முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 58

அத்தியாயம்: 58


சொந்தங்கள் மட்டும்தான்.. 

சொந்தம்..

என்றில்லை.. 

உண்மையான அன்பு..

உடையவர்கள் எல்லாருமே.. 

சொந்தங்களே.. 

உறவுகள் இல்லாவிடில்.. 

அரண்மனையும் குடிசையே.. 



" இந்த வீட்டுல எனக்கு மட்டும் தா இப்படி ஃபீல் ஆகுதா இல்ல வேற யாராது இருக்காங்கலா.. " ஹரிணி..


" நா இருக்கேன்.. உனக்கு எப்படி காண்டாகுதோ அதே மாறி எனக்கும் எரியுது.. " அசோக்..


" இந்த மனுஷன பாரேன் நாலு நாளா என்ன கண்டுக்கவே இல்ல.. வீட்டுக்கு வரட்டும் ‌கவனிச்சுக்கிறேன்.. " பவி..


" இந்த பிரகாஷ் கூட திரும்பி பாக்கலையே.. " அபி..


" வேலு அண்ணாவ ஒரு மிட்டாய் வாங்கித்தாங்கண்ணானு சொன்னா.. பல்லு சொத்தையாகிடும்னு வாங்கிட்டே வராது.. இப்ப பாறேன் பாக்கெட் பாக்கெட்டா வச்சிருக்கு.. " சுதா.. இவர்கள் அனைவரின் பேச்சிலும் வயிற்றெரிச்சல் அதிகமாகவே இருந்தது..


கோபியர்கள் நடுவே கொஞ்சிக் கும்மாளம் அடிக்கும் கண்ணனை போல.. தன் அண்ணன்கள் மத்தியில் பாச மழையில் நனைந்து கொண்டிருக்கும் வைசுவை கண்டுதான் பொறுமிக் கொண்டிருந்தனர்..


"எப்பா..‌ வழிய விட்டு நில்லுங்களேன்.. " என முதலுதவி பெட்டியுடன் இவர்களை கடந்து செல்ல முயன்றான் பிரகாஷ்..‌ 


" ஏய் கைபுள்ள நில்லு.. " ஹரிணி..


" அட இரும்மா.. அவசரம்.. அப்றமா நேரம் இருந்தா வாறேன்.. " என நகர முயன்றவனின் சட்டை காலரை பிடித்து இழுத்தாள் அபி..


" நாங்க கூப்பிட்டா நிக்க முடியாத அளவுக்கா நீ பிஸியா இருக்க.. எங்கடா போற.. " அசோக்..


" அது எங்கக்காக்கு காயம்.. அதா மருந்து எடுத்துட்டு போறேன்.. " பிரகாஷ்..


" ஓ..ஹோ.. எங்க அடி பட்டிருக்கு.. எப்படி பட்டுச்சாம்.. " பவி..


"கைல.. விரல்ல அடி.. நசுங்கி‌போயிடுச்சு தெரியுமா. " பிரகாஷ் சோகமாய்..


" டேய்.. உனக்கே இது ஓவரா இல்ல.. சைக்கிள் ஓட்டுறப்ப.. பின்னாடி பிடிச்சுட்டி வந்த உ பாச மலர் சீட்டுக்கு அடில கைய வச்சுட்டா.. அதுனால அவளோட சுண்டு விரல்ல லேசா.. லேசா தா அடிபட்டுடுச்சு.. இதுக்கு போய் நீங்க இவ்ளோ சீன் போடுறிங்களேடா.. " ஹரிணி..


" அப்ப காட்டெருமை சீட்டுல உக்காந்திருக்குமோ.. " பிரகாஷ்.. 


" டேய்..‌‌ என்ன பாத்த உனக்கு காட்டெருமை மாறியா தெரியுது.. " ஹரிணி கோபமாக.. 


" ஓ... நீ தா உக்காந்தியா.. " என கேலி பேசியவனை முறைத்தாள் ஹரிணி..


" அங்க என்னடா கத பேசிட்டு இருக்க.. வாடா ‌சீக்கிரம்.. " என பேசியபடி வந்த வேல்ராஜ் அங்கிருந்தவர்களின் முறைப்பில் அமைதியாகி திரும்பிச் சென்றார்..


" அண்ணே.. " பிரகாஷ்..


" பத்திரமா வந்துட்டேன்னா அண்ணே உன்னைய ஆரஞ் ஜூஸ்ஸோட வந்து பாக்குறேன்.. " வேல்ராஜ்..


" பேண்டேஜ் போடனும் ‌....‌தங்கச்சிக்கு .... " பிரகாஷ் பரிதாபமாக . 


" போய்டு‌.. " என்றாள் கடுப்புடன்.. 


வைசாலி வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது..


சேர்த்து வைத்திருந்த மொத்த அன்பையும் ஒரே நேரத்தில் அவள் மேல் பொழிந்தனர் குடும்பத்தினர்.. 


கையில் குழந்தையுடன் மாடி ஏறினாள் ஹரிணி.. அங்கு தரன் தன் தங்கை மகனை தூங்க வைத்துக் கொண்டு இருக்க அவனை கண்டு கொள்ளாது.. தூங்கும் தன் மகனை கட்டிலில் கிடத்தி போர்வை போர்த்தி விட்டு படுக்கச் செல்லும் நேரம் தரன் அவளை அழைத்தான்.. 


" எனக்கு வேல இருக்கு.. " என நகரப் போனவளின் கை பிடித்து சுண்டினான் தரன்.. 


இழுத்த வேகத்தில் அவள் மெத்தையின் விழுந்தாள்.. அருகில் நந்து தூங்கிக் கொண்டிருக்க சத்தம் போடவில்லை அவள்.. 


" நா என்ன அவ்ளோ வீக்காவா இருக்கேன்.. ஒரு இழு தான இழுத்தான்.. இப்படி விழுந்துட்டேன்னே.. அறுபது கிலோவ இழுக்குற அளவுக்கு ரொம்ப ஸ்ராங்க போல அவென்..  " என புலம்பிக் கொண்டு இருந்தவளின் அருகில் அமர்ந்தான் தரன்.. 


" ஏ என்ன எப்ப பாத்தாலும் வம்பிழுத்துட்டுடே இருக்க.. உன்னோட சவகாசமே வேணாம்னு தான நா உங்கிட்ட பேசுரதே இல்ல.. இப்ப.. எதுக்கு.. இவ்வளோ.. பக்கத்துல வந்து.. டேய்.. என்ன பண்ணுற.. " என கத்தப்போனவளின் வாயை கைகளால் மூடி.. " ஷ்ஷூ.. " என்று அவனின் இதழில் விரல் வைத்து பேசாதே என சமிக்ஞை செய்தான் தரன்..


அவளின் கால்களை மெத்தை மேல் வைத்தவன் அணிந்திருந்த ஸ்கெட்டை மெல்ல முட்டி வரை உயர்த்தினான்.. அதற்கு தான் ஹரிணி கத்தினான்.. 


முட்டியில் காய்ந்து போன இரத்ததுடன் காயம்.. சற்று பலமாகவே இருந்தது.. சைக்கிள் ஓட்டுவதாக சொல்லி தோழிகள் இருவரும் கீழே விழுந்ததால் வந்தது.. 


ஹரிணிக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது... அவளுக்கு சொல்லித் தருகிறேன் என்று வைச்சு பிடித்துக் கொண்டு வர.. அப்போது சீட்டின் அடியில் விரல் வைத்துவிட.. ஹரிணி சீட்டில் அமர்ந்ததும் விரல் நசுங்கிவிட்டது.. பாவம் அவள் பிடித்திருக்கிறாள் என்று தைரியத்தில் ஏறி அமர்ந்தாள் நிலத்தில் விழுந்து வாரி விட்டாள்.. அவளுக்கும் காயம்.. 


" அன்னைக்கு என்னமோ புல்லெட் பைக்ல பந்தாவா வந்த.. இன்னைக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாம.. இப்படி கீழ் விழுந்து வாரீட்டு வந்திருக்க.. உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதா என்ன.. " வினவ அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள் பதில் பேசாது.. 


காயத்தில் மருந்தை வைத்துக் கொண்டிருந்தவன் மருந்தை சற்று பலமாக அழுத்தி வைக்க ஹரிணி " ஸ்..ஆ... " என துள்ளினாள்.. 


" மருந்து போடுன்னு நா உங்கிட்ட  கேட்டேன்னா.. ச்ச.. எல்லாத்துலையும் பிடிவாதம். நீ கேக்குறதுக்கு எல்லாம் நா பதில் செல்ல வேண்டிய அவசியமில்ல.. ஹிம்.. " தலை சிலுப்ப..


அதை ரசித்தவன் மருந்திட்டு விட்டு அவளின் கன்னத்தில் கைவைத்து திருப்பினான் தன்னை நோக்கி.. 


" நா கேட்டா பதில் வந்து தா ஆகனும்.. " அழுத்தமாக.. 


" சொல்ல முடியாது போடா.. " அவனை விட அழுத்தமாக வந்தது ஹரிணியின் குரல்.. இருவரின் பார்வையும் முட்டிக் கொள்ள..


வெண்ணெய் போல் வலுக்கும் அவளின் கன்னத்தில் வைத்திருந்த கட்டை விரல் எதையோ உணர்ந்தது.. விழி சுருக்கு அதை கவனித்தான்.. 


இலை மேலுள்ள பனி துளி போல் அவளின் கன்னத்தில் சிறிய பரு இருந்தது.. 


தன் விரலால் அதை மெல்ல வருட அவனின் கையை தட்டிவிட்டாள் ஹரிணி.. 


"அதெல்லாம் தொடக்கூடாது... என்னோட பேஸ்ல அது டார்க் ஸ்பாட்டா மாறிடும்.. அப்றம் அது அசிங்கமா தெரியும்.. டோண்ட் டச்.. ஓகே.." என்றாள் மிரட்டலாக.. 


" ஹா....ஹாங்... " என்றவன் அவளின் பருவை கிள்ளிவிட்டு சென்றான் ரிஷி தரன்.. குழந்தைகள் தூங்குவதால் வலியில் கத்த முடியாமல் தவித்தவளுக்கு சிறிதாய் கூட இரத்தம் துளிர்த்தது..


" கிள்ளிட்டான்.. கிள்ளிட்டான்.. இரத்தம்.. பாவி.. பாவி.. உனக்கு பொண்ணுங்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு யாருமே சொல்லி தரலையா.. ஸ்டுப்பிட்.. " ஹரிணி..


" மேடம் டியூஷன் எடுத்தா அடியேன் ஆர்வத்துடன் கத்துப்பேன்.. ஃபீஸ்ஸா உனக்கு என்ன வேணும்னாலும் தாறேன்.. என்ன சொல்லித்தாறியா.. " என கண்சிமிட்டியவனை முறைத்து விட்டு தன் படுக்கையை சரி செய்தாள்.. 


அதான்‌ சோஃபா.. 


நந்து விழுந்து விடாமல் இருக்க சோஃபாவே கட்டிலின் அருகில் இழுத்துப் போட்டவள் தரனுக்கு அழகு காட்டிவிட்டு தலை முதல் கால் வரை போர்த்தி படுத்தாள்.. முகம் மட்டுமே தெரியும்படி தூங்கியவளுக்கு தெரியாது இரவில் கீழே விழும் அவளை மீண்டும் படுக்க வைப்பது தரன் என்று.. விழும் சமயம் அடி படும் என்பதால் சோஃபாவிற்கு கீழே அவன் தலையணை கொண்டு மெத்தை அமைப்பதும்.. உறங்கும் தன் தேவதையே விடிய விடிய உறங்காது ரசிப்பதும் தெரியாது..


உறங்குவது போல் படுத்திருந்தாலும் அவள் தூங்கவில்லை என்பதை உருண்டோடிய விழிகளே சொல்லியது.. காற்றில் சத்தமிடாமல் அவளுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை அளித்தவன்..


 " கிட்.. மை கிட்.. பக்கத்துல வந்தாலே ஓடுறா.. இவளெல்லாம் வச்சுக்கிட்டு.. ரொம்ப கஷ்டம்.. " என புலம்பியவன் நித்திரா தேவியை துணைக்கு அழைத்தான் தரன்.. 


பூஜைக்காக வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க அசோக் மட்டும் மனச்சோர்வுடன் சுற்றி திரிந்தான்.. 


நட்சத்திர கூட்டத்திற்கு மத்தியில் முழு மதியாய் சுற்றிவரும் தன் மனையாளை ரசித்துக் கொண்டு இருந்தவனை தொந்தரவு செய்ய வந்தான் கௌதம்.. 


" ஹலோ.. மிஸ்டர் வீஐபீ.. சும்மாத்தான இருக்கிங்க.. ‌இவன புடிங்க.. "என அகிலனை அசோக் கைகளுக்கு மாற்றியவன் தான்‌ அணிந்திருந்த வெல்க்ரோ வேட்டியை சரி செய்தான்.. 


" டேய் என்னடா இது.. நடு வீட்டுல அசிங்கமா.. " அசோக்..


" அசிங்கம் ஆகிடக் கூடாதுன்னு தா அட்ஜெஸ்ட் பண்றேன்.. எல்லாத்துக்கும் காரணம் உங்க பாச மலர் தா.. உங்க தங்கச்சீட்ட சொல்லி வைங்க புருஷன கண்கலங்காம பாத்துக்க சொல்லி.. " கௌதம்.. 


" ஓஹோ.. சொல்லுறேன் சொல்லுறேன்.. ஆமா நீ கண்கலங்குற அளவுக்கு என்ன பண்ணிட்டா.. " 


" இந்த வேட்டிய நா கல்யாணத் தன்னைக்கு கட்டுனதே பெருசு.. இதுல இன்னைக்கு கட்டித்தா ஆகனும்னு ஒரே அடம்.. மூனுநாளா பேசல.. தெரியுமா.. "


" வேட்டி நம்ம பாரம்பரியம் டா.. " 


" எனக்கு தெரியும்.. ‌ஆனா என்னோட இடுப்புக்கு தெரியலையே.. " .


" சித்தா.. ‌நீ சூப்பரா அழகா இருக்க.. " என பாராட்டியபடி வருண் வர உடன் நந்துவும் இருந்தான்..


" தங்க் யூ..‌ பேசிக்களி.. ஐ ஆம் வெரி ப்யூட்டி ஃபுல் மேன்.. ஹண்சம் ஹை.. யூ நோ.. " கௌதம்..


" வருண் இதுக்கு முன்னாடி நீ அழகான அங்கிள பாத்ததே இல்லையா.. எங்கூட வா நா உனக்கு காட்டுறேன்.. " நந்து கௌதமை வார..


" டேய் சில்வண்டு வாய மூடுட்டு போட்டு.. " கௌதம்..


" சரி உங்களுக்காக வேணும்னா ஒரு த்தர்டி பர்சென்ட் நீங்க அழகாத்தா  இருக்கிங்க.. அந்த மார்க்கையும் நீங்க அழகான தேவதையான ஆதியோட அப்பாங்கிறதுக்காக.. மத்தபடி நீங்க பத்து மார்க்கு கூட வாங்கமாட்டிங்க.." 


" யோவ் ‌மச்சான் என்னய்யா நீ பாத்துட்டு இருக்க.. உம்மகன்ட்ட சொல்லுய்யா.. மரியாதையா பேச சொல்லி.. " கௌதம்..


" அதுக்கும் அவனுக்கும் தா தூரமாச்சே.. வேணும்னா நீயே சொல்லிக்க எனக்கு வேல இருக்கு.. " என நகன்று விட்டான்..


" டேய்.. சில்வண்டு.. " கௌதம்..


" சொல்லுங்க அங்கிள்மாமா.. " 


" என்னோட கட்டவிரல் சைசுக்கு இருந்துட்டு.. ‌நீ என்ன கேலி பண்ற.. இதெல்லாம் நியாயமே இல்ல.. பாத்துக்க.. " 


" நல்லா இல்லாதத நல்லா இல்லன்னு சொல்ல வயசு தேவையில்ல அங்கிள்.. ‌நீங்க பாக்க சர்க்கஸ் கோமாளி மாறி இருக்கிங்க.. பார்த்தாலே சிரிப்பு சிரிப்பா வருது.. " என சிரிக்க ஆரம்பித்தான் நந்து..


மேலும் கீழுமாய் மூச்சு வாங்க நந்து வை முறைத்துக் கொண்டு இருந்தான் கௌதம்.. 


"என்டா சின்னப் பையன இந்த மொற மொறைக்குற.. நீங்க அங்கிட்டு போய் விளாடுங்க பா.. பாத்து சண்ட போடாம கீழ விழுந்துடாம விளாடனும்.." என அவர்களை வெளி அனுப்பினார் கவியரசன்.. 


" இதோ வந்துட்டாருய்யா ஆலமரமே இல்லாத பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல.. உன்னைய யாரு அவன அனுப்ப சொன்னா.. ‌இன்னும் கொஞ்ச நேரம் விட்டுருந்தா.. " கௌதம்..


" உங்களுக்கு பீப்பீ வர வச்சிருப்பான் அவென்.. " பிரகாஷ்..


" அப்படில்லாம் இல்ல எங்கிட்ட மன்னிப்பு கேக்க வச்சிருப்பேன்.. " கௌதம்..


" கிளிச்சிங்க... நாங்க தா பாத்துட்டு தான் இருந்தோமே உங்க வீரத்த.." பிரகாஷ்.. 


விட்டால் இவர்கள் பேசியே நம்மை கொல்வார்கள்..  நாம் பூஜைக்கு செல்வோம்.. 


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


அன்பே 57

அன்பே 59


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...