அத்தியாயம்: 63
அவனை..
சிறை பிடிக்க..
நினைத்து தன்னையை..
கைதியாக்கி கொண்டாள்..
பாவை..
முகத்தினை திருப்பாது கோலிக்குண்டென விழிகள் சுழல.. அது காந்தம் ஈர்க்கும் இரும்பென ரிஷியையே சுற்றி சுற்றி வந்தது..
காரணம்.. டீ சர்ட் மற்றும் ஜீன்ஸில் வெளியே கிளம்ப தயாராகி கொண்டிருந்தான் ரிஷி.. அவனை வெட்கமே இல்லாம சைட் அடித்துக் கொண்டு இருந்தாள் அவனின் கிட் ஹரிணி..
ஊரில் இருக்கும் போது வேட்டி சட்டையில் பார்த்து பழகி இருக்கிறாள்.. மும்பையில் அன்று கோர்ட் சூட்டில் பார்தே மயங்கி விட்டாள்.. இன்று கல்லூரி மாணவன் போல் உடலை இறுக்கி படித்த டீ சர்ட்டில் சொல்லவா வேண்டும்..
புது இடம்.. புதிய மனிதர்கள்.. புதிதாய் முளைத்த காதல் என தன்னை இப்போது பூத்த பருவப் பெண்ணாக உணர்ந்தாள் ஹரிணி.. எல்லா காதல் செய்யும் மாயை..
" ஆர் யூ சுயர்.. நீ எங்கூட வரலையா.. நிச்சயமா தா சொல்லுரியா.. தனியா இருந்துக்குவியா.. " ரிஷி..
" நீ எனக்கு சமச்சு வச்சுட்டேல்ல.. போ போய் உன்னோட வேலய பாரு.. என்ன பாத்துக்க எனக்கு தெரியும்.. " ஹரிணி..
" வாயேன்டி.. உன்ன இங்க விட்டுட்டு என்னால நிம்மதியா வெளில இருக்க முடியாது.. சொன்னா கேளேன்.. " ரிஷி..
" அப்ப போகாதா.. இங்கையே இரு.. "
" ம்ச்.. இம்ச.. " என முணுமுணுத்தவன்..
அவள் அமைதியாக ஓரிடத்தில் இருப்பது என்பது நடவாத காரியம் எனவே உடன் வருமாறு காலையில் இருந்து கேட்கிறான்..
" பாவா.. உனக்கு மட்டும் தா வேல இருக்கா.. நானும் ஒரு ஃபேஷன் டிசைனர் தா பாவா.. எனக்கு அடுத்த மாசம் ஒரு ஷோ இருக்கு அதுக்கு நானும் என்னோட டீமும் ரெடியாகனும்.. இதோ லேப்டாப் ரெடி.. அதுல வேல பாக்கப்போற நானும் ரெடி.. போ பாவா.. நா பாத்துப்பேன்.. " ஹரிணி..
" அப்பப்ப நீ ஒரு டிசைனர்னு சொல்லு மறந்து மறந்து போய்டுது.. " என புலம்பியவாறு கதவை திறந்து மூடியவன்.. என்ன நினைத்தானோ அவளை உள்ளேயே வைத்து பூட்டி சாவியை எடுத்து சென்றான்..
திரும்பி வரும்போது அவனின் ப்ளாக்கின் முன் கூட்டமாகவும், கூச்சலாகவும் இருந்தது.. அனைவரும் சிறுவர்கள்.. சண்டை போலும்..
" மிஷஸ் கீதா வாணிக்கு தெரிஞ்சது.. அவ்ளோ தா.. ' இந்த அப்பார்ட்மெண்ட்டுக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு.. அத கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்.. 'னு கத்த ஆரம்பிச்சுடும்.. இந்த பசங்க இன்னைக்கு மாட்டப் போறானுங்க.. பாவம்.. " என நினைத்தபடி லிஃப்டில் நுழைந்தான்..
சரியாக அது மூடும் போதுதான் கண்டான் அந்த மஞ்சள் நிற குர்த்தியை.. " ஹரிணி.. இ...வா எப்படி வெளில வந்தா.. ஐய்யையோ.. போச்சு.. " என அவசர அவசரமாக இறங்கி ஓடியவன் ஹரிணியை காணச் சென்றான்..
அங்கு அவளோ சண்டையிடுவதில் மும்முரமாக இருந்தாள்.. அதுவும் மிஷஸ் கீதா வாணி ( அப்பார்ட்மெண்ட் செக்கரெட்ரி.. ) அவர்களின் மகன் அச்சுத குட்டனுடன்..
" ஏய் யாரப்பாத்து பென்சில் ஃபாக்ஸ்ன்னு சொன்ன.. நீ தான்டா அது.. இல்ல நீ பிரிட்ஜ்.. அதுவும் டபுள் டோர் பிரிட்ஜ்.. உனக்கு அவ்ளோலாம் ஸீன் இல்ல பாத்துக்கு.. " என சிறுவன் என்றும் பாராது வசைபாடி கொண்டு இருந்தாள் அவள்..
அவளை பிடித்து இழுத்து வீட்டிற்கு வருவதற்குள்.. ஹப்பா.. ரிஷிக்கு மூச்சு வாங்கியது..
" ஏய்.. உன்ன யாருடி வெளில வரச் சொன்னா.. வந்தது மட்டுமில்லாம அந்த பையங்கூட போய் சண்ட போட்டுட்டு இருக்க.. அவெ யாருன்னு தெரியுமா.. அறிவில்லையா உனக்கு.. " என திட்ட ஆரம்பித்தான்..
" திட்டாத பாவா.. நா ஒன்னுமே பண்ணல பாவா.. நீ தா அறிவில்லாம என்ன உள்ள வச்சு பூட்டிட்டு போய்ட்ட.. அது உந்தப்பு பாவா.. நா என்ன பண்ணேன்.. " ஹரிணி..
" ஏந்தப்பா எதுக்குடி போன வெளில.. இருக்குறத திண்ணுட்டு வீட்டுக்குள்ளையே தான இருக்குறதா சொன்ன.. ஏன்டி போன வெளில.. " ரிஷி..
" அதுவா எல்லாமே காலி பண்ணிட்டேன் பாவா.. ரொம்ப போர் அடிச்சதா.. அதா பசங்க கூட விளாடலாம்னு போனேன்.. "
" எப்டி டி வெளில வந்த.. "
" இந்த பால்கனி வழியா ஒரு பைப் போதுல்ல அது வழியா இறங்குனேன் பாவா.. "
" குரங்கு மாறி.. "
" நம்ம முன்னோர்கள அப்படி மரியாத குறைவா பேசக்கூடாது பாவா.. "
டிங்.. டிங் ....
அழைப்பு மணியோசை அழைக்க.. கதவை திறந்தவனை கீதா வாணி காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி விட்டார்.. சமாளித்து அனுப்பியனின் அருகில் வந்தவள் அவனின் தோலை சுரண்டினாள்..
" கொஞ்சம் கிரவுண்ட் ஃப்ளோர்க்கு வாயேன் பாவா.. " என்று சற்று குனியச் சொன்னவள் அவனின் காதில்..
“ அந்தம்மா பேசுனதுல டாப் டூ பாட்டம் புரிஞ்சது.. பாரேன் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்ங்கிற மாறி.. ஊடால ஒன்னுமே புரியல.. கொஞ்சம் டப்பிங் குடேன் பாவா.. ப்ளீஸ்.. " என்றாள் ஒன்றும் தெரியாத சிறுமி போல்..
" உன்ன.. " என அவன் பிடிப்பதற்குள் ஓடி விட்டாள் ஹரிணி..
அவனை ஒவ்வொரு விதமாக ஒவ்வொருவரிடமும் மாட்டி விட்டுவது அவளின் வழக்கம் ஆகிவிட்டது..
பைக்கில் சாவியை வைத்து திருகி ஸ்டார்ட் செய்து செல்ல முயன்றவனின் முன்னால் வழி மறித்து நின்றான் அச்சுதன்..
"டேய் எதுக்குடா மறியல் பண்ணீட்டு நிக்குற.. வழிய விடுடா.. " தரன்..
" அங்கில் எங்க உங்க கேர்ள் ஃப்ரெண்டு.. " அச்சுதன்.. எட்டு வயது சிறுவன்..
" வாயப் பாரேன் இந்த டபுள் டோர்க்கு.. அவா என்னோட வைஃப் கேர்ள் ஃப்ரெண்டு இல்ல.. எதுக்கு அவள தேடுற.. என்ன வேணும்.. "
" அவங்க உங்களுக்கு எதுவா வேண்ணாலும் இருந்துட்டு போட்டும்.. எனக்கென்ன.. என்னோட புக் அவங்கட்ட இருக்கு.. அது வேணும் எனக்கு.. " அச்சுதன்..
" உம்புக்க வச்சு அவ என்ன பண்ண போறா.. அப்பறமா வாங்கிக்க.. " தரன்..
" இல்ல.. எனக்கு இப்பவே வேணும்.. தரலைன்னா நா அம்மா வ கூட்டிட்டு வருவேன்.. " மிரட்டலாக..
" சண்டைக்கு கூட்டிட்டு வரப்போற அதான.. உங்கம்மா பேச்ச கேக்குறதுக்கு நா கரண்ட் கம்பிய காதுல விட்டுடலாம்.. இரு வாங்கிட்டு வந்து தாரேன்.. " என மீண்டும் வீட்டிற்கு சென்றான்..
வீட்டில் நுழைந்தவன் டேபிளில் புக்கை தேட வீடே நிசப்தமாக இருந்தது.. ' ஹரிணி இருந்தும்மா அமைதியாக இருக்கு..' என நினைத்து அவளை தேட..
பால்கனியில் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தாள் அவள்.. ரிஷியை கண்டதும் அதை வேகமாக மூடி வைத்தவள்..
"எதுக்கு வந்த பாவா.. எதையாது மறந்துட்டியா பாவா.. " என்றவள் திருட்டு முழி முழித்தாள்..
" எதுக்கு லேப்டாப்ப மூடுன.. காட்டு.. " என அதை வாங்க முயன்றான்..
" ஒன்னுமில்ல பாவா.. " என அவனிடம் குடுக்காமல் எடுத்து கொண்டு ஓடினாள்..
அவளின் பின்னே ஓடியவன் சிறிது நேரத்திலேயே பிடித்தும் விட்டான்.. சோஃபாவில் அமர்ந்தவன் லேப்டாப்பை திறக்க அதிலிருந்து சில காமிக் புத்தகங்கள் ( கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை கொண்ட சிறுவர்கள் படிக்கும் புக் ) விழுந்ததை கண்டான்..
" ஏய்.. என்னடி இது.. இதப்போய்யா நீ படிக்குற.. " என்றான் அதை பிரித்து பார்த்தபடி..
" ம்ம்.. " என தலையசைத்தாள்..
" ஒரு சின்னப் பையன்ட்ட இருந்து புடுங்கி படிக்கிறியே.. உனக்கெல்லாம் அறிவே கிடையாதா டி.. "
" எங்கிட்ட இருக்குன்னு நா சொன்னேனா பாவா உன்ட்ட.. நீயா இருக்குன்னு நினைச்சா.. அதுக்கு நா எப்படி பொறுப்பு பாவா.. "
" என்ன கரும்மம்டி இது.. " புக்கை காட்டி..
" ஹாங்.. எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.. இதோ பாரேன் இந்த அக்கா சூப்பரா சண்ட போடுவாங்க.. ய்யா..உ... டிஸ்யும் ... " என சண்டையிடுவது போல் கைகளை ஆட்டினாள் ஹரிணி..
"பைத்தியம் பிடிச்சுடுச்சு உனக்கு.. நா இத அந்த பையன்ட்ட குடுத்துடுறேன்.. " என புக்கை எடுத்தான..
" ஒரு ஃபைவ் மினிட்ஸ் பாவா.. நா படிச்சுட்டு தாறேன்.. பாவா அப்படியே அந்த பையனுக்கு ஒரு சைக்கிளும் வாங்கி குடுத்துடு.. பாவம் உடஞ்சு போச்சு.. " ஹரிணி..
ஓட்டி பழகுகிறேன் என்று சொல்லி வாங்கி சைக்கிளயே உடைத்து விட்டாள்..
" அத உடைச்சதே நீ தான.. பைக் ஓட்ட தெரிஞ்ச உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதா.." என்றான் கேலியாக..
" சொன்னா நீ என்ன இத விட அதிகமா கேலி பண்ணுவ.. ம்ஹீம் நா மாட்டே பா.. " ஹரிணி..
அவளையே உற்றப் பார்த்தபடி ' சொல்லித் தான் ஆக வேண்டும் ' என்பது போல் அமர்ந்திருந்தான் ரிஷி..
" பாவா.. ப்ளீஸ்.. அப்படி பாக்காத.. " ஹரிணி எழுந்து செல்ல முயன்றாள்..
அவன் பார்வையை மாற்றவே இல்லை.. வழக்கம் போல் பிடித்த அவளின் கையையும் விடவே இல்லை..
"சரி சொல்லுறேன்.. பைக்க இப்படி திருகுனா.. அதுபாட்டிக்கு போய்டும்.. ஆனா இந்த சைக்கிள.. ம்ஹீம்.. கால தூக்கி அழுத்தனுமாம் இடுப்ப வளைக்க கூடாதாம்.. நா இந்த பக்கம் கால தூக்குனா சைக்கிள் அந்த பக்கமா சாயுது.. அந்த பக்கம் கால தூக்குனா இந்த பக்கம் சாயுது.. மொத்தத்துல நா சைக்கிளோட சேர்ந்து சாஞ்சுடுறேன்.. ச்ச.. யாருக்குமே சரியா சொல்லித்தர தெரியல.. இந்த வைசு தா பேடு டீச்சர்ன்னு நினைச்சு இந்த அச்சுக்கிட்ட போனா.. அவனோட டப்பா சைக்கிள் தாங்காம உடஞ்சுடுச்சு.. " என கைகளை ஆட்டி ஆட்டி பேசியவளை விழி மூடாது ரசித்துக் கொண்டு இருந்தான் ரிஷி..
இதழ்கள் பேசுவதை விட அவள் விழிகள் பேசியதே அதிகம்.. அவளின் பேசிச்சிற்கு நடனமாடிய கம்மல் அவ்வபோது வந்து தொட்டுச் செல்லும் கன்னம் தீண்டிப் பார்க்க வா என அழைப்பது போல் இருந்தது அவனுக்கு.. அவளின் ஒவ்வொரு அசைவையும் அணு அணுவாக தன்னுள் பதித்துக் கொண்டு இருந்தான் ரிஷி தரன்..
சட்டென திரும்பியவள் அவனின் சாம்பல் நிற விழியில் உண்டான மாற்றம் கண்டு பேச்சை நிறுத்தினாள்.. வேகமாக கன்னங்கள் இரண்டையும் மூடினாள்.. முத்தமிட்டு விடுவான் என்று இல்லை.. முன்பு போல் கன்னத்தில் இருந்த பருவை கிள்ளி விட்டு விடுவானோ என்ற பயத்தில்..
" நா உசாராகிட்டேன்.. " என்றாள் கன்னத்தில் வைத்திருந்த கையை எடுக்காது..
உதடுகளில் மென்னகையை படர விட்டவன் அவளின் காதுகளில்..
" எனக்கு அது இப்ப தேவையில்லையே.. " என்று கூறி அவளின் காது மடலில் முத்தமிட்டான்..
அதிர்ந்து விழித்து திரும்பி பார்ப்பதவளின் மூக்குடன் மூக்கு உரசியவன்.. " எனக்கு எப்ப எது வேணுமோ.. அத அப்ப நா எடுத்துப்பேன் உன்னோட பர்மிஷன் எனக்கு தேவையில்லை கிட்.. " என ஹஸ்கி வாஸ்ஸில் கூறியவன் அவள் சுதாரிக்கும் முன் அவளின் உதடுகளை தன் இதழ்களால் சிறை செய்தான் ரிஷி தரன்..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..