அத்தியாயம்: 32
ஆம் பொறாமை தான்.
வாசுவி க்கா!!… தன்யா மீதா!!. எப்படி? என்பதை அறிய நேற்றைய அவர்களின் வருகையின்போது நடந்தவற்றை பார்க்கலாம்.
அனைவரும் மீட்டிங்கிற்கு செல்ல, வாசு, முரளி மற்றும் ராஜி தம்பதியினருக்கு தேவையானதை கவனித்துவிட்டு திரும்பும் போது தான் தன்யாவின் அறையைப் பார்த்தாள். யார் அது என்று தெரிந்து கொள்ள, அவளின் அறைக் கதவைத் தட்ட, 'கம்மின்' என்ற பதில் வந்தது.
‘அதா வரச்சொல்லிட்டாங்கள்’ல என கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவள் அன்றைய நாளில் முதல் முறையாகக் கீழே விழுந்தாள். அதுவும் தரையில் இல்ல. தன்யாவின் மேலேயே.
"ஏய்.!! யார் நீ?. எந்திரி. " என ஆங்கிலத்தில் படபடத்து தன்யா வாசுவை விலக்கிவிட,
தன்யா, " உன்ன யாரு உள்ள வரச் சொன்னா?. "
"மேம்!. நீங்க தா கம்மின் சொன்னிங்க. "
" ம்ச்... ரூம் சர்வீஸ் னா வெளில இருந்தே சொல்லிருக்கலாம்ல. வரச் சொல்லி இருக்க மாட்டேன். ச்ச… இப்ப எல்லாத்தையும் மறுபடியும் நா செட் பண்ணணும். வந்து ஹெல்ப் பண்ணு…" சோஃபாவிலிருந்து எழுந்தவள் சிறு கயிற்றை அவளிடம் கொடுத்தாள்.
அதை வாங்கிய வாசுவோ 'நல்லாத்தான நடந்து வந்தோம். எப்படி திடீர்னு கீழ விழுந்தோம். அதுவும் ஒரு பொண்ணு மேல எசக்கு பிசக்கா விழுந்திருக்கோம். எப்படி?. ' எனக் கதவையும் அவள் நடந்து வந்த பாதையையும் பார்க்க, விடை கிடைத்தது.
பாக்ஸிங் க்ளவுஸ் போட்ட ஒரு கரம் கதவைத் திறந்ததும் உள்ளே வருபவரைக் குத்தி தள்ளுவது போல் செட்டப் செய்யப்பட்டிருந்தது.
'நல்ல ஐடியாவா இருக்கே!. இத ஏ நம்ம ரூம்ல செஞ்சி பாக்க கூடாது. ' எனப் புன்னகையுடன் உஷா கீழே விழும் காட்சியைக் கற்பனை செய்து ரசித்தாள்.
" ஏய், என்ன முழுச்சிட்டு நிக்கிற!. வா. வந்து இந்தக் கயற கதவோட கை பிடில கட்டு. " என்றவள் மீண்டும் அதைச் சரியாக வைத்துவிட்டு வந்தாள்.
"மேம், இது பாதுகாப்பான ஹோட்டல் தான். நிறைய இடத்துல சீசிடீவி கேமராஸ் இருக்கு. டே அண்டு நைட்டா கண்காணிக்க செக்யூரிட்டி கார்ட்ஸ் இருக்காங்க. அதுமட்டுமில்ல இங்கருந்து கொஞ்ச தூரம் போனாலே ஒரு போலிஸ் ஸ்டேஷன் கூட இருக்கு. ரவுண்ட்ஸ்லாம் அடிக்கடி வருவாங்க. " என்க,
"அத எதுக்கு எங்கிட்ட சொல்ற?"
"இல்ல! திருடன பிடிக்கிற மாறி இந்தப் பொறி எல்லாம் தேவையே இல்ல. யாரும் உங்க ரூம்க்குள்ள வர முடியாது. நீங்க சேஃப்…ன்னு சொல்ல வர்றேன். "
"என்னோட பாதுகாப்புக்கு ஒன்னும் நா இத பண்ணல. என்னோட கசின்ன கவுக்கத்தா இத பண்றேன். அவெ வருவான். வந்து கதவ திறப்பாம். அந்த க்ளவுஸ் அவன தள்ளிவிடும். நில தடுமாறி வந்து சோஃபால உக்காந்திருக்குற எம்மேல வந்து விழுவான்.
அப்றம் ‘தந்தன தந்தன தாளம் வரும். புது ராகம் வரும்’ன்னு பின்னாடி பீஜீஎம் வரும், அப்பக் கண்ணும் கண்ணும் பாத்துக்கும், கை கையும் சேந்துக்கும், மொத்ததுல காதல் கண்ணாபின்னான்னு காத்துல பறந்து வரப் போது. " என எழுந்து நடமாட,
"மேம் எனக்கு ஒரு டவுட். "
" என்னாதது.?"
"அது, ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்தா வலி தான வரும். காதல் எப்படி வரும்.?" முக்கியமான சந்தேகம் அல்லவா!.
"இங்க வரும். இத்தன வர்ஷமா அப்படி தா சினிமால காட்டுறங்க. ஹீரோயின் கீழ விழப்பாப்பா, ஹீரோ தாங்கிப் பிடிப்பான். பாடியும் பாடியும் டச் ஆகும்போது ஹார்மோன்ஸ் எல்லாம் பட்டுனு வேல செஞ்சி பொட்டுன்னு லவ் வந்திடும். "
" ஆனா மேம்!!. "
"ஏ எப்பயும் கேர்ள்ஸ் தா கீழ விழணுமா. ஒரு சேஞ்சுக்கு ஹீரோ விழட்டும்னு பண்ணேன்.. போதுமா. "
' நல்ல ஐடியாவா இருக்கே. இந்த ஐடியாவால விழுந்து முதுகு தண்டு உடையப்போற இவளோட கசின் பாவம். ஆமா யாரா இருக்கும் அது?. இனிமே தா வருவாங்களோ!. தேவ்க்கு இவங்க எந்த வகையில ரிலேட்டிவ்?. சிஸ்டரா!. ' என யோசித்துக் கொண்டே நின்றவள் விடை பெற்றும் நேரம், கதவைத் தட்டப்பட்டது.
" வாவ்!! காதல் எப்படி வரும்னு கேட்டேல்ல. இப்ப அத லைவ்வா பாக்க போற. " என்றபடி சோஃபாவில் அமர்ந்து கொண்டு கம்மின் என்றாள் தன்யா ஸ்டெயிலாக.
' அப்ப என்னோட கண்ணு ரெண்டும் அவிஞ்சி போகப்போதுன்னு சொல்லுங்க. ' என நினைத்துக் கொண்டு நடக்க போவதை வேடிக்கை பார்த்தாள்.
கதவு மெல்ல திறக்கப்பட்டது. கதவில் கட்டியிருந்த கயிறு அந்தப் பாக்ஸிங் க்ளவுஸை விடுதலை செய்தது. ஆனால் யாரும் தன்யாவின் மேல் விழ வில்லை.
என்னாச்சி?
" அத்த என்ன செய்றீங்க?. " என்றபடி அந்த க்ளவுஸ்ஸை குனிந்து கொண்டு வந்தாள் ரோகிணி.
" குட்டி சாத்தான்!. உன்ன யாரு என்னோட ரூம்க்கு வரச் சொன்னா. " எனத் தன்யா கத்த, ரோகிணியின் முகம் சுருங்கியது.
"நா வரக்கூடாதா அத்த?. " என சின்னக் குரலில் கேட்க, வாசுவிற்கு பாவமாக இருந்தது.
"ஆமா வரக் கூடாது தா. பாக்குறதுக்கு கை கால் முளைச்ச கத்தரிக்கா மாறி இருந்துட்டு, பண்றது எல்லாம் முந்தரிக் கொட்ட வேல. உன்னால தா நா தேவ் பக்கத்துல ஃப்ளைட்லையும் உக்காரல. கார்லையும் உக்காரல. இல்லன்னா நானும் அவனும் கார்ல எப்படி என்ஜாய் பண்ணிட்டு வருவோம்னு தெரியுமா உனக்கு. நாலு நாள், நானும் அவனும் மட்டும்னு எவ்ளோ ப்ளான் போட்டேன்.
மூனடி உசரத்துல இருந்துட்டு. முழுசா என்னோட எல்லா திட்டத்தையும் கெடுத்துட்டு ‘நா வரக்கூடாதான்’னு பாவமா கேட்டா உன்ன தூக்கி வச்சி கொஞ்சிவாங்களாக்கும். " எனப் படபடவென சுடு வானலியில் போட்ட கடுகு போல் பொரிய,
சிறுமி அழுது கொண்டே வாசுவின் காலைக் கட்டிக் கொண்டாள். அவளைக் கைகளில் ஏந்தி கண்ணீரை துடைத்துவிட்டவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. எனெனில் அவளே அதிர்ச்சியில் இருந்தாள்.
'தேவ் இவளோட கசின்னா!! அவன கரெக்ட் பண்ணவா இந்தச் செட்டப்பு. இவா லவ் பண்றா! ஓகே. அவெ.!! அவனுக்கு இவா மேல இன்ட்ரஸ்ட் இருக்குமோ!. அதா நம்மல கண்டுக்காம இருக்கானோ.! ' என நினைத்தவளுக்கு காரணமேயின்றி கண்ணில் நீர் சுரக்க தொடங்கியது.
ஒட்டி உறவாடிக் காதல் பேசவில்லை என்றாலும் அவனை வேறொரு பெண்ணின் அருகில் பார்க்கும் அளவுக்கு அவளின் மனம் வலிமையானது இல்லை. இருவரும் அமைதியாக நிற்க,
"ரோகிணி!! எதுக்கு மா அழற.?" என்றபடி தேவ் வந்தான்.
" அங்கிள். " என வாசுவின் கையிலிருந்து அவனிடம் தாவ,
'ஐய்யையோ குட்டி சாத்தான் போட்டுக் குடுத்திடபோது. அதுக்குள்ள நாம எதாவது பண்ணனும். ' தன்யா.
"அது ஒன்னுமில்ல தேவ். அவளுக்கு ஃபோர் அடிக்கிதாம். எங்கையாது போலாமான்னு கேட்டு வந்தா, நா அப்றம் போலாம்னு சென்னேன். உடனே அழுக ஆரம்பிச்சிட்டா. அப்படி தான டி. " என விழியை உருட்டி முழிக்க, சிறுமி ஆம் எனத் தலையசைத்தாள்.
"இங்க உனக்கு விளையாட ப்ளே ஸ்டேஷன் இருக்கு ரோகிணி. இவங்க உன்ன இப்பவே கூட்டீட்டு போவாங்க. " என வாசுவை கைகாட்ட,
" எதுக்கு தேவ் அடுத்தவங்கள நம்பி நம்ம குழந்தைய விடணும். நாமலே பாத்துக்குவோம். வா நீயும் நானும் சேர்ந்து பாத்துக்குவோம். இப்பருந்து ப்ராக்டீஸ் பண்ணாத்தா, நாளைக்கி நமக்குப் பிறக்கப் போற குழந்தைய நீ பொறுப்பா பாத்துப்ப. வா தேவ். " என்றவளை முறைத்து பார்த்த அவனின் தோளில் கைபோட்டு இழுத்துச் சென்றாள் தன்யா.
குடும்பமாக மூவரும் செல்வதை பார்க்கையில் யாரோ வாசுவின் இதயம், பெரிய மலையைத் தூக்கி வைத்ததை போன்ற கனத்தை உணர்ந்தது. உடன் இந்தத் தேவ்வின் பாரா முகம் வேறு, அத்தோடு நான்ஸியின் முன் திட்டு வேறு, என எல்லாம் சேர்ந்து அந்த ராத்திரி வேலையில் பில்டிங் ஏறிக் குத்திக்க வைத்தது.
அவளுக்கு எப்படி தெரியும். இடத்தைக் காட்டி விட்டுத் தேவ் தன் வேலையை பார்க்கச் சென்றதும், தன்யாவும் ரோகிணியும் தனியாக விளையாண்டதும், ஹோட்டல் சீசிடீவி பதிவுகளின் மூலம் வாசுவின் நடவடிக்கைகளை நோட்டம் விட்டதையும் அவள் அறிய மாட்டாள்.
‘சிறு குழந்தையை அழ வைத்து விட்டோமே! என்ன மாறியான பிறவி நான்’ என்ற நினைப்பு தன்யாவை அந்தச் சிறு பெண் ரோகிணியுடன் சேர்ந்து விளையாட வைத்தது. சிறுமியின் அமைதியான முகமும், அழகான புன்னகையும் தன்யாவை கவர்ந்தது. இருவரும் சேர்ந்தே தான் இருந்தனர்.
"அந்தப் பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியல கார்த்திப்பா. ஆனா அவா ருத்ரா மேல கைய வைக்கும்போது பறந்து பறந்து அவள அடிச்சி பேப்பர் மாறிக் காத்துல கொஞ்ச நேரமாது சுத்த விட்டிருக்கணும்னு தோனுச்சி. பட் முடியல. என்ன பண்ணலாம் கார்த்திப்பா.? " என்க கார்த்திக் சிரித்தான்.
"நம்ம கடைக்கி வேணும்னா கூட்டீட்டுவா. எதாவது செஞ்சி குடுப்போம். அப்றம் உனக்கு ரூட்டு க்ளியர் ஆகிடும். " எனக் கண்சிமிட்டி சொல்ல,
"இல்ல கார்த்திப்பா. ருத்ரா எனக்கு க்ரெஸ் மட்டும் தா. அதுக்கு மேல வேணாம். நம்ம குடும்பத்துக்குச் செட் ஆக மாட்டான். சைட் அடிச்சி பழகுறதோட நிப்பாட்டிக்கிவோம். " எனக் கார்த்திக்கிடம் சொல்வது போல் அவளுக்கு அவளே சொல்லிக் கொள்ள, கார்த்திக் அமைதியாகப் புன்னகைத்தான். அவனுக்குத் தெரியுமே மகளின் மனத்தை.
இருவரும் கதை பேசியபடி கேராஜ்ஜை சுத்தம் செய்து கொண்டிருக்க, வாசுவின் ஃபோனுக்கு ‘மெஸ்ஏஜ் வந்துள்ளது’ என்று ஒரு சத்தம் சொல்லியது.
அதைக் கண்டவளின் முகம் மலர்ந்து போனது. குறுஞ்செய்தி அனுப்பியது தேவ்வாயிற்றே!. அதைப் படித்துக் கொண்டிருந்தவள் கார்த்திக்கின் முகம் பார்க்க, அவனின் உதடுகள் குறுஞ்சிரிப்பில் விரிந்தன.
"ஜஸ்ட்ட க்ரெஸ் தா?. இல்ல!!. " என்க.
"கார்த்திப்பா.!! " எனச் சிணுங்கிக் கொண்டே உள்ளே சென்றாள் வாசு. கையில் ஃபோனுடன் தான்.
விரல்கள் அந்த லெட்டர் போர்டில் வித்தைகளைக் காட்ட, கண்கள் ஆனந்தத்தில் பேசின. உதடுகளில் கள்ளச்சிரிப்பு பூக்க, இருவரும் தங்கள் காதலை ஃபோனில் வளர்த்துக் கொண்டிருந்தனர். ஸாரி நட்பு.
‘வாசு தலைய தூக்கி முறைக்கிறாப்பா’.
வேகமாக டைப் செய்து கொண்டிருந்தவளின் கரத்திலிருந்து ஃபோன் பிடுங்கப்பட்டது.
'என்ன ஃபோன காணும். யார்ரா அது.' எனப் பார்க்க, அங்கு ஜோஹிதா கோபமாக முறைத்துக் கொண்டு நின்றாள்.
"என்னடி இது.?" எனச் சில காகிதங்களுடன் நின்றாள் ஜோஹிதா.
"லெட்டர் ஜோஹிம்மா. உங்களுக்குப் படிக்க தெரியாதா.!! " என விளையாட்டாகக் கேட்டவள், வந்த பார்ஷலை பார்த்துத் தன் விளையாட்டை நிறுத்திக் கொண்டாள்.
"ம்மா, அது ஜஸ்ட்ட பேப்பர்ஸ் தா. நா இன்னும் அதுல சேரல. " என்க.
"ஏ சேந்ததுக்கு அப்றம் சொல்ல வேண்டியது தான. இல்ல எல்லாம் முடிஞ்சதுக்கு அப்றம் சொல்ல வேண்டியது தான. உனக்குப் பெத்தவங்க நாங்க உயிரோட இருக்காங்கங்கிற நினைப்பு இருக்கா இல்லையா. எல்லாத்தையுமே உன்னோட இஷ்டத்துக்கு தா பண்ணுவியா. " என கோபமாகத் திட்ட, உஷா வந்தார். வந்தவர் ஜோஹிதாவின் கையில் இருந்ததை வாங்க படித்து விட்டு வாசுவை திட்டத் தொடங்கினாள்.
'சும்மாவே நா பண்ண வேலைக்கி எங்கம்மா டான்ஸ் ஆடுவாங்க இதுல இந்த ஆன்டி வேற வந்து மோளம் வாசிக்க வந்துட்டாங்களா!. எங்க நம்ம ஆபத்துதவி. ' என முருகனையும் கார்த்திக்கையும் கண்களால் தேட, அவளின் கொட்ட நேரம் யாருமே வர வில்லை. இருவரும் சேர்ந்து வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டனர் வாசுவை சில நிமிடங்களுக்கு.
அதுவரை அமைதியாகத் திட்டுக்களை வாங்கிக் கொண்டவள், உஷாவின் ஒரு வார்த்தையால் கோபம் கொண்டு திருப்பி இருவரிடமும் வாக்கு வாதம் செய்யத் தொடங்கினாள்.
"ஏ நடுவீட்டுல நின்னு சண்ட போட்டுட்டு இருக்கிங்க.? என்னாச்சி ஜோஹிதா.?" என்றபடி கார்த்திக் உள்ளே வர, ஜோஹிதா அவனின் முன் நின்றாள்.
"இங்க பாரு கார்த்திக், உன்னோட பொண்ணு பைலட் ஸ்கூல்ல சேந்து பைலட் ஆகப்போறாலாம்." என வந்த கொரியரை காட்ட, கார்த்திக்கின் புருவங்கள் முடிச்சிட்டன. ஏனெனில் அவனிடம் கூட அதைப் பத்தி வாசு சொல்லவில்லை.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..