அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை. 'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...
அத்தியாயம்: 46 தலைவாழை விருந்து என்பார்களே. அது தான் நடந்து கொண்டிருக்கிறது. " அண்ணே, நா இந்த மாறி ஐட்டம்ஸ் எல்லாத்தையும் ஹோட்டல் சுவத்துல ஓட்டி இருக்குற போஸ்டர்ல தா பாத்திருக்கேன். நேர்ல இப்ப தா பாக்குறேன். " பிரகாஷ். பாத்திரத்தில் நிரப்பப்பட்டிருந்த உணவு வகைறாக்களை கண்டு மெய் சிலிர்த்தபடி நிற்க. " கண்ணு வைக்காதடா கேணப்பயளெ. இது எல்லாம் அந்தத் தம்பிக்கி மட்டும் இல்ல. உனக்கும் இது தா சோறு. நேரம் வரும்போது வந்து உக்காந்து உள்ள கொட்டிக்க. ஏன்டி அந்த மீன என்ன பண்ண. " மலர். சமயலைறை அவரின் ராஜ்ஜியம் அல்லவா. அவனின் சொல் படி தான் எல்லாம் நடக்க வேண்டும். " வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 200 வகையான உணவைச் சமைத்து பரிமாறினார் பாசமிகு மாமியார்னு. டீவிக்குள்ள ஒருத்தேன் கோர்ட்டு சூட்டுலாம் போட்டுட்டு படம் காட்டுவாப்ல. அப்ப நம்பல. ஆனா. இப்ப... " முட்டைக்கண் விரிய பிரகாஷ். " நம்பணும்னு தோனுதாக்கும். " கௌதம். " ம்..." எனத் தலை தானாக அசைந்தது. அதைச் சம்பத் வந்து நிப்பாட்டினான். " கீ குடுத்த பொம்ம மாறி ஏன்டா தலைய ஆட்டுற. நிப்பாட்டு. " என நிறுத...