அத்தியாயம்: 62
இசை பாடும் குயில் ஓசை கேட்..
இதம் தரும் குளிர் காற்று பெற..
இன்பம் பயக்கும் வாழ்வு பெற..
இயற்கை சோலை வேண்டும்..
கேரளா
இயற்கை அன்னையின் செல்ல குழந்தை.. சுற்றிலும் பச்சை பசேலென பசுமையாக இருந்தாலும் புல்லில் முளைத்த காளானைப் போல் ஆங்காங்கே வெள்ளை வெளேரென்று வானுயர கட்டிடங்களும் இருக்கத்தான் செய்தது..
அப்படி ஒரு வானுயர கட்டிடத்தின் நுழைவு வாயிலை ஒரு பைக் கடந்து சென்று ஆங்கில எழுத்துகளால் வரிசைகளாக பிரிக்கப் பட்டிருந்த அந்த சீட்டுக்கட்டு மாளிகையின் ' ஈ' பிளாக்கில் நின்றது..
அதிலிருந்து இறங்கியவன் ஹெல்மெட்டை கழட்டி தன் சிகையை கைகளால் சரி செய்தபடி ஆறாவது மாடிக்குச் செல்ல மின்தூக்கியின் பட்டனை அழுத்தினான்..
லிஃப்ட் சரியாக தன் வேலையை செய்ய நடந்து தன் வீட்டின் கதவை திறந்தான்.. உடைமாற்ற சென்றவனை காலிங்பெல் சத்தம் யாரே வந்திருப்பதாக கூறியது.. கதவை திறந்தான் ரிஷி தரன்..
" இந்தா ப்பா.. இதுல ஃபிஷ் பிரியாணி இருக்கு.. சாப்பிடுப்பா.. " என மலையாளத்தில் கூறி ஒரு கூடையை நீட்டினார் பார்வதி ரிஷியின் நண்பனின் அம்மா..
இங்கு வந்த ஒரு வாரமாக ரிஷி அவர்களின் வீட்டில் தான் வாடகைக்கு இருக்கிறான்.. அவன் இருப்பது சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்.. இதற்கு முன் அதில் பார்வதியின் மகனும் ரிஷியின் நண்பனும்மான ராஜேஷ் அங்கு குடும்பத்துடன் இருந்ததால் வீட்டில் சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் அனைத்தும் இருந்தன.. எனவே ரிஷியே சமைத்து சாப்பிட்டு வந்த நிலையில் திடீரென பார்வதி சாப்பாடு குடுக்கவும் எதற்கு என யோசித்தவன் தன்னை கோபமாக பார்த்து முறைக்கும் பார்வதியின் மகளை கண்டு குழம்பிப் போனான்.. ஏன்.. என்று..
" வேண்டாம்மா நா சாப்பாடு செஞ்சு வச்சுட்டு தா வெளிய போனேன்.. " ரிஷி மலையாளத்தில்..
" வேண்டாம்னு சொல்லாதப்பா.. இது உனக்கு தேவப்படும்.. " என ஒருமாறி குரலில் சொல்லிச் சென்றார்.. அவரின் பார்வையில் சிறு வெட்கம் இருந்தது திரும்பி திரும்பி பார்த்து கொண்டே கோபமாக சென்றாள் அவரின் மகள்.. விட்டாள் அவனை எரித்துவிடுவாள் போல..
" என்னாச்சு இவங்களுக்கு..” என எண்ணியவன் கூடையை டைனிங் டேபிளில் வைத்து விட்டு ஹாலில் இருந்த பாத் ரூமிற்குள் சென்றான்..
திரும்பி வந்த போது அந்த கூடை அங்கு இல்லை.. கதவு அடைக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் வீட்டிற்குள் வர இயலாது எனவே அவன் வருவதற்கு முன்னரே யாரோ வீட்டிற்கு வந்திருக்க வேண்டும்.. முடியாதே.. வீட்டை பூட்டி சாவி அவனிடம் அல்லவா இருந்தது என நினைத்தவன் பெட்ரூமின் கதவு சாத்தப்பட்டு இருப்பதை கண்டான்..
டேபிளில் இருந்த பூ ஜாடியை கையில் எடுத்துக் கொண்டு மெல்ல பூனை நடை போட்டு அறையை திறந்தான்..
" அவ்ளோ சீன்லாம் வேணாம்.. நாந்தா.. நோ வைலென்ஸ் ஹான்.. கைல இருக்குறத கீழ வச்சுடு பாவா.. " என கட்டிலில் அமர்ந்து பிரியாணியை காலி செய்த படி கூறினாள் ஹரிணி..
அவளின் பாவா என்ற அழைப்பு அவனின் தேகத்தை சிலர்க்க செய்தது இருந்தும்..
" ஹேய்.. நீ.. நீ எதுக்கு வந்த.. எப்படி வந்த.. உனக்கு யாரு நா இங்க இருக்குறதா சொன்னா.. கதவு பூட்டி தான இருந்துச்சு.. " என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்..
" ஹலோ.. கேள்வி கேட்டா பதில் சொல்ல டைம் குடுக்கனும்.. பர்கர் இருக்குற சீஸ் லேயர் மாறி ஒன்னு மேல் ஒன்னுன்னு அடுக்கிகிட்டே போற.. டூ மச்.. ஃபஸ்ட் என்ன கேட்ட ஹாங் எதுக்கு வந்தான்னு தான.. நீ பேசாட்டிக்கு யார்ட்டையும் சொல்லாம கிளம்பி வந்துட்ட அங்க எல்லாரும் நாந்தா உன்ன ஊரவிட்டே தொரத்தி விட்டதா பேசுறாங்க.. எனக்கு கேக்க பிடிக்கலப்பா.. அதா வந்துட்டேன்.. உங்கூடவே இருக்கலாம்னு.. " அசால்டாக சொன்னவள் எழுந்து கை கழுவச் சென்றாள்..
" ஏய் யாருடி ஊரவிட்டு வந்தா எனக்கு இங்க வேல இருக்குன்னு அப்பத்தாட்டையும் அப்பாட்டையும் சொல்லிட்டு தா வந்தேன்.. " ரிஷி அவள் பின்னே சென்றபடி
" சொன்னியா.. ஏ ரெண்டு பேருமே எங்கிட்ட சொல்லல.. இந்த கிராணி எம்பேரன் எங்கூட இல்லாம போனதுக்கு நீ தா காரணம்னு சொல்லி சொல்லி அதோட வெத்தல உரல இடிச்சு இடிச்சு பேசுச்சே.. அதெல்லாம் நடிப்பா.. இருக்கட்டும் அத ஊருக்கு போய் கவனிச்சுக்கிறேன்.. "
" நீ இப்பவே போய் கவனிச்சுட்டு வா.. கிளம்பு.. " என படுக்கை அறையில் இருந்த பையை எடுத்துக் கொண்டு அவளை துரத்துவதிலேயே குறியாய் இருந்தான் ரிஷி..
" என்னது கிளம்பவா.. நா உன்ன அக்யூஸ்ட தேடுற மாறி ஃபோன நம்பர எல்லாம் வச்சு நீ யார் யார்ட்ட பேசுன்ன என்ன பேசுனன்னு சிங்கம் பட சூர்யா மாறி சேஸ் பண்ணி உன்ன கண்டுபுடுச்சி வந்தா புசுக்குன்னு கிளம்ப சொல்லுற.. நா வந்ததுல எதாவது ப்ரயோஜம் இருக்கனும்.. " என்றாள் அவனின் கையில் இருந்த பையின் ஒரு முனையை பிடித்து இழுத்தபடி..
" வந்து ஒரு புரயோஜனமும் இல்ல.. டூ வீக்ஸ்ல வந்திடு வேன்.. நீ கிளம்பு.. தனியா தா வந்தியா இல்ல உன்னோட பாடிகார்ட்ட கூட்டிட்டு வந்தியா.. " ரிஷி..
"கௌதம் என்னோட ஃப்ரண்டு பாடிகார்ட் இல்ல.. நா தனியாத்தா வந்திருக்கேன்.. கேரளாவ சுத்திப்பாத்துட்டு போலாம்னு நினைக்குறேன்.. " ஒருவழியாக பையை அவனிடம் இருந்து பிடிங்கிவிட்டாள் ஹரிணி..
" சுத்திபாக்கவா.. சரி உனக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு தாறேன்.. கைடு ஏற்பாடு பண்றேன்.. நல்லா நாலு நாள் தங்கி எல்லா இடத்தையும் பாத்துட்டு போ.. "
" நா மட்டுமா.. அப்ப நீ கைடு வேல பாக்க மாட்டியா.. ஏய் நீ என்ன துரத்துரத பாத்த இங்க உனக்கு ஒரு செட்டப் இருக்கும் போலையே.. " ஹரிணி பாவமாக..
"ஏய்.. கொன்னுடுவேன்.. நா வந்தது ஒருத்தர தேடி.. "
"ஹாங்.. நீ ஒரு பக்கம் தேடு நா உங்கூடவே இருந்து சுத்தி பாக்குறேன்.. அப்படி இல்லைன்னா ஒரு டூ டேஸ்.. டூ டேஸ் எனக்காக ஸ்பெண்ட் பண்ண மாட்டியா.. பா..வா... " அவளின் குரலில் சிறு ஏக்கமும் ஆவலும் தெரிந்தது அவன் சம்மதிக்க வேண்டி..
" சரி இப்ப இல்ல.. ஒன் வீக் போட்டும்.. அதுவரைக்கும் நீ.. "
" உன்ன தொள்ள பண்ணாம வீட்டுல பத்திரமா இருப்பேன் ம்.. டீல்.. " என்றாள் மகிழ்ச்சியுடன்..
" ஆமா கீ எங்கிட்ட இருக்கு.. நீ எப்படி உள்ள வந்த.. " என்றபோதே அவனுக்கு பார்வதி அம்மாவின் திடீர் சாப்பாடும் அவரின் பார்வையும் நினைவுக்கு வந்தது..
" என்னடி சொல்லி வச்ச அந்த அம்மாட்ட.. " என்றான் சந்தேகமாக..
"நா ஒன்னும் சொல்லலையே.. பாவா.. " பவ்யமாக..
கோபமாக அருகில் வந்தவன்.. " பொய் சொல்லாத.. சாப்பாடு குடுக்கும் போதே சந்தேகம் வந்தது.. அதவிட கடைசியா அந்தம்மா பாத்த பார்வ இருக்கே.. நீ தா எதோ சொல்லிருக்க.. என்ன சொன்ன.. " உலுக்கினான் அவளை..
"பெருசால்லாம் ஒன்னும் சொல்லல பாவா.. நீயும் நானும் ஃபேஸ் புக் லவ்வர்ஸ்ன்னும்.. கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாம்மான்னு ஒன்னா ஒரே வீட்டுல ஒரு வாரம் இருந்து.. "
" இருந்து.. "
" டிஸ்கஸ் பண்ண போறோம்னு சொன்னேன் பாவா.. லிவ்விங் டு கெதர்.. ஆமா நீ இன்னும் ஊருக்குள்ள பேச்சுலர்ன்னு தா சொல்லிட்டு திரியுற போல.. "
"ஏய்.. ஏன்டி என்ன இப்படி அசிங்கப்படுத்துற.. என்னோட ஃப்ரெண்ட்டோட அம்மாடி அவங்க.. ச்ச.. அவங்க முன்னாடி என்னோட நேம்ம டேமேஜ் பண்ணிட்டியேடி.. உன்ன.. " என அருகில் வர..
" பாவா.. கட எங்கன்னு விசாரிச்சு வை பாவா.. ரிப்பேர் பண்ணிடலாம்.. "
" எத..”
" டேமேஜ் ஆனத.
"
" ஏ..ய்.. " என அவளை துரத்தினான்..
அவளின் பாவா என்ற அழைப்பை ரசித்த படியே அவளின் பின்னால் ஓடினான்..
வீட்டை சுற்றி வந்தவள் பெட்ரூமிற்குள் நுழைந்து கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
" பாவா நாந்தா ஃபஸ்ட் வந்து இந்த கட்டில தொட்டேன்.. சோ.. இது எனக்கு தா.. நீ சோஃபால படுத்தக்க.. என்ன.. "
" முடியாது.. எப்பையும் நீ தான அங்க படுப்ப.. இப்ப மட்டும் என்னவாம்.. போடி.. " என விரட்ட..
" சரி.. நா போய்.. பார்வதி ஆன்டீட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு வாரேன்.. " என சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு எழுந்தவள் கதவை நோக்கி நடந்தாள் ஹரிணி..
" இந்த நேரத்துல போய் என்ன கேக்கப் போற.. மணி பத்தாக போது.. " என கையை பிடித்து இழுத்து நிறுத்திக் கேட்டான் ரிஷி..
" அது ஒன்னுமில்ல ஒரே வீட்டுல இருக்கலாம்னு தா கூப்டான்.. இப்ப என்னடான்னா ஒரே ரூம்ல ஒரே பெட்ல இருக்கனும்னு கம்பல் பண்றான்.. என்ன பண்ணலாம்.. லிவ்விங் டுகெதர்ல இதெல்லாம் சகஜமா ஆன்டின்னு கேட்டுட்டு வந்துடுறேன் பாவா.." என நடக்க முயன்றவளை இழுத்து வந்து கட்டிலில் தள்ளி விட்டான்..
" நல்லா தூங்குமா.. கெட்ட கெட்ட கனவா வரும் உனக்கு.. மூடிட்டு தூங்கு.. " என ஹாலுக்கு சென்றான்..
" ஹேய் நீ இருக்குற ஹைட்டுக்கு சோஃபா பத்தாது.. நீ தரைல படுத்து உருலு.. அப்பதா சரியா இருக்கும்.. தயங்காம பாய் வேணும்னாலும் பெட்ஷீட் வேண்ணும்னாலும் கேட்டு வாங்கிக்க பாவா.. கூச்சப்படாமல்.. " என உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தாள் ஹரிணி..
" எனக்கு எதுவும் வேணாம்.. நீ உன்னோட வாய மூடுனாலே போதும்.. தூங்குடி.. " என கத்தியவன் தரையில் பாய் விரித்து படுத்தான்..
மனம் முழுவதும் அவனின் பம்கின் அழகாய் ஆக்கிரமித்திருந்தாள்..
எல்லையில்லா மகிழ்ச்சியுடன் துயில் கொண்டான் ரிஷி தரன்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..