முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 35

அத்தியாயம்: 35 


எதுவும் புரியாதபோது.


தொடங்கிய ஓட்டம்.


எல்லாம் புரியும்போது.


முடிவுக்கு வந்து விடுகிறது.‌


இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும்.


சுருதி என்ற இளம் பெண்ணின் மரணத்தை விசாரிக்க என வந்தவனின் பயணம் முடிவுக்கு வர உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில்.


" இப்பவும் சுருதி உயிரோடதா இருப்பான்னு நினைக்கிறிய ரிஷி. " விக்னேஷ்.


"எஸ். எவ்வளவு சீக்கிரம் அங்க போறோமோ. அவ்வளவு சீக்கிரம் அவள உயிரோட பாக்கலாம். இல்லன்னா டெத் பாடி தா. அதுவும் நமக்குக் கிடைக்காது. கௌதம், போலாமா. " என கை கடிகாரத்தை பார்த்தபடி சொல்லிக் கௌதமை அழைக்க., அனைவரும் எழுந்தனர்.


"நீங்க எல்லாரும் எங்க வர்றிங்க. " ரிஷி.


" சுருதியா காப்பாத்த. " என்ற விக்னேஷை கூர்மையாகப் பார்த்தான் ரிஷி.


"அதுக்கு எதுக்கு நீங்க. அதா நாங்க போறோமே." கௌதம்.


"என்ன பாஸ் முட்டாத்தனமா கேள்வி கேட்டுட்டு. இது எங்களோட கேஸ். நாங்க வந்தாத்தா எங்கள நம்பி கேஸ் குடுத்த மணிராம்க்கு சுருதி கிடைப்பா. உசுருக்கு உசுரா லவ் பண்ண ஒரு காதல் ஜோடிய சேத்து வச்ச பொறும எங்களுக்குக் கிடைக்கும். சந்திரபோஸ் மாறியான சமூக விரோதிய கண்டுபிடிச்ச எங்களுக்குக் கிடைக்க இருக்குற அவார்ட அன்வான்டர்டா பேசிக் கெடுக்காதிங்க.‌ சொல்லிட்டேன்" மனோ.


" எஸ் ரிஷி மனோ சொல்றது சரிதா. நாங்களும் கூட வருவோம். " என்றான் ஜீவா.


"ம்ச்... உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல. உன்னத்தா இந்தக் கேஸ்ல இன்வால் ஆகக்கூடாதுன்னு சொல்லி வரச் சொல்லிட்டானுங்கல்ல. கிளம்பி போ வேண்டியது தான, மூட்ட‌முடிச்ச கட்டீட்டு. ரொம்ப சின்சியராலாம் வேல பாக்காத." எனத் தன் ஃபேண்ட் பாக்கெட்டில் இருந்த மற்றொரு துப்பாக்கியைச் சரி செய்த படி எழுந்து சென்றான் ரிஷி.


"என்ன கௌதம் இது. அவென்ட்ட சொல்லு. நாளைக்கி தா இந்தக் கேஸ்ல இருந்து நாங்க விலகுறோம். ஆனா இன்னைக்கி இது எங்க கேஸ் தா. எங்களுக்கு ஃபாலோ பண்ணிட்டு வரத் தெரியும். " விக்னேஷ் விறைப்பாக.


" ஆமா பாஸ். கொஞ்சம் உங்க பாசப் பிணைப்புக்கிட்ட எடுத்துச் சொல்லி புரிய வைங்க பாஸ். லாஸ்ட் கதைல எங்களுக்கு ரெண்டு பைட் ஸீன் குடுத்தாங்க. ஆனா இதுல வெறும் டயலாக்க மட்டும் பேச வச்சி எங்கள காமெடி ஃபீஸ்ஸா ஆக்கிட்டாங்க. எங்களுக்கும்‌ ஆக்ஷன் சீக்வென்ஸ்லாம் இருக்கணும்ல. அப்பதா எங்களையும் ஹீரோன்னு ஒத்துக்குவாங்க." என்க. அனைவரும் சிரித்தனர்.


" ரிஷி எங்க ட்யூட்டிய நாங்க செய்யணும். சோ கண்டிப்பா வருவோம். நீங்க கூடக் கூட்டீட்டு போலன்னாலும். " ஜீவா சொல்ல. அவனின் டியூட்டி என்ற சொல்ல ரிஷிக்கி சரி எனப்பட்டது.


'சரி பல தலைகள் மண்ணுல விழும்போது போலிஸே கூட இருந்தா நல்லது தான. போலிஸ் மேல பலியப் போட்டுட்டு நாம தப்பிச்சிடலாம். இந்த ஜெயிலு கம்பிகுள்ள கைதியாப் போய்‌ மூட்ட பூச்சி கூடவும் கொசு கூடவும் குடும்ப நடத்த வேண்டிய அவசியம் இருக்காது.' கௌதம் மைண்ட் வாய்ஸ்.


கதிரேசனை இரு செவிலியர்களின் கவனிப்பில் விட்டு விட்டு, வீட்டையும் பெண்களையும் பாதுக்காக்கும் பொறுப்பை டிம், டெய்ஸி மற்றும் பாலா அழைத்து வந்த ஒரு காவலர்களிடமும் கொடுத்து விட்டுப் பெண் மருத்துவரை வந்த ஆம்புலன்ஸ்ஸிலேயே அனுப்பி விட்டான் ரிஷி.


பவதாவிற்கு பரம சந்தோஷம். ஏனென்னில் விக்னேஷை கணவனாகப் பார்ப்பதை விட காவலனாகப் பார்ப்பது தான் பிடித்திருந்தது அவளுக்கு. எனவே டாட்டா காட்டி வழியனுப்ப, ஹரிணி மட்டும் கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள், கௌதமை நினைத்து.


நிதானமின்றி எதையாது செய்யப்போய் தன் நண்பனுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற கவலை தான் அது. கௌதமிடம் குறைந்தது ஆயிரம் தடவைக்கும் மேல் பத்திரம் ஜாக்கிரதையென சொல்லிக் கொண்டே இருக்க, அவன் அவளைச் சமாதானம் செய்தான்.


"டார்லிங் ப்ராமிஸ்… நா கவனமா இருப்பேன். ஓகே வா. ம்... போகவா. " என அவளின் கரம் பற்றிக் கேட்க,


"போகாதன்னு சொல்ல மனசு இல்ல கௌதம், ஆனாலும் பாத்துக்க. உனக்குன்னு ஒரு குடும்பம் காத்துட்டு இருக்கு.‌ நா இருக்கேன். உணர்ச்சிவசப்பட்டு எதையாது செஞ்சிடாத. " என்றவளுக்கு கண்ணில் நீர் கோர்த்து. ஏனெனில் பார்கவி என்று வந்துவிட்டால் கௌதம் ஆட்டோம் பாம்மாக மாறி விடுகிறானே. அதான்…


"‌நீ கவலையே படத் தேவையில்ல. என்னோட பாப்புடு என்ன பாத்துப்பா. எனக்குத் துணையா எப்பையும் கூடவே இருப்பா. " எனச் சொல்லிச் சென்று காரில் ஏறி அமர்ந்து விட்டன். விக்னேஷிடம் ரிஷி தந்த துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்று கேட்டுச் செய்து கொண்டிருந்தவனை பார்த்தபடி வாசலிலையே அவள் நிற்க.


"கிட் அவெ என்ன சின்னக் குழந்தையா. ஸ்கூலுக்கு விட்டுடுட்டு போறானு கண்கலங்கி வழியனுப்ப. " எனக் கேலி செய்ய, அவனிடமும் ஜாக்கிரதை என்றாள். ரிஷியைக் கவனமாக இருக்கும்படி அல்ல, கௌதமை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி.


"கிட், இது அநியாயம். நீ அவனுக்கு மட்டும். " என்றவனை பேச விடாது.


" உன்னால யாருக்கு என்ன ஆகப்போதோன்னு தா கவலப்படுவேனே தவிர. உனக்கு என்ன ஆகும்னு நா கவலயே ‌படமாட்டேன். போய்ட்டு வா. " என இரு கரத்தையும் கட்டிக் கொண்டு சொல்ல, அதை ரசித்தவன், அவளின் கன்னத்தைக் கையில் ஏந்தி, எப்போழுதும் சொல்லும் வார்த்தை தான். 'எவ்வளவு முடியுமோ. அவ்வளவு ஜாக்கிரதையா இரு. ' என்று கூறி நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்தான்.


" பாவா.‌.. நீ இன்னும் பார்கவி எப்படி இறந்தாங்கன்னு சொல்லவே இல்ல. இப்ப சுருதிய எதுக்காகக் கொல பண்ண நினைக்குறாங்களோ. அதுக்கு‌ தா பார்கவியையும் கொன்னாங்களா. " எனக் கேட்க.


"ஆல்ரெடி டயம் ஆகிடுச்சி கிட். இன்னொரு ஃப்ளாஷ் பேக் சொல்லி.‌ உன்னோட எல்லா சந்தேகத்தையும் போக்கிட்டு நா போனா... அங்க சுருதிய காப்பத்தல்லாம் முடியாது. துணி மூட்ட மாறி அள்ளிப் போட்டுட்டு தா வர முடியும். பரவாயில்லையா. " என்க.


" அப்ப எனக்கு நீ டீட்டெய்ல்லா சொல்ல மாட்ட.‌" என அவனிடமிருந்து விலகிக் கேட்க,


" கண்டிப்பா சொல்றேன். இப்ப இல்ல. இன்னொரு நாள். நாம ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்கும்போது. " என்றவன் அவளை இறுக அணைத்து‌ மித்தமிட்டு சென்றான்.


இதழில் இருந்த ஈரத்தை துடைத்தபடி செல்லும் அவர்களைக் காண்கையில், அனைவரும் நலமுடன் வந்து சேர வேண்டும் எனக் கடவுளை மனமார வேண்டிக் கொண்டாள்.


காரை ஓட்டத் தொடங்கியவன் கவர்மெண்ட் போட்டு வைத்திருந்த தார் சாலையில் செல்லாமல், காட்டிற்குள் வேறு பாதையில் சென்றான்.


"ரிஷி பாத மாறிப் போற. " விக்னேஷ்.


"ஓ அப்படியா!. அப்ப நீ வேண்ணா ஓட்டேன். அன்னை காப்பகத்து கதவு ரெண்டையும் நல்லா திறந்து வச்சிட்டு திருவாளர் தயானந்தன் வந்து உன்ன வரவேற்பார். கைல மாலையோட மேள தாளத்தோட. " என நக்கலாகப் பேச, விக்னேஷ் முறைத்தான் அவனை. கௌதம் விக்னேஷிடம்.‌


"அவனுக்குத் தா கொஸ்டினோபோஃபியா இருக்கே. தெரியாத. " என்க.‌


"அப்படின்னா என்ன பாஸ். பலான வியாதியா. " மனோ.


"அது உனக்கு. கொஸ்டினோபோஃபியா ன்னா கேக்குற கொஸ்டீனுக்கு நோ சொல்லாம பதிலும் சொல்லாம. கண்ட படி பேசுறதுன்னு அர்த்தம். எப்படி நம்ம விளக்கும். " என்க, அனைவரும் சிரிக்க திருப்பி அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு.


" நேரா அன்னை காப்பகத்துக்குப் போக முடியாது. அப்படியே போனாலும் நாம முன்பக்கம் என்டர்டென்ஸ் வழியா நுழைய ஜான்ஸ் இல்ல." ரிஷி.


"அப்றம் எப்படி சுருதிய காப்பாத்த போறோம். " ஜீவா.‌


" எப்படின்னு பாத்து தெரிஞ்சிக்க. இப்ப பாலா இருக்கிற இடத்துக்கு நாம போறோம். " என்றவன் வேறு எதுவும் பேசவில்லை.


"ஜீவா எனக்கு ஒரு டவுட்டு. " மனோ.


" என்னடா. "


"அது இந்தப் பாலான்னு ஒரு கேரக்டர் வந்துச்சே.‌ அது எதுக்கு தேவையில்லாம. " எனச் சந்தேகம் கேட்க.


" டேய் பாலா கேரளா போலிஸ் டா. ஒரு கடத்தல் கேஸ்காக இங்க வந்திருக்காப்ல. இப்ப நமக்கு உதவி பண்ணீட்டு இருக்காப்ல.‌ இல்ல அவரோட ஃப்ரெண்டுக்கு உதவி செய்றாப்ல." ஜீவா.


" ஓ... அப்படியா!. ஆமா உனக்கு எப்படி அது தெரியும். கிளம்பும்போது உங்கிட்ட வாயர் இல்லாத டெலிபதி மெத்தர்டுல சொல்லிட்டு போனாறா என்ன. "


"இல்ல. அவரோட கேஸ்ஸ பத்தி மத்த போலிஸ்கிட்ட மலையாளத்துல பேசுறத கேட்டேன். "


"ஓஹோ. ஆமா எங்கிட்ட சொல்லாம நீ எதுக்கு மலையாள கத்துக்கிட்ட. " என கோபமாகக் கேட்க.


"மூடீட்டு வாடா. உங்கிட்ட சொல்லிட்டு தா எல்லாம் செய்யணுமாக்கும்." எனத் தலையில் தட்டி அமர வைத்தான்.


பாவம் காப்பகத்திற்குள்ள அதிரடியாக நுழைந்து, சண்ட காட்சியோட சம்பவம் செய்யலாம்னு ஆசையோடு ஏறுன புள்ளிங்கள, நடு காட்டுக்குள்ள கூட்டீட்டு வந்திருக்கான் ரிஷி. எதுக்கு. 


ஒரு வேளை கும்பலா நின்னு. நடுவுல நெருப்பு மூட்டி காட்டுவாசிங்க மாறி டான்ஸ் ஆடப்போறானுங்க போல. காஸ்ட்யூம் மட்டும் மாத்தி போட்டிருக்கானுங்க. பக்கத்துல இருக்குற மரத்த ஒடிச்சி இலைய பிச்சி. இடுப்புல கட்டிக்கிட்டா பக்காவா இருக்கும்‌ டான்ஸ்க்கு.‌


___________



பெரிய ஹால் அது.


அங்கிருக்கும் அனைவரும் இறைவழிபாடு செய்ய எனக் கட்டப்பட்ட கட்டிடம் அது. அங்குக் கண்ணாடி சட்டத்தில் இறைவன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.


அவர் அங்கு அடைபட்டு இருக்கிறார் என்று தான் பல பாதகர்கள்‌ துணிந்து அவரின் முன்னாலேயே பாவச் செயல் செய்கின்றனரோ. இருக்கும். இறைவன் கல்லிலும் லேமினேஷன் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே இல்லை, காணும் அனைத்து இடங்களிலும் உள்ளார் என்றதை உணராத அறிவு ஜீவிகள் அவர்கள்.


அப்படி இரு அறிவு ஜீவி தான் ஒரு புகைப்படத்தின் முன் சம்மணமிட்டு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தன. தயானந்தன் மற்றும் சந்திரபோஸ். ஃபோட்டோவில் இருப்பவர் தயானந்தனின் தந்தை அம்மையப்பன்.


பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே அம்மையப்பனின் குடும்பத்திற்கு என அங்கு ஒரு நல்ல மரியாதை இருந்தது. பல ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான அவரை அந்த ஏரியாவின் இளவரசனைப் போல் தான் திரிவார். மரியாதை அது தானாகக் கிடைக்கவில்லை. மலைவாழ் மக்களுக்கும் சுற்றி இருக்கும் இயலாதவர்களுக்கும் தினமும் அன்னமிடுவதால் கிடைத்தது. அவர்களுக்காகவே இந்தக் காப்பகத்தை நிறுவியுள்ளார் அம்மையப்பன். காப்பகம் என்பதை விட அது சமூதாயக் கூடம்.


இருபத்தி நாலு மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். பசி என்று வருவோருக்கு அன்னமிட. சிறிய விழாக்கள் திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகளைத் தன் சொந்த செலவில் நடத்தி வைத்தார் அம்மையப்பன். கிடைக்கும் அனைத்து செல்வத்தையும் அந்தக் கூடத்திற்கு வரும் இயலாதவர்களுக்குச் செலவு செய்வார். சில சமயம் தன் நிலங்களை விற்றும் செய்தார்.


ஆனால் இது தயானந்ததிற்கு பிடிக்கவில்லை. 


"நம்ம எதுக்கு அந்தப் பஞ்ச பரதேசிகளுக்கு செய்யணும். அவனுங்க கஷ்டப்பட்டா அது அவெ தலையெழுத்து. அதுக்கு எதுக்கு நம்ம கைகாச போட்டு அவனுங்க வயித்த வளக்கணும். " என்பான் தயானந்தன் சிறு வயதிலேயே.


" இந்த உலகத்துல எல்லாருமே பரதேசிங்க தான் ப்பா. பரதேசின்னா பிற தேசத்துக்கு இடம் மாறிப் போறவங்கன்னு அர்த்தம். நம்ம ஆன்மாவும் அப்படித்தா. ஒரு கூடு விட்டு இன்னோரு கூடுக்கு இடம் மாறிக்கிட்டேத்தா இருக்கும். இதுல நாம சேத்து வைக்கிற காசோ பணமோ நம்ம கூட வராது. அந்தக் காசையும் பணத்தையும் இல்லாதவங்களுக்கு உதவியா செய்யும்போது கிடைக்கிற ‌புண்ணியம் தான் நம்ம ஆன்மா கூடவே வரும்.


என்னோட அப்பா தாத்தால்லாம் பொன்னும் பொருளுமா அள்ளி அள்ளிக் குடுத்தாங்க. என்னால பசின்னு வர்றவங்களுக்கு சோறும் தங்க இடமும் மட்டும் தான் தர முடிஞ்சது. நீயாது நல்லா சம்பாதிச்சி இல்லாதவங்களுக்கு பொன்னும் பொருளுமா குடுப்பியா தயா. " என ஆசையுடன் கேட்பார் அம்மையப்பன்.


பிடிக்கவில்லை என்றாலும் முகம் சுழித்தபடி தந்தையுடன் சேர்ந்து செய்தார் தயானந்தன். காலம் எப்பொழுதும் ஒரே போல்சுழலாது அல்லவா. அம்மையப்பன் இறந்து விட, இளம் தயானந்தனிடம் பொறுப்பு வந்தது. 


அவர் செய்த முதல் வேல அந்தக் கூடத்தை மூடியது. தந்தை செய்த புண்ணிய செயலில் பங்கேற்காமல் நிறுத்தியதால் தரித்திரம் பிடித்தது.


செல்வங்களும் சொத்துக்களும் சுடு நீரில் போட்டு உப்புக்கள் போல் விரைந்து கரைந்து போனது. அந்தக் கூடத்தை விற்றால் கூடப் பல லட்சங்கள் கிடைக்கும் என்பதால் அதன் ஒரு பகுதியை விற்று விட்டார். தந்தை செய்த அன்னதானத்தை தொடராததால் இந்த நிலையென ஊரார் பேச, மீதி இடத்தை அநாதை இல்லமாக மாற்றி அரசிடம் இருந்தும் சிலரிடம் கிடைக்கும் நன்கொடையிலும் நடந்தி வந்தார்.


ஆனால் அங்குள்ளவர்களுக்கு சரியாக உணவும் பாதுகாப்பும் தராமல், ஏழைகளுக்கு உதவுவது போல் ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கினார். நிறைய நிலமும் பணமும் கையில் இருக்கிறது தான். அது தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே என்று பதுக்கி வைத்துவிட்டார்.


ஆனால் அம்மையப்பனுக்கு கிடைத்த மரியாதையில் ஒரு சதவீதம் கூடத் தயானந்தனுக்கு கிடைக்கவில்லை என்பது தயானந்தத்தின் ஏக்கம். சிறு வயதில் கிடைத்த ஒன்று இளம் வயதில் காணாமல் போனது. இதை விடக் கொடுமை என்னவென்றால் எத்தனை செய்தும் திருப்தி படாத கட்டிய மனைவியின் ஏச்சு பேச்சிக்கு ஆளானது.


" ஊருக்குள்ள ஒரு பய உன்ன மதிக்க மாட்டேங்கிறான். உன்னோட பொண்டாட்டின்னு சொன்னா முக்குல இருக்கிற டீக்கட காரெங்கூட முறைக்கிறான். பிச்ச காரெங்க கூட நீ ஒன்னும் குடுக்க மாட்டன்னு தட்டேந்தி வீட்டு வாசப்படிய கூட மிதிக்கமாட்டாங்கிறான். இந்த லச்சனத்துல இவரு அநாத பிள்ளைங்களுக்கு வாக்கரிசி போடப்போறாராமா. ஒன்னத்துக்கு ஒதவாத உன்ன கட்டிக்கிட்டதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம். " எனக் கையிலும் கழுத்திலும் டஜன் கணக்குல நக போட்டிருந்தாலும் பஞ்சம் பாட்டு தா படிப்பார் அவர். அதிலும் எப்பொழுதெல்லாம் தயானந்தன் கண்ணில் படுகிறாரோ, அப்பொழுதெல்லாம் நேரடியாகவே பேசி அவமானப்படுத்துவார் 'வக்கில்லாதவன்னு எதுக்கு பொண்டாட்டி பிள்ள.' என்று.


வெளியிலும் மரியாதை இல்லை. வீட்டிலும் மரியாதை இல்லை. 


இல்லை என்ற சொல்லைவிட இருந்தது இப்பொழுது இல்ல என்ற சொல்லுக்கு வலி அதிகம் அல்லவா. அதை அனுபவித்த அவருக்கு இந்த உலகம் தன்னை மதித்து மரியாதை தர வேண்டும், இல்லையேல் தர வைக்க வேண்டும் என்ற வெறி வந்தது. அவரின் மரியாதை காக்க வேண்டிய பொறுப்பை அவரின் மகன் சந்திரபோஸ்ஸிடம் சொல்லிச் சொல்லி வளர்ந்தார்.


பணம்‌... அது மட்டும் ஒருவருக்கு மரியாதையை தந்து விடாது. அதைக் கொண்டு நாம் செய்யும் நல்ல செயல்கள் தான் மரியாதையை தருகிறது என நினைத்தார். ஆனால் அந்த நல்ல செயலையும் பணம் வேண்டுமே. அது இல்லாமல் செய்ய முடியதே. அப்பொழுது பணத்தை எப்படியாவது சம்பாதித்து நல்ல செயல்களைச் செய்வோம், என்ற உயர்ந்த கொள்கையை வளர்த்துக் கொண்டார் தயானந்தன். பல சட்டவிரோத செயல்கள்மூலம் பணம் சம்பாதித்தார் அவர்.


சந்திரபோஸ், படிப்பில் கெட்டி. தந்தையின் மரியாதைக்கு பங்கம் வராமல் எல்லாம் செய்யும் கில்லாடி. அதே நேரம் தயானந்தனுக்கு தெரியாமல் எதுவும் செய்தது இல்லை. மகன் செய்யும் அனைத்தும் அவருக்கு நன்கு தெரியும். கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பது. சில மூலிகை செடிகளைக் கடத்தி விற்பது. காட்டு விலங்களை வேட்டையாடுவது எனப் போஸ் செய்யும் எல்லா குற்றங்களிலும் அவருக்கும் பங்கு உண்டு. ஆனால் தயானந்தன் தவறு என்று சொல்லித் திருத்தியதே இல்லை. மாறாக மாட்டிக்கொள்ளாமல் இருக்க வழி சொல்வார்.


மருத்துவம். அது மிகவும் பிடித்த படிப்பாகிப் போனது போஸ்ஸிற்கு. கற்பூற புத்தி என்பார்களே அதே போல் கப் என வரும் அனைத்தையும் பற்றிக் கொள்ளும் ரகம். இளநிலை பட்டம் பெற்ற பின் ஒரு சாதாரண பொது மருத்துவராக இருப்பதை விட சிறப்புப் படிப்புகள் மூலம் தனித்து விளங்கலாம். சிறப்புப் பிரிவு மருத்துவர்களுக்கு என்றுமே தேவை உண்டு.


மருத்துவம் என்பது பெரிய கடல்போல். ஐந்தரை ஆண்டுகள் பொது மருத்துவ படிப்பு. பின் மேற்படிப்பு படித்து சிறப்புப் பட்டங்கள் பெற்றால் நீங்கள் வல்லுநர்களாக மாறலாம். நரம்பியல் வல்லுநர் என்று சொல்லப்படும் Neurologist. இருதய நோய் நிபுணர் என்று சொல்லப்படும் Cardiologist. Anesthesiologists என்ற மயக்கவியல் நிபுணர். Nephrologists என்ற சிறுநீரக சிறப்பு மருத்துவர். Obstetricians and Gynecologists என்ற மகப்பேறு மருத்துவர் என இன்னும் பல உள்ளது. சொன்னா சொல்லிக்கிட்டே இருக்கலாம். நீங்கத் தேர்ந்தெடுக்க வேண்டியது இலக்கை மட்டுமே.


'இலக்கை நிர்ணயித்து விட்டு ஓட்டத்தைத் தொடங்கும் போது தா வெற்றி கிடைக்கும். இலக்கு இல்லாத ஓட்டம் எந்தப் பயனையும் தராது. ' என்ற அறிவுரை போஸ்ஸுக்கு தேவையில்லை என்பது போல் தன் இலக்கைத் தேர்ந்தெடுத்தார். அது தான் இருதய நோய் நிபுணர். Cardiologist.


சந்திரபோஸ்ஸின் நல்ல நேரமோ இல்லை ஊட்டி வாழ் மக்களின் கெட்ட நேரமோ. பொது மருத்துவம் படித்து விட்டு ஓர் ஆண்டுகள் ஊட்டி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்தார் போஸ்.


அங்கு வரும் இறந்து போனவர்களின் உடல் தான் அவருக்குப் பயிற்சி களம். காய்கறிகளை நறுக்குவது போல் உடலைக் குத்தி கிழித்து உடலில் ஒவ்வொரு பாகத்தையும் பற்றி நன்கு தெரிந்து கொள்வார். இதனாலேயே அவருக்கு ஈவு இரக்கத்திற்கு அவரின் இதயத்தில் இடமில்லாது போனாது


ஆஸ்ரமத்தில் உள்ளவர்களிடமும் அதைச் சுற்றி உள்ள மக்களிடமும் ரத்தத்தை, இரத்த தானம் என்ற பெயரில் பெற்று காசாக்குவதில் ஆரம்பித்த அவரின் பயணம் சிறுநீரகம், கல்லீரல், கருமுட்டையென வளர்ந்து இதயம்வரை வந்து நிற்கிறது.


அவரை மருத்துவராக்க காப்பகத்தில் உள்ள பலரின் உடலில் உள்ள ஸ்பேர் பார்ட்ஸ்கள் காணாமல் போய் உள்ளன. இன்னும் பலரின் ஸ்பேர் பார்ட்ஸ்ஸை திருட எனக் கண்ணில் அகப்படும் அனைவரையும் பிடித்துக் கொண்டு வந்து காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர்.


ஆயிரம் வேரைக் கண்டால் தான் அரை வைத்தியன் ஆக முடியும் என்ற பழமொழி மருவி ஆயிரம் பேர்ரைக் கொன்றால் தான் அரை வைத்தியன் என்று மாற்றிச் சொல்லப்படுவதை உண்மை என்று நம்பி பலரை கொன்று குவித்துள்ளனர்.


குட் டாக்டர். அண்டு குட் ஃபாதர்.


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  



 

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...