முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 59


 

அத்தியாயம்: 59 


சக்தியின் வடிவமாய் அம்பிகைக்கு விளக்கேற்றி மனமுருக தன் கணவனின் நல்வாழ்விற்காகவும் தன் குடும்பத்தின் எதிர் காலம் சிறக்கவும் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.. 


பெண்கள் ஒருபுறம் பட்டு சேலை சகிதமாக அமர்ந்திருக்க.. ஆண்கள் மறுபுறம் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.. 


எங்கே உக்காரலாம் என பார்த்துக் கொண்டு இருந்த அசோக்கிற்கு ரிஷி பக்கத்தில் ஒரு இருக்கை காலியாக இருந்தது தெரிந்தது..‌


" ஏ சகள நிக்குற.. ‌வா.. " என சம்பத் அழைக்க அசோக் மறுத்தான்..


" ஏனாம்.. " சம்பத்..


" அவன பாத்தாலே மனசு பக்கு பக்குன்னு இருக்கு.. இதுல பக்கத்துல உக்காந்தா அவ்வளவு தா.. இன்னும் கொஞ்ச நாளாது நா உசுரோட இருக்கனும் சகள.. " 


" உன்னோட ஹார்ட் நின்னு போச்சுன்னா நா சாக் ட்ரீட்மெண்ட் தாறேன்.. வா.. " சம்பத் இழுக்க..


" சாதாரணமாக மனுஷெந்தான அவெ.. பயப்படுற அளவுக்கு அவன்ட்ட அப்படி  என்ன தா இருக்கு.. " கௌதம்..


" தெரியலைடா ஆனா எதோ இருக்கு.. " அசோக்.. 


" எனக்கு தெரியும்.. " சம்பத்..


" என்ன.. " கோரஸ்ஸாக..


" நீ உன்னோட பொண்டாட்டியோட அண்ணனா அவன‌ பாக்குற.. அதுக்க பதில அவனோட தங்கச்சிய நீ கட்டிக்கிட்டதா நினைச்சுக்கோயேன்.. " 


" பவி உன்ன கைல கட்டையோட தேடுறான்னு நா இப்ப நினைக்குறேன்.. " என்ற உடன் சம்பத் தெறித்து ஓட கௌதம் அசோக்கை  ரிஷியின் பக்கத்தில் அமரவைத்து அருகிலேயே அவனும் அமர்ந்தான்..


" ஸ்... ஸ்.... அண்ணா.. " வைசு.. பெண்கள் கூட்டத்தில் இருந்து வந்தது சத்தம்..


" யாரம்மா கூப்பிடுற உனக்குத்தா ஏகப்பட்ட அண்ணனுங்க இருக்கே.. " பிரகாஷ்.


" உன்னைய இல்ல.. அண்ணா டேய் அண்ணா.. " குரல் உயர்த்தி அழைக்க..


தரன் அவளைப் பார்த்து என்ன என்பது போல் புருவம் உயர்த்தினான்.. 


" நா‌ உன்னோட பொண்டாட்டிய கரெக்ட் பண்ணிட்டேன்.. " மெல்லிய குரலில்..


" எது கரெக்ட் பண்ணிட்டாளா.. என்ன குடும்பம்டா இது.. இதையும் கேட்டுட்டு நீ சும்மாவே உக்காந்திருக்கியே உனக்கு வெக்கம், மானம், சூடு இதுல எதாவது ஒன்னு இருக்கா.. ச்ச.. " கௌதம் அசோக்கைப் பார்த்து கேட்க..


" இருந்திருந்தா நா ஏ கல்யாணம் பண்ணிக்க போறேன்.. " அசோக்..


வைசுவை அருகில் வருமாறு கையசைத்தான் தரன்.. 


" டேய் அண்ணா.. ஏங்க தள்ளி உக்காருங்க.. அண்ணா ஒரு பாட்டுதா பாடுவாளாம்.. அதுக்கு மேல பாடமாட்டாளாம்.. இப்பத்தா சம்மதிக்க வச்சிருக்கேன்.. என்ன பாட்டு பாட‌சொல்ல.. " வைசு..


" வாவ்.. பாட்டு கச்சேரியா.. அப்ப அலைபாயுதே கண்ணா பாட்ட பாடப் சொல்லு.. பொதுவா எல்லா ஃபங்ஷன்லையும் இதத்தான பாடுவாங்க.. " சம்பத்..


" பாவம் கண்ணன் எல்லா எடத்துலையும் பாடுறேன்னு சொல்லி அவர கூட்டு வச்சு படாத பாடு படுத்துறிங்களேடா.. விட்டுடுங்கடா.. வேற யாரையாது கூப்பிடுங்க.. " கௌதம்..


" அப்ப அது.. இல்ல இது.. " பிரகாஷ்..


" டேய் வழக்கில்லாத வக்கீலு.. வகுந்துடுவேன் உன்ன.. " கௌதம்..


" வைசு இப்ப நமக்கு ஏஆர்‌ ரகுமான் வேணாம்.. இளையராஜா போதும்.. பாரதியார் வரிகள்ல ‘நின்னைச் சரணடைந்தேன்..’ பாடச் சொல்லு.. மனசுக்கு இதமா‌ கேக்க அருமையா இருக்கும்.. " தரன்..


" எது பாரதியார் பாட்டா.. " பிரகாஷ் முகம் அஷ்டகோணத்திற்கு மாற‌..


" டேய் அந்த புள்ளைக்கு நம்ம பாரதியார் பாட்டு எப்படி டா தெரியும்.. ஆந்திர பொண்ணுடா அது.. சினிமா பாட்டே பாட சொல்லலாம்.. " வேல்ராஜ்..


" அண்ணே ‌அதுவும் சினிமால வந்திருக்கு.. நல்ல விசயம் யார் சொன்னாலும் கேக்கலாம்.. அதுக்கு மொழி தேவையே இல்ல.. அவளுக்கு பாரதியார்னா பிடிக்கும்.. பாடுவா பாருங்க.. " கௌதம். 


" ஓகே.. கேப்போம்.. " பிரகாஷ்..


" நீ வீணைய எடுத்து வச்சுட்டியா.. இல்ல  வரனுமா வைசு..‌" தரன்..


" எல்லாம் தயார்.. " என்றவள் வீணை மீட்க ஆரம்பித்தாள் வைசு..


நின்னை சரணடைந்தேன்,

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்


நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்


பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..



வைசுவின்‌ இசையும்.. ஹரிணியின்‌ தேன் குரலும்.. பாரதியாரின் வரிகளுக்கு அழகு சேர்த்தது.. கேட்பவர்கள் மனதையும் மயிலிறகால் வருடச் செய்தது.. 



" மாமா.. " அசோக் தயக்கத்துடன்.. 


" என்னடா.. நடு வீட்டுல கைய பிசஞ்சுட்டு நிக்குற.. என்ன சமாச்சாரம்..” நாதன்..


" அது.. ஊருக்கு வந்து நாளாகுது.. வேல வேற இருக்குது.. அதுனால.. “


“அதுனால.. “


“ கிளம்பனும்.. " 


" என்ன அதுக்கு.. அங்கருந்து கிளம்பி வரும்போதே ‌எப்ப திரும்பி போனும்னு டிக்கெட் போட்டுட்டு தான வந்திருப்ப.. " 


" அது நாளான்னைக்கு விடிய காலைல ஃப்ளைட்.. ‌அதுனால நாளைக்கு சாயங்காலம் கிளம்புனா சரியா இருக்கும்.. " தயங்கியவாறே.. 


நாதன் , அருகில் உள்ள ரிஷி தரனை திரும்பிப் பார்க்க.. " ஆறு மணியாப்ள  ரெடியா இருக்கட்டும் பெரிப்பா.. சம்பத்தையும், வைசுவையும் நா டிராப் பண்ணிடுறேன்.. சம்பத்தும் மெட்ராஸ் போனும்னு சொன்னான்..” தரன்..


" அப்பப்ப ஊரு பக்கம் வந்துட்டு போ… என்ன..‌ "  என கூறிச் சென்றார் நாதன்..


தரன் அசோக்கை பார்த்து சின்ன சிரிப்புடன் செல்ல குழம்பிப் போனான் அசோக்.. எதற்கு சிரித்தான் என்று தெரியாமல்.. 


" என்னாச்சுங்க.. " வைசு.


" ஒன்னுமில்ல மா.. நாம நாளைக்கு சென்னை போனும்.. லக்கேஜ் எல்லாத்தையும் பேக் பண்ணிடும்மா.. " அசோக்.. 


வைசுவின் முகம் வாடிப்போனது.. 


இதை கண்ட சம்பத் ரிஷியிடம்.. " இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போட்டுமே மாப்ள.. வைசு முகமே வாடிடுச்சு.. நீ யென் அசோக்க இந்தியாவுலேயே ஒரு வேல பாத்துக்க சொல்லக்கூடாது.. நினைச்ச நேரம் நாம எல்லாரும் போய் பாத்துட்டு வந்துடலாம்.. " 


"இப்பக்கூட நினைச்சா போய் பாத்துட்டு வரலாம் மச்சி.. அமெரிக்கா ஒன்னும் செவ்வா கிரகத்துல இல்ல.. "தரன்.


" டேய்.. " சம்பத்..


" மச்சான் பெண்ணுங்க எல்லாரும் சுத்தமான தண்ணீர் மாறி.. அவங்கள சேக்க வேண்டிய இடத்துல சேத்துட்டா.. அவுங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும், மத்தவங்க வாழ்க்கையையும் செழிப்பாக்கிடுவாங்க.. ஜீவ நதி எப்பஞூ தா போற இடத்தெல்லாம் சிறப்ப வச்சிருக்குற மாறி ஒரு ஆணோட வாழ்க்கையையே மாத்திடுவாங்க.. அத எனக்கு மட்டுமே சொந்தம்னு அணக்கட்டி வச்சாலும்.. அது சேர் வேண்டிய இடத்த போய் சேர்றத தடுக்க முடியாது.. விமென்  ஹஸ் எ மேஜிக் பவர்ஸ்.. " 


" இது தத்துவமா மாப்ள.. நா கேட்டதுக்கும் நீ சொல்றதுக்கும் எதாது சம்மந்தம் இருக்கா..” 


" அசோக்குக்கு என்னடா குறை.. நல்லா படிச்சிருக்கான் நல்ல சம்பளம்.. இதெல்லாத்தையும் விட அவன் வைசுவ அளவுக்கு அதிகமாவே லவ் பண்றான்.. ஒரு அண்ணனா தங்கச்சியோட சந்தோஷமான வாழ்க்க இதவிட அதிகமாவா வேற என்ன எதிர்பார்த்திட முடியும் சொல்லு.. வைசு ஹப்பி டா மச்சான்..  " தரன்.. 


" நானும் ஒரு அண்ணன் தா மாப்ள.. இதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கும்ல.. " என ஹரிணியுடனான தரனின் உறவை சொல்ல தரன் தோல்களை குளுக்கியவாரு சென்று விட்டான்.. 


" டேய்.. டேய்.. நீ சொன்னியே அந்த தத்துவத்த கண்ணாடி முன்னாடி நின்னு ஒரு நாளைக்கு ஒருக்கவாது உன்னோட மூஞ்சியப் பாத்து சொல்லிக்க.. ‌அப்பத்தா உனக்கு புத்தி வரும்.. அவென் தங்கச்சி வாழ்க்கனா லட்டு மாறி இருக்கனும்.. அடுத்தவன் தங்கச்சின்னா அத போட்டு நசுக்கி பூந்தி யாக்கிடுவிங்களாம்.. என்ன ஆளுங்கடா நீங்க.. ச்ச.. " என்றவனின் புலம்பலை கேட்கத்தான் ஆள் இல்லை.. 


எல்லாம் பேக் செய்யப்பட்ட தயாராக இருக்க அனைவரிடமும் மனமே இல்லாமல் விடைபெற காத்துக் கொண்டு இருந்தாள் வைசு.. அவளின் தலையில் கை வைத்து தடவிக்கொடுத்தவன்.. ஆதரவாய் அணைத்தான் ரிஷி தரன்.. 


" போய்ட்டு வாறேன் அண்ணா.. " சிறு கண்ணீர் வந்தது ஏன் என்று தான் தெரியவில்லை அவளுக்கு..


"டேய் மினி சின்சான்.. உங்கம்மா பாசத்த மழையா பொழியுறாளே டா.. நீ என்னனு கேக்கலையா.. " கௌதம் துறுதுறுவென சுற்றித்திரியும் நந்து அமையாக ஓர் இடத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து கேட்டான் அவனை உற்சாகப்படுத்த என்று.. 


"..... " 


" என்னடா கீழ எதையும் போட்டுட்டியா.. தல நிமிரவே மாட்டேங்கிற.. " என கேலி செய்த கௌதமை ஓடி வந்து அணைத்தான் சின்ன வாண்டு..


" மாமா நா போய்ட்டா என்ன மறந்துடுவிங்களா.. " நந்து ஏக்கத்துடன் வந்தது அவனின் குரல்.. சொந்தங்கள் ஏதும் இன்றி தனியாய் இருக்கும் சின்ன குழந்தைக்கு இந்த குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல்...


"மறக்க கூடிய ஆளா டா நீ.. " 


" என்ன வந்து பாப்பியா மாமா.. 

 வருண ஆதிய அகிய  அத்தைய எல்லாத்தையும் கூட்டீட்டு வருவியா மாமா.. " என விடாது பேசியவனை சின்ன சிரிப்புடன் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் கௌதம்..


" நிச்சயம் எல்லாத்தையும் கூட்டிட்டு வருவேன்.. ஆனா ஒருத்தர தவிர..” 


" யாரு ஆதிய வா.. " 


" ஹீஹீம்.. ஹரிணி வந்தா ஆதியும் கூடவே வந்திடுவா.. சோ நீ சரி கட்ட வேண்டியது ஹரிணிய.. நா சொல்லுறது முக்கியமான ஆளு.. நீ சொன்னா கேப்பாங்க.. எனக்காக ரெக்கமெண்ட் பண்ணேன்டா.. மாமா உங்கிட்ட கேக்குற ஒரே ஒரு உதவி.. ப்ளீஸ்.. " கௌதம்..


அவனை பார்த்து தன் குண்டு கன்னங்களில் குழி விழ சிரித்தவன் " மாமா நீங்க இவ்ளே கெஞ்சுற அளவுக்கு வச்ச ஆளு யாரந்த ஆளு.. உங்க ரொம்ப அழைய விட்டுறது.. " நந்து..


" உன்னோட இந்து அத்த தான்டா.. பாரின்ல தேன்நிலவு கொண்டாட வேண்டிய என்ன இந்தியாவ விட்டே போக்கூடாதுன்னு கன்ட்ரோல் பண்ணுறாளே என்னோட மனைவி.. வைஃப்.. மிஸ்ஸஸ் ஹரிஹர கௌதமன்.. அவளத்தான்டா சொல்லுறேன்.. " என்றவனின்‌ தலையில் தட்டினான் இந்து..


"சின்னப் பிள்ளைட்ட பேசுற பேச்சா இது.. " இந்து..


"யாரு இவன்னா சின்னப் பிள்ள.. வாய் பத்தூருக்கு பேசுறான்.. அவன அடக்காத என்னைய மட்டும் சொல்லு.. " என சண்டையிட நந்து இவர்களை பார்த்து குஷியாகி பழையபடி மாறி குறும்புடனும் குஷியுடன் புறப்பட்டு சென்றான் தன் அன்னையுடனும் தந்தையுடனும்.. 


" அண்ணே எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்.. " பிரகாஷ்..


" என்னடா இவ்ளோ நடந்திருக்கு ஆளையே காணுமேன்னு பாத்தேன்.. என்ன தெரியனும் உனக்கு.. " கௌதம்..


" அதுவாண்ணே.. இப்ப இந்த கேரக்டர் வந்துட்டு போனதுனால.. நம்ம கதைல என்ன முன்னேற்றம்.. பிரகாஷ்..


" முன்னேற்றமா.. ஹாங்.. அது நம்ம கதைக்கு இல்ல.. சத்திய மூர்த்தி பெரிப்பா உடம்புக்கு தா.. " கௌதம்..


" என்னண்ணே சொல்ற சித்தப்பா.. உடம்புலயா.. " 


" ஆமாண்டா‌.. தன்னோடு பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாததுனால அவரோட ப்ரைன் சரியா வேல செய்யலையாம்.. எதோ கவல அதுனால தா அவரு கண்ண முழிக்கலைன்னு டாக்டர் சொன்னாங்கலாம்.. இப்ப மகளோட வாஸ்ஸ கேக்கையும் மூள வேல செய்ய ஆரம்பிச்சு சீக்கிரம் எந்திரிச்சு உக்காந்திடுவாராம்.. நேத்து உங்கண்ணே ஒரு டாக்டரோட வந்தான்ல அந்த டாக்டர் தா சொன்னாரு.. கை கால்ல எல்லாம் அசைவு தெரியுதுன்னு.. " என கௌதம் சொன்ன உடன் விரைந்து சென்று மூர்த்தியை கண்டான் பிரகாஷ்..


அவன் மட்டுமல்ல அனைவருக்கும் இது சந்தோஷமான செய்திதான்.. ஆனால் அவரின் வருகை தரனுக்கு எப்படி இருக்குமோ.. 


ஏன் தான் இவர் எழுந்தார் என நிச்சயம் வருந்தப் போகிறான்.. ரிஷி தரன்..


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...