அத்தியாயம்: 68
ஓம்காரன்..
இந்தியாவின் இளம் தொழிலதிபர்களில் ஒருவன்.. நம்பர் ஒன்னாக மாற அவன் பல வேலைகள் செய்து வருகிறான்.. அவற்றில் சில குறுக்கு வழிகள்.. பல சட்டவிரோதமான வேலைகள்.. பணம்.. பணம்.. பணம்.. இது மட்டுமே அவனின் குறி.. அதை சம்பாதிக்க அவன் என்ன வேண்டுமானலும் செய்வான்..
" அவன எதிர்க்க நம்மால முடியாதா என்ன.. நம்ம கிட்டையும் எல்லா பலமும் இருக்கு.. அவன்ட்ட இருந்து எப்படியும் புடுங்கிடலாம்..” விஜய்..
" ஆமா இவரு டிராஃபிக் போலிஸ் ஸ்டாப்ன்னு கைய நீட்டுனதும்.. அவரு நின்னுடுவாரு.. பைன் போட்டு காசெல்லாம் கலெக்ட் பண்ணிடுவாரு.. " பிரகாஷ்..
" டேய்.. அவ்ளோ ஈசியால்லாம் அவன் கிட்ட நெருங்கவே முடியாது.. பத்து செக்கெண்ட போதும் உன்ன பாத்ததுமே கண்டு பிடிச்சுடுவான் நீ யாருன்னு என்ன நோக்கத்துக்கு வந்திருக்கன்னு.. தப்பிக்க வழி தெரியாமயா தப்பு பண்ணுறானுங்க... " சம்பத்..
" ஃபஸ்ட் அந்த வழி தா நாம அடைக்கனும்.. " தரன் .
' கொத்தனாருங்கிறத அப்பப்ப ப்ரூஃப் பண்றான் பாரேன்.. ' ஹரிணி மனதில்..
" எப்படி.. " விக்ரம்..
" அவனோட பலத்த பலகீனமா மாத்துவோம்.. பணம் , அதிகாரம் இந்த ரெண்டையும் இல்லாம ஆக்கிட்டா அவென் ஒரு செல்லா காசு .." தரன்..
" ஃபேஸ் புக்.. யூட்யூப்.. ட்விட்டர் இப்படி சோஷியல் மீடியா மூலமா அவனோட கம்பெனிய பத்தி வீடியோ ஸ்ப்ரெட் பண்ணி விட்டா ஷேர் மார்க்கெட் ல லாஸ் ஏற்படுத்த முடியும்.. இதுனால கொஞ்ச நாள்ளையே திவாலாக கூட வாய்ப்பிருக்கு.. " ஹரிணி .
" அப்படி எத நீ வெளியுட போற யூட்டுப்ல.. " விக்ரம்..
" இத.. " என்றவளின் கையில் சாரா அனுப்பிய சூர்யாவின் மரண வாக்குமூலத்தை தாங்கிய பென்டிரைவ் இருந்தது..
மெடிக்கல் கேம்ப் என பத்து நாட்கள் சென்றவர்களே அங்கு சிலரின் உடல் நிலையில் மாற்றம் வந்துள்ளதை கவனித்தாள் சாரா.. ஏன் என ஆராய்ந்த போது அவளுக்கு அங்கு நடக்கும் தவறுகள் கண்ணில் பட ஆரம்பித்தது..
புதிய மருந்துகளை மனிதர்களிடம் சோதித்து பார்க்க பலரின் கையெழுத்தும் நாட்கள் பலவும் தேவை.. எனவே குறுகிய காலத்தில் யாருடைய அனுமதியும் இன்றி 'மெடிக்கல் செக்கப்' என்ன பெயரில் கிராமங்களில் உள்ள மக்களிடம் பரிசோதித்து பார்க்கப் பட்டுள்ளது..
அதன் விளைவாக உடல் நிலை பாதிப்பு அங்கங்கள் செயலிழப்பு ஏன் மரணங்கள் கூட நிகழ்ந்துள்ளது.. அதற்கான காரணம் யார் என்று அறியாமல் இருந்தவளின் கவனத்திற்கு வந்த சில ஆதாரங்கள் கிடைக்க.. அதை எடுத்துக் கொண்டு தப்பி செல்ல முயன்ற போது சூரியா கொல்லப்பட்டான்.. அதை தன் செல்போனில் பதிவு செய்தவள் சில பல ஆதாரங்களையும் சேமித்து ரிஷிக்கு அனுப்பி வைத்தாள் பென்டிரைவ் மூலமாக..
அந்த பென்டிரைவ்காகத் தான் மூர்த்தி மற்றும் வைசுவின் ஆக்ஸிடென்ட் நடைபெற்றது.. மடிக்கணினியில் அதை ஓப்பன் செய்து அனைவருக்கும் காட்டியவள்..
" அந்த பார்மஸ்ஸி கம்பேனி ஓம்மோடது.. அவனுக்கு தெரியாம நடந்திருக்காது.. சோ நாம போலிஸ்ட்ட போவோம.. போலிஸ் அவங்களுக்கு துணையா இருந்தா.. நாம பப்ளிக் கிட்ட சப்போர்ட் கேப்போம்.. " ஹரிணி..
" இதுக்கு காரணம் அந்த கம்பெனிதான்னு எப்படி உறுதியா சொல்ற.. நீயும் அந்த கம்பெனியோட பார்ட்னர் தான.. "ரிஷி..
" இல்ல.. எனக்கும் கம்பேனியோட நடவடிக்கைக்கும் சம்மந்தமில்ல.. நா பார்னரும் இல்ல.. அது எல்லாமே தீப்தி அப்றம் ஓம் பேர் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி.. தாத்தாவோட சில ப்ராப்பர்ட்டி தவிர எதுலலும் எனக்கு பங்கு கிடையாது.. குறிப்பாக மும்பைல இருக்குற எல்லா பிஸ்னஸ்க்கும்.. " ஹரிணி..
"அப்படி போடு.. இது மெடிக்கல் மாஃபியா.. மாட்டுனா களி தா அவனுக்கு.. " பிரகாஷ் .
" அதெல்லாம் பத்தாது.. இதுனால அவன ஜெயில்ல தள்ள முடியாது.. அந்த கம்பெனி என்னோடதே இல்லன்னு சொல்லி தப்பிச்சிடுவான்.. சோ இது பத்தாது.. “ சம்பத்..
" அவென் ப்ராடு பண்ணாத தொழிலே கிடையாது.. அதுனால இந்தியா இருக்குற எல்லா டிப்பார்மெண்ட்டையும் உள்ள இறக்குனா.. " கௌதம் .
" டேய்.. நீ என்னடா கவர்மெண்ட் கிவர்மெண்ட்டுடு.. சும்மா இருடா.. " சம்பத்..
" நல்ல ஐடியா ஆனா ஆதாரம் வேணும்.. அதுவும் ரொம்ப ஸ்ட்ராங்கானதா இருந்தா பெட்டர்.. " ரிஷி..
" இது போதுமான்னு நினைக்கிறேன்.. " என்றவன் மேலும் இரு பென்டிரைவ்வை நீட்டினான்..
விக்ரம் வீட்டில் தங்கிய ஹரிணி முதல் முறையாக அந்த அணையை பார்க்கச் சென்றாள்.. உடன் கௌதமும் சென்றான்..
சுற்றி பச்சை பசேல் என இருக்க அந்த ஊர் மட்டும் பஞ்சத்தில் இருந்தது.. சிறிய அணைதான்.. தடுப்பணை அது.. அணையில் நீர் என்பது பேரளவுக்கு கூட இல்லை.. தன் கைகளால் மண்ணை அள்ளியவளின் பூக்கரங்கில் இருக்க விருப்பமின்றி விரல்களின் இடையே நழுவி சென்றது மண் இல்லை மணல்..
" என்ன கௌதம் இது.. மண்ணு கடற்கரைல இருக்குற மணல் மாறி இருக்கு.. இது வளமான வண்டல் மண் தானா.. இதே மாறிதா விக்ரம் வயலும் இருந்தது.. தண்ணி இல்லைன்னா வறண்டு தான போகும்.. தன்னோட வளத்த இழந்துடுமா என்ன.. " ஹரிணி சந்தேகமாக..
" தெரியல டார்லிங்.. எனக்கு இங்க ஏதோ தப்பா நடக்குற மாறி தெரியுது.. ஊருக்குள்ள விசாரிச்சேன்.. இங்க காட்டேரி நடமாடுதாம்.. வயசு வித்தியாசம் இல்லாம இந்த அணப்பக்கம் இதுவரைக்கும் இருபது பேர் இறந்து போய்யிருக்காங்க.. ஏன்னு தா தெரியலயாம்.. " என்றவன் தன் லேசர் கண்களால் சுற்றி இருந்த மரங்களை ஆராய்ந்தான்..
மூட நம்பிக்கைகளால் அந்த அணைப்பக்கம் மக்கள் நடமாடுவதே இல்லை..
" நானும் கேள்விப்பட்டேன்.. இங்க பாரேன் மரமெல்லாம் பட்டுபோய் இருக்கு.. எனக்கென்னமோ இதுக்கு பக்கத்துல எதோ கெமிக்கல் பேக்டரி இருக்குன்னு தோனுது.. வா கொஞ்சம் உள்ள போய் பாப்போம்.. " என பின்னால் கௌதம் வருகிறானா இல்லையா என்று கூட பார்க்காது முன்னால் நடந்தாள்..
" புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இதே வேலையாப் போச்சு பர்மிஷன் கேக்குற பழக்கமே இல்ல.. அட்லீட் கூட வர்றவன் என்ன ஆனான்னு பாக்குறாளா பாரேன்.. " என்று புலம்பியவன் அவளின் நிழல் என மாறி பின்னே சென்றான்..
அது ஒரு தொழிற்சாலை.. அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் கெமிக்கல் தொழிற்சாலை.. அதில் தடை செய்யப்பட்ட சில கெமிக்கல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது..
மக்கள் நடமாடு பகுதியை விட்டு சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அதிர்ச்சி என்றாள் அங்கு ஓம்காரனையும் கதிரவனையும் கண்டது பேரதிர்ச்சி..
அவர்களுடன் சண்டையிட என
உள்ளே செல்ல முயன்றவளை இழுத்து வருவது கௌதமிற்கு பெருங்கஷ்டமாக இருந்தது..
அப்போதே முடிவு செய்து விட்டாள் அவர்களின் தண்டனையை..
முதல் பென்டிரைவ்வில் அந்த மண்ணின் தரம் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருட்கள் என்ன என்பதற்கான அரசு ஆய்வகத்தில் ஆய்வு செய்த பரிசோதித்த முடிவுகள்.. மேலும் அந்த ஊரின் தற்போதைய நிலைக்கு காரணமான பெரும் புள்ளிகளின் விபரங்களும் இருந்தன..
" அந்த லேண்ட் இப்ப கதிர் பேருல இருக்கு.. அதுவும் போலியான ட்க்குமெண்ட் வச்சு வாங்கிருக்கான்.. மதர் டாக்குமெண்ட் எங்கிட்ட இருக்கு.. இத வச்சு நாம ஆக்ஷென் எடுக்க முடியும்.. " என்றவளை முறைத்தான் தரன்..
" உன்னய யாரு அங்கு போகச் சொன்னா.. எதாவது ஆகிருந்தா என்ன பண்ணிருப்ப.. நீ அங்க வந்தத அவனுங்க பாத்தா கண்டந்துண்டமா வெட்டி போட்டுடுப்பானுங்க.. ஈவு இரக்கம் இல்லாதவிங்க.. அறிவில்லையா உனக்கு.. " தரன் கோபமாக திட்ட..
" அங்க நடக்குறது உனக்கு முன்னாடியே தெரியுமா.. கெமிக்கல் பேக்டரி பத்தி தெரிஞ்சும் ஏ சும்மா இருக்கீங்க.. " ஹரிணி..
" தெரியாம எப்படி இருக்கும் அத என்ன செய்யனும் எப்ப செய்யனும்னு எனக்கு தெரியும்.. நீ தனியா அங்க போனது தப்பு.. " அக்கறையுடன்..
" உங்க அக்கற எனக்கு தேவையில்ல.. நா என்னோட ஃப்ரண்டு கூடத்தா போனேன்.. "
' என்ன புசுக்குன்னு நம்ம பக்கம் டைவட் பண்ணி விட்டுட்டா.. சரி சமாளிப்போம்.. இவெந்தான.. 'என நினைத்துக் கொண்டு இருந்தவனின் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கினான் தரன்.. தரனிடம் இருந்து விடுபட்டவன்..
" என்னமோ காட்டுக்குள்ள போய் கவர்ச்சி டான்ஸ் பாத்துட்டு வந்தமாறி இந்த உலுக்கு உலுக்குற.. எங்கூட ஜாமர் எடுத்துட்டு போயிருந்தேன்.. அதுனால எந்த கேமராலையும் எங்க முகம் பதிஞ்சிருக்காது.. நாங்க வந்ததும் தெரியாது போனதும் தெரியாது.." என்றான் கௌதம் கூலாக..
' ஆனா வூனா சட்டைல கை வைக்குறது.. என்ன பழக்கமோ.. அவென் ஐயன் பண்ணாம சட்ட போடுறான்னு ஐயன் பண்ண என்னோட சட்டைய அப்பப்ப கசக்கி விட்டுடுறான்.. வில்லேஜ் மெக்கர்.. ' கௌதமின் மைண்ட் வாய்ஸ்..
" இந்த ஒரு பென்டிரைவ்வ வச்சு தா நீ செண்டரல் கவர்மெண்ட்ட இறக்க போற.. அப்படி தான.. " சம்பத்..
" நோ.. நோ.. இந்தியன் கவர்மெண்ட்டுக்கு இந்த ஆதாரமெல்லாம் பத்தாது.. வேற வேற வேறமாறி ஒன்னு தா வேணும்.. ஹ...ஹ.. இதோ அது தா இது..” என மற்றொரு பென்டிரைவ்வை காட்டினான் கௌதம்..
" இது எப்படி உனக்கு கிடைச்சது.. என்ன இருக்கு இதுல.. " ஹரிணி .
" உங்கண்ணே கம்பெனில வேல பாத்தேன்ல அப்ப அவிங்க சிஸ்டத்த ஹேக் பண்ணி எடுத்தேன்.. என்ன மாட்டி விட்டானுங்கள்ள அதா அவிங்கள எதாவது பண்ணும்னு எடுத்தேன்.. ஹீம்.. மூனு வர்ஷத்துக்கு முன்னாடி எடுத்தது.. இப்ப யூஸ் பண்ண சரியான நேரம்.. " கௌதம்..
அதில் ஓம் செய்து வந்த சில சட்டவிரோத வியாபாரத்திற்கான ஆதாரங்கள் இருந்தனர்.. அனைத்தும் அந்நிய செலாவணி முறைகேடுகள்..
" இத காட்டுனா இந்தியன் கவர்மெண்ட் ஆக்ஷன் எடுத்திடுமா என்ன.. அதுக்குள்ள அவென் எங்கையாது வெளி நாட்டுக்கு தப்பிச்சு போட்டுவான்.. இங்க கூட்டீட்டு வர்றதுக்குள்ள வயசாகிடும் " விக்ரம்..
" இன்டியன் ஆர்மீட்ட மாட்டுனா தப்பிக்க மாட்டான்ல. " தரன்..
" என்ன.. " அனைவர் முகத்திலும் குழப்பம்..
" எப்படி.. " ஹரிணி..
அறைக்குச் சென்று திரும்பியவனின் கையில் சில பேப்பர்களும் சீடி ஹார்டிஸ்க் உள்ளிட்ட சில கணிணி உபகரணங்களும் இருந்தது
அதில் ஓம்காருக்கு சொந்தமாக மும்பையில் ஒரு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.. அந்த துப்பாக்கிகளை சில தீவிரவாத இயக்கங்களுக்கு விற்றதற்கான ஆதாரங்கள் இருந்தன..
அது தொடங்கப்பட்டது முதல் இன்று வரை நடந்த அனைத்து வியாபார விவரங்களும் ஆதாரத்தோடு இருந்தனர்..
" இது போதுமே அவன சுட்டு தள்ள.. என்ன நா சொல்றது.. " பிரகாஷ் தரனைப் பார்த்து புன்னகையுடன்..
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் விசயம் என்பதால் நாட்களுக்கும் குறைவான நேரத்தில் அனைத்தும் நடந்தது.. பல வருடமாக ஓம் எழுப்பிய சாம்ராஜ்ய கோட்டை கவசம் அணிந்த பாதுகாப்பு வீரர்களால் வலுக்கட்டாயமாக இடிக்கப்பட்டது..
அதில் கதிர் இறந்து விட தீப்தி திகார் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளாள்.. ஓம் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளான்.. இன்னும் சில தினங்களில் அவனின் உயிர் அவனின் உடலை விட்டு சென்று விடும்..
தரன் கூறியது போல் திருப்பி அடிக்கவே.. ஹீம்.. எழுந்து நிற்கவே முடியாத அளவுக்கு பயங்கரமான அடி விழுந்தது ஓம்மிற்கு..
அடி குடுத்தவன் தரன் ஆகிற்றே.. சொன்னதை செய்து காட்டும் வல்லமை படைத்தவன் அவன்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..