அத்தியாயம்: 29
நள்ளிரவு பன்னிரெண்டு மணி இருக்கும்.
மாலை வேளையில் நடந்த பார்டி மற்றும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாகத் தன்யாவும் அந்த சின்னப் பெண் ரோகிணியும் தனியாக ஒரு அறையில் துயில் கொண்டிருக்க, இருவருக்கும் சேர்ந்து ஒரு போர்வை போர்த்தி விட்டுக் கதைவை மூடி விட்டு வந்தான் தேவ்.
முதலில் கோபம் கோபமாக வந்தாலும் அந்தச் சிறு பெண்ணின் முகத்தைப் பார்க்கையில் அதை வெகுநேரம் பிடித்து வைத்திருத்திருக்க முடியவில்லை தன்யாவால். தயங்கி தயங்கி தன்னுடன் பேசும் அந்த மழலையின் பேசிலும் சிரிப்பில் தன்னை தொலைத்தவள் அவளுடன் மாலை வேளையை கழித்து விட்டுத் தன்னுடனேயே உறங்கும்படி கேட்டாள். இருவரும் வெகுநேரம் விளையாடி விட்டு இப்பொழுது தான் உறங்கத் தொடங்கினர். இருவரும் உறங்கியதை உறுதி செய்தவன், முரளிதரன் ராஜேஸ்வரியின் அறையை எட்டி பார்க்க, அவர்கள் அறையில் விளக்கு எரிந்தது.
" லேட் நைட் ஆகிடுச்சி. ஏ இன்னும் தூங்காம இருக்கிங்க.? " எனக் கேட்க, முரளி எழுந்து வந்து தேவ்வின் கரத்தைப் பிடித்துக் கொண்டார்.
" நன்றி... ரொம்ப நன்றி தம்பி... நீங்கச் செஞ்ச இந்த உதவிக்கு எத்தன மொற நன்றி சொன்னாலும் பத்தாது. ஒருக்கையாது பாத்திட மாட்டோமான்னு நா பட்ட தவிப்பு எனக்கு மட்டும் தா தம்பி தெரியும். தப்புக்கு மேல தப்பு பண்ணின எனக்குச் செத்தா கூட நிம்மதி கிடைக்காதுன்னு நினைச்சேன். இல்ல என்னோட சாவு நிம்மதியாத்தா இருக்கும். நாந்தா பாத்துட்டேன்ல. அது போதும் எனக்கு. அப்படியே கார்த்தியையும் பாத்துட்டா நல்லா இருக்கும். " என படபடத்துப் பேச,
" இப்போதைக்கி அது முடியாது அங்கிள். ஆனா கண்டிப்பா நடக்கும். நீங்க போய்த் தூங்குங்க. "
" அந்தப் பொண்ணு வாசவி போயிடுச்சே தம்பி. திரும்பி எப்ப பாக்கலாம். " என ஆசையுடன் கேட்டார்.
"நாளைக்கி காலைல. நீங்க இங்க தங்கப்போற மூணு நாளும் வாசு உங்க கூடவே தா இருப்பா. don't worry. இப்ப நிம்மதியா தூங்குங்க. " எனச் சொல்லிச் செல்ல,
"முரளி, நம்ம வாணியோட வாழ்க்க பாழப்போனதுக்கு காரணமே அந்தக் கார்த்தி தா. அவன போய்ப் பாக்கணும்னு துடிக்கிறீங்க. நாம வந்தது வாசவி பாக்க. பாத்துட்டோம். போதும். மத்த யாரையும் பாக்க நா விரும்பல. " என்ற ராஜீயை படுக்கையில் கிடத்தியவர், மனைவியை எதிர்த்துப் பேசவில்லை. அதே நேரம் கார்த்திகேயனை பார்க்காது இங்கிருந்து செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
தன் அறைக்கு வந்த தேவ்வை மேஜையில் இருந்த இரவு உணவு வரவேற்றது. எட்டு மணிபோல் வாசு வந்து தந்துவிட்டு சென்றாள். ஆனால் இப்போது வரை அதை உண்ணும் எண்ணம் வரவில்லை. மனம் மங்கை செய்த குறும்பை நினைத்து அவளின் துணை வேண்டித் துடித்தது.
தன்யாவும் ரோகிணியும் அந்தப் பாப் சிங்கரின் நிகழ்ச்சியைக் காணச் செல்ல, வாசு ராஜேஷ்வரிக்கு உதவியாக இருந்தாள் விருந்து நடைபெறும் இடத்தில். அந்தத் தம்பதியினருக்கு வாசுவின் அருகாமை தான் மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது.
தேவ் மட்டும் இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஃபோனும் கையுமாகத் திரிந்தான். எனவே பணி முடியும் நேரம் உணவை எடுத்துக் கொண்டு அவனைக் காண அறைக்குச் சென்றாள் வாசு.
அந்த உணவு ட்ரெய்யை தள்ளிக் கொண்டே வந்தவள் உடனே வெளியே செல்லாது அவனின் முகம் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றாள். ஆனால் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தவன் அவளைக் கவனித்தாலும் கண்டு கொள்ளாதது போல் அங்கும் இங்கும் நடக்க,
எச்சிலை விழுங்கியவள். " ஸார் டின்னர். " என்க, அவன் தலையை அசைக்காது கட்டை விரலை உயர்த்தி காட்டினான். அது ‘ஓகே.. நீ கிளம்பு’ என்பது போல் இருந்தது. அதில் எரிச்சலடைந்தவள் திரும்பிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இல்லை.
" ஸார் நா உங்க கிட்ட கொஞ்ச பேசணும். " என இழுக்க, அவன் ஒரு நொடி அவளைப் பார்த்து விட்டுப் பால்கனிக்கு சென்று ஃபோனில் பேசத் தொடங்கினான்.
அவன் பார்த்த அந்த நொடி மனம் பூவாய் மலர்ந்தது. இறகுகளின்றி தரையை விட்டுச் சில அடி தூரம் பறந்தவளை மொத்தென விழ வைத்தது போல் அவன் பால்கனிக்கு சென்றது இருந்தது. கூடவே அவன் அந்தக் கண்ணாடி கதவை இழுத்து சாத்தியதில் கோபம் வர,
" அந்தக் கண்ணாடி கதவுக்குள்ள பூதம் மாறிப் புகுந்து போய் நா அவெங்கிட்ட பேச விரும்பல. ச்ச. நானே பல குழப்பத்துக்கு நடுவுல இவெங்கூட பழகலாம்னு நினைச்சேன். விட்ட இடத்துல இருந்து மறுபடியும் சண்டைய ஸாரி நட்ப தொடரலாம். அவன சைட் அடிக்கலாம்னு நெருங்கி வந்தா. கண்ணாடி கதவையா சாத்துற. இரு. உன்ன என்ன பண்றேன்னு பாரு.. " என நினைத்தவள் அவனுக்கு எனக் கொண்டு வந்த உணவில் என்னென்ன கலக்க முடியுமோ அதை எல்லாம் கலந்து விட்டுச் சென்றாள்.
'இது உப்பு தான. பாக்க ஜசிங் சுகர் மாறியே இருக்கு. இந்த டப்பால என்ன சாஸ் இருக்கு. ' எனக் கொண்டுவந்த கலர் கலர் சாஸ் பாட்டில்களை ஒரே கோப்பையில் கொட்டி விட்டுச் சென்றாள்.
அதைக் கவனியாதது போல் கவனித்தவன் அவள் சென்ற சில நிமிடங்களிலேயே அவளை மீண்டும் அழைக்க, அவள் மட்டும் வரவில்லை உடன் நான்ஸியும் வந்து நின்றாள்.
பொதுவாக இருபத்தி நான்கு மணி நேரமும் சேவையைத் தரும் மருத்துவமனை, காவல் நிலையம், ஐடி நிறுவனங்கள், விடுதிகள் போன்ற இடங்களில் ஊழியர்கள் சிஃப்ட் முறைப்படி வேலை பார்ப்பர்.
காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை மட்டுமே வாசுவின் பணி நேரம். அதற்கு மேல் இருக்க மாட்டாள். ஆனால் தேவ் இருக்கும் வரை ஜான் கேட்டுக் கொண்டதால் கூடுதலாக இரண்டு மணி நேரம் பணி செய்யச் சம்மதித்தாள். வாசுவிற்கு மாற்றாக வீஐபி அறைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஜானிடம் வேண்டி வாங்கி உள்ளாள் நான்ஸி. காரணம் தேவ் மனம் வைத்தால் அவளுக்குத் தேவையான பதவி கிடைக்கும் அதனால் தான்.
தேவ் அறையிலிருந்து வந்தவள் அவனைத் திட்டுக் கொண்டே உடை மாற்றி வீட்டிற்கு கிளம்பும் நேரம் தான் நான்ஸி வந்து அழைத்தாள் வாசுவை.
" என்ன மேடம் கிளம்பிட்டிங்க. புது முதலாளி பாராட்டுறதுக்காக உங்கள தேடீட்டு இருக்காராம். வந்து வாங்கிட்டு போங்க. பாரட்ட. " என வாசுவை பார்த்து நக்கலாகச் சொல்லி ஏளன சிரிப்புடன் வாசு அழைத்துக் கொண்டு சென்றாள்.
'உன்ன தெரத்தி விடுறதுக்கும் நீ திட்டு வாங்குறத பாக்குறதுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது யாராது அத மிஸ் பண்ணுவாங்களா. பாஸ்ஸோட ஃபேஸ் ரியாக்ஷனே சரியில்ல. நீ வாடி. வந்து வாங்கி கட்டிக்க. ' என வாசுவின் பரிதாப நிலையை நினைத்துச் சிரித்தபடியே வந்தாள் நான்ஸி.
உள்ளே வந்தது தான் தாமதம். தேவ் அவளை திட்டத் தொடங்கினான். அதுவும் ஆங்கிலத்தில். பாவம் நான்ஸியின் முன் அவமானமாகிவிட்டது வாசுவிற்கு.
'இப்ப என்ன வந்துச்சின்னு திட்டுறான். காரணத்த சொல்லிட்டு தனியா கூட்டீட்டு போய்த் திட்டிருக்கலாம். இப்படியா அவா முன்னாடி திட்டுவான். ச்ச… ஆமா எதுக்கு திட்டுறான். ' என்ற யோசனையுடன் நிற்க,
" கொஞ்சம் பொறுப்புள்ள ஸ்டாஃப்பா நடந்துக்கங்க. " எனத் திட்டி முடிக்க,
' அப்படி என்ன பொறுப்பில்லாம செஞ்சிட்டோம். ' என கேட்கத் துடித்த வாயை அடைக்கி கொண்டு தலை குனிந்து வாசு நின்றாள் என்றால், அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே பூட்டி வைத்தாள் நான்ஸி. அதைக் கண்ட வாசு.
" ஸாரி ஸார். நீங்க என்னோட தப்பு என்னன்னு சுட்டி காட்டினா என்னால அத திருத்திக்க முடியும். " என்றாள் பணிவான குரலில்.
அவன் அந்த ட்ரெயை சுட்டிக் காட்டி. " என்னதிது. " என்க.
'இது கூடத் தெரியாதாடா. இது டின்னர். உனக்காக நானே பண்ணது. ' மைண்ட் வாய்ஸ்.
" ஒருத்தர் ரூம்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றதுக்கு முன்னாடி அவங்க கிட்ட மெனு என்னனு சொல்லி அவங்களோட ஆர்டர வாங்கிருக்கணும். இதுல பட்டர் நைஃப் இல்ல. சூப் ஃபோர்க் இல்ல. க்ளாத் இல்ல. " என வரிசையாகப் பல குறைகளைச் சொல்ல,
'என்னது இல்லையா. எல்லாத்தையும் நா கரெக்ட்டா பாத்து பாத்து எடுத்து வச்சேனே. ' எனப் பார்க்க, அவன் சொன்ன அனைத்தும் உண்மைதான். அவள் வைத்துவிட்டு சென்ற எதுவுமே ஒழுங்காக இல்லை அங்கு. திரும்பி நான்ஸியை பார்க்க, அவளின் சிரிப்பு சொல்லியது அவள் தான் செய்தது என்று.
" ஸாரி ஸார். நெக்ஸ்ட் டயம் இந்தத் தப்பு நடக்காது. " எனச் செய்யாத குற்றத்திற்காக மன்னிப்பு வேண்ட, அவன் இப்போது அவள் செய்த குற்றங்களை சொல்லத் தொடங்கினான்.
" டின்னர் எடுத்துட்டு வரும்போது டோர க்ளோஸ் பண்ணக் கூடாது. வெளில போகும்போது கதவ மூடீட்டு போகணும். அதெல்லாம் சொல்லித் தர்றதுக்கு இது ஒன்னும் ட்ரெய்னிங் சென்டர் கிடையாது. உங்க டியூட்டிய சரியா கவனமா செய்றதா இருந்தா நீங்க இந்த வேலைய கன்ட்டினியூ பண்ணலாம். இல்லன்னா. " என்றபோது கோபம் வரவில்லை வாசுவிற்கு. ஏனெனில் அவன் கூறியது உண்மை.
அறையின் உள்ளே நுழையும் போதே கதவுகளை மூடிக் கூடாது. இது ரூல். அது பணியாளர்களின் பாதுகாப்பதற்காகப் போடப்பட்டது. ஒரு வேலை உள்ளே இருப்பவர் அத்துமீறினால் தப்பிக்க உதவியாகவும், உதவி செய்ய ஆட்கள் வருவதற்கு எதுவாகவும் இருக்கும். அது வாசு செய்த முதல் தவறு.
அடுத்த தவறு. வெளியே செல்லும்போது கதவை மூடாமல் விட்டது. யாரும் அறியமால் உள்ளே வெளியாட்கள் நுழைந்து குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
மூடி இருக்கிறது என்ற நினைப்பில் பால்கனியில் தேவ் இருக்க, நான்ஸி சத்தம் இல்லாமல் வந்து வாசு கொண்டு வந்த ட்ரெயில் உள்ள பொருள்களைக் கலைத்து வைத்ததால் வாசு திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறாள். கதவை மூடி இருந்தால் அதுபோல் நடக்காமல் இருந்திருக்கும்.
'ச்ச... இவெந்தான உள்ள இருக்கான்னு நம்பி கதவ பூட்டீட்டேன். அது தப்பா. ஆனா இவன திட்டீட்டே கதவ லாக் பண்ணாம போனது, பெரிய தப்பு தா. அடுத்து அவெங்கிட்ட திட்டு வாங்காம கவனமா இருக்கணும். ' என நினைத்தவள் அவனிடம் மன்னிப்பு வேண்ட,
" இட் ஓகே. இது லாஸ்டா இருக்கட்டும். " எனப் பெருந்தன்மையுடன் சொன்னவன், ட்ரெயில் உள்ள உணவை அவளின் கையில் நீட்டி,
"இது எனக்கு ரொம்ப பிடிச்ச சூப். சூடு பண்ணி எடுத்துட்டு வர முடியுமா.! " எனக் கள்ளச் சிரிப்புடன் தமிழில் கேட்க, அவளுக்குத் தெரிந்து விட்டது, தான் கலந்ததை அவன் பார்த்து விட்டான் என்று.
" ஸாரி ஸார். என்னோட டியூட்டி டயம் முடிஞ்சது. இனி உங்களுக்கு என்ன வேணும்னாலும் மிஸ் நான்ஸி செய்வாங்க. தேங்க் யூ. " என ஆங்கிலத்தில் மறுத்துவிட்டு. அவன் பேச இடம் தராது வெளியே சென்று விட்டாள். சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்தபடி தேவ் நிற்க,
"ஸாரி ஸார் அவளுக்காக நா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அவா கொஞ்சம் திமிரு பிடிச்சவ. எப்படி தா இவள மாறியான தகுதியே இல்லாத ஒருத்திய இந்த வேலைக்கு எடுத்தாங்களோ. இந்தப் பொண்ணுக்கு திறம இல்லன்னாலும் தன்னோட அழக வச்சி ரொம்ப சிக்கிரமா முன்னேறிப் போற வழி நல்லாவே தெரிஞ்சிருக்கு. " என வெறுப்பை உமிழ,
"மிஸ் நான்ஸி, நீங்க இப்ப என்ன சொல்ல வர்றிங்க. எனக்குப் பாஸ்ஸா இருக்க தகுதி இல்லன்னா." எனப் புருவங்களை உயர்த்தி கேட்டான் தேவ்.
"ஸார்!!. நா அப்படி சொல்லலயே!. " என்றாள் தயக்கமாக.
"இப்ப தான சொன்னிங்களே. அதுக்கு அது தா அர்த்தம். எப்படி தா செலக்ட் பண்ணாங்களோன்னு. " என்க, அவள் முழித்தாள்.
" மிஸ் வாசவிய செலக்ட் பண்ணது நாந்தா. அழகப்பாத்து இல்ல. அவங்க கிட்ட இருக்குற திறமைய பாத்து. கொஞ்சம் கடுமையா பேசுனதும் நீங்கச் சொன்ன வார்த்தைலயே நம்பிக்க இல்லாம குழம்பி போய் நிக்கிறீங்க பாருங்க, இந்த மாறி கன்ஃப்யூஷன் மைண்ட் மிஸ் வாசவிக்கி கிடையாது. உங்க முன்னாடி தான சமாளிச்சாங்க. இத நா பண்ணல அடுத்தவங்க பண்ணதுன்னு பழிய வேறாளு மேல தூக்கி போடல. நாகரீகமா சிரிச்சிட்டே போனது அவங்களோட திறமையாத்தா எனக்குத் தெரியுது.
அவங்க போனதுக்கு அப்றம் நீங்கச் சொன்னிங்களே இதுக்கு பேரு பொறாம. பொறாம கண்டிப்பா இருக்கணும். அப்பதா நம்மலால முன்னேறிப் போக முடியும்.
நீங்க வாசவிக்கு திறம இல்லன்னு சொன்னிங்கல்ல. அப்ப நீங்க அந்தப் பதவிக்கி எந்த வகையில தகுதியானவங்கன்னு ப்ரூஃப் பண்ணுங்க. வெறும் வாயால இல்லாம, உங்க செயல்களால அவள விட நா பெஸ்ட்டுன்னு நிறுபிச்சா உங்களுக்கான பதவி உங்கள தேடி வரும்.
அப்றம் உங்க போட்டிய இந்த மாறிச் சீப்பா கத்திய எடுத்து ஒழிச்சி வச்சி கஸ்டமர் கிட்ட விளையாடாதீங்க. இந்த ஹோட்டலோட பேரையும் என்னோட கஸ்டமர்ஸ் வச்சிருக்குற நம்பிக்கையையும் கெடுத்திட மாட்டிங்கன்னு நம்புறேன். இன்னோரு மொற இது மாறி நடந்தா விளைவுகள் வேற மாறி இருக்கும். " என எச்சரித்து அனுப்பி வைத்தான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..