முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 67


 

அத்தியாயம்: 67 



உணரும் வரை..


உண்மையும்..


பொய் தான்..


புரிகின்ற வரை..


வாழ்க்கையும்..


புதிர்தான்..




கண்களில் கோபத்துடன்  தன் பார்வையாலே ஆளை எரிக்க முடிகிறதா என ஆராயும் வகையில் தன் தீ கண்களால் எதிர் நாற்காலியில்  அமர்ந்திருந்த விக்ரமை முறைத்துக் கொண்டு இருந்தான் ரிஷி தரன்.. 



" அண்ணே இப்ப எதுக்கு சமாதானம் பேசப்போற இந்தியா பாக்கிஸ்தான் பிரதமர் மாறி  ஒருத்தருக்கொருத்தர் பாசமா லுக்கு விட்டுட்டு இருக்காங்க.. " பிரகாஷ்..


" இவனுங்கள பாத்தா பிரதமர்  மாறியாடா  தெரியுது.‌‌. இதுல பாசமா வேற லுக்கு விடுறாங்களாம்.. " சம்பத்..


" ஆமா மச்சான் ஸார்.. என்ன ஒரு கருணையான பார்வ அது.. இவெங்களால தா நம்ம காஷ்மீர் பிரச்சனைய தீக்க முடியும்.. " பிரகாஷ்.


" கருணையா பாக்கல டா அது.. காண்டோட பாக்குறான் உன்னோட அண்ணே.. என்ன கேட்டா இன்னும் கொஞ்ச நேரத்துல விக்ரம் சொந்தகாரங்களுக்கு தந்தி குடுத்து கூப்பிடனும் போலயே..” கௌதம்..


" அதா ஏன்னு கேட்டேன்.. " பிரகாஷ்.. 


" உங்கண்ணி அதா இவென் பொண்டாட்டி  ஹரிணி.. இங்க பக்கத்தூர்ல அதோ அவனோட வீட்டுல தா இருக்கா தெரியுமா உனக்கு.. " கௌதம்..


" அவனுங்க ரெட்டி பேத்தி ஹரிணி மேல கோபமா இருப்பாங்களே.. வீட்டுக்குள்ள விட்டாய்ங்களா.. எப்படி..  " பிரகாஷ்..


" தொரத்தி விட்டுடு வாய்ங்கன்னு தா நானும் எதிர்பாத்தேன்.. ஆனா அந்த ராமாயி கெழவி அதா ஊர் முன்னாடி வாயால கம்பு சுத்துச்சே அது இப்ப ஆரத்தி சுத்தி உள்ளார கூட்டிட்டு போச்சு.. " கௌதம்..


" ஏன் இந்த திடீர் மாற்றம்.. " சம்பத்..


" அது ஒன்னுமில்ல கத ரொம்ப இழுத்துட்டே போதாம் அத சீக்கிரமா முடிச்சுடலாம்னு நினைக்குறாங்க போல.. " கௌதம் 


" அப்ப ஃபைட் சீன்லாம் வருமா.. நமக்கு பறந்து பறந்து சண்ட போடுற சீன் வரும்மா.. " பிரகாஷ்.. 


" பஜ்ஜெட்ல கத எழுதுறோம்.. அதா நாலு சுவத்துக்குள்ள நாலு பேர வச்சி  பேசி முடிச்சுடலாம்னு இருக்கோம்..‌ என்ன சரிதான.. அந்த நாலு பேர்ல நீயும் ஒருத்தனா இருக்கியா இல்லையான்னு தா தெரியல.." கௌதம்..


" அப்ப கிளைமேக்ஸ்.. " சம்பத்..


" அதப்பத்தி சொல்லத்தா உங்க ராணிம்மா வந்துட்டு இருக்கா.. "என்ற போதே ஹரிணி வீட்டிற்குள் நுழைந்தாள் உடன் விஜய்..


அவனை பார்த்ததும் இந்து கௌதமின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.. அவளை முன்னே நிறுத்தி அவளின் தோலில் கை கொடுத்து தன் செயல்களால் தைரியம் ஊட்டினான்  கௌதம்.. 


விஜய் யாரையும் கவனத்தில் கொள்ளாது இந்துவிடம் வந்தான்.. 


" நா மட்டும் அன்னைக்கு போதைல இல்லாம இருந்திருந்தா உனக்கும் ஹரிணிக்கும் இந்த  கஷ்டம் வந்திருக்காதுல்ல.. இனிமே நா சரக்கு அடிக்கவே மாட்டேன்.. இதுனால எத்தன பேர இழக்க வேண்டியதாகிடுச்சி.. என்ன மன்னிச்சுடுமா..” என கரம் கூப்பி கேட்டவனை பார்த்து  கௌதம் சிநேகமாக புன்னகைத்தான்.. 


செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது நல்குணமாகும் .‌ அதை நியாயப்படுத்துவது ஆணவமாகும்.. அவனின் நற்குணத்தை எண்ணியே கௌதம் புன்னகைத்தான்..‌‌


விஜய் , விக்ரமின் அருகில் சென்று அமர்ந்தான்.. அவன் கண்களில் பயமானது அப்பட்டமாக தெரிந்தது.. அது தரனின் மீது தான்.. தன் இன்னொரு மகன் இப்போது இல்லை அதற்கான காரணங்களுள் அவனும் ஒருவனே அதான் அடி பின்னி எடுத்துவிட்டான் தரன்..


" ராணிம்மா இவனுங்கள எதுக்கு கூட்டீட்டு வந்த.. என்ன பண்ண போற‌.. " சம்பத்..


" சொல்றேன் ண்ணா.. " என்றவள் விக்ரமிடம்.. 


" இந்த டேம் காரணமா எந்த செக்ஷன்னுக்கு கீழ கேஸ் ஃபைல் பண்ணிருக்கிங்க.. FIR காப்பி எதுவும் இருக்கா.. நா அத பாக்கலாமா.. " என வினவினாள்..


அவளின் கேள்விக்கு விக்ரம் ரிஷியை திரும்பிப் பார்த்தான்.. ரிஷி கண் காட்டியதும் அவன் ஒரு காகிதத்தை காட்டினான்.. அது கிட்டத்தட்ட பல  ஆண்டுகளுக்கு முன்னால் தொடுக்கப்பட்ட வழக்கு.. வழக்கு என்பதை விட அது ஒரு மனு அவ்வளவு தான்.. 


" ஓகே இது சம்மந்தமா எத்தன வாய்தாக்கு நீங்க போய்ருக்கிங்க இப்ப இத ஹேண்டில் பண்ற இன்ஸ்பெக்டர்.. அப்றம் வக்கில்.. எங்க இருக்காங்க.. " என அடுக்கடுக்காக கேட்டவளுக்கு பதில் வரவில்லை ..


விக்ரமும் விஜயும் திருதிருவென முழித்தார்கள் எனலாம்.. காரணம் டேம்.. டேம்.. என்றார்களே தவிர அது சம்மந்தமாக ‌கோர்ட் வாசலுக்கு கூட போகவில்லை அவர்கள்..


" என்ன பதில் தெரியலையா.. உங்க நண்பன் கிட்ட அதுக்கு ஆன்சர் இருக்கு.. ஏன்னா ஆறு வர்ஷத்துக்கு முன்னாடி தா இது சம்மந்தமா கேஸ்ஸே ஃபைல் ஆகிருக்கு.. அது கூட போட்ட ஒரே வர்ஷத்துல வாப்பஸ் வாங்கிருக்காங்க.. ஏன்னு உங்களுக்கு தெரியுமா.. "


" என்னது கேஸ்ஸே போடலையா.. அப்றம் எதுக்குடா இந்த பாடு.. " பிரகாஷ்..


" இத சொல்லித்தான கல்யாணமே நடந்துச்சு.. அப்ப எல்லாமே பொய்யா.. " சம்பத்..


" இத உங்க தங்கச்சி கல்யாணம் முடிஞ்ச மறுநாளே கேட்டிருந்தா அப்பவே முடிச்சிருக்கலாம்..‌ டூ லேட் மச்சான்.. அந்த ப்ராடு சொல்றத எல்லாம் இன்னுமா நீ உண்மன்னு நம்பிட்டு இருக்கீங்க.. " கௌதம்..


" அண்ணே இப்ப கேஸ் இல்லைன்னா போடச் சொல்லுங்களேன்.. நானும் வக்கீலா அது வாதாடித் தருவேன்ல.. " பிரகாஷ்..


" நீ இத்தன நாளா ஊருக்குள்ள தான நடமாடிட்டு இருந்த.. அப்பல்லாம் ஊருக்குள்ள நடக்குறதுக்கு பஞ்சாயத்து பண்ணாம இப்ப வந்து வக்கீலா மாறுறேங்கிற.. " சம்பத் .


" ஷூ.. அமைதியா இருங்கப்பா மேடம் இந்த உலகத்துக்கு எதோ கருத்து சொல்லப் போறாங்க.. சோ கீப் கொயட்.. " கௌதம்..


"போட்ட கேஸ்ஸ வாப்பஸ் வாங்கியாச்சா.. ஏ.. மச்சான் என்ன சொல்றா உம்பொண்டாட்டி.. " விக்ரம்..


" ..... " பதில் சொல்லாமல் நக்கலாக சிரித்தான் அவன்..


" அப்ப இத்தன நாளா ‌எங்களையும் எங்க ஊரையும் ஏமாத்திட்டு இருந்திருக்க.. உன்ன.. " விஜய் ஆவேசமாக எழுந்தான் 


" சும்மா இரு டா.. என்ன மச்சான் இது.. " விக்ரம் நிதானமாகவே கேட்டான்.. ஏனெனில் ரிஷி எது செய்தாலும் அதை ஆழ யோசித்து செய்பவன் என்ற நம்பிக்கை அவனிடத்தே உண்டு.. 


" கேஸ் போட்டு எப்ப உங்க ஊருக்கு தண்ணீ கொண்டு வருவ.. உம் பிள்ளைக்கா.. இல்ல கொள்ளு பேரனுக்கா.. " ரிஷி நக்கலாக..


" இது சிவில் கேஸ் கீழ் கோர்ட்ல  தீர்ப்பு வர்ரதுக்கே பல வருசமாகும்.. எந்த பக்கம் தீர்ப்பு சொன்னாலும் அதுக்கு அப்பீல் பண்ணி இது தா சரியான தீர்ப்புன்னு சொல்லுறதுக்குள்ள.. " ரிஷி..


" உங்க ஊரே பாலைவனமா மாறிடும்.. " ஹரிணி.. அவளை திரும்பி பார்த்தவன் அவளின் ஜீன்ஸ் குர்த்தி என மிடுக்கான தோற்றம் கண்டு அசந்து போனான்.. 


ஆனால் ஹரிணியோ அவனை தவிர்த்து மற்றவர்களுடனே பேசினாள்.. பார்வையே கூட அவன் பக்கம் திருப்பவில்லை என்றால் பார்த்துக்குங்களே.. 


" என்னடா என்னென்னமோ சொல்றீங்க.. " விக்ரம்..


" ச்ச‌.. எல்லாம் இவா தாத்தா செஞ்ச வேலையால வந்தது..‌ எத்தன பேருக்கு பாதிப்பு.. கேஸ் போட்டா பொண்டாட்டிய தூக்கி உள்ள வச்சிடுவாய்ங்கன்னு தான உன்னோட அரும சிநேகிதன் கேஸ் போடல போல.. எங்க மத்தவங்க எதாது பண்ணீடுவாங்களோன்னு தான பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டு வந்து உக்கார வச்சிருக்கானுங்க.." என விஜய் குரலை உயர்த்த..


" டேய் எத்த தடவ அவன்ட்ட அடி வாங்குனாலும் திரும்ப திரும்ப வந்து அவன்டையே வம்பிலுக்குற ஏன்டா.. வாய மூடுடா.. " விக்ரம்.. 


" உங்க ஊருக்கு பிரச்சினங்கிறத கண்டுபிடிக்கவே உங்களுக்கு பதினஞ்சு வர்ஷம் ஆச்சு.. இதுல யார் காரணம்னே உங்களுக்கு இப்ப வரைக்கும்  தெரியல.. " ஹரிணி. படித்திருந்தாலும் அவர்களின் அறியாமை எண்ணி வேதனை கொண்டாள்..


" வேற யாரு இதுக்கு காரணமா இருக்கப் போற எல்லா அந்த ரெட்டி தா.. உ தாத்தா அந்த.. இடம் இவங்க குடும்ப சொத்து தான அத எழுதி குடுக்கச் சொல்லு.. அது  நம்ம ஊர் பேர்ல வேணும்.. " விஜய்..


" யார் சொத்த யாருக்கு எழுதி குடுக்குறது.. முப்பத்தஞ்சு வர்ஷத்துக்கு முன்னாடியே தாத்தா அத உங்க ஊரு பேர்ல குத்தகைக்கு விடுறதா எழுதி வச்சுட்டாரு.. நூறு வருஷம் அதுல இருந்து நீங்க தண்ணீ எடுத்துக்கலாம்.. அதுக்கான பாராமரிப்பு செலவுல இருந்து எல்லா செலவும் இப்ப வரைக்கும் என்னோட அக்கோண்ட்ல இருந்து உங்க ஊர் பெரிய மனுசங்களுக்கு போய்ட்டு தா இருக்கு..  உங்க ஊருக்கு வருஷத்துக்கு நாலு வாட்டி தண்ணீ திறந்து விட்டதா ரெக்கார்டும் இருக்கு தெரியுமா.. " ஹரிணி..


" என்னடா இது நம்ம வடிவேலு காமிடியா இருக்கு.. " சம்பத்..


" இல்ல இது சிட்டிசன் படம் மாறி இருக்கு.. இல்லாத அணைல பொத்தல்  விழுந்துடுச்சு.. அதே மாறி தண்ணீரே இல்லாத டேம்ல இருந்து முப்போகத்துக்கு தண்ணீ திறந்து விட்டுடுக்கானுங்க.. யாரா இருக்கும்.. " பிரகாஷ்..


" எல்லாம் நம்ம ஊரு அரசியல் வாதிங்க தா.. கொழுத்த மாடு மாறி எது எப்ப கிடைச்சாலும் வாயில போட்டு டே தான இருக்காங்க.. " கௌதம் அவனின் முகம் இப்போது இறுகி இருந்தது.. 


கல்வி என்ற ஒன்று இல்லாத காரணத்தினால் மக்களை மாக்களாக  எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று.. 


" அப்ப அந்த இடம் உம் பேருல இல்லையா.. " விக்ரம் சோர்வாக.. தண்ணீரின்றி வாடும் தன் ஊருக்கு நீர் கிடைத்து விடும் என்ற சிறு நம்பிக்கையை இழந்து கொண்டே வந்தான் அந்த கிராமத்து விவசாயி..


" விக்ரம் உங்க ஃபீலிங் புரியுது எங்க தாத்தா ஆரம்பிச்ச இந்த பிரச்சினைய நா நிச்சயம் சால் பண்ணுவேன் நம்புங்க.. " ஹரிணி..


" ஆமா.. மாப்ள மேடமால தா சால் பண்ண முடியும்.. ஏன்னா அந்த நிலம் இப்ப அவளோட அண்ணே பேர்ல தா இருக்கு.. டேமுக்கு பின்னாடி  நடக்குற தப்புக்கு இல்ல இல்ல மா பெரும்  குற்றத்துக்கு இவங்களோட அண்ணன் தா காரணம்.. பேசி தீத்துடுவாங்க.. என்ன மேடம்.. தீத்துடுவீங்கல்ல.. எந்த ஆலமரத்துக்கு கீழ் உக்காரப் போறிங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்.. " என்றான் ரிஷி  அவளின் கண்களை பார்த்து நக்கலாக.. 


" ம்ச்.. ‌விக்ரம் நாம இதுக்காக கேஸ் போடுவோம்.. அது உங்க ஊர் பேர்ல இருக்க வேண்டிய சொத்து.. அத ஏமாத்தி போலியா பத்திரம் போட்டு பதிஞ்சிருக்காங்க.. அவங்களுக்கு எதிரா எவிடெண்ஸ் கலெக்ட் பண்ணுவோம்.. இருக்குற எல்லா டிப்பார்மெண்டுக்கும் மனு குடுப்போம்.. " என அவள் ஆலோசனை வழங்க.. 


" மிக்க நன்றி.. அடுத்த டிராபிக் ராமசாமியா நீங்க செய்யுற சேவைக்கு.. " தரன் நக்கலாக..


" அப்ப உங்ககிட்ட எதுவும் பெட்டர் சொல்யூஷன் இருக்கா.. " என அவனின் கண்களை பார்த்து கேட்டவள் கைகளை கட்டிக் கொண்டு அவன் சொல்ல வருவதை பவ்யமாக கேட்டுக் கொள்ளும் தோரணையில் நின்றாள்.. 


அவளை தலை முதல் கால் வரை தன் பார்வையுளேயே அளந்தவன்.. " நாம ஒருத்தர் கிட்ட எதையாது கேட்டு இது நமக்கு கிடைக்கலைன்னா அத அடையுற வழி தெரிஞ்சு வச்சிருக்கனும்.. " 


" ஓ.. சாருக்கு எல்லா வழியும்  தெரியும் போலயே.. ‌அப்ப ஏன் சார் இத்தன நாள் அமைதியா இருந்திங்க.. மௌன விரதமா இல்ல வாஸ்து நாளுக்காக வெய்டிங்கா..” ஹரிணி நக்கலாக..


" ஹிம்.. ஆப்போசிட்ல இருக்குறவன அடிச்சா.. அடுத்த அடி வாங்குறதுக்கு அவென் உயிரோட இருக்க கூடாது.. அப்படி அடிச்சு தா எனக்கு பழக்கம்.. " என்றவனின் குரலில் பழிவாங்கும் வெறி தெளிவாக தெரிந்தது.. அவனின் குரல் கண்டு அரண்டு தான் போனாள் அவள்..


" இந்த விசயத்துல நா ரிஷி கூட இருப்பேன்.. ஏன்னா ஓம் சாதாரண ஆள் இல்ல.. அதிகார பலம் அரசியல் பலம் பண பலம் இப்படி எல்லாமே அவன்ட்ட இருக்கு..  ப்ளான் பண்ணாம அவங்கூட மோதுறது நமக்கு நாமே குழி தோண்டி வக்குற மாறி.. " கௌதம்..


இருவரும் ஒரே கருத்தை ஆதரிப்பது இதுவே முதல் முறை..


அப்படி என்ன கோபம் ஓம்காரின் மீது..


என்ன செய்திருப்பான்.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

அன்பே 66


அன்பே 68


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...