அத்தியாயம்: 56
ஆண் அழகாகிறான்..
தனது தங்கைக்கு..
தான் தந்தையென்று..
உணரும் போது..
" எப்படிம்மா இருக்க.. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்கலா.. " அசோக் தலையை துவட்டிய படி வைசுவின் அருகில் அமர்ந்தான்..
" மேடம்க்கு என்ன.. நல்லாத்தா இருக்காங்க.. உங்கள.. பாத்தா.. தா நல்லா.. இருக்குற மாறியே.. தெரியலையே.." என்று பேசிய படியே ஹரிணியின் தோலை உரசிய கொண்டு அமர்ந்தான் ரிஷி தரன்..
ஹரிணி நகர்ந்திடாத படி அவளின் தோலை தன் கை கொண்டு அழுந்தி பிடித்திருந்தான்.. அவனை விட்டு விலகவும் முடியாமல்.. அவனின் பிடியை விலக்கவும் முடியாமல் உண்டான தவிப்பை பிறருக்கு காட்டாமல் நார்மலாக இருக்க அவள் பெரிதும் சிரமப்பட்டாள்..
" எப்படிண்ணா கரெக்ட்டா சொன்னிங்க.. அவருக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்ல.." வைசு..
" பார்த்தாலே தெரியுதும்மா.. கை காலெல்லாம் நடுங்குற மாறி இருக்கு.. மச்சான் எதையாது பாத்து பயந்துட்டிங்களோ.. " தரன் நக்கலாக கேட்டாலும் தன்னை அடையாளம் தெரியாமல் பேசிய தன் தங்கை கண்டு உள்ளுக்குள் அதிர்ந்து தான் போனான்.. அனாலும் சாதாரணமாக பேசினான்..
"இல்லண்ணா லைட்டா ஃபீவர்.. நீங்க தா ஹரிணி ஹஸ்பெண்டா.. உங்களுக்கு கல்யாணம் ஆகி இத்தன வர்ஷம் ஆச்சு ஒருக்க கூட இன்ரோ குடுக்கல உங்க வைஃப்.. இவால்லாம் ஒரு ஃப்ரெண்ட்.. இவா கூட இத்தன நாளா குடும்பம் நடத்துனதுக்கு உங்களுக்கு நா டெக்ஸ்சாஸ்ல இடம் பாத்து வச்சிருக்கேன்.. சீக்கிரத்துல சிலை வச்சுடுறேன்.. காசு கூட சேக்க ஆரம்பிச்சுட்டேண்ணா.." என சொல்லி தன் கன்னங்கள் விரிய சிரித்தாள் வைசு..
தங்கையின் சிரிப்பை ரசித்தவன் "நீயாச்சும் இடம் மட்டும் தா பாத்து வச்சிருக்க... நா இங்க முடிவே பண்ணிட்டேன்.. மச்சான் ஊருக்கு வந்தார்னா.. செதுக்கிட வேண்டியது தா. என்ன மச்சான்.. செதுக்கீடுவோம்மா.. சிலைய.. " என்ற போது அசோக் பயந்து தான் போனான்..
" ஹா... எங்க இந்தியாவுக்கா.. இவரு என்ன கூட்டீட்டு வரமாட்டாரேண்ணா.. " என்றாள் கவலையாக..
"எங்க வீட்டுல நெக்ஸ்ட் வீக் ஒரு ஃபங்ஷன்.. சுமங்கலி பூஜ பண்ணப் போறதா எங்க அப்பத்தா சொன்னாங்க.. நீங்க வந்தா அவங்க சந்தோஷப்படுவாங்க.. " தரன்..
" ஆச தாண்ணா.. ஆனா.. " என தயங்கியபடி கணவனை பார்த்தாள்.. அவனோ ஆடு திருடி மாட்டிய கள்வன் போல் முழித்தான்..
" உன்னோட பாஸ்போர்ட்டையும் மச்சானோட பாஸ்போர்ட்டையும் வாட்ஸ் அப் பண்ணும் மா.. நா உனக்கு டிக்கெட் அனுப்புறேன்.. மச்சானுக்கு ஓகே தான்.. வர்றீங்கள்ல.. " என கடைசி வார்த்தைகளை அழுத்தமாக சொன்னான்.. அதில் நீ வந்தே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது..
" உங்கண்ணனுக்கு இன்னைல இருந்து ஏழரைச்சனி ஆரம்பிச்சுடுச்சு.. " கௌதம் இந்துவிடம்..
" எப்படி சொல்றண்ணே.. " பிரகாஷ் .
" பின்ன சனி சைடு பார்வ பார்த்தாலே தாங்காது.. இவென் என்னடான்னா நேருக்கு நேரா உக்காந்து இன்டர்வியூ குடுத்துட்டு இருக்கான்.. இதுல ஒன்டே மேச் வேற விளாடப் போறானுங்க போலையே.. " சம்பத்..
" இவென் இந்தியாவுக்கா டிக்கெட் போடுவான்.. " கௌதம்
" ம்ம்ஹிம்.. எமலோகத்துக்கு ப்ரான்ச் ஒன்னு ரெடி பண்ணிருக்கான்.. அங்க தா கூட்டீட்டு போகப் போறான்.. " சம்பத்..
" பாவம் புது மச்சான்.. அமெரிக்கன் மாப்பிள்ளைய அண்டராயரோட ஓட விடப்போறான்.. மதிம்மா ஏ கண்ணுல டெம திறந்து விட்டிருக்க.. பாசமா.. " கௌதம்..
" என்னோட அண்ணனுக்கு என்ட்ட
பேசனும்னு தோனலைல.. " என இந்துவின் முகத்துடன் சேர்ந்து பிரகாஷின் முகமும் வாடியது..
" ஐய்யைய.. அவனே சமாளிக்க முடியாம தவிக்குறான்.. இதுல நீ வேற.. கம்முன்னு இரு.. பேசுவான்.. " கௌதம்..
" சரிண்ணா நாங்க வாறோம்.. எனக்கும் ஆசையா இருக்கு.. நெக்ஸ்ட்
வீக் பாப்போம்ண்ணா.. பை.. " என இந்தியா வருவதை உறுதி செய்தாள் வைசு.. ஃபோனை கட் செய்யும் நேரம் நந்து அதை பிடிங்கினான்..
" மம்மியாத்தா நாம இந்தியா போப்போறமா.. " நந்து..
" ஆமாண்டா.. " வைசு..
" ஐ ....ஜாலி.. பம்கின் நா வந்தா ஆதிய இந்த பைல போட்டு எங்கூடவே கூட்டிட்டு போய்டுவேன்.. ஓகே வா.. அங்கிள் உங்களுக்கு இதுனால எதுவும் பிரச்சனையா சொல்லுங்க பட்டுன்னு சரி பண்ணிடுவோம்.. " நந்து சொல்ல தரன் உதடுகள் தன் தங்கை மகனின் குறுப்பில் விரிந்தது..
" நந்துஊஊஊஊ.. " என வைசுவும் அசோக்கும் சேர்ந்து கத்தினர்..
" ஹேய் என்ன பம்கின்னு சொல்லாதன்னு சொல்லிருக்கேன்ல.. ஏன்டா என்ன வெறுப்பேத்துற.. உனக்கு ஆதி கிடையாது டா.. போடா வெறும் பைய தூக்கிட்டு.. " ஹரிணி பட்டாசாக வெடித்தாள்..
" பம்கின்.. நா உங்கள்ட பர்மிஷன் கேக்கல.. ஜஸ்ட் இன்ஃபாம் பண்ணே.. அவ்ளோ தா.. ஆதிய நா தூக்கிட்டு போய்டுவேன்.. பாத்துட்டே இருங்க பை.. " நந்து வைத்துவிட்டான் ஃபோனை..
" ஹவ் டேர்.. வரட்டும் .அவனுக்கு இருக்கு.. என்னையா பம்கின்னா சொல்ற.. " என தனக்கு தானே புலம்பியவளை பார்த்து வந்த சிரிப்பை தன் உதடுக்குள் அடைத்தான் தரன்..
அவனின் நினைவு ஹரிணியை சந்தித்த நாளை நோக்கி சென்றது.. தனது தங்கை மகனின் பேச்சில் மகிழ்ந்திருந்தவனை திரும்பிப் பார்த்தவள்..
" அதா ஆஃப் பண்ணிட்டானே உங்க அரும தங்கச்சி மகென்.. இன்னும் இப்படியே தா உக்காந்திருக்கனுமா.. எந்திரிச்சு போங்க.. " என்றவளின் தோல் வலிக்கவே ஆரம்பித்து விட்டது அவனின் பிடியில்..
'காட்டான்.. ' என்றாள் முணுமுணுப்பாக..
இனிய நினைவுகள் அறுபட்டு விட்ட காண்டில் எழுந்து ஹரிணியை முறைத்து விட்டு சென்றான் தரன்..
" கௌதம் சிறுத்த கூண்டுல ஒரு முயல் மாட்டிக்கிச்சுன்னா அதோட ஃபீல் எப்படி இருக்கும்.. " ஹரிணி..
" கோயில்ல பலி குடுத்ததுக்கு அப்றம் ஆட்டோட உடம்பு துடிக்குமே அதே மாறி ஹார்ட்டு பயங்கரமா துடிச்சுட்டு நின்னு போய்டும்.. பாவம் செத்துபோய்டும்.. " கௌதம்..
" அதே மாறி தான்டா எனக்கும் துடிக்குது.. கொஞ்ச நேரத்துல என்னோட ஹார்ட்டும் நின்னு போய்டுக்கும்.. " ஹரிணி..
" உன்னோட கம்பினேஷனே சரியில்லயே.. நீ முயலு அவென் சிறுத்த.. போம்மா.. அங்கிட்டு.. சரி இந்த ஈசல் கூட்டத்துக்கு என்ன பதில் சொல்ல போற.. " என வீட்டினரை கண்களால் காட்ட..
" டாக்டரா வேல பாக்கலாம்.. இன்ஜினியரா வேல பாக்கலாம்.. ஆனா என்னைக்குமே இடைத்தரகரா மட்டும் வேல பாக்கவே கூடாது.. நாட்டாமை டூ பங்காள.. பங்காளி டூ நாட்டாமை.." ஹரிணி..
"அப்படின்னா.. " என அவன் கேட்டு முடிக்கும் முன் அசோக்கிற்கு கால் செய்து அதை புலம்பிக் கொண்டிருந்த கிருஷ்ணம்மாள் கையில் குடுத்து சென்றாள்..
" அப்பாடா.. தல தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்.. இனி அண்ணா பாடு சித்தி பாடு.. நமக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லப்பா.. " என எழுந்து சென்றாள் ஹரிணி..
வைசுவின் வரவிற்காக குடும்பத்தினர் அனைவரும் காத்திருந்தனர்.. சென்னை வந்திறங்கி விட்டாள்.. அழைத்து வர தரன் , சம்பத் உடன் கவியரசனும் சென்றிருந்தனர்..
" டேய் கௌதம்.. உங்கண்ணே என்னைக்கு சாமியாரா மாறுனான்.. " ஹரிணி அகிலனை தயார் செய்த படி..
" திரும்ப திரும்ப சொல்லவைக்காத.. அவெ எனக்கு அண்ணே கிடையாது.. சரியா.. சாமியாரா அவென்லாம் போக மாட்டான்.. மத்தவங்கள தா அனுப்பிடுவான்.. ஏ கேக்குற " கௌதம்..
" கடவுள் நம்பிக்கையே கிடையாதாம்.. இவரு பூஜ பண்ணப்போறாறாம்.. காமெடியா இல்ல.. " ஹரிணி..
" அத்தானுக்கு நம்பிக்க கடவுள் மேல இல்ல தா.. ஆனா எங்க ஆச்சி மேல இருக்கு.. அதுனால தா ஏற்பாடு பண்ணிருக்காரு.. " இந்து..
" நீ வேற கண்டத உலறாத.. அவென்னே பொறி வச்சி உங்கண்ணன பிடிக்க தா இந்த செட்டப்பே பண்ணிருக்கான்.. புரியாம பேசுற.. " கௌதம்..
" கைப்புள்ள என்னடா இப்படி இருக்க.. சென்டிமென்ட் புள்ளயா நீ.. உம்மூஞ்ஞிக்கு இது செட் ஆகலடா.. வொய்.. " ஹரிணி..
" ஒரு வாரமா அப்படி தா இருக்கான்.. ஏன்டா.. " கௌதம்..
" உங்களுக்கு தெரியாதுண்ணே.. நீங்கள்லாம் இப்பதா வந்திங்க.. ஆனா அசோக்குக்கும் எனக்கும் பிறந்ததுல இருந்து பழக்கம்.. என்னையல்லாம் மறந்திருப்பான்ல.. " பிரகாஷ்.. அவனின் குரலில் வேதனையை காண முடிந்தது..
" அவருக்குன்னு ஒரு குடும்பம் இங்க இருக்குங்கிறதையே அண்ணா மறந்துட்டாருல்ல.. " இந்து வருத்தமாக..
" இந்து நம்ம லைஃப் ல யாராவது ஒருத்தருக்கு மட்டும் தா அதிகமா முக்கியத்துவம் குடுப்போம்.. அம்மா அப்பா இதெல்லாம் ரத்த சம்மந்தப்பட்ட உறவு.. பட் காதல் அப்படி இல்ல.. நம்மளோட குணம் பழக்கம் இப்படி எல்லாத்தையுமே மாத்திடும்.. அது தான் லவ்.. அதெல்லாம் ஃபீல் பண்ணனும்.. " என்றாள் கனவுகளில் மிதந்தபடி..
" என்ன கருமாந்திரமோ.. " இந்து..
" ஹலோ அந்த கருமாந்திரம் அவென் மேல இருக்கப் போய்த்தா நீ கிணத்துல குதிச்ச மறந்துடாத.. அப்பையும் உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கத்தான செஞ்சுச்சு.. " ஹரிணி இந்துவை வார.. இந்து திரும்பிக் கொண்டாள்..
" அண்ணே எனக்கு ஒரு டவுட். வைசுவ தா லவ் பண்றேன்னு வீட்டுல சொல்லிருந்தாருனா எந்த பிரச்சனையும் இல்லாம அப்பாவே கல்யாணம் பண்ணி வச்சிருப்பாருல்ல.. ஏ.. இந்த ஊர் பக்கமே தல காட்டாம இருக்கனும்.. என்ன காரணம்.. " பிரகாஷ் கௌதமிடம் கேட்க..
" எனக்கு எப்படி டா தெரியும்.. டார்லிங் உனக்கு தெரியுமா.. " கௌதம்..
" எனக்கு தெரியும் ஆனா.. சொல்லமாட்டேன்.. " ஹரிணி..
" ஏம்மா.. " கோரஸ்ஸாக..
" நா சொல்லிட்டேன்னா அண்ணா ஃப்ளாஷ் பேக் சொல்லும் போது இன்ட்ரெஸ்ட் இருக்காது.. சோ அவரே சொல்லட்டும்.. பூஜைக்கு நானும் ஆதியும் ஒரு கலர் டிரெஸ் மேச்சிங் மேச்சிங்.. " என லெகங்காவை எடுக்கப் போக அவளின் கையில் கத்தரிப்பூ கலரில் பட்டுச் சேலையை கொடுத்து..
" இத தா போடனும்னு.. புடவ தா கட்டனும்.. உன்னோட பூவத்த ஆர்டர்.. சோ.. கட்டிக்க.." இந்து..
" சேலையவா.. " என முழித்தவளை பார்த்து ஆண்கள் சிரிக்க..
" வெளிய போங்கடா.. " என ஆண்களை துரத்தி விட்டாள் கடுப்புடன் ..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..