அத்தியாயம்: 37
" ஓ... இது தான் உன்னோட காதல் எஸ்டீடியா!!. " வாசு.
"எஸ், நீயே சொல்லு வாசு. இதுல என்னோட தப்பு என்ன இருக்கு. கல்யாணம் கல்யாணம்னு கண்டதையும் பேசி என்னோட லவ்வ ஸ்பாயில் பண்ணது அவ தான். இப்ப என்னைக் குறை சொல்றா. ச்ச... லவ் பண்ணாக் கண்டிப்பாக் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியமா என்ன? " என எதிர் கேள்வி கேட்டவனை விசித்திரமான பார்த்தாள் வாசு.
" அவசியம் இல்ல தான். ஆனா காதலோட வெற்றி எப்பக் கிடைக்கும்னு உனக்குத் தெரியுமா?"
" அது என்ன காம்படீஷனா வெற்றி தோல்விய பத்தி பேச. அது ஒரு ஃபீல். இப்பயும் எனக்கு அவ மேல இருக்கு."
"எத்தன வர்ஷம் வர இருக்கும்னு உன்னால உறுதிய சொல்ல முடியுமா? உன்னோட காதலுக்கு எக்ஸ்பயரி டேட் என்ன?."
"வாட்… லவ் என்ன சாப்பிடுற ஐட்டமா காலாவதி தேதியெல்லாம் சொல்ல. அவ மேல எனக்கு இருக்குற லவ் லைஃப் லாங் இருக்கும். அத அவ தான் புரிஞ்சிக்க மாட்டேங்கிறா. "
"புரிஞ்சிட்டு என்ன பண்ணச் சொல்ற டேனியல். மறுபடியும் உன்னோட கேர்ள் ஃப்ரண்ட்டா மாறிப் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் வச்சிக்கணுமா என்ன? அப்படி அதுக்கு தான் நீ அவள தேடுறன்னா சொல்லு, இந்த ஊருல உனக்கு நிறைய பேர் கிடைப்பாங்க. நானே உனக்கு இன்ட்ரோ குடுக்குறேன். தேவையில்லாம தன்யா பின்னாடி வந்து அவளோட நிலமையை மோசமாக்கிடாத. " எனக் காட்டமாகச் சொல்லிவிட்டு ரெஸ்டாரன்ட்டை நோக்கிச் செல்ல,
"வாசு நீ ஏன் இப்ப கோபமா பேசுற. எனக்குப் புரியல."
" உனக்குப் புரிய வைக்க ஒன்னும் என்னை எங்கம்மா அப்பா பெத்து போடல. கோபமா கோபம். எங்கிட்ட என்னோட பாய் ஃப்ரெண்ட் இப்படி பேசிருந்தான்னா அவனோட நாக்க வெட்டி, இனி பேசவே முடியாதபடி செஞ்சிருப்பேன். " எனப் புலம்பியபடி நடக்க,
'நல்ல வேள தயா இவள மாறி வைலன்ஸ்ஸா இல்ல. அவ ரொம்ப மென்மையான மனசு கொண்டவ. ' என நினைக்கத் தோன்றியது டேனியலுக்கு
" வாசு… வாசு. " எனத் தயங்கி தயங்கி அழைக்க, அவள் என்ன என்று கூடக் கேட்காது உள்ளே சென்றாள்.
" வாசு, நீ தான் எனக்கு உதவி செய்யணும். நான் இப்பவர தன்யாவ லவ் பண்றேன். உன்னால தான் எனக்கு. " என்றபோது வேகமாகத் திரும்பியவள்.
" அவள க்ரெட் பண்ணத்தா இப்ப வந்தியா. உனக்கு எப்படி தெரியும் தன்யா எங்கூட தான் இருக்கான்னு. "
"உன்னோட ஃபேஸ் புக்ல நீ சேர் பண்ண ஃபோட்டோஸ் பாத்தேன். "
"ஸாரி ஸார். என்னால உங்க காதலுக்கு ப்ரோக்கர் வேலைப் பாக்க முடியாது. ஏன்னா அவளுக்கு எங்கேஜ்மெண்ட் பிக்ஸ் பண்ணிட்டாங்க. ஷீ… இது தான் அவனோட வருங்கால ஹஸ்பென்ட். மிஸ்டர் ருத்ரதேவ். அவளோட அத்தைப் பையனாம். " எனத் தன் மொபைலை காட்ட,
"ஹேய், அப்ப உன்னோட ருத்ரா இவந்தானா. சூப்பர் நியூஸ். நாம ரெண்டு பேரும் சேந்து அந்தக் கல்யாணத்தக் கலச்சிடுவோம். ஜோடிகள பிரிக்கிறோம். என்ன? ஓகே வா. " என உற்சாகமாகக் கேட்க,
"இல்ல. ஓகே இல்ல. "
"ஏன். "
" ஃபஸ்ட் ரீசன். எனக்கும் ருத்ராவுக்கும் இடைல இருக்குறது ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தான். அதத் தாண்டிப் போக நான் அனுமதிக்க மாட்டேன். அதுல எந்த வித குழப்பமும் எனக்கு இல்ல. " என்றவளை நம்பாது பார்க்க,
"நான் சீரியஸ்ஸா சொல்றேன். நைக்ஸ்ட். தன்யா என்னோட ஃப்ரெண்டு. அவளுக்கு ஒரு நல்ல லைஃப் அமையும்போது ஒரு ஃப்ரெண்டா அத நான் தடுக்கக் கூடாது. "
"பட், என்னோட நில. "
"அதத்தான் நான் அடுத்தா சொல்ல வந்தேன். அந்தக் கல்யாணத்த நிறுத்துனதுக்கு அப்றம் நீ என்ன அவள கல்யாணமா பண்ணிக்க போற?. இல்லேல்ல. அப்றம் ஏன் அத நிப்பாட்டணும். ம்... உனக்குக் காதலியா இருக்குறத விட இன்னாருக்கு மனைவியா இருக்குறதுல தான் தன்யாக்கு கௌரவம். அந்தக் கல்யாணம் தான் அவளுக்கு நல்லது. " என்க, அவளின் முன் வந்து நின்றுக் கொண்டு கெஞ்சத் தொடங்கினான் டேனியல்.
"ஒரே ஒருக்க அவள நான் பாத்து பேசுனா, எல்லாத்தையும் என்னால புரிய வைக்க முடியும். " என்றவனின் பேச்சு பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது அவளுக்கு.
"என்ன பேசப் போற டேனியல்?"
" என்ன வேண்ணாலும் பேசுவேன். அது எங்க பர்ஸ்னல். "
"ம்ச்... அவளுக்கு நீ வேண்டாம் டேனியல். அவள நிம்மதியா வாழ விடு. "
"அவளுக்கு நான் வேணுமா வேணாமாங்கிற முடிவ நீ எடுக்காத வாசு. தயா தான் எடுக்கணும். அதுக்கு நான் அவ கிட்ட பேசணும். ப்ளீஸ். உன்னால அவள பார்க்குக்கு கூட்டீட்டு வர முடிஞ்சா, எங்களுக்குள்ள இருக்குற மிஸ் அண்டர்ஸ்டான்டிங்க என்னால மாத்த முடியும்." என்றவனை ஏற இறங்க பார்க்க,
"அதிகமா இல்லன்னாலும் ஒரு பத்து பதினைந்து நாளா நாம ஃப்ரெண்ட்ஸ். அதுனால கேக்றேன். "
"ஓகே, நான் தன்யா கிட்ட நாளைக்கு இதப் பத்தி கேக்குறேன். " என்றபோது சந்தோஷத்தில் துள்ளித் குத்தித்தான் டேனியல்.
"தேங்க்யூ… தேங்க்யூ… வெரி மச். யாகூஊஊ. " என மேஜை மேல் ஏறி நின்று ஆட,
" ரொம்ப ஆடாத. அவ சம்மதிச்சா மட்டும் தான் உன்னால அவளப் பாக்க முடியும். அவ முடியாதுன்னு சொல்லிட்டா, அப்றம் உன்னோட நிலம ஓட்ட விழுந்த பலூன் தான். " என்று சொல்லிச் சென்று விட்டாள்.
'கல் நெஞ்சக்காரி. ஒரு பையனோட மனச இவளுக்குப் புரிஞ்சிக்கவே தெரியல. அதான் இத்தன வர்ஷமா இவளுக்கு எந்த ஒரு பாய் ஃப்ரெண்டும் கிடைக்கல போல. ' என்றவன், தன்யாவை சமாதானம் செய்ய வார்த்தைகளைக் கோர்க்கத் தொடங்கினான்.
மறுநாள் காலையில் எப்பொழுதும் செல்லும் நேரத்தைவிட வேகவேகமாகச் சென்றாள் வாசு. தன்யாவைப் பார்க்கவென.
அவள் உறங்கிக் கொண்டு இருந்தாள். இரவு முழுவதும் உறங்காது தன் பழைய நினைவுகளிலேயே இருந்தவளை சூரியன் எட்டிப்பார்க்கும் நேரம் தான் நித்திராதேவி வந்து அணைத்துக் கொண்டாள்.
விழியோரம் நீர் வடிந்திருக்க, அதன் அளவை அவளின் தலையணையால் மட்டுமே அளக்க இயலும். முகம் முழுவதையும் போர்வையால் மூடியிருந்தவள் காதுகளில் கேட்ட குரலால் விழிகள் உருண்டோடத் தொடங்கின.
" குட்மார்னிங். தன்யா. " தேவ்.
"குட்மார்னிங் அத்தை. " என்றபடி வந்தாள் ரோகிணி.
அழுதது தெரிந்திடாத படி முகத்தை அழுத்தித் துடைத்தபடி எழுந்தவள். இருவருக்கும் ஒரு சேர புன்னகையைத் தந்துவிட்டு அமைதியாகத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
ஆழ மூச்சை இழுத்துவிட்டவளுக்கு இப்போதைக்கு தேவ்விடம் டேனியல் பற்றிக் கூற விருப்பம் இல்லை. எனவே போலி புன்னகையை உதட்டில் ஒட்டிக் கொண்டு வெளியே வர,
" அத்தை, இன்னைக்கி நைட் நாங்க ஃப்ளைட்ல பறக்கப் போறதா மாமா சொன்னாங்க. என்னோட தொல்ல இல்லாம நீங்க இங்க இருக்கலாம். " எனச் சொல்லிச் சிரிக்க, அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.
"எங்க தேவ். இந்தியாக்கா போகப் போறாங்க. " எனக் கேட்க,
"இல்ல தன்யா, புவனா மேரேஜ் முடியவும் தான் கிளம்புவாங்க. இப்ப சிவாஸ் பேலஸ்க்கு போகப்போறாங்க. நாளைக்கி நாம டயம் ஸ்பென் பண்ணலாம். நான் ஃப்ரீ தான்." என்றவன் அவளுக்குக் காலை உணவைத் தட்டில் வைத்துத் தர,
"தேவ், நானும் இவங்க கூடவே லாஸ் ஏஞ்சல்ஸ் போய்டவா. " என சின்னக் குரலில் கேட்க,
" வாட்… எங்கூடவே இருப்பேன். நீ போகச் சொன்னாலும் போக மாட்டேன்னு சொன்ன. இப்ப என்ன போறேங்கிற.?"
"இல்ல தேவ். எனக்கு அம்மாவையும் தாரிகாவையும் பாக்கணும் போல இருக்கு. அதான்" என்றவளை ஏற இறங்க 'பச்ச குழந்தையாம்மா நீ. ' என்பது போல் பார்த்துவிட்டுச் சரி எனத் தலையசைத்தான்.
"உன்னோட விருப்பம் தான். take care. " என அக்கறையுடன் பேச,
" என்ன? take care னு அக்கற இருக்குறவெ மாறி பேசுற. நான் போறேன்னதும் உன்னோட காதலி கூட ஊர் சுத்தலாம் உள்ளுக்குள்ள குத்தாட்டம் போட்டுட்டு தான இருக்க. நல்ல ஆளு தான் நீ. கடைசி வரைக்கும் உன்னோட ரகசிய காதலிய கண்ணுல காட்டாம மறைச்சிட்டிடேல்ல. " எனப் போலிக் கோபம் கொள்ள,
"ரகசிய காதலி. நல்லா இருக்கே. இந்த பேரும். " எனச் சிலகித்தான்.
" எங்கிட்ட ஏன் அவ யாருன்னு காட்டல? "
"யாரு காட்டல?. அவள தான் நீ டெய்லியும் பாத்துட்டு இருக்க. "
"டெய்லியுமா? நானா? யாரு அது? " என யோசித்துக் கொண்டு இருக்கும் போதே வாசு வந்தாள். வேகவேகமாக நடந்து வந்ததால் அவளின் முகத்தில் சிறு வியர்வை. மூச்சிரைக்க "குட்மார்னிங் தன்யா. ஹாய் ரோகிணி." என்றவள் தேவ்விற்கு மட்டும் தன் வெட்க புன்னகையால் காலை வணக்கத்தைக் கூறினாள்.
தேவ்வின் பார்வை வாசுவை தன்யாவிடம் காட்டிக் குடுத்தது. தன்யா ஆ என வாயைப் பிளந்தாள்.
' இவளா இவனோட டாவு. அடச்ச. இத்தன நாளா எங்கண்ணு முன்னாடியே இதுக ரெண்டு லவ் பண்ணிட்டு இருத்திருக்குதுங்க. நாந்தா பாக்காம இருந்திருக்கேன். ஹவ்.' என நினைத்துக் கொண்டு நடப்பதை பார்க்கலானாள்.
" இது உனக்காக ரோகிணி." எனக் குழந்தை விளையாட எனப் பார்பி டால் பொம்மையை வாங்கி வந்திருந்தாள். இன்று கிளம்புகிறாள் அல்லவா.
ரோகிணி அதைப் பார்த்ததும் வாசுவைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு நன்றி சொல்ல, வாசு சிறு வெட்கத்துடன் தேவ்வை பார்த்தாள். அவனுமே அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரின் பார்வை பரிமாற்றத்தைப் பார்த்த தன்யாவிற்கு காதில் புகை. அதைக் காட்டிக் கொள்ளாது.
'வாசு, நீ சரியான அழுத்தக்காரி. கடைசி வரைக்கும் தேவ்வ தெரிஞ்ச மாறிக் காட்டிக்கவே இல்லேல்ல. இரு உன்னைக் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கிறேன். '
"எனக்கெல்லாம் கிஃப்ட் கிடையாதா வாசு. குடுக்க வேண்டியவங்களுக்கு மட்டும் தான் கிஃப்ட் குடுப்பியா. " என நக்கலாகக் கேட்க,
" உங்களுக்கு எதுக்கு மேம்?"
"நானும் தான் இன்னைக்கி கிளம்புறேன். அவளுக்குக் குடுத்த மாறிலாம் சின்னதா வேண்டாம். எனக்குப் பெரிய சைஸ்ல வேணும். குடுப்பியா. " எனத் தேவ்வைக் கண் காட்டிக் கேட்க.
"கண்டிப்பா மேம். நீங்க விரும்புற கிஃப்ட் நீங்கக் கிளம்பும் போது உங்க கைல இருக்கும். " என்றாள் வாசு.
"ஓகே. நீங்க ரெண்டு பேரும் புரியுற மாதிரித் தெளிவா பேசிட்டு இருங்க. எனக்கு வேலை இருக்கு. தன்யா ஆர் யூ சுயர். நீ வீட்டுக்கு இவங்க கூட கிளம்புற தான. " எனக் கேட்க.
"எஸ், அவங்கள தனியா எப்படி அனுப்ப முடியும். நம்ம கெஸ்ட். ரிலேட்டிவ் வேற. சோ நானும் கூட போனாத்தா சரியா இருக்கும். " என்றவள் ஊரைக் காலி செய்வதில் குறியாக இருந்தாள். டேனியல் இருக்கும் ஊரில் இருப்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவன் தலை மறைந்தது இருவரும் சண்டை போடத் தொடங்கி விட்டனர். ஏன் சொல்ல வில்லை என்று.
" கள்ளி டி நீ. நீ தான் தேவ்வோட ரகசிய காதலின்னு சொல்லாம விட்டுட்ட பாத்தியா. " என்க.
"ஐய்யையோ? தன்யா லவ்வெல்லாம் கிடையாது. " என வழக்கமாகப் பாடும் பாட்டைப் பாட. தன்யா உறுதியாகக் கூறினாள் தேவ்விற்கு வாசுவின் மேல் காதல் என்று.
"எனக்கு நல்லா தெரியும் தேவ்வ பத்தி. அவனோட பிகேவியர் மாறியிருக்கு அதுக்கு காரணம் நீ தான். உம்மேல அவன் வச்சிருக்குற லவ் தான் காரணம். " என்க, வாசுவிற்கு ஆயிரம் மத்தாப்பு ஒரு சேர மனதிற்குள் பூத்தது போல் இருந்தது. ஆனால் அதைக் காட்டாது. டேனியலைப் பற்றிப் பேசினாள். நண்பனுக்காக இல்லை தன்யாவின் மன பாரம் குறையவெனக் கேட்டாள்
அவள் நினைத்தது போல் தன்யா தன் மனத்தைப் புலம்பல் மொழியாகச் சொல்லத் தொடங்கினாள்.
" என்னால நம்பவே முடியால வாசு. நான் அவன அந்த அளவுக்கு லவ் பண்ணுவேன்னு. ரெண்டே மாசம் தான். அதுக்குள்ள ஒத்தெங்கிட்ட என்னை முழுசா இழக்குற அளவுக்குக் காதலிப்பேன்னு நான் நம்பவே இல்ல.
ஒரு நாளோட இருபத்தி நாளு மணி நேரத்துல முக்கால்வாசி நேரம் அவனோட தான் இருந்திருப்பேன். எங்கூட ஊர் சுத்தி… நல்லா என்னை அனுபவிச்சிட்டு, கல்யாணம்ன்னு கேட்டதும் ப்ரேக்கப் பண்ணிட்டான்.
இப்ப மறுபடியும் வந்து லவ் பண்றேன் சொல்றான். என்னைப் பாத்தா அவனுக்கு எப்படி தெரியுது. இவெ இழுத்த இழுப்புக்கெல்லாம் போகுற நாய் குட்டி மாதிரியா இருக்கு. இனி அவனுக்கு என்னோட லைஃப்ல இடம் கிடையாது. I hate him. hate him lot. " என்றவளுக்கு கண்ணீர் நிற்கவே இல்லை.
அவளின் வேதனை புரியாமல் இல்லை வாசுவிற்கு. அதனால் ஆதரவாகப் பேசி அவளுடனே இருந்தாள் அன்றைய நாள் முழுவதும்.
அவளுக்கு டேனியல் மீது கோபம் கோபமாக வந்தது. இப்போது மட்டும் அவன் வாசுவின் கையில் கிடைத்தால் அவ்வளவு தான் எனுமளவிற்கு கோபமுற்றிருந்தாள்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..