அத்தியாயம்: 64
" அதியனூர், கிளிமானூர், வர்கலா, பராசல இப்படி சுத்தி இருக்குற எல்லா ஊர்லையும் தேடிட்டேன் மச்சான்.. நீ சொன்ன பேருலயும் நீ குடுத்த ஃபோட்டோலயும் இருக்குற ஆள மட்டும் கண்டு பிடிக்க முடியல.. என்ன பண்ணலாம்.. உனக்கு நல்லா தெரியுமா.. அந்த பொண்ணு இங்க தா இருந்தாங்களான்னு.. " பாலா..
" இங்க தா அஞ்சு வர்ஷத்துக்கு முன்னாடி வேல பாத்திருக்கா.. சாரா.. அவள கண்டிப்பா பாக்கனும்டா.. அவளுக்கு தா அப்பாக்கு நடந்த ஆக்ஸிடென்ட் எதுனால நடந்ததுன்னு காரணம் தெரியும்.. " தரன்..
மொட்டை மாடியில் வீசிய குளிர்ந்த காற்று தன் மனதை குளிர்விக்கும் என்ற நம்பிக்கையில் நண்பர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர்..
" எத வச்சு நீ அவங்களுக்கு தெரியும்னு சொல்ற.. " பாலா..
" அப்பாக்கு ஆக்ஸிடென்ட் ஆகுற அன்னைக்கு சாரா எதோ பார்சல் அனுப்பிருக்கா.. அப்பா வைசுவ பிக்கப் பண்ற அவசரத்துல அத பிரிச்சு பாக்கல.. சேஸ் பண்ணி வந்தவனுங்க அப்பாட்ட அத பத்தி கேட்டுருக்கானுங்க.. கார்ல சாரா அனுப்புன டாக்குமெண்ட் இருந்திருக்கு... ஆனா அவனுங்க பென்டிரைவ் கேட்டு சண்ட போட்டிருக்காங்க.. கிடைக்கலன்னு தெரிஞ்சதும் இப்படி பண்ணிருக்கானுங்க.. இதுல என்ன விசயம்னா அந்த டாக்குமெண்ட்ல என்ன இருந்ததுன்னு அவருக்கு தெரியாது பென்டிரைவும் தெரியாது.. அத அனுப்புனவ கிட்ட தா கேக்கனும்.. அதா அவள தேடுறேன்.. " ரிஷி..
" மச்சான்.. சாராவுக்கு எதாவது ஆகிருந்தா.. ஏன்னா அப்பாவுக்கு நடந்ததையே ஆக்ஸிடென்ட்டுன்னு இத்தன வர்ஷமா நம்மல நம்ப வச்சவனுங்க சாராவ சும்மா விட்டுருப்பாங்களா.. "
" அத தெரிஞ்சுக்க தா ட்ரெய் பண்றேன்.. அவளோட குடும்பத்துக்கே அவ எங்க இருக்கான்னு தெரியல.. "
" அப்படி என்ன அனுப்பிருப்பாங்க.. " பாலா யோசனையோடு..
" ம்ச்.. மெடிக்கல் கேம்புக்குன்னு புனே பக்கத்துல ஒரு கிராமத்துக்கு பத்து நாள் போனோம்.. நா, சம்பத் , சூர்யா எல்லாருமே அங்க தா இருந்தோம்.. லாஸ்ட் டூ டேஸ்ல சம்பத்தும் நானும் காலேஜ் திரும்பிடோம்.. ஆனா சூர்யா சாரா கூடவே தா இருந்தான்.. எதாவது நடந்திருந்தா அது கடைசி ரெண்டு நாள் தா நடந்திருக்கனும்.. " தரன்..
" சூர்யா என்ன ஆனா.. " பாலா..
" ம்ஹிம் தெரியல.. சூர்யாவும் சாராவும் லவ் பண்ணாங்க.. ரெண்டு பேருமே காணாம போய்ட்டாங்க.. கண்டு பிடிக்கனும்.. " என்றவனின் நினைவுகள் கல்லூரி காலத்திற்கு சென்றது.. கல்லூரி நாட்கள் எப்பொழுதுமே இனிய நாட்கள் தானே..
இதழில் புன்னகையுடன் தன் பார்வையை சுழலவிட்டவனின் பார்வை வளையத்தில் பார்க்கில் குழந்தைகளுடன் விளையாடும் ஹரிணி தென்பட்டாள்.. இருபத்தி ஐந்து வயது பெண் ஐந்து வயது குழந்தையாக மாறிய அழகை சுவரில் சாய்ந்து ரசிக்கலானான்..
பெண்ணவளின் ஒவ்வொரு செய்கையும் ஆடவனின் இதயமென்ற கேணியில் காதலெனும் ஊற்றாக பெருக்கெடுக்கச் செய்தது.. அவளின் குறும்பும் குழந்தை தனமான செயலும் அவனின் உணர்வுகளுக்கு உரமாக அமைய பார்வை மாற்றாது கண்டு ரசித்தான் தன் கிட் டை.. அவனின் மோன நிலையை கண்ட பாலா எட்டிப்பார்க்க..
" சோ ப்யூட்டி.. எப்ப மச்சான் கல்யாணம் பண்ணிக்க போற.. " என்றான்..
அவனை திரும்பி முறைத்தவன்.. “ அதுக்கு அவசியமே இல்ல.. அவா என்னோட வைஃப்.. மேரேஜ் ஆகி ஆல்மோஸ்ட் டூ இயர்ஸ் ஆகப்போது.. " ரிஷி..
" மச்சான் சொல்லவே இல்ல.. எப்ப ட்ரீட்.. " என ரிஷியை அணைத்தான் பாலா..
" ட்ரீட் டா.. போடாங்.. இருக்குற பிரச்சனையே ஓய மாட்டேங்கிது.. இதுல நீ வேற.." என்றவன் என்னென்ன பிரச்சனைகள் என கேட்க.. அவன் எதையும் சொல்லாது அழுத்தமாக இருந்தான்..
இருந்தும் என்ன பிரச்சனை என்றே தெரியாது நண்பனுக்கு உதவி செய்ய முன் வந்தான் பாலா.. இருவரும் வெகு நேரம் பேசிச் சென்றனர்..
இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும்.. வானம் தான் சேமித்த வைரத்தை கட்டவிழ்த்து விட போகும் நேரத்தை இடி மின்னல்கள் மூலம் அறிவித்து கொண்டிருந்தது..
" ரொம்ப நேரமாச்சு..” என புலம்பிய படி கையில் சில நெகிழிப் பைகளை எடுத்து கொண்டு வேகவேகமாக வந்தான் ரிஷி தரன்..
கதவை திறந்தவனுக்கு சமையலறையில் பாத்திரங்கள் உருலும் சத்தம் கேட்டது.. எட்டி பார்த்தவனுக்கு அதிர்ச்சி தான்..
ஹரிணி அடுப்புடன் போராடிக் கொண்டு இருந்தாள்.. அங்கு மிக்ஸி ஜாரில், எலி கடித்திருந்தால் கூட நன்றாக அந்த தேங்காயை எடுத்திருக்கும் ஆனால் ஹரிணி கத்தியில் எடுக்க முயன்றவள் முடியாது போனதால் பற்களால் கொதறி இருக்கிறாள்..
ஒரு குழிக் கரண்டியில் மாவை எடுத்து கல்லில் ஊற்றினாள்.. அது கல்லில் ஒட்டுவதற்கு பதிலாக கரண்டியிலேயே ஒட்டிக்கொண்டது.. " ஓ..... ஹ்ஹோ .... என்னடா இது.. " என சொல்லிக் கொண்டே கரண்டியை சிங்கிள் போட்டாள்.. அது அவள் போடும் எட்டாவது கரண்டி..
மீண்டும் ஒன்றை எடுத்து ஊற்றப் போனவளை... " என்ன கிட் பண்ற.. " ரிஷி..
" வந்துட்டியா பாவா.. உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா பாவா.. வீட்டுல பொண்டாட்டி தனியா காத்துட்டு இருப்பாளே.. காலாகாலத்துல போய் சமச்சு குடுக்கனும்னு தெரிய வேண்டாமா பாவா உனக்கு.. நீ சமைக்கல.. எனக்கு பசிக்குது இன்னைக்கு என்னோட சமையல் தா.. சட்னி ரெடி.. இதோ தோசையும் ரெடி.. லேட்டா வந்ததுக்கு உனக்கு தண்டன பாவா.. சாப்பிடுறியா பாவா.. " ஹரிணி மாவை கல்லில் ஊற்றியவாறு கேட்க..
மிக்சி ஜாரை எட்டிப் பார்த்தான் தரன் சட்னி என்ற பேரில் வெள்ளை கலரில் தண்ணீர் இருந்தது.. தோசையை தேடியவனுக்கு அது கிடைக்கவே இல்லை..
இம்முறையும் அது கரண்டியில் ஒட்டிக் கொண்டது.. " ஹோஓஓ...... பச எதுவும் போட்டு இத ரெண்டையும் ஒட்ட வச்சு சுடுவாங்கலா.. ம்ச்.. வரவே இல்லையே.. " சலிப்பாக கூறினாள்..
மற்றொரு கரண்டியை எடுத்தவளின் பூங்கரத்தை பின்னால் இருந்த தரன் தன் வலது கையால் தடுக்க அவனின் இடது கை அடுப்பின் தீயை குறைத்து அதில் நீரை ஊற்றியது..
' ஸ்..ஸ்...ஸ்... ' என்ற சத்தத்துடன் நீராவி வர பயந்து போனவள் பின்னால் நகர்ந்து ரிஷியின் மார்பில் மோதி நின்றாள்.. அவளை பின்னிருந்து அணைத்தபடி அவன் தோசை ஊற்றினான்..
' இவனுக்கு சமயலப் பத்தி எப்படி தெரியும்.. ' என எண்ணியவள் கண்டது கல்லில் இருக்கும் தோசையை..
" ஹேய் உனக்கு மட்டும் எப்பிடி பாவா கரண்டில ஒட்டாம கல்லுல ஒட்டுச்சு.. " என கேட்டபடி முகத்தை திருப்பி தரனை கண்டவள் அத்தனை நெருக்கத்தில் அவனின் வசீகரத்தில் மயங்கி தான் போனாள்..
கூர் தீட்டிய நாசி.. குட்டி குட்டியாக தொடுபவரை குத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கும் தாடி.. அடர்ந்த புருவம்.. ட்ரிம் செய்த மீசை என ஆண்மையின் இலக்கணமாக வசீகரத்துடன் நின்றவனின் சாம்பல் நிற விழிகள் அவளை அவனுள் இழுத்து கொண்டிருந்தது..
அவளின் ரசனையை அறியாதவன் கருமமே கண்ணாக தோசை வார்த்தான்.. அருகில் நின்றிருக்கும் மனையாளின் சத்தம் வராததால் அவளை என்னவென்று பார்க்க.. அவள் அசையாது உறைந்து போய் நின்றிருந்தாள்.. புன்சிரிப்புடன் அவளின் முகம் நோக்கி குனிந்தவனின் தாடி அவளின் பட்டு கன்னத்தை கீறிவிட்டு சென்றது.. வலிய உதடுகள் அவளின் காது மடலை தொட..
" நீ தீஞ்சு போன சாப்பிடுவியா.. " சத்தம் வராமல் மெல்லிய குரலில்..
அதிகாலை வேளையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒருவரின் முகத்தில் நீரை ஊற்றி எழுப்பினால் எண்ணமாறி உணர்வு வருமோ அதே போல் திருதிருவென முழித்தாள் ஹரிணி..
" ஹா....ங்.. என்.....ன..... பா....வா" என்றாள் வார்த்தைகள் உதட்டை விட்டு வர மறுத்தது..
" இல்ல எனக்கு தோச கருகீடுச்சுன்னா பிடிக்காது.. உனக்கு பிடிக்கும்மான்னு கேட்டேன்.. " ரிஷி வசிகரிக்கும் சிரிப்புடன் கேலி செய்தான்..
இப்போதும் அவள் முழிக்க அவளின் கையில் இருந்த தோசை கரண்டியை பிடுங்கினான்.. அவனின் எண்ணம் முழுவதும் அடுப்பிலேயே இருக்க இங்கு ஹரிணி கருகினாள்..
" ச்ச என்ன விட உனக்கு அந்த பாலாப்போன தோச முக்கியமா போச்சுல்ல பாவா.. " என அவனை விட்டு விலகி வந்தவளின் இதயம் மட்டும் கட்டுக்கடங்காமல் துடித்தது.. அவனின் வசீகர சிரிப்பு முகம் என எல்லாம் சேர்ந்து ஆடவனை தேவலோகத்து மன்னனாக காட்டியது..
படுக்கையறையில் உள்ள ஆளுயர நிலை கண்ணாடியில் முன்நின்றவள் வெட்கம் எனும் அணிகலனை அணிந்து கொண்டாள்..
முகம் சிவக்க பதுமையாய் நின்றாள்.. நிலைக்கண்ணாடியில் அவள் கண்களுக்கு அவளே வேறு பெண்ணாக தெரிந்தாள்.. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் புது ரத்தம் பாய்வதை போல் உணர்ந்தாள்.. எத்தனை நேரம் நின்றாளோ தெரியாது தரன் அவளை சாப்பிட அழைக்கும் வரை உறைந்து போய் நின்றிருந்தாள்..
"ச்ச நம்மளா இது.. நமக்கு ரெஸ்பெக்ட் குடுக்காத ஒருத்தன பழி வாங்கனும்னு தான வந்தோம்.. இப்ப அவனயே சைட் அடிச்சிட்டு நின்னா என்ன அர்ததம்.. அதுனால உன்னோட மூட மாத்திக்காத.. பழி வாங்கனும்.. ஆனா அவன பாத்தா பழி வாங்க தோன மாட்டேங்கிதே.. ஒரு படபடப்பாக வந்து என்ன பீபீ ஃபேஷன்ட்டா மாத்திடுறான்..
ம்ஹீம்.. இனிமே இவனுக்கு பக்கத்துல போகவே கூடாது.. அவனையும் பக்கத்துல விடக்கூடாது.. சரியா மேஜிக் பேனா இருப்பான் போல.. இல்ல வேற ஏதோ இருக்கு.. அதா ஹாட் சீட் ஜாஸ்தியாகுது.. இப்படியே போச்சுன்னா நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்.. எவ்ளோ வேகம துடிக்குது.. உஃப்.. நம்ம வாழ்க்க பிரகாசமா இருக்கனும்னா.. இவங்கிட்ட இருந்து விலகியே இருக்கனும்.. " என சபதம் ஏற்பதற்குள் பவர் கட் ஆனது..
" பா....வா.. " என கத்தினாள் பயத்தில்..
" இங்க தாண்டி இருக்கேன்.. ஏ அலருற.. " என கையில் மெழுகு வர்த்தியுடன் வந்தான் ரிஷி..
அறைகுறை வெளிச்சத்திலும் அழகனாய் காட்சி தந்தவனை கண்டு மீண்டும் இதயம் எகிறி குதிக்க.. இதழ் கடித்தபடி நின்றவளை சாப்பிட அழைத்தான் ரிஷி..
" இன்னைக்கு கேண்டில் லைட் டின்னரா பாவா.. " ஹரிணி குறுப்பாய் கேட்க.
" பணக்காரன் காசு குடுத்து இருட்டுல உக்காந்து சாப்பிடுவான்... பணம் இல்லாதவன் காசு குடுக்க முடியாம இருட்டுல உக்காந்து சாப்பிடுவான்.. " தரன் தத்துவம் பேச..
"ஓ.. இதுல நாம எந்த கேட்டகிரி பாவா.. "
" ரொம்ப முக்கியம்.. வா.. " என இருவரும் உணவுண்டு படுக்க சென்றனர் தனித்தனியாக.. கரண்ட் இன்னும் வரவில்லை.. ஆதலாம் ஒலி(ளி)யற்ற நிலையில்..
" பா....வா... " மெல்லிய குரலில்..
" ம்.. "
"பாவா.. "
" என்னடி வேணும்.. "
" அது.. நீ தரைல படுக்குறியா.. அதுனால உன்னைய பாத்தா பா......வமா இருக்கு.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ எங்கூட இங்க கட்டில்ல படுத்துக்கயேன்.. நா ஒன்னும் சொல்ல மாட்டேன்ப்பா.. " என்றாள் பெருந்தன்மையுடன்...
" முடியாது.. எனக்கு பாதுகாப்பு இருக்காது.. “
“ அப்படி உங்க பாதுகாப்புக்கு பங்கமா என்ன பண்ணிடப் போறேனாம்.. “ என்றவளின் குரல் வந்த திசையை பார்த்தவன்..
“ நீ தனியாவே படுத்துக்க.. அந்த தலவாணிய கட்டிப்பிடிச்சுக்க.. அது லா உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.. குட் நைட்.. " என திரும்பி படுத்துக் கொண்டான்..
" மச்.. எது தலவாணிய கட்டிப்பிடிக்கவா.. அப்றம் எதுக்கு நீ இருக்க... " என முணுமுணுத்தவள்..
" ப்ளீஸ் பாவா.. நா தலவாணிய வச்சு கட்டுலுக்கு நடுவுல கோடு போட்டு வைக்குறேன்.. பாதுகாப்பு சுவர் மாறி அது நமக்கு நடுவுல இருக்கட்டும்.. உன்னோட எல்லைக்குள்ள நா வரவே மாட்டேன்.. உங்க பாதுகாப்புக்கு நா கேரண்டி.. ப்ளீஸ்.. வாயேன் பாவா.. " ஹரிணி பாவமாக கூறி அழைக்க..
அவளின் பயத்தை உணர்ந்தவன் அவள் அருகில் படுத்தான்.. எல்லைக் கோட்டிற்கு வெளியே தான்..
ரிஷி விழிகளை மூடி விட.. பவர் கட் வெளியே இடி மின்னலுடன் மழை வேறு பெய்வதால் அவளுக்கு பயம்.. உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.. அருகில் இருப்பவனின் உறக்கம் களையும் என்ற கவலையின்றி..
"ம்ச் ஹரிணி.. தூங்கலையா நீ.. "
" பாவா.. தூக்கம் வந்தா தூங்க மாட்டோம்மா.. பயமா இருக்கு பாவா.. இடி சத்தத்துல தூங்கவே முடியல.. " என்பதற்குள் அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்..
" இப்ப தூங்கு.. " என அவளின் இடையில் கை கொடுத்து முதுகில் தட்டிக் குடுத்தான் ரிஷி..
மன்னவனின் மார்பை மஞ்சமாக்கி படுத்தவள் அவனின் சாம்பல் நிற விழியை காண ஆவல் கொண்டாள்..
அதை மூடியிருக்கும் தரனின் இமைகளை பிரித்து சாம்பல் நிற கருவிழியை ரசித்து கொண்டு இருந்தவளை..
"ஹரிணி நானே என்ன ரொம்ப கஷ்டப்பட்டு.. கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்.. இதுல நீ இப்படில்லாம் பண்ணேன்னா நடக்கப் போற எந்த ஒரு சம்பவத்துக்கும் நா பொறுப்பில்ல.. என்ன சொல்றா.. முடிச்சுடலாமா சம்பவத்த.. " என தன் புருவத்தை ஒன்றின் பின் ஒன்றாக ஏற்றி இறக்க..
" ம்ஹிம்.." என தலையசைத்த படி தலையை அவனின் மார்பில் புதைத்துக் கொண்டாள் ஹரிணி..
இதழில் சிரிப்புடன் அவளின் இடையணைத்து துயில் கொண்டவரின் மனம் முழுவதும் காதலால் நிறைந்திருந்தது..
காமம் அற்ற காதலாய் அந்த இரவு நகர்ந்தது..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..