முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 45

அத்தியாயம்: 45


அகிலத்தில்...


விலைமதிக்க...


முடியாதது...


யாதெனில்...


நம்மீது...


ஒருவர்...


வைக்கும்...


நம்பிக்கையே...


"போதும் ஹரிணி. நாம போலாம். இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாமே." என இறைஞ்சுவது போல் கேட்டான் கௌதம். அவன் மனதின் வலி அவனுக்கு. 


"இல்ல கௌதம், நீ எங்கிட்ட இத பத்தி சொல்லித்தா ஆகனும். உன்னோட ஃப்ரெண்டா இத கேக்கல. ஒரு பொண்ணா கேக்குறேன். ப்ளீஸ். பார்கவிய யாரு பலாத்காரம் பண்ணாங்க. அதுக்கப்பறம் உன்னோட லைஃப் எப்படி மாறுச்சி?. உன்னோட மனநில என்னன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகனும்." எனக் குரல் தாழ்த்தி கேட்டாலும், அவள் வார்த்தைகளில் தந்த அழுத்தம் அவள் உறுதியாக இருப்பது தெரிந்தது. 


டம் என்று ஓங்கி காரின் கதவைச் சாத்திய கௌதமின் வேகமும் கோபமும் புரியாமல் இல்லை ஹரிணிக்கு. ஆனால் மிகவும் ஆழமாக ஏற்பட்ட காயத்தைக் கீறாமல் மருந்திட்டால் அது ஆறாது. ஒரு சில வலிகளைப் பொறுத்துக் கொண்டால் அது நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும் என்றாள் ஹரிணி. காரை விட்டு அவளும் இறங்கி அவனின் தோளில் கை வைத்து அழுத்த, அவன் கண்ணீருடன் திரும்பினான். 


"இல்ல ஹரிணி, என்னோட பாப்புடுவ யாரும் பலாத்காரம் பண்ணல." என்றான் கௌதம். 


"அப்பறம் எப்படி இறந்தாங்க.?"


பார்கவி... 


ஐந்து வயது குழந்தையாக இருக்கும்போது சில சமூக விரோதிகளின் கையில் கிடைத்து சருகாகிப் போன குருத்தோலை. 


பள்ளி முடிந்து தன் நண்பனின் வீட்டிற்கு செல்ல நினைத்த கௌதம், தன் தங்கையை ரிஷியுடன் வீட்டிற்கு செல்லும் மாறு கூறினான். ஆனால் அதை ஏற்காத பார்கவி தன் அண்ணனைப் பின் தொடர்ந்தாள். மலைப் பாதையை விட்டு இறங்கி டீ எஸ்டேட்டில் நுழைந்து நண்பர்களுடன் குதுகலித்துக் கொண்டு சென்ற கௌதம், பின் தொடரும் தங்கையைக் கவனிக்கவில்லை. 


அவர்கள் வேகமாகச் செல்ல, குழந்தை பாதை மாறிச் சென்றது. போகும் பாதை புரியாது போக‍ வந்த வழியும் தெரியாது போக, தன் அண்ணனும் காணாது போக, பயத்துடன் அழுது கொண்டே காட்டிற்குள் அழைந்தவளை மூன்று நாட்கள் கழித்து ஜீவன் உடலை விட்டுப் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்னால் தான் கண்டு பிடிக்க முடிந்தது. அதுவும் குற்றுயிரும் கொலையுருமாக. 


"நாந்தா ஹரிணி பாப்புடுவ முதல் முதல்ல ஸ்கூலுக்கு பின்னாடி பாத்தேன். யுனிஃபார்ம் டிரெஸ்ஸெல்லாம் அங்கங்க கிழிச்சி இருந்தது. இருந்த டிரெஸ்ஸும் முழுசா ரத்தம். கண்ணுல ஒளி இல்லாம. எங்கிட்ட பசிக்கிதுன்னு கேட்டா என்னோட பாப்புடுக்கு என்னால என்னால. ஆ." என இயலாமையில் கத்த, ஹரிணி மௌனித்தாள்.


"என்னால எதுவும் பண்ண முடியல ஹரிணி. அது தா நா என்னோட பாப்புடுவ உயிரோட கடைசியா பாத்தது. பாப்புடு காணம போன மூணு நாளும் நாங்க தேடாத இடமே இல்ல. எல்லா இடத்துலையும் தேடினோம். ஸ்கூலையும் தா. ஆனா எப்படி ஸ்கூலுக்கு பின்னாடி இருக்குற புதருக்கு வந்தான்னு தெரியல.


உள்ளூர் ஆட்களும் அப்பாவும் பாப்புடுவ தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் போனாங்க. அப்ப என்ன நடந்ததுன்னு தெரியாது. ஏன்னா என்ன யாரும் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டீட்டு போல. நானா போனேன். அப்ப அந்த டாக்டர் என்னோட பாப்புடுவ வெள்ளக் கலர் துணில சுடுட்டி குடுத்தாரு. நான் பாத்து பாத்து ரசிக்கிற என்னோட பாப்புடுவோட முகம். அத இனி பாக்கவே முடியாத படி ஆகிடுச்சி." எனத் தன் தங்கையின் நினைவில் அழுதான் கௌதம்.


‍"காய்ச்சலுக்கு ஊசி குத்துனா கூட அழற என்னோட பாப்புடுவ கத்தியால கூறு கூறா வெட்டிப் பரிசோதிச்சிருக்காங்க. அப்பாட்ட வந்து யார் யாரோ என்னென்னமோ பேசுனாங்க. அந்தாளு இந்தக் கோபத்த எம்மேல காட்டி ஸ்டேஷன்ல உக்கார வச்சிட்டாரு. என்னோட பாப்புடுவோட இறுதி மரியாதைல கூட நா கலந்துக்கல. என்ன அனுமதிக்கல. 


கொஞ்ச நாள் கழிச்சி பெரிப்பா வந்து என்ன வீட்டுக்குக் கூட்டீட்டு போனாரு. எனக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கல. என்னோட பாப்புடு இல்லாத வீடு அது. அத பாக்க பயமா இருந்தது. எதையும் கவனிக்கல. யார்ட்டையும் பேசப் பிடிக்கல. அப்பா பெரிப்பாக்கும் இடைல பெரிய சண்ட வந்தது. எதுக்குன்னு எனக்குத் தெரியாது. அப்பாவும் அம்மாவும் என்ன கண்டுக்காம பவிய தூக்கிட்டு போய்டாங்க, கைல பேக்கோட. 


என்ன பெரிப்பா கூப்டாரு அவரு கூடவே இருக்கச் சொல்லி. நா அவரு கூடப் போகல. ஹிட்லர் சொல்ற மாறி நா ராசியில்லாதாவனோங்கிற நினைப்பு எனக்கே வந்தது. அதனால தா போகல. வைசுக்கு என்னால எதாவது ஆகுடுச்சின்னா!. என்ன ஒரு போடிங்க ஸ்கூல்ல சேத்து விட்டுடுட்டு அவரும் போய்ட்டாரு.  


அங்க இருக்குற பசங்களுக்கு நா போலிஸ் ஸ்டேஷன்ல இருந்தது தெரிஞ்சதுனால, எல்லாரும் சேந்து என்ன கேலி பண்ணுவாங்க. கேலிங்கிறது வெறும் வார்த்த. ஆனா, அவங்க பண்ணத எந்த வார்த்தைல சொல்லுறதுன்னு எனக்குத் தெரியல. டார்ச்சர், சித்திரவதை, கொடும, அதுதா சரியா இருக்கும். கிளாஸ் மெட், ஹாஸ்டல்ல பெரிய பசங்க, வார்டன், சில நேரம் டீச்சர்ஸ்ன்னு விதிவிலக்கில்லாம என்ன....


எதுக்கு உயிரோட இருக்கனும்னு நினைக்கிற அளவுக்கு இருக்கும். அவங்க பண்ணதுக்கு முன்னாடி ரிஷி செஞ்சது எல்லாம் ஒன்னுமே இல்லங்கிற அளவுக்கு ஃபில் பண்ணேன். தனிம, யார்ட்டையும் பேசாம தனியா இருக்குறது தா எனக்குப் பிடிச்சிருந்தது. அப்பத் தா என்னோட லைஃப்ல நா அடுத்த ஸ்டேஜ் வந்தது. 


இந்தக் கண்ணு தெரியாதவெங்கிட்ட போய் 'இந்த உலகம் எப்படி இருக்கும், வானம் எந்த நிறத்துல இருக்கும்,‌ இல என்ன கலர்ல இருக்கும், உனக்குத் தெரியுமா?.'ன்னு கேட்டா, அவெ என்ன சொல்வான்னு தெரியுமா. இருட்டா இருக்கும்னு சொல்லுவான். ப்ளாக். எல்லாம் ப்ளாக் கலர்ல தா இருக்கும்ன்னு சொல்வான். ஏன்னா அவெ இதுவரைக்கும் வெளிச்சத்தையே பாத்தது இல்ல. கலர்ஸ் பாத்தது இல்ல. அவனால உணர முடியுமே தவிர, பாத்து ரசிக்க முடியாது. அவெ இந்த உலகத்த நினைச்சி கவலப்பட்டிருக்கானான்னு கேட்டா கிடையாது. ஏன்னா இதுவரைக்கும் அவெ பாக்காத ஒன்னு எப்படி இருந்தா என்னங்கிற நினப்பு இருக்கும். நானும் அதே மாறியான சூழ்நிலை தா இருந்தேன். சந்தோஷங்கிறது என்னோட லைஃப்ல கிடையவே கிடையாதுன்னு. 


ஆனா, அவெங்கிட்ட போய் 'உனக்கு நா பார்வ தர்றேன். உன்னால எல்லாத்துலயும் பாக்க முடியும்.'ன்னு சொன்னா, அவனுக்கு வர்ற சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. எல்லாத்தையும் பாக்க நினைப்பான். என்னென்ன இருக்குமோ அதெல்லாத்தையும் பாத்து ரசிக்க விரும்புவான். அவனோட ஒட்டு மொத்த சந்தோஷமும் அந்தக் கண்கிற ஒரு உறுப்புனால வந்தது. எனக்கும் அது கொஞ்ச நாள் கிடச்சது.


திடீர்னு 'நீ பாத்த வரைக்கும் போதும். உனக்குத் தா இருட்டுல இருந்து பழக்கமாச்சே. நீ மறுபடியும் குடுடனாவே இரு.'ன்னு சொல்லிப் பார்வைய பறிச்சிக்கிட்டா எப்படி இருக்கும். ம்...


பைத்தியம் பிடிச்ச மாறி இருக்கும். எதுக்கு பார்வைய குடுக்கனும்? ஏ குடுத்த அத திரும்பி எடுத்து லூசாக்கனும்?. 


என்ன அப்படியொரு சூழ்நிலைல சிக்க வச்சது உன்னோட புருஷெ. 


மிஸ்டர் ரிஷி தரன்." என்றவன் கோபமாகக் காரின் சைடு மிரரை குத்த, அது பல அடி தூரம் பறந்து சென்று விழுந்தது. 


"இது தா என்னோட தலையெழுத்து. உடம்புல உயிர் இருக்குற வரைக்கும் வாழ்ந்துட்டு செத்து போய்டலாம்னு நினைச்ச என்கிட்ட வந்து வாழனும்னு ஆச குடுத்தான். வாழுறதுக்கு பாதைய காட்டுனான். எப்படி இந்த உலகத்த ஃபேஸ் பண்ணனும்னு சொல்லிக் குடுத்தான். நா இதுவரை அனுபவிக்காத அம்மாவோட அரவணைப்ப தந்த முதல் ஆள் அவெந்தா." என்றவனுக்கு கண்ணில் நீர் வந்தது. 


ஹரிணிக்கு புரியவில்லை. பார்கவியின் மரணத்திற்கு பின் கலியபெருமாள் மும்பையிலும், சத்தியமூர்த்தி சென்னையிலும் இடம் பெயர்ந்து விட்டனர். ரிஷி அப்போது பள்ளி படிக்கும் சிறுவன். அவன் எப்படி?. அதைவிட ஏன் கௌதமை தேடி வர வேண்டும் என்று தான் புரியவில்லை ஹரிணி. 


"வாட்.! ரிஷி வந்தானா?. உன்ன பாக்கவா?. உன்னோட ஸ்கூலுக்கா?." எனக் கேட்க, 


"எஸ்... வந்தான். சரியா ஆறு மாசம் இருக்கும், என்ன ஹாஸ்ட்டல்ல சேத்து. அதுவர பெரிப்பா மட்டும் தா வருவாரு. என்ன பாத்துட்டு போவாரு. எனக்குக் கைல காசு குடுத்துட்டு போவாரு. ஆனா, அத ஹாஸ்ட்டல்ல பசங்க புடுங்கிக்குவானுங்க. அப்படியொரு நாள் எடுத்தவனுங்க, திரும்பிக் குடுத்துட்டுப் போனாய்ங்க. எனக்கு ஏன்னு தெரியல. அவனுங்க மூச்சில வாய்ல ரத்தம் வந்திருந்தது. வார்டன்ட்ட கீழ விழுந்ததுனாலன்னு சொன்னாலும், யார்ட்டையோ அடி வாங்கிருக்கானுங்க. என்ன விடப் பெரிய பசங்க. பதினஞ்சி பதினாறு வயசு இருக்கும்.‌ அப்பப்ப அவனுங்க என்ன பாத்து மொறச்சிக்கிட்டே இருந்தானுங்க. 


அன்னைக்கி பூஜா ஹாலிடே. யாருமே ஹாஸ்டல்ல இல்ல. நா மட்டும் தா. சிலர தவிர மத்த ஸ்டுடெண்ட் எல்லாருமே அப்பாம்மா கூட இருக்க போறோம்னு கிளம்பிட்டாங்க. எனக்குத் தா யாருமே இல்லையே. ஹாஸ்ட்டல் பின்னாடி இருந்த ஒரு குளத்துல தனியா உக்காந்திருந்தேன். அப்ப எம்முன்னாடி வந்தானுங்க அந்தச் சீனியர் பசங்க. 


'என்னடா ஆள் விட்டா அடிக்கிற?.'ன்னு கேட்டுக் கேட்டு என்னோட வயித்த குத்த, நா கீழ விழுந்துட்டேன். அவனுங்க மேக்கொண்டு அடிக்கிறதுக்குள்ள வார்டன் வந்துட்டாரு. சோ என்ன விட்டுட்டு போய்டானுங்க."


"உன்னோட வாய் ஜாம்பம் எல்லாம் எங்கிட்ட மட்டும் தா போலையே. அவனுங்க அடிச்சா திருப்பி அடிக்கக் கூடத் தெரியாதா உனக்கு.?" என நக்கலாகக் கேட்டபடி ரிஷி வந்து நின்றான், கௌதமின் முன்.


அவனைப் பார்த்து வெறுப்புடன் எழுந்தான்.‌ தடுமாறி நடந்த கௌதமை தாங்கிப் பிடித்து நடக்க உதவ வந்தான் ரிஷி. 


"தேவையில்ல. போய்டு." எனக் கௌதம் தடுக்க, ரிஷி 'சரி போ. நொண்டிக்கிட்டே எப்போ ரூம் போய்ச் சேருறன்னு நானும் பாக்குறேன்.' என்பது போல் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தான், கௌதம் கஷ்டப்பட்டு நடந்து செல்வதை. 


இவன் எப்படி ஹாஸ்டலில் என யோசித்தபடியே தன் அறையை நோக்கி நடக்க, பாதை எங்கும் இருளாக இருந்தது. ஒன்றிரண்டு பேருக்காக எல்லா விளக்கையும் போட்டு வைக்க முடியாது அல்லவா. அங்கொன்றும் இங்கொன்றும்மாக எரிந்தது. அறைக்குச் சென்றவன் தன் படுக்கையில் விழ, அதில் சில பொம்மைகள் இருப்பது தெரிந்தது. அது கௌதமை பயமுறுத்த என ரிஷி வைத்திருந்தவை. இருளில் மின்னக்கூடிய பயங்கற உருவம் கொண்ட பொம்மைகள். 


கௌதமிற்கு தெரிந்தது, இதுவும் ரிஷியின் வேலை என்று. இது மட்டுமல்ல அந்தச் சீனியர்ஸ்ஸை அடித்ததும் ரிஷி தான், அடி வாங்கிக் கொண்டிருந்த கௌதமை வார்டன் உதவியுடன் காத்ததும் அவன் தான்.


 'எதற்கு வந்தான்.?' எனக் கேட்க நினைத்தாலும், அவனிடம் பேசப் பிடிக்காமல் உறங்க முயல, நடு இரவில் அவனின் போர்வை உருகப்பட்டது. குளிரில் கைக்கால் விரைக்க., 'யார் போர்வையை எடுத்தது?' என்று கோபமாக எழுந்து பார்த்தான். ரிஷி கௌதமிற்கு அருகில் இருந்த படுக்கையில் இவனின் போர்வையை மூடிப் படுத்திருந்தான். 


கௌதமிற்கு ரிஷியின் செயல் எரிச்சலாக இருந்தாலும் பல நாட்கள் கழித்து கிடைக்கும் ரிஷியின் இந்த விசித்திரமான அன்பு அவனுக்குப் புன்னகையை வர வைத்தது. எப்படியும் காலையில் சென்று விடுவான்… என்றெண்ணி உறங்கியவன் எப்படி ரிஷி விடுதிக்குள் வந்ததான் என்பதை யோசிக்கவில்லை. 


மறுநாள் காலையிலும் இருந்தான் ரிஷி. கௌதமுடனேயே இருந்து அவனை வெறுப்பேற்றுவது போல் பேசிக் கொண்டே அவனுடன் சுற்றி திரிந்தான். முதலிரண்டு நாட்கள் வெறுப்பை உமிழ்ந்த கௌதம் அதன் பின் எதுவும் சொல்லவில்லை. இப்போது அவனுக்குத் தேவை யாரோ ஒருவரின் துணை. அது ரிஷியாக இருந்தால் என்ன.? என நினைத்தவன் ரிஷியை விரட்டவில்லை.


"உன்ன யாரு உள்ள விட்டது?. இது இந்த ஸ்கூல் டுடெண்ட்டுக்கு மட்டும் தா.‌ நீயும் இங்க வந்து சேந்துட்டியா என்ன?." எனக் கௌதம் கேட்க,


"உன்ன தொல்ல பண்ணிக்கிட்டே இங்க இருந்து படிக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை தா. ஆனா என்னோட அப்பாக்கு நா உங்கூட இருக்குறது பிடிக்கலயாம். அதுனால என்ன சென்னைலையே படிக்க வைக்கிறாராம். உன்ன பாக்கவே கூடாதுன்னு சொன்றாரு. அதுனால தா வந்தேன். உன்ன பாக்க." என்பான் புன்னகையுடன்.


"அதா சொன்னாருல்ல, அவரு பேச்ச கேக்க வேண்டியது தான. ச்ச.‌.. நீ வந்து பாக்கலன்னு யாரு அழுதா?. யாரு பேச்சையும் கேக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட போல. இப்ப என்ன.? அதா பாத்துட்டேல கிளம்பு." 


"பாத்துட்டேன் பாத்துட்டேன்.‌ ஆனா அதே அப்பா எங்கிட்ட இன்னொன்னும் சொன்னாரு. இப்ப நா எத ஃபாலோ பண்றதுன்னு தெரியாம கன்ஃப்யுஷன்ல இருக்கேன். நீயே சொல்லு. நா என்ன பண்ணட்டும்." என வீணாய் பேசிக் கௌதமுடன் வம்பிலுத்தான் ரிஷி. 


'அடப் போடா டேய். ' எனத் திட்டிக் கொண்டே செல்ல, அவன் எங்குச் செல்கிறானோ அங்கெல்லாம் விடாது கருப்பு போல் பின்தொடர்ந்து வந்து நின்று வம்பிலுத்து பேசினான் ரிஷி. 


ரிஷி பேசிக் கொண்டே இருந்தான். தன் பள்ளியில் நடந்தது. வைசுவின் சின்ன சின்ன சேட்டை.‌ கனகாவின் சமையல் என எதையாவது பேச்சி கொண்டே இருக்க, கௌதம் பேசாது அமைதியாகக் கேட்க நேர்ந்தது. நத்தையெனத் தன்னை சுருக்கி ஒரு ஓட்டிற்குள் இருந்தவனை மெல்ல மெல்ல வெளியே கொண்டுவரச் செய்தது ரிஷியின் செயல்கள். 


"பாக்குறோம். எத்தன நாளைக்கி அவெ உங்கூட இருக்கான்னு நாங்களும் பாக்குறோம்.‌ லீவ் முடியையும் தனியாத்தான இருப்ப. அப்ப எங்க கைல மாட்டுவல்ல.  இருக்கு உனக்கு." எனச் சீனியர்ஸ் மிரட்ட, கௌதமிற்கும் ரிஷி எத்தனை நாளைக்கு தன்னுடன் இருப்பான் என்ற எண்ணம் வந்தது. 


"உன்ன யாரு இங்க வரச் சொன்னா?. என்ன பாத்துக்க எனக்குத் தெரியும் நீ மொதல்ல ஊருக்குப் போ." என விரட்ட,


"நா ஒன்னும் உன்ன பாக்க வரல. எனக்கும் லீவ் தா. அதுனால ஊட்டிய சுத்தி பாக்கலாம்னு வந்திருக்கேன். நீயும் வாரியா?. ஊட்டில எத்தன மரம் இருக்குன்னு கணக்கெடுப்போம்."


"ம்ச்... என்ன பண்ண அந்தப் பசங்கள. சண்டக்காரன்ட பேசுற மாறிப் பேசிட்டு போறானுங்க. நீ இல்லாதப்ப எங்கிட்ட வந்து வம்பு பண்ணா என்ன பண்ணுவேன் நா." என்றவனுக்கு சீனியர்ஸ்ஸை நினைத்துப் பயமாக இருந்தது. 


"அதுக்கு நா உனக்கு ரெண்டு வழி சொல்றேன். அதுல ஒன்ன நீ ஃபாலோ பண்ணித்தா ஆகனும். முதலாவது உன்ன அடிச்சா திருப்பி அடிக்கனும். செய்வியா?."


"அடிக்கனுமா!. அதுவும் என்னவிட பெரிய பசங்களையா?. முடியாதே. என்னால எப்படி முடியும்.? அடுத்தது."


"வேற ஒன்னுமில்ல.‌ அடிச்சா... அடிவாங்கிக்க. நாலு மிதி ஆறு குத்து, கழுத்து ஏறி மிதிச்சா நீ சொத்துடுவ. இல்லன்னா ஹாஸ்பிட்டல்ல வச்சி பட்டி டிங்கரிங்கலாம் போட்டு அனுப்புவானுங்க. ஆனாலும். பாத்துக்கலாம். சோ... நீ அடியே வாங்கிக்க. ம்." என்க கௌதம் முறைத்தான். 


"உன்னைய பாத்தா பாவமா இருக்கு. அதுனால நா உனக்கு மூனாவதா இன்னொரு அப்ஷென் தாரேன்."


"என்ன அது.?"


"அது வேற ஒன்னுமில்ல. நாளைக்கி எங்கூட வெளில வரனும். காட்டுக்குள்ள. "


"ஹாஸ்டல்ல விட்டு வெளியவா." கௌதம் முழிக்க,


"ம்‌. ஒரு மணி நேரம் தா. அதுக்கப்பறம் உன்ன எப்படி கூட்டீட்டு போனேனோ. அப்படியே‌ கொண்டு வந்து விட்டுடுவேன் பாதுகாப்பா."


"உன்னைய நம்பி நா வரமாட்டேன்." என வீராப்பாய் பேசினாலும் இந்த ஜெயில்லை விட்டு எங்காவது சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே, "எப்படி வெளில போறது." எனக் கேட்டான். 


"சுவரேறி குதிச்சி தா." ரிஷி கௌதமை பார்த்து மென்னகை புரிய,


"குதிச்சா!!!. முதல்ல நீ எப்படி உள்ள வந்த, உனக்கு யாரு இங்க தங்க பர்மிஷன் குடுத்தா?."


"யாரு விடனும்?."


"நீ இந்த ஸ்கூல்ல படிக்காதப்ப உன்ன யாரு உள்ள விட்டா.? அதுவும் நாலு நாளா இங்கையே திண்ணுட்டு தூங்கிட்டு திரிய யாரு உனக்குப் பர்மிஷன் குடுத்தா?."


"ஹாங், இந்த ஸ்கூல் ஓனரு." என நக்கலாகப் பேசிச் சுவரேறி குதிக்க ஏற்ற இடம் தேட,


"மாட்டுனா என்ன நடக்கும்னு தெரியுமா?. முதல்ல இங்கருந்து போ."


"ஓகே. நாம சேர்ந்தே போலாம். நீ முதல்ல குதி அடுத்து நா. " என ஏறிக் குதிக்க சொல்ல, கௌதம் யோசித்தான். 


இதிலும் தன்னை மாட்டி விட்டு விட்டுவானோ என்று ஒரு மனம் யோசிக்க, இனி அனுபவிக்க வேறு கஷ்டங்கள் இல்லையென மற்றொரு மனம் சொல்ல, பின்னே என்ன உள்ளது என்று கூடக் கேட்காமல் சுவர் ஏறிக் குதித்தான் கௌதம். அவனைத் தொடர்ந்து ரிஷியும் தான். 


எங்க போறானுங்க?. 


 தொடரும் ...



கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


அன்பே 44


அன்பே 46


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...