முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 48


 

அத்தியாயம்: 48


நள்ளிரவு பதினொரு மணி.


டிரிங்... டிரிங்... 


சென்னையில் உள்ள மூர்த்தியின் வீட்டில் தொலைபேசி ஒன்று அலறிக் கொண்டே இருந்தது.‌


"ஹல்ல்...லோ." ரிஷி தூக்க கலக்கத்தில் பேச,


"ரிஷி நா பாத்துட்டேன். அவெ எங்க இருக்கான்னு நா பாத்துட்டேன். இங்க ஊட்டிலதா பாத்தேன். என்ன பண்ணலாம் அவன?." எனப் படபடத்துக் கௌதம் பேச, ரிஷிக்குப் புரியவில்லை.


"என்ன பாத்த… யார பாத்த...ஆ." ரிஷி. இன்னும் அவன் தூக்கக் கலக்கத்தில் தான் இருக்கிறான் போலும், குரல் தெளிவு இல்லாமல் வந்தது. 


"ம்ச்... அதான் டா. போலிஸ் சந்தேகப் பட்டுப் பிடிச்சிச்சில்ல. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தே. அவன நா பாத்தேன்." என்றபோது ரிஷிக்குப் புரிந்து விட்டது, அவன் பார்கவியின் விசயத்தைப் பற்றிப் பேசுகிறான் என்று. 


"அவ்ளோ பெரிய ஊட்டில இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டியா என்ன‌?." அலட்சியமாகக் கேட்டான் அவன். 


"இன்னைக்கி எங்க எல்லாரையும் பொட்டானிக்கால் கார்டனுக்கு கூட்டீட்டு போனாங்க. அங்க ரோட்டு கட, ஒன்னுல நின்னு எதோ வாங்கிட்டு இருந்தான். அவெந்தா அது. எனக்கு நல்லா தெரியும். நான் கொஞ்ச நாள் போலிஸ் ஸ்டேஷன்ல இருந்தேன்ல. அப்பப் பாத்திருக்கேன். அவெந்தா அது. பின்னாடியே போனேன். ஆனா என்னால கொஞ்ச தூரம் மட்டும் தா ஃபாலோ பண்ண முடிஞ்சது." என்றான் கௌதம்.


"ம்ச்... லூசா‌டா நீ?. அவன பாத்ததுனால இப்ப என்ன ஆகிடபோது."


"அவனுக்குத் தெரியும். நம்ம பாப்புடுவ யாரு கொன்னான்னு அவனுக்கு நல்லா தெரியும். ஏ அவனே கூடக் கொன்னிருக்கலாம்." என வேகவேகமாகச் சொன்னான் கௌதம்.


"பாப்புவ யாரும் கொல்ல, இட்‌ வாஸ் அன் ஆக்சிடென்ட்."


"இல்ல ரிஷி. கொல தான். என்ன நம்பு."


"நம்ம பாப்புவ கொல்றதுனால அவனுக்கு என்னடா கிடைக்கப் போது."


"அத தெரிஞ்சிக்க தா நா அவன தேடி கண்டு பிடிக்கப் போறேன். நீயும் வா." என்க, ரிஷிக்கு எரிச்சலாக இருந்தது. 


"நா இந்த வீக் எண்டுல வாரேன். நீ தேவையில்லாம ஹாஸ்டல விட்டு வெளில சுத்தாத. ஏற்கனவே உன்ன கூப்பிட்டு வான் பண்ணிருக்கானுங்க. அதுனால நா வரையும் சேந்து போய்த் தேடலாம். சரியா." எனச் சிறு குழந்தைக்குச் சொல்வது போல் பேசி ரிசீவரை வைத்தான் ரிஷி.


அவனுக்கு ஆயாசமாக வந்தது. சில நாட்களாகவே கௌதமின் நடவடிக்கைகள், சற்று கடுமையாக மாறத் தொடங்கி இருந்தது. பேசும் எதையும் காதில் வாங்காது, தான் பேசியதையே திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை சொல்வது போல் சொல்லிக் கொண்டே இருந்தான். இது அவனின் மனநலம் பாதிக்கப் பட்டு இருப்பதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். எந்நேரமும் பார்கவியின் மரணம், கொலை என்ற அளவிலேயே சிந்தித்து சிந்தித்து மனம் பாதிக்கத் தொடங்கி உள்ளது.


இதை அறிந்து சரி செய்யும் அளவுக்கு ரிஷிக்கு அனுபவம் இல்லாது போனது‌ யாரின் தவறு. ரிஷி எப்பொழுதும் போலவே கௌதமுடன் நடந்து கொள்ள அது மேலும் பயங்கரமான பாதிப்பைத் தந்தது கௌதமிற்கு.


"அறிவில்லையாடா உனக்கு?. நாந்தா உன்ன தனியா போகாதன்னு சொன்னேன்னல. பாரு வார்டன் உன்ன ஸ்கூல் பிரின்ஸ் பால் கிட்ட கூட்டீட்டு போற அளவுக்கு வச்சிருக்க." என்று கத்தினான் ரிஷி. 


'பின்னே அவெ சொல்லியும் கேக்காமல் தேடுறேன் என்று வெளில போனால் என்ன பண்ணுவது. தப்பு பண்ணா மாட்டிக்காத மாறி. இதோ ரிஷி செய்வது போல் மாட்டிக்காம பண்ணனும். அந்தத் திறம கௌதம்கு கிடையாது. அதா மாட்டிக்கிட்டான்.'


"நீ எங்க ஸ்கூலே கிடையாது. ஆனா வார வார வந்து இந்த ஹாஸ்டல்ல தான யாருக்கும் தெரியாம தங்குற."


"யாருக்கும் தெரியாமலாம் இல்ல. இந்த ஸ்கூலோட பழைய பிரின்ஸ் பால் என்னோட அப்பாக்கு தெரிஞ்சவரு. அதுனால என்ன ஹாஸ்டல்ல தங்க அலோ பண்ணாரு. நம்ம மேல வந்த கம்ளைண்ட் எதையும் அவரு கண்டுக்கல. ஆனா இப்ப புது மேனேஜ் மெண்ட் மாறிருக்கு. அதுனால வெளிய போறது கொஞ்ச நாளைக்கி சிரமம். அதத் தா சொன்னனேன் உங்கிட்ட." ரிஷி காட்டமாக.


"சரி விடு. நா கார்டன சுத்தி ரெண்டு நாளா தேடிட்டேன். அவெ கண்ணுல மாட்டல. நாளைக்கி நாம வேற ஏரியால தேடிப் பாப்போம்." என்றவனை முறைத்தான் ரிஷி.


"ஒரு வேள, அந்த டாக்டர் சொன்ன மாறி நிஜமாவே பாப்பு கீழ விழுந்ததுனால இறந்திருந்தா என்ன பண்ணுவ.?"


"அத நம்புற அளவுக்கு நா ஒன்னும் முட்டாள் கிடையாது. என்னோட உள் மனசு சொல்லுது. பாப்புடுவ யாரோ கொன்னிருக்காங்க. அவன எங்கையாலையே கொல்லனும். உன்னால உதவி பண்ண முடியுமா முடியாதா." 


"உஃப்... உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன். ஆனா மண்டைல அடி பட்டதுனால தா பாப்பு இறந்திருக்கா."


"தப்பு... அடி படல, யாரோ ஓங்கி அடிச்சிருக்கனும். பாப்புடு சாகனும்னே பண்ணிருக்கனும்.‌ அவெந்தா அடிச்சிருக்கனும். அடிச்சிட்டு கொண்டு வந்து நம்ம ஸ்கூல் கிட்ட போட்டுட்டு போயிருக்கனும். இல்ல அடிச்சவன அவனுக்குத் தெரிஞ்சிருக்கனும்.‌"


"ம்ச்... நீயா எதையாது கற்பன பண்ணிக்காத ஹரி."


"இல்ல, இது என்னோட கற்பன இல்லை. எனக்கு அப்படி தா தோனுது. பாப்புடு அவனுங்க கண்ணுல மாட்டிருக்கனும். அவனுங்க தா அடிச்சிருக்கனும்." எனக் கூறினான். 


அவனுக்கு யாரோ எதுவோ செய்திருக்கிறர்கள் என்று தோன்றியது. ஆனால் அதை எப்படி கண்டு பிடிப்பது என்று தெரியவில்லை.


"சரி நாளைக்கி காலைல நாம போய்த் தேடுவோம். இப்ப வா. உன்னோட மைண்ட் ரிலாக்ஸாக நாம பேட்மிண்டன் விளையாடலாம்." என்று ரிஷி சொல்லி இழுத்து செல்லும் வீரை கௌதம் விடவில்லை. 


மறுநாள் அவர்கள் இருவரும் ஹாஸ்டலை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று தேட, அவர்கள் தேடியவன் கௌதமின் கண்ணில் மாட்டினான். அதுவும் தனியாகச் சுற்றி யாருமற்ற சுழலில். கௌதம் பிடித்து ஆவேசமாகத் தாக்க, அடி வாங்கியவனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் திருப்பி அடித்தான்.


"ஏன்டா என்னோட பாப்புடுவ கொன்ன?. ஏ?." எனக் கேள்வி கேட்டுவிட்டு பதில் சொல்ல விடாமல் அடிக்க, ரிஷி அடி வாங்கிய வரை உற்று கவனித்தான். அவனுக்கு அடி வாங்கியவன் எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அதனால் வேடிக்கை பார்த்ததோடு கௌதமையும் தடுத்தான். ஆனால் யாரின் பேச்சையும் கேட்கும் மனநிலையில் இல்லாத கௌதம் கையில் பெரிய கல்லை எடுத்தான். எதிர்பாராமல் தொடர்ந்து விழுந்த அடியால் நிலைகுலைந்த கிடந்தவனின் தலையில் போட முயல, ரிஷி தட்டி விட்டான். 


"ரிஷி... விடு... அவெந்தா... எனக்கு நல்லா தெரியும் அவெந்தா. கொல்லனும் ரிஷி. விடு... விடு..." என உறும, ரிஷி அவனின் வயிற்றில் இறுக்கி பிடித்து முன்னேற விடாமல் தடுத்தான். 


கௌதம் சொல்வது உண்மை என்றால் பார்கவியின் மரணம் தீவிரமாக விசாரணை செய்ய வேண்டிய ஒன்று. அதை எடுத்தோம் கழித்தோம் என முடிவெடுத்து விடக் கூடாது என்று நினைத்தான் ரிஷி.


"ஹரி... காம் டவுன். எதுவா இருந்தாலும் முதல்ல விசாரிப்போம். கொஞ்ச நேரம் அமைதியாக இரு ஹரி‌. உணர்ச்சிவசப் படாத."என்க, கௌதம் கேட்டதாகத் தெரியவில்லை. 


தூரத்தில் அடி வாங்கியவனுக்கு தெரிந்தவர்கள், பொது மக்கள் என அனைவரும் கூட்டமா வர. அவர்கள் வருவதற்குள் கொன்றுவிட வேண்டும் என்று தவித்தான் கௌதம். 


அடி வாங்கியவனின் நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவரும் சேர்ந்து கௌதமை தாக்க, ரிஷியும் சண்டையிட வேண்டியதாக இருந்தது. கௌதமின் மீது கை வைக்க வந்த அனைவரையும் ரிஷி அடித்தான். 


இது ஸ்கூல் மேனேஜ் மெண்ட்டுக்கு தெரிய வர, பிரின்ஸ் பால் முன் இருவரும் தலை குனிந்து சிறு காயங்களோடு நிற்க வேண்டியதாயிற்று. 


"நீங்கப் படிக்கிற பசங்க தான. பொறுக்கி மாறி ரோட்டுல நின்னு சண்ட போட்டிருக்கிங்க. இதோ பாரு. சத்தியமூர்த்தி கேட்டுக்கிட்டதுக்காக மட்டும் நா உன்ன வீக் என்டுல ஹாஸ்டல்ல தங்க சம்மதிச்சோம். ஆனா உன்னோட பிகேவியர் சரி இல்ல. உங்கள பாத்து நாளைக்கி மத்த பசங்களும் ஹாஸ்டல்ல விட்டு வெளிய போய் ஊர் சுத்துனா என்ன பண்ண. அதுனால இனி உனக்கு ஹாஸ்டல்ல தங்க அனுமதி கிடையாது. அப்றம் உனக்கு ஹாஸ்டல்ல விட்டு வெளிய போக அனுமதி கிடையாது. இத மீறுனா இனி இங்க படிக்க முடியாது. கெட் அவுட்." எனத் திட்டி அனுப்ப, இருவரும் எதுவும் பேசாது வெளியேறினர். 


"உன்னாலதா அவெ தப்பிச்சிட்டான். நீயும் எங்கூட சேந்து கல்ல எடுத்துப் போட்டிருந்தேன்னா. இன்னேரம் அவெ செத்திருப்பான்." எனக் கௌதம் கோபமாக ரிஷியைப் பார்த்துக் கத்த,


"தப்பிக்க எப்படி முடியும் ஹரி. அவெ நம்ம பாப்புவோட டெத்துக்கு காரணமானவனா இருந்தா நிச்சயம் நானே கல்ல எடுத்துக் குடுத்திருப்பேன். ஆனா அவன பாக்கும்போது அப்படி தெரியல. ஒருவேளை அவெந்தா காரணம்னா நீ அவன அடிச்சி அந்தக் கூட்டத்த தலைமறைவாக்கிட்ட. அவன ஃபாலோ பண்ணியிருந்தா நமக்கு க்ளு கிடைச்சிருக்கும். ச்ச... நல்ல சந்தர்ப்பம் மிஸ் ஆகிடுச்சி. உன்னால தா." என ரிஷி அவனுக்கே உண்டான பாணியில் திட்ட, கடுப்பானான் கௌதம்.  


"என்னால வா. ஓ... அவென நம்புற, நான் சொல்றதுல உனக்கு நம்பிக்க இல்லேல்ல. அதா அவன நீ காப்பாத்திருக்க."


ரிஷிக்குக் கௌதம் அடையாளம் காட்டியவனை பார்க்கும் வரை பார்கவியின் மரணம் விபத்து என்றே நினைத்திருந்தான்.‌ அவனைப் பார்த்தபின் கௌதம் கூறியது உண்மையாக இருக்குமோ எனச் சிந்திக்கலானான்.


"முட்டாள் மாறிப் பேசாத ஹரி. என்ன பொருத்தவரைக்கும் இது ஆக்ஸிடென்ட் தா. ஆனா நீ சொன்னத நம்புறதுனால தா நம்ம பாப்புவ எதுக்காகக் கொல்லனும்னு கண்டுபிடிக்க உங்கூட சேந்து முயற்சி பண்றேன். நீ சொன்னது சரின்னா அவெ மட்டும் இதுக்கு பின்னாடி இருக்கமாட்டான்னு தோனுது. ஐந்து வயது சிறுமி மர்ம மரணம். பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளானாரா???. ன்னு கொட்ட எழுத்துல நம்ம பாப்புவோட ஃபோட்டோ போட்டுப் பொய்யான தகவல யாரு பரப்பனும். 


ஒரு சாதாரண திருடனால பொய்யான நியூஸ்ஸ உருவாக்க முடியும். ஆனா அத்தன பேரையும் நம்ப வைக்க எப்படி முடியும். உன்னோட அப்பா என்னோட அப்பா. ஏ இந்த ஊரே நம்ம பாப்புவோட மரணம் பாலியல் பலாத்காரம்ன்னு சொல்லிட்டு இருக்கு.


உனக்குப் புரியலையா. யாரோ இத தொடந்து ஆராயத் கூடாதுன்னு தா உன்னோட அப்பாவ ஊரவிட்டு போற மாறிப் பண்ணிருக்கனும்னு. நம்ம வீட்டுல இப்படியொரு பொண்ணு இறந்துட்டா நமக்கு அதுனால அசிங்கம். நம்ம கௌரவமும் மானமும் பாதிக்கும். அப்படிங்கிற ஒரு தப்பான செண்டிமெண்ட்ட வச்சி உங்கப்பாவ திசை திருப்பிருக்காங்க. இதுக்கு பின்னாடி பெரிய விசயம் இருக்கு. " என்றான் ரிஷி. 


ரிஷிக்குப் பல கேள்விகள் எழத் தொடங்கியது. தவறி விழுந்து தான் இறந்தாள் என்றால் அதை ஏன் மருத்துவர்கள் கலியபெருமாளிடம் தவறாகச் சித்தரித்து சொல்ல வேண்டும். காவல் துறைக்குக் கூட அதைப் பற்றிச் சொல்லவில்லையே. ஏன்?. 


முதலில் பார்கவியின் மரணத்தை உறுதி செய்த மருத்துவர், பின் கலியபெருமாளை சுற்றி சுற்றி வந்து அந்தக் கும்பல். பத்திரிக்கைக்குச் செய்து கொடுத்தது யார்? என்று தெரிய வேண்டி விசயங்கள் நிறை உள்ளது. அதை விடுத்து சந்தேகம் என்று யாரையும் கொலை செய்யக் கூடாது என்றான் ரிஷி.


"இப்ப என்ன பண்ணனும்னு சொல்ற. நா அவன அடிச்சது தப்பு. அதுக்கு பரிகாரம் பண்ணனுமா. ம்... பரிகாரமா அவனுக்கு மாலை மரியாதல்லாம் பண்ணி எந்தலை மேலயே தூக்கிகிட்டு ஊருக்குள்ள ஊர்வலம் கூட்டீட்டு வந்து மன்னிப்பு கேக்கனுமா. சொல்லு... மன்னிப்பு கேக்கனுமா." எனக் கத்த, 


"ம்ச்... ஹரி எப்பையும் பிரச்சினையோட ஆரம்பத்த கண்டு பிடிக்கனும் சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும் ஹரி." என ரிஷி தன்மையாகத்தான் பேசினான். 


கௌதம் கொலைகாரனை தண்டிக்க நினைத்தான் என்றால் ரிஷி கொலைக்கான காரணம் தெரிந்த பின் தண்டிப்போம் என்றான். 


"நீ பொறும்மையா இருப்பப்பா. பொறுமையா இருப்ப... எப்ப உந்தங்கச்சிக்கி இப்படியொரு நிலம வந்தா கூட நீ பொறுமையா தா இப்ப." என நக்கலாகச் சொல்ல. அது ரிஷியின் கோபத்தை தூண்டியது. 


"வைசுவ எதுக்கு நீ இப்ப பார்கவியோட கம்பேர் பண்ணி பேசுற." என்றவனின் குரல் சற்று கடுமையாக இருந்தது.


"ஏ பேசக் கூடாது. உங்க தங்கச்சிய சொன்னா மட்டும் உனக்கு வலிக்கிதோ. அடுத்தவென்னா பொறும நிதானம்னு உக்காந்து க்ளாஸ் எடுக்க வேண்டியது. இறந்தது வைசுவா இருந்தா தெரியும் உன்னோட நிதானம் பொறும எல்லாம்."


"ஹரி... ஐ வான் யூ. வைசுவையும் பார்கவியையும் ஒப்பிட்டுப் பேசாத." ஒரு விரல் நீட்டி எச்சரிக்க,


"அப்படி தா டா பேசுவேன். ஏன்னா செத்தது எந்தங்கச்சி. உந்தங்கச்சி இல்ல. வைசுக்கு இப்படி ஒன்னு நடந்தா! நீ நின்று நிதானமா பொறுமையா யோசிச்சி, செஞ்சவெ கண்ணுக்கு முன்னாடியே வந்து நின்னாலும் கைக்குலுக்கி பேசி. அவங்கிட்ட ஒரு இன்டர்வியூ எடுத்துட்டு, ஆட்டோகிராஃப் லாம் வாங்கிட்டு வந்து. அப்றமா தா எதாவது செய்வ. அப்படி தான?. 


வைசுவ நல்லா பத்திரமாத்தா பாதுக்காத்து வச்சிக்க. ஏன்னா எப்ப வேண்டுனாலும் பாப்புடுக்கு நடந்தது வைசுவுக்கு நடக்கலாம்." என ஆத்திரத்தில் புத்தியின்றி பேச, ரிஷியால் பொறுக்க முடியவில்லை. பாய்ந்து விட்டான் கௌதம் மீது.


இருவருக்கும் இடையே வாக்குவாதங்களில் வார்த்தைகள் கடுமையாகவே வந்து விழுந்தது. அவன் தான் இயலாமையில் கத்துகிறான் என்றால் ரிஷியும் சேந்து கத்த, அது கைச்சண்டையாகி, இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு வந்து விட்டது. 


ரிஷி பேசும் வார்த்தையில் கவனம் வேண்டும் என்று சொல்லும் ரகம். அவனிடம் சென்று கௌதம் வைசுவை பற்றிப் பேசியது அதீத கோபத்தை மட்டுல்ல கௌதம் மீது ஒருவித வெறுப்பையும் தந்தது. அப்போது விட்டுச் சென்றவன் தான். பின் நாட்களில் கௌதமை பற்றிச் சிந்திக்க வில்லை.


பார்கவியின் மரணம் தொடர்பாகச் சில தகவல்களைக் குறிப்பு எடுத்து வைத்திருந்தவன். வீடு வந்து சேர்ந்ததும் செய்த முதல் வேலை இதைத் தீயிட்டு எரிப்பது. அதை மட்டுமல்ல கௌதமை நினைவுபடுத்தும் அனைத்தையும் இறையாக்கினான் நெருப்பிற்கு. அவன் தங்கையாமே!. அவனே எல்லாம் செய்து கொள்ளட்டும். இனி அவனின் முகத்தில் முழிக்கக் கூடாது எனும் அளவுக்கு முடிவுடன் உறுதியாக இருந்தான்.‌


ஆனால், கௌதம் வெகுளி. அவனுக்குத் தன் உணர்ச்சிகளை மறைக்கத் தெரியாது. எப்பொழுதும் கோபம், பாசம், கவலை, வருத்தம் என எந்த உணர்வையும் மறைக்காது வெளியில் காட்டி விடுவான். அவை வெளியேறியபின் மனம் சுத்தமாக இருப்பதை போல் உணர்வான். எனவே ரிஷியுடன் சண்டையிட்டதை சில நாட்களிலேயே‌ மறந்தவன், ரிஷியின் வருகைக்காகக் காத்திருந்தான்.‌ அவன் வரமாட்டான் என்று யோசிக்க கூட இல்ல. 


அவனின் காத்திருப்பு சில மாதங்கள் தொடர்ந்தன. ஏமாற்றமாக இருந்தும் ரிஷி வருவான் என்று நம்பிக்கையை மட்டும் விட மனமில்லை அவனுக்கு. கோபத்தில் அவன் வீசிய வார்த்தைகள் நினைவிலும் இல்லை. வழக்கம்போல் சந்திக்கும் இடங்களில் எல்லாம் தனியாக அமர்ந்திருந்தான். ஹாஸ்டலை விட்டு வெளியேறியும் சென்று பார்த்தான். 


இதற்கிடையே அந்தத் திருடனை மீண்டும் காண நேர்ந்தது. இம்முறை ரிஷி சொன்னதை செய்ய நினைத்தவன். அதான் அவனைப் பின் தொடர்ந்து செல்வது. 


எறும்பைப் போல் அவனின் பின்னே வந்த கௌதமை மாட்டிவிட எண்ணி, அந்தத் திருடன் விலைமாதர்கள் வீட்டிற்கு செல்ல, கௌதமும் செல்லும் இடம் தெரியாது அங்கே சென்றான். அந்தத் திருடன் போலிஸ்ஸில் மாட்டி விட்டதோடு மட்டுமல்லாமல் அவனின் ஸ்கூலுக்கும் தகவல் சொல்லிவிட, கௌதமின் தந்தையான கலியபெருமாளுக்கு ஃபோனில் தகவல் பறந்தது.


பிரின்ஸ் பாலிடம் வந்து பேசினார் சத்தியமூர்த்தி.


 கலியபெருமாளுக்கு தான் மகன் இல்லையே.‌ இல்லாத மகன் எங்கிருந்தால் என்ன?. எனத் தண்ணீர் தெளித்து விட்டார். 


சத்தியமூர்த்தி வந்து கௌதமிடம் பேச, கௌதமின் மனம் முழுவதும் ரிஷி வந்திருக்கிறானா என ஆவலுடன் அவரைப் பார்த்தது. ஆனால் ஏமாற்றம் தான். அவன் வரவில்லையே. இனியும் வரப் போவதில்லை என்ற உண்மையை உணர்ந்தான் கௌதம். மூர்த்தியும் கௌதமிற்கு அறிவுரை வழங்க. 


"நா ஒன்னும் உங்களுக்கு விளக்கம் சொல்லனும்னு அவசியமில்லை. நீங்க யாரு?.‌ என்ன பெத்தவரா!. இல்லல்ல. சும்மா சும்மா‌ வந்து அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்காதிங்க. இனி என்ன பாக்க நீங்க வரக் கூடாது. நா படிக்க உங்க காசும் தேவையில்ல. உங்க உறவும் தேவயில்ல." எனப் பிரின்ஸ் பால் முன் பேச, தலை குனிந்து அவமானத்துடன் சென்றார் மூர்த்தி.


இரண்டாவது முறையாகக் கௌதம் அனாதை ஆனான். இம்முறை அவனை அவனே ஆக்கிக் கொண்டான். ரிஷி தன்னை ஏமாற்றி விட்டான் என்றெண்ணினான் கௌதம். 


எப்பொழுதும் ரிஷி கௌதமை கீழே தள்ளி விடுவான் தான். இம்முறை மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டு விட்டான். திரும்ப எழ முடியாத படி. 


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...