்ததுக்கு அப்றம் ஒருத்தர ஒருத்தர் பாத்து பழகிருக்காங்கன்னு தெரியுது. ஆனா ஏ பிரிஞ்சாங்கன்னு தெரியுமா?. இப்ப வரைக்கும் ஒருத்தர ஒருத்தர் முறைச்சிக்கிட்டும் முறுக்கிக்கிட்டும் இருக்க காரணம் என்ன?." 


அவர் சிரித்துக் கொண்டே… "இதுக்கான பதிலும் எனக்குத் தெரியாதேம்மா." என்றார். 


"குட் ஃபாதர்... பிள்ளைய ரொம்ப அழகா வளத்துருக்கிங்க. காய்ளாங் கடைல போட வேண்டிய துருப்பிடிச்ச இரும்புக்கு, வேட்டி சட்ட மாட்டி விட்டு மனுஷன்னு பொய் சொல்லி ஊருக்குள்ள நடமாட விட்டுருக்கிங்க. சூப்பர்." என்றாள் கடுப்புடன். 


இதைப் பார்த்துக் கனகா சிரித்தார். 'உம்புருஷனப் பத்தி உனக்கு எதுவுமே தெரியாதம்மா. ' என்பது போல். 


"குட் மதர்." அவரையும் அவள் விட்டு வைக்கவில்லை. 


"குட் பேமிலி. குடுங்க அத. லஞ்சமாகக் கொண்டு வந்தேன். கின்னம் கின்னமா உள்ள போனாலும் எனக்குத் தேவையான ஒத்த வார்த்த கூட உங்க வாய்ல இருந்து வராது. ஹிம்..." எனப் புலம்பிக் கொண்டே செல்ல. 


"நீயும் அந்தப் பேமிலில ஒருத்திதா. மறந்துடாத." என மூர்த்தி கேலி செய்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அது அவளைத் துப்பறியும் சாம்புவாக அவதாரம் எடுக்கும் முடிவைத் தந்தது. 


'எதுக்கு இந்தத் தேவையில்லாத அவதாரம் இவளுக்குன்னு தான் தெரியவில்ல. ' 


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


அன்பே 40


அன்பே 42


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...