முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 61


 

அத்தியாயம்: 61 


அவனைப் பார்த்து பேச முடியாத தருணங்களில் நான் அனுபவிக்கும் வேதனைகளை என் விழியோரம் உண்டாகும் ‌கண்ணீர் துளிகளே சொல்லும்..


" கோ..வா..‌ போலாமா வேண்டாமா.. வேண்டாம் சிங்கிளா இருக்கும் போதுதா கோவா போனும்.. வைஃப் கூட போனா பாக்கவே முடியாது..” கௌதம் கையில் இந்தியா மேப்பை வைத்துக்கொண்டு..


" எதடா பாக்க முடியாது.. " மூர்த்தி..


" நா டூரிஸ்ட் ப்ளேச சொன்னேன் பெரிப்பா நீங்க கண்டதையும் போட்டுக்குடுத்துடாதீங்க.. " கௌதம்..


அந்த வீட்டில் தற்போது மகிழ்ச்சியாக இருக்கும் ஜீவன்கள் இரண்டு பேர் தான்.. அது சத்தியமூர்த்தி மற்றும் கௌதம்.. மற்றவர்கள் இவர்களை பார்த்து கடுப்புடன் முறைப்பதை இவர்கள் பொருட்படுத்துவதே இல்லை..  


" நீங்க தா காடு காடா சுத்திருக்கிங்களே.. மூணாறு மிசோரம் இந்த மாறி நல்ல  இடமா சொல்லுங்க.. " கௌதம்..


" எதுக்குடா நக்சலைட்டா மாறப்போறியா " மூர்த்தி.


" பெரிப்பா திஸ் இஸ் டூ மச்.. நானும் மை டியர் பொண்டாட்டியும் சுத்திப்பாக்க போறோம்.. மினி ஹனிமூன்னு மாறி வச்சுக்கலாம்.. போலாமா மதி..” கௌதம் மனைவியை பார்த்து..


அவனை முறைத்துக் கொண்டே வந்தவள் கையில் வைத்திருந்த சூடான காபியை‌ அவனின் மேல் தெறிக்கும் அளவுக்கு வேகமாக அவனுக்கு அருகிலவ் வைத்து விட்டு சென்றாள் அவனின் மதி.. 


"ஷ்..‌ஆ.. நா என்னடி பாவம் செஞ்சேன்.. ஆ.. எரியுது டி. " கௌதம் அலற.. 


" நல்லா எரியட்டும்.. ஹிம்.. " என திரும்பி பார்த்து சொன்னாள் அவள்.. 


" உன்னோட அத்தான் ஊர விட்டு போனதுக்கும் எனக்கும் என்னடி சம்மந்தம்.. என்னமோ நானே அவன பஸ் ஏத்தி அனுப்ச்ச  மாறி இந்த திருப்பு திருப்புற.. " என்ற அவனின் பேச்சைக் கேட்கத்தான் அவள் இல்லை.. சென்று விட்டாள்.. 


நேற்று நடந்த களேபரத்தால் தான் ரிஷி தரன் வீட்டை விட்டு வெளியேறினான் என அனைவரும் மடக்கி மடக்கி கேள்விகளை கேட்ட இருவர் மீதும் கோபமாக இருக்கிறார்கள்.. இருக்கும் சிறிய மரியாதையும் இல்லாமல் போனது கௌதமிற்கு.. 


" மதியானம் ஆகப் போது காபியா குடுக்குறா‌.. சாப்பாடு எப்பத்தா  போடுவா.. " கௌதம் பசியில் கத்த..


" சாப்பாடெல்லாம் கிடையாது.. " மலர்..


" பெரிம்மா நா பாவமில்லை யா.. 

 பசி.. என்னால எப்படி தாங்கிக்க முடியும்.. என்னப்பத்தி கவலப்பட மாட்டிங்களா..  " கௌதம் பாவமாக..


" நா எதுக்குடா கவலப்படனும்.. உன்னோட ஃப்ரெண்டு சாப்பிட்டு ஒரு நாள் ஆகப்போது.. நீ அதப்பத்தி எதாச்சும் கேட்டியா.. வந்துட்டான் சுயநலவாதி சாப்பாடு போடுன்னு தட்ட தூக்கிகிட்டு.. " மலர் வெடுக்கென பேசிச் செல்ல..


அப்போதுதான் நினைவு வந்தவனாக ஹரிணியை தேடினான்.. அவள் கீழே இல்லை.. அகிலன் கிருபாவதியின் கைகளில் இருக்க அவள் ரூமை வீட்டு வெளியே வரவில்லை.. 


வேகமாக மாடி ஏறி அறையின் கதவை தட்ட அது திறக்கப்படவில்லை என்ற போதும் பதில் கூட உள்ளிருந்து வர வில்லை என்பது கவலையாக இருந்தது அவனுக்கு..


" அண்ணே கதவு தெறக்கல‌ என்ன பண்ணப் போற.. " பிரகாஷ்..


" கதவ ஒடைச்சுடலாமா.. " 


" அப்பத்தா உன்னோட  பல்ல ஒடைச்சுடும் பரவால்லையா.. " 


கௌதம் யோசைனையுடன் வெளியே சென்றான்.. 


" ரூம் குள்ள போக கதவ விட்டா வேற வழியே கிடையாதுண்ணே.. உங்கிட்ட  இல்லாத ஒன்ன யோசிக்குறேன்னு கஷ்டப்படுத்தாதண்ணே..”  பிரகாஷ் .


" ஆமா எங்கிட்ட இல்ல இவர்ட்ட இருந்து வழியிது.. வந்து பத்தூர்க்கு பார்சல் கட்டி சப்ளே பண்றேன்.. இது பெரிய   பேலஸ்ஸூ உள்ள போக எங்களுக்கு வழியே தெரியாது பாரு.. பால்கனி வழியா போப்போறேன் நீ கதவு கிட்டையே இரு.. திறந்து விடுறேன்‌.. " கௌதம் பைப் வழியாக அவளின் அறையில் நுழைந்தான்..


அவனுக்கு தேடும் வேலை ஏதும் வைக்காமல் பால்கனியிலேயே மூங்கில் ஊஞ்சலில் துயில் கொண்டிருந்தாள் ஹரிணி.. கன்னத்தில் மெல்லிய நீர் கோடுகள்..


நேற்று..


மூர்த்தி ஹரிணியிடம்  " உனக்கு எப்ப என்னோட மகெங்கூட வாழ முடியாதுன்னு தோனுதோ அப்ப நீ இத யூஸ் பண்ணிக்கம்மா.. கல்யாணம் ஈஸியா நடந்த மாறி பிரிவும் சுலபமா இருக்கனும்.. இந்த கல்யாணமும் அப்றம் நடந்த அசம்பாவிதம் எல்லாமே எம்பையெ பண்ணது தப்புன்னு எனக்கு தெரியும்.. அதுக்கு நா உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. இனி உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் நானும் என்னோட மகனும் ஏத்துப்போம்மா.." என டிவர்ஸ் பேப்பரை அவளிடம் கொடுத்தார்..


கையில் காகிதத்துடன் அறைக்குள் வந்தவளை பார்த்து.. " நல்ல நாள் பாத்து நல்ல நேரம் பாத்து சைன் பண்ணப் போறியா.. ஹப்பி லைஃப் மா... என்னோட தொந்தரவு இனி இருக்காது.. நிம்மதியா இருக்கலாம்.. " என நக்கலாக கூறினான் பெட்டியில் தன் உடைகளை அடுக்கிக் கொண்டே..


" எங்க போப்போற‌.. " ஹரிணி..


" நீ கேட்டா நா பதில் சொல்லனுமா.. " என்றவன் பெட்டியை மூடி கையால் எடுத்துக் கொண்டு அவளின் அருகில் வந்தான்.. அவனையே முறைத்து கொண்டு நின்றிருந்தாள் ஹரிணி..


" வித் யுவர் பர்மிஷன்.. " என பர்மிஷன் குடுக்கும் முன்னரே அவளின் இதழில் முத்தமிட்டவன் பதில் ஏதும் சொல்லாமல் சென்று விட்டான் பெட்டியை எடுத்துக் கொண்டு.. 


கள்வனாய் தன் வாழ்வில் நுழைந்து மாயங்கள் செய்து அவன் இஷ்டத்திற்கு தன்னை வளைப்பதை அறிந்து என்ன செய்வது எப்படி எதிர்கொள்வது என யோசித்தபடியே உறங்கி விட்டாள்.. அவன் இல்லாத இரவு.. 


“குட் நைட் கிட்.. “ அவள் பதிலுக்கு இதழ் சுழிப்பாளே தவிர அவனிடம் பேச மாட்டாள்.. இன்று அவனின் குரல் கேட்காது சோஃபா முள்ளாய் குத்த மூங்கில் ஊஞ்சலில் தஞ்சமடைந்தாள் கண்ணீருடன்.. 


"ஹரிணி..”  


" ஹரிணிம்மா.. ஹரிணி..”  என கன்னம் தட்டியவன் எழவில்லை என்றதும் அவளை தூக்கிக் கொண்டு கட்டிலில் கிடத்தி கதவை திறந்து விட்டு.. அவளின் முகத்தில் நீர் தெளித்தான்.. சோர்வோடு இருந்தவளை தேற்றி உணவுண்ன வைத்தான்..‌ அவளின் இந்நிலை கண்டு குடும்பத்தினர் அனைவரும் மூர்த்தியுடன் வாதிட ஆரம்பித்தனர் காரணம் அவர்தான் என்று.. ஒரு பக்கம் சண்டௌ நடந்து கொண்டிருக்க..


" வாயென் பைக்ல ஒரு ரைடு போலாம்.. ஜாலியா..” என்றழைத்தான் கௌதம் ஹரிணியை.. 


அவனை முறைத்தபடியே 'இப்ப இது ரொம்ப முக்கியமா.. ' என இந்து முணுமுணுக்க..


" எனக்கு மூடு இல்ல ‌கௌதம்.. " ஹரிணி..


" அத மாத்ததா கூப்பிடுறேன்.. வா.. " 


இடது வலதாக தன் தலையை அசைத்து தன் மறுப்பை சொன்னாள் ஹரிணி.. 


ஹரிணியின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்.. " எப்பைல இருந்து நீ அவன லவ் பண்ற.. " என்றான்..


லவ் என்றவுடன் நிமிர்ந்து கௌதமை பார்த்தவள்.. " அது எனக்கு தெரியல.. " ஹரிணி மெல்லிய குரலில்...


" ஆனா லவ் இருக்கு.. அப்படி தான..” என்க மெல்லிய தலையசைப்பு பதிலாக கிடைத்தது..


“ ச்ச.. இந்த அழகான பொண்ணுங்களுக்கு ஏன் தா புத்தி இப்படி போகுதோ.. தேடித் தேடி ஏமாத்துக்காரனுங்களா பாத்து பாத்து காதலிக்குறாங்க‌.. " கௌதம்..


அவள் மௌனமாக இருக்கவும்.. " உனக்கு வந்த இந்த ஃபீலிங் அவனுக்கு இருக்குமா என்ன.. " கௌதம் சந்தேகமாக..


" எந்த ஃபீலிங்க.. " 


" லவ்வும்மா.. லவ்வு.. லவ்வு.. அவனுக்கு உம்மேல இருக்கா என்ன.. " 


" இருக்கு.. " 


" உன்ட சொன்னானா.. " 


இல்லை என தலையசைத்தாள்.. " அப்றம் இருக்குன்னு சொல்ற.. " கௌதம்..


" ..... " ஹரிணி 


" ம்ச் பேசுமா.. நீ லவ் பண்ற மாறி அவனும் லவ் பண்றானா.. " என்க தன் நெஞ்சில் கரம் வைத்தாள் ஹரிணி.. 


" என்ன நெஞ்சு வலிக்குதா.. " கௌதம்.. 


" ம்ஹீம் இது சொல்லுது.. அவனுக்கு எம்மேல ஸ்ராங்கின ஃபீலிங் இருக்குன்னு.. நா.. என்னால ஃபீல் பண்ண முடியுது அவனோட பார்வைல இருந்து.. அப்றம் என்ன நெருங்கி வர்றப்பா என்னால அவனோட ஃபீலிங்க உணர முடியுது.. ஆனா லவ்வு தான்னு உறுதியா தா சொல்ல முடியல.. " ஹரிணி.‌. 


" அடிங்க.. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.. ஒன்னு புரியுற மாறி சொல்லு.. இல்ல உங்கிட்டலாம் சொல்ல முடியாதுடா மாங்கா மடையான்னு சொல்லி தொரத்தி விட்டுடு.. இப்ப லவ்வு இருக்கா இல்லையா..” 


" ம்ச்.. ஆமாண்டா.. எனக்கு உங்கண்ணே மேல லவ்வு இருக்கா.. போதுமா.. ஆனா அவனுக்கு தா எம்மேல அது இருக்கா இல்லயான்னு உறுதியா சொல்ல முடியல.. " 


கௌதம் நெஞ்சை படித்த படி தரையில் அமர்ந்து விட்டான்.. மற்றொரு கை அவனின் தலையில் இருந்தது.. 


" என்னடா.. " 


" நா அவன தொரத்தி விட ப்ளான் பண்ணா.. நீ.. யூ.. அவன லவ்....  " 


" ம்ச் அதா என்ன வேண்டாம்னு டைவர்ஸ் பண்ண நினைக்குறானே.. எனக்கு அவன் பிடிக்கல.. பட் பிடிச்சிருக்கு.. அவன் எஸ்.ஜே.சூரியா மாறி என்ன குழப்பிட்டே இருக்கான்டா.. லவ்வு இருக்கா.. இல்லையா.. இருக்கு.. ‌ஆனா அது லவ்வான்னு தெரியல.. ஐய்யோ.. எனக்கே நா என்ன பேசுறேன்னு தெரியலையே.. ஒருவேல எம்மேல அவனுக்கு லவ்வே இல்லையோ.. இருந்ததே என்னால உணர முடிஞ்சதே.. கொழப்புறானே.. " 


" இப்படி பபிள் கம் மாறி வெட்டவும் முடியாம ஒட்டவும் முடியாம இழுத்துகிட்டே இருக்கு உங்க காதல்..  புரியுது.. என்ன நடந்துச்சு.. நேத்து அவன எதுக்கு வீட்ட விட்டு தொரத்தி விட்ட.. " என்றவுடன் ஹரிணிக்கு கோபம் வந்து விட்டது...


" என்ன சொன்ன நா தொரத்தி விட்டேன்னா.. அவ்வா.. பொய் பொய்யா சொல்லாதடா.. உன்னோட அண்ணேந்தா பிக்னிக் போற மாறி துணிய பேக் பண்ணீட்டு.. யார்டையும்.. ஏ.. குத்துக் கல்லு மாறி அவென் முன்னாடி நின்னுட்டே இருந்தேன் ஏன்டையும் சொல்லாம போய்ட்டான்.. நானே அவென் என்ன மதிக்கவே மாட்டேங்கிறானேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்.. இதுல நா அவன வீட்ட விட்டு தொரத்தி விட்டேன்னா‌… ஓம்மூஞ்சு... " என் படபடவென பட்டாசாய் வெடித்தாள் பழைய ஹரிணியாக...


" ஹப்பா.. நீ பழய ஹரிணி தா‌.. இதுவர நீ எக்சாம் பேப்பர்ல பதில் எழுதுற மாறி ஒரு வரில ஆன்சர் பண்ணியா.. அதா பூதம் பேய் எதாவது உனக்குள்ளே இறங்கிடுச்சோன்னு பயந்துட்டேன்.. "..


" எரும மாடே.. " என கௌதமை அடித்தாள் ஹரிணி..


" நிஜமாவா சொல்லுற அவென் உன்ன மதிக்கலையா.. " 


" ம்‌.. ஆமா.. சுத்தமா மதிக்கல‌.. கூடவே இருக்குற ஒரு பொண்ணுகிட்ட எப்படி பிகேவ் பண்ணனும்னு அவனுக்கு தெரியவே இல்லடா.. அதெல்லாத்தையும் விட டைவேர்ஸ் பேப்பர்ல சைன் போடும் போது.. என்ன டீஸ் பண்ணத்தா சைன் பண்ணிருப்பானோ எனக்கு சந்தேகமா இருக்கு.. இப்ப நா என்னதா பண்ணணும் தெரியலையே..” என்றாள்  வேதனையாக..


"நாம எந்த சூழ்நிலையிலும் அழக்கூடாது டார்லிங்.. அது நம்மல பலகீனப்படுத்தும்.. பீ ப்ரேவ்..  ம்.. உன்னோட கண்ணுல இருந்து கண்ணீர் வரக்கூடாதுன்னா அதுக்கு எங்கிட்ட ரெண்டு வழி இருக்கு.. " கௌதம் ஆதரவாய் அவளின் தலையை வருடியபடி..


" என்ன.. " மெல்லிய குரலில்..


" ஒன்னு அவென் நமக்கு தேவையே இல்ல போடா நீயும் உன்னோட தாலியும்னு கழட்டி அவனோட மூஞ்சிலையே.. எப்படி மூஞ்சி மேலேயே விட்டெரிஞ்சுட்டு.. ஒரு பெட்டரான லைஃப்ப அமச்சுக்கிறது‌.. என்ன நீயும் சைன் பண்றியா.. " கௌதம்..


" ஆல்ட்டர் நேட் ஆஃப்ஷன சொல்லு.. அதையும் கேட்டுட்டு எது எனக்கு பிடிக்குதோ அத ‌செய்றேன்.. " ஹரிணி..


" அது வேற ஒன்னுமில்ல மா.. நீ பழைய படம் பாத்துருக்கியா ப்ளாக் அண்டு வெய்ட் அதுல வருமே.. '  தப்பே பண்ணாலும்.. எனக்கு என்னோட புருஷன் தா முக்கியம்.. கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன்.. ' இப்டி டையலாக் பேசிட்டே அவனோட காலுக்கு அடில சரண்டர் ஆகிடனும்.. எப்டி  90 கிட்ஸ் மாறி கிடைச்ச வாழ்கைய அட்ஷஸ்ட் பண்ணப் போறியா இல்ல 2கே கிட்ஸ் மாறி பிடிச்சத வச்சிட்டு பிடிக்காதத தூக்கி எறியப் போறியா‌.. சாய்ஸ் இஸ் யூவர்ஸ்.. " கௌதம்..


"உன்னோட மூனாது ஆஃபர் எனக்கு பிடிச்சுருக்கு.. அதையே செயல் படுத்துவோம்.. " 


" மூனாவதா.. நா ரெண்டு தான சொன்னேன்..” யோசனையுடன்..


"ம்.. மூனாதுதா பழி வாங்கப் போறேன்.. " ஹரிணி..


' மீண்டும் குழந்தை தனமாக எதாவது செய்யப் போகிறாளோ.. ' 


" பழி வாங்கப் போறியா.. எப்டி..” 


" ம்.. எப்டின்னா நாம ஒருத்தர பழி வாங்கனும்னா அதுக்கு நாம அவங்கூடவே தா இருக்கனும் தூரமா போய்ட்டா பழி வாங்குறது கஷ்டம்.. என்ன அழ வச்ச அவன சும்மா விடுறதா.. ம்ஹீம் ‌கூடாது.. நல்ல ஐடியா குடுத்த தேங்க்ஸ் கௌதம்.. " என அவனின் தோலை தட்டி விட்டு போனாள்.. மீண்டும் வரும் போது அவளின் கையில் பெட்டி.. 


" பாய் கௌதம்.. எல்லார்ட்டையும் நா எங்க போறேங்கிறத எக்ஸ்பிளைன் பண்ணீடு.. பை.. " என சென்றே விட்டாள் ஹரிணி.. 


" அப்ப இந்த டிவர்ஸ் பேப்பர்.. " கௌதம்..


" அதற்கு இப்போது வேலை இல்லை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. சீயூ பாய்.. " வெளியே விட்டாள்..  


எங்கு.. 


" ஐய்யையோ இவளும் போறா.. எங்கங்க.. " இந்து..


" உங்கத்தான ‌பாக்க.. " கௌதம்..


" நிஜமாவா.. ஆமா அத்தான் எங்க போயிருக்காருன்னு அவளுக்கு தெரியுமா.. ஊர் ஊரா அழயப்போறாளா இவ..”  என பேசிக் கொண்டே போனவளை தடுத்தான் கௌதம்.. 


" உங்கத்தான் என்ன இமய மலைல உக்காந்து தவம் செஞ்சுட்டா  இருக்கான்.. எந்த மலைல உக்காந்திருக்கான்னு  தெரியாம தேடிக்கிட்டு திரிய.. இதோ இருக்குற திருவனந்தபுரம் அங்க தா இருக்கான்.. " கௌதம்..


" உங்களுக்கு எப்படி தெரியும்.. " 


" அவனோட செல்போன் சிக்கனல ஹேக் பண்ணி தெரிஞ்சு கிட்டேன்.. அவளுக்கும் ஹேக் பண்ண தெரியும்.. நேரா அவென் எங்க இருக்கானோ அங்க போய்டுவா.. அதுமட்டுமில்ல அவென் கேரளா போறதா அப்பத்தாட்டையும் பெரிப்பாட்டையும்  சொல்லுறத நா கேட்டேன்.. "


"உங்க வாழ்க்கையிலேயே இன்னைக்கு தா ஒரு நல்ல காரியம் பண்ணிருக்கிங்க..  ரொம்ப தேங்க்ஸ்.. அத்தான நினைச்சு நா ரொம்ப கவலப்பட்டேன்.. இனி மாட்டேன்.. ஹேப்பி.. " 


" நல்ல காரியம் நா பண்ணல..

காரியம் பண்ணத்தா ஹரிணி போய்ருக்கா.. " 


" என்ன சொல்லுறிங்க.. எனக்கு புரியல.. " இந்து.. 


" தப்பு பண்ணிட்டேன்.. ஹையோ

நா தப்பு பண்ணிட்டேனே.. அவள நா ஏத்தி விட்டுடுக்க கூடாது.. என்ன பண்ணப் போறாளோ.. இனி உன்னோட அத்தான்  லைஃப் உஊஊஊ.. தா.. " என கேலி செய்து விட்டு சென்றான் .


யாருக்கு உஊஊஊ.. பார்க்கலாம்.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...