முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 65


 

அத்தியாயம்: 65 


காதலாக..

 

பெண் இதயத்தை..

 

வென்றவர்கள் கூட..

 

கணவனானதும்..

 

தோற்று போகிறார்கள்..

         

புரிதலில்..



அழப்புழா.. நீரைக் கிழித்து கொண்டு சொல்லும் அந்த மிதக்கும் படகு வீட்டில் தன் தேகம் சிலிர்க்க நீரின் வேகத்தை தன் கால்களில் உணர்ந்து கொண்டிருந்தாள் ஹரிணி.. 


அடர் நீல நிற ரவிக்கையில்  வெண்ணிற கேரள சேலை அணிந்து படகின் படித்திட்டில் அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தாள் அவள்..


துள்ளிக் குதிக்கும் சில மீன்களும் பசுமையாக பெயரே தெரியாது வளர்ந்திருக்கும் பாசிகளின் இடையே சென்ற அந்த படகு வீட்டின் பயணம் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது..


கண்ணுக்கு எட்டிய வரை பசுமை என சுற்றி இருக்கும் இயற்கையை  ரசித்தவளின் கண்கள் இப்போது தன் மன்னவனை தேடியது.. படகோட்டியிடம் எதையே பேசிக்கொண்டு இருந்தவன் தன்‌ மனையாளின் பார்வை கண்டு அருகில் வந்தான்‌..


அழகாய் புருவம் ஏற்றி பார்வையாலேயே ' என்ன.. ' என வினவியபடி அவளின் தோலை உரசிக் கொண்டு அருகில் அமர்ந்தான் ரிஷி.. 


ஆடவனின் அண்மை அவளின் பெண்மையை எழுப்ப வெட்கம் கொண்டு முகம் திருப்பினாள்.. தன் இடையில் பதிந்திருந்த ஆடவனின் கரம் தந்த அழுத்தத்தில் நிமிர்ந்தவளின் நெற்றியில் முட்டி தன் வசீகர புன்னகையை சிந்தினான் ரிஷி.. 


" தேங்க்ஸ் பாவா.. " 


" எதுக்கு.. இங்க கூட்டிட்டு வந்ததுக்கா..”  


" இல்ல பாவா.. இதுக்கு.. " என அவனி‌ன் நெற்றியை சுட்டிக்காட்ட அதில் கீற்றாய் திருநீறு.. 


" எனக்காக இத வச்சுக்கிட்டதுக்கு நன்றி பாவா.. " 


" நம்பிக்கயோடு வச்சுக்கிட்டா தா அது திருநீறு.. மத்தபடி இது ஜஸ்ட் சாம்பால் தா... " என தன் நம்பிக்கையின்மையை கூறினான்..


" எது எப்படியே‌ நீ வச்சுக்கிட்டேல்ல பாவா.. அது போதும் பாவா.. எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு பாவா.. வீட்டுல யாராவது ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்க இருந்தா போதும் பாவா.. " வார்த்தைக்கு வார்த்தை பாவா என கூறி அவனின் தோலில் சாய்ந்து கொண்டாள்.. 


வர மாட்டேன் என அடம்பிடித்தவனை‌ பிடிவாதமாக அழைத்துச் சென்றாள், 

 பத்மநாபன் கோயிலுக்கு.. இரண்டு நாளில் அவர்கள் ஊர் திரும்புவதால் ஊர் சுற்ற அழைத்து சென்றான் ரிஷி.. தரிசனம் முடித்தவளை வீட்டிற்கு அழைத்து  செல்ல விடாமல் கடத்தி கொண்டு வந்து விட்டான்.. அழப்புழா படகு வீட்டிற்கு.. 


ஒரு நாள் முழுவதும் முடிந்த நிலையிலும்  ஹரிணியை சேலையிலையே இருக்கச் சொன்னான் தரன்.. மற்ற உடைகளை விட சேலையே அவளின் அழகை அழகாய் எடுத்துக் காட்டியது அதனால்.. 


இயற்கையின் ஒவ்வெரு அழகையும் இருவரும் சேர்ந்தே ரசித்து அனுபவித்தனர்..‌ கொஞ்சம் பேச்சு.. கொஞ்சம் சிரிப்பு.. நிறைய சண்டை.. கொஞ்சம் சமாதானம் என  மெல்ல மெல்ல காதல் புரிந்த அவர்கள் காமமெனும் நிலையின் முதல் படி எடுத்து வைக்க நினைத்தனர்.. 


எதை நினையாதே என எண்ணுகிறோமோ.. அதையே தான் முதலில் நினைக்கிறது மனம்.. 


அவனுடனான முதல் கூடல்‌.. அவன் நெருங்கும் ஒவ்வொரு முறையும்  ஹரிணி‌யின் மனதை முள் கொண்டு தைத்தது.. அந்த கசப்பான நினைவு மட்டும் இல்லை என்றால் ஹரிணி அவனுடன் இரண்டறக் கலந்திருப்பாள்.. பாம்பைப் போல் பின்னி பிணைந்து கலவி கொள்ள தடையாய் வந்தமைந்தது அந்த நினைவுகள்..


அறையில்..


" பா...வா.. " தாபத்தில் வந்தது பெண்ணவளின் குரல்.. காரணம் ஆடவனின் அணைப்பிற்குள் இருப்பதால்..‌ 


"... " அவளின் குரல் போதையை ஏற்ற பதில் சொல்லாது அணைப்பை இறுக்கிக் கொண்டே‌ போனான் ஆடவன் தாபத்தில்..


" பாவா‌.. " மோகத்தில் திளைத்திருந்தவனை முன்னேற விடாது குரல் அது.. 


" ம்.. " சலிப்பாக.. 


" பாவா.. ஏங்கிட்ட..  எதுவும்.. சொல்லனுமா‌‌.. பாவா.. நீ.. " ஏக்கத்துடன் எதையோ எதிர்பார்த்து கேட்க..


" ம்.....ம்.. என்ன... சொல்ல.. ஹாங்.. நா.. உன்ன லவ் பண்றேன்னே அதையா சொல்லுங்கிற.. அது தா தெரிஞ்ச விசயமாச்சே.. இதுக்கப்பறமும் அத சொல்லித்தான் ஆகனுமா..” என்றவன் மங்கையின் தோலில் கிடந்த முடியை ஒதுக்கி ஒவ்வொரு வார்த்தைக்கும்‌ இடையில் அவளின் சங்கு கழுத்தில் முத்தமிட்டபடியே பேச... 


" இல்ல.. அது.. " அவனின் செயலில் நெகிழ்ந்தபடி தடத்தாள் பெண்..


" ம்ச்.. இப்ப பேச வேண்டிய நேரம் கிடையாது கிட்.. " என இதழில் முத்தமிட சென்றவனின் உதட்டை தன் தளிர்  விரல்  கொண்டு மூடியவள்.. 


" நா உங்கிட்ட சில விசயம் பேசி க்ளியர் பண்ண வேண்டி இருக்கு.. அதுக்கு அப்றம் இதெல்லாம் வச்சுக்குவோமே.. ப்ளீஸ்.. " என்றவளின் கண்களில் ஏக்கம் , காதல் , குழப்பம் என கலவையான‌  உணர்வுகள்..

 

அவளை விட்டு விலகியவன்.. மெத்தையில் அமர்ந்து ஆழ தன் மூச்சை இழுத்து வெளியை விட்டான்.. 

" ம்.. என்ன..  சொல்லு.. " 


" நாம வெளில போய் பேசுறது பெட்டர்.. போலாமா.‌‌ " சின்னக் குரலில். 


" ம்.. நீ போ வாரேன்.. " என்றவனுக்கு தன் உணர்வை கட்டுப்படுத்த சில நொடிகள் தேவைப்பட்டது.. எத்தனை வருட ஏக்கம் இது.. காதலுடன் மங்கைய ஆள நினைத்து தவித்தவனை தடுத்து சென்று விட்டாள்.. அதனால் உண்டான உணர்ச்சிகள் அடங்க நேரம் தேவை தான்.. அது அடங்கிய பின் எழுந்து படகின் மேல் தளத்தை அடைந்தான்..


தேகம் சிலிர்க்க வைக்கும் தென்றல் காற்று ஆனால் ஹரிணியின் மனதை குளிர்விக்க வில்லை.. 


எதிர் எதிராக அமர்ந்திருந்த இருவரும் சிறிது நேரம்  பேசிக்கொள்ள வில்லை  


" என்ன விசயம் கிட்.. உடம்பு சரியில்லையா.. ஹாஸ்பிடல் போலாமா..”  அக்கறையுடன் கேட்க.. 


" இல்ல.. எனக்கு.. நம்ம லைஃப்ப பத்தி பேசனும்.. " ஹரிணி பெருமூச்சு விட்ட படி..


" அதுக்கு என்ன இப்போ எல்லாம் நல்ல தான இருக்கு.. " ரிஷி.. 


" இல்ல.. நல்லா இல்ல.. நம்மளோட.. நம்மளோட ஃபஸ்ட்.. ஐ மீன்.. " அன்றைய நிகழ்வை எப்படி சொல்லதென்று தெரியாமல் தயங்கியவாறு..


" எனக்கு புரியுது கிட்.. அன்னைக்கு நடந்தது தப்பு தான்.. பட் ஹஸ்பெண்ட் அன்டு வைஃப் குள்ள இதெல்லாம் சகஜம் தான.. " என்றான்.. பலவந்தமாக நடந்து கொண்ட அன்றைய நிகழ்வை சகஜம் என்கிறானா என்றிருந்தது அவளுக்கு..


" வாட்.. எனக்கு புரியல.. " 


" ஐ மீன்.. பலரோட லைஃப் இப்படி தா போகுது.. சண்ட அப்றம் சமாதானம்னு.. அதுக்குன்னு  நடந்ததையே நெனைச்சுட்டு இருந்தா எப்படி.. மறக்க வேண்டியத மறந்துட்டு.. எல்லாத்தையும் கடந்து போகனும்.. அதுதா லைஃப்.. " என்று தத்துவம் பேசியவன்.. தனக்கும் அன்றைய நிகழ்வுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் பேசி ஹரிணியின் இதயத்தில்  இடியை இறக்கினான்..


" கடந்து போனுமா.. எப்படி உன்னால இப்படி சொல்ல முடியுது ரிஷி.. சந்தோசமா ஆரம்பிக்க வேண்டிய நம்ம தாம்பத்தியம் நினைக்கவே கஷ்டமான விசயமா ஆக்குனது நீ.. அதுக்காக ஒரு‌ சின்ன‌ வருந்தமோ கவலையோ எதுவுமே  இல்லாம.. கடந்து போகச் சொல்லுற.. எப்படி முடியும்.. என்னால.. " கண்களில் துளைத்திருந்த நீருடன்..


" அன்னைக்கு நீ கொஞ்சம் யோசிச்சு பேசியிருக்கனும் கிட்.. தப்பு உன்னோடது தா.. இட்ஸ் ஓகே... அதப்பத்தி பேசி இப்ப ஒன்னும் செய்ய முடியாது.. சோ லீவ் இட்.. " என்றான் பெருந்தன்மையுடன் சொல்ல.. 


" தப்பு என்னோடது மட்டும் தானா.. நீ பண்ணவே இல்ல..‌ அப்படித்தான.. " அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு கோபமாக எழுந்த படி..


"நிச்சயம்.. நா தப்பு பண்ண மாட்டேன்.. "  அழுத்தமாக கூறியவன்...


" ம்ச்.. இப்ப யாரு மேல் தப்புன்னு கண்டுபுடுச்சு என்ன பண்ண போற.. விட்டுடு கிட்.. " கூலாக அதே நேரம் திமிராகவும் பேச..


மற்ற நேரமாக இருந்தால் அவனின் திமிரை அவள் ரசித்திருப்பாள்.. ஆனால் இன்று தரனின் ஆண் என்ற கர்வமாகவே அவளின் கண்ணிற்கு தெரிந்தது.. 


எங்கோ எதிலோ அடிபட்டு ஏமாந்து போன உணர்வு அவளுள் எழ.. 


" போதும்.. எல்லாமே.. போதும்..” ஹரிணி..


" என்ன போதும்.. நா எதுவும் குடுக்கலையே போதும்னு சொல்ற அளவுக்கு.. " அவன் முகத்தில் இருக்கும் திமிர் குறையாமல் கேலியாக செல்ல.. 


" இனி நமக்குள்ள எதுவுமே கிடையாது.. வேணாம்.. எந்த ரிலேஷன் ஷிப்புமே நமக்குள்ள வேணாம்.. உன்னோட இந்த திமிரு.. ஆணவம்.. எல்லாமே பிடிச்சிருந்தது.. ஆனா இப்ப பிடிக்கல.. “ என்றாள் வலி மிகுந்த குரலோடு..


" கிட்.. என்ன இது.. " என்றவன் கண்களுக்கு அவளின் வலி புரியவே இல்லை.. அவளின் பெண்மையை வலுக்கட்டாயமாக அபகரித்தது அவனுக்கு தவறாக படவே இல்லை.. 


 என்ன தவறு செய்தோம் என்று புரிந்தும் அதை தவறு என்று உணராத ஒருவனிடம் தன் மனம் லயிப்பது வேதனையாக இருந்தது அவளுக்கு..


" ஓகே.. தப்பு நா பண்ணதாவே இருக்கட்டும்..‌‌ இனி அப்படி நடக்காது.. உன்னோட பர்மிஷன் இல்லாம நா உன்ன தொடமாட்டேன்..‌ஐ பிராமிஸ்ஸிங் யூ.. " என எழுந்து சென்று அவளை தொட அருகில் வந்தவனை தன் பலம் கொண்டு தள்ளிவிட்டவள்.. 


முகத்தில் அருவருப்புடன் " ச்சீ ..."  என்றாள் ..


இதற்கு முன்னும் அவளின் இதே பாவனையும் ச்சீ என்ற வார்த்தையும் அவனின் ஈகோவை தூண்டி விட்டது.. ஆனால் இன்று தன் நிதானத்தை இழக்காமல் பொறுமையுடன் நின்றான்..  


" தப்பு பண்ணது நான்தா.. நம்ம கல்யாணம் எப்படி நடந்ததுன்னு  தெரிஞ்சிருந்தும் நா உன்ன குறையா சொல்லாம சூழ்நிலைல நடந்து போச்சி கடவுள் குடுத்த வாழ்க்கன்னு உங்கூட வாழ நெனைச்சது என்னோட தப்பு தா.. விருப்பமில்லாம நடந்திருந்தாலும் நமக்குள்ள நடந்த அந்த தாம்பத்தியத்துக்கு மதிப்பு குடுத்து  அகிலன சுமந்தது என்னோட தப்பு தா.. இப்ப கூட டைவர்ஸ பேப்பர்ல நீ கையெழுத்து போட்டதுக்கு அப்புறமும்.. உங்கூட வாழ ஆசப்பட்டு உம்பின்னாடியே உன்ன தேடி வந்தேனே இதுவும் என்னோட தப்பு தான்..‌ " என்றவள் கண்களில் உண்டான நீர் கண்ணை விட்டு வெளியே வரவே இல்லை.. அதை வெளியேற்ற அவள் முயற்சிக்கவில்லை எனலாம்..


"நீ என்ன டைவர்ஸ் பண்ண நினைச்சிருந்தாலும் என்னோட சுயமரியாதைய விட்டுக் குடுத்து இங்க உன்னத் தேடி நா ஏ வந்தேன்னு  தெரியுமா.. " என்றவள் அறைக்குச் சென்று சிறிய கிஃப்ட் பாக்ஸை எடுத்து வந்து பிரித்தாள்.. 


அது கடிகாரம்.. 


அவனின் இதயத்துடிப்பை தன் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலாக மாற்றி செயல்படும் தங்கச் சங்கிலியால் செய்யப்பட்ட வைர கற்கள் பதித்த ஒரு கை கடிகாரம்..


அதை அவனின் இடது கரத்தில் கட்டியவள் அவனை முகத்தை நிமிர்ந்து பார்த்து.. 


" ஐ.. லவ்.. யூ.. எப்ப எப்படின்னுலாம் தெரியல.. நா உன்ன விரும்ப ஆரம்பிச்சுட்டேன்.. வாழ்க்க முழுசும் உங்கூடவே இருக்கனும்னு ‌ஆச.. பட் என்னோட பெண்மைய வலுக்கட்டாயம அபகரிச்ச பிறகும் அத குற்றம்னு கூட உணராத உன்னோட இந்த கர்வம் எனக்கு பிடிக்கல.. உன்னோட திமிர் பேச்சு சுத்தமா பிடிக்கல.. காதலுக்கு வேணும்னா இது சரிப்படலாம்.. நீ என்ன பண்ணாலும் ரசிச்சிட்டே பூனக்குட்டி மாறி உன்ன சுத்தி சுத்தி வர்றது.. பட் கல்யாணத்துக்கு இது சரிப்படாது.. I need a self respect.. குட் பாய்.. " என கூறி படகோட்டியிடம் படகை நிறுத்த சொல்லி இறங்கிச் சென்றாள் ஹரிணி.. 


தரன் கூறிய காதல்,  ஹரிணியை மகிழ்ச்சி அடையச் செய்ய வில்லை.. ஒருவேலை அன்றைய நிகழ்விற்கு அவன் அவளிடம் மன்னிப்பு வேண்டி அவளை இத்தனை ஆண்டு காலம் தூக்கி சுமக்கும் தன்‌ மனதை வெளிக்காட்டி இருந்தால் அடைந்திருப்பாளோ என்னவோ.. 



நிச்சயமாக அவன் மன்னிப்பை வேண்டவில்லை என்றாலும் சிறு வருத்தத்தையாவது வெளிப்படுத்தி இருந்தால் அவளின் காதல் மனம் கண்டிப்பாக கரைந்து அவனை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கும்..


 ஆனால் யாருக்காகவும் தன் நிலையை தன் ஈகோவை விடுக்குடுத்து கீழே இறக்க மாட்டேன் என்பவன் எப்படி மன்னிப்பை வேண்டுவான்.. தவறு செய்யவோ செய்திருக்கவோ மாட்டேன் என்பவன் எப்படி செய்த ஒன்றை உணர்ந்து திருத்துவான்.. 


கோப நடையுடன் செல்லும் அவளையே படகில் சாய்ந்து ரசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் தரன்.. அவள் கோபமாகச் செல்கிறாள் இவன் அதை ரசிக்கிறான்.. 


அவளின் செயல் அவனுக்கு சிறு பிள்ளைத்தனமாகவே பட்டது.. எப்படியும் தன்னிடம் திரும்பி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையும் கர்வமும் அவன் முகத்தில் அதிகமாக தெரிந்தது.. வரவில்லை என்றால் வம்புகள் பல செய்து வர வைத்து விட வேண்டியது தான் என எண்ணியவன் உதடுகள் கர்வப் புன்னகையை சிந்தியது..


கை கடிகாரத்தை வருடி ரசித்தவன் காதுகளில் ஹரிணி கூறிய 'ஐ லவ் யூ ' என்ற வார்த்தை மட்டுமே கேட்டது.. மற்றவை.. ம்ஹீம்.. கேட்டது போல் தெரியவில்லை.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...