முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 60

 

அத்தியாயம்: 60


ஏமாற்றம் புதிதல்ல..

ஏமாறும் விதம் தான் புதிது.. 

சில நேரம் அன்பால்..

சில நேரம் நம்பிக்கையால்..


அழகிய வேலைப்பாடுகள் கொண்ட வயர் நாற்காலியில் அமர்ந்திருந்தார் சத்திய மூர்த்தி.. 


இவரைப்‌ பார்த்தால் கோமாவில் இருந்து எழுந்தவர் போல் இல்லை.. கோபமாக இருப்பவர் போல் இருக்கிறார்..‌


மகள் வந்து சென்ற இரு நாட்களிலேயே சுயநினைவானது வந்து விட்டது.. மேலும் சில வாரங்கள் கடக்க மனிதன் எழுந்து வாக்கிங் செல்லும் அளவுக்கு தேறியிருந்தார்.. 


இன்று காலை தன் அண்ணன் மகன் பிரகாஷ் உடன் தன் நடை பயிற்சியை தொடங்கியவர் பக்கத்தூரில் நடை பெறும் சந்தை வரை சென்றார்‌.. அங்கு விக்ரம பாண்டியனை கண்டார்.. 


மூர்த்தியை பார்த்த விக்ரம் மகிழ்ச்சியுடன் நலன் விசாரிக்க அருகில் வர.. பிரகாஷ் குழம்பி போனான்.. ' இவனுக்கு எப்படி சித்தப்பாவ தெரியும்.. ' என்று 


சில பல குசலனத்திற்கு பின் அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்க விக்ரம் மறுத்து விட்டான்.. 


" சித்தப்பா விக்ரம உங்களுக்கு எப்படி தெரியும்.. " பிரகாஷ் .


" கண்ணு இருந்த தெரியத்தான டா  செய்யும்.. ஆமா நீ யென் அவன மொறச்சுக்கிட்டே நின்ன.. " மூர்த்தி..


பிரகாஷ் பாண்டியன் ப்ரதர்ஸ் உடனான பகையை ஆரம்பம் முதல் அனைத்தையும் கூறினான்.. ஹரிணியின் திருமணம் உட்பட அனைத்தையும் தலைப்பு செய்தியாக ஓர் வரியில் முடித்து விடாது.. விரிவான செய்தியாக வாசித்தான்.. பிரச்சினைகளுக்கு இடையே நடந்தால் தரனின் திருமணம் பற்றி யாரும்  தெளிவாக தெரிவிக்கவில்லை அவருக்கு..  

 


பிரகாஷிடம் விக்ரமை அழைத்து வருமாறு கூறியவர் கையோடு வீட்டிற்கும் இழுத்து சென்றார்.. 


" டேய் கைப்புள்ள.. இவென எதுக்கு கூட்டிட்டு வந்த.. " கௌதம் கோபமாக..



ஊராரின் முன் ஹரிணியை அவமானப்படுத்தியவன் என்பதால்.. 


"சித்தப்பா தா கூட்டிட்டு வந்திருக்குறார்.. நா இல்லண்ணே.. "  பிரகாஷ்..


" இவனோட முழியே சரியில்லையே.. அறுப்புக்கு வந்த ஆடு மாறில்ல முழிக்குறான்.. யாரு விக்ரம் கழுத்த அறுக்க போறது.. " ஹரிணி.


" வேற யாரு உன்னோட புருஷனாத்தா இருக்கும்.. " கௌதம்..


" கழுகுக்கு மூக்குல வேர்த்த மாறி வந்துட்டான்.. " ஹரிணி முணுமுணுப்பாக சொல்ல தரனின் புல்லெட் சத்தம் கேட்டது.. 


‘மஞ்சத்தண்ணி தெளிச்சுட்டானுங்க.. எப்ப வேணும்னாலும் நம்ம தல காணாமப் போய்டும்..’ இது விக்ரமின் மனநிலை.. 


உள்ளே வந்த தரன் , விக்ரமை பார்த்து விட்டு அலட்சியமாக மாடி ஏற படிக்கட்டில் காலை வைப்பதற்கும்  மூர்த்தி அவனை அழைப்பதற்கும்‌ சரியாக இருந்தது.. 


மூர்த்திக்கு எதிராக , விக்ரமிற்கு அருகில் அமர்ந்தான் தரன்.. " என்னப்பா.. " 


" இது யாருன்னு உனக்கு தெரியுமா.. " 


" ம்.. பக்கத்தூர்காரன தெரியாதா என்ன.. இவரு பேரு விக்ரமபாண்டியன்.. " என விக்ரமை பாத்துக் கொண்டே சொன்னான்.. 


" அவ்வளவு தானா.." அழுத்தமான குரலில்..


அவருக்கு எதுவோ தெரிந்திருக்கிறது என்பதால் எழுந்து நின்றவன்..                      


" உங்களுக்கு இப்ப என்ன தெரிஞ்சுக்கணும். " தரன்..


"இதுவரைக்கும் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு  செஞ்சுக்கிட்டு இருக்கியே.. அது..” 


" எது.. " தரன்..


" ம்ச்.. இவன உனக்கு இங்க வந்ததுக்கு அப்றம் தா தெரியுமா.. என்ன.. " மூர்த்தி..


" ஏ அவனும் நானும் ஸ்கூல் படிக்குறப்பைல இருந்து ப்ரெண்டுன்னு தெரியாதாக்கும் உங்களுக்கு.. " தரன் திமிராக சொல்ல…வீட்டினர் அதிர்ந்து போனார்கள்.. 


இந்த எட்டு வருடங்கள் இவர்களின் சண்டையை பற்றி அனைவரும் அறிவர்.. நண்பர்களுக்குள் சண்டையா.. ஏன்..


தன் முன்னே இருந்த மேஜையை தள்ளிவிட்டு எழுந்தவர் கோபமாக ரிஷியின் சட்டையை பிடித்து உலுக்கினார்.. " ச்ச.. ‌ஏன்டா உன்னோட புத்தி இப்படி பேதலிச்சு போச்சு.. உன்ன இப்படியாடா வளத்தேன்.. அசிங்கமா இருக்கு.. " என்றவர்..


" இந்த பொண்ண எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு.. ஊருக்காக  உன்னோட அப்பத்தாக்கான்னு சொல்லாத உன்னோட அப்பனுக்கு இன்னும் புத்தி நல்லாத்தா வேல செய்யுது.. சொந்த வீட்டுல இருக்குறவங்க கிட்டேயே பொய் சொல்லி நாடகமாடிருக்க.. உன்ன பத்தி நல்லாவே தெரியும் டா.. சொல்லுடா.. ஏ.. கல்யாணம் பண்ண.. " என ஹரிணி கைகாட்டி வினவினான் மகனிடம்..


" பொய்யெல்லாம் சொல்லலையே.. " அதே திமிருடன்.. 


மீண்டும் அவன் மேல் பாயப்போனவரை நாச்சியம்மாள் தடுத்தார்.. "  எலே கூறுகெட்டவனே.. அவென் நாஞ் சொன்னானு தா பண்ணான்.. இப்ப என்னங்கிற.. வந்துட்டான் தோலுக்கு மேல் வளந்த பிள்ளையை அடிக்க.. போடா அங்கிட்டு.. கேணப்பயெ.. " 


" ஏ அப்பத்தா.. என்ன காப்பாத்துரியாக்கும்.. இது தாலி எடுத்து குடுக்குமா இவரு மண்டைய மண்டைய ஆட்டிட்டு கட்டிடுவாராம்.. யார்ட்ட உடுற கதய.. உம் பேரன பத்தி தெரியாம திரியுர.. பக்கா பிராடு அவன்.. " கௌதம்..


" டேய்.. வாய மூடிட்டு இருடா.. " கலியபெருமாள்.


" அப்படில்லாம் இருக்க முடியாது.. கேக்குறாங்கள்ள பதில் சொல்ல தைரியம் இல்லையோ.. " கௌதம் தரனை பார்த்து நக்கலாக கேட்க..


தரன் விக்ரமை பார்த்தான்.. ' எல்லாம் உன்னால் தான்.. 'என்பது போல்..


' இவனுங்க குடும்ப சண்டைல வெட்டியா ஏன்டா எந்தலைய உருட்டுரிங்க.. ச்ச.. நல்லா இருக்கிங்கலான்னு குலசம் விசாரிக்க வந்தது ஒரு குத்தமா‌.. குடும்பமா சுத்தி நின்னு காதுக்குள்ள கத்துரானுங்க.. ‌இவென் வேற நம்மல மொறப் பொண்ணு மாறி பாத்து  மொறைச்சுக்கிட்டே இருக்கான்.. ' விக்ரம்..


" எம்பேரன் சீமைக்கே ராசா‌டா.. அவென் எதுக்கு டா பயப்படனும்..  உனக்கு பொறாம.. " நாச்சியம்மாள்.. 


" அம்மா சும்மா இருங்க.. நீங்களும் இவனும் கூட்டா தான ப்ளான் போட்டு இந்த கல்யாணத்த நடந்திருக்கீங்க இல்யான்னு என்னப் பாத்து சொல்லுங்க.. " மூர்த்தி.. 


"அ...து..... அ...து ... " என தடுமாறியவர் பின்..


 " அவா நம்ம பேச்சியம்மா பேத்திடா.. அதுமட்டுமில்லாம அந்த கிராமத்து நல்லது நடக்கும்ன்னு தா.. பண்ணோம்.. " 


" எந்த கிராமத்துக்கு.. " 


" எங்க ஊருக்கு தாப்பா.. " என விக்ரம் எழுந்து நின்றான்.. தன் சட்டையின் மேல் இரண்டு  பட்டனை சரி செய்த படி... 


கண்களை மூடித் திறந்தவர்... "வேற யாரும் இங்க பேச வேண்டாம்.. பதில் சொல்ல வேண்டியவன் மட்டும் பேசுனா போதும்.. " என‌ தன் மகனை பார்த்தார் .


ஹரிணி , ஒன்றும் புரியாமல் பார்வையாளராக மாறிப்போனாள்.. தன்னை திட்டமிட்டு வலையில் மாட்டிய மானுக்கு உதவுவது போல் நடந்தேறிய கல்யாணமா இது என்றிருந்தது..


" என்ன தெரியனும் உங்களுக்கு.. ஆமா ப்ளான் பண்ணி தா இவள தா கல்யாணம் பண்ணேன்.. ஏன்னு தெரிஞ்சுக்கணும் அதான.. " நிதானமாக கூறியவன் பின் கோபமாக. 


" முப்பது வருசத்துக்கு மேல இருக்கும் பா.. அந்த ஊருல விவசாயம் பாத்து.. மழை தா ஏமாத்துன்னு பாத்த டேம் கட்டி வச்சு மனுசங்களும் சேந்து ஏமாத்துரானுங்க.. அவங்க படுற கஷ்டத்த போலிஸ்ல சொன்னோம்.. கோர்ட்டுல கூட சொன்னோம்..  யாருக்குமே புரியலப்பா அது.. சரி அந்த எடத்துக்கு சொந்தக்காரன் கிட்டையாச்சும்  கேப்போம்.. வெல குடுத்து வாங்கிடலாம்னு நினைச்சு தா இதோ இவளோட அண்ணன பாக்க  போனான் விக்ரம்.. வந்து இறங்கும் போது அவனுக்கு தலைலயும்  கால்லையும் கட்டு.. ஆள் விட்டு அடிச்சிருப்பான் போல..  ***** 


அந்த ஊருல பாதி ஜனம் ஊரையே காலி பண்ணிட்டு போய்ட்டானுக.. ராப்பகல கண்ணு முழிச்சு மண்ணே கதின்னு வேர்வ சிந்தி உழைக்கிற விவசாயியப் பத்தி  அந்த  பட்டணத்துல இருக்குற அவன் ஏ கவலப்படனும்..  



தண்ணீர் நம்மளோட தேசிய சொத்து அத யாராலும் என்னோடதுன்னு சொந்தங்‌ கொண்டாட முடியாது.. அந்த நிலத்த நாங்க கேட்டோம் குடுக்கல.. அதா எடுத்துக்க முடிவு பண்ணேன்..  " உணர்ச்சி மிகுதியாக பேசினான் அவன்..


" சரி அதுக்கும் ஹரிணிக்கும் என்ன சம்மந்தம்.. " கௌதம்..


" மிஸ்டர் ரெட்டியோட பேத்தி ஹரிணிக்கு சில ப்ராபர்டிய எழுதி வச்சிருக்காரு.. அதுல அந்த டேமும் அடக்கம்.. அதா ‌சம்மந்தம். " தரன்.


" அதுக்கு நீ பேசியிருக்க வேண்டியது ஹரிணி கிட்டதான.. ஏ நீ அவளோட அண்ணன்ட்ட பேசி‌ அவமானப்படனும்.. " கௌதம் 


" மேடம் மேஜர் ஆனாலும் கார்டியன் இன்னும் அவளோட அண்ணெந்தா.. அவனோட பர்மிஷன் இல்லாம எதையும் தனியா ஹரிணியால செய்ய முடியாது.. "


" சரி இதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்.. " மூர்த்தி.. அவர் விடாமல் அதையே கேட்க..


" பிரச்சனை என்னனு சொல்லியிருந்தா‌.. நிச்சயம் ஹரிணி ஹெல்ப் பண்ணிருப்பால்ல.. அத விட்டுட்டு தலைய சுத்தி மூக்கத் தொடுரமாறி.. ஏ கல்யாணம் பண்ண.. ஏ ஒரு பொண்ணோட வாழ்க்கையையே கல்யாணங்கிற பேர்ல கெடுக்கனும்.." என்ற கௌதமை தீயாய் முறைத்தான் ரிஷி..


" அவனா ஏண்டா மொறைக்கிற.. அவெ கேட்டதுக்கு பதில் சொல்லுடா.. " 


" என்னப்பா நீங்க ரெட்டிக்கு இவ்வளோ அழகான பேத்தி இருக்கும் போது ‌யாராது விடுவாங்களா.. வாய்ப்பு கிடைக்கும் போதே அத யூஸ் பண்ணிக்கனும்.. அப்படி இல்லைன்னா  அந்த வாய்ப்ப நாமலே உருவாக்கிக்கனும்.. 


எனக்கு ரெட்டியோட பேத்திய கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு கிடைக்கும் போது ஏ தவற விடனும்.. அவ்ளோ தா.. " என சிம்பிளாக கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு மீதிக் காசில் மிட்டாய் வாங்குவது போல் கூறினான்.. 


மனம் விரும்பியவளை திருமணம் செய்தாச்சு ஊர் பிரச்சணையும் தீர்ந்தாச்சு‌.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல் இருந்தது அவனின் பேச்சு.. 


அதை கேட்டு இரு உள்ளங்கள் தவித்தது‌.. அது ஹரிணியும் மூர்த்தியும்.. அவன் காதல் என்று கூறியிருந்தால் இருவரும் தவித்திருக்க மாட்டார்கள்.. ஆனால் அவன் சொல்லவில்லையே.. ஒரு காரணத்திற்காக திருமணம்.. அது எப்படி சரியாக இருக்கும் என அவர் அமைதியாக இருக்க..


" அவ்ளோ தானா விசாரணை.. நா போலாம்ல.. " என நடக்க‌ முயன்றவனை மீண்டும் தடுத்தார் மூர்த்தி.


' இப்ப என்னவாம்.. ' என அவன் திரும்ப மூர்த்தி அறைக்குள் சென்று எதையோ எடுத்து வந்தார்.


" புதுசால்லாம் எதுவுமில்லப்பா.. நீ சொன்னது தா வாய்ப்ப யூஸ் பண்ணிக்கனும் இல்லைன்னா உருவாக்கிக்கனும்‌.. இப்ப நா ஹரிணிக்கு ஒரு வாய்ப்பு தரப்போறேன்.. அதுனால இதுல கையெழுத்து போடு.. " என டைவர்ஸ் பேப்பரை நீட்டினார் மூர்த்தி..


' ஆஹா.. நம்ம மனசுல நினைச்சத எல்லாம் மனுஷன் நேரடியா‌ செய்யுறாரே.. இவருக்கு முக்கு ரோட்டுல ஒரு கோயில் கட்டிட வேண்டியது தா..' கௌதம் மைன்ட் வாய்ஸ்..


" ப்பா.. " என நிதானமிழந்து கத்தினான் ரிஷி தரன்.. 


மூர்த்தி நிதானமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டார்..  ' நீ போட்டுத்தான் ஆக வேண்டும்..' என்பது போல்..


" இதுல நா சைன் பண்ண மாட்டேன்.. போட முடியாது.. " தரன் அழுத்தமாக..


" நீ அப்படில்லாம் சொல்ல மாட்ட. நீ பண்ணறது எல்லாம் ஊருக்காக தான.. இனி அந்த ஊருக்கு எந்த பிரச்சனையும் வராது..‌ சட்டப்படி பாத்துக்குவோம்.. நீ போட்டுட்டு போ கையெழுத்த..


விரும்பமில்லாமலும் கட்டாயத்தாலயும் நீ ஒரு பொண்ணு கூட வாழ்ந்து உன்னோட வாழ்க்கையையும்.. சூழ்ச்சி செஞ்சி கல்யாணம் பண்ண உங்கூட கடமைக்கேன்னு அந்த பொண்ணும் வாழ்றத விட.. இது தா சரியா இருக்கும்.. " அவனைவிட  அழுத்தமாக  அவனின் தந்தை என்று நிருபித்தார்..


அவரும் பார்த்துக் கொண்டே தானே இருக்கிறார் மின்னும் மருமகளும் நடத்தும் குடித்தனத்தை.. ஒட்டியும் ஒட்டாமலும் திரியும் அவர்களை நிரந்தரமாக விலக்கி வைப்பதே மேல் என நினைத்தார் மூர்த்தி.. 


தந்தையின் பிடிவாதத்தை பார்த்தவன் என்ன செய்வது என்ற யோசனையுடன் நின்றவன் சற்று தூரத்தில் கண்களில் ஏக்கத்துடனும் காதலுடனும் தன்னை பாத்துக் கொண்டு இருக்கும் மனையாளை கண்டான்.. 


அவளின் கண்களில் தெரியும் காதல் தந்த நம்பிக்கையில் அவளை சீண்ட வேண்டும் என்ற ஆசையில் விளையாட்டாகவே  விவாகரத்து பேப்பரில் கையொப்பமிட்டான்..


விளையாட்டு ஒரு நாள் வினையாய் முடியும் என்று தெரியாமல்..


இருவரையும் இணைக்கும் வாழ்க்கை என்ற‌ பாலத்தில் ஏற்கனவே அவளின்‌ பெண்மையை வலுக்கட்டாயமாக அபகரித்து முதல் விரிசலை ஏற்படுத்தினான் என்றால்.. விவாகரத்து பேப்பரில் கையெழுத்திட்டு அந்த விரிசலை டெவலப் ஆக்கினான் ரிஷி.. 


இன்னும் ஒன்று அல்லது இரண்டு அடிகள் மட்டுமே தாங்கும் அந்த பாலம்.. இவர்கள் அதை முழுமையாக உடைப்பார்களோ.. அல்லது பூசி சரி செய்வார்களோ.. யாருக்கு தெரியும்..


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

அன்பே 59

அன்பே 61


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...