முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 47

அத்தியாயம்: 47


ஊட்டி அரசு மருத்துவமனை... 


வெள்ளை உடையில் அந்தச் செவிலியர்கள் இரவு நேரம் என்றும் பாராது அதிகமாக வந்து கொண்டிருந்த நோயாளிகளுக்கு டோக்கன் கொடுத்து அமரச் சொல்ல, ரிஷியும் கௌதமும் ஒன்றை வாங்கிக் கொண்டு அங்கிருந்த மேஜையில் அமர்ந்தனர். உள்ளே மருத்துவர் தன் பணியைச் செய்ய, இவர்கள் இருவரும் சென்று பார்த்தனர். 


ரிஷிக்குக் கைக்கால்களில் சற்று பலத்த அடி. அதைச் சுத்தம் செய்த மருத்துவர் அவனை மருத்துவமனையில் ஒரிரு நாள் தங்கி ஸ்கேன் உள்ளிட்ட சில டெஸ்டுகளுக்கு எழுதிக் கொடுத்தார்.  


"இதெல்லா தேவையா?. நீயா! பைக் ஓட்டுறேன்னு சொல்லி ஸ்பீடா போய், கைய கால உடச்சிட்டு வந்து நிக்கிற. லூசாடா நீ?. பாரு எவ்ளோ ரத்தம் போயிருக்கு. முட்டாள்." எனக் கௌதம் ரிஷியைத் திட்டிக் கொண்டே வர, ரிஷி பதிலுக்குப் புன்னகை ஒன்றை இதழில் படர‌ விட்டபடி வீல் சேரில் அமர்ந்திருந்தான். நடக்க முடியவில்லையாம். 


"உன்னையெல்லாம் வீட்டுல தேடவே மாட்டாங்களா?. ஆறு வர்ஷமா லீவ் விட்டா இங்க வந்துடுற. பெரிப்பாவும் பெரிம்மாவும் எதுவும் சொல்லமாட்டாங்களா.! அது சரி அவங்க எது சொன்னாலும் நீ தாங்கேக்க மாட்டியே. இடியட்." என வீல் சேரை தள்ளிக் கொண்டே நடக்க, 


"ம்ச்... நா என்ன தப்பா பண்ணிட்டு இருக்கேன். எல்லாரையும் பாத்து பயப்படுறதுக்கு. நா சொல்லன்னாலும் எங்கப்பாக்கு தெரியும், நா இங்க வந்து உன்ன பாக்குறது. நா என்ன பண்றேன், ஏது செய்றேன்னு என்ன வேவு பாக்குறது தா அவரோட முதல் வேலையே. இந்த அப்பனுங்க எல்லாருமே பிள்ளகல கவனிக்காத மாறியே தா தெரியும். பட் அவங்களோட ஒட்டு மொத்த கண்ணும் நம்ம மேல தா இருக்கும். அப்படி எத்தன கண்ணு தா இருக்குன்னு தெரியல."


"பெரிப்பாக்கு தெரியும்னா ஏ உன்ன இந்த அளவுக்கு ஊர் சுத்த விடுறாரு?."


"நம்பிக்க ஹரி நம்பிக்க. ஒரு நல்ல அப்பனா பெத்த பிள்ள மேல வக்கிற நம்பிக்க. அது உங்கப்பன்ட்ட கிடையாது. என்ன பண்ண?.‌ ஒரு தாய் வயித்துல ஒன்னா பத்து மாசம் இருந்து பிறந்தாலும், எங்கப்பாவோட குணம் உங்கப்பாக்கு சுட்டு போட்டாலும் வராது. நீ எதுக்கும் உங்கப்பன டைவர்ஸ் பண்ணிடு." என்பான் ரிஷி. அதிலும் என்னோட அப்பா என்னும்போது அதில் கூடுதலாக அழுத்தம் கொடுத்து வேறு சொல்வான். 


கடுப்பான கௌதம் சேரை வேகமாகத் தள்ளிக் கீழே உருட்டி விடுவது போல் போக, "டேய்... டேய்... ஆல்ரெடி கால உடைச்சாச்சி. இப்ப கீழ தள்ளி விட்டு மண்டயையும் உடைக்க போறியா!. எனக்கு உடம்பு சரியாகுற வரச் சாப்பிடுறத தவிர நா எதுவுமே பண்ண மாட்டேன். அப்றம் நீதா என்ன உப்பு மூட்ட தூக்கிட்டு போனும். மெய்ன்னா பாத்ரூம்க்கு. பாத்துக்க."


"உன்ன யாரு டா பைக் ஓட்டச் சொன்னா!.‌ அதுவும் இறக்கத்துல வேகமா போனா! ப்ரேக் பிடிச்சாலும் நிக்கிறது கஷ்டம். திமிரெடுத்து போய் விழுந்துட்டு என்ன தூக்க சொல்றியா." 


"காரணம் இருக்கு ஹரி. இருக்கு."


"என்ன காரணம்.?"


"அன்னைக்கி அந்தப் போலிஸ்காரென் நம்ம பாப்புவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்பேர்ட்ட பத்தி சொன்னாறே. உனக்கு நியாபகம் இருக்கா?. அத நீ கவனிச்சியா என்ன?."


"ம்ச்!. எங்க பேசுனான் அவெ. நம்மல தா தூக்கி வெளியல்ல போட்டானே." 


"நம்மல இல்ல.‌ உன்ன."


"இப்ப என்னங்கிற அதுக்கு?."


"நீ அவமானப்பட்டல்ல. அது நல்லா இருந்தது." என்றவனை கௌதம் முறைக்க,


"சரி விடு. இப்ப நாம இங்க எதுக்கு வந்திருக்கோம்னா, நாம எடுக்கப் போறோம். நம்ம பாப்புவோட ரிப்போர்ட்ட." ரிஷி கூலாகச் சொல்ல,


"எப்படி.? இவ்வளோ பெரிய ஹாஸ்பிட்டல்ல நம்ம பாப்புடுவோட ரிப்போர்ட்ட மட்டும் தனியா எடுத்து வச்சிட்டு நம்மல கூப்பிடு வாய்ங்கலாக்கும். ஏன்டா கேணையே மாறி யோசிக்கிற."


"யாரு நானு?. கேணையன்!. சரித்தா... இவ்ளோ பெரிய ஹாஸ்பிட்டல்ல நமக்கு எடுத்துக் குடுக்க தா போறான். அதுவும் ஒரு டாக்டரு. பாப்புவ போஸ்ட்மார்ட்டம் பண்ணும்போது கூட இருந்த அப்போதைய ஸ்டூடெண்ட்டும், இப்போதய டாக்டருமான அனந்தராஜ் எம்பிபிஎஸ். இங்க எலும்பு முறிவு டாக்டரா இருக்காரு.‌ அவர்ட்ட பேசனும்னா இப்படி தா வர முடியும்." ரிஷி கூலாகச் சொல்லி அவரைக் காணச் சென்றான் சக்கர நாற்காலியைக் கைகளால் தள்ளிய படி,


"டேய்.‌.. டேய்... இந்தப் பக்கம் டா. தப்பான பாதைல போற." என நாற்காலியைப் பிடித்து இழுக்க, 


"ஹரி, இந்தப் பக்கம் தான்டா ஒரு சூப்பரான நர்ஸ் போனாங்க. அவங்கள பாத்து அவங்க கிட்ட விசாரிச்சிட்டு போலாமே." என்க, கடுப்பானான் கௌதம். கண்முன்னே இருக்கும் எலும்பு முறிவு பிரிவுக்குச் செல்ல, கண்ணிற்கு தெரியாத நர்ஸிடம், அதுவும் சூப்பரான நர்ஸிடம் உதவி கேட்கப் போகிறானாம். அவன் தலையில் தட்டிக் கொண்டு அனந்தராஜ்ஜை காணச் சென்றனர். 


"அப்றம் ஹரி ஒரு முக்கியமான விசயம்."


"என்ன?."


"நாம ரெண்டு பேரும் ஆர்ட்ஸ் காலேஜ் ஃபஸ்ட் இயர் ஸ்டூடெண்ட்.‌ எக்காரணத்தக் கொண்டும் நாம பத்தாப்பு படிக்கிற ஸ்கூல் ஸ்டூடெண்ட்டுன்னு தெரியவே கூடாது. தெரிஞ்சது.‌ அப்பறம் உங்கப்பனுக்கும் எங்கப்பனுக்கும் நியூஸ் போய்டும் பாத்துக்க. எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல. ஆனா உனக்கு.?" என இழுக்க,


"ம்ச்... இதுவரைக்கும் அப்படி சொல்லிட்டு தான ஊர் சுத்துனோம். இப்ப என்ன அதுக்கு.?"


"ஒன்னுமில்ல. உங்கப்பாக்கு நாம பார்கவி டேத்-தப் பத்தி விசாரிக்கிறோம்னு தெரிஞ்சா உன்ன சும்மா விடுவாருன்னு தோனல.‌ அதா சொன்னோன். அதுமட்டுமில்லாம இப்ப நாம பாக்க போற டாக்டர்கிட்டையும் நா பொய்ய தான் பேசப் போறேன். அதுனால அவரு என்ன கேட்டாலும் கொஞ்சம் யோசிச்சி பதில் சொல்லு. இல்லன்னா நீ பேசவே பேசாத. ஊமையா மாறிடு." எனக் கூறி அழைத்துக் சென்றான் ரிஷி. 


இருவரும் உள்ளே செல்ல, அனந்தராஜ்‌ மெதுவாக ரிஷியிடம் பேசிக் கொண்டே தன் சிகிச்சையை ஆரம்பித்தார். பின் ரிஷி பெட் ரெஸ்ட்டாக இரு நாள்கள் தங்கச் சொல்ல, கௌதம் அவனைக் கஷ்டப்பட்டு தூக்கி பெட்டில் படுக்க வைத்தான். 


"ஹரி இந்தச் சில்லுன்னு இருக்குற இந்த க்ளைமெட்டுக்கு. ஒரு கப் டீ குடிச்சா நல்லா இருக்கும்ல." என்க கௌதம் அவனை முறைத்தான். 


"சும்மா மொறைக்காத. போய் வாங்கிட்டு வா. போ." என விரட்டினான் ரிஷி. 


"இன்னேரம் என்னோட ஹாஸ்டல் ரூம்ல இருந்தா இந்தக் குளிருக்கு நல்லா போர்வய பொத்தி தூங்கிட்டு இருந்திருப்பேன். இவெங்கூட சேர்ந்ததுனால நடு ராத்திரி வெளிய போக வேண்டி இருக்கு. எல்லா என்னோட நேரம்." எனப் புலம்பிய படியே ரிஷிக்கு டீ வாங்கி வர, 


"என்னடா டீ இது.! கண்ராவியா இருக்கு. டேஸ்ட் இல்லன்னாலும் பரவாயில்ல. அட்லீஸ்ட் சூடாவாச்சி வாங்கிட்டு வந்திருக்கு கூடாது. கைல டீ கிளாச வாங்கிட்டு யாரையும் வாய் பாத்துட்டு நின்னுட்டியா என்ன. சூடு இல்லாததுனால மட்டமா இருக்கு. உன்ன மாறியே. " எனக் கௌதமை கேலி செய்ய,


"சூடா வேணும்னா அந்தக் கடைல கொல்லிக் கட்ட இருக்கு. போய் அத எடுத்து வாய்க்குள்ள விட்டுக்க. ரொம்ப சூடா இருக்கும். காட்டெரும." எனத் திட்ட. ரிஷி டீயை எடுத்துக் கௌதமின் மீது ஊற்ற, கௌதம் அவனைத் தலையில் தட்டி விட்டுத் தூரம் சென்று நின்றான். காலில் அடி பட்டிருப்பதால் எழ முடியாமல் ரிஷி திணற, கௌதம் அவனின் நிலை கண்டு கேலி செய்து சிரித்தான். 


"ப்ரதர்... எழுந்து வாங்க ப்ரதர். இவ்வளோ நேரம் அதிகமா பேசிட்டு இருந்தீங்க. வாய் மட்டும் வாசப்படி தாண்டிப் போச்சி. இப்ப என்ன ஆச்சி. வாய்ல புண்ணா இல்ல கால்ல புண்ணா. நீங்கதா ஸ்டாங் பாடியாசே. வந்து என்ன பிடிங்க ப்ரதர். வாங்க ப்ரதர். வாங்க." எனச் சொல்லி யாருமற்ற வெற்று படுக்கையில் இருந்த தலையணையை தூக்கி ரிஷியின் மீது எரிய,


"டேய்... கால் மட்டும் சரியாகட்டும் உன்ன சும்மா விடமாட்டேன்." என அவனும் கைக்குச் சிக்கியதை எரிய, ஹாஸ்பிடலை தங்களின் படுக்கை அறையென நினைத்து விளையாட. அந்தச் சூப்பரான நர்ஸ் வந்து அமைதியாக இருக்கச் சொல்லிச் சத்தமிட்டு சென்றார். 


"ச்ச... உன்னால தான்டா அந்தச் சூப்பரான நர்ஸ் என்ன திட்டுனாங்க. போடா அங்கிட்டு." என ரிஷி கத்தினான்.


"இங்க இருக்குறவங்க எல்லாரும் அவங்கள நர்ஸ்னு கூப்பிட மாட்டேங்கிறாங்க. சிஸ்டர் சிஸ்டர்னு கூப்பிடுறாங்க. எங்க எனக்காக ஒரே ஒருக்க நீ அப்படி கூப்பிடு பாப்போம். சிஸ்டர் னு. சிஸ்டர்னா உனக்குத் தமிழ்ல என்ன அர்த்தம்னு தெரியுமா. அக்கா இல்லன்னா தங்கச்சின்னு அர்த்தம். உன்ன விடப் பெரியவங்க. அதுனால அக்கான்னு கூப்பிடு பாப்போம். அக்கா.ஆ."என வெறுப்பேற்றி விளையாடினான். பின் அவனின் அருகிலேயே படுத்தான் கௌதம். 


"அந்த டாக்டர் நமக்கு வேண்டிய தகவல சொல்வாரா?. இல்ல இந்த இன்ஸ்பெக்டர் மாறி உங்களுக்கு இது தேவையில்லாததுன்னு சொல்லி அட்வைஸ் மழ பொழிவாரா." கௌதம். அவனின் குரலில் ஒரு சலிப்பு இருந்தது. 


ஏனெனில் செல்லும் அனைத்து இடங்களிலும் அவர்களுக்குக் கிடைப்பது ஏமாற்றமே. நன்கு வளர்ந்து நிதானமாக யோசிக்கும் ஆணாக இல்லாமல். சட்டென உணர்ச்சி வசப்பட்டும் விடலை பசங்களாக இருப்பதால் அவர்களுக்கு வேண்டிய எந்த ஒரு தகவலையும் சொல்ல யாரும் தயாராக இல்லை. 


போலிஸ்ஸார் சந்தேகப்பட்டு கைது செய்த நபர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை. பார்கவியின் உயிர் பிரியும் தருணம் கடைசியாக மருத்துவம் பார்த்த மருத்துவர் யார் என்றே தெரியவில்லை. இவை அனைத்திற்கும் மேலாக, பார்கவியின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததிலிருந்து அவளின் உடலை மண்ணில் புதைக்கும் வரை ஒரு கும்பல் கலியபெருமாளை சுற்றி சுற்றி வந்தது. அவர்கள் யார்?. ஏன் கலியபெருமாளிடம் என்னென்னமோ பேச வேண்டும்?. 


உண்மையில் பார்கவி மரணம் எப்படி நிகழ்ந்தது?. இயற்கையாக மரணம் அடைந்தாளா!. இல்லை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாளா!. செய்தது யார்.? ஏன் அந்தப் பால் மனம் மாறாக் குழந்தையைப் பலியாக்க வேண்டும்?. இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை இருவரும் கண்டுபிடித்தாக வேண்டும். பொறுமையாக.


"யாரும் நமக்கு உதவனும்னு அவசியமில்ல ஹரி. நம்மால கண்டு பிடிக்க முடியும். நிச்சயம் முடியும். என்ன நம்பு." என ரிஷி ஆறுதல் சொல்ல, பின்,


"ரெண்டு நாள் இங்க இருந்து அந்த டாக்டர்கிட்ட பேசி எப்படியாது போஸ்ட்மார்ட்டம் ரிப்போட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கனும். அப்பதா பாப்புக்கு என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியும். நீ இங்க இருக்க வேண்டாம். ஹாஸ்டலுக்கு போய்டு. நா அப்பாட்டா ஃபோன்ல சொல்லிட்டேன். நீ போ." எனக் கௌதமிடம் சொல்ல, கௌதம் ஹஸ்டலுக்கு சென்றான்.‌ 


கவனிக்க ஆள் இல்லாமல் இருந்தவனுக்கு அந்த இளம் மருத்துவர் தான் உதவி செய்தார். அவரும் ரிஷியும் நன்கு பேசிப் பழகிக் கொண்டனர். 


அடுத்த நாளே ரிஷி உடல் நலம் தேறி நடக்க ஆரம்பித்தான். ரிஷி அவரிடம் தன் வார்த்தை ஜாலத்தை காட்டி பார்கவியின் மரணம்பற்றிக் கேக்க, உங்களுக்கு எதற்கு? என அவர் எதிர் கேள்வி கேட்டார். பார்கவி படிக்கும் பள்ளியில் தான் தாங்களும் படித்தோம். அவளைத் தெரியும் என்பதால் மரணத்திற்கான காரணம் கேட்பதாகச் சொல்ல, அவர் நம்பாமல் பார்த்தார். 


"அட உண்ம சார். நாங்க அந்தப் பொண்ண பாத்திருக்கோம். எங்க ஸ்கூலுதா. நம்புங்க ஸார். எப்படி செத்ததுன்னு தெரிஞ்சிக்கலாம்னு தா கேட்டேன். ரொம்ப நல்ல பொண்ணு ஸார். அப்படியே பாக்க பொம்ம மாறியே இருக்கும். அதா அந்தப் பாப்பா இறந்தது கஷ்டமா இருக்கு. எல்லாரும் சொல்ற மாறி அந்தப் பாப்பா சைல்ட் அப்யூஸ் பண்ணதுனால தா இறந்துச்சான்னு தெரிஞ்சிக்கலாம்னு தா. மத்த படி ஒன்னுமில்ல ஸார். சொல்லுங்க ஸார் என்னாச்சி அந்தப் பாப்பாக்கு." எனக் கேட்க. 


"எனக்குமே அத பத்தி முழுசா தெரியாது. மார்ச்சில கூட இருந்ததுனால கொஞ்சம் தா தெரியும். எப்படி இறந்தான்னு முழுசா தெரியனும்னா. ரிப்போர்ட்ட படிக்கனும்." என்றவர் போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர் யார் என்ற தகவலைச் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் ரிப்போர்ட்டை படித்து என்ன நிகழ்ந்தது என்று சொல்வதாக வாக்களித்தார்.


"ஆறு வர்ஷம் ஆகப் போது அது நடந்து. இப்பையும் அந்த ரிப்போர்ட் இங்க இருக்குமா என்ன.?" ரிஷி சந்தேகமாக.


"இது கவர்மென்ட் ஹாஸ்பிடல். இங்க வர்ற போறா அத்தன பேரோட இம்பர்மேஷனையும் ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருப்பாங்க. ஒரிஜினல் எல்லாமே இங்க தா இருக்கும்." என ரிப்போர்ட்களை அடுக்கி வைத்திருந்த அறைக்குச் சென்றார் ரிஷிக்காக. 


சில மணி நேரத்திலேயே கண்டு பிடித்து விட, அதை வாசித்துப் பார்கவியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விளக்கமாகக் கூறினார். 


அது ரிஷிக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றால், கௌதமால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.


"இது ரேப் இல்ல. பார்கவி இறந்து போனதுக்கான காரணம் தலைல அடிபட்டு, மண்ட ஓடு உடஞ்சிருக்கு. அந்த ஓடு அந்தப் பொண்ணு மூளைல குத்தி, ரத்தம் கசிய ஆரம்பிச்சிருக்கு. அதுனால தா இறந்து போய்ருக்கு. எதுலையோ பலமா முட்டிருக்கனும், இல்லன்னா இடிச்சிருக்கனும். கீழ விழுந்ததுனால முழங்கால் முட்டி, பாதம், தோள்பட்டை. வயிறு, அப்பறம் நெற்றிலையும் சிராய்ப்பு இருக்கு. 


மத்தபடி அந்தரங்க உடம்புல வேற எந்தக் காயமும் இருந்ததுக்கான அடையாளமே இல்ல. அந்தச் சிராய்ப்பு கூட அந்தப் பொண்ணு இறக்குறதுக்கு, அதாவது காணமா போன அன்னைக்கி நடந்திருக்கனும். அதுக்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாள் அதாவது காணாம போன ரெண்டாவது நாள் நைட்டு தா தலைல அடிபட்டிருக்கு. அடிபட்டுச் சரியா பன்னிரண்டு மணி நேரத்துல உயிர் போயிருக்கு. ஹாஸ்பிட்டல்ல வச்சி தா உயிர் போயிருக்கு. 


சோ, இது மர்டர் கிடையாது. காணாம போனதுனால காட்டுக்குள்ள எதையாவது பாத்து பயந்து போய் ஓடிப் போறேன்னு சொல்லி எதுலையாது மோதி அடிபட்டி மூளைல ரத்த கசிவு ஏற்பட்டு இறந்து போயிருக்கு." என்றார் அவர். 


இதைத்தான் பலாத்கார முயற்சி என்றென்னி வெளியே தெரியக் கூடாது என்று கலியபெருமாள் யாரின் மீதும் கேஸ் குடுக்கவில்லையோ. கௌதமை பின் தொடந்து சென்றதால் நேர்ந்த விபரீதம் இது‌ என்பதால் மகனை முழுதாகத் தலைமுழுகி விட்டாரோ. 


காட்டில் கௌதமை தேடி பசி தூக்கமின்றி அழைந்தவளை காட்டின் தனிமை நிறைந்த அமானுஷ்யம் பயமுறுத்தி இருக்க வேண்டும். அப்போது எதையாவது பார்த்துப் பயந்திருக்க வேண்டும். அது காட்டில் உள்ள மிருகங்களாகவும் இருக்கலாம். தப்பிக்க முயன்றவளின் தலையில் அடி பட்டுப் பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும். இதில் யாரை பழி வாங்குவது. அத்தோடு அவள் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது ஒரு வித நிம்மதியை தந்தது ரிஷிக்கு. இப்போது அவனைப் பொருத்தவரை பார்கவியின் மரணம் விபத்தாகப்பட்டது.


ஆனால், கௌதமிற்கு அப்படி தோன்றவில்லை. தன் தங்கையை யாரோ வேண்டுமென்றே கொலை செய்திருக்கிறார்கள் என்று முழுமையாக நம்பினான். யாரோ இருக்கின்றனர். தன் தங்கையின் மரணத்திற்கு பின். அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றான் ரிஷியிடம். ஆனால் ரிஷிக்கு அது சரி என்று தோன்றவில்லை. எனவே இது ஒரு விபத்து எனக் கௌதமின் மனதை மாற்ற முயன்றான். 


சும்மா இருந்த கௌதமிடம், 'வா. உன் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பழி தீர்போம்.' என நெருப்பை மூட்டி விட்டு, இப்போது வேண்டாம் என்று அணைத்தால் அதை ஏற்பான கௌதம். 


கௌதமின் சந்தேகம் சரியாக இருக்கலாம். 


இல்லை ரிஷி சொல்வதும் சரியாக இருக்கலாம். 


ஆக மொத்தும் பார்கவி இறந்து விட்டாள்.


இருவரும் ஒரு கயிற்றின், இரு முனைகளில் தங்களை பிணைத்துக் கொண்டு, ஒரு வேறு திசையை நோக்கி நடக்க முயன்றால் என்ன ஆகும். கயிறு முறிந்து விடும் அல்லவா. அதே போல் தான் இருவரின் நட்பும் முறிந்து போனது. அவரவர் எடுத்த முடிவால். 


நம் வாழ்க்கையில் நல்லது கெட்டது என எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவை அனைத்திற்கும் காரணங்கள் இருக்கிறது. அது பல நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள இயலாதவையாக இருக்கலாம். அதனால் நாம் ஆழமாக யோசிக்காமலோ அல்லது சரியாகப் புரிந்து கொள்ளாமலோ. எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது.  


நம் வாழ்க்கையில் எதைச் செய்ய முற்பட்டாலும். சிந்தித்து செய்ய வேண்டும். ஏனெனில் நமது ஒரு சிறிய செயல் கூட நம் எதிர்காலத்தை மாற்றவல்லது. 


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


அன்பே 46


அன்பே 48


 

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...