அத்தியாயம்: 31
உன்னோடு சேர்ந்தே...
இந்த உலகினை ரசித்திட ஆசை...
உன் பூ கரம் பிடித்தே…
இந்த உலகை சுற்றிவர ஆசை...
உன் மடி சாய்ந்தே…
அந்த நிலவினை ரசித்திட ஆசை...
உன்னில் தொலைந்தே...
என்னை மறந்திட ஆசை...
இந்தக் காதல் கவிதை யாருக்கு பொருந்துதோ இல்லையோ! உள்ளே புதிதாகக் காதலர்களாக உருவெடுத்துள்ள அந்த ஜோடிகளுக்குப் பொருந்தும்.
'ஹலோ! என்ன காதலர்கள்ன்னு சொல்றிங்க. நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்டு தா. கை பிடிச்சிட்டு நின்னா காதலர்களாக!. நீங்களா எதையாது கற்பன பண்ணிட்டு பேசக் கூடாது. நாங்க ஃப்ரெண்ட்ஸ். ' கண்டிப்பாக இது வாசு தான்.
அவளுக்கு ருத்ராவை காதலிக்க தைரியம் இல்ல. ஏனெனில் பிடிக்கும் ரசிப்பேன் என்ற நிலையிலிருந்து காதல் என்ற நிலையை அடைந்து விட்டால் நீ பெரிய பெரிய பிரச்சனைகளைச் சந்திப்பாய் என அவளின் உள்ளுணர்வு அவளை எச்சரித்துக் கொண்டே இருப்பதால் காதல் செய்ய விரும்பவில்லை.
கார்த்திக்கை கட்டிப்போட்டு அவர்களின் ரெஸ்டாரன்ட்டை அடித்துப் பிடுங்கும் ஒரு சினிமா வில்லனாக ஒரு மனம் தேவ்வை சில காலமாக உருவகப்படுத்தி வருகிறது. மற்றொரு மனமோ அவனை ஆசை காதலனாகப் பார்க்க சொல்லித் தூண்டி விடுக்கிறது. என்ன செய்ய?.
மனம் குழம்பிய குட்டையாகவே உள்ளது. தெளிய சில காலங்கள் ஆகலாம். அதுவரை ருத்ராவுடன் பழகும் வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் இழக்க அவள் தயாராக இல்லை.
"வாசு, இப்ப டயம் என்னனு தெரியுமா உனக்கு?. " எனச் சுவற்றில் சாய்ந்து கொண்டு ருத்ரா கேள்வி கேட்டான். ஏனெனில் 'எப்படி ஏறி வந்தாய். ' என்ற ஒரு வரி கேள்விக்கு, வாசு ஆக்ஸ்போர்டு டிஸ்னரி கணக்காக விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறாள்.
பால்கனி ஏறி வந்த தன் வீர தீர கதையை பெருமையாகச் சொல்லியபடி மெத்தையில் அமர்ந்திருக்க,
ருத்ராவோ இப்பொழுது முடிப்பாள் பிறகு முடிப்பாள் என்று கடிகாரத்தை பார்த்தபடி நின்றான். அவனும் தூங்க வேண்டாமா!. அவனின் படுக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டிக் கைகளை அசைத்து அசைத்துக் கதை சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தவளை தள்ளி விட்டு விட்டா படுக்க இயலும்.
ச்ச… பாவம்ல...
ஆனால், அந்த எண்ணம் வாசுவிற்கு இல்லயே. அவன் பேசியதை காதிலும் வாங்கவில்லை.
" எனக்கு இந்த மாறிப் பைப் ஏறிப் பழக்கம் இருக்கு ருத்ரா. லேட் நைட்ல வீட்டுக்கு வந்தா ஜோஹிம்மாட்டா இருந்து தப்பிக்க இத கத்து தந்ததே கார்த்திப்பா தா. நைட்ல ஊர் சுத்திட்டு வந்து அவரும் சேர்ந்து எங்கூட எறுவாரு. நாங்க மலை ஏறுறதுக்குன்னு தனியா கோச்சிங் க்ளாஸ்லாம் போய்க் கத்துக்கிட்டோம். "
" வாசு. " என்க, அவளுக்குத் தான் பனியில் காதுகள் இரண்டும் அடைத்து விட்டதே. எப்படி கேட்கும்.
"ஒரு மொற கோச்சிங் க்ளாஸ்ல சின்ன சின்னப் பிடிமானம் இருக்குற பெரிய சுவர்ல ஏறச் சொன்னாங்க. பாதி ஏறிட்டு இருக்கும் போதே நா கீழ விழுந்துட்டேன். ரோப் கட்டி இருந்தாங்கதா. பட் அத சரியா போடாம நா ஏறுனதுனால கால்ல அடிப்பட்டு நடக்க முடியாம ஒரு வாரம் படுத்திருந்தேன்.
அதுலருந்து ஜோஹிம்மா என்ன வெளிய விடவே மாட்டேன்னு சண்ட போட்டாங்க. கார்த்திப்பா தா எனக்குச் சப்போட் பண்ணி வெளில போக வச்சாரு. அப்றம்... "
‘ஐய்யையோ இவா இன்னும் முடிக்கலயா.!’
" வா…சூ. " என அவன் கத்திய பின்னே தான் தன் பேச்சை நிறுத்தினாள் வாசு.
" டயம் என்னன்னு தெரியுமா?." என்றவுடன் மணி பார்க்க அது ஒன்றை காட்டியது.
"ஒரு மணி நேரமாவ நா உங்கூட தனியா இருந்திருக்கேன். ஐய்யோ பாவம் வில் எனக்காகக் காத்துட்டு இருப்பான். நா கிளம்புறேன். " எனப் பால்கனிக்கு சென்றவள் திரும்பி வந்து,
" நா உன்ன பாக்க வந்ததுக்கான ஒரு காரணத்த தா சொல்லிருக்கேன்.. மீதி. "
'ஒரு காரணத்துக்கே ஒரு மணி நேரமா!. மீதி காரணத்த கேட்க ஒரு நாள் பத்தாதே. '
"நாளைக்கி காலைல சொல்லு உனக்கு ஒரு மணி நேரம் அப்பாய்ண்மெண்ட் தர்றேன். " என்றவன் கட்டிலில் சென்று போர்வை மூடிப் படுத்துக் கொண்டு விளக்கை அணைத்தான்.
" ஹாங்… போறப்ப கதவ மூடீட்டு போ. I am going to sleep. நீ டேர் வழியா போகப்போறியா. இல்ல. பால்கனில இருந்து குதிக்க போறியா. "
" நமக்கு டேர் செட்டாகாது. சோ குதிச்சிடுறேன். "
"நல்லது. குட் நைட். "என விழி மூடியவனின் அருகில் வந்து,
"ருத்ரா... ருத்ரா... கன்ஃபாம்மா இப்ப நாம ஃப்ரெண்ட்ஸ் தான. ம்..." என வாசு கேட்க, போர்வையை விலக்கியவன், அவளை விசித்திரமான பார்த்தான். 'நடு ராத்திரி வந்து என்ன கேள்வி கேக்குறா பாரு. ' என நினைத்தவன்,
"ஆமா ஃப்ரெண்டு தா. ஏ கேக்குற. "
"ஃப்ரெண்ட்ஸ்ஸுக்குன்னு சில உரிம இருக்கு தான. ஐ மீன் திட்டுறது வலிக்காம அடிக்கிறது. திட்டுறது. இந்த மாறி. "
"லூசாடி நீ. போடி அங்கிட்டு. " எனப் போர்வை போர்த்தி திரும்பிப் படுக்க, அவளை டி என்றதால் கோபம் கொண்டவள் அவனின் போர்வையை உறுவ, அவன் எழுந்து அமர்ந்து கொண்டான்.
"என்ன வேணும் வாசு உனக்கு. எனக்குத் தூக்கம் வருது. போ இங்கருந்து. " எனக் கத்த,
"என்ன ஏ டி போட்டுப் பேசுற. "
"நீ தான சொன்ன ஃப்ரெண்ட்ஸ்குன்னு சில உரிம இருக்குன்னு. அதுல இதுவும் ஒன்னு. " என்றான் அமைதியாக.
" அப்ப நா உன்ன டா போட்டுக் கூப்பிட்டா அன்னைக்கி மாறி என்னோட கைய உடைக்க மாட்டேல்ல. " எனக் கேட்க, ருத்ராவிற்கு எதுவோ போல் ஆனது.
அன்று அவன் இறுகப் பிடித்த அவளின் மணிக்கட்டில் வலி இரு நாட்களுக்கு மேல் இருந்தது. அதை வாசு சொல்ல, தன் தவறு உணர்ந்தவன். அவளின் மணிக்கட்டை பிடித்து வருடிய படி,
" ஸாரி ஸ்வீட்டி. ஏதோ கோபத்துல உன்ன காயப்படுத்திட்டேன். இனி அப்படி நடக்காது. நீ டா போட்டுக் கூப்பிடுறதுல ப்ராப்ளம் இல்ல தா. பட், அது நாம ரெண்டு பேர் மட்டும் இருக்கும்போது. ரூம் குள்ள ஓகே. வெளில வச்சி… வேண்டாம். ம்... நா கொஞ்சம் ரெஸ்பெக்ட்ட எதிர்பாப்பேன். " என்றவன் அவளின் பூ கரத்தில் தன் இதழ் பதிக்க, பெண்ணவள் மெல்ல தன் கரத்தை உறுகிக் கொண்டாள் அவனிடமிருந்து.
மெல்லிய புன்னகையுடன் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். முக்கியத் தெரிந்த விளக்கின் ஒளியில் மங்கையின் வரிவடிவம் போதை கொள்ளச் செய்யும் அளவுக்கு வலுவானதாக இருக்க, ருத்ராவின் கரம் உயர்ந்து அவளின் கன்னம் பற்றச் சென்றது. வாசு எழுந்த நின்று திரும்பிக் கொண்டாள்.
"நா கிளம்புறேன். காலைல பாக்கலாம். " என்றவளின் பார்வை வட்டத்திற்குள் இரவு உணவாக அவள் எடுத்து வந்த ட்ரெ தெரிய, வேகமாக திருப்பித் தலையணையால் அவனை அடிக்கத் தொடங்கினான்.
"ஏய்... எதுக்கு அடிக்கிற. " எனக் கேட்டபடியே அவள் தரும் அடிகளை வாங்கிக் கொண்டான்.
"பாவி... பாவி. வந்த விசயத்த மறந்துட்டு உங்கூட குலாவிக்கிட்டு இருக்கேன் பாரு. எதுக்கு டா என்ன திட்டுன. அதுவும் அந்த roasted lizard (வறுத்த பல்லி.) முன்னாடி. ஹாங்… அதுக்கு என்ன பாத்தாலே பிடிக்காது. அவா முன்னாடி என்ன திட்டி, என்ன அசிங்கப்படுத்திட்ட. உனக்கு இதே வேலையா போச்சி, யார் முன்னாடியாச்சும் என்ன தல குனிஞ்சி நிக்க வைக்கிறதே. அதுக்காக உனக்கு நா நல்லா திட்டணும்னு தா உன்ன பாக்க வந்தேன்." என அடிக்க,
" இனி நோ சண்டன்னு சொல்லித்தான கைய நீட்டுன. நானும் அத நம்பி தா கைய குடுத்தேன். இப்ப சண்ட போடுற. அப்ப அதெல்லாம் நடிப்பா. " எனக் கேட்டபடி எழுந்து நின்று மற்றொரு தலையணையை எடுத்துக் கொண்டு அவளின் அடிகளிலிருந்து தப்பிக்க,
" நா உங்கிட்ட உரிம எடுத்துக்கலாமான்னு கேட்டேனே. நீ கூட ஓகே சொன்ன தான. இந்தா. இந்த அடி உனக்குத் தா. " எனத் தலையணை சண்டை போட, அவன் தப்பித்து ஓட என அந்த இரவு இருவரும் மறக்க முடியாததாக மாறியது.
காலை எட்டு மணி.
வாசு எப்பொழுதும் ஆறு முப்பதுக்கே எழுந்து ஜாக்கிங் சென்று விடுவாள். ஆனால் இன்று போகவில்லை. இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் இப்பொழுது தான் எழுந்து வருகிறாள்.
" குட் மார்னிங் ஜோஹிம்மா. " என்க.
"என்ன மகாராணி இன்னைக்கி ரோட்டுல நின்னு டான்ஸ் ஆடப் போலயா. " என கேலியாகக் கேட்டு மகளின் கையில் சூடான காஃபியை தினித்தாள்.
" நோ ஜோஹிம்மா. மழ பெஞ்சிருக்கு. எனக்குக் கொஞ்சம் கோல்டா இருக்கு. ஹாச். " எனத் தும்பியபடி மூக்கைத் துடைக்க, ஜோஹிதா காஃபியை வாங்கிவிட்டு மிளகு பனங்கற்கண்டு போட்டுச் சூடாக பாலை கொண்டு வந்தது தந்தார்.
" தேங்க்யூ ஜோஹிம்மா. ஆமா கார்த்திப்பா எங்க.?" என்க.
" கார் ரிப்பேரா இருக்கு அத சரி பண்ணிட்டு இருக்கான். நீ என்ன பண்றன்னா..." என்றபடி திரும்பிப் பார்த்தால் மகளைக் காணும்.
"ஓடீட்டா கார்த்திக்க பாக்க. " என்றவள் வீட்டிற்கு வந்த கடிதங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்தாள்.
" குட் மார்னிங் கார்த்திப்பா. டர்மரிக் மில்க் வேணுமா?. " எனக் காரின் முன் பகுதியில் தலையை விட்டு நோண்டிக் கொண்டிருந்த கார்த்திக்கிடம் கேட்க,
" வேண்டாம் வாசு. ஏ குரல் ஒரு மாறி இருக்கு. சளி படிச்சிருக்கா!. " அக்கறையுடன் கேட்டான்.
" ஆமா கார்த்திப்பா. நேத்து நைட் மழை பெஞ்சதுல. அதுனால குளிர் ஜாஸ்தி. " என டம்ளரில் இருந்ததை தொண்டைக்குள் சரித்தாள்.
"மழைல நனஞ்சியா.! " எனக் கேட்டான் கார்த்திக்.
" லைட்டா. கார்த்திப்பா மேல பனியன் மட்டும் போட்டுட்டு இப்படி பேர்பாடியா வெளில நிக்காதீங்க கார்த்திப்பா. பாக்குறவங்க உங்க ஜிம்முக்கே போகாத ஸீடிப் பாடிய கண்ணு வைக்கிறாங்க. முந்தாநேத்து எங்கூட வேல பாக்குற ஒரு பொம்பள, உங்கள பத்தி துருவித் துருவி கேள்வி கேக்குது.
யாருடா அதுன்னு பாத்தா! நம்ம ஏரியாக்கு புதுசா குடி வந்திருக்காம். உங்கள அப்பப்ப பாத்து சைட் அடிச்சிருக்காம். இப்ப கூட எங்கையாது ஒளிஞ்சி நின்னு உங்கள பாத்தாலும் பாத்துட்டு இருக்கும்.
இனி இப்படிலாம் வெளில வராதீங்க. இல்லன்னா நா ஜோஹிம்மாட்டா கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி வரும். " என்றாள் வாசு.
வாசுவிற்கும் சரி ஜோஹிதாவிற்கும் சரி கார்த்திக்கை வேறு யாரும் ரசித்துப் பார்ப்பது பிடிக்காது. கார்த்திக்கை நடுவில் நிறுத்தி இருபுறமும் பாடி கார்ட்ஸ் போலத் தான் செல்வார். அப்படியொரு ஆண் அழகனா அவன்! எனக் கேட்டால்,
'எங்களுக்குக் கார்த்தி மட்டும் தா அழகு. ' என ஒரு சேர சொல்வர்.
" இங்க பாத்திங்களா கார்த்திப்பா. இது ஃப்ரெண்ட்ஷிப் பேண்டு. இப்ப நானும் ருத்ராவும் ஃப்ரெண்டு. நேத்து தா ஃப்ரெண்டானோம். நல்லா இருக்கா." எனக் கையில் இருந்த ரப்பர் பேண்டு போன்ற ஒன்றை காட்ட, கார்த்திக் திரும்பி அவளின் முகம் பார்த்தபடி அவளின் முன் வந்து நின்றான்.
" நீ இப்ப சொன்ன வாக்கியத்துல ஒரு வார்த்த மிஸ் ஆகுது. அது என்னன்னு தெரியுமா.?" எனக் கேட்க, வாசு அவனின் முகம் பார்க்க முடியாது, வேறெங்கோ பார்த்தபடி தடுமாறினாள்.
"தப்புன்னு உனக்கே தெரியுது. இல்லன்னா தைரியமா என்னோட முகத்தைப் பாத்து பேசிருப்ப. கரெட்டா!
மிட் நைட்ல வெளி போறது சரியா தப்பான்னு நா உனக்கு லெக்சர் எடுக்க விரும்பல. பட் நம்மோட பாதுகாப்ப நாம தா உறுதி படுத்தணும். தைரியம் நல்லது தா. ஆனா பின் விளைவுகள பத்தி யோசிக்காத அசட்டு துணிச்சல் என்னைக்குமே நல்லது இல்ல. நேத்து நைட் நீ போனது அப்படி தா.. " எனச் சற்று காட்டமாக.
"ஸாரி கார்த்திப்பா. இனி நா பத்து மணிக்குள்ள ரூம்க்குள்ள போய்டுவேன். அத விட்டு வெளில எங்கையும் போகமாட்டேன். ஸாரி. " என சின்னக் குரலில் சொல்ல, மகளின் வருத்தத்தைப் பொறுக்காத கார்த்திக்,
"ஒரு வழியா அவெங்கூட பழகலாம்னு முடிவு பண்ணிட்ட போலயே." என்க வாசு முகம் மலர்ந்தாள். அவனுக்குத் தெரியும் ருத்ராவை பற்றிப் பேசினாள் மகளின் முகம் மாறும் என்று. நேற்று நடந்ததை முழுதாகக் கூறினாள்.
" திடீர்னு ருத்ரா மேல இன்ட்ரஸ்ட் வரக் காரணம் என்ன. " எனக் கேட்க, அவள் டேனியலை பற்றி மட்டும் சொல்லாது தன்யாவை பற்றியும் கூறினாள்.
அவள் ருத்ராவுடனான நட்பைப் புதுப்பிக்க டேனியல் மட்டும் காரணம் அல்ல தன்யாவும் தான் காரணம். அதைப் பொறாமை என்று கூடச் சொல்லலாம்.
பொறாமையா!!.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..