முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 66

அத்தியாயம்: 66


" என்னைய காப்பாத்துங்க‌.. என்னைய காப்பாத்துங்க.. காப்பா...‌‌த்துங்க..” என தொண்டை நீர் வற்றும் வரை கத்திக் கொண்டே வந்தான் அவன்..


"  எங்க இருக்கன்னு கேட்டது ஒரு குத்தமா‌.. குப்பைய அள்ளி போடுற மாறி என்ன அள்ளி தூக்கி போட்டு கொண்டு போறாளே.. இது நியாயமா.. ஒரு புள்ள குட்டிக்காரன காரணமே சொல்லாம கடத்திட்டு போறாளே இது அடுக்குமா.. " என விடாது கத்திக் கொண்டே வந்தான் கௌதம்..


" ஆ.. நிப்பாட்டுறியா கொஞ்சம் காது பக்கத்துல வந்து கத்தீட்டு இருக்க.. வாய‌‌ மூடுடா.. " ஹரிணி..


" ஐய்யோ.. ஐய்யோ.. பேசுறதுக்கு கூட விடாம ஒரு புள்ள குட்டி காரன கடத்தீட்டு போறாளே.. " என மார்பில் அடித்துக் கொண்டு அழுவது போல் பாவ்லா செய்தான் கௌதம்..


" டேய்.. நீ இப்ப அமைதியா வரல உன்ன கார்ல இருந்து உருட்டி விட்டுடுவேன்.. பிங்கர் ஆன் யுவர் மௌத்.. " என்றாள் அதட்டலாக..


விரலை வாயின் மேல் வைத்தவன்.. " இது மட்டும் எம் பொண்டாட்டிக்கு தெரிஞ்சதுன்னா.. " 


" எதுடா தெரியனும் இந்துக்கு.. நீ வாய்ல கை வச்சு உக்காந்திருக்கியே இதுவா.. " 


" இல்ல இவ்வளோ வேகமா நா கார்ல டிராவல்  பண்ணுறத மதி பாத்தான்னா.. இனி எங்க போனாலும் கார்ல போகாதிங்கன்னு சொல்லி இதுக்கும் தடா போட்டுடுவா.. ஃப்ளைட்க்கு போட்ட மாறி.. மாட்டு வண்டிலலாம் போய்  என்னால எந்த வேலையையும் பாக்க முடியாதும்மா.. ஏன்னா.. நா பி... " 


" பிள்ள குட்டி காரன் அதான்ன.. மூன்னூறு வாட்டி சொல்லிட்ட‌ அமைதியா வாயேன் டா..”


" நீ கொஞ்சம் மெதுவாத்தா ஓட்டேன்.. ஒரு ஒரு வாட்டியும் நீ ஓவர் டேக் பண்ணும் போது  பக்கு பக்குன்னு இருக்கு.. " நெஞ்சில் கைவைத்தபடி..


" ம்ச்.. இப்பவே நாம லேட்டா போறோம்.. ஆம மாறி ஊர்ந்து போனா நாம போக வேண்டிய எடத்த பூட்டு போட்டு பூட்டிடுவானுங்க.. மெதுவால்லாம் போ முடியாது‌.. " வேகத்தை அதிகப்படுத்தியவாறு பேச..


" அப்படி எங்க  தா போறோம்னு சொன்னா நல்லா இருக்கும்.. ஏன்னா உங்கூட வர்றது எமலோகம் எப்படி இருக்கும்னு டிரைலர் காட்டுனயே மாறி இருக்கு.. அதா போய் சேருற எடத்த தெரிஞ்சு வச்சுக்கிட்டா வீட்டுக்கு தகவல் குடுக்க சரியா இருக்கும்ல..  சொல்லேன்.. " கௌதம்..


மாலை ஐந்து மணி இருக்கும்.. ஹரிணி காரை ஓட்ட கௌதம் எங்கு செல்கிறோம் என்பது தெரியாமல் காரில் ஏறியதில் இருந்தே கேட்கிறான்.. அந்த அழுத்தக்காரிதான் பதில் சொல்லவில்லை.‌. 


ரிஷியுடன் சண்டை போட்டு வந்தவள் வீட்டிற்கு செல்லவில்லை‌.. மும்பைக்கு சென்றாள்.. தன்னை சமன்படுத்தி கொள்ள மூன்று நாட்கள் தேவைப்பட்டது அவளுக்கு.. யாரிடமும் பேசவில்லை அந்த நாட்களில்.. 


' எப்படியும் தன்னைத் தேடி வந்துவிடுவாள்.. ' என்ற நம்பிக்கை ரிஷியிடத்தே அதிகமாக இருந்தது.. அதனால் அவள் அருகில் இல்லாமல் இருப்பது ரிஷியை பாதிக்கவில்லை..  ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டது கௌதம் தான்.. அவள் எங்கே என தெரியாமல் தரன் எந்த கவலையும் இன்றி கண்முன்னே நடமாடுவது கௌதமிற்கு எரிச்சலை உண்டாக்கியது.. 


" போட் ஹவுஸ்ல என்ன நடந்தது.. நீ ஹரிணி கூட சண்ட போட்டியா.. எங்க அவ.. " என தரனுடன் சண்டைக்கு நின்றான்.. 


தனக்கும் ஹரிணிக்கும் இடையில் கௌதம் வருவதை விரும்பாத ரிஷி ‍" உனக்கு இது தேவையில்லாத விசயம்.. நா ஏற்கனவே சொன்னது தாஎங்க ரெண்டு பேருக்கும் இடையில் வராத.. " என்றான் எரிச்சலுடன்..


" எது தேவயில்லாது விசயம் அவளுக்கு ஒன்னுன்னா நாந்தா வருவேன்.. எனக்கு நீ பதில் சொல்லித்தா ஆகனும்.. சொல்லுடா சண்ட போட்டியா நீ அவ கூட.. இப்ப ஹரிணி எங்க.. " கோபம் குறையாமல்..


" சண்ட தா போட்டது நா இல்ல உன்னோட ஃப்ரெண்டு தா.. எதுக்குன்னு அவாட்டையே கேட்டுக்கோ.. இப்ப எங்க இருக்கான்னு எனக்கு தெரியாது.. " திமிராக..


" நீ எல்லாம்‌‌.. ச்ச.. உனக்கு இவ்ளோ ஆணவம் ஆகாது கொறச்சுக்க இல்ல கொறக்க வைக்குறேன்..‌ " என எச்சரித்து சென்றான் கௌதம்..


விடாது அவளை தொடர்பு கொள்ள முயன்றவனின் அழைப்பை இன்று காலையில் தான் எடுத்தாள்.. சென்னை  விமான நிலையத்தில் இருப்பதாக கூறி கௌதமை வர வைத்தவள் காரில் எங்கோ அழைத்து செல்கிறாள்.. எங்கே.. 


வைசுவும் , ஹரிணியும் பரதம் பயின்ற நாட்டிய பள்ளி அது.. 


" இன்னுமா இத மூடாம நடத்துறானுங்க.. இங்க எதுக்கு வந்திருக்கோம்.. " கௌதம்..


" உங்கண்ணே ஒரு பென் டிரைவ்வ  தேடிட்டு இருக்கான்.. அது இங்க இருக்கான்னு பாக்க வந்திருக்கோம்.. " ஹரிணி..


" என்ன உம்புருஷன் பென்டிரைவ்வ தேடுறானா.. " என்றவனை முறைத்தாள் ஹரிணி..


" புருஷன்னு சொன்னா காண்டாகுதுல்ல.. எனக்கும் காண்டாகுது நீ அவன எனக்கு அண்ணன்னு சொல்லும் போது.. ஆமா அங்க தா பென்டிரைவ் இருக்கும்னு எப்படி சொல்ற.. " கௌதம்...


" அன்னைக்கு அங்கிள் கூட நாங்க பீச்ல விளாண்டுட்டு இருக்குறப்போ வைசு ஒரு பார்சல பிரிச்சா..‌ அப்ப ப்ரேஸ் லெட் மாடல்ல ஏதோ ஒன்னு விழுந்தது.. அத நா தா எடுத்து வச்சிருந்தேன்.. மறுநாள் குடுக்கலாம்னே.. இங்க எனக்குன்னு இருக்குற லாக்கர்ல வச்சிருந்தேன்.. ஆனா குடுக்கத்தா முடியல.. எனக்கு என்னமோ உங்கண்ணே தேடுற பென்டிரைவ் அதுவா கூட இருக்கலாம் தோனுது.. who knows.. " என்றாள


" இப்பவரைக்குமா நீ இங்க மெம்பராவா இருக்க.. " கௌதம்..


" ம்.. ஆமா.. அப்பப்ப கச்சேரிக்கு வருவேன்.. பண்ணவும் செய்வேன்.. வா.. " என பள்ளியின் உரிமையாளரிடம் பேசி அங்கு தனக்கிருக்கும் லாக்கரை ஓப்பன் செய்து அதில் இருந்த ஃப்ரேஸ்லெட் மாடலில் உள்ள விரலியை எடுத்தாள்..‌‌ 


இருவரும் அதில் உள்ள தகவல்களை எடுக்க முடிகிறதா என பார்த்துக் கொண்டு இருந்தனர்.. 


" கௌதம் ரொம்ப வருஷமா இத யூஸ் பண்ணாததுனால‌ இது கரெப்ட் ஆகிருக்குமா..  " என பென்டிரைவை லேப்டாப்பில் சொருகியபடி கேட்க..


" மே பீ.. ஆனா ஐயா நெனச்சா அத‌ ஓப்பன் பண்ண முடியும்.. " என இல்லாத டீ சர்ட்டின் காலரை தூக்கி விட..


" பாஸ்வேர்டு போட்டிருந்தாலும் நீ அத ஓப்பன் பண்ணிடுவியா என்ன.. " சந்தேகமாக..


" ஐயாவ யாருன்னு நெனச்ச.. கம்ப்யூட்டர கரச்சு குடிச்ச அதி மேதாவி யாக்கும்..‌‌ நா கை வச்சா அது நடக்காம எப்படி இருக்கும்.. ஒரு டூ டேஸ் வெய்ட் பண்ணு இதுல இருக்குற எல்லாத்தையும் நா உனக்கு என்னன்னு  காட்டுவேன்.. “  என்றவனை திரும்பி பார்த்து முறைத்தவள்..


" இவ்ளோ பில்டப் எல்லாம் குடுத்துட்டு மகனே நீ மட்டும் பென்டிரைவ்வ ஓப்பன் பண்ணாம இரு‌.. அப்ப இருக்கு உனக்கு.. " 


" அதெல்லாம் பண்ணீடலாம்.. இப்ப நாம கொஞ்சம் பர்ஷ்னலா பேசலாமா..‌ " கௌதம்..


" நீ என்ன பேசப் போறன்னு எனக்கு தெரியும்.. நா அத பத்தி பேச விரும்பல.. " என காரில் ஏறி ஸ்டார் செய்தாள்..


தரனுடன் நடந்த சண்டையை கௌதமுடன் பகிர்ந்து கொள்ள அவள் விரும்பவில்லை..


" என்ன டார்லிங் புசுக்குன்னு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே இப்படி எண்ட் கார்டு போடுற.. நா என்ன சொல்லுறேன்னு கொஞ்சம் அமைதியா தா கேளேன்.. " கெஞ்சிக் கொண்டே அவளுடன் காரில் ஏறினான்..


" சரி.. ஒரு ஐஞ்சு நிமிசம் டயம் தாரேன்.. அதுக்குள்ள என்ன பேசனுமோ அத பேசிக்க.. ஆனா நா பதில்லாம் சொல்லமாட்டேன்.. ஜஸ்ட் கேக்க மட்டும் தா செய்வேன்.. ஆனா ஐஞ்சு நிமிசத்துக்கு மேல எதாவது பேசுன பாத்துக்க.. " என விரல் நீட்டி கொன்று விடுவதாக எச்சரித்தாள் ஹரிணி..


" ச்சே ச்சே.. அஞ்சி நிஷத்துக்கு மேல ஒரு செக்கேண்ட் கூட நா பேச மாட்டேன்.. “ என்றவன் மனதிற்குள்..


' டேய் கௌதமா பாத்து பக்குவமா பேசனும்.. ‌இல்லைன்னா செலவே இல்லாம நம்மளுக்கு சூனியம் வச்சிடுவானுங்க இந்த அரமெண்ட கப்பிள்ஸ் பீ கேர் ஃபூல்.. ' 


“ நா ரெடி கார ஓட்டிட்டே பேசலாமே.. ஏன்னா டயம் ஆச்சு.. மை வைஃப் வெய்ட்டிங்.. நா புள்ள குட்டி காரென் இல்லையா.. " 


" ம்..” என்றவள் காரை ஓட்டினாள் மிதமான வேகத்தில்.. 


" அதாவது என்னன்னா நம்ம வாழ்க்க ரொம்ப அழகானது.. அத நமக்கு பிடிச்ச மாறி வாழனும்.. அப்படி பிடிக்காத மாறி அமஞ்சுச்சுன்னா.. அத நமக்கு பிடிச்ச மாறி மாத்திக்கன்னும்.. " 


" அப்பயும் முடியலைன்னா என்ன பண்ணனும் போதகரே.. ம்.. சொல்லுங்கள்.. " கேலியாக..


" ம்ச்.. பேச்சு வார்த்தங்கிறது சிண்டு போட்டு பிரிஞ்சிருக்குற பல முக்கிய நாடுகளையே சேத்து வைக்காது.. சோ அவன்ட்ட உக்காந்து பேசு.. எல்லாமே சரியாகிடும்.. " 


" சரியாகிடுமா.. தப்பா எதுவும் நடந்துடுச்சோ.. " யோசிப்பது போல் கன்னத்தில் கை வைத்தாள்..


" நீ குடுத்த ஐஞ்சு நிமிசத்துல நீயே பேசிட்டன்னா என்ன அர்த்தம்.. “  


" நீ கூடத்தா என்ன கேக்கனுமே அத‌ விட்டுட்டு கண்டதையும் பேசிட்டு இருக்க.. " 


" அதுவும் சரிதா நீ அவன்ட்ட வாட்ச குடுத்தியா இல்லையா..” ஆவலாக.. 


" ம்.. " என்றவள் நினைவு அன்றைய நாளுக்கு சென்றது ...


" என்ன சொன்னான்..”


",......"


"உன்னோட ப்ரப்போஷல அக்சப்ட் பண்ணானா..  "


" ..... " அவள் பதில் பேசாது இருக்கவும்.. 


“ அப்ப உன்ன அவெ ப்ரப்பொஷ் பண்ணிருப்பான் கரெக்ட்டா.. லவ்வ சொல்லி லவ் பேர்ட்டா திரியாமா ஏ தனி தனியா திரும்பி வந்திங்க.. “


“......... “ 


" பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. என்னாச்சி உங்க ப்ரப்போஷல்.. நடந்ததா இல்லயா.." 


"நடந்தது போட்ல வச்சு.... " ஹரிணி சலிப்பாக..


" ஏம்மா சலிச்சுக்கிற.. ஒரு வேல நா நினைச்ச மாறி சீன் அமையலயோ.. "


" என்ன மாறி நினைச்ச‌.." 


" கண்ண மூடி நா சொல்லுறத இமாஜின் பண்ணு.. அப்ப தா நா நினைச்ச சீன் வரும்.. ஓகே.. க்ளோஸ் யுவர் ஐஸ்.. " என்றவன் தன் கற்பனையை கட்டவிழ்த்து விட்டான்..


"நீ ஒரு அழகான கார்டன்ல நிக்குற.. சுத்தி உன்ன‌ மயக்குற அளவுக்கு வாசம் தர்ற பூ.. தரைல பச்ச கலர் புல்லுக்கு மேல ரெட் கர்பெட்ட விரிச்சு வச்சு  அதுல நீ வெய்ட் கவுன்ல பின்னாடி வாலு மாறி அந்த துணி ஷால்ன்னு நினைக்குறேன் அது தொங்கிகிட்டே வருது.. கவுன் கால்ல தட்டி விட்டுடாம இருக்க அத நீ லேசா தூக்கிகிட்டு கொஞ்சம் வேகமா அங்க இருக்குற மேடைக்கு ஹை ஹீல்ஸ் போட்டுட்டு ஓ....டி வர்ற.. 


அப்ப அவென் கைல ஒரு பொக்கே வச்சுட்டு ப்ளாக் கலர் கோர்ட் சூட்டுல நிக்குறான்.. அவன பாத்ததும் ஓடி வந்துட்டு இருந்த நீ நடக்க ஆரம்பிக்குற.. உன்ன அவென் பாக்க ... அவன நீ பாக்க.. நீ பக்கத்துல வரவும் உன்னோட முன்னாடி முட்டி போட்டு அவனோட லவ்வ சொல்லி உங்கைல டைமெண்ட் ரிங் போட்டு விட்டு அந்த கைல கிஸ் பண்ணுறான்.. அப்ப நீ வெக்கப்பட்டு.. ஏய்.. நா கஷ்டப்பட்டு உன்னோட லவ்வுக்கு சீன் சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடான்னா ரேடியோவ போட்டு விடுற.. " 


" நீ கண்ண மூடச் சொன்னேல.. அப்ப யாரோ என்னோட தோட்டத்துல லைட் ஆஃப் பண்ணிட்டாங்க போல வெளிச்சமே இல்ல.. பயந்துட்டேன்.. அத்தோட நா கார் வேற ஓட்டனும்.. நானும் பிள்ள குட்டி காரில்ல..” என இழுத்தவள் கௌதமின் முறைப்பில் பேசாமல் வாயை மூடினாள்.. 


" எதுக்கு சண்ட போட்டிங்க.. " 


" ...... " 


" சொல்லமாட்ட.. சரி.. இப்ப வீட்டுக்கு போறோமா இல்ல மும்பைக்கே திரும்பி போக ஃப்ளைட் ஏத்தி விடவா.." 


" விக்ரம் வீட்டுக்கு போ போறேன்.. நா அங்க தா தங்கப் போறேன்.. " 


" வாட்..... " என்றவனை கண்டு கொள்ளாது மௌனமாய் இருந்தாள் ஹரிணி..


அங்கு போய் என்ன செய்யப் போகிறாள்.. 



தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

 அன்பே 67

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...