முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 33

அத்தியாயம் ‍: 33


"கார்த்திப்பா எனக்குப் பறக்கணும்னு ஆச. அதா ஃப்ளைட் ஓட்டச் சொல்லித்தர்ற ஸ்கூல்ஸ்ல பத்தி என்னோட ஃப்ரபசர்ட்ட கேட்டிருந்தேன். அவரு சஜஸ் பண்ண ஸ்கூல்லோட லிஸ்ட் தா இது.


ஜஸ்ட் என்கொரி பண்ணத்த கேட்டேன். கொஞ்ச நாள் கழிச்சி உங்க கிட்ட சொல்லிப் பர்மிஷன் வாங்கிட்டு சேரலாம்னு நினைச்சேன். ஆனா இவங்க ரெண்டு பேரும் ஓவர இமாஜின் பண்ணி பேசுறாங்க. " 


" கார்த்திக் நமக்கு இருக்குறது ஒரே பொண்ணு. அவளை எப்படி ஃப்ளைட் ஓட்ட அனுமதிக்க முடியும்!. டெய்லி ஒரு நியூஸ் வருது, ஃப்ளைட் க்ராஷ் பத்தி. அது ரிஸ்க் இல்லையா!. " ஜோஹிதா.


"கார்த்திக், அதுமட்டுமில்லை ஃப்ளைட்லாம் பொம்பளப்பிள்ளைங்க ஓட்டுற பொருளா என்ன?. அவளுக்கு‌‌ தக்குன மாதிரி ஸ்கூட்டரு காருன்னு ஓட்டக் கத்துக்க சொல்லு. அது தான் நாளைக்கு அவளுக்குப் பிறக்கப்போற பிள்ளைங்களை ஸ்கூல்ல கொண்டு போய் விடவும் கூப்பிட்டுடு வரவும் உதவியா இருக்கும். அதை விட்டுட்டு பறக்கப் போறாளாம்ல! பறக்க.! பொட்டப்பிள்ளைக்கு எதுக்குடி இதெல்லாம். " என உஷா சொல்ல வாசுவிற்குச் சுளீர் எனக் கோபம் வந்தது.


ஒரு வேலையைச் செய்யாதே அதில் ஆபத்து உள்ளது என்று கூறி மறுத்தால் கூட வாசு யோசிப்பாள். ஆனால் பாலின பாகுபாடு பார்த்துப் பெண் என்ற காரணத்திற்காகத் தடை போட்டால் அவளுக்குக் கோபம் அதிகமாக வரும்.


" முதல்ல ஒரு பொம்பளப்பிள்ளைங்க எதெல்லாம் செய்யணும் செய்யக்கூடாதுன்னு யாரு எழுதி வச்சான்னு சொல்லுங்க. ஆம்பளை பொம்பளைண்டு. நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க. கீமூல கூடப் பொண்ணுங்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனா வளந்துட்டோம்னு சொல்லிக் குதிக்கிற இந்தக் காலத்துல பாகுபாடு பாத்திட்டு இருக்கிங்க. ஆண்களுக்கு நிகராக எல்லாத்தையும் நின்னு செய்யப் பொண்ணுங்களால முடியும்.


ஏன் பொண்ணுங்க ஃப்ளைட் ஓட்டி நீங்கப் பாத்ததே இல்லையா!. ஆர்மீல இருக்குற ஜெட் விமானத்துல இருந்து நர்மலான சிங்கிள் இன்ஜின் ப்ளைட் வரைக்கும் இப்ப பொண்ணுங்க எல்லாத்தையும் ஓட்டுறாங்கா. எனக்கு ஆசை. நான் பொண்ணுங்கிறதுனால என்னோட ஆசை நிகராகரிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல." என்க, உஷாவும் ஜோஹிதாவும் சேர்ந்து அவளுடன் வாக்குவாதம் செய்ய,


‍மகளின் பேச்சு வேறு ஒருவரை நினைவு படுத்தியது கார்த்திக்கிற்கு. உஷாவின் பேச்சு வாசுவை காண்டாக்க,


" உங்க அறிவுரை எல்லாத்தையும் உங்க பையங்கிட்ட மட்டும் வச்சிக்கங்க. எனக்கு உண்டானதைக் கார்த்திப்பாவும் ஜோஹிதாம்மாவும் பாத்துப்பாங்க. நீங்க அதுல தலையிடாதீங்க. " என வாசு காட்டமாகப் பேச.


"வாய் மூடு வாசு. யாரை எடுத்தெரிச்சி பேசுற. அடி வாங்க போற நீ. " என ஜோஹிதாவும் பதிலுக்குக் கத்த, வாசு சற்று அமைதியாக இருந்தாள். வீடு மீண்டும் சந்தைக் கடைபோல் கூச்சலும் குழப்பமும் நிறைந்த இடமாய் மாறியது.


"என்ன இருந்தாலும் ஆம்பளை பண்ற வேலையை ஆம்பளைதா பாக்க முடியும். பொம்பளையால பண்ண முடியாது. ஆசை கீசன்னு கண்டபடி உளறாம வீட்டுல பாக்குற பையனைக் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகுற வழிப்பாரு. " என்றார் உஷா.


அவர் சிபாரிசு செய்த அனைத்து பையன்களையும் வாசு நேரில் சென்றுக் கூடப் பார்க்காது அவாய்ட் செய்ததால் சில காலமாகவே வாசு உடன் ஒத்து போகவில்லை. அதான் கிடைத்தது சான்ஸ் என ஜோஹிதாவுடன் சேர்ந்து கொண்டாள். ஆனாலும் வாசு விடவில்லையே.‌


" அப்படி என்னத்தை ஆம்பளைச் செய்றதை எங்களால செய்ய முடியாம போயிடுச்சி. " 


" ஆம்பளைச் சட்டையில்லாம எங்கனாலும் போவான். உன்னால முடியுமாடி. "


"இன்னும் எத்தனைக் காலத்துக்கு தான் இப்படியொரு கேவலமான கேள்வியைக் கேட்டுட்டு இருக்க போறிங்க. பதில் சொல்ல முடியாதுங்கிறதுக்காகக் கேக்குறீங்களா?. பதில் சொல்ல மட்டுமில்லை செய்யவும் முடியும். சும்மா ஒரு அர்த்தமில்லாததைப் பேசிட்டு இருக்காதிங்க.


போய் நம்ம கோயில் சிலைல பாருங்க. அந்தக் காலத்துல உங்களை மாறியான ஆட்கள் கம்மியா இருந்திருப்பாங்க போல. ஆம்பளைப் பொம்பளைன்னு கோடு போட்டுப் பிரிச்சி வைக்க. தாய்க்கும் தாரத்துக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவு ஜீவிங்க தான் இந்த மாதிரி ஒரு கேள்வி கேக்கும். மூளையில்லாத முட்டாள். " எனபீ பதிலுக்குப் பதில் பேச, உஷாவிற்குக் கோபம் வந்துவிட்டது.


"ஜோஹிதா உம்பொண்ணுட்ட சொல்லி வை. ரொம்ப அதிகமா பேசுறா. "


"நீங்கப் பேசுறதை விட நான் கம்மியாத்தா பேசுறேன் ஆன்டி. ஃப்ரெண்டு வீடுன்னா ஒரு கெஸ்ட்டா வந்துட்டு கெஸ்டாவே போய்டணும். அதை விட்டுட்டு வீட்டுக்குள்ள வந்து ஓட்ட அதிகாரம் பண்ண கூடாது. " என வாய்த்துடுக்குடன் பேச, ஜோஹிதா வாசுவை அடிக்கக் கை ஓங்கி விட்டாள். ஆனால் அடி அவளுக்கு விழவில்லை. விழுந்தது கார்த்திகேயனின் மீது. இருவருக்கும் நடுவே வந்து நின்று கொண்டான் அவன்.‌


" என்ன ஜோஹிதா பண்ற? " என காட்டமாகக் கேட்டான் கார்த்திக்.


"கார்த்திக் அவள் என்ன பேச்சு பேசுறா பாரு. நமக்கு இக்கட்டான சூழ்நிலைல உதவி செஞ்சது உஷா தான். அவளைப்போய் வாய்க்கு வந்த படி பேசுறா பாரேன். " என்றவள்,


" வாசு பேசுறதுல எனக்கு எதுவும் தப்பா தெரியலையே ஜோஹிதா. முதல்ல பேச்சைத் திசை மாத்தி விட்டது உஷா தான். ஏன் உஷா ஆம்பளை பொம்பளைன்னு பிரிச்சி பேசுற. நான் உங்கிட்ட பல தடவ சொல்லிட்டேன். வாசு கிட்ட 'நீ பொண்ணுங்கிறதுனால இத செய்யாதை.'ன்னு சொல்லாதே. அதுல இருக்குற கஷ்டங்களைப் பத்தியும் ஆபத்தைப் பத்தியும் மட்டும் பேசிப் புரிய வைன்னு. இந்தக் காலத்துல மட்டுமில்லை எந்தக் காலத்துலயும் பொண்ணுங்க ஆம்பளை பசங்களுக்கு சலச்சவங்களா இருந்தது இல்லை."


"இப்ப நாம ஆண் பெண்ணு பாலின பாகுபடப்பத்தி பேசலை. நம்ம பொண்ணப் பத்தி பேசலாமா!. " ஜோஹிதா. இன்னும் காட்டமாகவே நின்றார்.


" இதுல பேச என்ன இருக்கு. அவளுக்கு எது சரின்னு தோணுதோ. அதைச் செய்ய அவளுக்கு உரிமை இருக்கு. நீயோ இல்ல நானோ அதுக்குத் தடையாக இருக்க கூடாது. இருக்க விடமாட்டேன். அவளோட ஞாயமான ஆசையையும் கனவையும் நிறைவேற்றத் தான் அப்பா அம்மான்னு நாம இருக்கோம்." என்றான் கார்த்திக்.


"கார்த்திக் நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளேன். " என்க, பேசியது போதும் என்பது போல் கையை உயர்த்தியவன் அவளை அழுத்தமான ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான். ஜோஹிதா எதுவும் பேசவில்லை. உறைந்து போய் நின்றிருந்தாள்.


'அவ்வளவு தான் என் பேச்சிற்கு நீ தரும் மதிப்பா. நான் பேசக் கூட இல்லையே. ' என்றிருந்தது ஜோஹிதாவிற்கு. தாயைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இப்போது சென்று சமாதானம் செய்தால் உஷாவின் அக்னி காற்றில் அவிந்து போக நேரிடும். எனவே கார்த்திக்கின் பின்னாலேயே மகளும் சென்று விட்டாள்.


" என்னடி இது?. நீ அவனோட வைஃப் தான. அவள் உனக்கும் பொண்ணு தான. ஏன் உனக்கான மரியாதையைக் கார்த்திக் கொடுக்க மாட்டேங்கிறான். நானும் உன்னை பல வர்ஷமா பாக்குறேன். வாசுன்னு வரும்போது மட்டும் கார்த்திக் ரொம்ப வித்தியாசமாக நடந்துக்கிறான்." என்றவர் ஜோஹிதாவின் வாடிய முகம் பார்த்து,


" நீ நல்லாத் தான இருக்க ஜோஹி. கார்த்திக் உன்ட்ட நல்ல ஹஸ்பென்ட் மாதிரித் தான நடந்துக்கிறான். " உஷா சந்தேகமாக.


இந்தச் சந்தேகம் அவருக்கு எப்பொழுதும் உண்டு. கார்த்திக் வாசுவிற்கு தரும் முக்கியத்துவத்தை மனைவிக்குத் தருவதில்லையோ! ஏன்? என்ற சந்தேகம் தான் அது.


" ஏன் உஷா இப்படி பேசுற. அவன் மகள் மேல இருக்குற பாசத்துல அப்படி பேசீட்டு போறான். மத்தபடி ஒன்னுமில்லை. " எனத் தனக்கு தானே சமாதானம் சொல்ல.


" மகள் மேல பாசம் இருக்க வேண்டியது தான். அதுக்காகக் கண்மூடித்தனமா இருக்க கூடாது. உன்னால தான் அவனுக்கு மகள்ன்னு ஒருத்தி கிடைச்சிருக்காள். அதுக்காகவாது உன்னோட பேச்சைக் காது கொடுத்துனாலும் கேட்டிருக்கலாம். ஆனா கார்த்திக் வாசு விசயத்துல கன்டரோல்லயே இல்லாம இருக்கான். ஏன் தான் இப்படி இருக்கானோ.


அவனுக்காக அம்மா அப்பான்னு எல்லாத்தையும் விட்டுடு ஊர விட்டு வந்தவ நீ‌. உனக்காக அவன் இதுவரைக்கும் எதுவும் செஞ்சி நான் பாத்தது கூட இல்லை. ஏன் கல்யாண நாளன்னைக்கி கூட உன்னைத் தனியா எங்கையும் கூட்டீட்டு போனது இல்லை. நீயும் அவனும் வாசு இல்லாம தனியா ஜோடி போட்டு எங்கையும் போனது இல்லை. எனக்கு என்னமோ ‘நான் சந்தோஷமா இருக்கேன்’னு உன்னை நீ‌யே ஏமாத்திக்கிறியோன்னு தோணுது‌.


நிஜமாகவே நீங்க மூணு பேரும் வித்தியாசமான விசித்திரமான குடும்பம் தான். " என்றுச் சொல்லிச் செல்ல,


" உஷா, ஸாரி. நான் வாசுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன். " எனக் கலங்கி பேச.


" அவளுக்காக நீயெல்லாம் கேக்க வேண்டாம். அவளே வந்து பேசவா கழுதை எங்க போய்டப்‌போது. இராத்திரி எங்க வீட்டுல தான் வந்து கிடப்பா. அவள் மாமா கையால சோத்தை முழுங்குனாத்தா வயிரே நிறையும் அவளுக்கு. எனக்கு என்ன கவலன்னா அந்தாளு வந்து என்ன கோபமா திட்டுவான். அது தான். வேற ஒன்னும் கிடையாது.


இந்தா, இது உங்கம்மா வீட்டுல இருந்து உனக்கு அனுப்புன புடவை. அடுத்த மாசம் தீபாவளி வருதுல்ல அதுக்கு ஆன்லைல ஆர்டர் போட்டு அனுப்புனாங்க. அதைக் கொடுக்க தான் காலங்காத்தாலயே வந்தேன்.‌ இல்லைன்னா வந்து உம்மகள் கிட்ட வாங்கிக் கட்டிருக்க மாட்டேன். "


"ரொம்ப தேங்க்ஸ் உஷா. அப்றம் ஸாரி. " என்க,


"அடி வாங்கப் போற. "


"இருந்தாலும். "


"விடுடி. நான் வாரேன். " என்றவர் சென்று விட்டார்.


இருபத்தி ஓர் ஆண்டுகள் முழுதாக முடிந்து விட்டது. தன் அன்னையையும் தந்தையையும் பார்த்து, தனக்கு உடன் பிறந்த அண்ணன் ஒருவன் உள்ளான் என்பதையே மறந்து விட்டாள் ஜோஹிதா. அவனின் திருமணம். குழந்தை. தந்தையின் மரணம் என எதற்கும் அவள் இந்தியா திரும்பிச் சென்றதே இல்லை.


எல்லாம் கார்த்திக் தான் என்று வந்துவிட்டாள். ஆனால் இந்தக் கார்த்திக்கோ மகள் மகள் என அவளை மட்டுமே முன்னிருத்தி யோசிப்பது போல் தெரிகிறது.


ஜோஹிதாவைக் கார்த்திக் தாய் தந்தையைப் பார்க்கக் கூடாது என்றும் அவர்களுடன் பேசக் கூடாது என்றும் சொன்னதே இல்லை. அவளாகத்தான் விலகி இருக்கிறாள்.


ஒரு முறை அவளின் அண்ணன் தர்ஷனை கலிபோர்னியாவில் பார்க்க நேர்ந்தது. அவனிடம் அவள் சென்று பேசவில்லை. பார்க்காதது போல் இருந்துவிட்டாள். ஆனால் தர்ஷன் கண்டு கொண்டான் ஜோஹிதாவை. அவளிடம் பேச முயன்றபோது திட்டி அனுப்பி விட்டாள் ஜோஹிதா. அவளின் இருப்பிடமும் அவளின் தோழி உஷாவையும் தெரிந்து கொண்டவன், தங்கையை வருடம் ஒரு முறை வந்து தூரமாக நின்று பார்ப்பான். அவளுக்கு விசேஷ தினங்களில் எதாவது ஒரு பரிசை அனுப்புவது அவனின் வழக்கமாகிப் போனது. அவளின் விலாசத்திற்கு அனுப்பினால் கார்த்திகேயனின் கோபத்திற்குத் தங்கை ஆளாக நேரிடுமோ என்பதால் உஷாவின் இல்லத்திற்கு அனுப்புவான். இன்று வந்ததது புடவை.


புடவை தான். அழகிய பட்டுப்புடவை. விலை அதிகம் தான்‌. தங்கமும் வெள்ளியும் சரிகையாக வார்க்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது அது. அதைத் தடவி அதன் மென்மையை உணர்ந்தவள். வேக வேகமாகச் சென்று அங்கிருக்கும் டொனேஷன் பாக்ஸில் அந்தப் புடவையைப் போட்டுவிட்டு வந்தாள்.


ஏன்?.


அதை மட்டும் அல்ல. அதற்கு முன் வந்த அனைத்து பொருளும் அந்தப் பெட்டியில் தான் போடப்பட்டது. அவள் அதை உபயோகித்தே இல்லை. வேண்டாமென உஷாவின் கைகளிலேயே கொடுத்து, தர்ஷனை எனக்காக அனுப்ப சொல்லாதே என்று சொல்லலாம் தான். ஆனால் அதற்காக உஷாவிடம் விளக்கம் சொல்ல வேண்டி வரும். அதற்கு அவளும், நன்மைக்கி‌ சொல்கிறேன் என்று அட்வைஸ் வழங்குவார். எதற்கு? என்று சத்தம் இல்லாமல் வாங்கி அதை இப்படி யாருமற்றவர்களுக்கு கடுத்து விடுவாள்.


ஏன் குடுத்தினரின் மீது அத்தனை வெறுப்பு?. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்.


இந்த ஜோஹிதா கார்த்திக்கின் கணவன் மனைவி என்ற உறவு இடியாப்பத்திற்குள் மாட்டிக் கொண்டது போல் சிக்கலாகவே இருக்கிறது‌‌. இத்தனைக்கும் இவர்கள் காதலர்கள். ஹீம்.


பார்போம். யாருக்கு யாரின் மீது நேசம் பிறக்கும் என்று.

 தொடரும் ...



கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...