முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 57


 

அத்தியாயம்: 57


" விட்டுடு மாப்பள.. நா பண்ணது.. தப்பு தா.. மன்னிச்சுடுங்கடா.. மாமா நீங்களும் வேடிக்க பாக்குறிங்களே நியாயமா.. " அசோக்.. 


பிரகாஷும், வேல்ராஜும் தான், அசோக் வந்ததுமே தனியாக அழைத்துச் சென்று கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.. சுற்றி சம்பத் , கௌதம், கவியரசன் எதோ கூத்து பார்ப்பது போல் ரசித்து பார்த்துக் கொண்டு ‌இருந்தனர்.. 



" எனக்கு வயசாகிடுச்சுடா.. வலிக்குற மாறி இப்பல்லாம் அடிக்க முடியல.. அதா என்னோட மகெங்கள விட்டு உன்னைய வெளுத்துட்டு இருக்கேன்.. வேலு வாய்ல போடுடா.. பேசிட்டு இருக்கான் பாத்துட்டு இருக்க.. ம்.. நல்லா..‌‌ ஹாங்.. " என கவியரசன் அடிப்பவர்களை உற்சாகப்படுத்தி ஏற்றி விட்டுக் கொண்டு இருந்தார்... 


" அண்ணா.. " ஹரிணி என அசோக்கை காணவந்தவள் அடி வாங்கிக்கொண்டு இருக்கும் அவனை பாத்து கத்தினாள்..


" காப்பாத்துமா.. உன்னோட அண்ணே பாவமில்லையா.. எம்பொண்டாட்டிக்கு தெரியாம கூட்டிட்டு வந்து அடிக்குறாங்கமா.. காப்பாத்து.. " அசோக் கதற..


" இவரு சின்ன கொழந்த.. மிட்டாய் குடுத்து கடத்தீட்டு வந்து வச்சிருக்கோம்.. " கௌதம்.. 


"டேய்.. உன்னோட மச்சான் டா.. இந்துவுக்கு தெரிஞ்சா உங்கூட சண்டைக்கு வருவா.. போய் நிப்பாட்டுடா.. " 


" நா இந்த கலோவரத்துல பார்டிசிபேட் பண்ணல அப்படின்னு தா மை வைஃப் சண்ட போடுவா.. நாந்தா என்னோட பாப்புடுவோட புருஷனாச்சே.. கொஞ்ச நாள் கழிச்சு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுவோம் அப்படின்னு வெய்ட் பண்ணீட்டு இருந்தேன்‌.. " கௌதம்..


" மரியாதையா போய் நிப்பாட்டு.. போ.. " என கௌதமை தள்ளினாள்.. 


" ஏய்.. ஏய்.. இங்க பாருங்க.. மழை காரணமாக இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு நாள் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. மழ அந்த பக்கமா போனதும் மறுபடியும் நாம் கன்டின்யூ பண்ணுவோம்.. " என ஹரிணி இருப்பதை கண்களால் சுட்டி காட்டி நிறுத்த சொன்னான்.. 


அவனின் செய்கையை இருவரும் புரிந்து கொண்டு அடிப்பது நிறுத்தினர்.. " அண்ணா வலிக்குதாண்ணா.. " என அவனின் இடையில் கை கொடுத்து தாங்கினாள் ஹரிணி.. 


" இங்க பாருங்க.. இந்த தடவ நீங்க விளாண்டிங்க நாங்க வேடிக்க பாத்தோம்.. ப்ரேக் முடிஞ்சி மேட்ச்ச மறுபடியும் ஸ்டார்ட் பண்ணும்போது நாங்க தா இறங்குவோம்.. நீங்க ஊடால வரக்கூடாது.. சொல்லிட்டோம்.. " சம்பத்..


" எது.. அடுத்த ரவுண்டா.. " அசோக்..


பொறுந்தன்மையாக இருவரும் விட்டுக்குடுக்க நால்வரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.. அடிப்பதற்கு என நேரத்தையும் ஒதுக்கினர்.. 


ஆள்வரும் ஆரவாரம் கேட்க மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தவர்கள் வாயிலை பார்க்க.. நாதன் ஐயாவும் தரனும் வந்து கொண்டிருந்தனர்..


" மச்சான் நம்மலோட சான்ஸ் போய்டும் போலையே.. " கௌதம்..


" கவலப்படாத இந்த பீஸ் ஒரு வாரம் இங்க தா இருக்க போது.. நல்லா ஊற வச்சு தொவச்சு காய வச்சு அயன் பண்ணி அனுப்பிடுவோம்.. " சம்பத்..


" இதுல நாந்தா பிளிஞ்சு காயப்போடுவேன்.. " பிரகாஷ்.. 


" ஓகே.. " கோரஸ்ஸாக.. 


" இங்க என்னடா பண்ணீட்டு இருக்கிங்க.... போய் வேல எதாவது இருந்தா பாருங்க... கீழ போங்க எல்லாரும்.. " நாதன் விரட்ட..


" பெரிய மாமா.. எனக்கு வேற வழி தெரியல.. மன்னிச்சுடுங்க மாமா.. " அசோக்.. 


" உங்கிட்ட நா வெளக்கம்‌ கேக்கல.‌. " நாதன் கோபமாக கூறினார்..


 இருக்காதா பின்ன எட்டு வருடம் ஆள் ஊர்பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்தவன்... திடீரென கல்யாணமாகி குழந்தை குட்டியுடன் வந்திறங்கினால்... மகனாக நினைத்து வளர்த்தவர் ஆயிற்றே.. 


" ஆனா நா சொல்லியே ஆகனுமே மாமா.. அது என்னோட கடம இல்லையா.. " 


" காலம் கடந்த பின்னாடி கடமைய செஞ்சு என்ன பிரயோஜனம்.. "நாதன் .


" இன்னும் கடந்து போல பெரிப்பா.. என்ன தா சொல்ல போறாருன்னு நாம கேக்கலாமே..  " தரன்..


தரனின் பார்வையே அசோக்கை பயமுறுத்தியது.. திருதிருவென முழித்தவனின் காதில் " அண்ணா இவன பாத்தா பயப்படுறிங்க.. டம்மி பீஸ்.. உங்க மேல எனக்கு நம்பிக்க இருக்கு.. தைரியமா உங்க தரப்பு நியாயத்த சொல்லுங்க.. "ஹரிணி அவனை பேசச் சொல்லி தூண்டினாள்.. 


" டம்மி பீஸ்ஸா..‌. பொண்டாட்டிக்கு புருஷன் அப்படி தா தெரிவான்.. ஆனா எனக்கு.. " என முணுமுணுத்தான்  நடந்ததை விளக்கினான்.. 


சென்னையில் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருந்த அசோக்கிற்கு.. கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் வைசாலியை பார்த்தது முதல் படிப்பு வரவில்லை மாறாக காதல் வந்து விட்டது.. தன் முறைப் பெண்தான் அவள் என்பது தெரியாமல் அவனை பின் தொடர்ந்தான்.. 


சில நாட்கள் பொறுத்து பார்த்த வைசு அவனை அழைத்து பேசுவார்த்தை நடத்தினாள்..

 

" இதெல்லாம் இனக்கவர்ச்சி தா.‌. காதல்னு நெனச்சு உங்க லைஃப்ப பாழாக்கிகாதிங்க.. ப்ளிஸ்.. " என சத்திய மூர்த்தியின் அறிவுரைகளை சொல்ல.. அவன் தொந்தரவு செய்ய வில்லை.. மறக்கவும் இல்லை.. ஆனால் தினமும் அவளை பார்க்க வருவான்..


நாட்கள் நகர்ந்த போது வைசு மனம் அசோக்கை விரும்ப ஆரம்பித்து.. இதை அறிந்த அசோக் அவனின் படிப்பு முடிந்த உடன் அவளின் தந்தையிடம் பேச எண்ணி மகாபலிபுரம் அருகே உள்ள ரெஸ்டாரென்டில் காத்திருந்தான்.. 


அங்கு தான் வைசுவின் நடனப் பள்ளி உள்ளது.. சனி ஞாயிறு கிழமைகளில் வைசுவை அழைத்துக் கொண்டு வருவது வழக்கம்.. அதான் அதன் அருகில் உள்ள ஹோட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்தான்..


மூர்த்திக்கு அவன் தன் தங்கையின் மகன் என்று தெரிந்த போது அவனின் காதலுக்கு மறுப்பு சொல்லவில்லை.. மிகுந்த மகிழ்ச்சியில் கிளம்பியவன் மூர்த்தியின் கார் சென்னை நோக்கி செல்லாமல் பாண்டிச்சேரியை நோக்கி சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.. எனவே அவரை பின் தொடர்ந்தான்.. 


மூர்த்தியின் காருக்கு பின்னால் இரு கார்கள் துரத்திச் சென்றது.. ஒரு கட்டத்தில் கார் நிறுத்தப்பட்டிருக்க.. ரவுடி போன்று இருந்த சிலர் வைசுவை துரத்துவதை கண்டான்..


எங்கு செல்வது என்று தெரியாத அவள் பஸ்ஸில் ஏறிச்சென்றாள்.. அந்த ரவுடிகளும் பஸ்ஸில் ஏற அவள் ஓடும் பஸ்ஸில் இருந்து குதிக்கிறாள்.. அடிபட்டு எழ முடியாமல் இருந்தவளை பைக்கிள் தொடர்ந்தவன் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.. 


தலையில் அடிபட்டு ஒரு வாரம் கழித்து கண்விழிக்க.. பழைய நினைவுகளை இழக்கிறாள் வைசு.. அவளை யார் துரத்தினர் ஏன் துரத்தினர் என்ற காரணம் தெரியாதவன்.. மூர்த்தியை விசாரிக்க அவர் சென்னையில் இல்லை என்ற செய்தி கிடைத்தது.. 


அவளுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை பிறந்தது முதலே இருந்ததால் பழைய நினைவுகளை நினைவு படுத்துவது அவளின் உயிருக்கு ஆபத்து என்றனர் மருத்துவர்கள்.. எனவே அவளை பாதுக்காப்பாய் புதுச்சேரியிலேயே ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்கிறான் அசோக்.. அவள் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது அவளை கொல்ல சிலர் முயன்றனர்.. 


ஊரில் இருந்தால் தானே பிரச்சனை என எண்ணியன் வைசுவுடன் அமெரிக்கா சென்று விட்டான்.. வைசுவின் படிப்பு , அவர்களின் வெளிநாட்டு பயணம் , திருமணம் என அனைத்திற்கும் உதவியது ஹரிணி.. 


ஹரிணி மூலம் மூர்த்தி தன் ஊரில் தான் இருக்கிறார் என்பதை அறிந்தவன் வைசுவை ஊருக்கு அழைத்து வரவே கூடாது என முடிவெடுத்து திருமணத்தை‌ பற்றி யாரிடமும் சொல்லக் கூடாதென சத்தியம் வாங்கிக் கொண்டான் ஹரிணியிடம்.. காரணம் வைசு தன்னை விட்டு சென்றுவிடுவாளோ என்ற பயமே அவனை ஊர்பக்கமே வரவிடவில்லை.. 


" எல்லாரும் கீழ பாருங்க.. ப்ளாஸ் பேக் ஓவர்.. " கௌதம்..


"துரத்தீட்டு வந்தவங்கள்ள யாரையாது பாத்தியா.. மறுபடியும் பாத்தா அடையாளம் தெரியுமா.. " தரன். 


" இல்ல நா ஆப்போசிட்ல இருந்து பாத்ததால.. அங்கிளோட ஃபேஸ் மட்டும் தா எனக்கு தெரிஞ்சது‌.. வைசுவ கூட துரத்திட்டு வந்தவங்கள நா பாக்கல.. மாஸ்க் போட்டிருந்தானுங்க.. அவா பஸ்ல இருந்து குதிச்சதும் பப்ளிக் அங்க கூட்டமா கூடிட்டாங்க.. அதுனால அவிங்க எல்லாரும்  ஓடிட்டானுங்க.. " 


அசோக்கின் பதில் தரனை சோர்வடையச் செய்தது...‌ " ஆனா அங்கிள்கிட்ட பேசிட்டு இருந்த நாலு பேருக்கும் முப்பது வயசுக்குள்ள தா இருக்கும்.. தே ஆர் எங்.. இது எல்லாமே என்னோட கெஸ்தா.. கண்பாஃர்மா சொல்ல முடியாது..  " அசோக்.. 


சிறு தலையசைப்புடன் கீழே சென்றான் ரிஷி தரன்...  


வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்த வீணையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள் வைசு.. 


" இது என்ன நாயக்கர் மஹால் தூணா... சுத்தி சுத்தி வர்ற.. " தரன்..


" அண்ணா இத நா தொட்டு பாக்கலாமா.. " வைசு..


" முடியாது.. " கராராக..


" அண்ணா.. ப்ளீஸ்.. " 


" தொட்டு பாக்குறதுக்கு ஒன்னும்  இத நா வாங்கி வக்கல.. " தரன்..


சோர்வுடன் நடக்க போனவளை " நடக்கப் போற ஃபங்ஷனல நீ வாசிக்குறேன்னு சொல்லு தூக்கி உங் கைலையை தந்துடுறேன்.. " என்ற குரல் சந்தோஷமாக திரும்பி பார்க்க வைத்தது.. 


" ம்.. நல்ல ஐடியா தா ஆனா உங்க வைஃப் ‌பாட்டு பாடுவாளா.. எனக்கு அவளோட‌ வாய்ஸ் ரொம்ப பிடிக்கும்.. " வைசு..


" அத உன்னோட ஃப்ரெண்டு கிட்ட நீயே கேளு.. " 


" ம்.. கேக்குறேண்ணா.. ஐய்யையோ என்ன ஆச்சு.. ஏ இவர இப்படி கூட்டிட்டு வர்ரிங்க‌.. " கைத்தாங்கலாக அழைத்து வந்த அசோக்கை பார்த்து வைசு பதட்டமாக கேட்க.


" அது ஒன்னுமில்லமா‌ மச்சான் நம்ம ஊருக்கு புதுசுல்ல.. அதா ஸ்விம்மிங் ஃபூல்ன்னு நெனைச்சு உரத்தொட்டிக்குள்ள குளிக்கலாம்னு குதிச்சுட்டாரு.. அதா கண்ட இடத்துல அடி பட்டிருச்சு.. " கௌதம்.. 


" ஏம்பா பாத்து இருக்க கூடாதா.. " வைசு..


" இதுக்கு போய் நீ எதுக்குக்இ பதருற.. நம்ம ராசாத்தி பாட்டி இருக்கு.. உலக்கைய வச்சு நல்லா ஒரு மசாஜ் பண்ணோம்னு வை.. எல்லாம் போய்டும்.. " பிரகாஷ்..


" எது உயிரா‌.. " சம்பத்..


" ஆமா.." என்றவர்களை பார்த்து அசோக் முழிக்க.. 


"எங்க உன்னோட சீமந்த புத்திரன் .. " வேலு . 


" எங்க இருப்பான்னு உங்களுக்கு தெரியாதா.. " வைசு..


" எங்க வேண்ணாலும் இருந்திட்டு போட்டும் என்னோட ஆதி பக்கம் மட்டும் அவென் வரவே கூடாது சொல்லிட்டேன்.. " கௌதம் விரல் நீட்டி எச்சரிக்கும் தோரணையுடன்.. 


" டூ லேட் வந்த உடனே அவனோட லக்கேஜ் எல்லாத்தையும் இறக்கி வச்சதே உங்க ரூம்ல தா.. பெரிய பேக் ஒன்னையும் தூக்கிட்டு வந்திருக்கான்.. உங்க பொண்ண பத்திரமா பாத்துக்குங்க.. " வைசு..


" டேய்.. வாலில்லாத வாணரமே வந்துட்டேன்டா.. " என கத்தியபடி கௌதம் செல்ல அனைவரும் சிரித்தனர்..  


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...