அத்தியாயம்: 30
"வாசு எனக்கு இது சரியான ப்ளானா தெரியல. வாயேன் வீட்டுக்குப் போய்டலாம். கார்த்திக் ஸாருக்கு தெரிஞ்சா கூடச் சமாளிச்சிப்பேன். பட் ஜோஹிதா மேம்க்கு தெரிஞ்சா அவ்ளோ தா. ரொம்ப கோபப்படுவாங்க. வா வாசு போய்டலாம். " வில்லியம் வாசுவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
"கொஞ்சம் அமைதியா இரு வில். நானே எந்தப் பக்கம் ஏறுனா சரியா இருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன். பேசிப் பேசி வர்ற ஐடியாவையும் தொரத்தி விட்டுடாத. " என்றவளின் பார்வை அந்த ஹோட்டலின் மீதே இருந்தது.
"வாசு புரிஞ்சிக்க. இந்த நேரத்துல திருடங்க மாறி ஹோட்டல் குள்ள நுழைஞ்சா Cops (போலிஸ்) பிடிச்சிட்டெல்லாம் போகாது, நம்மல கொன்னு பொதச்சிடும். இது கைல துப்பாக்கியோட Cops ரவுண்ட்ஸ் வர்ற நேரம். " என்ற வில்லியமிற்கு இருந்த படபடப்பும் பயமும் வாசுவிற்கு இல்லை.
அவள் யாரும் அறியாமல் அவள் வேலை பார்க்கும் ஹோட்டலுக்குள் சென்று தன்னை திட்டிய தேவ்வை திரும்பித் திட்டி விட்டு வர வேண்டும். அதனால் தான் உள்ளே செல்ல நினைக்கிறாள். ஆனால் வாசல் வழியாகச் செல்லாது, மலை ஏறுவது போல் சுவர் ஏற ஏற்ற இடம் எது என்று தேடி கொண்டு இருக்கிறாள். அந்த இடம் அவளைத் தேவ்வின் ரூம் வரை கொண்டு செல்ல வேண்டும். அதுவும் பிறரின் பார்வை வளையத்திற்குள் படாமல்.
வில்லியமிடம் தனக்கு வேண்டிய ஒன்றை மறந்து வந்து விட்டேன். துணைக்கு வா என உண்மையை மறைத்து அழைத்து வந்துள்ளாள்.
"நீ காலைல சீக்கிரமா போய் இந்த வேலைய பாக்க கூடாதா.!"
"வில். "
"பயம்மா இருக்கு வாசு. "
"ஓகே!. நா மேல போற ரூட்ட சூஸ் பண்ணிட்டேன். நா திரும்பி வர்ற வர, இங்கயே இருக்குறதுன்னா உன்னோட விருப்பம். இல்லன்னா நீ போ நா பாத்துப்பேன். " என வசனங்கள் பேசிப் பைப்பை பிடித்து ஏறத் தொடங்கினாள். வில்லியம் அவள் திரும்பி வரும் வரை காவலுக்கு நிற்பதாக முடிவு செய்து, ஒரு புதரின் ஓரமாகப் படுத்துக் கொண்டான். பாவம்.
அது நவம்பர் மாதம். அமெரிக்க நாட்டின் குளிர்காலத்தின் தொடக்கம் என்று சொல்லலாம். குளிர் என்பதை விடப் பனி காலம் என்ற வார்த்தை சரியாக இருக்கும். டிசம்பர் இறுதியில் சில சென்டிமீட்டர் உயரத்திற்கு பனி மட்டுமே இருக்கும்.
இப்போதோ, குளிர்ந்த காற்றுடன் மழை பொழிந்து கொண்டிருந்தது. ஆனாலும் வாசு பின் வாங்கவில்லையே. மழையில் நனைந்திடாதபடி உடை அணிந்து கொண்டு மேல ஏறிச் சென்றாள்.
மூன்றாவது மாடியில் இருக்கும் தேவ்வின் பால்கனியை இலக்காக வைத்து ஏறத் தொடங்கியவள், இன்னும் சில மீட்டர்கள் தான் இருக்கும். அதற்குள் கால் வழுக்கி விடத் தேவ்வின் பால்கனியில் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடத்தொடங்கினாள். கத்தவும் முடியாது. கையை விட்டுக் கீழே விழவும் முடியாது. விழுந்தால் நிச்சயம் ஹாஸ்பிட்டல் பெட் கன்ஃபாம். கை வேறு வழுக்கிக் கொண்டு போக,
'போச்சி விழப்போறோம். ' என மனத்தை திடப்படுத்திக் கொள்ள, அவளின் கரத்தைப் பற்றி மேலே இழுத்தான் ருத்ரா. இழுத்தான் என்பதை நம்மூர்களில் துணி மூட்டையை தூக்குவது போல் தூக்கி எறிந்தான்.
" லூசாடி நீ?. இந்த நேரத்துல பைப் ஏறி வர்ற. உனக்குள்ள இருக்கிற ஒரு கிராம் முளைய கூட யூஸ் பண்ண மாட்டியா!. " என காட்டமாகக் கேட்க,
"யூஸ் பண்ணதுனால தா உன்னோட ரூம்க்குள்ள இருக்கேன். இல்லன்னா மேல மேல போயிருப்பேன். " எனக் கையை உயர்த்தி ஆகாயத்தை காட்ட, அதைத் தட்டிவிட்டு விட்டு அவளை அறைக்குள் இழுத்து வந்தான். குளிர் அதிகமாகவே இருந்தது.
அவளின் உடல் சில்லென்று இருப்பதை அறிந்தவன், அவளின் மேலாடையை கலட்டி தொங்க விட்டான். பின் கணத்த போர்வையை அவளின் மேல் போர்த்தியவன். அறையில் சூட்டை அதிகப்படுத்தி, காஃபி மேக்கரில் காஃபி செய்து எடுத்து வந்து அவளின் கரத்தில் திணித்தான்.
"முதல்ல இத குடி. அப்பதா இதமா இருக்கும். ம்… " என்க, பேசாது அதை அவள் குடித்தாள்.
" நீ என்ன சுகர் ஃபேஷன்ட்டா. இல்ல உனக்குச் சுகர் பிடிக்காத." எனப் புருவங்களை உயர்த்தி கேட்டாள் பெண். ஏனெனில் காஃபி கசப்பாக இருந்தது. பெயருக்குக் கூட இனிப்பு இல்லை.
"இது ப்ளாக் காஃபி இப்படி தா குடிக்கணும். முழுசா குடி. " என்றவன் அவள் மறுக்க மறுக்க வாயில் ஊற்றி விட்டான்.
"உவ்வாக். செம்மையா கசக்குது. ஸ்வீட் எதுவும் இருக்கா. " என எழுந்து ஃப்ரிட்ஜ்ஜில் தேட, அவளுக்கு ஒரு இனிப்பு கிடைத்தது. ரோகிணிக்காக வாங்கி வைத்திருந்தான் தேவ்.
"இப்ப பெட்டரா இருக்கு. " எனக் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டு போர்வையால் போர்த்திக் கொள்ள, தேவ்விற்கு கடுப்பாக இருந்தது.
"எதுக்கு இந்த நேரத்துல வந்த?. " என்றான் காட்டமாக.
" உன்ன பாக்கத்தா. " என்றாள் வாசு.
" என்ன எதுக்கு பாக்கணும். "
"எதுக்குன்னா... நிறைய காரணம் இருக்கே. என்னன்னு நா சொல்வேன். " என்றவளை ருத்ரா முறைக்க,
"சரி… நா ஒன்னு ஒன்னா சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. முதல் காரணம் நா பண்ண மெஜ்ஏஜ்க்கு ஏ ரிப்ளே பண்ணலன்னு கேக்க வந்தேன். "
"எப்ப மெஜ்ஏஜ் பண்ண?. "
"பொய் சொல்லாத. நா அனுப்புனத நீ பாத்த. எனக்கு ப்ளூ டிக் விழுந்தது. பல ஹோட்டலுக்கு முதலாளியா இருந்துட்டு பொய் சொன்னா அது அசிங்கம். "
" ம்ச்... எனக்கு ரிப்ளே பண்ணணும்னு தோனல. உன்னோட ப்ரபோஷல நா ஏத்துக்கல. போதுமா." என்றான் எரிச்சலுடன்.
"அதெப்படி நீ ரிஜக்ட் பண்ணலாம். ம். எனக்குக் காரணம் வேணும். " எனச் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு மெத்தையை தட்டி பேச, அவனுக்குச் சிரிப்பு வந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. அப்படி காட்டிக் கொண்டாள் அவள் வேப்பில்லை இல்லாமல் சாமி ஆடத் தொடங்கிடுவாள்.
வீட்டிற்கு வந்ததும் வாசு ருத்ராவிற்கு மெஜ்ஏஜ் செய்திருந்தாள். என்னவென்றால். ' ஸாரி. நா அன்னைக்கி உங்கிட்ட அப்படி கோபமா பேசிருக்க கூடாது. பழசெல்லாம் மறந்துட்டுவோம். ரப்பர் வச்சி எல்லாத்தையும் அழிச்சிட்டு. புதுசா பழகிப் பாக்கலாம். இனி நட்பா இருக்கலாம். நோ சண்டை. என்ன சொல்ற?. ' என அவள் அனுப்பிய மெஸ்ஏஜ்ஜை அவன் படித்தாலும் பதில் சொல்லவில்லை.
‘என்ன மறுபடியும் முதல்ல இருந்தா!!’. என நீங்கள் கேட்குள் கேள்விக்கு,
‘ஆமாங்க. முதல்ல இருந்து தா.’ எனப் பதில் சொல்லலாம்.
சென்ற முறை அவளது நண்பர்கள் கேலி, கிண்டல் செய்ததால் ‘எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் வேணும்மடா’ எனத் தேடிப் போய் பேசியவள், இப்பொழுதும் மீண்டும் பாய் ஃப்ரெண்டு வேண்டுமென வந்திருக்க காரணம் டேனியல்.
அவன் தான். அவன் தான்… இதற்கு காரணம்.
வாரம் ஒரு நாள் வாசுவை காணவென அவர்களின் உணவகத்திற்கு வந்துவிடுவான். காலையிலிருந்து மாலைவரை கார்த்திக் ஜோஹிதா வாசு வில்லியம் என அனைவருடனும் பழகும் அவனுக்கு, ஒரு குடும்பம் கிடைத்த உணர்வு வரும்.
அவன் தான் வாசுவிடம், " வாசு நீ ரொம்ப சின்னப் பொண்ணு மாறிப் பிகேவ் பண்ற போல. அதா அவனுக்கு உம்மேல ஒரு இன்ட்ரஸ்ட் வரல. வந்திருந்தா அவனே வந்து உன்ன காம்பர்மைஸ் பண்ணி அவுட்டிங் கூட்டீட்டு போயிருப்பான். எதுக்கும் நீ வயசு பொண்ணு மாறிக் கொஞ்சம் நடந்துக்கயேன். உன்னோட அவன மட்டுமில்ல பலர கவுத்திடலாம். " என்க,
" நா இப்பவே மெச்சூராத்தா நடந்துக்கிறேன். இப்ப நா ம்ன்னு சொன்னாக்கூட எனக்கு நிறைய பேர் ஃப்ரெண்ட்டா கிடைப்பாங்க. கெவி காப்படீஷன்னா ஆகிடும். அப்றம் டெய்லி நாலு பேர் வாசல்ல வந்து நிப்பாங்க. அதெல்லாம் வேண்டாம்னு தான் ம் சொல்லாம இருக்கேன். மத்தபடி எனக்கு ஃப்ரெண்டு கிடைக்காம இல்ல." என பெருமையாகப் பேசினாள்.
" மத்தவங்கலாம் வேண்டாம். முதல்ல உன்ன ரிஜக்ட் பண்ணானே, அவன முதல்ல ஃப்ரெண்டா ஆக்கு பாப்போம். ஒருத்தெங்கூடவே ஒழுங்கா பழக முடியலையாம். இதுல இவளுக்குப் பின்னாடி க்யூகட்டி நிக்கிறாங்களாம். ஆனால் உனக்கு இவ்ளோ வாய் ஆகாது வாசு. " எனக் கேலி செய்தான் டேனியல்.
"ஹல்லோ, அவெ ஒன்னும் என்ன ரிஜக்ட் பண்ணல. நாந்தா அவன ரிஜக்ட் பண்ணேன். மறந்துடாத. " என ரோசமாகச் சொல்ல,
" என்ன இருந்தாலும் அவனுக்கு நீயும், உனக்கு அவனும் ஒரு ஃபெயிலியர் ப்ராஜெக்ட் தா. தோல்வி தா. " என சொல்லிச் சிரித்தான்.
"தோல்வியா! அத எப்படி வெற்றிய மாத்தி காட்டுறேன் பாரு. " எனச் சவால் விட, அதற்கும் அவன் அவளைக் கேலி செய்து சிரித்தான்.
தோற்ற இடத்தில் தான் வெற்றியை தேட முடியும். அதான் வாசு கலத்தில் இறங்கி விட்டாள், ருத்ரதேவ்வுடன் நட்பாகப் பழகி காட்ட.
இப்ப எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சே ஆகணும் என்பது போல் கட்டிலில் அமர்ந்து கத்திக் கொண்டிருந்தவளை கண்டு கொள்ளாது வெளியே செல்லப் பார்க்க, அவனை வழி மறித்து இரு கரத்தையும் நீட்டிக் கொண்டு வந்து நின்றாள் வாசு.
" ருத்ரா ப்ளிஸ். எனக்கு ஒரு சான்ஸ் குடுத்து பாரு. This time I will never make a mistake. ப்ராமிஸ். " என்றாள் கெஞ்சலாக.
" எனக்கு விருப்பம் இல்ல. நீ போடுற எல்லா கன்டிஷனும் புல்பில் ஆகுற மாறி நீ வேற யாரையாது கண்டு பிடிச்சிக்க. என்ன ஆள விடு. "
"இல்ல. இந்த வாட்டி நா எந்தக் கன்டிஷனும் போடமாட்டேன். ஒன்லி ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தா. " எனத் தலையசைத்து கொஞ்சல் மொழி பேசினாள் பெண்.
" வேண்டாம். " என்றான் அவன் இரக்கமின்றி.
"ஏ?. "
"இப்ப அப்படி தா சொல்லுவ. அப்றம் உனக்கு உன்னோட பேரக் கூடத் தமிழ்ல எழுதத் தெரியாதான்னு சண்டைக்கி நிப்ப. எதுக்கு.?"
" தமிழ் பேசுறல்ல அது போதும். எழுதக் கத்துக்கிட்டு நீ என்ன கம்பருக்கு போட்டியா காவியம் எழுதப் போறியா என்ன!. அதெல்லாம் மேட்டரே இல்ல. ஒருத்தருக்கு ஒருத்தர் நட்பா இருக்க மொழி தேவையே இல்லங்கிறேன். அன்பு இருந்தா போதும்ங்கிறேன். " என்றவளை ஏற இறங்க பார்த்தவன்,
"எனக்குச் சாங்ஸ் கேட்டுப் பழக்கம் இல்ல. நீ எழுதி அனுப்புன எல்லாத்தையும் கூகுள் தா வாசிச்சி காட்டுச்சி. பட் அது பாட்டுன்னு கூடத் தெரியாத, ரசன இல்லாத இந்த டியூப்லைட்ட ஏம்மா நீ ஃப்ரெண்ட்டா ஆக்கிக்க பாக்குற. "
" நா எதுக்கு இருக்கேன் ருத்ரா. உனக்கு அந்த மாறிப் பாட்டெல்லாம் ரசிக்க நா கத்துதாறேன். ஈஸி... நாம ஒரே ப்ளூடூத்த ஆளுக்கொரு காதுல வச்சிட்டு பாட்டு கேக்கலாம். தலையா ஆட்டிக்கிட்டே. " என்றவளை குறுநகையுடன் தள்ளி விட்டு விட்டுத் தாண்டி செல்ல,
"நா பேசாட்டிக்கி சும்மா தா இருந்தேன். நீ தா வந்த. வந்து more than friend ன்னு சொல்லி உசுப்பேத்தி விட்ட. இப்ப ஃப்ரெண்ட்டா கூட இருக்க சம்மதிக்க மாட்டேங்கிற. இதெல்லாம் என்ன நியாயம். " என்க, அவனின் உதடுகளில் கள்ளச்சிரிப்பானது தோன்றியது. அவள் புறம் திரும்பி, அவளை நெருங்கி வந்தான். பெண் தன் கால்களைப் பின்புறம் எட்டு வைத்தாள்.
இனி செல்ல முடியாது. சுவர் உள்ளது என்ற நிலை வர, வாசு ருத்ராவின் கண்களை உற்று பார்த்தபடி நின்றாள்.
"உனக்கு more than friend ன்னா என்னனு தெரியுமா!. " எனக் கேட்டவனின் குரலில் பெண்ணவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது. தலை தானாக நிலம் நோக்கியது.
"ம்… அது தெரியாத அளவுக்கு நா ஒன்னும் தத்தி கிடையாது. " என்று நாணத்துடன் வார்த்தைகள் வர, அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதைக் கண்டவள்,
"அப்ப ஃப்ரெண்ட்ஸ். " எனக் கரம் நீட்ட,
சின்ன சிரிப்புடன் அவளின் கரம் பற்றிக் குளுக்கி,
"ஃப்ரெண்ட்ஸ்." என்றவனிடம்,
"ஒன்லி ஃப்ரெண்ட்ஸ் தா. more than friend கிடையாது. " என்றவள் அவனிடமிருந்து தன் கரத்தை உறுக பார்க்க, முடியவில்லை. ' விடுடா.' என்பது போல் அவனின் முகம் பார்க்க,
"அத காலம் முடிவுப் பண்ணும். " என
எதார்த்தமான சொன்னானா!. அல்லது நா உனக்கு ஃப்ரெண்டு. ஆனா நீ எனக்கு அப்படி கிடையாது என சிம்பாளிக்க சொன்னானா!. புரியலயே!!. நமக்குத் தா இந்தக் குழப்பம். ஆனால் வாசு அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.
'அப்பாடா ஒரு வழியா ஃப்ரெண்ட்டாகிட்டோம். ஒரு ஃபோட்டோவ எடுத்து அத ஃபேஸ் புக்ல இன்ஸ்டால டுவிட்டர்லன்னு எல்லாத்துலயும் போட்டு என்ன கேலி பண்ண அத்தன பேர் மூக்கயும் ஒரே நேரத்துல உடைக்கணும். அதுலையும் அந்த டேனியலோட கொட மிளகா மூக்க குத்தி குத்தியே நஞ்சி போக வைக்கணும். ' என மகிழ்ச்சியுடன் இருந்தாள் வாசு.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..