முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 36


 

அத்தியாயம்: 36


"வாசு... வாசு… என்னோட கைய யாரோ சுரண்டுற மாதிரி இருக்கு. " என்றாள் தன்யா வாசுவின் காதருகில்.


" நீ என்ன லக்கி ட்ரா கூப்பன்னா?. சுரண்டிச் சுரண்டி அதிஷ்டத்த பரிசோதிக்க. " என்றவளின் குரலில் விளையாடாதே தன்யா என்ற பொருள் இருந்தது.


" ம்ச்... வாசு நான் பொய் சொல்லல. நான் பாக்காத நேரம் அந்தாளு என்னைப் பாக்குறான். நான் பாத்தா திரும்பிங்கிறான். "


"உங்கூட அவனுக்கு விளையாடணும்னு தோணுது போல. நீங்க அந்தப் பக்கமா ஓரமா போய் விளையாடுங்க. எங்கள டிஸ்டப் பண்ணாதிங்க. நாங்களே தி கிரேட் கிரிகாலான் அளவுக்கு இல்லன்னாலும் ஓரளவுக்கு தான் இந்த மேஜிக் ஷோ இருக்கேன்னு சோகமா பாத்துட்டு இருக்கேன். இதுல நீ ‌வேற. "


தன்யா திரும்பி அந்த ஆடவனைப் பார்த்தாள். அத்தனை நேரம் அவள் பக்கம் திரும்பியிருந்த கழுத்து இப்போது வேறு பக்கம் திரும்பிக் கொண்டது.


"வாசு... வாசு… இப்ப அவெ என்னைப் பாத்தான். ஆனா நான் பாக்கவும் திரும்பிட்டான். " என அவசர அவசரமாகச் சொல்ல, வாசு எட்டி பார்த்தாள். முகம் சரியாக அந்த இருளில் தெரியவில்லை.‌


" யாருன்னு எனக்குச் சரியா தெரியலயே. " 


"நான் தேவ்க்கு கூப்பிடுறேன். " என ஃபோனை எடுக்க.


"வேணாம் தன்யா. இந்தச் சின்ன விசயத்துக்காகல்லாம் அவர எதுக்கு கூப்பிடணும். நீ இந்தப் பக்கம் வா. " என்க, தன்யா சற்று யோசித்து விட்டு,


"இல்ல நான் மேனேஜ் பண்ணிப்பேன். " என்றவள் மீண்டும் திரும்பி அவனைப் பார்த்துவிட்டு வாசுவின் பக்கம் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.


அதன் பின் ஷோ முடியும் வரை எந்தத் தொந்தரவும் இல்லை. ஒரு வேளை பிரம்மையோ என்று கூடத் தன்யாவிற்குத் தோன்ற ஆரம்பித்தது. எனவே அதை மறந்து என்ஜாய் செய்தாள்.


ராஜியையும் முரளியையும் ஹோட்டலுக்கு காரில் ஏற்றிவிட்டவள் தன்யாவைத் தன்னுடன் ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் சென்றாள்.


" ஹோய் வாசு, ஷோ ‌எப்படி இருந்தது? " வில்லியம்.


"கொஞ்சம் மொக்க தான். பட் ஒருக்க பாக்கலாம்." 


"ஆனா அத பண்ற மேஜிஸ்ஸியன் அழகா இருந்தான். பெரிய பெரிய தொப்பி, ப்ரவுன் ஐஸ், ப்ளாக் ஹெர். பாக்கவே செம்மையா இருந்தான். கைய அசச்சி அந்தத் தொப்பிக்குள்ள இருந்து முயல எடுக்கும்போது, ப்பா… அவெ குடுத்து எக்பிரஸன் இருக்கே. வாவ்… நானே எங்கையால முயலத் தூக்குனமாறி ஃபீல் குடுத்துச்சி. ஹிம்... ஒரு நாள் அவெங்கூட டேட்டுக்கு போனா எப்படி இருக்கும்? " எனத் தன்யா பெருமூச்சி விட,


" உனக்கு யார சைட் அடிக்கிறதுன்னு வரமொற எல்லாம் கிடையாதா தன்யா. அந்தாளுக்கு வயசு அறுபது இருக்கும். நீ போய் அந்தாள டேட்டுக்கு கூப்பிட்டா அடுத்த நிமிடமே அவன் டெத் பாடி தான். " வாசு.


" ஒருத்தர் கூட பேசிப் பழக வயசு முக்கியமா என்ன? இப்ப நம்ம கார்த்தி அங்கிளயே எடுத்துக்க, பாக்க செம்மையா இருக்காரு. ஒரு பொண்ணுக்கு அப்பான்னு சொன்னா நம்புவாங்களா என்ன? ம்... மாட்டாங்க. கார்த்தி அங்கிள் நீங்க எப்ப ஃப்ரீ. நாம ரெண்டு பேரும் அவுட்டிங் போகலாமா? " எனக் கார்த்திக்கின் கரம் கோர்த்துக் கொண்டு கேட்க,


வாசுவும் ஜோஹிதாவும் முறைத்துப் பார்த்தனர் தன்யாவை. ருத்ராவை அணைத்து நின்று பேசியபோது வந்த கோபம் எல்லாம் சும்மா என்பது போல் இருந்தது கார்த்திகேயனின் கரத்தைப் பற்றி நின்ற தன்யாவின் மீது வந்த கோபம்.


"உங்களுக்குச் சூப்பர் ஸ்டார் மூவி பிடிக்கும்ல. நாளைக்கி நாம தியேட்டர் போலாமா? " எனக் கேட்க,


"போலாம் போலாம். நீ தனியா போ. நானும் கார்த்திப்பாவும் தனியா போய்க்கிறோம். அதுமட்டுமில்லாம கார்த்திப்பா கமல்ஹாசன் ஃபேன். சோ வரமாட்டாரு. " என்றவள் வெடுக்கெனத் தன்யாவின் கரத்தைப் பிரித்து எடுத்து இழுத்துச் சென்றாள்.


"அவரு ரசிகர்னா இவரு படத்தப் பாக்க மாட்டாரா! கார்த்தி அங்கிள்‌ கேள்வி உங்க கிட்ட‌‌ கேட்டேன். பதில ஏன் இவ சொல்றா.‌" என வம்பு செய்தாள் தன்யா.


ஒரு மணி நேரத்திற்கு மேல் தன்யா இவ்விடத்தில் கலகலத்து விட்டு புறப்படத் தயாராக இருந்த நேரம் ஒரு க்ரே டீசர் அணிந்து மேலே ஓவர் கோர்ட் போட்டு முகத்தைக் கேப் வைத்து மூடிய ஒருவன் உள்ளே வந்தான்.


"ஹேய் தன்யா. க்ரே டீசர்ட். உன்னைச் சொரண்டி பாத்தவெ அவனா பாரு." என வாசு காட்ட, ஒரு ஜாடையில் அவனைப் போல் தான் தெரிந்தது.


" கன்ஃபாம்மா தெரியல. அவனா இருக்க வாய்ப்பு இருக்கு. " என்றது தான் தாமதம் வாசு ஆர்டர் எடுக்கிறேன் என்ற பெயரில் அவனிடம் செல்ல, அவன் தன் கேப்பைக் கலட்டி,


" ஹாய் வாசு. எப்படி இருக்க?" எனக் கண்சிமிட்டி கேட்டான் டேனியல்.


"டேனி... வாவ்… எவ்ளோ நாள் ஆச்சி உன்னைப் பாத்து. நேத்து ஃபோன்ல பேசும்போது கூட ஒன்னுமே சொல்லல. எப்ப வந்த மேன் நீ?" என அணைத்துக் கொண்டாள் வாசு.


" வீக் எண்டுல வரலாம்னு தான் நினைச்சேன். பட் வெர்க் இருக்கு. அதா உன்னைப பாத்துக்கு போலாம்னு வந்தேன். " என்றவனின் பார்வைத் தன்யாவிடம் இருக்க, வாசு அறிமுகம் செய்தாள்.


"ஹேய், திஸ் இஸ் தன்யா. என்னோட நியூ ஃப்ரெண்ட். "


"ஓ… உனக்கு ஃப்ரெண்டுன்னா இனி எனக்கும் ஃப்ரெண்டு தான். ஹாய், ஐ ஆம் டேனியல். " எனக் கரம் நீட்ட அதை அவள் பற்றாது நின்றாள். ஆனால் வாசு அவனின் கரம்பற்றிக் கொண்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தாள் உற்சாகமாக.


தினமும் ஃபோனில் பேசினாலும் வாரம் ஒரு முறை அவளைப் பார்க்க வந்துவிடுவான் டேனியல். அவனுக்குக் கார்த்திக்கின் குடும்பம் மிகவும் பிடித்திருந்தது. சொல்லப் போனால் அவர்கள் குடும்பமாக வாழ்வதே பிடித்திருந்தது.


'எப்படி அவனுங்க மட்டும் ஃபேமிலியா வாழுறானுங்க. நாமலும் தெரிஞ்சிக்கணும். ' என்பதற்காகவே வருவான்.


"வில், டேனிக்கி நம்ம ஸ்பெஷல் ஐட்டத்த எடுத்துட்டு வா. " எனக் குரல் கொடுத்தவள் உள்ளே‌ அவனுக்கு எனப் பதார்த்தங்களை எடுக்கச் சென்றாள்.


நண்பனைப் பார்த்த சந்தோஷத்தில் தன்யாவை மறந்து விட்டாள். நம் தன்யா டேனியல் கரம் நீட்டியதும் கடையைக் காலி செய்துவிட்டு வெளியே செல்ல,


"தயா... தயா... ப்ளிஸ் நில்லு. நா உன்னைப் பாக்கத்தா வந்தேன். தயா நில்லு. " எனக் கத்தியபடியே வெளியே சென்றான். அவள் நிற்கவில்லை. கண்ணில் நீர் வடிந்துக் கொண்டே இருந்தது.


"தயா நில்லு. " எனக் கரம்பற்றி இழுக்க, அது அவனின் கன்னத்தில் ஆழமாகப் பதிந்து நின்றது.


ஒரு அடியோடு அல்ல. மாறி மாறிப் பல அடிகள் விழுந்தது டேனியலுக்கு.


" எம்முன்னாடி வர உனக்குத் தைரியம் எப்படி வந்துச்சி. சீ. உன்னை என்னோட‌ வாழ்நாள்ல பாக்கவே கூடாதுன்னு இருந்தேன். ***" என அவனை அடித்து விட்டு இவள் அழ.


"தயா அழாதா பிளீஸ். எனக்கு… எனக்குக் கஷ்டமா இருக்கு.‌" என அவளின் தோளில் கைப் போட, மீண்டும் அடிக்கத் தொடங்கினாள் ஆவேசமாக.


"தொடாத… என்ன தொடாத. அருவருப்பாக இருக்கு. தொடாத. தள்ளி நில்லு. தள்ளி நில்லு. " எனக் கத்த,


" தயா ஸாரி. எதுக்கு நீ அழுகுற? ஏன் எங்கூட சண்ட போடுற. இப்பவரைக்கும் நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்குத் தெரியவே இல்ல. ஆனாலும் நான் ஸாரி கேட்டுகிறேன். நீ அழாத. ப்ளீஸ்."


"யாருக்கு வேணும் உன்னோட ஸாரி. நீயே வச்சிக்க. உன்னால நான் இழந்தத திருப்பித் தர முடியுமா. முடியுமா. ச்ச… உன்னை மட்டுமே நம்பி இருந்த எனக்கு நீ செஞ்சது துரோகம்.‌ அத இப்பக் கூட உணர முடியாத உன்னைப் போய்க் காதலிக்கிறேன்னு நினைக்கும்போது‌ பத்திட்டு எரியுது.‌ எங்கண்ணு முன்னாடி வராத போடா. " என அவளைத் தள்ளிவிட்டுச் சென்றாள் தன்யா. அழுகையுடன் சென்ற தன் முன்னாள் காதலியின் கண்ணீர் டேனியல் கரைத்தது.


" தயா நான் இப்பவும் உன்னை லவ் பண்றேன். still I Love you. ஆனா நீ தான் கண்டதையும் பேசி நம்ம லவ்வ விட்டுட்டு போனது. இப்பத் துரோகம் அது இதுன்னு பேசுறது எனக்குப் புரியவே இல்ல. ச்ச… இந்தப் பொண்ணுங்க எந்த நேரத்துல என்னமாதிரி நடந்துப்பாங்கன்னு எந்த எலெக்ட்ரானிக் கேஜெட்ஸ்ஸாலையும் சொல்ல முடியாது. " எனப் புலம்பியபடியே திரும்ப, அங்கு வாசு நின்றுக்கொண்டு இருந்தாள்.


" வாசு... அது. "


"தன்யா தான் நீ கலட்டி விட்டுக் கடைசி காதலியா?" எனக் கேட்க, டேனியலுக்கு வாசுவை வைத்துத் தன்யாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது என மனம்‌ கூத்தாடுவது போல் இருந்தது.


"தப்பு திருத்திக்கோ. நா கலட்டி விடல அவ தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டா. "


"ஏன்? காரணம் என்ன? "


"அது கொஞ்சம் பர்ஸ்னல். அப்றம் அது எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குறதும் கூட. அத யாரு கிட்டையும் சொல்லிட முடியாது. "


" பரவாயில்லை. வாய தொறந்து எல்லாத்தையும் சொல்லிடு. நான் கேக்க ஆவலா இருக்கேன். " என்க. டேனியல் தன்யாவுடனான தன் காதலை பயணத்தைச் சொல்லத் தொடங்கினான்.


புகைப்பட துறையில் ஆர்வம் உள்ள டேனியல், ஒரு magazineகாக இந்தியாவில் தங்கி சுற்றிப் பார்த்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கல்லூரி வாசலில் தன்யாவைப் பார்க்க, பார்த்த உடனேயே டேனியலுக்கு அவளைப் பிடித்து விட்டது. அவள் யாரென அறிந்து அவள் படிக்கும் அதே இடத்தில் எதற்கு என்றே தெரியாத ஒரு கோர்ஸ்ஸில் சேர்ந்துப் படித்தான்.‌ ஸாரி தன்யாவைப் படித்தான். அவளைத் துரத்தித் துரத்தி காதல் செய்தான்.


இயல்பாகவே அனைவரிடமும் நன்கு பழகும் தன்யாவிற்கு டேனியலை பிடித்திருந்தது. பழக்கம் நட்பாக மாறி, நட்பு காதலாக உருப்பெற்றது. அவள் தான் டேனியலுக்குத் தமிழ்ப் பேசக் கற்றுத்தந்தாள். தினமும் ஒரு படமாவது‌ இருவரும் சேர்ந்து பார்ப்பர். மொக்கைப் படமாக இருந்தாலும் அவளுக்காகச் சிரித்து சிரித்து பார்த்தான்.


வார இறுதியில் வெளியே சென்று ஊர் சுற்றியவர்கள். காதல் என்று வந்தபின் தினமும் பைக்கில் சுற்றினர். முத்தங்கள் மட்டுமல்ல மொத்தமும் பரிமாறப்பட்டது இருவருக்குள்ளும்.


அவனின் வீசாக் காலம் முடிவு பெறும் தருவாயில்.


" அடுத்து எப்ப இந்தியா வருவ டேன். " எனத் தன்யா கேட்க,


" இப்போதைக்கு எந்த வேலையும் இல்ல. பட் உனக்காக வருவேன். " என்று அவளை அணைத்து முத்தமிட்டான்.


" ரொம்பச் சீக்கரமே வருவேன். ஏன்னா என்னால நீ இல்லாம இருக்க முடியாது. ஐ லவ் யூ. லவ் யூ லாட்." என இறுக்கமாக அணைத்தான்.


" எதுக்கு டேன் போய்ட்டு போய்ட்டு வரணும். நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்பையும் கூட இருக்கலாமே. " என்க, அவனின் அணைப்பு தளர்ந்தது.


"வீட்டுல அப்பா என்னோட கல்யாணத்தப் பத்தி பேசுனாரு. நான் உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா எந்த அப்ஜெக்ஷனும் இருக்காது. நம்ம கல்யாணம் ரொம்பச் சீக்கிரமா எந்தப் பிரச்சனையும் இல்லாம நடக்கும். என்ன சொல்ற டேன். வீட்டுல சொல்லிடவா. " எனக் கேட்க, அவளை ஏற இறங்க பார்த்தான் டேனியல்.


"முட்டாளா நீ. இப்ப அவங்கக் கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்துடுச்சி. கல்யாணம்… இது என்ன மாதிரியான பழக்கம்னு எனக்குத் தெரியல. இந்த ஊர்ல சாதாரண கல்யாணத்துக்கு போய் ஏன் இவ்ளோ இம்பாட்டெண்ட் குடுக்குறீங்கன்னு எனக்கு‌ப் புரியல. "


"டேன், மேரேஜ் கிறது இந்தியாவ பொருத்தவர, ரெண்டு பேர் சேந்து வாழ்றதுக்கு மட்டும் இல்ல. ரெண்டு ஃபேமிலியும் சேந்து அனுசரனையா இருக்குறதுக்குத் தான் மேரேஜ். குடும்பங்கிறது ஜஸ்ட் ஹஸ்பெண்ட் வைஃப்போட அங்க நின்றாது. அவங்களோட ஃபேரன்ஸ், சிஸ்டர்ஸ், பிரதர்ஸ், கசின்னு இப்படி எல்லாருமே இருப்பாங்க. எல்லாரும் சேந்து க்ரான்டா நடத்துறதுக்கு பேரு தான் கல்யாணம். நம்ம கல்யாணமும் அப்படித்தான் நடக்கணும். " எனத் தன் கல்யாணக் கனவை எடுத்துச் சொல்ல,


"சரி, இப்ப எதுக்கு அத எங்கிட்ட சொல்ற. "


"நம்ம கல்யாணமும் அப்படி தா நடக்கணும்னு நான் ஆசப்படுறேன். "


" வாட்… கல்யாணமா... நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லவே இல்லயே." எனப் பீடிகையுடன் சிரிக்க, தன்யாவின் உடல் வெறும் கூடு என்பது போல் காலியாகிப் போனது.


" ஷீ… தயா. எனக்கு மேரேஜ்லலாம் பெருசா ஈடுபாடு கிடையாது. வைஃப்னு வந்துட்டா அது எப்பயுமே தொல்ல தா. நாம ஏன் இப்படியே இருந்திட கூடாது. ம்… நீயும் ஹப்பி. நானும் ஹப்பி. பட்டிக்காடு மாறி யோசிக்காம. கொஞ்சம் மாடனா யோசி தயா. லிவ்விங் டுகெதர் தான் நமக்குச் செட் ஆகும். மேரேஜ் வேண்டாமே. " என அவளின் கன்னம்பற்றி அதில் தன் இதழ் பதிக்க,


"இப்படியே இருக்குறதா. இதுக்கு பேரு எங்க ஊருல வேற. நான் அப்படி பட்ட குடும்பத்துல பிறக்கல டேனியல். நான் வாழ்ற கலாச்சாரத்த மீறி எல்லையில்லாம உங்கூட பழகுனதே எனக்குத் தப்பா தெரியும்போது. நீ சொல்ற லிவ்விங் டுகெதர்… கல்யாணமே பண்ணிக்காம, எப்படி என்னால முடியும். " என்றவளுக்கு மனம் கனக்கத் தொடங்கியது.


"அதே நேரம் கல்யாணம் உன்னைப் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லயே. லவ்வர்ஸாவே லிவ்விங் டுகெதர் வாழ்க்கைய வாழலாம். அது தான் நமக்கு நல்லது. " என்றவன் பேச்சிற்குக் கூட திருமணத்தைப் பற்றி பேசவில்லை. தன்யாவிற்கு உலகம் ராட்டினம் போல் சுழலத் தொடங்கியது. டேனியலின் பேச்சைக் கேட்டு.


அப்போது சென்றவள் தான். தன்யாவை அதன் பின் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியாமல் போனது டேனியலுக்கு.


அவளின் மீது அவனுக்கு அளவுகடந்த காதல் உண்டு‌. ஆனால் கல்யாணம். அவனின் அனுபவத்தால் அது தான் கசக்கிறது இங்கு.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...