முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 69


 

அத்தியாயம்: 69 


சண்டைகள் பல 

நம்முள் வந்தாலும் 

எதிர் கொள்ள 

தயாராக இருக்கிறேன் 

பிரிவு என்ற ஒன்றை மட்டும் 

நீ தரமாட்டாய் என்ற 

நம்பிக்கையில்..



நம்ம முடியவில்லை அவனால்.. நம்பவே முடியவில்லை.. இது அவளின் கையொப்பம் தானா.. சில நோட் புக்குகளை எடுத்து அவளின் கையெழுத்தை பார்த்தான்.. இரண்டும் ஒன்று போல் இருந்ததை நம்ப முடியாமல் கண்களை கசக்கி கொண்டு பார்த்தான்  ரிஷி தரன்.. தன் காதலின் மீது இருக்கும் நம்பிக்கையை விட அவள் தன் மேல் வைத்திருக்கும் அன்பையும் இந்த குடும்பத்தின் மீது அவளுக்கு இருக்கும் ஆசையையும் நன்கு அறிந்தவனால் இந்த விவாகரத்து நோட்டீஸ்ஸில் கையெழுத்திட்டது ஹரிணி தானா என்று நம்ப முடியாது தவித்தான் ரிஷி.. 


சில நாட்களுக்கு முன்..


போகயில அந்த புள்ள பொண்ணு மாரி

பொக்குனு சிரிகையில முத்து மாரி

கால் கொலுசு பார்க்கையில் வெள்ளி மாரி


என்ற பாடலை பாடிக்கொண்டு இல்லை கத்திக்கொண்டே வந்தனர்‌ அந்த  ஆடி காரில் உள்ள இரு ஜிவன்கள்.. ஒருவன்  தன் வலிய விரல்களால் ஸ்டேரிங்கில் தாளம் தட்டியபடி ஓடினான் என்றால் மற்றவள் தன் மடியில் உள்ள குழந்தையை நடனமாட வைக்கிறேன் என்று பெயரில் கொடுமை படுத்திக் கொண்டு வந்தாள்.. 


கோரஸ்ஸாக இருவரும் பாட அதை பின்னால் இருந்த உருவம் கோபத்துடன் சிவந்த கண்களால் பார்த்தது.. 


கண்ணாடியில் தன் மனையாளின் அக்னி விழிகளை கண்டவன் குஷியுடன் இன்னும் சத்தமாக பாடலை பாடினான்..


போடாம அவ மாரி

யாரு பொழிவா

யாரு பொழிவா

பூமியில காதல் பூ மாரி

கத்திரி வெயிலு உச்சியில வீச

அப்படி குளிரும் அந்த புள்ள பேச

சாராயத்தில் ஏது போத அந்த புள்ள பாத்தா

சட்டுனு தான் மாறும் பாத

தன தன்னனானே...


இந்த வசீகர குரலுக்கு சொந்தக்காரன் கௌதமன்.. ஹரிஹர‌ கௌதமன்.. 


" கௌதம்.. யூவர் வைஃப் லுக் லவ்விங்லி யா.. காதல் அப்படியே காட்டாத்து வெள்ளம் போல ஓடுது..” ஹரிணி..


" இஸ் ட்.. " என திரும்பி பார்த்தவன் யாரும் அறியாமல் காற்றில் முத்தமிட  அவள் விரல் நீட்டி பத்திரம் காட்டினான்..


" நா வேணும்னா வண்டி ஓட்டுறேன்.. நீ பின்னாடி உக்காந்து பேசிக்கிட்டே வாயேன்.. " என ஓட்டுனர் இருக்கையை தனக்கு தர‌ சொன்னாள் ஹரிணி..


" யம்மா பரம தேவதையே நானே  ஓட்டுறேன்.. நீ மூடிட்டு வரும்.. " என வாயில் கை வைத்து காட்டினான் கௌதம்..


" க்கும் ஆதி உங்கப்பென் நம்மல இன்சல்ட் பண்ணிட்டான்.. நாம  வெளி நடப்பு பண்ணனும்.. ஸ்டாப் த கார்.. " என ஆதியுடன் இறங்குவது போல் பாவனை காட்டியவனை பார்த்து தன் பால் பற்கள் தெரிய அழகாய் சிரித்தாள் ஆதிரை.. 


" ஹலோ இன்சல்ட் எங்க பாப்பா ஆதிக்கு இல்ல.. உனக்கு தா.. பாப்பாவ இங்க குடுத்துட்டு நீ போலாம்.. பாய்.. "  இந்துவின் அருகில் அமர்ந்திருந்த பிரகாஷ்..


" யோவ் வக்கீலூ வாய மூடிட்டு வா.. இல்ல குடிச்சுட்டு வண்டி ஓட்டுறன்னு அங்க நிக்குற போலிஸ்ட்ட பிடிச்சு குடுத்துடுவேன்.. பாத்துக்க..”


" நா எங்க கார் ஓட்டுறேன்.. அமைதியா பின்னாடி தான உக்காந்திருக்கேன்.. அப்றம் எப்படி போலிஸ் பிடிக்கும்.. " எங்கே உள்ளே சென்ற சரக்கின் வாடை வருகிறதா என்று ஊதி பார்த்த படி கேட்டான் பிரகாஷ்..  


"நா, நீ தா ஓட்டுனன்னு சொல்லுவேன்.. உங்கண்ணே சாட்சி சொல்லுவான் என்னடா.. சொல்லுவியா மாட்டியா.. " மிரட்டலாக..


எந்த பக்கம் தலையசைப்பது என்று தெரியாமல் எல்லா பக்கமும் ஆட்டியவன் மீதும் மதுவின் வாடை வந்தது.. 


இதற்கு தான் இந்து அவனை அனைவரையும் முறைத்துக் கொண்டே வந்தாள்.. அவள் கையில் வைத்திருந்த அலைபேசியின் ஒலி தான் உயிர்ப்புடன் தான் உள்ளேன் என்று காட்டியது.. இந்து மட்டும் அல்ல இவர்களின் கூத்தை கேட்டு அலைபேசியின் மறுமுனையில் உள்ளவனும் காண்டோடு தான் உள்ளான்.. ரிஷி தரன்..


இளம் தொழில் முனைவோருக்கான விழா நடைபெற்றது.. அதில் பங்குபெற என பெங்களூர் வந்தவர்கள் நன்றாக கும்மாளம் அடித்து  விட்டு நடு ராத்திரி வேளையில் தான் வீடு திரும்பிக்கொண்டு இருக்கின்றனர்.. 


குடிக்காதீர்கள் என்று சொல்லியும்‌ சோஷியல் டிரிங்கிங் என ஆரம்பித்தவன் மூழ்கி விட்டான்.. அதான் இந்துவின் கோபம்.. 


மணி பன்னிரண்டை நெருங்கும் சமயம்.. 


" கௌதம் கார ஹை வேல ஓட்டாம ஊருக்குள்ள போற மாறி ஓட்டேன்... " ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்தபடியே கூறினாள் ஹரிணி..


" ஊருக்குள்ள போனா சுத்து டார்லிங்.. ஹை வேல போனா விடியரதுக்குள்ள வீட்டுல இருக்கலாம்.. " என்றவனும் பின்னால் கண்ணாடி வழியே பார்த்தான்.. 


மூன்று கார்கள் தங்களை ஃபாலோ செய்வது போல் தோன்றியது.. புறப்படும் போதிருந்தே அந்த கார்கள் இவர்களின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்தது.. 


இவர்கள் ஒரு திருப்பத்தில் காரை திருப்பவும் அவர்களும் அவ்வழியே திரும்பினர் தங்களின்‌ வாகனத்தை.. 


நண்பர்கள் இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க.. " ஏங்க அத்தான் பேசனுமாம்.. " என மொபைலை கௌதமிடம் நீட்டினாள் இந்து..


" ஹரி வர்ர ரைட் சைடுல திருப்பு.. சரியா ரெண்டு கிலோ மீட்டர்ல மறுபடியும் ரைட் எடு.. அப்பறம் வர்ற மூனாது லெஃட்ல திருப்பி கொஞ்ச தூரத்துலேயே வண்டி நிப்பாட்டிடு.. " எதே இவர்களின் காரை பார்த்துக் கொண்டு இருப்பவன் போல் வழி சென்னான் ரிஷி.. 


என்னவென்று தெரியாத போதும் தரன் சொன்ன வழியிலேயே காரை ஓட்டினான் கௌதம்.. தமிழக - கர்நாடக எல்லையில் உள்ளோம் என்பது மட்டும் நன்கு தெரிந்தது அவனுக்கு..


" ரிஷி.. நா நீ சொன்ன எடத்துல கார ஸ்டாப் பண்ணிட்டேன்.. இப்ப என்ன பண்ண.. " கௌதம்..


" கார சுத்தி என்ன நடந்தாலும் கார விட்டு நீ வெளில வரக்கூடாது.. உள்ள இருக்குறவங்களுக்கு நீ மட்டும் தா பாதுகாப்பு.. " என்றவன் போஃனை அணைத்தான்..


வண்டி நின்ற இடம் ஒரு விளையாட்டு மைதானம் போல் பெரிதாகவும் வெட்ட வெளி இடமாகவும் இருந்தது.. சுற்றி நான்கு தெரு விளக்குகள் மட்டுமே தன் ஒளியை பரப்பி அவ்விடத்தை வெளிச்சமாக்கி கொண்டிருந்தது.. 


" மகனே ஏ நிப்பாட்டுன.. கார்ல ஏதும் பிரச்சனையா.. " கவியரசன்.. முகத்தில் சிறு பதட்டமும் பயமும் தெளிவாக தெரிந்தது.. அமானுஷ்ய இரவு நேரம் அல்லவா.. 


" ஒன்னுமில்ல சித்தப்பா ரிஷி வர்ரதா சொன்னான்.. அதா அவன பிக்கப் பண்ணீட்டு போலாம்னு நிம்பாட்டுனேன்.. " குரலில் எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல்..


" அத்தான் நேரா வீட்டுக்கே வந்திடுவாங்க.. நீங்க கார எடுங்க பயமா இருக்கு.. " இந்து மடியில் துயில் கொண்டிருக்கும் அகிலனை மார்போடு அணைத்தபடி மெல்லிய குரலில் கூறினாள்...


" கொஞ்சம்.. பொறுப்.. " கௌதம் வார்த்தையை முடிப்பதற்குள் எதோ சத்தம் கேட்டது வெளியே.. 


நான்கு விளக்கின் ஒளி இப்போது இரண்டாக மாறி பின் ஒன்றாக குறைந்தது.. 


தூரத்தில் அவர்களை ஃபாலோ செய்து வந்த மூன்று கார்களும் அதி வேகமாக கௌதமின் காரை நோக்கி வந்தது... 


பின் இருக்கையில் இருந்த மூவரும் காரை எடுக்கச் சொல்லி வற்புறுத்த அவன் காரில் சாவியை கூட போடாது சாந்தமாக அமர்ந்திருந்தான்.. ஏனெனில் தரன் காரை எடுக்க சொல்லவில்லையே.. ரிஷி பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது கௌதமிற்கு.. 


இரண்டு கார் முன்னேவும் , ஒரு கார் மட்டும் சில மீட்டர்கள் இடைவேளி விட்டும் , வேகமாக வந்து கொண்டிருக்க‌ அதை பார்த்து கௌதம் காரின் பின் இருக்கையில் உள்ளவர்களின் முகம் பயத்தில் வெளிரிப் போனது.. 


கௌதமின் காரை நெருங்க சில மீட்டர்  இடைவெளி இருக்கும் திடீரென முதல் காரை ஓட்டியவனின் முகத்தில் ஏதோ பட அவன் காரின் ஸ்டேரிங்கை இடது பக்கம் ஒடித்தான்.. அது இரண்டாம் காரை இடித்தது.. இரு காரின் பின்னால் வந்த மூன்றாவது காரும் முந்திச் செல்ல இயலாது இடித்துக் கொண்டு நின்றது.. உள்ளே சுமார் பதினைந்து பேர் இருப்பர்‌ அனைவரும் கூலிக்கு கொலை செய்பவர்..‌


புல்லட்டின் சத்தம் கேட்க ‌அங்க தன்‌ ராயல் என்ஃபீல்டு பைக்கில் கம்பீரமாக வந்திறங்கினான் ரிஷி தரன்..‌ 


துரத்திவந்தவர்களுக்கும் கௌதமின் காருக்கும் இடையில் மடித்து‌ கட்டிய வேட்டியும் சட்டையின் கையை ஸ்டைலாக மடித்தபடியும் வீரம் நிறைந்த உடலுடனும் ராஜ தோரணையில் நடந்து வந்தான் ரிஷி தரன்.. 


ரிஷியை பார்த்தும் மூன்றாம் காரில் இருந்து இறங்கிய ஓம்கார் கோபமாக தன் அடியாட்களிடம்.. " இ...வன சும்மா விடாதீங்க.. இவன கொன்னுட்டு கார்ல இருக்குற ஆள்களையும் சேத்து கொள்ளுங்கடா.. ஜா வோ.. " என அடியாட்களுக்கு ஹிந்தியில் கட்டளையிட்டான் ஓம்காரன்..  ஜெயிலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறான் போலும்..   


திடகாத்திரமான மலை போல் இருந்த அவர்களால் ரிஷியின் சட்டையின் நூலிழையை கூட கிழிக்க இயலவில்லை பதினைந்து பேரும் நொடிக்கு ஒருவர் என்ற ரீதியில் தாக்கப்பட்டு கீழே கிடந்தனர்.. அங்கு மல்யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது.. 


இதை பார்த்ததும் கோபமாக கையில் துப்பாக்கியுடன் வந்த ஓம் ரிஷியை நோக்கி சுட தரன் அழகாய் தப்பி லாவகமாய் ஓம்காரின் துப்பாக்கியை கைப்பற்றினான்.. 


தரனின் கண்கள் அக்னி ஜுவாலை என‌ எரிய வெறி கொண்டு ஓம்மை தாக்க ஆரம்பித்தான் ரிஷி.. தரனின் நோக்கம் ஓம்மை காயப்படுத்துவது அல்ல மரணத்தை பரிசளிப்பது என்பது போல் தான் இருந்தது அவனின் அடி.. 


இடைவெளி இல்லாது அடுத்து அடுத்து என குடுத்துக் கொண்டே இருந்தவனின் ஆத்திரம் மட்டும் அடங்கவே இல்லை.. எனவே ஓம்மிடம் இருந்து பறித்த துப்பாக்கியை எடுத்து ஓம்மின் நெற்றிப் பொட்டில் வைத்தான்.. ரிஷி ட்டிகரை அழுத்தும் முன்.. 


" விடு கௌதம்.. " ஹரிணி கிட்டத்தட்ட கத்தினாள் என்றுதான் சொல்ல வேண்டும்..


" ஹரிணி.. ரிஷி வெளில வர வேண்டாம்னு சொன்னான்.. போகாத.. " என அவளின் கையை வெகு நேரமாக  பிடித்து வைத்துக் கொண்டு இருந்தான் கௌதம்..


" உங்கண்ணே சொன்னது எனக்கில்ல உனக்கு தா.. நீ கார்ல இரு.. நா போறேன்.. " ரிஷி துப்பாக்கியை எடுத்த உடனே கௌதமின் கையை உதறி விட்டு சென்றாள் ஹரிணி..


‍" ஓ.....‌ம்...... "  என்று கத்திய படி இருவருக்கும் இடையில் வந்தவள்.. கீழே ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த ஓம்மை தூக்க முயன்றாள்.. 


" ஹரிணி இங்க இருந்து போ.. " கோபத்தை அடக்கிய படி பல்லை கடித்துக் கொண்டு சொன்னான் ரிஷி.. 


அவனின் குரல் காதில் கேட்காதது போல் அவள் தன் தமயனின் கன்னத்தில் தட்டி எழ வைக்க முயற்சித்தாள்.. 


தன் பேச்சை கேட்காத ஹரிணியின் முழங்கையை பிடித்து இழுத்தவன் ஓம்மிடம் காட்ட முடியாது ஆங்காரத்தை ஹரிணியிடம் காட்டினான்.. 


" உனக்கு சொன்னது புரியலையா.. காருக்குள்ள போ.. " என கர்ஜித்தவனை கண்டு மிரளாது.. 


" முடியாது.. உனக்கு அவன கொல பண்ண எந்த உரிமையும் கிடையாது.. அவன திரும்பவும் போலீஸ் ல பிடிச்சு தா குடுக்கனும்..”  



" பிடிச்சு குடுத்தா மறுபடியும் தப்பிச்சு வரத்தான போறான்.. அதா திரும்பி வரவே முடியாத எடத்துக்கு அனுப்பிடலாம்.. " என துப்பாக்கியை மீண்டும் உயர்த்த அவளுக்கு கோபம் வந்தது.. 


"  உனக்கு சொன்னா புரியாதா.. நீ எப்படி இங்க உயிரோட இருக்கியோ அதே மாறி அவனும் இருக்கனும்.. தண்ட குடுக்க நீ ஒன்னும் கடவுள் கிடையாது.. அவனுக்கு அடி பட்டிருக்கு வழி விடு முதல்ல..  " அழுத்தமாக கூறியவள் அவனின் மார்பின் மேல் கை வைத்து தள்ளிவிட்டாள்..


 தன் தமயனை காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பை விட தன் கண்முன்னே ஒரு உயிர் போகப் போகிறது என்ற துடிப்பு தான் அவளிடத்தே இருந்தது.. 


அதை புரிந்து கொள்ளாமல்.. ” அவனும் நானும் ஒன்னா..‌. " பற்களுக்கு இடையே வார்த்தைகளை மென்றபடி..


" ஆ. மா..  நீயும் அவனும் என்ன பொறுத்தவர ஒன்னுதா.. " என்றாள் அவள் அழுத்தமாக..


ஓம்முடன் தன்னை ஒப்பிட்டது ‌பிடிக்காத ரிஷி.. " எப்படி பல கொல பண்ண தூக்கு தண்ட கைதி அவென்.. ஜெயில்ல இருந்து தப்பிச்சு வந்த அவனும் நானும் ஒன்னு.. அதான நாய குளிப்பாட்டுனாலும் அது அதோட புத்திய தான காட்டும்.. நீ அவனோட தங்கச்சிய தானடி.. ரத்தம் அவனோட ரத்தம் தான உன்னோட உடம்புலையும் ஓடுது.. அதா ஒரே மாறி கிரிமினல்லா.. வேல பாக்குறிங்க.. போடி.. போ.. அவங்கூடையே போய்டு..  " என அவளின் கைகளை பிடித்து சற்று தள்ளினான்.. 


வேகமாக எழுந்தவளின் எண்ணம் முழுவதும் ஓம்மை ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டும் என்பதாகவே இருந்ததால் காதில் விழுந்த அவனின் வார்த்தைகளுக்கு அவள் பதில் சொல்லவில்லை.. 


கௌதமின் உதவியால் ஓம்காரனை காரில் ஏற்றியவள் தரனிடம்.. " இந்த  ஹாஸ்பிட்டல்ல தா அவன நா அட்மிட் பண்ணப் போறேன்.. யார வேண்னாலும்  கூட்டிட்டு வா.. உயிரோட இருந்தா அவன அரெஸ்ட் பண்ணு இல்லைன்னா.. அவன காப்பத்த முயற்சி பண்ண என்ன அரெஸ்ட் பண்ணிக்கோ.. என்ன வேண்ணாலும் பண்ணிக்க.. " என்றவளின் முகத்தில் அப்படி ஒரு திமிர்.. அதை திமிர் என்பதா இல்லை ஆணவமாக பேசிய தரனின் பேச்சிற்கு  முன்னால் நிமிர்வுடன் நின்றாள் என்பதா.. தெரியவில்லை.. காரை வேகமாக ஓட்டிய படி சென்றாள்.. சென்றாள்.. சென்றே விட்டாள்.. 


'வழக்கம் போல் ஒரு வாரம் கோபமாக இருப்பாள் பின் அவளே வருவாள்  ' என்று நினைத்து ரிஷியின் மனம்..


வந்தாள்.. இல்லை வந்தது.. அவளுக்கு பதிலாக வந்தது விவாகரத்து காகிதத்தில் கையெழுத்திட்டு அதை கோர்ட்டில் சமர்ப்பித்தற்கான நோட்டிஸ்.. விரைவில் நீதி மன்றத்தில் சந்திப்போம் என்று வாசகத்தையும் தாங்கிய ஒரு கடிதமும்.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி





கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...