முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 55


 

அத்தியாயம்: 55


உண்மை இருக்கும் இடத்தில்..

பிடிவாதம் இருக்கும்...


நேர்மை இருக்கும் இடத்தில்...

நன்நடத்தை இருக்கும்..


அதீதஅன்பு இருக்கும் இடத்தில்..

கோபம் இருக்கும்..


எத்தனை முறை முயன்றும் அந்த காகிதத்தில் இருப்பதை ரிஷியால் படிக்க முடியவில்லை.. தமிழில் தான் எழுதப் பட்டிருந்தது.. இதே போன்று ஒரு படிக்க முடியாத கடிதம் ஒருமுறை தன் சென்னை வீட்டிற்கு வந்தது அவனின் நினைவுக்கு வந்தது.. 


விரைந்து தன் தந்தையின் அறைக்கு சென்றான்.. தந்தையின் நினைவுகளாய் இருக்கும் எந்த பொருளையும் அவன் தூக்கி எரியவில்லை.. மரப்பெட்டி ஒன்றில் கடிதங்கள் சில இருந்தன.. அதில் ஒன்றை எடுத்தவன் தன் கையில் உள்ள காகிதத்தையும் கடிதத்தையும் ஒப்பிட்டு பார்த்தான்.. வாசிக்க இயலவில்லை என்ற போதிலும் கையெழுத்து ஒன்று போல் இருந்தது.. 


யாருடையதாக இருக்கும் என ரிஷி குழம்பிப் போனவன்..  


" சுதா இத நீ எங்கருந்து எடுத்த.. யாரோடது இது.. " என வினவ..


" சின்னத்த  ரூம்ல இருந்து எடுத்தேன் அண்ணா.. அசோக் அத்தானோட நோட்‌ இது.. ". 


'அசோக்கா..  எப்படி அப்பாவ அவனுக்கு தெரியும்.. ' 


" இந்து.. இந்து.. " தரன்.. 


" என்ன அத்தான்.. " இந்து..


" என்ன கையொழுத்துடி இது.. உங்கண்ணனுக்கு அழகா எழுத சொல்லி குடுக்கலையா.. ஹீம் காராச் சேவ காடிச்சு கொதறுன மாறி இருக்கு.. " கௌதம்..


அவனை முறைத்தவள் " எங்க தமிழல ரெண்டு வார்த்த எழுதுங்க பாப்போம்.. அட்லீஸ்ட் உங்க பேரயாது தமிழல எழுதுங்க‌.. " என்க..கௌதம் திருதிருவென முழித்தான்.. 


"வந்துட்டாரு.. பெருசா எங்கண்ணன கொற சொல்ல.." பதிலுக்கு கௌதம் எதோ சொல்ல வருவதற்குள்.. 


" இந்து இத உன்னால படிக்க முடியுமா.. " என காகிதத்தை நீட்டினான்.. 


" ம்.. குடுங்கத்தான்.. " என வாசித்தும் காட்டினாள்..


" ஹேய்.. எப்படி அந்த காரா சேவ வாசிச்ச.. " பிரகாஷ் சந்தேகமாக..


" இது எங்க அப்பா எங்களுக்கு சொல்லிக் குடுத்தது.. ஆர்மில இருக்கும் போது அவரு எங்களுக்குன்னு எழுதுற லெட்டர வேற யாரும் படிச்சிட கூடாதுன்னு.. இப்படி கன்ஃயூஸ் பண்ணி எழுதியிருப்பாரு.. எங்களுக்கும் சொல்லித்தந்தாரு அப்பா.. "  இந்து.. 


தன் கையில் வைத்திருந்த கடிதத்தை இந்துவிடம் நீட்டி படிக்கச் சொன்னான்.. 


" பிரியமுள்ள சகிக்கு.. நீ கூறிய அனைத்து வார்த்தையும் உண்மையே.. நான் உன்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. ஆனாலும் என்னால் உன்னை மறக்க இயலாது.. எனவே நா வரும் ஞாயிறன்று உன் தந்தையை பார்த்து பேச உள்ளேன்.. அவரின் சம்மதம் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.. ஞாயிறு சந்திப்போம்.. " என்று எழுதியிருந்தது.. 


இந்துவின் முகத்தில் குழப்ப ரேகைகளை கண்டு கௌதம்.. " என்னாச்சு மதி.. " என்க..


" இது அண்ணனோட கையொழுத்து.. அண்ணா தா இந்த லெட்டர எழுதியிருக்கனும்.. ஆனா யாருக்கு.. சகி யாரு.. " என்றாள் குழப்பமாக..


" சகி யாருன்னு இப்ப தெரிஞ்சிடும்.. " என ஹரிணியின் அறைக்கு சென்றான் தரன்.. நடையில் இருந்த வேகம் அவனின் கோபத்தின் அளவை சொல்லியது.. பதறி போன ஆண்கள் அவனை பின் தொடர்ந்தனர்.. 


அறையில் குழந்தைகளுக்கு கதை சொல்லி உணவு ஊட்டி கொண்டிருந்தனர் நங்கையும் ஹரிணியும்.. 


உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் உடலில் மயிர் கூச்சம் ஏற்பட்டது.. அவனின் சாம்பல் நிற விழிகள் இப்போது  ஹரிணியை பயம் கொள்ள செய்தது.. 


" முடிச்சுட்டு கீழ வா.. " என அழுத்தமாக சொல்லி சென்றான்.. 


நங்கையின் முகத்தை பார்த்தவள் 'எதற்காக இருக்கும்..' என குழப்பத்துடனே கீழே சென்றாள்.. 


சுற்றி சோஃபா செட் இருந்தும் அவனின் ஃபேவரேட் ஊஞ்சலில் அமர்ந்தான் கோபமாக.. சம்பத் மட்டும் பதட்டமாக இருந்தான்..


" மச்சான் என்னாச்சு.. மூஞ்சில மரண பயம் தெரியுதே.. ஏன்.. " கௌதம் . 


" ம்ச்.. ராணிம்மா எல்லாத்தையும் எல்லார்கிட்டையும் ஈசியா சொல்லிட மாட்டாங்க.. இவன மாறியே அழுத்தமானவங்க.. ரிஷிய பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அவனோட பிடிவாதத்த பத்தியும் தெரியும்.. " சம்பத் கவலையுடன்..


" ஐய்யையோ ஆமால்ல.. இவா வாயையே திறக்க மாட்டா.. திறக்க வைக்காம அவென் விட மாட்டான்.. இன்னைக்கு என்னமோ நடக்க போத.. " என்றவன் முகத்திலும் கலவரம் தெரிந்தது..


"அப்ப நாம இன்னைக்கு ஒரு அஃக்சென் ப்ளாக் பாக்கலாம்.. நா போய் பாப் கான் வாங்கிட்டு வாரேன்.. " பிரகாஷ் . 


" கொஞ்சம் பொறு.. உங்கண்ணனும் அண்ணியும் சேந்து உனக்கு பொரிச்சு தருவாங்க.. " கோரஸ்ஸாக.. 


மெல்லிய கொழுசொலி மங்கையின் வருகையை சொல்லியது.. ஊஞ்சலில் ஆடிக்க கொண்டிருந்தவனின் விழிகள் தன் மேல் படிவதை உணர்ந்தவள் அவனுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தவள்.. 


" .... " 


சில நொடிகள் இருவரும் பேசவில்லை.. கோபத்தில் பேசப்படும் வார்த்தை கல்வெட்டை போன்றது அதை அழிக்க இயலாது.. இதற்கு முன் பட்டது போதாதா.. எனவே இருவரும் பொறுமையாகவே கையாண்டனர்.. வார்த்தையை விடுவதில்.. 


" இத படி.. " என கடித்தை நீட்டினான் தரன்.. 


வாங்கியவள் அதை சுலபமாக படிக்க இந்து அதிர்ந்து போனாள்.. 


" நீ ஏன் இவ்வளோ சாக் குடுக்குற.. " கௌதம் . 


" இது எனக்கும் அண்ணாக்கு மட்டும் தா தெரியும்.. அப்ப அண்ணா லெட்டர்ல எழுதியிருக்குற சகி ஒருவேல ஹரிணியோ.. "


" இருக்காது.. உன்னோட கற்பனைய நிப்பாட்டு.. என்னோட கெஸ் சரின்னா சகி நிச்சயமா வைசு வா தா இருக்கும்.. " கௌதம்.. 


"எப்படி வைசுவும் அசோக்கும்.. " சம்பத்.. 


" உங்க கேள்விக்கு உங்க ராணிம்மா தா பதில் சொல்லனும்.. " கௌதம் .


கடிதத்தை படித்துக் கொண்டிருந்தவள் திடீரென நிறுத்தியவள் யாருடையது இது என அறிந்து தரனுக்கு இதை எப்படி விளக்குவது என தெரியாமல் முழித்தாள்..


 'மூர்த்தி அங்கிள் ஆக்ஸிடென்ட்கே நான் தான் காரணம்னு வீட்ட விட்டு தள்ளி வச்சாங்க.. இப்போது இதுக்கு என்ன சொல்லப் போகிறார்களோ.. ' ஹரிணியின் மைண்ட் வாய்ஸ்..


அகிலனின் அழு குரல் கேட்க வேகமாக எழுந்தவள் அதே வேகத்தில் சோஃபாவில் விழுந்தாள்.. ரிஷியால்.. 


" வைசு எங்க.."  எதிரில் இருப்பவரை அச்சுறுத்தும் குரலில் கேட்டான் அவன்..


அவன் அசோக்கிற்கும் வைசுவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பான் என நினைத்து அதற்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தவள் தரனின் கேள்வியில் அதிர்ந்து தான் போனாள்.. ஏனெனில் அவன் பிரச்சினையின் ஆதி மூலத்தை ஆராய்பவன்.. 


" அ.. து.. " என இழுக்க அவளை கோபமாக நெருங்கினான்..


அடி விழும் என நினைத்தவள் கண்களை மூட அடி விழவில்லை.. கண்ணை மெல்ல திறந்தவள் கண்டது கௌதம் மற்றும் சம்பத் இருவரின் பிடியையும் அசால்ட்டாக விலகி திமிறக் கொண்டிருக்கும் ரிஷி தரனை.. 


" எட்டு வருஷம் டா.. ஒன்னில்ல ரெண்டில்ல முழுசா எட்டு வருஷம்.. எத்த நாள் தூங்கல தெரியுமா.. எந்தங்கச்சிய காணுங்கிற நெனப்பு என்ன தூங்க விடல டா‌.. உயிரோட இருக்காளா இல்லையான்னு தெரியாம.. வயசு பெண்ணு எந்த நிலமைல இருக்காளோன்னு.. தெருத் தெருவாக சுத்தியிருக்கேன்டா.. இவளுக்கு வைசு எங்க இருக்கான்னு தெரியும்.. இருந்தும் சொல்லல.. எனக்கு தெரிஞ்சாகனும்‌.. வைசு எங்க..  கேட்டு சொல்லுடா அவன்ட்ட.. " என்றவனை அடக்க முடியாமல் திணறினர் இருவரும்.. 


தன்னை சுற்றி பேசிக்கொண்டு இருந்தவர்களின் பேச்சு சத்தம் எதுவும் அவளின் காதுகளை சென்றடையவில்லை.. கிருஷ்ணம்மாள் அழுது கொண்டே பாடிய வில்லு பாட்டும், நாச்சியம்மாளின் புலம்பலும் கேட்க வில்லை..

 

சில நொடிகள் உள்ளங்கையில் முகம் புதைத்தவள் பின் எழுந்து சென்று LED TV ஐ ஆன் செய்தவள் தன் செல் ஃபோனில் யாருக்கோ போன் செய்தாள்.. ஃபோனை டீவியுடன்  கனெக்ட் செய்தவள் பேசுபவரின் உருவம் வீட்டினருக்கு தெரியும் படியாகவும்.. பேசுபவர்களுக்கு தான்  மட்டும் தெரியும் படியாகவும் அமர்ந்து கொண்டாள்.. 




 

Calling............ 





வெகு நேரத்திற்கு பிறகு திரையில் உருவம் தெரிந்தது.. அது வைசு.. வைசாலி.. ரிஷி தர்மனின் தங்கை..


சந்தோஷம் படுவதா.. இல்லை அதிர்ச்சி அடைவதா என தெரியவில்லை வீட்டினருக்கு.. தன் பாச மலரை உயிருடன் கண்ட பரவசத்தில் இருந்தான் தரன்..


"ஹாய் ஹரிணி.. வாட் எ சர்ப்ரைஸ்.. த்ரீ மன்த் ஆச்சா நாம பேசி.. எப்படி இருக்க..? அகிலன் நல்லா இருக்கானா..? ஆதி..? என்னடி நா பேசிட்டே இருக்கேன் பதிலே சொல்ல மாட்டேங்கிற.. " வைசு..


" எனக்கு பேச கேப் குடுத்தா தான கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.. ஒன்னுக்கு பதில் சொல்றதுக்குள்ள அடுத்த கேள்வி.. இதுல நா எந்த கேள்விக்கு எந்த பதில் சொல்ல.. " ஹரிணி..


"கேள்வி கேள்வின்னு மூனு முற சொல்லிட்ட..  சோ.. நீ அவுட்.. " வைசு  சொல்லி சிரிக்க..


"ஹே.. அவுட்.. அவுட்.. ஹரிணி அவுட்.  மம்மி தா வின்னரு.... " குதித்தான் நந்து.. வைசுவின் நான்கு வயது மகன்.. 


" ஆமாண்டா இங்க ஒலிம்பிக் போட்டி நடக்குது.. அதுல உன்னோட மம்மி கோல்டு செயிச்சுட்டா..  குதிக்குறத நிப்பாட்டு கீழவிழுந்திடப் போற.. " ஹரிணி  . 


" நா விழ மாட்டேன் பம்கின்.. எனக்கு ஜிம்னாஸ்டிக் சொல்லி தாராங்க தெரியுமா.. நா பிக் பாய் சைல்டு மாறி பிகேவ் பண்ணா திங்க.. ஆதி பாப்பாவ காட்டுங்க நா பாக்கனும்.. " நந்து.


" அதென்ன ஆதி ய மட்டும் பாக்கனும்.. " ஹரிணி..


"ஆதி தா க்யூட்டா.... அழகா ஸ்மைல் பண்ணுவா.. ப்யூட்டி புள் டால்.. வேர் இஸ் ஷீ.. " நந்து..


" அகிலும் நல்லாத்தா ஸ்மைல் பண்ணுவான்.. "


" ஐய்யோ நீங்க சொல்லுற பதிலுக்கு என்னோட கேள்விய மாத்திக்க முடியாது.. என்னோட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. " நந்து..


" ஹேய்.. என்ன வைசு.. இவென் இப்படி கராரா பேசுறான்.. " ஹரிணி..


" எனக்கும் தெரியலடி.. சில நேரம் இப்படித்தா பேசுறான்.. அவன்ட்ட பேசுறதே கஷ்டமா இருக்கு.. யார்ட்ட இருந்து கத்துக்கிட்டான்னு தா தெரியல.. " வைசு. 


" எல்லாம்‌‌ பரம்பர பழக்கம்.. இரத்தத்துலையே ஊறி இருக்கும்.. அதா இப்படி பேசுறான்.. " ஹரிணி..


" நீங்க இன்னும் எனக்கு பதில் சொல்லவே இல்ல.. " நந்து..


" ஓக்கேங்க ஆஃபிஸர்.. உன்னோட டால் தூங்குது.. உங்க நைனா எங்கங்க ஆஃபிசர்.. " என்றாள் அவனுக்கு பிடித்த சின்சானின் குரலில்..


" அதோ எங்க அம்மாட்ட அடி வாங்க முடியாம அதுக்குள்ள போய் ஒழிஞ்சுக்கிட்டாரு.. வாங்க போய் தட்டுவோம்.. " நந்து பாத் ரூமை காட்டினான்..


" நந்து ‌தட்டாத அப்பா வரட்டும்.. இங்க தா ஃபோன.. " என போஃனை பறித்தாள்.. இரு தோழிகளும் வெகு நேரம் பேசிக் கொண்டு இருக்க.. 


பாத்ரூம் கதவு திறக்க பட அதிலிருந்து நைட் டிரெஸ்ஸுடன் வந்தான் அவன்.. 


அசோக்.. அசோக் குமார்.. கிருஷ்ணம்மாளின் ஒரே தவப்புதல்வன்..


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  

         

அன்பே 56


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...