முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 49

அத்தியாயம்: 49


"என்ன! வடக்கும் தெற்கும் ஒன்னு சேந்துடுச்சி போலயே. எப்படி?. " எனக் கேட்டபடி, சிரித்துக் கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவரின் முன் வந்து நின்று, அவர்களை சந்தேகமாகப் பார்த்து கேட்டாள் ஹரிணி. இருவரும் ஒரு சேர அவளை பார்த்துப் புன்னகைத்தனரே தவிர ஏதும் பேசவில்லை.‌


" என்ன சிரிக்கிரீங்க. பதில் சொல்லுங்க. " என மிரட்டலாகக் கேட்க


"நீ வந்துட்டேல்ல. அதா சிரிக்கிறோம்‌… " என்ற ரிஷியை முறைத்தாள் ஹரிணி.‌


" டார்லிங் அவெ சும்மா விளையாட்டுக்குச் சொல்றான். அதுக்காக நீ அவன பார்வையாலேயே எரிச்சிடாத.‌ பாவம் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்துட்டு போட்டும். என்ன இருந்தாலும் உன்னோட முன்னாள் ஹஸ்பென்ட் இல்லையா. " கௌதம்.


"முன்னாளா!!. " ஹரிணி கேட்கும் முன் கௌதம் கத்தி விட்டான். அதான் ரிஷி அவனின் காலில் ஓங்கி மிதித்து விட்டான் அல்லவா.


" ஆ... ஆமா. முன்னாள் தா. நீயும் அவனும் சண்டயாச்சே. சண்ட போட்டா இம்மீடியட்டா கோர்ட்டு போய் டைவர்ஸ் வாங்கனும். நா பவதாட்ட சொல்லிட்டேன். சென்னைக்கி போனதும் அத்துவிட்டுட வேண்டியது தா. " என தரனிடமிருந்து சற்று விலகி நின்றே பேச, தரன் கௌதமின் சட்டையைப் பிடித்து இழுத்து தன் கையால் அவனின் கழுத்தை சுறுக்கி,


" உன்ன இப்படி பேசாதன்னு சொன்னேனா இல்லையா. "என்க.


" சொன்னிங்க ப்ரதர். ஆனா எனக்குத் தா அத கேக்கணும்னு தோனல. ஏன்னா உன்ன விட நல்ல பையனா பாத்து நா என்னோட டார்லிங்க்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு ஆசப்பட்டேன். பட்… அப்ப நடக்கல. இப்ப நடக்கணும்னா நீ உயிரோட இருக்க கூடாதுடா. " எனப் பேசிய படியே தரனின் பிடியிலிருந்து விலகி அவனின் வயிற்றில் குத்த, இருவரும் சின்னபிள்ளைகள் போல் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.


" ஸ்டாப்பிட்… போதும் நிப்பாட்டுங்க. " எனக் கத்தினாள் ஹரிணி.


" போதுமா. சரி போதும். உனக்கு எங்கையாச்சும் அடி பட்டிருக்கா டா. " கௌதம்


" இல்ல.‌.. உனக்கு. " ரிஷி.‌


"எனக்கு இல்ல. மருந்து மாத்திர செலவு மிச்சம். " கௌதம்.


" டேய். என்னடா நடக்குது இங்க. முறைச்சிட்டு திரிஞ்சீங்க. இப்ப சிரிச்சி சிரிச்சி பேசிக்கிறிங்க. எப்ப இருந்து இப்படி கட்டிக்கிடும், அக்கறையா பேசுற அளவுக்கும் ஒன்னு சேந்திங்க. " எனக் கேட்க,


" அதெல்லாம் அப்படி தா. கதை முடியும்போது பிரிஞ்சிருக்குற எல்லாத்தையும் ஒன்னு சேத்திடணும். இல்லன்னா அதுக்கும் ஒரு கத ரெடி பண்ணி பார்ட் 3 யா வெளியிட வேண்டிய வரலாம். அந்த வேல எதுக்குன்னு தா இந்த இடத்துலையே சேத்து வைக்கும் படலம் நடைபெறுகிறது. " கௌதம்…


" எல்லாம் சுபம் போடுறதுக்காகத் தா. " ரிஷி.


" டேய்... திருந்துங்கடா. ஆனா ஒரே நைட் இப்படி ஓவர் ஆல்லா மாறினா பயம்மா இருக்கு. "


"பயப்படாத டார்லிங். இரு மந்தையை விட்டுப் பிரிந்து சென்ற ஆடுகள், திரும்பி ஒன்னும் சேரும்போது அதால் பேச முடிவதில்லை. ஏன்னு சொல்லேன். " என்ற ‌கௌதமை ஹரிணி முறைக்க,


" ஏன்னா ஆடு பேசாது. பே…பே…ன்னு சத்தம் தா குடுக்கும். கரெக்ட்டா டா..." ரிஷி கரம் நீட்ட,


" செம்ம... " என அதில் அடித்தான் கௌதம்.


"ம்ச்… "


" டார்லிங் சின்ன வயசுல போட்ட சண்ட எல்லாம்‌ பெரிய ஆளாக வளந்ததுக்கு அப்றம் சரி ஆகிடும். " கௌதம்.


" இல்லன்னா சரி பண்ற வழி தெரிஞ்சிருக்கணும். " ரிஷி சொல்ல. ஹரிணிக்கு ஏதோ விளங்கியது.


" ஓ... கௌதம நீ கரெக்ட் பண்ணிட்டியா. புரியுது புரியுது. சொல்லு கௌதம், என்ன செஞ்சி கரெக்ட் பண்ணான் உன்ன?. ஏன்னா கால்ல விழுந்து கேட்டாலும் நா அவன மன்னிக்க மாட்டேன்னு டயலாக் பேசுனவன் நீ. எப்படி இவெ பண்ண எல்லாத்தையும் மறந்துட்டு அவெகிட்ட போய்ப் பேசுற, சிரிக்கிற. என்ன நடந்தது உங்களுக்குள்ள. "


‘எப்படி இவனுங்க ஒன்னு சேந்தானுங்க அப்படீங்கிற கேள்வி ஒரு வாரமா இருக்கு. ஊட்டியிலிருந்து இவளைத் துரத்தி விட்டபின். இவளுடன் சண்டை போட்டு விட்டுச் சென்ற ரிஷி எப்படி கௌதமுடன் பேசினான். இருவரின் ஈகோ எங்கே போனது.


எதுவோ செய்திருக்கிறான் தன் கணவன். அது இருவருக்குள்ளும் கோமாவில் கிடந்த நட்பைத் தட்டி எழுப்பி நடமாட விட்டுள்ளது. அதை ஃபோனில் கௌதமுடன் பேசும்போது இடையிடையே கேட்கும் ரிஷியின் கேலியும் கிண்டலயும் வைத்துத் தெரிந்து கொண்டவள் கௌதமிடம் கேட்க,


'உம்புருஷெ தா வந்து வந்து பேசுனான். நானும் போனா போகுதுன்னு பேசுறேன். பேசக் கூடாதா. நீ பேசக் கூடாதுன்னா இப்பவே சொல்லு வர்ற வழில ஆழமான நல்ல பள்ளத்தாக்கா பாத்து பக்குவமா தள்ளி விட்டுட்டு வந்துடுறேன். மேட்டர் க்ளோஸ். நீயும் பேச முடியாது. நானும் பேச முடியாது. என்ன சொல்ற. எத்தனாவது கொண்ட ஊசில இருந்து தள்ளி விட.' எனக் கேலி செய்வானே தவிர, இருவருக்குள்ளும் நடந்த சமாதான உடன்படிக்கை பற்றிச் சொல்லவில்லை.


அதிலிருந்து ரிஷி தரன் கௌதமிடம் மன்னிப்பு கேட்டுள்ளான் என்று தெரிந்தது. ஆனால் எப்படி? அவன் மன்னிப்பு கேட்கும் காட்சியைத் தான் பார்க்கவில்லையே. ‘அட்லீஸ்ட் வாயாலயாச்சும் என்ன நடந்ததுன்னு சொல்லுங்கடா நா ரிஷி கௌதம் கிட்ட மன்னிப்பு கேக்குற மாறிக் கற்பன பண்ணிக்கிறேன்’ என்பது போல் கேட்கிறாள்.


" ஏய் வாயக்கழுவு. கரெக்ட்டு கிரெக்டுன்னு. கரெக்ட் பண்ண நா என்ன பிகரா. லூசு மாறிப் பேசிட்டு. " என்ற கௌதமை ஹரிணி குறுகுறுவெனப் பார்த்தாள். அவளுக்குத் தெரியாதா கௌதமை பற்றி.


"பொய் சொல்லாத கௌதம். அவெ உனக்கு எதுவோ வாங்கி தந்திருக்கான். சின்னப் பிள்ளைய சாக்லேட் குடுத்து வாயடைக்க வைக்கிற மாறி. உனக்குப் பிடிச்சத செஞ்சி உங்க பழைய நட்ப பெயிண்ட்டு வேல பாத்து புதிப்பிச்சிருக்கான்.‌ என்னன்னு சொல்லு. "


"அட நம்பு டார்லிங். உன்னைய வீட்டுல விட்டுட்டு வந்தான்ல அன்னைக்கி அவனுக்குள்ள இருக்குற எட்டாம் அறிவு எட்டி பார்த்துடுச்சி. இத்தன நாள ஒருத்தனுக்கு நாம நல்லதே பண்ணலயே. அப்படிங்க நினப்பு அவன அடுப்புல தூக்கி வச்சமாறி சுட்டுடுச்சி. அதா வந்தான். மன்னிச்சிடு ஹரின்னு கால்ல விழப் போன அவன தடுத்து, என்னவிட நீ பெரியவே, வயசானவே. அதுனால கால்ல விழுந்தா இடுப்பு பிடிச்சிக்கும். வேண்டாம்னு சொல்லி கை குடுத்தேன். அதுமட்டுமில்லாம கால் விழுறது பழைய ஸ்டெயில். புது ஸ்டெயில்ல மன்னிப்பு கேட்டான். மறந்து மன்னிச்சிட்டேன். " எனத் தன் பெருந்தன்மையை சொல்ல,


" நீ பாக்கலைல‌ கிட். இப்ப பாக்கணும்னு உனக்குத் தோனுதுல்ல. " ரிஷி.


" எத பாக்கணும்." கௌதம்.


" அதா மன்னிப்பு கேக்குறத. " ரிஷி சொல்ல ஹரிணி தலையசைத்தாள் ஆம் என.


" இதோ… இப்பவே உம்முன்னாடி கேக்குறேன். " எனக் கௌதமின் அருகில் செல்ல,


" இதா பாரு. ஒரு தப்புக்கு ஒருக்க தா மன்னிக்க முடியும். திரும்பத் திரும்ப மன்னிக்க நா என்ன முட்டாப்பயளா. நில்லு டா அங்க. " என நகர்ந்து சென்றான் அவன்.


" ஹரி, உன்னோட வாழ்க்கை ல நா விளக்கேத்தி வைக்காம விட்டுட்டேன். ஏ சின்னதா தீக்குச்சி கூடப் பொருத்தி போடல. அதுக்காக உங்கிட்ட நா மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஹரி… வா ‌ஹரி. எங்க போற. " என அவனை விரட்டிச் செல்ல,


"நா உன்ன மன்னிக்க விருப்பல. போ அங்கிட்டு”


' மறுபடியும் இவனுங்க ஓடிப் பிடிச்சி விளையாட ஆரம்பிட்டானுங்க. ஹையோ! என்னடா உங்கள்ட்ட அப்படி கேட்டுட்டேன்‌. கௌதம் கிட்ட எப்படி மன்னிப்பு கேட்டன்னு தான கேட்டேன். அதுக்கு போய். ச்ச. ' என நொந்து கொண்டாள்‌ ஹரிணி.‌


முதலில் ஹரிணியின் கையில் பிடிபட்டவன் கௌதம் தான்.‌ அவனை உளுக்கு மிரட்டிக் கேக்க.…


" இந்த மொற உனக்கு நா ஃப்ளாஷ் பேக்க சொல்றேன். " ரிஷி முன்வந்தான்.


" வேணாம் டா அவளுக்குத் தெரிஞ்சா என்ன வச்சி ஓட்டுவா. சொல்லாதா. " எனக் கௌதம் கத்த,


" எனக்கும் உன்னோட பேச்ச காது குடுத்து கேக்கணும்னு தா ஆச. ஆனா நடந்தத வைஃப் கிட்ட இருந்து மறைக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணி குடுத்துட்டேன்.‌ இனி சத்தியவான நடந்துக்கணும்ல. " என்றவன் என்ன செய்து இத்தனை ஆண்டுகளாக வளர்த்து வந்த கோபத்தை இல்லாமல் செய்தான் என்று சொல்லத் தொடங்கினான்.


பார்கவி மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்த போதே, கௌதமிற்கு ரிஷியின் மீதிருந்த கோபம் முற்றுலும் மறைந்திருந்தது. ஆனாலும் தங்களுக்குள் நடந்த சண்டைகளையும் வாக்கு வாதங்களையும் மறந்து பழய படி நட்பாய் பேசச் சிறு தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கத்தை ரிஷி போக்கினான்.


‘வேற ஒன்னமில்லைங்க. கௌதம் ஆசப்பட்டு வாங்குனானே ஒரு வீடியோ கேம். அத கூட ரிஷி கலியபெருமாள் கையால போட்டு உடைக்க வைச்சானே. அந்த வீடியோ கேம் தா. அதுன்னா அதே இது இல்ல. அது மாறி ஒன்னு. புது மாடல். கண்ணுல கண்ணாடி மாறி ஒரு பெரிய பாக்ஸ் வச்சி வீடியோ கேம் உள்ளையே போய் விளையாடுற மாறி ஃபீல் குடுக்குற நவீன மாடல் வீடியோ கேம் ஒன்ன வாங்கிட்டு வந்து…’


"ஸாரி ஹரி.‌ நீ இழந்தது அதிகம். அதுல பெரிய பெரிய இழப்ப என்னால திருப்பித் தர முடியாது. ஆனா சின்ன சின்ன விசயங்கள உங்கிட்ட கொண்டு வந்து சேக்க முடியும். ஒரு ஃப்ரண்டா. " எனப் பிரிக்கப்படாத ஒரு கேம் பாக்ஸை தர, கௌதம் கவுத்து விட்டான்.


" ச்சீ. நீ என்ன சின்னப் பையன்னா.‌ ஒரு வீடியோ கேம்க்கு ஆசப்பட்டு இவெனோட ஃப்ரெண்ட் ஷிப் ரென்யூ பண்ணிருக்க. உனக்கு அந்த வீடியோ கேம் சைசுக்கு கூட மூள கிடையாதா. " என்றாள் ஹரிணி.


‘ஒரு வீடியோ கேம்னால ஒன்னு சேந்துட்டானுங்களா’ என்றிருந்தது ஹரிணிக்கு.


"அத அப்படி சொல்லக் கூடாது டார்லிங். "


"ஏன்னா அவனுக்குக் கடுக விடச் சின்ன சைஸ்ல தா மூள இருக்கு. " ரிஷி.


"ம்ச்… வாய் மூடுடா. டார்லிங் இப்ப ஸ்கூல் படிக்கிறப்ப யார் கூடயாச்சும் நாம சண்ட போட்டா, எல்லாத்தையும் மறந்து லீவ் முடிஞ்சி நம்மகிட்ட வந்து பேசுறப்போ, நாமலும் கொஞ்சம் இறங்கி வரணும்ல. வீம்பு பிடிக்காம இருந்தாத்தா ஔவையார் சொன்ன மாறி வாழ முடியும். "


" என்ன சொன்னாங்க. அதுவும் உங்கிட்ட மட்டும். " ஹரிணி.


" அதான் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. இத எனக்கு மட்டும் இல்ல.‌ ஊருக்கே சொல்லிருக்காங்க. கமல்ஹாசன் கூட அன்பே சிவம்னு சொல்லிருப்பாரு.‌ அதுமாறி ப்ரதர் காட்டுன அன்ப ஏத்துக்கிடேன். அவ்ளோ தான். " கௌதம்.


" Its a part of love. " ரிஷி, உதடுகளில் ஒரு கள்ளப் புன்னகையுடன் சொல்ல அதைக் கவனியாத கௌதம்.


" ம்… லவ்வு தா. "


" லவ்வா. " என விழி விரிய கேட்டாள் ஹரிணி. ஏனெனில் ரிஷியின் சிரிப்பு அப்படி.


" ம்... லவ் தா. சொல்லு ஹரி எப்படி நம்ம லவ்வ சேர் பண்ணிக்கிட்டோம்னு. " ரிஷி சொல்ல.


" டேய்… டேய். நீ எதோ கண்றாவியா நினைச்சிட்டு பேசுற மாறித் தெரியுது. " 


" நீ தான சொன்ன லவ்வுன்னு.‌ எனக்கு லைட்டா சந்தேகம் இருந்தது. இப்ப கன்பார்ம் ஆகிடும் போலயே. " ஹரிணி.


" ஏய், இந்த லவ்வுக்கு பாசம், அன்பு, நேசம், நட்பு அப்றம்… " கௌதம் தடுமாற,


" பிரியம். காதல். பற்று. " என எடுத்துக் கொடுக்க, ரிஷியை அடிக்கப் பாய்ந்தான் கௌதம்.


" ஒரு‌‌நிமிசம். அவெ உனக்கு கிஃப்ட் குடுத்தான். நீ மன்னிச்சிட்ட இதுல நா உன்ன ஓட்டுறதுக்கு என்ன இருக்கு.‌" என இன்னும் எதுவோ நடத்திருக்கிறது‌ என்று சந்தேகமாகக் கௌதமை கேட்க,


" ஒன்னுமில்ல டார்லிங். அவெ ஸாரி கேட்டான். நா பெரிய மனசோட மன்னிச்சிட்டேன். அவ்ளோ தா விட்டுடுடேன். " கௌதம்.


" அதுவும் புது ஸ்டெயில்ல மன்னிப்பு கேட்ட பிறக்கும் எப்படி ஏத்துக்காம இருப்பான். " ரிஷி. இன்னும் அவன் சிரிப்பை மாற்றவில்லை.


"அது என்ன ஸ்டெயில். அதுவும் நியூ ஸ்டெயில். " ஹரிணி விடாமல்.


" கை எடுத்துக் கும்பிட்டான். போதுமா. " என்றவனை குறுகுறுவெனப் பார்க்க,


"ஐய்யோ போமாட்டுங்கிறாளே. ஹாங்… ஒன்னுமில்ல டார்லிங். இது தா சொன்னேன். கேம்காக இவெங்கூட சேந்தேன்னு தெரிஞ்சா நீ என்ன கழுவி கழுவி ஊத்துல்ல. அத தான. " என்றவனை நம்பாது பார்க்க,


" உண்மைய சொல்லு கௌதம். " என மிரட்டினாள்.


" ம்... தம்பி பம்பாய் கார தம்பில்ல. அதா அவரு ஊரு பாஷைல மன்னிப்பு கேக்க சொன்னாரு. கேட்டேன். உடனே மன்னிச்சிட்டாருனா பாரேன். " எனக் கௌதமின் தோளில் கை போட்டுச் சொல்ல, கௌதம் மீண்டும் அவனை அடிக்கப் பாய்ந்தான்.


" பாம்பே ஸ்டெயில்னா. " ஹரிணி.


" பாட்ஷா ஸ்டெயில்ல. ரஜினி ஸார சேர்ல உக்கார வச்சி நன்றி சொல்வாங்கள்ள. " எனக் கௌதமின் பிடியிலிருந்து கத்த, ஹரிணிக்கு புரிந்தது.


பாட்ஷா படத்தில் ரஜினியின் கரத்தில் முத்தமிட்டு அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வார்களே அதே‌ போல் கௌதமை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள ரிஷி செய்துள்ளான் என்று. சும்மாவே ஹரிணி ரிஷி விசயத்தில் கௌதமை கேலி செய்வாள். இப்போது முத்தம் கொடுத்தது தெரிந்தால். அவ்வளவு தான் எனக் கௌதம் பயப்பட, அத்தனையும், உண்மை விளம்பியாகத் தற்போது அவதாரம் எடுத்துள்ள ரிஷி ஒப்பித்து விட்டான்.‌


"ஓ… அவனுங்களா நீங்க. ஹாஹ்ஹா. " எனக் கேலிக் குரலில் சிரித்தாள்.


"ஏய், அப்படி பேசாத. கேக்கவே கர்ண கொடூரமா இருக்கு. " கௌதம்.


"அப்பச் செய்ய சொல்லிக் கைய நீட்டுனியே. அப்ப எப்படி இருந்துச்சி. " ரிஷி கேலி செய்தான்.


"உன்னால தான்டா எல்லாமே.‌ உன்ன நா மன்னிச்சிருக்கவே கூடாது. " என அடிக்க, ரிஷி ஓட என துரத்திப் பிடித்து விளையாடிய இருவரையும் பார்க்கும்போது விழியோரம் சிறு கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தது. எத்தனை நாள் விருப்பம் அது. இன்று நிறைவேறி விட்டது. மனம் நிறைந்து போனது ஹரிணிக்கு. விழி அசைக்காது இருவரையும் சில நிமிடங்கள் தன் கண்களில் நிறைத்துக் கொண்டாள். பின்,


" ஹேய். உங்க ரெண்டு பேருக்கும் பார்கவி இதயம் யாருக்கு பொருத்துனாங்கன்னு தெரியும் தான. ஏ அந்த ஆள போய்ப் பாக்கல. அட்லீஸ்ட் யாருகிட்ட அந்த இதயம் இருக்குன்னு சொல்லலாம்ல. வீட்டுல இருக்குறவங்களும் தெரிஞ்சிக்கிவாங்க. ஏ சொல்ல மாட்டேங்கிறிங்க. " என்றாள்.


கௌதம் அவளின் வலது தோளில் கரம் வைக்க, ரிஷி அவளின் இடையில் அழுத்தியிருந்தான் அவனின் கரத்தை,


"எங்களுக்கு அது இப்ப எங்க இருக்குன்னு தெரியாது. " கௌதம்


" தெரிஞ்சிக்கவும் நாங்க விரும்பல. " ரிஷி


" ஏன்னா. அதுக்கு காரணம் இருக்கு. " கௌதம்.‌


" மொத்தம் ரெண்டு காரணம் இருக்கு கிட். " ரிஷி


" நாங்க அந்த விசயத்த தெரிஞ்சிக்க ஆர்வம் காட்டாததுக்கு. " கௌதம்.


" ஃபஸ்ட் ரீசன். இவனுக்காத்தா வாழ வேண்டிய எங்களோட சிஸ்டர அடிச்சி அநியாயமா கொல்லப்பாட்டான்னு. அவன பாக்குற ஒவ்வொரு முறையும் நியாபகம் வரும். வந்தா. "


" நிச்சயம் சும்மா இருக்க முடியாது. ரெண்டாவது ரீசன் அந்த இதயத்த வச்சிருக்குறவே நல்லவனாவும் இருக்கலாம் இல்ல கெட்டவனாவும் இருக்கலாம். நல்லவான இருந்துட்டா எந்தப் பிரச்சனையும் இல்ல. எல்லாம் போய்ப் பேசி பழகி அந்த இதயத்துக்குச் சொந்தக்காரனையும் நம்ம குடும்பத்துல ஏத்துக்கலாம். ஒருவள... கெட்டவனா இருந்தா. "


" பாப்புக்கு சுத்தமான மனசு. யாருக்கும் கெட்டது நடக்க கூடாதுன்னு நினைக்கிற அந்த இதயத்த வச்சிருக்குறவே தப்பு பண்றத பாத்தா. கோபம் வரும்."


" கோபம், கடன் வாங்குன இதயத்த வச்சிட்டு இந்த ஆட்டம் ஆடுறீயேடான்னு வெறிய ஏத்தும். "


" வெறி கொல பண்ண வைக்கும். எதுக்கு. நாம ஒருத்தருக்கு தானமா எதையாது குடுத்துட்டா. அது அவ்வளவு தா. அத பத்தி நினைக்கக் கூடாது. "


" அது மேல உரிம கொண்டாட கூடாது. நம்மல விட்டுப் போனது போனது தா.‌ திருவாளர் ஹிட்லருக்கே தெரியாது. யாருகிட்ட தா பொண்ணோட ஹாட்டு இருக்குன்னு. ஏ அது இன்னும் உயிரோட இருக்குற ஒரு மனுஷெ உடம்புல இருக்காக இல்லையாங்கிற டீட்டெயில் கூடத் தெரியாது. "


" எல்லா விசயத்தையும் எல்லாரும் தெரிஞ்சிக்க முடியாது கிட். சிலத புரிஞ்சிக்கிட்டாலும்,பலதுல நம்மோட தலையீடு இருக்க கூடாது கிட். நிம்மதியான வாழ்க்கை வேணும்னா. " எனப் புன்னகைக்க, அதை ஆமோதித்தான் கௌதம்.


" சரி எனக்கும் சிலது மட்டும் போதும். அந்தச் சந்திரபோஸ்ஸ என்ன பண்ணீங்க நீங்க?. கொல தா பண்ணிருப்பிங்க. எப்படின்னு சொன்னா நல்லா இருக்கும்?. ம். சொல்லு பாவா. நீ தா சத்தியவான் ஆச்சே. ம். சொல்லு கௌதம். " என இருவரையும் மாறி மாறிக் கேட்க, இருவரும் அவள்மீது இருந்த கரத்தை விலக்கிக் கொண்டு நடக்க தொடங்கினர்.


" பாவா, இப்ப தா சத்தியவான். என்னோட வைஃப் கிட்ட இருந்து எதையும் மறைக்க மாட்டேன்னு சொன்ன. " எனக் கத்த,


"நாந்தா மத்த ரெண்டு பேர்கிட்டையும் கேட்டுக்கோன்னு சொன்னேனே. " எனக் கௌதமை கோர்த்து விட,


"அது...‌‌ அது... ஹாங். மூணு பேரும் சேந்து தான பண்ணோம். அப்ப மூணு பேரும் சேந்து தா சொல்லணும். நாங்க இப்ப ரெண்டு பேர் தா இருக்கோம். எப்ப மூணு பேரும் ஒன்னா சேருறோமோ அப்பச் சொல்றோம். ம்... ஓகே தான. " கௌதம் சொல்ல, ஹரிணி தலையசைக்கும்‌ முன்,


" ஓகே ஓகே தா. மூணு பேரும் ஒன்னா சேந்தா பாக்கலாம். " எனக் கௌதமை இழுத்துச் சென்றான் ரிஷி.


" சேர வைக்கிறேன். " எனக் கங்கணம் கட்டிக் கொண்டாள் ஹரிணி.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 48


விழி 50


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...